• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 9

"நான்... சும்மா தான்... பார்த்தேன்.. அதுக்கு நீங்களா எப்படி ஒரு அர்த்தம் எடுக்கலாம்?" அபி வெட்கம் மறைத்து மெல்லிய முறைப்புடன் கேட்க,

"ஆஹான்! சரி தான் மேடம்.. நீங்க சொன்னா கரெக்ட்டா தான் இருக்கும்.. என் பார்வை தான் சரியில்லை போல.. இனி வேணா... மாத்திக்கிறேன்" என்றான் ஒரு மாதிரியான அதே சமயம் அவளுக்கும் புரியும் குரலில்.

"அதெல்லாம் ஒன்னும் இல்ல.. ரொம்ப பெரிய ப்ரோப்லேம்.. இதுக்கு எப்படி ஒரு சொல்யூஷன் வரும்னு நினைக்கும் போது நீங்க ஸ்ரீ எடுத்த முடிவு தப்புன்னு சொல்லி அவளுக்கு புரிய வச்சீங்களே! அங்கே இருந்து நீங்க பேசின ஒவ்வொரு வார்த்தையும் எவ்வளவு சரினு தோணுச்சு.. அதுக்காக தான் பார்த்தேன்.. வேற ஒன்னும் இல்ல"

"அவ்வளவு தானா? நான் கூட என் வைஃப்க்கு என் மேல லவ் வந்திடுச்சோன்னு தப்பா நினச்சுட்டேன்.." இன்னும் அவளை கிண்டல் செய்ய,

"நினைப்பிங்க.. நினைப்பிங்க.. ஆமா நீங்க சீரியஸ்ஸா பேசிட்டு தானே இருந்திங்க? அப்புறம் எப்படி நான் உங்களை பார்த்தது உங்களுக்கு...."

"ஏன் கேப் விடுற.. பில் பண்ணிடு.. என்னை நீ சைட் அடிச்சது எப்படி தெரியும்னு தானே கேட்குற?"

"நான் ஒன்னும் சைட் எல்லாம் அடிக்கல.."

"சரி! நீ என்னை பார்த்தது எப்படி எனக்கு தெரியும்னு தானே கேட்குற?"

"ஹ்ம்ம்!"

"எத்தனை பேருக்கு நடுவுல நீ நின்னாலும்.. நான் எவ்வளவு தூரமா வேற வேலையா இருந்தாலும் ஐ கேன் ஸ்மெல் யூ.. அண்ட் ஐ வில் வாட்ச் யூ.. ஓகே"

"ம்ம்! நல்லா சமளிக்குறீங்க"

"அதே தான்.. தெரிஞ்சிடுச்சுல்ல.. விடு.."

"ஹ்ம்ம்! ஆனா ஏன்?"

"என்ன ஏன்?"

"நான் உங்களை.. ஏமாத்தினேன்ல?"

"அதுனால தானே நீ எனக்கு கிடைச்ச?"

"ஆனாலும் எப்படி என்னை உங்களுக்கு புடிச்சது?"

"அது தான் எனக்கும் தெரியல.. நீ கண்டுபிடிச்சிட்டன்னா எனக்கும் சொல்லு.. ஓகே!"

"ப்ச்! விளையாடாதீங்க"

"நான் எப்ப டி உன்கிட்ட விளையாடினேன்?"

"போங்க! நான் போறேன்!"

"ஓகே ஓகே! கூல்.. நீ அம்மாகிட்ட பேசறியா?"

"நீங்க தானே வேண்டாம்னு சொன்னிங்க?"

"இப்பவும் நான் தான் சொல்றேன்.. பேசிப் பாரு.. இப்பவே அம்மாக்கு ஐஸ் வச்சா தான் ராஜ் கல்யாணத்துக்கு நாமளும் இன்வோல்வ் ஆக முடியும்.."

"ஓஹ்"

"ம்ம்! பேசு.. நானும் பேசுறேன்.. அம்மாவும் கொஞ்சமாச்சும் அதுல இருந்து வெளிவந்திருப்பாங்க இல்லை.
சோ ட்ரை பண்ணி பார்ப்போம்"

"ஹ்ம்ம் சரி"

"ம்ம் டா! அப்புறம் முடிஞ்சா இனி அடிக்கடி உன் அத்தை வீட்டுக்கு போய்ட்டு வா.. அப்ப தான் உங்க விமலா அத்தை எதாவது எக்ஸ்ட்ரா பிளான் பண்ணினா நமக்கு தெரியும்"

"ம்ம் சரிங்க..நான் ஒன்னு கேட்கவா?"

"பெர்மிஸ்ஸன் கேட்குறதை எப்ப தான் நிறுத்த போறியோ! சொல்லு என்ன கேட்கணும்?"

"எனக்கு அச்சுவை பார்க்கணும் போல இருக்கு"

"பார்க்கலாமே!"

"எப்படி?"

"ம்ம்ம்ம்ம்! யோசிக்கலாம்"

"வெளில எங்கேயாவது..." தயங்கியே கேட்டாள்.

"சாரி அபி! வீட்ல இருக்குற சிட்டுவேஷன் உனக்கே தெரியும்.. அதுனால தான் வீட்டுக்கு கூப்பிட கஷ்டமா இருக்கு.. உங்க அத்தை வீட்டுக்கு வர சொல்லலாம்.. பட் அதுவும் ரிஸ்க் தான்.. நிறைய நீங்க பேச முடியாது.."

"எனக்கும் புரியுதுங்க.. அதான் நானும் வெளியவே மீட் பண்லாம்னு கேட்குறேன்"

"சரி டா.. ஏதாச்சும் காமன் பிளேஸ்ல மீட் பண்ற மாதிரி பிளான் பண்ணு.. ஸ்ரீ கூட அஸ்வினியை கேட்டாங்க இல்ல.. அவங்களையும் வேணா சேர்த்துக்கோங்க.. ஒன் டே என்ஜோய் பண்ணிட்டு.. அவங்க ஊருக்கு கிளம்பட்டும்.. ப்ரோப்லேம் கொஞ்சம் சரியானதும் அஸ்வினியை கூப்பிட்டு நம்மோடவே வச்சுக்கலாம் ஓகே"

"ம்ம் இது தான் உங்க கேரக்டர்னு இப்ப தான் எனக்கு தெரியுது" சிரித்துக் கொண்டே கூறினாள் அபி.

"அப்படி என்ன மேடம் கண்டுபுடிச்சீங்க என் கேரேக்டரை?"

"இல்ல.. இப்ப எனக்கு அச்சுவை பார்க்கணும்னு இருக்குன்னு தான் நான் சொன்னேன்.. ஆனா நீங்க ஃபியூச்சர் வரை யோசிக்குறீங்களே! இப்படி தானே ராஜ் அண்ணா, ஸ்ரீ மேரேஜ் பத்தியும் கொஞ்ச நேரம் முன்னாடி பேசினீங்க.. அதைத்தான் சொல்றேன்.."

"ஹ்ம்ம் ஆமால்ல.. ரொம்ப திங்க் பண்றேன் போல..."

"மாத்திக்காதீங்க! இது தான் நல்லாருக்கு"

"மனைவி சொன்ன பின் மாற்றம் உண்டோ? மாத்திக்கல போதுமா?"

"ம்ம்"

"ஓகே டா! நீ ரெஸ்ட் எடு.. நான் ராஜ் கூட கொஞ்சம் வெளில போயிட்டு வர்றேன்"

"ம்ம் சரி!"

"முடியாது! முடியாது! முடியவே முடியாது! ஏன் டா என்னை பார்த்தால் எப்படி தெரியுது? உங்களை எல்லாமே குழந்தைன்னு நான் நினைச்சுட்டு இருக்கேன்.. அவன் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிட்டு நிக்குறான்.. நீ லவ் பன்றேன்னு வந்து நிக்குற.. ஏன் டா படுத்துறீங்க? அதுவும் கல்யாணத்துல புரட்சி பண்ணி ரெண்டு கல்யாணத்தை நடத்த போறானுங்கலாம்..அதுக்கு நான் துணை போகணுமாம்.. எவன் டா உனக்கு இவ்வளவு கேவலமான ஐடியா கொடுத்தது?"

நடு ஹாலில் நின்று பவானி ராஜை திட்டிக் கொண்டிருக்க, படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்த ஆனந்தை கை காட்டினான் ராஜ்.

"இவன் தான் மா ஐடியா கொடுத்தான்" போட்டும் கொடுத்தான் உயிர் நண்பன்.

"அத்தை! அது இவங்க எல்லாரும் சேர்ந்து..."

"பேசாத ஆனந்த்! நீ என்ன சொன்னாலும் செஞ்சது தப்பு! அண்ணிக்கு தெரியாமல் எப்படி இப்படி எல்லாம் யோசிக்குறீங்க?"

"ஆமா அம்மா நல்லா கேளுங்க.. அந்த பொண்ணு ஸ்ரீ கூட நான் ராமை கல்யாணம் பண்ணிக்கிட்டு இப்பவே எங்கேயாவது போயிடுறேன்.. நீங்க நல்லாருங்கன்னு சொல்லுது.. ஆனா இந்த தேவ் தான் சொதப்பிட்டான்" ராஜ் ஆனந்தை பழி சொல்ல,

"எது ஸ்ரீ வீட்டைவிட்டு போகணும் ரெடியா இருந்தாளா? அடப்பாவிகளா? பிள்ளைகளா டா நீங்க எல்லாம்? அப்படி மட்டும் எதாவது நடந்துச்சு.. துடைப்பைக்கட்டை பிஞ்சிடும் டா உனக்கு" என ராஜை திட்டியவர்,

"இதையாவது உருப்படியா தடுத்தியே!" என முறைத்தவாறு ஆனந்தை கூறினார்.

"அது தான் அத்தை நானும் சொல்றேன்.. இப்படி தப்பா ஏதாவது நடக்க கூடாது அதே சமயம் இவங்க ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைக்க எனக்கு தெரிஞ்ச வழி சொன்னேன்.. இனி உங்க விருப்பம்" ஆனந்த் சொல்லிவிட,

"அய்யோ உங்களை எல்லாம் நல்ல புள்ளைங்கன்னு நினைச்சேனே!" என புலம்பினார் பவானி. கனகாவிற்கு பதில் சொல்ல முடியாதே என்பது தான் அவருடைய கவலையே!

"பசங்க எல்லாம் தெளிவா தான் இருக்காங்க பவானி.. நாம தான் அவங்களை புரிஞ்சுக்கல.. ஒரு வயசுக்கு மேல அவங்களுக்கான வாழ்க்கையை வாழனும்னு ஆசை படுறாங்க.. அது தப்பு இல்லையே! இப்ப பவானி மட்டும் பிடிவாதம் பண்ணலைனா நாமே கூட இந்த கல்யாணத்தை தடுத்திருக்கலாம்.. இனி அவங்க விருப்பம்னு விட்டுடேன்" நடராஜன் அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தவர் சொல்ல,

"நீங்களும் இவங்களுக்கு சப்போர்ட்டா மாமா! இனி எனக்கு எதுவும் தெரியாது.. என்னவோ பண்ணுங்க"

"இதுவே உங்க பிளெஸ்ஸிங்கா எடுத்துக்குறோம் அத்தை.. நாங்க கிளம்புறோம்.. பை" ராஜை இழுத்துக் கொண்டு சென்றான் ஆனந்த்.

"என்ன மாமா இப்படி பேசிட்டு போறாங்க" பவானி பயந்து சொல்ல,

"விடு மா இனி அவங்க பார்த்துக்கட்டும்" என விலகி சென்றார் நடராஜன்.

"எங்கே டா போறோம்?" ராஜ் ஆனந்த்திடம் கேட்டான்.

"பொண்ணு பாக்குற ஃபன்க்ஷன கேன்சல் பண்ணிட்டு ஸ்ட்ராயிட்டா நிச்சயம் அடுத்த நாள் மேரேஜ்னு ஃபிக்ஸ் பண்ணிட்டாங்க.. சோ முடிஞ்சவரை நாம யாருக்கும் கஷ்டம் கொடுக்க கூடாதுன்னு தான் இப்ப முதல்ல ஸ்ரீ அப்பா வினோதன் அங்கிளை பார்க்க போறோம்.."

"அவங்களை எல்லாம் எதுக்கு டா நாம சமாதானம் பண்ணனும்.. நான் மது அப்பாவை எப்படி கன்வின்ஸ் பண்றதுன்னு தவிச்சுட்டு இருக்கேன்"

"நாம நாலு பேரோட பேமிலியும் இதுல இன்வோல்வ் ஆகி இருக்கே.. அப்ப ஒவ்வொருத்தரும் முக்கியம் தான்"

"உன்னை மாதிரி ஓவர் நல்லவனோட சவகாசம் வச்சுக்கவே கூடாது போ டா"

"பேசாமல் வா டா" என ஆரம்பித்து ஆனந்த் ராஜ் வந்து நின்ற இடம் வினோதன் வேலை செய்யும் கம்பெனி.

வினோதனை பார்க்க வேண்டும் என சொல்லி அவர் வரும் வரை இருவரும் வெளியில் வெயிட் செய்ய, கால் மணி நேரத்தில் வந்து சேர்ந்தார் அவர்.

"வாங்க தம்பி! நீங்க என்ன இவ்வளவு தூரம்.. ஒரு போன் பண்ணியிருக்கலாமே!" ஆனந்திடம் வினோதன் கேட்க,

"பரவாயில்லை சித்தப்பா! ஸ்ரீ மேரேஜ் விஷயமா நாங்க உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்" ஆனந்த் சொல்ல,

"எனக்கும் உங்களோட கஷ்டம் புரியுது பா.. நீங்க அவ்வளவு சொல்லியும் இந்த விமலா போய் உங்க வீட்ல மாப்பிள்ளை கேட்டுட்டு வருவான்னு நானும் எதிர்பார்க்கல.. உங்க வீட்லயும் சம்மதம் சொன்னதால தான் நான் எதுவும் பேசல" ராஜிடம் கூறினார்.

"தேங்க்ஸ் அங்கிள்! ஆனா நாங்க இப்ப பேச வந்ததே வேற! ஸ்ட்ராயிட்டா சொல்லணும்னா நான் மதுவை விரும்புற மாதிரி ஸ்ரீயும் ராம்னு ஒரு பையனை விரும்புறாங்க.. அதை சொல்ல சரியான நேரம் பார்த்துட்டு இருக்குற நேரத்துல தான் விமலா ஆண்ட்டி இந்த மாதிரி குழப்பம் பண்ணிட்டாங்க" ராஜ் சொல்ல,

"ஸ்ரீயா?" என அதிர்ந்தார் வினோதன்..

"ப்ளீஸ் அங்கிள்! நீங்க கோபப்படுற அளவுக்கு இது பெரிய விஷயம் இல்லையே! ரொம்ப நல்ல பையன்.. நானே அவரை பத்தி நல்லா விசாரிச்சுட்டேன்.. நல்ல வேலைக்காக தான் கிடைச்ச வேலையை விட்டுட்டு வெயிட் பண்றாங்க.. அவங்க வேலைக்கு நான் கேராண்டி!" என்றான் ராஜ்.

"என்ன தம்பி என்னென்னவோ சொல்றிங்க?"

"நிஜம் தான் அங்கிள்! எல்லாம் இப்படி மொத்தமா பிரச்சனை ஆகும்னு யாரும் எதிர்பார்க்கல.. ப்ளீஸ் புரிஞ்சிக்கோங்க.."

"இப்ப நான் என்ன செயனும்னு சொல்றிங்க"

"எங்களுக்கு தெரிஞ்ச வழிய நாங்க சொல்றோம்.. உங்களுக்கு வேற ஏதாவது தோணுச்சுன்னா நீங்க சொல்லலாம்"

"சொல்லுங்க" என அவர் கேட்க திட்டத்தை கூற கூற கேட்டவர் அமைதியாய் நின்றார்.

"என்ன சொல்றிங்க அங்கிள்"

"என்ன சொல்ல? நிச்சயம் உங்களை தப்பு சொல்ல முடியாது. என் பொன்னையும் சொல்ல முடியாது.. என் மனைவி பண்ணின தப்பை தான் நீங்க சரி பண்ண பாக்குறீங்க.. இதை மறுக்க என்னால முடியாது"

"தேங்க்ஸ் அங்கிள் எங்களை புரிஞ்சிகிட்டதுக்கு.. ப்ளீஸ் ஸ்ரீகிட்ட எதுவும் கோபப்படாதிங்க.. ராம் நிச்சயம் ஸ்ரீயை நல்லா பார்த்துப்பர்.. அது மட்டும் ஸுரா என்னால சொல்ல முடியும்"

“சரிப்பா! நான் பார்த்துக்குறேன்.. ஆனா விமலா.. அவளுக்கு இந்த விஷயம் தெரிஞ்சா.. அவ்வளவு தான்.. “ மனைவிக்கு பயம் இல்லை.. ஆனால் அவளுக்கு தெரிந்தால் நிச்சயம் நல்லது நடக்காது என்று தெரியும்.. அதை தான் கூறினார் வினோதன்.

“இல்ல அங்கிள்.. இதை சொல்லி சரி செய்ய முடியாது.. அவங்களுக்கும் ஒரு பாடம் வேணும்.. எல்லாரையும் எல்லா நேரத்துலயும் ஏமாத்திட முடியாது தானே.. அதை அவங்களும் புரிஞ்சிக்கணும்னா எங்களுக்கு இது தான் வழினு தோணுது.. இல்ல தப்புன்னா சொல்லிடுங்க அங்கிள்!”

“இல்லப்பா! நீங்க என்ன பண்ணுவீங்க? எது நடக்கணும்னு இருக்கோ அது தானே நடக்கும்.. நீங்க கவலை படாமல் போய்ட்டு வாங்க” என கவலையோடு அவர் சொல்ல விடைபெற்றனர் இருவரும்..

தொடரும்..
 
Top