• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 7

“அபி நீ அத்தைகிட்ட பேசிட்டு இரு.. நான் மாமாக்கு கஞ்சி ரெடி பண்றேன்” என்று உள்ளே சென்றார் பவானி.

“என்ன அபி!” கொஞ்சம் திமிராய் அழைக்க, பயத்தோடே அவரருகில் சென்றாள் அபி.

“அத்தை!”

“நான் உன்கிட்ட சொன்னதுக்கு பதில் கூட நீ சொல்லல.. பெரிய இடம் கிடைச்சதும் திமிரும் தாராளமா வந்திடுச்சு போல!”

“அப்படி எல்லாம் இல்ல அத்தை”

“பின்ன எப்படி? நான் ஸ்ரீக்கு பேசுன்னு சொன்னேனே.. அதை பேசினியா?”

“இல்ல அத்தை.. அவரு வேற ஏதோ ஒரு பொண்ண விரும்புறாங்களாம்.. அதான் நான் ஸ்ரீ பத்தி எதுவும் பேச முடியல..”

“பசங்கன்னா அப்படி தான் இருப்பாங்க.. காதலிச்ச பொண்ணையே இப்பலாம் எவன் கட்டுறான்?”

“அப்படி இல்ல அத்தை.. அவங்க ரொம்ப...”

“அதெல்லாம் சொல்ல தான் செய்வாங்க.. கல்யாணம் ஆனா எல்லாமே சரி ஆகிடும்” விமலா சொல்ல,

மறுபடியும் ஸ்ரீ கல்யாணம் பற்றி பேச வைத்திடுவாரோ என அபி பயந்து நின்றாள்.

நீ உதவி பண்றவளுக்கே உபத்திரம் பண்றவன்னு தெரியாமல் போச்சு.. உனக்கு நல்லது நடக்கணும்னு அன்னைக்கு நான் மண்டபத்துல போராடுனேன் பாரு எனக்கு தேவை தான்” என வார்த்தைகளை ஆரம்பித்தார் விமலா.

“அப்படி எல்லாம் இல்ல அத்த.. ராஜ் அண்ணாக்கு அது பிடிக்கலனு தான்...”

“நீ பேசாத மா.. நீ பேசவே வேண்டாம்.. இனி நான் பார்த்துக்குறேன்.. உன் உதவி ஒன்னும் எனக்கு தேவை இல்ல.. யார்கிட்ட எப்படி பேசணுமோ அப்படி பேசிக்குறேன்.. நீ நல்லா இரு” என்றவர் எழுந்து கிட்சேன் உள்ளே சென்றார்.

“என்னக்கா பண்றிங்க” – விமலா.

“கனகா அண்ணி ஆபீஸ் கிளம்பிட்டு இருக்காங்க.. அதான் அவங்களுக்கு மட்டும் சூடா தோசை ஊத்துறேன்.. அபி என்ன பன்றா? உங்களோட பேசிட்டு இருக்க சொன்னேன்னே?” பவானி கேட்க,

“இல்ல பரவால்ல.. அவ ரெஸ்ட் எடுக்கட்டும்.. நான் தான் சும்மா உங்ககிட்ட பேசலாம்னு வந்தேன்.. அப்புறம்.. கனகா அண்ணிகிட்ட நான் இப்ப பேசலாமா?” என்றார் பணிவாய் கேட்பது போல.

“அண்ணிகிட்டவா...”

“அன்னைக்கு கல்யாணம் மாத்தி நடந்த அப்புறம் அவங்களை பார்க்கவே இல்ல.. அதான் சும்மா ரெண்டு வார்த்தை பேசிட்டு போறேனே”

“அக்கா! அண்ணி கொஞ்சம் பேசுவாங்க.. அதுனால தான் யாரும் அவங்ககிட்ட போகல..”

“நாங்க யாரும் எந்த தப்பும் பண்ணலையே! சும்மா ரெண்டு வார்த்தை தானே?”

“சரி வாங்க” என அழைத்து சென்றார் பவானி.

“அண்ணி அபி அத்தை உங்ககிட்ட பேசணும்னு சொன்னாங்க” பவானி சொல்ல,

“எனக்கு ஆபீஸ்க்கு நேரமாச்சு பவானி”

“அண்ணி! நான் சும்மா ரெண்டு வார்த்தை பேசிட்டு போலாம்னு தான் வந்தேன்.. தப்பு பண்ணவங்ககிட்ட பேசல சரி.. என்கிட்ட நீங்க கோபப்பட்டு என்னாக போது?” என்று விமலா கேட்க, நிமிடத்திற்குள் மாற்றி பேசும் இவர் இயல்பை பார்த்து முகம் சுழித்தார் பவானி..

“சரி என்ன விஷயம் சொல்லுங்க” என கேட்க,

“நீங்க பேசுங்க.. நான் மாமா வந்துட்டாங்களானு பாக்குறேன்” என்று சென்றார் பவானி.

“ஒன்னும் இல்ல அண்ணி! நடந்தது நடந்து போச்சு.. ஏதோ சின்ன பசங்க தப்பு பண்ணிட்டாங்க.. இனி நடக்குறதை நாம பார்க்கலாமே!”

“என்ன நடக்கணும்? எல்லாமே நடந்துட்டு தானே இருக்கு.. உங்க வீட்டு மருமகன் விருந்துக்கு எல்லாம் வந்தாங்க தானே?” – கனகா.

“அதெல்லாம் அவங்க வாழ்க்கை சரியா போய்ட்டு இருக்கு.. நான் அடுத்து இருக்குற உங்க தம்பி மகன் கல்யாணத்தை பத்தி தான் பேச வந்தேன்..”

“என் தம்பி மகன் கல்யாணம்.. அதை நீங்க என்ன பேசணும்?”

“இல்ல நான் தப்பா எதுவும் சொல்லல.. உங்க மகன் தான் உங்க பேச்சை கேட்கல.. நீங்க சொன்னா ராஜ் தம்பி கேட்பார் தானே? நீங்க மனசு வச்சா... உங்க தம்பி மகன் ராஜ்க்கும் என் பொண்ணு ஸ்ரீ தேவிக்கும் கல்யாணம் பண்ணலாம்.. என் பொண்ணு நான் சொன்னா அப்படியே செய்வா.. ராஜ் தம்பி கூட அப்படி தான்னு நினைக்குறேன்.. வீட்டு பெரியவங்ககிட்ட தானே பேசணும்? அதான் உங்ககிட்ட பேச வந்தேன்..” தான் சொல்ல வந்ததை விரிவாய் அழுத்தமாய் சொல்லி முடித்தார் விமலா.

“ராஜ் நான் சொன்னா அப்படியே செய்யறவன்.. ஒரு பையன் என்னை ஏமாத்தி இருக்கலாம்.. அதுக்காக ராஜை நான் சந்தேகப் படமாட்டேன்.. ஆனா மறுபடியும் உங்க குடும்பத்துல பொண்ணு... அது நான் கொஞ்சம் யோசிக்கணும்” முகத்துக்கு நேராய் பேசினார் கனகா.

“எங்க குடும்பத்துக்கு என்ன குறை? அஸ்வினி, அபிநயா ரெண்டு பேரும் என் புருஷன் தங்கச்சி பசங்க.. நாங்க நல்லா தான் படிக்க் வச்சு வளர்த்தோம்.. அவங்க கெட்டு அலைஞ்சா....”

“போதும்! என் பையன் காதலிச்ச பொண்ணை தான் கல்யாணம் பண்ணி இருக்கான்.. அவங்களை பத்தி தப்பா சொல்லாதீங்க.. அதுக்கு உங்களுக்கு ரைட்ஸ் இல்லை”

“இல்ல.. இல்ல.. நான் அப்படி சொல்ல வர்ல.. அவங்களை வளர்த்த நாங்க எங்க பொன்னையும் நல்லா தான் வளர்த்தோம்னு சொல்ல வந்தேன்.. நீங்க தப்பா எடுத்துக்காதிங்க” என்று கூறிய விமலா

‘இந்த நேரத்துலயும் மகனை விட்டு கொடுக்கலையே இந்த அம்மா’ என நினைக்காமல் இல்லை.

“நீங்க சொல்றதும் சரி தான்.. எதுக்கும் உங்க பொண்ணுகிட்ட ஒரு முறை கேளுங்க” கனகா சொல்ல,

“என் பொண்ணு நான் போட்ட கோட்டை தாண்ட மாட்டா.. அதுக்கு நான் உறுதி” என மீண்டும் கூறினார் விமலா.

“சரி! நான் வீட்ல பேசிட்டு சொல்றேன்” யோசனையோடே கூறினார் கனகா.

“நீங்க நல்ல முடிவா சொல்லுவீங்கனு எதிர்பார்த்து காத்திருப்போம்.. அப்ப நான் கிளம்புறேன் அண்ணி” என அவரிடம் விடைபெற்றார்.

கனகாவும் இது நடந்தால் என்ன என்று யோசிக்க ஆரம்பித்தார்.

“இந்த வெண்டைக்காய் ஏன் மா இப்படி வேகவே இல்ல.. முட்டைகோஸ்க்கு இன்னும் கொஞ்சம் முட்டை சேர்த்திருக்கலாம்” நடராஜன் ஒவ்வொரு குறையாய் சொல்ல,

“என்ன மாமா இன்னைக்கு டேஸ்ட் கொஞ்சம் தூக்கலா உங்க நாக்கு கேட்குது போல? சரி இல்லையே! என்ன விஷயம்?” என்றார் பவானி.

“தினமும் இதே வெண்டைக்காய், முட்டைகோஸ், பீட்ரூட் தானா? அப்புறம் என் நாக்கை அடக்கம் தான் பண்ணனும்”

“உடம்பு முழுக்க வியாதி வந்த அப்புறம் பார்த்து என்ன மாமா பயன்.. ஹெல்த்தியா சாப்பிட்டா தானே நல்லது?”

“இதுக்கு மேல எனக்கு என்ன வியாதி வரணும்.. நல்லா உப்பு காரமா போட்டு பிரியாணி செஞ்சு தான் மா.. நாக்கு நமநமங்குது”

“உங்க பொண்ணு ஓகே சொல்லட்டும்.. நிக்குறது, ஓடுறது, பறக்குறது எல்லாமே செஞ்சு தரேன்”

“அப்ப இந்த ஜென்மத்துல நடக்காதே!”

“அது அக்கா கையில இருக்கு.. நீங்களே கேளுங்க” என விமலா சொல்லிக் கொண்டு இருக்க அபியும் அவர்களுடன் இணைந்து கொண்டாள்..

மதிய உணவு இப்போது இவர்கள் மூவரும் சேர்ந்து உண்டு பழகிவிட்டது. அபியும் இவர்களோடு ஒன்றாய் பழக ஆரம்பித்து விட்டாள்.

“நினைத்ததை நடத்தியே முடிப்பவள் நான்.. நான்.. நான்!” என பாடியவாறு வீட்டிற்கு வந்தார் விமலா.

“ம்மா! சாப்பாடு கூட செய்யாமல் காலையிலே போய்ட்டு இந்நேரம் வர்றியே எங்கேம்மா போன?” – ஸ்ரீ.

“எல்லாம் நம்ம வீட்டுக்கு நல்லது நடக்க தான் டி போய்ட்டு வரேன்.. இனிமேல் நமக்கு நல்ல நேரம் தான்”

“என்னம்மா சொல்ற?”

“ம்ம்! இந்த அபியோட மாமியாரை தான் டி பார்க்க போனேன்”

“அங்கே ஏன் மா போன? அதுவும் காலையிலே போய்ட்டு இவ்வளவு நேரம் ஏன் மா?”

“நான் கோவிலுக்கு போய்ட்டு தான் டி அங்கேயே போனேன்.. அதுவும் சும்மா இல்ல.. சம்மந்தம் பேச போனேன்”

“சம்மந்தமா? என்னம்மா சொல்ற?” கொஞ்சம் பயம் கவ்வியது ஸ்ரீக்கு.

“ஆஆமா! என்னை அந்த அபி எவ்வளவு கீழ்த்தரமா நினைச்சிருந்தா நான் உனக்கு அந்த பையனை பேச சொல்லி அனுப்பியும் அவ பேசாம காரியம் சாதிக்க நினைச்சிருப்பா? அதான் இன்னைக்கு நானே நேரில போய் அந்த கனகா அம்மாகிட்ட பேசிட்டு வந்துட்டேன்”

“அய்யோ அம்மா ஏன் மா என்கிட்ட ஒரு வார்த்தை கூட கேட்கல? நான் ஒரு வேலைக்கு போன அப்புறம் தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொன்னேன்ல?”

“வாயிலே போடுவேன்.. அபசகுணமா பேசிகிட்டு.. இந்த கல்யாணம் நடந்தா தான் நமக்கு நல்லது.. இல்லைனா அந்த அபி உனக்கு டாட்டா கட்டிட்டு மேல மேல போய்ட்டு இருப்பா.. நாம கீழ நின்னு பார்த்துட்டே நிக்கணும்”

“அதுக்கு என் வாழ்க்கை தான் கிடைச்சுதா உங்களுக்கு”

“வாயை மூடு டி.. எவ்வளவு பெரிய இடம் தெரியுமா? அதுவும் ஒரே பையன்.. அந்த அபி எல்லாம் சும்மா.. தூசி மாதிரி தட்டி விடலாம்.. ஒழுங்கா பொண்ணா மேடையேறி தாலிய வாங்குற வழியைப் பாரு”

“அய்யோ ம்மா! நான் சொல்றதை கொஞ்சம் கேளுமா”

“நீ ஒன்னும் சொல்ல வேணாம்.. முதல்ல அவங்க ஒரு நல்ல முடிவா சொல்லட்டும்”

“ம்மா! ம்மா!” ஸ்ரீ கூப்பிட கூப்பிட கேட்காமல் சென்றார் அன்னை.

“அய்யோ!” என்று தலையில் கை வைத்தவள் உடனே ராமிற்கு மொபைலில் அழைத்தாள்.

ராம் எடுத்ததும் இவள் அழ ஆரம்பிக்க அவளை சமாதானப்படுத்தி என்னவென கேட்க அனைத்தையும் கூறினாள் ஸ்ரீ.

“எனக்கு என்னவோ பயமா இருக்கு ராம். அம்மா ரொம்ப முடிவா பேசுறாங்க”

“ஹேய் அதான் அவங்க வீட்ல இன்னும் எந்த முடிவும் சொல்லையே! விடு.. நான் வேணா நாளைக்கே பொண்ணு கேட்டு வரவா”

“வேற வினையே வேணாம்.. அப்படி எதுவும் பண்ணிடாத ராம்..”

“ப்ச் இப்ப என்ன தான் பண்ண சொல்ற?”

“அதான் நீயே சொல்றியே! சரி அவங்க வீட்ல என்ன பதில் சொல்லறாங்கனு பார்த்துட்டு முடிவு பண்ணலாம்”

“ம்ம் சரி டா.. ஆனா நீ மாறிட மாட்டல்ல?”

“ராம்! அப்படி தப்பா எதுவும் நடந்தா நான் வீட்டைவிட்டு வந்துடுவேன்”

“அப்படி எதுவும் நடக்காது ஸ்ரீ.. சரியா! நீ கொஞ்சம் கவனமா இரு.. உங்க அம்மாவை வாட்ச் பண்ணு.. எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லு”

“ம்ம் சரி ராம்..”

“அழாம தைரியமா ஃபேஸ் பண்ணனும்.. ஓகே!”

“ம்ம் சரி டா.. நான் வைக்குறேன்”

“சரி மா”

“பவானி!” கனகா அழைத்ததும் வந்தார் பவானி.

“சொல்லுங்க அண்ணி!”

“அப்பா சாப்பிட்டாங்களா?”

“இன்னும் இல்லை அண்ணி! இனி தான் ரூம்க்கு கொண்டு போகணும்”

“சரி அப்பாவை நான் ஹாலுக்கு கூட்டிட்டு வரேன்.. எல்லாரையும் சாப்பிட வர சொல்லுங்க”

“சரி அண்ணி” என்றவர் தன் கணவர் குமரனிடம் சொல்லிவிட்டு ஆனந்திடம் சென்று கூறினார்.

“அம்மாவே வர்றாங்களா.. என்ன பேசவா இருக்கும்?” ஆனந்த் கேட்க,

“தெரில டா.. நீ சாப்பிட வா பார்த்துக்கலாம்” என்று சென்றார் பவானி.

“அப்ப நான் இன்னைக்கு அத்தைகிட்ட பேசட்டுமா?” அபி ஆனந்திடம் கேட்க,

“உன் அத்தை மூட் எப்படி இருக்குன்னு தெரியலையே கண்மணி! சரி வா.. கேப் கிடைச்சா புகுந்து பேசி பார்ப்போம்” என்றான்.

அனைவரும் இரவு உணவுக்காக அமர்ந்திருக்க நடராஜனை அழைத்துக் கொண்டு வந்தார் கனகா.

“சாப்பிட வேண்டியது தானே? ஏன் எல்லாரும் பார்த்துட்டே இருக்கீங்க?” கனகாவின் அதட்டலுக்கு பின் அபியும் பவானியும் பரிமாற அனைவரும் சாப்பிட்டனர்.

“என்னம்மா! எதாவது முக்கியமான விஷயமா?” நடராஜன்.

“ஆமா ப்பா! எல்லாரும் சாப்பிடட்டும்” என்று சொல்லவும் அரட்டையாய் சாப்பிடும் கூட்டம் அமைதியாய் சாப்பிட்டது.

“அப்பா! ராஜ் கல்யாணத்துக்கு ஏதாவது பிளான் பண்ணியிருக்கிங்களா ப்பா!” நடராஜன்னிடன் கனகா கேட்க, சாப்பிட்ட அனைத்தும் தொண்டைக்குள் வந்தது ராஜிற்கு.

“இப்ப தானேம்மா தேவ் கல்யாணம் முடிஞ்சது! ஒரு ஆறு மாசம் போகட்டும் நினச்சேன்”

“நல்ல பொண்ணு நல்ல இடம்னா பார்க்கலாம் நினைக்குறேன்.. நீங்க என்ன நினைக்குறிங்க? குமரா உனக்கு என்ன தோணுது?”

“நீங்க எது செஞ்சாலும் சரி தான் அக்கா” குமரன் சொல்ல,

‘அப்பா ஏன் பா.. தாத்தா டூ சம்திங்!..’ நொந்து கொண்டான் ராஜ்.

“இப்ப என்னம்மா திடிர்னு?” – நடராஜன்.

“ராஜ் கல்யாணத்தை பண்ணிடலாம்னு முடிவு பண்ணியிருக்கேன் பா”

“ஏன்மா! அவன் அப்பா, அம்மான்னு யார்கிட்டயும் கேட்காமல் எப்படி நீயா முடிவு பண்ணலாம்? பவானிகிட்ட ஒரு வார்த்தை கேட்டியா?”

“மாமா! அண்ணி எப்பவும் நல்லது தான் செய்வாங்க.. அவங்க என்ன செஞ்சாலும் நல்லது தான் செய்வாங்க” என அடித்து பவானி கூற, அனைவரும் காட்சி மாறி கட்சி மாறி நிற்பதாய் தோன்றியது ராஜிற்கு.

ஆனந்த் அபி இருவரும் நடப்பதை கேட்க மட்டுமே முடிந்தது.

“தேங்க்ஸ் பவானி!” – கனகா.

“சரி அப்ப பொண்ணு பார்க்கலாம்னு சொல்றியா மா?” நடராஜன் கேட்க,

“பொண்ணு பார்த்தாச்சுன்னு சொல்றேன் ப்பா” என்றார் மகள்.

“யாரு மா?” ராஜின் கெஞ்சல் பார்வையை பார்த்துக் கொண்டே கேட்டார் நடராஜன்.

“விமலா வினோதன் பொண்ணு! பேரு சரியா நியாபம் இல்ல.. எல்லாரும் சரினு சொன்னா போய் பொண்ணை பார்த்துட்டு வரலாம்..”

“அவங்க பொண்ணா?” உடனே கேட்டது பவாணி தான்.

“ஏன் பவானி உனக்கு எதாவது பிரச்சனையா?” – கனகா.

“அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல அண்ணி.. நீங்க சொன்னா சரியா தான் இருக்கும்”

“உன் பையன் கல்யாணம் பவானி.. நீயும் கொஞ்சம் யோசி” மகனை கண்களால் காட்டி நடராஜன் சொல்ல, பவானி அதை கவனிக்கவே இல்லை.

“அப்பா! உங்களுக்கு தான் இஷ்டம் இல்லைனு தோணுது.. நீங்க கொஞ்சம் யோசிச்சு பாருங்க பா.. விமலா பேசுறது என்னவோ சரி இல்லை தான்.. ஆனா அவங்க பொண்ணு அப்படி இல்லைனு அடிச்சு சொல்றாங்க.. சொல்ற பேச்சை எல்லாரும் கேட்குறது இல்லையே!” ஆனந்த்தைப் பார்த்து கூறினார்.

“எல்லாம் சரி தாத்தா! ஆனா ராஜ்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கோங்க” ஆனந்த் கூறினான்.

“எல்லாரும் உன்னை மாதிரி இருக்க மாட்டாங்க.. நான் சொன்ன பேச்சை தட்ட மாட்டான் அவன்” இப்போதும் அவனிடம் கேட்காமல் கோபமாய் கனகா சொல்ல,

“ஏன் மா அவசரப்படுற? ஒரு வார்த்தை கேட்டுடலாம்” என்றார் தாத்தா.

“டேய் அதான் தாத்தாவும் அத்தையும் சொல்றாங்க இல்ல.. பதில் சொல்லு” குமரன் அதட்ட,

“டேய் இப்பவே சொல்லிடு டா.. பிரச்சனை பண்ணிடாத” ராஜ் அருகில் இருந்து காதுக்குள் பேசினான் ஆனந்த்.

“சொல்லு ராஜ்” தாத்தாவும் அழுத்தமாய் சொல்ல,

“அவன் சின்ன பையன் தானே? திடிர்னு கல்யாணம்னதும் தினறுறான்” என சமாதானம் கூறினார் பவானி.

“அய்யோ அம்மா சொதப்புறிங்களே” என்ற ராஜ் பேசாததாற்கு அத்தை தன் மேல் கொண்ட மதிப்பும் காரணம்.

“சரிப்பா! நல்ல நாள் பாருங்க.. போய் பேசலாம்” என்ற கனகா எழுந்து சென்றுவிட பவானி, குமரன் தவிர அனைவரும் ராஜை முறைத்தனர் அபியும் சேர்ந்து.

“என்னை ஏன் முறைக்குறிங்க? உங்க எல்லாருக்கும் தான் தெரியும்ல? யாராச்சும் மேட்டர் இது தான்னு பேசுனீங்களா.. யோவ் பெரியவரே! உங்ககிட்ட தானே நான் லவ் பன்றேன்னு முதல்ல சொன்னேன்? நீ ஏன் யா என் வாயை பார்த்துட்டு இருக்க? சொல்ல வேண்டியது தான?” கனகா முன் பேச முடியாததற்கும் சேர்த்து ஆதங்கமாய் தாத்தாவை பார்த்து அவன் கேட்க,

“என்னது லவ் பண்றியா?” என அதிர்ச்சியாய் கேட்டார் பவானி.

“டேய் சொதப்பாத டா.. அம்மாக்கு விஷயம் தெரியாது.. மறந்துட்டியா?” ஆனந்த் கேட்க,

“அதான் இவ்வளவு தூரம் வந்துடுச்சே! அம்மாக்காச்சும் தெரியட்டும்.. ம்மா! விமலா பொண்ணு கமலா பொண்ணு எல்லாமே எனக்கு வேணாம்.. எனக்கு மது தான் வேணும்” ராஜ் சொல்ல,

“பவா! நீ இந்த பையனை தான் ஒன்னும் தெரியாத சின்ன பையன்னு அக்காகிட்ட சொன்ன.. பார்த்துக்கோ இந்த பையனை” என எடுத்து கொடுத்தார் குமரன்.

“ஐயோ போச்சு! போச்சு! ஆனந்த் கல்யாணத்துக்கே அண்ணி உடைஞ்சு போய்ட்டாங்க.. இதுல நீ வேற ஏன் டா இப்படி பண்ற? அய்யோ! அய்யோ! நான் என்ன பண்ணுவேன்” பவானி புலம்பலை ஆரம்பிக்க,

“அத்தை ஏன் இப்ப டென்ஷன் ஆகுறிங்க? ஒன்னும் இல்ல.. விடுங்க விடுங்க.. கூல்.. டேய்! அம்மா கேட்கும் போது முடியாது லவ் பன்றேன்னு சொல்ல வாய் வர்ல இப்ப ஏன் டா கத்திட்டு இருக்குற?” என ஆனந்த் திட்ட,

“இப்ப எனக்கு ஒரு பதிலை சொல்லுங்க டா.. நான் என்ன பண்ணட்டும் அத்தை பேசுனதை பார்த்தல்ல?” என தலையில் கைவைத்து அமர்ந்தான் ராஜ்.

தொடரும்..
 
Top