• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அத்தியாயம்6

aarudhrasai

Member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Aug 27, 2021
Messages
30
அத்தியாயம்6



ஆறு மாதத்திற்கு பிறகு தன் மூத்த பிள்ளையும் இரண்டு வருடங்களுக்கு பிறகு தன் இளைய மகனையும் காணப்போகும் மகிழ்ச்சியில் கையில் ஆரத்தி தட்டு காத்துக்கொண்டிருந்தார் தென்றல் (செழியன் இனியன் என்ற இரட்டை மகன்களை பெற்ற அழகியதாய்)


தென்றல் எதுக்கு இப்ப ஆரத்தி எல்லாம் எடுத்து வீட்ல விஷயத்தை பூஜை எல்லாம் ஏற்பாடு பண்ணி இருக்க நம்ம பசங்க என்ன வெளிநாட்டுக்கு போயிட்டு வர்றவங்க..


உங்களுக்கு புரியாது மதன் இனியன் அந்த பொண்ணு இறந்து போனதில் இருந்து பைத்தியம் புடிச்ச மாதிரி சென்னையில ஒரு வீட்டுக்குள்ள ரெண்டு வருஷம் அடைந்து கிடந்தான் நம்ம செழியன் வேலை விஷயம் அது இதுன்னு ஆறு மாசம் டெல்லி பக்கம் ஆளையே காணோம் இப்பதான் ரெண்டு க்கும் வழி தெரிஞ்சது இனி அவங்க என்ன விட்டு எங்கேயும் போகக்கூடாது ரொம்ப நாள் கழிச்சு நான் பிள்ளைகள் வராங்க அதுக்காக தான் இந்த விசேஷ பூஜை எல்லாம் என்று தன் கணவரின் வாயை அடைக்க...


சரி சரி உன்கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா எப்போ உனக்கு கல்யாணம் பண்ணனோ அப்பவே என்னுடைய முழு அதிகாரம் உன்கிட்ட ஒப்படைத்து ஆச்சு என்று கேலியாக தன் மனைவியை கிண்டல் செய்ய...


இருவரும் சிணுங்கிக் கொண்டு வெட்கப்பட்டு பேசுவதை கண்ட உறவினர்கள் வயதானாலும் இவர்களின் காதல் இவர்கள் இளமையாகவே காட்டுகிறது

என்று கண்கள் விரிய விரிய இந்த காதல் ஜோடிளை ரசித்தனர்...

சிறிது நேரத்தில் ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைத்த கார் வந்து விட அனைவரும் ஆர்வமாக இருந்தனர்..


செழியன் இனியன் இருவரும் கம்பீர நடையோடு தாய் தந்தை முன் வந்து நிற்க..


நீண்ட நாட்களுக்கு பிறகு தன் இரு மகன்களையும் ஒன்று சேர்ந்து கண்குளிரப் பார்த்து தென்றல் ஆரத்தி எடுத்து இருவரையும் வரவேற்றார்..


"அம்மா இவனுங்க ரெண்டு பேரும் ஏதோ ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வாங்கி வந்த மாதிரி பேசுறீங்க"

ஒருத்தன் ரெண்டு வருஷமா நம்மகிட்ட பேசாம சந்நியாச வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருந்தான், இன்னொருத்தன் ஆறு மாசம் அவன சமாதானப்படுத்த என்று சொல்லிட்டு போனவன் ...

என்ன தம்பிகளா இப்பதான் வீட்டுக்கு வழி தெரிந்ததா என்று இவர்களின் செல்ல தங்கை பிரதிக்ஷா சிடுசிடுக்க..


ஏய் வாசல்ல நிக்க வச்சு தான் பேசிகிட்டு இருக்கியா வீட்டுக்கு வந்து உங்க சண்டையை ஆரம்பித்து விடுங்கள் என்று மதன் சொல்ல தென்றல் இரு மகன்களுக்கும் ஆரத்தி எடுத்துவீட்டிற்குள் வர வேற்றாள் ...



பிரதிக்ஷா தன் அறைக்குச் சென்று தாழிட்டுக் கொண்டு வரவே இல்லை...


விடு விடு உங்க தங்கச்சியை பற்றி உங்களுக்கு தெரியாதா ரெண்டு அண்ணன்களும் அவ கூட இல்லாமல் போயிட்டீங்க அதனால்தான் கோபமாய் இருக்கிறா கொஞ்ச நேரத்தில் அவளே சரியாயிடுவா என்றும் மதன் அனைவரையும் சமாதானம் செய்தார்..




செழியன் இனியன் தங்கள் அறைகளுக்குச் சென்று சிறிது நேரம் ஓய்வெடுத்த பிறகு அனைவரும் உணவருந்த தென்றல் அழைக்க...


அவரின் கட்டளைக்கு பணிந்து வீட்டில் இருக்கும் அனைவரும் வந்தனர் மதன் செழியன் இனியன் தென்றலின் ஆருயிர் தம்பி அருண் அனைவரும் உணவருந்த தயாராக இருந்தனர் பிரதிக்ஷா வை தவிர..


அனைவரும் மௌனமாக உணவருந்திக் கொண்டிருந்த போது அனைவரின் மௌனத்தைக் கலைத்து முதலில் பேசினார் அருண்..


அப்புறம் பிரயாணம் எல்லாம் எப்படி இருந்துச்சு ...

எதுக்கு ரயில் பயணம் ஒரு பிளைட்டை புடிச்சிட்டு டெல்லிக்கு வரத்துக்கு என்னவாம்...

சரி இன்னிக்கு நம்ம ஸ்கூல்ல ஒரு விசிட் பார்க்கலாம் அப்புறம் திங்கட்கிழமையில் இருந்து புதுவருஷம் பசங்க எல்லாரும் வருவாங்க..

செழியன் எனக்கு துணையா நீ தான் அட்மினிஸ்ட்ரேஷன் ல உதவியா இருக்கணும்

இனியன் பிரச்சினையே இல்லை பசங்க அவன் பேச்சை கேட்டுக்கிட்டு அழகா பார்த்துக்குவாங்க என்று அருண் சொல்லிக் கொண்டே செல்ல....


ஓகே மாமா நிச்சயமா உங்களுக்கு துணையாக நாங்கள் இருப்போம் அதுக்கு முன்னாடி பிரதிக்ஷா எதுக்கு இவ்வளவு கோவமா இருக்கா என்று இனியன் கேட்க..


"ஏன் உங்களுக்கு தெரியாதா ஒருத்தன் ரெண்டு வருஷமா தங்கச்சி ஒருத்தி இருக்கான்னு தெரியாமல் போய்ட்டான்"

இன்னொருத்தன் இவன அழைச்சிட்டு வரேன்னு சொல்லி ஆறு மாசம் ஆளே காணோம் கூட இரண்டு அண்ணனுக்கு இருந்தும் தனி மரமா வீட்டில் இருந்தாள்....

அவளும் என்ன பண்ணுவாள் சின்ன பொண்ணு இப்ப தான் காலேஜுக்கு முடிச்சு இருக்கா தனக்கு ரெண்டு அண்ணனும் இருந்தும் இல்லாம இருக்குறது எவ்வளவு கஷ்டம் தெரியுமாஒரு பொண்ணுக்கு..

அதான் மொத்த கோபத்தையும் சாப்பாடு என்ன காற்றா எனக்கு தெரியாது நீங்களாச்சு உங்க தங்கச்சி ஆச்சு என்று மதன் தென்றல் இருவரும் ஜகா வாங்கிக் கொள்ள...


அருண் உணவருந்திவிட்டு சரி இப்ப நீங்க ரெஸ்ட் எடுங்க சாயங்காலம் அஞ்சு மணிக்கு உங்களை ஸ்கூலுக்கு அழைச்சிட்டு போறேன் என்று அருண் தன் வேலைகளை கவனிக்க சென்றார்...


அருண் சென்ற பிறகு செழியன் தன் பேச்சை ஆரம்பித்தான் தன் அன்னையிடம்...


அம்மா எங்களுக்காக இவ்வளவு பேசுற மாமாவுக்கு அவருடைய வாழ்க்கையே சரி அமைச்சக தெரியாம போயிடுச்சு நீங்களும் அப்படியே விட்டுட்டீங்க அவருக்கும் குடும்பம் குழந்தை எல்லாமே இருக்கு ஏன்மா மாமாவை இப்படி தனி மரமா வாழனும் என்று செழியன் கடிந்து கொள்ள..


‌. ஆமாண்டா நாங்க தான் மாமா வை பொண்டாட்டி பிள்ளை கூட வாழ விடாமல் தடுத்து இருக்கிறோம் பாரு...

நாங்க என்ன பண்ணுவோம் இவனும் ஒரு விஷயத்தை மறந்துவிட்டான் அந்த பொண்ணால தாங்க முடியல வயிற்றில் குழந்தையோடு வீட்டை விட்டுப் போன பொண்ணு...

இப்ப எங்க இருக்கா அவளுக்கு என்ன குழந்தை பிறந்து இருந்ததோ பையனா இருந்தா நம்ம பிரதிக்ஷா கல்யாணம் பண்ணி வச்சிருப்பேன் பொண்ணா இருந்தா உங்க ரெண்டு பேருக்கும் ஒருத்தனுக்கு கட்டி வைத்து இருப்பேன் என்று தென்றல் தன் புலம்பலை ஆரம்பிக்க..


இனியன் எதையும் பொருட்படுத்தாமல் தன் உணவுத் தட்டை எடுத்துக்கொண்டு பிரதிக்ஷா அறைக்கு சென்று விட்டான்...


பாத்தியா கல்யாணப் பேச்சை எடுத்தாலே அவன் யோசிக்கிறான் இப்படித்தான் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி தெரியாம பேசிட்டேன் வீட்டை விட்டுப் போனவன் இப்பதான் வந்து இருக்கான்...


அம்மா தயவு செஞ்சு பொலம்பல் இருந்திருக்காங்க எங்களுக்கு 40 வயசு ஆகல வெறும் 27 தான் ஆகுது இன்னும் வயசு இருக்கு அதுவும் இல்லாமல் இனி என்கிட்ட வீட்டில் கல்யாண பேச்சு எடுக்க மாட்டேன்னு சத்தியம் பண்ணி கொடுத்து இருக்கேன் கொஞ்ச நாள் போகட்டும் அவனுக்கே மனசு ஆறுதலா மாறி தனக்குன்னு ஒரு துணை வேணும்னு நினைப்பான்...


சரிடா இனி நான் அதைப்பற்றி பேச மாட்டேன் முதல்ல உங்க தங்கச்சியை சமாதானப் படுத்துங்கள் என்று செழியனையும் பிரதிக்ஷா அறைக்கு அனுப்ப...


கதவை திறந்து உள்ளே பார்த்த செழியன் அங்கே அமைதியாக கம்ப்யூட்டர் டேபிளில் கன்னத்தில் கைவைத்துக் கொண்டு பிரதிக்ஷா இருக்க அங்கே அவளை பாவமாக பார்த்தபடி இனியன் உணவு தட்டை வைத்துக் கொண்டிருந்தான்..


பிரதிக்ஷா உன்னோட கோபம் புரியுது எங்க சூழலையும் புரிஞ்சுக்கோ செல்லம் இனியன் அண்ணாக்கு என்ன ஆச்சுன்னு உனக்கு தெரியுமில்ல பாவம் அவன் அதே சமயம் அவனை சமாதானம் பண்ண போகும் பொழுது அப்படியே என் பிரெண்டோட கல்யாணத்துக்கு போக வேண்டிய சூழ்நிலை அதான் செல்லம் அண்ணன் ரொம்ப டிலே பண்ணிட்டேன் என்று தன் காதுகளைப் பிடித்துக் கொண்டு தங்களிடம் மன்னிப்பு கேட்க...


பிரதிக்ஷா இதற்கு மேல் தாக்குப் பிடிக்க இயலாமல் அண்ணன் மடியைக் கட்டிக்கொண்டு அழ...

தங்கையின் கஷ்டத்தை உணர்ந்த இனியன்

எவ்வளவு பெரிய முட்டாள் தனத்தை செய்துவிட்டோம் உயிருக்கு உயிராக நேசிக்கும் குடும்பத்தைவிட்டு இரண்டு ஆண்டுகள் வீணாக்கி விட்டோமே என்ற குற்ற உணர்ச்சி ..

தங்கை கரத்தைப் பிடித்துக் கொண்டு செல்லம் தயவு செஞ்சு இப்படி அழாத பாக்க முடியல செல்லம் என்று தங்கையிடம் கெஞ்ச ..


என்ன இருந்தாலும் என்னை நீங்க மறந்து இருக்கக்கூடாது ரெண்டு வருஷம் எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா செழியன் அன்னா பரவாயில்லை ஆறு மாசம்தான் என்ன விட்டுப் பிரிஞ்சு போன இனியன் அண்ணா என்ன பாக்க கூட வரல என்கிட்ட பேச கூட இல்லை என்று இனி என்னை பார்த்தவாறு அழ...


ப்ளீஸ் செல்லம் இனி அப்படி இருக்காது உன்னோட ரெண்டு வருஷம் வாழ்க்கையில என்னால பங்கு கொள்ள முடியல அண்ணாவை மன்னிச்சிடு மா பரவா இல்லை இனி ஜாலியா வெளிய போறோம் என்ஜாய் பண்ணலாம் என்று தங்கைக்கு வாக்குறுதி அளித்தான் இனியன்...


அண்ணன் மார்களின் வாக்குறுதிகளை ஏற்றுக்கொண்டு மன மகிழ்ச்சி அடைந்த பிரதிக்ஷா அண்ணனுடன் சேர்ந்து மதிய உணவை மகிழ்ச்சியாக உண்டு முடித்தாள்...



தன் பிள்ளைகள் மீண்டும் இயல்பு நிலைக்கு வந்து விட்டார்கள் என்றும் அதன் தென்றல் அருண் மூவரும் மன மகிழ்ச்சி அடைந்தனர்..


அதே சமயம் அருண் மனதில் ஒரு ரணம் இருக்கத்தான் தான் செய்கிறது ..


தன் மனைவி மட்டும் தன்னிடம் சண்டை போடாமல் அனைத்தையும் புரிந்து கொண்டு நம்மோடு வாழ்ந்து இருந்தால் தனக்கு பிறந்த மகனோ அல்லது மகளோ இவர்கள் போல மகிழ்ச்சியாக தானே ஆடிப்பாடி மகிழ்ந்து இருப்பால் இவ்வளவு பெரிய வீட்டில் வாழ வேண்டி என் மனைவி மகள் இப்பொழுது எங்கு சென்று இருக்கிறார்களோ எங்கே தங்கி இருக்கிறார்களோ என்று தெரியாமல் மனம் துடிதுடித்துப் போனார் அருண்


மாலை 5 மணி....


. இசை இப்பவே மணி அஞ்சு என்று அம்பை அவளை எழுப்ப..


அக்கா நான் தூங்கி ஒன்றரை மணி நேரம் தான் ஆகுது அதுக்குள்ள எழுப்புற இன்னிக்கு நாம என்ன பண்ண போறோம் என தூங்க விடு என்று இசை மீண்டும் குப்புறப்படுத்துக் கொள்ள...


அடிப்பாவி என்ன சொல்லிட்டு இப்ப நீ நல்லா சோம்பேறி மாதிரியே சீக்கிரம் எந்திரி நமக்கு தேவையானது எல்லாம் வாங்கணும் என்று அவளை எச்சரிக்கை..


சரி சரி என்று இருவரும் செல்லம்மா பாட்டி செய்துகொடுத்த காரப் பணியாரம் சாப்பிட்டுவிட்டு அவரிடம் விடைபெற்று ஷாப்பிங் சென்றனர்..



சொன்னதுபோலவே அருண் இனியன் செழியன் இருவரையும் அழைத்துக்கொண்டு பள்ளிக்கூடத்தை ஒரு விசிட் செய்துவிட்டு முக்கியமான வேலை என்பதால் வேறு ஒரு காரில் புறப்பட்டு விட அம்பை ஏற்கனவே மெசேஜ் செய்திருந்தால் ஷாப்பிங் செல்கிறோம் என்று அதனால் அந்த ஷாப்பிங் மாலுக்கு தம்பியை அழைத்து சென்றான் இனியன்...



செழியன் இனியன் ஷாப்பிங் மஹால் வந்தடைந்தனர்..


"டேய் அண்ணா வீட்ல இருக்கிற எக்யூப்மென்ட் போதாதா தனியா வந்து இங்கே ஷாப்பிங் பண்ணி என்ன பண்ணப் போற எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு"


டேய் நம்ம பெரிய பசங்களுக்கு எடுக்கல பத்துப் பதினைந்து வயசுக்குள்ள இருக்கிற வாண்ட் பசங்களுக்கு எடுக்கிறோம் அவர்கள் இம்ப்ரஸ் பண்ற மாதிரி ஏதாவது எக்யூப்மென்ட் வாங்கி ஷோகேஸ் ல அடுக்கி வைக்கணும் அப்பதான் கிளாஸ்ஸ்ரோம் பார்த்து பசங்க இம்ப்ரஸ் அவங்க இன்ட்ரஸ்டிங்கா மியூசிக் கத்துக்குவாங்க புரிஞ்சுதா"



சரி சரி வா என்று இருவரும் தங்களுக்கு தேவையான எக்யூப்மென்ட் ஆர்டர் செய்து வீட்டிற்கு டெலிவரி செய்யும்படி உத்தரவிட்டு வந்து கொண்டிருக்கும் பொழுது..


டேய் செழியா..அங்க பாரு உன்னோட ஆளும் அவளோட ஆசை தங்கச்சி வந்துக்கிட்டு இருக்காங்க..


. அட இவங்கள வந்து இருக்காங்களா என்று ஒன்றும் தெரியாதது போல செழியன் அமைதியாக ஆச்சரியமாக பார்க்க...

(செழியன் ஏற்கனவே திட்டம் போட்டு வர வைத்து இந்த விஷயம் தெரிந்தால் இனியன் வீட்டை விட்டு வெளியே வந்து இருக்க மாட்டான் தம்பியின் மனம் மாற்றங்களுக்காக தான் அவனை அழைத்திருக்கிறார் அதே சமயம் தன்னுடைய காதலையும் வளர்க்க 😜😜)




செழியன் அம்பையை பார்த்து அப்படியே நின்று விட்டான் ஆனால் இனியன் தான் புத்துணர்ச்சியோடு இருவரிடம் சென்று ஹே.. வாட் தி சப்ரைஸ் ரெண்டு பேரும் ஷாப்பிங் வந்திருக்கீங்க நாங்களும் ஷாப்பிங் வந்திருக்கும் எதிர்த்த மீட் பண்றேன் எல்லாம் இருக்கலாம் இல்ல என்று இனியன் இயல்பாக பேச...



இவ்வளவு நேரம் அம்பையை காதல் கண் கொண்டு உச்சி முதல் பாதம் வரை ஸ்கேன் செய்த செழியன் தன் தம்பியின் இயல்பு பேச்சை கேட்டு இவன் எப்பொழுது இவ்வளவு இயல்பாக பேசினான் பரவாயில்லை சென்னையை விட்டு டெல்லிக்கு ரயில் ஏறும் பொழுதில் கொஞ்சம் இயல்பு நிலை மாறிய தன் தம்பியை நினைத்து மகிழ்ச்சி பெற்றான்...


"ஹாய் இனியன் சார் எங்களுக்கும் சப்ரைஸ் அதான் இருக்கும் எங்களுக்கு தேவையான திங்ஸ் வாங்க போனோம் புது டீச்சர்ஸ் பசங்க பயப்படக்கூடாது அதனால அவங்களுக்கு இம்ப்ரஸ் பண்ற மாதிரி கிப்ட் அப்புறம் எங்களுக்கு தேவையான காட்டன் சாரிஸ் இங்க ரொம்ப விலை கம்மியா சேல் பண்றாங்க அதுவும் நல்லா இருக்கு அதனால் தான் பர்ச்சேஸ் பண்ண வந்தோம் என்று இசை பதிலளிக்க..


அப்படியா சூப்பர் இதுதான் நீங்க எடுத்த புடவைய கிரீன் ரெட் ப்ளூ மூன்றும் என்னோட ஃபேவரைட் கலர் இது உங்களுக்கும் சூப்பரா இருக்கும் என்று இனிய இசை இடம் மிகவும் இயல்பாகவும் எளிமையாகவும் பேச அதற்கு ஏற்றார்போல் இசை அவனுக்கு பதில் வைத்துக்கொண்டே இருந்தாள்..


அதே சமயம் அங்கே நின்ற செழியன் அங்கே ஆணி அடித்தார் போல் நிற்க அதேசமயம் அம்பை செழியனை பார்த்தவாறு இருவரும் தொலைதூரத்திலிருந்து தங்கள் காதலை கண்களால் பரிமாறிக் கொண்டிருந்தனர்..


இனியன் சார் அங்க பார்த்தீங்களா நம்ம ரெண்டு பேரும் எவ்வளவு நேரம் பேசிக்கிட்டு இருக்கும் இவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல 5 அடி நீளம் தான் இருக்கும் எப்படி பார்த்துக்கறாங்க எப்படி தூரத்திலிருந்து கண்களால் லவ் பண்றாங்க என்று இசை சிரிக்க..


என்ன இசை அவங்க லவ் பண்றாங்க காதலில் இதெல்லாம் இயல்புதான் அருகிலிருந்து ரசிப்பதை விட கொஞ்சம் தூரத்தில் இருந்து ஒருத்தருக்கு ஒருத்தர் கண்ணால் பார்த்து பேசுவது எவ்வளவு சுகம் தெரியுமா ஏன் நீ இதுவரைக்கும் யாரையும் லவ் பண்ணுது இல்லையா நீ இப்ப வரைக்கும் சிங்கிள் தானா என்று அவன் கேட்க..


"என்ன நீங்க என்ன பார்த்து இப்படி கேட்டுட்டீங்க நான் எப்பவுமே சிங்கிள் தான்"

லவ் பண்ணிட்டு அதுக்கப்புறம் அந்த வலிய என்னால தாங்க முடியாது சின்ன சின்ன விஷயத்துக்கு கூட சம்பந்தமே இல்லாம கோபம் வரும் சம்மதமில்லாமல் சிரிச்சு பேசும் ஒரு ரோபோ வாழ்க்கை ஒருத்தருக்கு ஒருத்தர் பயந்து கிட்டே இருக்கனும்


இதுக்கு நம்ம நிம்மதியா ஃபுல் பாதுகாப்போடு வீட்ல காட்றவன நிம்மதியா கல்யாணம் பண்ணிக்கிட்டு மாமியார் கூட சின்ன சின்ன குறும்பு சண்டை நாத்தனார் கூட வெட்டிப்பேச்சு அப்புறம் கணவர் குழந்தை னு சந்தோஷமா இருக்கலாம்..


இனியன் அவள் சொல்வதை ஒரு பக்கம் வாங்கிக் கொண்டு மறுபுறம் அவள் பேசும் பொழுது தட்டச்சு செய்யும் அவள் இமைகள் அங்கே இங்கே என்று அசைந்து ஆடும் கார் குழலும் சொல்லிக் கொண்டிருக்கும் அவள் இதழையும் கண்டு மெய்மறந்து போனான்..

அப்பொழுது அவன் கண்முன் இசை நிற்கவில்லை அவனின் ஆருயிர் குக்கூ நின்றுகொண்டிருந்தாள் அவளும் இதேபோல் தானே குழந்தை போன்ற முகம் அம்சத்தைக் கொண்டு பேசுவதை முக பாவங்களோடு பேசுவாள் கண்முன் அவளை கண்டவுடன் தன்னை சமாதானம் செய்து இயல்பு நிலைக்கு கொண்டு வந்தான் இனியன்..


இனியன் சார் என்ன ஆச்சு நான் இவ்வளவு சொல்லிக்கிட்டு இருக்கேன் நீங்க ஏதோ பராக் பாத்துட்டு இருக்கீங்க நம்மை இப்படி பேசுவதால் அக்காவும் செழியனும் எப்பையோ போயிட்டாங்க பாருங்க என்று அவள் கை காட்ட..


அம்பை செழியன் இருவரும் கைகோர்த்துக்கொண்டு நடந்து சென்று கொண்டிருந்தனர்...


நம்ம ரெண்டு பேரும் பேசும் கேப்பில் ரெண்டு பேரும் லவ் பண்ண போயிட்டாங்க என்ன பண்றது சரி வா என்று இருவரும் அவர்களை பின் தொடர்ந்து சென்றனர்...



உலகையே மறந்து கைகோர்த்து சென்ற அந்த காதல்ஜோடி உணவு விடுதியில் ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டது...


ஹப்பா.... ஒரு வழியா உங்க அண்ணனும் என் அக்காவும் ஒரு இடத்தில் உட்கார்ந்து அங்கு லவ் பண்ணா இப்படியா உலகத்தை மறக்கனுமா என்று சலித்துக் கொண்டே அவர்கள் அருகில் ஓடி சென்று ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டாள் இசை..


இனியன் மனமெல்லாம் ஏக்கமாக பிடித்துக் கொண்டிருந்தது தன் கவலையை தீர்க்கும் மருந்தாக இந்த இசை எதற்காக என் கண்முன் வந்து போகிறாள் அவளைப் பார்த்தவுடன் அனைத்தும் வந்துவிடுகிறதே ஒரு சமயம் அவள் தான் இவளோ என்று தோன்றுகிறது ஏன் இப்படி ஒரு சோதனை எனக்கு என்று மனம் துடிக்க மறுபுறம் அதை சமாதானம் செய்து கொண்டு ஒரு இருக்கையில் அமர்ந்தாள்..


தங்களுக்கு பிடித்த உணவுகளை ஆர்டர் செய்து கூச்சப்படாமல் நால்வரும் மகிழ்ச்சியாக உண்டு முடித்தனர்..


தொடரும்.....
 
Top