• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அத்தியாயாம் 7

aarudhrasai

Member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Aug 27, 2021
Messages
30
அத்தியாயாம் 7



செழியன் சார் உங்க ஸ்கூல் எப்படி பசங்க எல்லாம் எப்படி எல்லாரும் டீசண்டா இருப்பாங்களா காரணம் கர்நாடிக் மியூசிக் அதுக்கு அவங்க வெறும் பாட்டு மட்டும் கத்துககூடாது அதுக்கு ஏற்ற மாதிரி நல்ல ஒழுக்கத்துடன் இருக்கணும் நான் கொஞ்சம் கண்டிப்பானவ..

என்ன இசை காமெடி பண்ணாத நீ எல்லாம் கண்டிப்பான டீச்சரா நினைச்சா எனக்கு சிரிப்பு வரும் என்று வாய்விட்டு சிரித்து விட..

"ஐயோ செழியன் உங்களுக்கு இசை பத்தி தெரியாது அவ ரொம்ப ஸ்ட்ரிக்ட் அதுவும் சின்ன வயசுல பசங்க ரொம்ப டீசண்டா இருக்கணும் ஏதாவது சின்ன தப்பு பண்ணா கூட இவளோட பனிஷ்மெண்ட் வேற லெவல்ல இருக்கும் பாக்கத்தானே போற"

.
"உங்க தங்கச்சி அவ்வளவு பெரிய ரவுடியா சரி சரி உங்க தங்கச்சியோட கண்டிப்பு கோபம் எல்லாமே அவங்க கிட்ட மட்டும் தான் இருக்கணும் என்னோட லைட் மியூசிக் பக்கம் அவங்க வரவே கூடாது அந்த பசங்க கொஞ்சம் நவநாகரீகம் ஆப் பேசுவாங்க மேலும் கொஞ்சம் மாடர்னாக இருப்பாங்க அதனால்தான் சொன்னேன் இசை."

"போங்க இனியன் சார் நீங்க உங்க பசங்கள பத்திரமாக பூட்டி வச்சுக்கோங்க நான் அவங்க பக்கம் ஏன் வரப்போற எனக்கு என் நான் பாடம் நடத்துற பசங்க ஒழுங்கா இருக்கணும் அவ்வளவுதான் மற்றபடி நான் ரொம்ப ரவுடி எல்லாம் கிடையாது"

அடடா இப்பவே மணி 7 செல்லம்மா பாட்டி ஏற்கனவே எங்களுக்கு ஸ்பெஷல் டின்னர் சமைச்சு தரேன்னு சொல்லி இருக்காங்க நாங்க லேட்டா போன மனசு கஷ்டப்படுவாங்க பாவம் பாட்டி நாங்க கிளம்புறோம் என்று அம்பை சொல்லு இசையும் சரி உங்களை திங்கட்கிழமை சந்திக்கலாம் என்று மகிழ்ச்சியாக இருவரிடமிருந்து விடைபெற்றுச் சென்றனர்..

"இசை செல்வதையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த இனியனை பார்த்த செழியன்"

டேய் தம்பி இந்த பொண்ணு இப்படி பாக்குற இதுவரைக்கும் பொண்ணுங்களை பார்த்ததே இல்லாத மாதிரி என்று கேலி செய்ய..

" டேய் உடன்பிறப்பு மூடிக்கோ அந்த பொண்ணு பாக்கவே எவ்வளவு நல்லா இருக்கா அதுவுமில்லாம மனசுல ஒன்னும் இல்ல ரொம்ப சந்தோஷமா இருக்கா"
அவளை மாதிரி நானும் வாழணும்னு ஆசையா இருக்கு ஒரு பக்கம் பொறாமையாகவும் இருக்கு மனசுல எந்த ஒரு கஷ்டம் இல்லாம இருக்கிற வேலையை மட்டும் செஞ்சுகிட்டு நிம்மதியா தூங்குறது எவ்வளவு சுகம் தெரியுமா..

டேய் தம்பி எல்லாத்துக்கும் மனசுதான் காரணம் நீயும் மனசு வச்சா இதே மாதிரி இருக்கலாம் சரி வா ஏற்கனவே பிரதிக்ஷா கோபமாகி இப்பதான் சமாதானமாக இருக்க இப்ப நாம லேட்டா போனா அது கூட்டிட்டு வா சீக்கிரம் வா குக் வித்து கோமாளி பாக்கணும்...

அட டிவி பைத்தியமே இதுக்குதான் என்னை கூப்பிட்டு இருக்கிறியா..

சீக்கிரம் வா இனியன் டைம் ஆகுது இன்னிக்கி வனிதா அக்காவும் புகழும் ஜோடியாக போறாங்க..

போடா போடா டிவி பைத்தியம் என்று அவன் காரை எடுக்க இருவரும் மின்னல் வேகத்தில் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர்..

பிரதிக்ஷா விஜய் டிவி ஆன் பண்ணு ப்ரோக்ராம் போட்டாங்களா எப்படியோ கரெக்டான டைமுக்கு வந்தோம் சீக்கிரம் சீக்கிரம் என்று செழியன் பரபரக்க..

ஆமாண்டா அண்ணா இன்னும் கொஞ்ச நேரத்துல போட்டுருவாங்க நீங்க ரெண்டு பேரும் ப்ரெஷ்ஷாகிவிட்டு டிரஸ் மாத்திகிட்டு வாங்க டின்னர் சாப்பிட்டுக்கிட்டே ப்ரோக்ராம் பார்க்கலாம் என்று பிரதீக்ஷா சொல்ல...

சரியான தீவி பைத்தியங்கள் என்று சிரித்துக்கொண்டே செழியன் தன் வேலைகளை கவனிக்க ஆரம்பித்தான் ஆனால் அவன் மனதில் இசை ஒரு புறம் குக்கூ இருவரும் ஒருவர் மாற்றி ஒருவர் அவனை இம்சித்தனர்...
______________________________________________

அம்பை இசை இருவரும் செல்லம்மா பாட்டி கைப்பக்குவத்தில் உணவுகளை ரசித்து ருசித்து உண்டு கொண்டிருந்தனர்...

என்ன கண்ணுங்களா ரொம்ப நாள் கழிச்சு பாட்டி சாப்பாடு சாப்பிடுறீங்க எப்படி இருக்கு...

ஆஹா... பாட்டி சமையல் என்றால் பாட்டி சமையல் தான் உங்க கை பக்குவத்துக்கு வேற யாரும் இல்ல எப்போ வருஷம் ஆச்சு உங்க சாப்பாடு சாப்பிட்டு இப்ப தான் எங்களுக்கு திருப்தியா இருக்கு என்று இசை அம்பை இருவரும் ஒன்று சேர்ந்து பாட்டியை புகழ..

இப்படி சாப்பாடு சாப்பிட்டால் மட்டும் பத்தாது இதே மாதிரி சமையல் கத்துக்கிட்டு மாமியார் வீட்டார் உங்க கைக்குள்ள போட்டுக்கணும்..

அதெல்லாம் சிறப்பா செஞ்சிடலாம் பாட்டி நீங்கள் வாங்க சாப்பிடலாம் என்று பாட்டியையும் அமரவைத்து உணவுகளை பாட்டிக்கு ஊட்டிவிட அவரும் மனமகிழ்ந்து பேத்திகளுடன் உணவை முடித்துக் கொண்டார்...

இசை இன்னும் கலைப்பு நீங்காமல் இருப்பதால் உடனடியாக அறைக்கு சென்று உறங்கிவிட..

இசை செல்வதை உன்னித்து கவனித்த பாட்டி அவள் சென்ற பிறகு அம்பை இடம் பேச ஆரம்பித்தார்...

‌‌பாப்பா இவளுக்கு இப்போ உடம்பு எல்லாம் சரியா இருக்கா ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி பெரிய விபத்து மறுஜென்மம் எடுத்து வந்து இருக்கா அவளுக்கு அந்த விஷயம் எல்லாம் எதுவும் ஞாபகம் இல்லல...

பாட்டி அப்படி ஒரு சம்பவத்தை நாங்க மறந்துட்டோம் அவ வெறும் பத்து நாள் தான் கோமால இருந்தா அதனால அவளுக்கு எந்த பிரச்சினையும் இல்லை குறிப்பிட்டு நீங்க அவளை ஊருக்கு அழைச்சிட்டு போனீங்களே அந்த இரண்டு மாசம் நடந்த விஷயங்கள் எதுவும் அவளுக்கு ஞாபகம் இல்லை...

இப்பதான் எனக்கு நிம்மதியா இருக்கு என் கூட என்னோட ஊருக்கு வரேன்னு குழந்தை அடம் பிடிச்சா அழைச்சிட்டு போனா அங்க எவ்வளவு கஷ்டங்கள் நல்லவேளை அந்த கடவுள் தான் காப்பாற்றினார் அந்த பையன பத்தி எனக்கு தெரியல ஆனா நான் அவன மறக்கவே மாட்டேன்..

எல்லம் முடிஞ்சு போன விஷயம் பாட்டி அதை பத்தி நம்மை யோசிக்க தேவையில்லை எல்லாம் நன்மைக்கே..

பாப்பா இன்னொரு விஷயம் நம்ம ஜமுனா அம்மா எத்தனை நாள் தான் இப்படி இருப்பாங்க இருபத்தி மூணு வருஷமா புருஷன விட்டு ஒரு பொண்ணு இப்படி வாழலாமா அதுவும் வயிற்றில் குழந்தையோடு புகுந்த வீட்டில் சண்டை போட்டு வந்தவங்க இன்னும் சமாதானமாக இல்லாமல் இருக்கீங்க..

என்ன பண்றது பாட்டி சித்தியோட கோபத்தைப் பற்றி உங்களுக்கு தெரியும் அதனாலதான் யாரும் கண்டுக்கல அதுவும் எனக்கு அம்மா என்னை விட்டு போயிட்டாங்க அப்புறம் சித்தி பொறுப்பில் தான் நானும் இசையும் வளர்ந்தோம் சித்தியோட குணத்தை பத்தி இசையை விட எனக்கு நல்லாவே தெரியும் அவங்க ரொம்ப நல்லவங்க மனசால ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்காங்க அதனால் தான் அவங்களுக்கு அங்க போக பிடிக்கலை சரி பாட்டி எனக்கு தூக்கம் வருது...

சரி ராசாத்தி நீ போய் தூங்கு என்று பாட்டி தன் அறைக்கு சென்று விட...

உறங்குவதற்கு முன்பாக பாட்டி மனதில் இறைவனை பிரார்த்தனை செய்தார் கடவுளே இந்த குடும்பம் எப்பவுமே நல்லா இருக்கணும் முக்கியமா இசை பாப்பாவுக்கு ஏதோ ஞாபகம் வரக்கூடாது அந்த தம்பி எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும் என்று இறைவனை பிரார்த்தனை செய்து உறங்கிவிட்டார்..

மறுநாள் காலை....

யார் என்ன செய்தால் என்ன நான் என் கடமையை செய்வேன் என்று எப்பொழுதும் போல் சூரியன் கிழக்கு நோக்கி உதிக்க..

செல்லம்மா பாட்டி எழுந்து குளித்து முடித்து வாசல் தெளித்து கோலம் போட்டு பூஜை அறைக்கு சென்று சுவாமியை வணங்கிவிட்டு கடைக்கு சென்று காலை சிற்றுண்டிக்கு சமையலறையில் தன் முழு ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டிருந்தார்..

. குட்மார்னிங் பாட்டி சீக்கிரமா எந்திரிச்சு நீங்களா இன்னைக்கு என்ன டிபன் என்று அம்பை கொட்டாவி விட்டுக் கொண்டே கேட்க..

இன்னிக்கு இட்லி தக்காளி சட்னி..

ஓகே பரவாயில்லை எனக்கு புடிச்சது தான் நான் குளிச்சிட்டு வரேன் பாட்டி என்று அம்பை சொல்லிக்கொண்டு செல்ல..

"அதுசரி இசை பாப்பா எங்க இன்னும் தூங்கிக்கொண்டு இருக்காளாம் பொம்பள பொண்ணு இவ்ளோ நேரம் தூங்கலாமா"

"பாட்டி நான் தான் லேட்டு இசை எப்பவும் எழுந்து குடிச்சாச்சு பூஜை ரூம்ல எப்பவும்போல பாட்டு பாடிக்கிட்டு இருக்கா போய் பாருங்க"

"செல்லம்மா பாட்டி ஆட்சி வைத்துவிடு அப்படி என்னதான் செய்கிறாள் என்று பூஜை அறைக்கு சென்று பார்க்க"


குறை
ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா
ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா!!!!!


இவ்வாறு பக்தி பாடலை இசை பாடி முடித்த பூஜை செய்து முடித்து திரும்பி பார்க்க..

செல்லம்மா பாட்டி பூஜை அறையின் வாயிலில் நின்றுகொண்டு இசை பாடுவது ரசித்துக் கொண்டிருந்தார்..

என்ன பாட்டி அங்கே நிமிடங்கள் வாங்க பிரசாதம் எடுத்துக்கோங்க என்று அவள் காலை திருமாலுக்கு செய்த வெண் பொங்கலை எடுத்து வந்து கொடுக்க..

என் ராசாத்தி சும்மா பேச்சுக்கு விளையாட்டுக்காக நீ மியூசிக் காலேஜ்ல சேர்ந்துட்டியோ னு சிரிச்சுகிட்டு இருந்தேன் ஆனா நீ இப்படி ஒரு கீர்த்தனை பாடும் பொழுது அந்த ஆண்டாளே பாடுற மாதிரி இருக்குது மா என்று அவளுக்கு திருஷ்டி கழிக்க‌...

போதும் பாட்டி நாளைக்கு பசங்களுக்கு முதல் கிளாஸ் இதுதான் சொல்லி கொடுக்க போறேன் முதலில் நான் இதை சரியாக பாடப் பயிற்சி எடுக்க தான் இன்னிக்கி பாடி முயற்சி செய்தேன் நல்லவேளை கீர்த்தனை பல்லவி சரணம் எல்லாம் நல்லா ஞாபகம் இருக்கு பசங்க கிட்ட அசைக்க முடியாது என்று இசை பெருமூச்சு வாங்க..

சரி மாமா டிபன் எல்லாம் ரெடி ஆயிடுச்சு அம்பைக்கூட குளிச்சுட்டு ரெடி ஆயிட்டா வா என்றுசெல்லம்மா பாட்டி அவளை அழைத்து டைனிங் ஹாலுக்கு வர அம்பை இசை செல்லம்மா பாட்டி மூவரும் அறுசுவை காலை உணவை ஒன்று முடித்தனர்....

அக்கா இன்னைக்கு என்ன பிளான் இன்னிக்கு எங்கேயாவது வெளில போறோம் இல்ல நீ மட்டும் வெளியே போக போறியா என்று இசை கேள்வியாக கேட்க..

‌. "அட போடி இனி நான் அந்த ஸ்கூல்ல சரி என தினமும் பார்க்க போறேன் இன்னிக்கு ஒரு நாள் நிம்மதியா வீட்டில் இருந்துவிட்டு பாட்டி கூட ஜாலியா இருக்கலாம்"

‌‌செல்லம்மா பாட்டி சிரித்தவாறு அது சரி அன்பை எப்ப நீ வீட்டில் சொல்லி கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ண போற ...

அதுக்கு என்ன பாட்டி பொறுமையா சொல்லிக்கலாம் இப்பதான் நான் புது வேலைக்கு சேர்ந்து இருக்கேன் செழியனும் இப்பதான் அவருடைய ஸ்கூல்ல மெயின்டெய்ன் பண்ண வந்து இருக்காரு கொஞ்ச நாள் போகட்டும் எல்லாம் பொறுமையா சொல்லிக்கலாம்


‌‌ என்னம்மா கண்ணு இப்படி சொல்லிட்டஎன்னம்மா கண்ணு இப்படி சொல்லிட்ட இருபத்தி மூணு வயசு ஆயிடுச்சு இல்லையா..

இந்த வயசுல எனக்கு மூன்றாவது குழந்தையே பொறந்தாச்சு இப்ப இருக்குற பொண்ணுங்களுக்கு சுதந்திரமும் எப்ப வேணாலும் திருமணம் செய்து கொள்ள உரிமையும் குழந்தை பெற்றுக் கொள்ளும் உரிமையும் கிடைத்தது ..

அந்த காலத்தில் எனக்கு அப்படி எல்லாம் இல்ல பிறந்தோம் வளர்ந்தோம் வயசுக்கு வந்து உடனே கல்யாணம் பண்ணி வச்சிட்டு மூண்டு நாலு குழந்தையை பெற்றுவிட்டு மாமியார் கிட்ட கொடுமையை அனுபவித்து விட்டு அப்படியே இருக்க வேண்டியதுதான் என்று பாட்டி தனக்கு நேர்ந்ததை சொல்லிப் பெருமூச்சு விட...

பாட்டி எதுக்கு இப்போ இவ்வளவு ஃபீல் பண்றீங்க நீங்க தாத்தா கூட சந்தோஷமா தானே இருந்தீங்க ..

இப்போ கூட எல்லாருமே நல்லா தான் இருக்காங்க என்ன தாத்தா உயிரோடு இல்லை அவ்வளவுதான் ..

சொல்ல முடியாது பாட்டி இந்த காலத்திலும் உங்களுக்கு நடந்ததை விட ரொம்ப மோசமான நிலைமை நிறைய பொண்ணுங்களுக்கு இருக்கு அவங்க அவங்க வீட்ல பெத்தவங்க இருக்கிற பொழுதுதான் பொண்ணுங்களோட சுதந்திரமும் வாழ்க்கையும் இருக்குது..

நீ சொல்றது வாஸ்தவம்தான் இசை குட்டி எங்க காலமே பரவாயில்லை என்று தோனுது இப்ப இருக்குற பொண்ணுங்க அவங்களாவே மாப்பிள்ளை தேடுகிறேன் என்ற பெயரில் கண்டவனை லவ் பண்ணிட்டு வீட்டைவிட்டு ஓடிப்போய் எப்படி பண்றாங்க இதுக்கு வீட்டில் சொல்ற பயண கட்டிக்கிட்டு மாமியார் கிட்ட திட்டு வாங்கிட்டு புருஷன் கூட சந்தோஷமா இருந்து விடலாம்...

கரெக்டா சொன்னிங்க பாட்டி நான் கூட வீட்டில் பார்க்கிற மாப்பிள்ளையை தான் கல்யாணம் பண்ணிக்கிட்டு புருஷன் கூட சின்ன சின்ன சண்டை மாமியார் கூட குரு குரு சண்டைகள் போட்டு விட்டு சந்தோஷமாக இருக்க போறேன் என்று இசை மகிழ்ச்சியாக சொல்ல...

பாத்தியா அம்பை உன்னோட தங்கச்சி கல்யாணத்துக்கு ரெடியா இருக்கா நீ கல்யாணம் பண்ண அடுத்த மாசமே கண்டிப்பா போல என்று பாட்டி சொன்னவுடன் மூவரும் ஒரு சேர மகிழ்ச்சியாக சிரித்தனர்...

தொடரும்....
 
Top