• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
"பனி... இங்கே ப்ரௌன் கலர் ஷர்ட்டும், க்ரீம் கலர் ப்ளேஸர்-ம் வெச்சிருந்தேனே எங்கே?" என்று தனது அறையில் இருந்து சத்தம் கொடுத்தான் விக்ரம்.

"அதுக்கு பதிலா தான் ஹாஃப் வொய்ட் ஷர்ட் எடுத்து வெச்சிருக்கனே... வித் கோரல் பின்க் ப்ளேசரோட." என்று அவளும் பதிலுக்கு சமையலறையில் இருந்து சத்தம் கொடுத்தாள்.

"ஹ்ஹான்.... என்ன?... கேட்கலே... கொஞ்சம் மேலே வா..."

'அவர் பேசுறது எவ்ளோ தெளிவா கேக்குது!!!... நான் பேசுறது மட்டும் அவருக்கு கேட்காது!!!' என்று முணுமுணுத்தபடியே படியேறிச் சென்றாள் பனிமலர்.

"இதோ எடுத்து வெச்சிருக்கேன். இதை போடுங்க..."

"ஏய்... நான் எடுத்து வெச்ச ட்ரெஸ் எங்கேனு கேட்டா, நீ வேற ஒரு ட்ரெஸ்ஸைப் போடச் சொல்றே! அதை எங்கே வெச்ச சொல்லு..." என்றுபடி அவளது ஆடை அலமாரியைத் துழாவினான்.

"ஒரு நாளைக்கு இதை போட்டுட்டு போங்களேன்... ஏன் அது தான் வேணும்னு அடம்பிடிக்கிறிங்க?"

"விளையாடாதே ம்மா... லேட் ஆகுது... ரியாலிட்டி ஷோக்கு இன்னைக்கு நான் தான் ச்சீஃப் கெஸ்ட்... க்ரீம் கலர் தான் கொஞ்சம் பிரைட்டா தெரியும்... இந்த கலர்லாம் லைட் கலரா தெரியும்..." என்று ஏததோ குழந்தைக்கு எடுத்துச் சொல்வது போல் கூறினான்.

"ஆனா நீங்க ரெம்ப ஸ்மார்ட்டா தெரிவிங்க..."

மனைவியின் பாராட்டில் மனம் குளிர்ந்தாலும் அப்போதைய மனநிலையில் அதனை ரசித்திட முடியாமல், நெற்றியை சுருக்கி தன் அக்மார்க் முறைப்பை முதலில் கொடுத்துவிட்டு "அடியேய்.... படுத்தாதே டி..." என்று கடிந்த பற்களுக்கு நடுவே வார்த்தைகளை கொட்டினான்.

"நான் உங்களை படுத்துறேனா! நீங்க தான் தினம் தினம் வீம்பு பண்ணிட்டு என்னை படுத்தி எடுக்குறிங்க... நான் இனிமே உங்களுக்கு ட்ரெஸ் ச்சூஸ் பண்ணமாட்டேன்.... 'ஆன்லைன்ல எனக்கு ட்ரெஸ் ச்சூஸ் பண்ணிவை'னு சொல்லுவிங்கல்ல... அப்போ இருக்கு உங்களுக்கு...." என்று திட்டியபடியே அவனது அருகில் வந்து தன் ஆடைகளுக்கு நடுவே மறைத்து வைத்திருந்த அவனது க்ரீம் கலர் சட்டையையும் அதன் ப்ளேஸரையும் எடுத்து அவன் கையில் வேண்டா வெறுப்பாக வைத்தாள்.

பற்றாகுறைக்கு "ட்ரெஸ் ச்சூஸ் பண்றதுக்கு மட்டும் நான் வேணும்... ஆனா இன்னைக்கு இந்த ட்ரெஸ் போடுங்கனு சொல்றதுக்கு நான் தேவையில்லே..." என்று முணுமுணுத்துக் கொண்டே அறையில் இருந்து வெளியேறினாள்.

விக்ரம் தயாராகி கீழே இறங்கி வருவதற்கு முன்னே உணவு பதார்த்தங்கள் மேசையில் அடுக்கப்பட்டிருந்தது. ஆனால் பறிமாற செண்பகம் நின்றிருந்தார்.

'என்னை அடமெண்ட்னு சொல்லிட்டு அவ தான் இப்போலாம் அடம்பிடிக்கிறா!!!' என்று புகைந்தபடி உணவுண்ணத் தொடங்கினான் அவளது வீம்புக்காரன். எப்போதும் முதலில் அவளுக்கு ஊட்டிவிட்டு, சற்று நேரத்தில் வம்படியாக அருகில் இழுத்து அமர வைத்து உண்ணச் சொல்லுபவன், இன்று அதுபோன்ற கவனிப்புகள் எதுவும் இல்லாமல்...... அவனுமே, உண்டேன் என்ற பெயருக்கு கொரித்துவிட்டு எழுந்து சென்றுவிட்டான்.

பெண்ணவளோ அவனது பனி என்ற அழைப்பை எதிர்பார்த்து சமையலறையில் அமர்ந்திருக்க, அவன் சென்றுவிட்டான் என்பதற்கு அடையாளமாய் மகிழுந்தின் சத்தம் மட்டுமே கேட்டது.

ஏமாற்றத்தில் கண்கள் கலங்கிட, கண் இமைகள் கொண்டு அதனை உள்ளேயே விழுங்கினாள். பனி என்று ஒருமுறை அழைத்திருந்தால் கூட பனியாய் உருகி அவன் முன்னால் வந்து நின்றிருப்பாள் தான். ஆனால் அதைக் கூட செய்யாமல் சென்றுவிட்டானே என்ற ஏமாற்றம்.

உணவு மேசைக்கு வந்தவள் அவனின் அறைகுறை கொரித்தலைக் கண்டு அவளுக்கும் உணவு, தொண்டைக்குழியில் இறங்க மறுத்தது. இரண்டு வாய்க்குமேல் உண்ணப் பிடிக்காமல் அவளும் எழுந்து சென்றுவிட்டாள்.

முகம் கழுவிக்கொண்டு வந்தவளின் மூளையோ 'அவரது கோபத்திற்கு மலையளவு மரியாதையும் என்னிடம் மாற்றத்தையும் எதிர்பாக்கிறார்... என்னுடைய கோபத்திற்கு தூசு அளவு கூட மரியாதை இல்லாமல் போனதே!' என்று சிந்திக்காமல் இருக்க முடியவில்லை..

அவளது வருத்தம் தான் தேர்ந்தெடுத்த சட்டை அணியவில்லை என்பதல்ல... எப்போதும் எவ்வளவு அவசர வேலை இருந்தாலும் அவன் உணவுண்டு முடிக்கும் வேலையிலாவது இரண்டு வாய் அவளுக்கு ஊட்டிவிட்டு நீயும் சாப்பிட உட்கார் என்று கட்டளையிடுபவன் இன்று பனிமலர் என்ற ஒருத்தி அவ்வீட்டில் இருக்கிறேனா! இல்லையா என்று கூட பாராமல் சென்றுவிட்டானே என்ற வருத்தம் தான்...

இப்படியே அமர்ந்திருந்தால் அவனின் முதல் நிராகரிப்பை மட்டும்தான் மனம் நினைத்துக் கொண்டிருக்கும் என்று தோன்றிட, எழுந்து மரங்களுக்கு நடுவே சென்றாள்.

அங்கே விக்ரமிற்கோ காலையில் தன் பனியிடம் இப்படி பாராமுகம் காண்பித்து வந்துவிட்டோமே என்ற எண்ணத்தில் எந்த வேலையிலும் கவனமில்லாமல் மீண்டும் மீண்டும் அவள் முகமே நினைவில் வர,படபடிப்பு நிகழ்ச்சியின் இடைவேளை நேரத்தில் நேரே உதியிடம் சென்றான்.

"உதி நான் அர்ஜன்ட்டா வீட்டுக்கு போகனும்... கொஞ்ச நேரம் கழிச்சு வந்து ஜாய்ன் பண்ணிக்கிற மாதிரி ஸ்கெடியூல் மாத்திடு.." என்று சர்வசாதாரனமாகக் கூறினான்.

"டேய்... இப்படி இன்பிட்வீன்ல வந்து சொல்றே... ஸ்கெடியூல் மாத்துறது அவ்ளோ ஈஸினு நெனச்சுட்டேயா!!! இப்போ தானே வந்தே!... அதுக்குள்ள எதுக்கு வீட்டுக்கு போகனும்னு சொல்றே?" என்று கடுமையான கோபத்தில் சத்தம் வராமல், வாய்க்குள் முணுமுணுத்தபடி அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் திட்டினான்.

"டேய்... நீ வேற கேள்வி கேட்டு என்னை லேட் பண்ணாதே டா... மார்னிங் பனி கூட சின்ன வாக்குவாதம்... அதான் அவளை காம்ப்ரமைஸ் பண்ணப் போறேன்... நான் வீட்ல இருந்து கிளம்பினதும் ஃபோன் பண்றேன்... நீ அதுக்கு ஏத்த மாதிரி ஸ்கெடியூல் மாத்திக்கோ..."

"நீ வாய் தகராறு பண்ணலேனா தான் ஆச்சரியம்.... ஆனா என்னை என்ன சூப்பர் ஹீரோனு நெனச்சியா!!! ஸ்பெஷல் பவர்ஸ் யூஸ் பண்ணி லாஸ்ட் மினிட்ல எல்லாத்தையும் ச்சேஞ் பண்ணி சக்ஸஸ் பண்றதுக்கு!!!".

"நீ சூப்பர் ஹீரோவா மாறுவேயோ!... இல்லே சூப்பர் ஃபேன்-ஆ மாறுவேயோ! எனக்குத் தெரியாது... ப்ரோக்ராமை சக்ஸஸ் ஃபுல்லா முடிக்கனும்... ஷூட்டிங்கல சக்ஸஸ் பண்ண முடியலேனா எடிட்டிங்ல சக்ஸஸ் பண்ணிடு... சரி சரி என் பனி எனக்காக வெய்ட்டிங்... ஐ ம் கோயிங்... டாட்டா" என்று உதியின் தலையில் கணத்தை இறக்கிவிட்டு அவன் உல்லாசமாகக் கிளம்பினான்.

நாற்பத்து ஐந்து நிமிடங்கள் பயணிக்க வேண்டிய மகிழுந்து பயணத்தை அரைமணி நேரத்தில் முடித்திருந்தான்.

"பனி..." என்று அழைத்தபடி உள்ளே நுழைந்தவன், ஆளும் இல்லை பதிலும் இல்லை என்றவுடன், கோபமா இருக்கிறாள் போல என்று நினைத்து தங்கள் அறைக்குச் சென்று பார்த்தான்.

காலி அறையே அவனை வரவேற்றது. ஒருவேளை அவளது ரூமில் இருப்பாளோ என்று யோசித்தபடி அவளது அறைக் கதவைத் திறந்தான். அங்கும் படுக்கை விரிப்புக் கலையாத வெற்றுப் படுக்கையே அவனைப் பார்த்து சிரித்தது.

அடுத்த தேடல் அடுக்களை... அங்கோ அவள் உண்ணாமல் வைத்திருந்த மீதங்களே அவன் கண்ணில் பட்டு, மனதை வாட்டியது.

"எங்கே டீ போனே? பனி..." என்று மீண்டும் அழைக்க,

"என்னங்க...." என்று பின்கட்டில் இருந்து அவளது குரல் ஒலித்தது.

"என்னங்க-ளா!!!!" என்று வாய்பிளந்தவன், "இது தான் அந்த அசத்துற அழைப்பா!!! இவளை...." என்று அதிர்ந்து, ஏமார்ந்து இறுதியில் கோபம் கொண்டு அவளைத் தேடிச் சென்றான்.

"எங்கே டீ இருக்க?" என்று சத்தமாக வினவியபடி பின்கட்டிற்கு வந்தான்.

"மேல..."

தலையை நிமிர்த்திப் பார்த்தவன், சப்போட்டா மரத்தின் மேல் அமர்ந்திருப்பவளைக் கண்டு பல்லைக் கடித்துக்கொண்டு "இறங்குடி கீழே..." என்று உருமினான்.

"கோபப்படாதிங்க ப்ளீஸ்... ஏற்கனவே எப்படி இறங்குறதுனு தெரியாம தவிச்சுட்டு இருக்கேன்... நீங்க இப்படி கோபமா கத்தி... அதுக்கு பயந்து இறங்குறேன்ற அவசரத்துல விழுந்திடப் போறேன்..." என்று முகத்தைப் பாவம் போல் வைத்துக்கொண்டு கூறினாள்.

அவன் கோபம் கொண்டதே 'எங்கே அவள் விழுந்துவிடுவாளோ!' என்ற அச்சத்தில் தானே! மரம் சற்று சாய்வாக இருந்ததனாள் ஏறும்போது ஒரு ஆர்வத்தில் ஏறிவிட்டாள். இப்போது ஏறியது போல் இறங்கத் தெரியவில்லை. குதித்தாள் நிச்சயம் அடுபட்டு, கை, காலை ஒடித்துக்கொண்டு அதற்கும் விக்ரமின் ஏச்சு பேச்சுகளை வாங்க வேண்டுமே என்ற பயம் அவளுக்குள் இருந்தது.

உதவிக்கு யாரையேனும் அழைக்கலாம் என்று நினைத்த நேரம் தான் தன்னவனது குரல் கேட்டு அவனுக்கு பதில் குரல் எழுப்பினாள்.

"நீ எனக்கு பயப்படுறேயா!!! இதை நான் நம்பனும்!!! மார்னிங் ஒரு மனுஷன் அதுவும் புருஷன் உன்கூட பேசாம கோபிச்சிட்டு போனானேனு கொஞ்சமாவது அதுக்கான கவலை இருக்கா! ஜாலிய மரம் ஏறி உக்காந்து பழம் பறிச்சு சாப்பிட்டுட்டு இருக்கே!!! உன்னை என்ன பண்றேன்னு பார்!!!" என்று நாலாபுறமும் கண்களை சுழலவிட்டு, எதுவும் சிக்காமல் போக மரத்தின் நுனி கிளையை ஒடித்தான்.

"அடிக்கப் போறிங்களா!?" என்று விழி விரித்து வினவியவள், பின் அவளே தொடர்ந்தாள், "அதுக்கு மொதோ நான் கீழ வரனுமே!" என்று கிளுக்கென சிரித்தபடி கூறினாள்.

"உன்னை யார் கீழே வர சொன்னா! இரு நான் மேல வர்றேன்!" என்றிட பெண்ணவளின் கண்கள் மாட்டிக் கொண்டோமே என்ற பயத்தில் விரிந்தது.

கூறியது போலவே அவனும் மரத்தில் ஏறிட, சற்றே தடிமனான ஒரு கிளையில் அமர்ந்திருந்தவள் எழுந்து நின்று இரண்டு எட்டுகள் பின்னால் நகர்ந்து நடுகிளைக்கு சற்று அருகே சென்று நின்றாள்.

அதனைக் கண்டவன் பதறியபடி "பனி இதுக்கு மேல நகராதே கிளை முறிஞ்சிடும்...." என்று எச்சரித்தான்.

"அப்போ நீங்க என்னை அடிக்கமாட்டேன்னு ப்ராமிஸ் பண்ணுங்க..."

"நான் எப்படி டி உன்னை அடிப்பேன்... உன்னை இறக்கிவிடத் தான் நானும் ஏறினேன்... வா முன்னாடி... என்கிட்ட வா..."

"அப்போ கையில இருக்குற குச்சியை கீழே போடுங்க... அப்போ தான் வருவேன்..." என்று அவனுக்கே உத்தரவிட்டாள்.

விக்ரமோ 'நீ கையில சிக்கினதும் உன்னை கவனிச்சிக்கிறேன் டி...' என்று மனதிற்குள் புகைந்துகொண்டு கையில் இருந்த குச்சியை தூக்கி எறிந்தான்.

சாய்ந்து வளர்ந்திருந்த மரத்தில் ஏறி v என விரிந்து வளர்ந்திருந்த மற்றொரு கிளையில் காலை உயர்த்தி வைத்து தன்னவளை தன் காலின் மேல் கால் வைத்து இறங்கும்படி கூறினான்.

"மெதுவா இந்த ப்ராஞ்ச் மேல உக்காந்து என் தைஸ்ல கால் வை..."

"மாட்டேன்...."

"ஏன் டி?" அவனது வார்த்தைகளில் மீண்டும் கோபம்.

"உங்க ட்ரெஸ் அழுக்காகிடும்..."

"பராவாயில்ல ம்மா... ட்ரெஸ் ச்சேஞ் பண்ணிக்கலாம்... நீ மொதோ இறங்கு..." இப்போது கனிவு.

"நீங்க எப்படி இப்படி டக்கு டக்கு ச்சேஞ் ஆகுறிங்க? ஒரு நேரம் தீ மாதிரி சுடுறிங்க... ஒரு நேரம் என் பெயரைப் போல உருகுறிங்க!!!"

"இப்போ ரெம்ப முக்கியமான ஆராய்ச்சி பார்.... கீழ இறங்கு டி மொதோ..." என்று கோபம் கொண்டு திட்டினான்.

ஏனோ அவனது கோபம் அவளை வருத்தவில்லை. அவளுக்கு தான் அவனைப் பற்றி தெரியுமே... இன்னும் சற்று நேரத்தில் பனியாய் மாறி அவளையும் குளிர்வித்திடுவான் என்று.

அவனைப் பற்றி யோசித்தபடி மென்னகையோடு பெண்ணவள் ஒரு காலை அவன் கூறியது போல் வைத்து மற்றொரு கால் வைப்பதற்கு முன்பாக தடுமாறி அவள் மேல் விழுந்தாள்.

சட்டென சுதாரித்து அவளை வளைத்துப் பிடித்தவனின், காலும் இடறிட இருவரும் கீழே சரியத் தொடங்கினர். ஆணவன் தன் பலம் கொண்டு அவளை இடையோடு வளைத்து தூக்கியபடி மரத்திலிருந்து கீழே குதித்து கால்களை ஊன்றி நின்றான். பெண்ணவள் அவனது பிடியில், காற்றில் மிதந்தபடி மொத்தமாய் அவனைத் தழுவி நின்றாள்.

இருவருக்குமே இந்த நெருக்கம் புதிதே... அந்த இனிய அதிர்வில், பரவசத்தில், இருவரும் மனமும் லயித்திருக்க, மூளை வேலை நிறுத்தம் செய்தது போல் செய்வதறியாது அவர்களை சிலையென நிறுத்தியிருந்தது.

முதலில் சுதாரித்தது ஆடவனே... தூக்கி வைத்திருந்தவளை இறக்கிவிட்டவன், இடையை வளைத்த கையை மட்டும் விலக்கிட மனமில்லாமல் பிடித்திருந்தான்.

தரையை கால்கள் தொட்டவுடனேயே நினைவு பெற்றவள், அனிச்சை செயலாக அவனது கழுத்தை வளைத்திருந்த கைகளை விடுவிக்க, மூச்சுக் காற்றுகள் முட்டிக் கொள்ளும் அளவிற்கு நெருங்கியும் சற்றே விலகியும் நின்றிருந்தனர்.

பெண்ணவளின் முகம் வெட்கத்தில் சிவந்திட தன்னவனின் கண்களை நேருக்கு நேர் காண முடியாமல் தலை கவிழ்ந்து கொண்டாள். அவளின் சிவந்த வதனத்தை ரசிக்க முடியாமல் கற்றை முடி குறுக்கே வந்து விழுந்திட, அதனை தானாகச் சென்று ஒதுக்கிவிட்ட அவனது கைகள் காதோடு சேர்த்து அவளது முகத்தையும் அளந்துவிட்டு இறுதியில் தாடையில் வந்து நிறுத்தி தன்னைக் காணச் செய்தான்.

தன் பதியவளின் கண்களில் காதல் பெறுக்கெடுக்க, அதில் அவளது இதழ் நோக்கிக் குனிந்தவன், அதற்கு முன்பாகவே செய்யத் துணிந்த காரியம் அறிந்து, இருக்கும் இடம் உணர்ந்து, தன்னைத் தானே நொந்து கொண்டு கட்டுக்கடங்கா கோபத்தோடு வீட்டிற்குள் சென்றுவிட்டான்.

தன்னைவிட்டு பிரிந்து செல்லும் தன்னவனின் வதனத்தில் திடீரென தோன்றிய ரௌத்திரத்தைக் கண்டவள், 'ஏன் இந்த திடீர் கோபம்? நாம் தான் எதுவும் தவறு சொய்துவிட்டோமோ?' என்று யோசித்தபடி வதனம் சுருங்கி நின்றாள்.

சற்று நேரத்தில் காலையில் அவள் அவனுக்காக தேர்வு செய்து வைத்திருந்த உடையை அணிந்துகொண்டு கீழே வந்தவன், எப்போதும் போல் "பனி..." என்று அழைக்க அவளுக்குத் தான் அவனை புரிந்து கொள்வது பெரிய சவாலாக இருந்தது.

தன்னால் தன்னவனை புரிந்துகொள்ளவும் முடியவில்லை, அவனது மனநிலைக்கு ஏற்றார் போல் நடந்து கொள்ளவும் முடியவில்லை என்ற எண்ணத்தில் வாடிய முகத்துடன் அவன் முன்னே வந்து நின்றாள்.

"ஒரு ப்ளேட்ல மார்னிங் சமச்ச ஃபூட் இருந்தா எடுத்துட்டு வா" என்றிட, அவளோ அவனை புரியாமல் பார்த்தாள்.

"பசிக்கிது..." என்று அவளது பார்வையின் அர்த்தம் புரிந்து விளக்கம் கொடுக்க, தன் கோபங்கள், துயரங்கள், வருத்தங்கள் அனைத்தையும் மறந்தவளாய் சட்டென விரைந்து எடுத்த வந்தாள்.
எப்போதும் போல் அவளை அருகில் அமர்த்திக் கொண்டு அவளுக்கு ஊட்டிவிட்டபடியே தானும் உண்டான். உண்டு முடிக்கும் வரை இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

கைகழுவச் சென்றவனின் அருகே சென்று அவனது முழங்கையோடு சேர்த்து தன் கையைக் கோர்த்துக் கொண்டு அவனது புஜங்களில் தலை சாய்த்தபடி, "என்னால உங்களை புரிஞ்சுக்கவே முடியலே!" என்றாள்.

"ஏன் அப்படி என்ன புதுசா செய்துட்டேன்!" என்று அவளிடமே தன்னை ஆராயும் பணியை கொடுத்தான்.

"இந்த ட்ரெஸ் போடமாட்டேன்னு சண்டை போட்டிங்க... லேட் ஆகிடுச்சுனு மார்னிங் கோபமா கத்திட்டு என்னையும் பார்க்காம, சரியாவும் சாப்பிடாம போனிங்க... போன கொஞ்ச நேரத்துலேயே என்னை பார்க்க வந்து நிக்கிறிங்க... நானும் சாப்பிடலேனு தெரிஞ்சு சாப்பாடு கேட்குறிங்க..." என்று ஒரு நொடி நிறுத்தி, தலை குனிந்து மெல்லிய குரலில் "அஸ் அ நார்மல் வொய்ஃப்-ஆ உங்களை நெருங்கினா மட்டும் கோபப் படுறிங்க... ஏன்னு கேட்டா 'எனக்கு ஃபுல்லா சரியாகட்டும்'னு தான் சொல்லுவிங்க.. ஆனா!!!" என்றவளின் பேச்சு அவனது சிரிப்பில் பாதியிலேயே நின்றது.

"எல்லா ரீஸனும் கரெக்ட்டா தான் சொல்றே... பின்னே எதை வெச்சு என்னை புரிஞ்சுக்க முடியலேனு ஃபீல் பண்றே... ஒரு காரியம் செய்யிறதும் உனக்காகத் தான், செய்யாம விடுறதும் உனக்காகத் தான்... பின்னே என்ன குழப்பம் உனக்கு!!!" என்றிட அவனது கைகளிலிருந்து தன் கையை உருகிக் கொண்டு,

"நாம இதை பத்தி அப்பறம் பேசலாம்... இப்போ நீங்க ஷூட்டிங்கை பாதியிலேயே விட்டுட்டு வந்திருப்பிங்க தானே!!! கண்டிப்பா உதி அண்ணாவைத் தான் சமாளிக்க சொல்லிருப்பிங்க..."

"இதுவும் சரி தான்... சோ தேவையில்லாத விஷயத்தை யோசிக்காதே... நல்லா ரெஸ்ட் எடு" என்று கூறி முன்னறைக்கு அவளையும் அழைத்து வந்தான்.

புறப்படுவதற்கு முன்பு, "நீயும் வர்ரேயா?" என்று வினவிவிட்டு அவளது அதிர்ந்த பார்வையில் "விருப்பம் இல்லேனா வேண்டாம்..." என்று கூறி அவளது பதிலுக்கு கூட காத்திராமல் கன்னம் தட்டி விடைபெற்றான்.

இருவரும் பேசிக்கொண்ட போதும் எதுவும் தீர்ந்த பாடில்லை. இருவருக்குள்ளும் பல கேள்விகள், ஆனால் அதனை யார் முதலில் கேட்பது என்ற போராட்டம்...

அங்கே உதியோ உடைமாற்றி வந்திருந்த நண்பனைக் கண்டு கள்ளத்தனமாக சிரித்திட, "கண்டதையும் யோசிக்காம போய் வேலையைப் பார்" என்று விரட்டினான் விக்ரம்.

"எங்களுக்கும் தெரியும்... போகப் போக உங்களுக்கும் புரியும்..." என்று உதி முணுமுணுக்க,

"என்ன டா உளர்றே?"

"ஒன்னு இல்லேயே... ஷூட்டிங்கை டூ ஹவர்ஸ் போஸ்ட்போன்ட் பண்ணியாச்சு.... அதை தான் சொல்ல வந்தேன்" என்று மாற்றிக் கூறிவிட்டு சென்றான்.

நிகழ்ச்சியின் இறுதியில் மீண்டும் விக்ரம் சேர்ந்து கொள்ள அந்திகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த தொகுப்பாளர், "இந்த நிகழ்ச்சிய நம்மலோட சேர்ந்து கொண்டாட நம்மை மகிழ்விக்க இன்னும் ஒரு ச்சீஃப் கெஸ்ட்டும் வந்திருக்காங்க... அவங்க யாருனு பார்த்திடலாம்... லெட்ஸ் வெல்கம் மிஸஸ். விக்ரம் பார்த்திபன் அவர்கள்..." என்று கூறிட, முதலில் அதிர்ந்தது விக்ரம் தான்.

திரையின் மறுபக்கம் அதிர்ந்து நிற்கும் விக்ரமைக் கண்டு உதியும், மலரும் ஹைஃபை செய்து கொள்ள, விக்ரமின் கண்கள் நெருப்பைக் கக்கியது.



-தொடரும்.​
 
Top