• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அத்தியாயம் 3

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 3

அந்த பிரதான சாலையில் சத்தமே இல்லாமல் சென்று கொண்டிருந்தது ஆனந்தின் கார்.

பின்னால் அமர்ந்திருந்த கனகா ஆனந்த்தை கவனித்தே வர, அதை கண்டாலும் பார்க்காததாய் அமர்ந்திருந்தான் அவன்.

மனதில் சில மாதங்களுக்கு முன் அன்னை பேசிய வார்த்தைகள் ஓடிக் கொண்டிருந்தது.

“ஆனந்த்! உனக்கு கல்யாணம் பண்ணலாம்னு முடிவு பண்ணியிருக்கோம்” முடிவெல்லாம் கேட்கவில்லை.

முடிவை எடுத்துவிட்டு இவனிடம் சொல்ல, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்த அன்று அன்னைக்கு உடனே ஓகே சொல்லியிருந்தான்.

அப்படி இல்லை என்றாலும் இவன் முடிவை சொல்லி இருக்க முடியாது.

அடுத்த சில நாட்களிலேயே அஸ்வினியை பார்க்க போயிருக்க இவன் கண்களில் பாவாடை தாவணியில் நின்ற அபி விழுந்தாள்.

ஈர்க்கும் படி எந்தவித முகப்பூச்சும் ஏன் பவுடர் என்ற ஒன்றே அதிகம் அதுவும் இருக்குமா என்று சந்தேகம் தானே.. அப்படி தான் அவள் முகத்தை பார்த்திருந்தான்.

“பொண்ணு மாலைக்காக வெயிட்டிங் தேவ்” ராஜ் ஆனந்த் காதில் சொல்ல, அபியை பார்த்தவாறே தான் அந்த மாலை அஸ்வினி கழுத்தில் விழுந்திருந்தது.

கனகாவின் மகன் தானே? சில விஷயங்களில் அவரைப் போலவே தான். அவராய் பேசும்வரை இவனும் மௌனம் தான் காப்பான்.

செல்போன் அழைப்பின் ஒலியில் அன்னையின் எண்ணத்தில் இருந்தவன் மீண்டு திரையைப் பார்த்த போது புது எண்ணைக் காட்டியது.

“ஹெலோ” – ஆனந்த்..

….

“ஹலோ ஆனந்த் ஸ்பீக்கிங்”

….

“ஹெலோ”

“நான்.. அஸ்வினி பேசுறேன்” தயங்கி தயங்கி வந்தது குரல்.

சில நொடிகள் மௌனமானான் ஆனந்த்.

“ஹெலோ”

“எஸ் சொல்லுங்க”

“இல்ல.. கொஞ்சம் பேசணும்”

“சொல்லுங்க!”

“இல்ல அபி மேல எந்த தப்பும் இல்ல. அபி பாவம்.. அவளை நீங்க தண்டிச்சுடாதிங்க”

….

“ஹெல்லோ ஆனந்த் இருக்கீங்கlளா?”

“ஹ்ம்ம் எஸ்”

“அபி....”

“Na கொஞ்சம் ஒர்க்ல இருக்கேன்.. திருப்பி கூப்பிடவா?”

“ஹான் ஓகே”

“ஓகே! கால் யூ லேட்டர்” என்றவன் வைத்துவிட்டான்.

கூர்மைமையாய் பார்வையும் காதும் வைத்து கேட்டுக் கொண்டிருக்கும் அன்னையை அறிந்தவன் அவர்முன் எதுவும் பேசிடவில்லை.

ஆபீஸ் முன் காரை நிறுத்திட அவர் இறங்கி செல்லும் போது அழைத்தான்.

“ம்மா!”

நடந்தவர் நின்று திரும்பி அவன் முகம் பார்த்தார்.

“ஐம் சாரி” – ஆனந்த்.

“தெரிஞ்சு பண்ணின தப்புக்கு சாரி சரியாகாது” என்றவர் உள்ளே சென்றுவிட்டார். ஆனந்த்திற்கு எப்படி என்னவென்று சொல்ல தெரியாமல் பெருமூச்சோடு வீட்டிற்கு திரும்பினான்.

“அம்மாகிட்ட பேசினியா தேவ்?” வந்ததும் கேட்டார் பவானி.

“ப்ச்! எங்கே அத்தை! பயத்தையும் மீறி பேசினா ஒரே வேர்ட்ல ஆஃப் பண்ணிடுறாங்க”

“விடு டா.. அப்புறமா பேசிக்கலாம்.. அண்ணிக்கு அவங்க சொல்றதை செய்யலைனா சும்மாவே கோபம் வரும்.. அதுவும் அவங்களோட ஒரே பையன் கல்யாண விஷயம்.. கோவம் இருக்கத் தானே செய்யும்? சரி சரி! அபி எழுந்துட்டாளானு போய் பாரு..”

“ஹ்ம்ம் சரி அத்தை! தாத்தா சாப்பிட்டாங்களா?”

“ஆச்சு டா.. அபி மட்டும் தான் சாப்பிடணும்.. சாப்பிட்டு முதல்ல கோவிலுக்கு போயிட்டு வாங்க.. அதுக்கு முன்னாடி தலைவலி கேட்டிருக்கானு கேளு.. இல்லைனா நம்ம டாக்டரை வர சொல்லலாம்..”

சரி என தலையாட்டியவன் அறைக்கு சென்றான்.

“எழுந்தா கீழ வர வேண்டியது தானே? அதுக்கும் ஒரு ஆள் வந்து சொல்லனுமா?” ஆனந்த்.

எழுந்து தலைக்கு குளித்து உடை மாற்றி அடுத்து என்ன செய்வது என தெரியாமல் அமர்ந்திருந்தவளை இவன் வந்ததும் இப்படி கேட்க, பதட்டத்துடனே எழுந்து நின்றாள்.

“இல்ல.. உங்களை நைட்லேர்ந்து காணும்.. அதான்.. யாராச்சும் கேட்டா என்ன சொல்றதுன்னு தான்..” என்று இழுக்க,

‘நைட்லேர்ந்து காணுமா? அடிப்பாவி உன் பக்கத்துல ஒருத்தன் உருண்டு புரண்டு தூக்கம் வராமல் தூங்கின கதை எல்லாம் உனக்கு தெரியாதா?’ மனதோடு சொல்லிக் கொண்டவன்

“அது சரி! அப்ப தலைவலிக்கு யாரு உனக்கு தைலம் போட்டதாம்?.. நிம்மதியா தூங்கி இருக்க இல்ல?”

“தைலம் நீங்க போட்டு விட்டிங்களா?”

அவள் கேள்விக்கு முறைத்தவன் மொபைலை எடுத்து யாருக்கோ அழைத்தான். இவளும் என்ன சொல்வதென தெரியாமல் அருகில் நின்றாள்.

“ஹெலோ!”

“சொல்லுங்க அஸ்வினி!” அபியின் முகம் பார்த்துக் கொண்டே அஸ்வினியிடம் அவன் பேச, சட்டென அவன் முகத்தை பார்த்தாள் அபிநயா.

“நடந்ததை கேள்விபட்டேன்.. எப்படி சொல்றதுன்னு தெரில.. ஐம் ரியால்லி சாரி! அபி ரொம்ப நல்ல பொண்ணு.. கொஞ்சம் வெகுளி.. யார் என்ன சொன்னாலும் நம்பிடுவா.. அவளுக்கு ஒரு நல்ல லைஃப் கிடைக்கணும் நினச்சேன்” அஸ்வினி பேசிக் கொண்டிருக்க, அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்தான் ஆனந்த்.

அஸ்வினி என்னப் பேசுகிறாள் எனத் தெரியாமல் டென்ஷனில் நகம் கடித்து நின்றாள் அபி.

“ப்ளீஸ்! அவ மேல எந்த தப்பும் இல்லை.. நான் உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடக்கணும் நினைச்சேனே தவிர இப்படி எங்க அத்தை பண்ணுவாங்கனு நினைக்கல. அதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்.. அவங்க என்ன சொல்லியிருந்தாலும் அப்படியே நம்பி எதாவது அபி பேசியிருந்தால் அதை பெருசா எடுத்துக்காதிங்க ப்ளீஸ்”

மொத்தமாய் சொல்லிவிட்டு ஆனந்தின் பதிலுக்காக அஸ்வினி காத்திருக்க, இவன் அமைதியில் இன்னும் பயந்திருந்தாள் அபி.

“நீங்க எங்க இருக்கீங்க அஸ்வினி? ஆர் யூ சேஃப்?” ஆனந்த் இப்படி தான் கேட்டான் முதலில்.

“நான்.. ஹாஸ்டல்ல இருந்து தான் ஒர்க் பண்ணேன்.. இப்பவும் ஹாஸ்டல் வந்துட்டேன்.. அபி... அபி எப்படி இருக்கா? உங்களுக்குள்ள... எந்த பிரச்சனையும்... இல்லையே?”

“இதை நீங்க உங்க சிஸ்டர்கிட்ட தான் கேட்கணும்.. கதை எல்லாம் பயங்கரமா சொல்றா”

“இல்ல இல்ல.. அவ கொஞ்சம் குழப்பதுல இருப்பா.. ப்ளீஸ் நீங்க கொஞ்சம்....”

“அட்ஜஸ்ட் பண்ணி போகணுமா? நல்ல நியாயம்! தப்பே பண்ணாமல் என் அம்மா என்னை எதிரியபாக்குறது மாதிரி பார்த்துட்டு இருக்காங்க.. எல்லாம் உங்க சிஸ்டரால..” ஆனந்த் பேச,

“நான் எந்த தப்பும் பண்ணல.. நான் ஒன்னும் கல்யாணத்தை நிறுத்தல.. என் அத்தை தான் பொய் சொல்லி இந்த கல்யாணத்தை நடத்தி வச்சுட்டாங்க” கோபம் வேகம் என சேர்த்து அபி சொல்ல,

“கேட்டீங்களா? மேடம் எந்த தப்பும் பண்ணலையாம்.. ஆனா உங்க அத்தை என் மேல பழி போடும்போது அமைதியா தானே இருந்தாங்க? அது தப்பில்லையாமா?” அஸ்வினியிடமே கேட்டான் ஆனந்த்.

இப்போது அமைதியானாள் அபிநயா.

“அபி பக்கத்துல தான் இருக்காளா? நான் பேசலாமா?”

“ஹ்ம்ம் ஷுர்!”

“ஒரு நிமிஷம்! உங்களுக்கு எங்க மேல எந்த கோபமும் இல்லையே?” அஸ்வினி கேட்க,

“இல்லைனு சொல்ல முடியாது.. இருக்குனும் சொல்ல முடியாது.. ம்ம்ம்ம் பார்க்கலாம்.. எல்லாமே மாறும்.. நீங்க பேசுங்க” என்றவன் அபியிடம் போனைக் கொடுத்துவிட்டு அவளுக்கு தனிமையும் கொடுத்து சென்றான்.

“அச்சு! எப்படி இருக்க அச்சு? ஏன் அச்சு என்கிட்ட கூட சொல்லாமல் போன? அத்தை வேற என்னென்னவோ சொல்றாங்க.. எனக்காக தான் நீ கல்யாணம் வேண்டாம்னு போனியா? எனக்கு இங்கே பயமா இருக்கு அச்சு! யாருகிட்ட பேசுறது யாருகிட்ட பேச கூடாது எதுவுமே தெரில.. இவரு என்னை திட்றாரா இல்ல என்ன நினைக்குறாருன்னும் புரில.. அத்தை வேற போன் பண்ணி அவருகிட்ட ஸ்ரீக்கும் ராஜ்க்கும் கல்யாணம் பண்றது பத்தி பேச சொல்றாங்க.. எனக்கு நீ இல்லாமல் எதுவுமே பண்ண முடியல அச்சு” முழுதாய் கொட்டி தீர்த்தாள் அபி.

“அபி உனக்கு என்னாச்சு? ஏன் இவ்வளவு யோசிக்குற? ஆனந்த் நல்ல டைப்னு தான் தோணுது.. நவ் அவருகிட்ட மனசுவிட்டு பேசு எல்லாம் சரி ஆகும்.. முக்கியமா அத்தை பேச்சை கேட்காத.. மாமா ஆனந்த் பத்தி நல்ல விதமா சொன்னதனால தான் நான் உனக்கு ஆனந்த் கரெக்ட்டா இருப்பாருன்னு கெஸ் பண்ணேன்.. அது சரி தான். அத்தை எதுக்காக என்கிட்ட பேசி என்னை டைவேர்ட் பண்ணினாங்கனு எனக்கு தெரில.. ஆனா இப்ப உனக்கு நல்லது தான் நடந்திருக்கு.. என்னை பத்தி கவலைப்படாத டா”

“ஆனா எனக்கு பயமா இருக்கு அச்சு! என்கிட்ட மிரட்டுற மாதிரியே தான் அவர் பேசுறார். அப்புறம் அத்தையும்....” அபி எதுவோ சொல்ல வர,

“இங்கே பாரு அபி! அத்தை என்ன சொன்னாலும் அதை காதுல வாங்காத சரியா.. ஸ்ரீ, ராஜ் கல்யாணம்னு எதுவும் நீ ஆனந்த்கிட்ட பேசாத.. அத்தை பொய் கூட சொல்லலாம்.. அவங்க கேட்டா எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்கனு சொல்லு.. ஆனந்த்கிட்ட மனசுவிட்டு பேசு.. நீ உன் அச்சுகிட்ட எப்படி எல்லாத்தையும் ஷேர் பண்ணுவியோ இனி உனக்கு அப்படி தான் ஆனந்த் சரியா?”

“ஹ்ம்ம் சரி! ஆனா அவரு பேச மாட்றாரே!”

“நீ பேசு! பேச வை.. உனக்கு வேற என்ன வேலை? இனி அவர் தான் உனக்கு எல்லாம் ஓகேவா?”அஸ்வினி சொல்லிக் கொண்டு இருக்க உள்ளே வந்தான் ஆனந்த்.

“பேசியாச்சா? சாப்பிட போலாமா? அத்தை வெயிட் பன்றாங்க” ஆனந்த் சொல்ல,

‘இங்கேயும் அத்தையா?’ என்று தான் தோன்றியது அபிக்கு.அதற்குள் போனை பறித்திருந்தான் ஆனந்த்.

“அஸ்வினி உங்க சிஸ்டர் இங்கே நல்லா தான் இருப்பாங்க.. டோன்ட் ஒர்ரி.. நீங்க லீவ்க்கு வந்து போங்க ஓகே” ஆனந்த் சொல்ல,

“தேங்க் யூ ஸோ மச்” என்று பேசி வைத்தாள் அஸ்வினி.

“சாப்பிட வா” ஆனந்த் சொல்ல,

“உங்களுக்கு என் மேல மட்டும் தான் கோபமா?” – அபிநயா.

“நான் அப்படி சொல்லவே இல்லையே! ஏன் அப்படி கேட்குற?”

“நீங்க என்கிட்ட கோபமா தானே பேசுறீங்க?”

“உனக்கு அப்படி தோணுதா?” எப்படி கேட்டாலும் கேள்வியையே கேட்பவனை என்ன செய்ய?

“சரி அப்புறம் பேசலாம்.. இப்ப தலைவலி இருக்கா? இல்லைனா கோவிலுக்கு போய்ட்டு வர சொல்லி அத்தை சொன்னாங்க” ஆனந்த் சொல்ல ம்ம் என தலையை மட்டும் ஆட்டி வைத்தாள்.

“சரி வா” என்றவன் முன்னே நடக்க இவள் பின்னே சென்றாள்.

“வா அபி! இட்லி சாப்பிடுவ தானே? இப்ப தலைவலி எப்படி இருக்கு? காலையில மாத்திரை கொடுத்தேனே? போட்டியா?” கேள்விகளை அடுக்கியவாறே பரிமாறினார் பவானி.

“இது தான் பவானி அத்தை.. ராஜ் அம்மா.. என்னோட பிரண்ட் கூட” அபிக்கு அறிமுகம் செய்தான் அத்தையை.

“அத்தை! அபியை நல்லா பார்த்துக்க சொல்லி மேலிடத்துல இருந்து உத்தரவு.. நீங்க தான் பார்த்துக்கணும்”

“அதுக்கென்ன டா.. கண்ணுக்குள்ள வச்சு பார்த்துகிட்டா போச்சு.. நீயும் ரெண்டு இட்லி சாப்பிடு” என அபிக்கு துணையாய் ஆனந்த்தையும் சாப்பிட வைத்தார் பவானி.

“அப்புறம் இவன் ரொம்ப மிரட்டுறானா? கோபமா பேசுறானா? அப்படி இருந்தா என்கிட்ட சொல்லு அவனை நான் பார்த்துக்குறேன்.. ஆமா நீ என்ன பேசவே மாட்ற?” என்ற பவானியின் கேள்விக்கு ஆமாம் இல்லை என தலையை மட்டும் மாத்தி மாத்தி அபி ஆட்டவும் அவளை முறைத்தான்.

“நீ ஏன் டா முறைக்குற? அப்ப நீ நிஜமாவே அவளை மிரட்டி தான் வச்சுருக்கியா? அதான் அந்த வீணா போனவன் ஐடியா கொடுத்தானே அதுப்படி இருக்க வேண்டியது தானே? ஏன்டா ஒன்னும் தெரியாத பொண்ணை கஷ்டப்படுத்துற?” பவானி ஆனந்த்தை திட்ட,

“நினச்சேன்! இதுக்கு தான் உங்ககிட்ட சொல்லவா வேணாமானு யோசிச்சேன்.. ஸோ ஸ்வீட் அத்தை நீங்க” ஆனந்த்.

“போதும் டா! ரொம்பத்தான்! இதெல்லாம் உன் பொண்டாட்டிகிட்ட வச்சுக்கோனு அப்பவே சொன்னேன்ல?” என்ற கேள்விக்கு சிறு புன்னகையுடன் ஆனந்த் அபியை பார்க்க அவள் புரியாதவளாய் விழித்துக் கொண்டிருந்தாள்.

‘இவளை வச்சுட்டு..’ மனதோடு நினைத்துக் கொண்டான் ஆனந்த்.

“அபி! உனக்கு இது சித்தி.. ஓகேவா.. உனக்கு இந்த வீட்ல என்ன வேணுமோ அதை இவங்ககிட்ட கேளு..” ஆனந்த் சொல்ல அதற்கும் தலையாட்டல் தான்.

“உடனே எப்படி டா செட் ஆகும்? போக போக அவளே புடிஞ்சுப்பா..சரி சீக்கிரமா கோவிலுக்கு போய்ட்டு வாங்க.. ஆனந்த் அப்படியே அவளுக்கு எதுவும் வேணும்னா வாங்கி கொடுத்து கூட்டிட்டு வா.. அபி நீ போய் ரெடியாகு..”

“நீங்களும் வாங்களேன் அத்தை”

“ஏன்டா என்னை அபி திட்றதை நீ பார்க்கணுமா? லட்சணமா புதுசா கல்யாணம் பண்ணின கலையோட சந்தோஷமா போய்ட்டு வாங்க”

“ஹ்ம்ம் சமாளிச்சுட்டீங்களா.. சரி நாங்க முதல்ல தாத்தாகிட்ட பிளெஸ்ஸிங் வாங்கிட்டு வர்றோம். அபி போலாமா?”

“ம்ம்ம்ம்” என்றவளை அழைத்துக் கொண்டு நடராஜன் அறைக்குள் நுழைந்தான்.

“தாத்தா!”

“வா பா.. வா மா” வரவேற்றார் அவர்.

“எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்க தாத்தா”

“ஜென்மத்துக்கும் எல்லா வளத்தோடவும் சந்தோஷமா இருங்க” என ஆசீர்வதித்து சிரித்தார் தாத்தா.

“என்னம்மா இந்த வீடு உனக்கு புடிச்சிருக்கா?” அபியிடம் அவர் கேட்க,

“புடிச்சிருக்கு தாத்தா” என்றாள் அவரின் புன்னகையை எதிரொலித்து. அவரின் புன்னகை முகம் அபியை கவர்ந்திருந்தது.

“நல்லது மா.. சாப்பிட்டீங்களா? கோவிலுக்கு போறதா பவானி சொன்ன மாதிரி இருந்துச்சே”

“ஆமா தாத்தா கிளம்பிட்டோம். உங்களை பார்த்துட்டு போலாம்னு தான் வந்தோம்”

“சரி டா. அம்மாகிட்ட பேசுனியா? என்ன சொல்றா?” நடராஜன் கேட்க,

“உங்க பொண்ணுக்கு சேட்டை அதிகம் ஆயிடுச்சு தாத்தா.. என்னை கண்டுக்காமல் போய்ட்டாங்க “

“ஹ்ம்ம் நினச்சேன்.. விடு டா போக போக சரி ஆயிடுவா..”

“அதுக்கு எல்லாம் வாய்ப்பு இல்ல”

“அதை அப்புறம் பார்த்துக்கலாம்.. நீங்க எந்த சண்டையும் இல்லாமல் சந்தோசமா இருக்கனும்.. அது தான் அவ மனச மாத்தும்”

“ம்ம்ம்ம்”

“அம்மாடி! எங்க யாருக்கும் உன்மேல எந்த கோபமோ வருத்தமோ இல்ல.. உன் அத்தை பத்தி வெளில கொஞ்சம் கேள்வி பட்டேன்.. உன் அக்கா குணம் பத்தி சொன்னதால தான் கல்யாணத்துக்கே நானும் சம்மதிச்சேன்.. அவ தங்கச்சி நீயும் நல்ல பொண்ணா தான் இருப்ப.. எதையும் நினச்சு குழப்பிக்காமல் போய்ட்டு வாங்க..” என்று ஆறுதலாய் பேசி வழியனுப்பி வைத்தார் நடராஜன்.

அவரின் பேச்சில் கண்கள் கலங்கிவிட்டது அபிக்கு.

காரில் ஏறியது முதல் அமைதியாய் யோசனையில் இருந்தாள் அபி. அதை கலைக்காது ரேடியோவை ஓட விட்டான் ஆனந்த்.

“எனக்கு உங்ககிட்ட ஒன்னு கேட்கணும்” என்றாள் அபி சில தொலைவு சென்ற பின்

“என்ன?”

“நீங்க ஏன் அத்தை சொன்னதும் என்னை... என்னை.. கல்யாணம் செய்துகிட்டீங்க?”

“நீங்க எனக்கு வேற ஆப்ஷன் எதுவும் கொடுக்கலையே!”

“ஆனா அத்தை சொன்னது இல்லைனு நீங்க உண்மையை சொல்லியிருக்கலாம்ல?”

“ஆமாமா! நீங்க பிளான் பண்ணி மேடைல இஷ்டத்துக்கு பேசுவீங்க.. நான் உங்ககூட போராடிட்டு இருக்கணுமா?”

“ஆனா...”

“அம்மா தாயே! நான் ஆல்ரெடி சொன்னது தான்.. எனக்கும் ஒரு ரீசன் இருக்கு.. அதை சொல்ல முடியுமா, எப்ப சொல்வேன்னு எனக்கு தெரியாது.. ஸோ லீவ் இட்”

“அப்ப உங்க காரியத்துக்காக தான் என்னை கல்யாணம் பண்ணிங்களா?” உடனே கேட்டாள் அபிநயா.

“பின்ன என்ன உன்னை லவ் பண்ணி கல்யாணம் பண்ணினதா நினைச்சியா? நீயும் ஏதோ ரீசன்காக தானே என் வீட்டுக்கு வந்திருக்க?”

“நான் தான் சொல்லிட்டேனே.. ஸ்ரீக்கும் ராஜ்ன்ற அண்ணாக்கும்... “

“ப்ளீஸ் ஸ்டாப் இட்! இது பொய்னு உனக்கே தெரிலயா?”

“ஏன் பொய்னு சொல்றிங்க? உங்களுக்கு தெரியாமல் ரெண்டு பேரும் லவ் பண்ணலாம்ல?”

“ஓஹ் காட்! உனக்கு எப்படி புரிய வைப்பேன்? ஆமா நீ எப்படி இதை உண்மைனு நம்புற? ராஜ் உன்கிட்ட சொன்னானா?”

“இல்லை ஆனா அத்தை சொன்னாங்களே!”

“உன் அத்தை பொய்யே சொல்ல மாட்டாங்களா?”

“சொல்லுவாங்க! ஆனா ஸ்ரீ வாழ்க்கை விஷயத்துல....”

“எப்பவும் அடுத்தவங்க லைஃப் பத்தியே யோசிச்சுட்டு இருக்காத!” என ஆனந்த் சொல்ல அதன்பின் சில நொடிகள் அமைதியே.

“என்ன அமைதியாகிட்ட?”

“தெரில! அப்ப நான் ஸ்ரீக்கு ஹெல்ப் பண்ணினா இந்த வீட்டைவிட்டு என்னை அனுப்பிடுங்களா?” என்றாள் பாவமாய். சட்டென வண்டியை நிறுத்திவிட்டான்.

“உன்னை என்ன பண்றது? அப்படி ஒரு எண்ணமே ராஜ்க்கு இல்லைனு சொல்றேன்..”

“அப்ப ஸ்ரீக்கு இருந்தால்?”

“அது ஜஸ்ட் ஒன் சைட் ல....” லவ் என்று சொல்ல வந்தவனுக்கு மண்டைக்குள் மணியடிக்க அப்படியே அமைதியானான்.

இவனும் ஒருத்தலையாய் காதலித்து தானே சந்தர்ப்பத்தை பயன்படுத்தி திருமணம் செய்தான்? பின் எப்படி சொல்ல முடியும்?

தொடரும்..
 
Top