• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அத்தியாயம் 5

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 5

“ஏய்!” ஆனந்த் சத்தமாய் அழைக்க, அபி அவனை பார்க்கவும், வேண்டாம் என தலையசைத்தான்.

“நீ என்ன டா என்னை வச்சுட்டே கண்ணால பேசுற?” ராஜ் கேட்க,

“ராஜ்! முதல்ல வண்டியை ஒழுங்கா டிரைவ் பண்ணு.. அப்புறம் பேசிக்கலாம்” ஆனந்த் சொல்ல,

“அவன் அப்படித்தான் நீங்க சொல்லுங்க சிஸ்டர்” துருவி துருவி ராஜ் கேட்க,

“ப்ச்! சொன்னா கேளு டா.. அப்புறம் பேசிக்கலாம்.. இப்ப என்ன அவசரம்? அபி! நீ கொஞ்சம் பேசாமல் வா..” என்றான் இறுதியாய்.

அவன் முகபாவத்திலேயே வாயை மூடிக் கொண்டாள் அபி.

“ஏன்டா! என்கிட்ட சொல்ல கூடாதா?” ராஜ் கேட்க,

“ராஜ் பேசாமல் வா டா.. சொல்ல வேண்டியதை நானே சொல்லுவேன்” கண்டிப்பாய் அவன் சொல்ல இம்முறை இருவரும் அமைதியாகினர்.

“ஹ்ம்ம்! ஏதோ பரம ரகசியம் போல.. பெரிய பூட்டா வாங்கி பூட்டி வச்சுக்கோ டா”


“ராஜ் இப்பவும் சொல்றேன்.. உன் வாலை கொஞ்சம் சுருட்டி வை” என்று கூறியே அழைத்து வந்தான்.

“விமலா மாப்பிளையும் அபியும் வந்துட்டாங்க.. ஆரத்தி கொண்டு வா” வாசலில் நின்று வினோதன் சொல்ல, எள்ளும் கொள்ளும் முகத்தில் வெடிக்க ஆரத்தியுடன் வெளிவந்தார் விமலா.

“ஸ்ரீயை எடுக்க சொல்லு மா” வினோதன்.

ஸ்ரீ ஆரத்தி எடுக்க ஆனந்த் அபியின் கைகளைப் பற்றிய வண்ணம் நின்றான். அருகில் ராஜ்.

“உள்ளே வாங்க” என்றதும் சம்பிரதாயமாய் அனைத்தும் இவர்கள் செய்ய ஆனந்த்தும் அமைதி காத்தான்.

அதன்பின்னும் மதிய சமையல் வேளையில் விமலா பிஸியாகிவிட ஸ்ரீயும் அவருக்கு உதவியாய் நின்றாள்.

அபியை எதிர்பார்த்த விமலாவிற்கு ஏமாற்றம் தான். ஆனந்த் அவளை விடாமல் அருகிலேயே வைத்திருந்தான்.

ராஜ், ஆனந்த், அபி மூவரும் ஹாலில் அமர்ந்து தான் பேசிக் கொண்டிருந்தனர்.

விமலா இரு தடவை அழைத்த போது கூட ஆனந்த் விடவில்லை.

“ஊர்ல இல்லாத பொண்டாட்டி கிடைச்சிருக்கானு புடிச்ச கைய விடாமல் கூடவே வச்சிருக்கான்.. நாலு வார்த்தை அவளை கேட்கலாம்னு பார்த்தால் விடுறானா? நீ தனியா மாட்டு டி.. உன்னை பார்த்துக்குறேன்” மீண்டும் கருவிக் கொள்ள மட்டுமே முடிந்தது.

“ம்மா! அப்பா சொன்னாங்க இல்ல.. புதுசா கல்யாணம் ஆனவங்க.. விடுங்களேன்.. ஏன் எப்ப பேரு கரிச்சு கொட்றிங்க.. நல்லவேளை உங்ககிட்ட இருந்து ரெண்டு அண்ணியும் எஸ்கேப் ஆயிடுச்சு.. நான் தான் பாவம்.. உன்கிட்ட மாட்டிட்டு முழிக்குறேன்” ஸ்ரீ சொல்ல, அவள் தலையிலேயே நாலு கொட்டு கொட்டினார்.

“உனக்காக நான் என்னென்ன வேலை எல்லாம் பார்த்து வச்சுருக்கேன்.. நீயும் அவளுங்க கூட சேர்ந்து என் உயிரை வாங்குற.. பேசாமல் வேலையை பாரு டி”

“நீ பார்த்த அம்புட்டு வேலையும் அண்ணிங்களுக்கு எதிரா தான் இருக்கும்.. இப்படி அவங்களுக்கு கெட்டது பண்ணி எனக்கு நல்லது செய்யணும்னு நினச்சா அது எப்படி நடக்கும்” சத்தமாய் சொல்லும் தைரியம் இல்லாமல் வாய்க்குள் முணுமுணுத்தாள் ஸ்ரீ.

“அபி சிஸ்டர்! உங்களுக்கு ஆனந்த்தை முன்னாடியே தெரியுமா?” ராஜ் கேட்க,

“டேய்! நீயுமா டா?” என்றான் ஆனந்த்.

“அட இரு டா.. நீங்க சொல்லுங்க.. உண்மையாவே இவன் உங்களை காதலிச்சு ஏமாத்தினானா? நான் கேட்டால் உண்மைய சொல்ல மாட்டான்.. நீங்க சொல்லுங்க”

“இல்ல.. இல்ல.. அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல.. அஸ்வினி போயிட்டதால கல்யாணம் நிற்க கூடாதுன்னும் அப்புறம் ஸ்ரீக்காகவும்னு சொல்லி தான் அத்தை அப்படி ஒரு பொய் சொல்லிட்டாங்க.. நான் அப்படி பொய் எல்லாம் சொல்லலை”

“ஓஹ்! பொய் சொல்லல.. ஆனா உங்க அத்தை சொன்ன பொய்க்கு தலையை மட்டும் ஆட்டுனிங்க சரியா?” இப்போதும் சாதாரணமாய் அவளை கிண்டல் செய்து ராஜ் பேச ஆனந்த் கூட சிரிப்புடன் தான் அமர்ந்திருந்தான் அவள் பேச்சைக் கேட்டு.

“ஆனா நான் நிஜமாவே இவரை இதுக்கு முன்னாடி பார்த்திருக்கேன்” ஆனந்த்தை ஓரக் கண்ணால் பார்த்து ராஜிடம் கூறினாள் அபி.

“வாவ்! வாட் அ ட்விஸ்ட்! சூப்பர் சூப்பர்! எங்கே? எப்போ பார்த்தீங்க? இவன் என்ன பண்ணினான்? ஏன் டா நீ என்கிட்ட சொல்லவே இல்ல?” ராஜ் ஆர்வமாய் கேட்க,

ஆ’வென அவளை தான் பார்த்து நின்றான் ஆனந்த். அவனுக்கும் இந்த செய்தி புதிதாயிற்றே!

“இல்ல! இல்ல! நான் சும்மா பார்த்திருக்கேன்.. பேசினது எல்லாம் இல்ல..” என்றாள் வேகமாய்.

“இன்ட்ரெஸ்ட்டிங்! சொல்லுங்க சொல்லுங்க! எங்கே பார்த்திங்க?” ராஜ் கேட்க,

“இங்கே தான்.. பக்கத்துல இருக்குற அம்மன் கோவிலுக்கு நான் ஒரு நாள் நூத்தி எட்டு குடம் தண்ணீர் எடுத்து பூஜை பண்ணினேன்.. அஸ்வினிக்கு உடம்பு சரியாகணும்னு.. அப்ப இவரும் உங்க தாத்தாவும் கோவிலுக்கு வந்திருந்தாங்க” அபி சொல்ல,

“இவ்வளவு தானா?” என்றான் ராஜ்.

“ஆமாம்” என்று அவள் தலையாட்ட,

“ஆனா! அது நடந்து ஒரு வருஷம் இருக்குமே! உனக்கு எப்படி இன்னும் ஞாபகம் இருக்கு? முன்னபின்ன நாம பார்த்தது கூட இல்லையே”அவளை உற்றுப் பார்த்து ஆச்சர்யமாய் ஆனந்த் கேட்க,

“அது.. அது வந்து.. தெரில.. ஆனா நல்லா நியாபகம் இருக்கு” என்றாள் உள்ளதை மறைக்காமல்.

ஆனந்த், ராஜ் இருவருமே அவள் பதிலில் சிரித்துக் கொண்டனர்.

அனைவரும் சாப்பிட்டு அமர பேச்சை ஆரம்பித்தார் விமலா.

“கனகா அக்காகிட்ட நீ பேசினியா அபி?” என்றார் எடுத்ததும்.

“நான் தான் இப்ப பேச வேண்டாம்னு சொன்னேன் அத்தை.. அம்மா கோபம் கொஞ்சம் குறையட்டும்னு தான் வெயிட் பண்றேன்” ஆனந்த் சொல்ல,

“அவளை பேச விடறானா பாரு” விமலா வாய்க்குள் சொல்ல,

“அப்புறம் அத்தை! சீக்கிரமே ராஜ்க்கு கல்யாணம் பண்ணலாம்னு தாத்தா சொல்லியிருக்காங்க.. அதுக்குள்ள கோபம் குறைஞ்சிடும் அம்மாக்கு. அப்புறம் அவங்களே சமாதானம் ஆகிடுவாங்க” ஆனந்த் சொல்ல திருதிருவென முழித்தான் ராஜ்.

“ஆமா ஆமா அண்ணி கூட கிளம்பும் போது சொன்னாங்க.. அப்ப பொண்ணு பார்க்க இனி தான் ஆரம்பிக்கணும் இல்ல தம்பி” விமலா.

“அவங்க நல்ல மனசுக்கு நல்ல பொண்ணாவே கிடைக்கும்” வினோதன்.

“பொண்ணெல்லாம் பார்த்தாச்சு அத்தை.. நாள் பார்த்து மண்டபம் பார்த்தா போதும்” ஆனந்த் சொல்ல பெரிய அதிர்ச்சி விமலாவிற்கு மட்டுமல்ல, இப்படி புட்டு புட்டு வைக்கும் ஆனந்தை பார்த்து ராஜ், அபிக்கும் கூட ஹார்ட் அட்டாக் வருவது போல இருந்தது.

“பொண்ணு பார்த்தாச்சா? ரொம்ப சந்தோஷம்..” வினோதன்.

‘இந்தாளு வேற! நிலைமை புரியாமல் பேசிகிட்டு..’ மனதிற்குள் விமலா சொல்ல, ‘உனக்கு தேவை தான் மா.. நல்லா வயிறு எரியட்டும் உனக்கு’ என மனதிற்குள் நினைத்தாள் மகள் ஸ்ரீ.

“பொண்ணு... யாரு... எந்த ஊரு? பவானி அண்ணி எதுவும் சொன்னா மாதிரி இல்லையே?” – விமலா.

“பொண்ணு அவனே பார்த்துட்டான்.. இனி தான் அம்மா, அத்தை, தாத்தாகிட்ட எல்லாம் பேசணும்.. வேண்டாம்னு சொல்ல பெருசா எந்த ரீசனும் இல்ல.. ஸோ சீக்கிரமே ராஜ் கல்யாணம் முடிவாகிடும்” ஆனந்த் சொல்ல,

“அபிமா! எவ்வளவு பெரிய விஷயத்தை உன் புருஷன் எவ்வளவு சாதாரணமா முடிக்க பாக்குறான் பாரு..” மெதுவாய் அபி அருகில் சென்று கூறினான் ராஜ்.

“ஓஹ்! காதல் கல்யாணமா.. இந்த காலத்து புள்ளைங்க எல்லாம் எங்க பெத்தவங்க பேச்சை கேட்குது?” இந்த பழம் புளிக்கும் என்று தெரிந்ததும் விமலா இப்படி சொல்ல, ஆனந்த், ராஜ் இருவரும் அமைதி காத்தனர்.

“எந்த கல்யாணமா இருந்தாலும் கட்டிக்க போறவங்க மனசு சேர்ந்தால் மட்டும் தான் கடைசி வரை ஒன்னா சந்தோசமா வாழ முடியும்.. அப்படி இல்லைனா அது வாழ்க்கையையே மாத்திடும்..” ஆனந்த் சொல்லவும்

“எக்ஸாக்ட்லி டா.. நீ எப்படி அபி சிஸ்டரை செலக்ட் பண்ணியோ அதே மாதிரி தான்..” என்றான் ராஜ்.

“ம்ம்க்கும்.. அது சரி.. ஆமா பொண்ணு யாரு? பெரிய இடமா?” விமலா.

“ஆமா அத்தை! ரொம்ப பெரிய இடம்”

“அதான்.. “

“என்ன அதான்? நான் சொன்னது அவ மனசு.. ஆயிரத்துல பத்து பேருக்கு தான் நல்ல மனசு இருக்கும்னு ஆராய்ச்சி ரிப்போர்ட் சொல்லுது.. அதுப்படி பார்த்தால் அவ ரொம்ப ரொம்ப பெரிய இடம்.. அண்ட் அவளை குறை சொல்றது யாரா இருந்தாலும்....”

பேசியது ராஜ் தான். அவனே தான். கோவம் தான் அதை கோவமாய் காட்டாமல் சிரித்தபடி சொல்லியிருந்தான்.

இப்படி பேசுவான் நேராக என யாருமே ஏன் ஆனந்த் கூட எதிர்பார்க்கவில்லை. இது விமலாவிற்கு தேவை தான் எனவும் நினைக்க மறக்கவில்லை.

வினோதன், ஸ்ரீ தேவி இருவருக்குமே விமலாவின் பேச்சு சுத்தமாய் பிடிக்கவில்லை. தலையில் அடித்துக் கொள்ளலாம் போல தான் இருந்தது.

எவ்வளவு கூறினாலும் விமலா கேட்க மாட்டார்.. அவர் பேச்சுக்கு ராஜ் பேச்சு ஒன்றும் பெரிதில்லை. பேசியாவரே வாங்கிக் கொள்ளட்டும் என்கின்ற எண்ணத்தில் தான் வழியின்றி நின்றனர்.

விமலா உள்ளுக்குள் பொருமிக் கொண்டாலும் வெளியில் காட்டிக் கொள்ள முடியாதே.. கோபம் முழுதும் அபி மேல் திரும்பியது. அவளிடமும் தனிமையில் பேச விடாமல் காவலன் போல கைபிடித்தே நிற்கிறான் அவள் கணவன்.

அடுத்தப் பேச்சுக்கள் எதுவும் ராஜ் திருமணம் சம்பந்தப்பட்டதாய் இல்லாமல் இருக்கும்படி தான் பார்த்துக் கொண்டான் ஆனந்த். விமலாவாலும் அதற்கு மேல் பேசிட முயலவில்லை.

மாலை வரை இருந்தவர்கள் பின் விடைபெற்று கிளம்பினர். காரில் அமைதியாய் அபி வர ராஜ், ஆனந்த் இருவரும் பேசிக் கொண்டு வந்தனர்.

“என்ன டா திடிர்னு அந்நியன் மாதிரி இவ்ளோ ஹார்ஷா பேசிட்ட.. னே இப்படி பேசி நானே பார்த்ததில்ல.. பாவம் தான் விமலா சித்தி.. அரண்டு போய்ட்டாங்க..” ஆனந்த் சொல்ல, ராஜ் சுபாவமே அது தான் என நினைத்திருந்த அபியும் ராஜை கேள்வியாய் பார்த்தாள்.

“டேய்! நான் ஜாலியா பேசுவேன்.. விளையாடுவேன் ஓகே.. அதுக்காக அவங்க பேசின மீனிங் பார்த்தியா? ஐ டோன்ட் லைக் இட் டா.. அண்ட் மது பத்தி பேச அவங்களுக்கு எந்த ரைட்ஸ்ஸும் இல்லையே! நான் அவளை கிண்டல் பண்றது, அவளை வச்சு கிண்டல் பண்றது வேற.. அதுக்காக எல்லார்கிட்டயும் அவளை விட்டுக் கொடுத்தா அப்புறம் நான் யூஸ்லெஸ் ஆயிடுவேன்”

ராஜ் இவ்வளவு தெளிவாய் பேசி ஆனந்தே இன்று தான் பார்க்கிறான்.

“ப்ரௌட் ஆப் யூ டா.. இனி இவங்களால எந்த பிரச்சனையும் வராது.. அண்ட் அபி! உனக்கு ஓகே தானே? இனி உன் அத்தை உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டாங்க தானே?” ஆனந்த் கேட்க,

“அப்படி தான் நினைக்குறேன்.. ஆனா தெரில.. சொல்ல முடியாது நாளைக்கே வந்து நின்னாலும் நிற்பாங்க.. அப்புறம் ராஜ் அண்ணா! மது ரொம்ப லக்கி.. எனக்கும் அவங்களை அறிமுகப்படுத்துங்களேன்!” என்றாள் பெருமையுடனே!

“அட என்ன சிஸ்டர்! உங்களுக்கு தெரியாமலா.. ஒரு டூ டேஸ் டைம் கொடுங்க.. இன்ட்ரோ பண்ணிடலாம்” ராஜ்.

“ம்ம்.. உங்களுக்கும் மதுவை தெரியுமாங்க?” ஆனந்த்திடம் கேட்டாள் அபி.

“மது, நான், இவன் எல்லாம் சேம் காலேஜ்.. இவனும் மதுவும் சேம் கிளாஸ்.. ஸோ அப்ப இருந்தே தெரியும்.. சரியான அருந்த வாலு”

“ஆமா ஆமா! லூசு இல்லாத சேட்டை எல்லாம் செய்வா.. இவளால எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா காலேஜ்ல?” – ராஜ்.

“அப்படி என்ன ண்ணா கஷ்டப்பட்டிங்க?” அபி கேட்க,

“அதை ஏன் மா கேட்குற? நான் நல்லா சைட் அடிக்க வசதியா எதிர்ல உட்கார்ந்துக்குவா.. அப்புறம் எக்ஸாம்ல பாஸ் பண்ணிட்டு என் பேப்பர் பார்த்து திட்டுவா..”

“ண்ணா! அருந்த வாலு அவங்க இல்ல.. நீங்க தான்” என்று சொல்லி அபி சிரிக்க, இந்த மூன்று நாட்களில் அபியின் சிரிப்பினை இன்று தான் பார்க்கிறான் ஆனந்த்.

“இப்ப என்ன பன்றாங்க?”

“என்ன பண்ணுவா? எல்லா பொண்ணுங்க மாதிரி நல்ல மார்க் வாங்கிட்டு வீட்டுக்கு காவலா வீட்டுல இருக்கிறா.. வீக்லி த்ரீ டேஸ் கோச்சிங் கிளாஸ் வருவா.. அந்த டைம் தான் நான் மீட் பண்றதே! அப்பவும் நாலு சண்டை போட்டு கோச்சிட்டு போறது தான் அவ வேலையே!”

“ஒஹ்ஹ்!

“பட் அவகிட்ட ஏதோ ஒன்னு இருக்கு அபிமா! அவ டேய்னு கூப்பிட்டா போதும்.. ப்ச் அதெல்லாம் செம்ம பீல்...” நினைவுகளில் நீந்திக்கொண்டே கூறினான் ராஜ்.

“ச்சோ! அபி காதை மூடிக்கோ.. இன்னும் என்னவெல்லாம் சொல்லப் போறானோ” ஆனந்த் கிண்டல் செய்ய,

“நானும் அவங்களை பார்க்க ரொம்ப ஆவலா இருக்கேன்னு சொல்லுங்க” என்றாள் அபி.

“ஸுர் டா!”

“உனக்காக எவ்வளவு நேரம் தான் வெயிட் பண்றது? லேட் ஆகும்னா கால் பண்ண மாட்டியா?” ஸ்ரீயை திட்டிக் கொண்டிருந்தான் ராம்.

“சாரி ராம்! அண்ணி விருந்துக்கு வந்திருந்தாங்க.. அவங்க கிளம்பினதும் தான் அம்மா விட்டாங்க.. அதான் லேட்” என்றாள் ஸ்ரீ.

“னே காரணம் மட்டும் ரெடியா வச்சிருப்பியே! சரி சொல்லு.. இன்னைக்கு என்ன பண்ணினாங்க உங்க அம்மா?”

“ஏன் என் அம்மாவை ஏதாச்சும் சொல்லிட்டே இருக்கணுமா உங்களுக்கு”

“ஏய் நீ தானே டி டெய்லியும் உங்க அம்மா அதை பண்ணினாங்க இதை பண்ணி டார்ச்சர் பண்ணினாங்கனு சொல்லுவ.. அதை தான் கேட்டேன்”

“ப்ச்! ஆமா டா.. எப்ப பாரு எதாவது பிரச்சனை பண்றதே எங்க அம்மாக்கு வேலையா போச்சு! இப்ப கூட அப்படி தான் பேசி வாங்கி கட்டிக்கிட்டாங்க”

“ஏன் என்னாச்சு?” ராம் கேட்க, நடந்ததை கூறினாள் ஸ்ரீ.

“ஆச்சுவல்லி எங்கம்மா என்னோட கல்யாணத்தை மைண்ட்ல வச்சு தான் அபியை மண்டபத்துல தப்பா பேசி கல்யாணத்தை நடத்தி இருக்காங்க.. இதெல்லாம் அஸ்வினி அண்ணி கால் பண்ணி எனக்கு சொன்ன பிறகு தான் தெரியும்.. அதுவும் இன்னைக்கு அந்த ராஜ் வேற யாரையோ லவ் பன்றான்னு தெரிஞ்சதும் எங்க அம்மா முகத்தை பார்க்கணுமே! நல்லவேளை பா.. நானே எப்படி நம்ம லவ் மேட்டரை வீட்ல பேசுறதுனு முழிக்குறேன்..இதுல புது பிரச்சனை வேற.. எப்படியோ இன்னைக்கே அது சால்வ் ஆகிடுச்சு..” ஸ்ரீ சொல்லி முடிக்க,

“எனக்கென்னவோ இனி தான் ப்ரோப்லேம் இருக்குன்னு தோணுது ஸ்ரீ.. என்னை உன் அம்மா ஏத்துக்குவாங்கன்னே தோணல”

“பொசிட்டிவ்வா யோசி பா.. எல்லாம் நல்லபடியா நடக்கும்.. நான் கூட இன்னைக்கு ஆனந்த் அண்ணாகிட்ட நம்ம லவ்க்காக ஹெல்ப் கேட்கலாம்னு நினச்சேன்.. எனக்கு நம்பிக்கை இருக்கு.. அவங்க ஹெல்ப் பண்ணுவாங்க..”

“பார்க்கலாம் ஸ்ரீ!”

“சீக்கிரமே உனக்கு ஒரு ஜாப் கிடைக்கணும் டா.. அது மட்டும் தான் நமக்கு இப்ப பிரச்சனை”

“நானும் ட்ரை பண்ணிட்டு தான் இருக்கேன் மா.. எதுவும் செட் ஆக மாட்டுது”

“விடு டா.. சீக்கிரமே கிடைக்கும்.. “ ஸ்ரீ சொல்ல, நம்பிக்கையுடன் சிரித்தான் ராம்.

ராம் சாதாரண குடும்பத்து இளைஞன்.. அவனை துரத்தி துரத்தி காதலித்து அவனையும் காதலிக்க வைத்திருக்கிறாள் ஸ்ரீ தேவி.. விமலாவின் மகள்.

இரண்டு வருடமாக வேலை தேடியும் இன்னும் அவனின் படிப்பிற்கான வேலை அவனுக்கு கிடைத்தபாடில்லை.. முன்னெல்லாம் அதில் சோர்ந்து போவான்.. இப்போது ஸ்ரீ கொடுக்கும் ஊக்கத்தில் தான் தளர்வடையாமல் தேடிக் கொண்டிருக்கிறான்.

தோட்டத்தில் தனியாய் அபி நிற்பதை பார்த்து அவளருகில் வந்தார் நடராஜன்.

“என்னம்மா! விருந்தெல்லாம் எப்படி போச்சு? சந்தோசமா இருந்தியா?” நடராஜன் கேட்க,

“நல்லா போச்சு தாத்தா! நீங்க என்ன பண்றீங்க? காபி சாப்பிட்டீங்களா?” என்றாள் அபி.

“ஆச்சு டா.. பவானி கொடுத்தா.. ஆனந்த் எங்கே? தோட்டத்துல தனியா என்ன பண்ற?”

“ராஜ் அண்ணாவும், அவங்களும் ஆஃபிஸ் விஷயமா பேசிட்டு இருந்தாங்க.. அதான் சுத்தி பார்க்கலாமேன்னு நான் வந்தேன்.. ஏன் தாத்தா! இங்கே ஒரு ரோஜா செடி வைக்கலாமா?” தனது எண்ணத்தை மூத்தவரிடம் கேட்டாள் அபி.

“உனக்கு என்ன வைக்கணும் தோணுதோ அதை வை டா.. பவானி தான் இதெல்லாம் பார்த்துக்குவா.. என்னவோ ரோஜா செடி எதுவும் நம்ம வீட்ல பூக்கவே இல்லைனு சொல்லிட்டு இருந்தா”

“சரி தாத்தா.. நாம வச்சு பார்க்கலாம்” பேசிக் கொண்டிருக்க இவர்களை பார்த்து இவர்கள் அருகில் வந்தான் ஆனந்த்.

தொடரும்..
 
Top