• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அந்தமான் காதலி -05

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,393
433
113
Tirupur
அந்தமானின் காதலி – 5
அடைத்து கிடக்கும்
என் இதய அறையில்
தற்போது ஆயிரக்கணக்கான
நினைவலைகள்
தூக்கி எறிய முடியவில்லை
தூக்கி கொஞ்சவும் மனமில்லை
அறைகள் முழுவதும்
அவன் நினைவுகள் நிறைந்து
என் இதயம் வெடித்தால் தான்
இதற்கு தீர்வாகுமோ?
பவன் அங்கிருந்து சென்று சில நிமிடங்கள் ஆகியிருந்தாலும், லாவண்யா அந்த இடத்தை விட்டு நகரவில்லை. அவளுக்கு பவனின் வார்த்தைகள் உண்மையை ஊசியாய் இறக்கி, குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இருவரின் பேச்சையும் கேட்டபடியே வெளியில்தான் நின்று கொண்டிருந்தனர் பவனின் தாயும், மற்றொரு தங்கையான கலைவாணியும். அவன் நகரவும் லாவண்யா வெளியில் வருவாள் என்று அவர்கள் காத்திருக்க, அவளோ வராமல் ஏதோ யோசனையில் இருப்பது போல் தோன்ற சுவிதா, கலையை உள்ளே அனுப்பி விட்டார்.
அவளும் வேகமாக வந்து, “என்ன லாவண், இங்கேயே நின்னுட்ட? அண்ணாக்கிட்ட என்ன பேசின? ஏன் இப்படி பேயறைஞ்ச மாதிரி நின்னுட்டு இருக்க? கீழே அவ்வளவு வேலை இருக்கு, மாமா வீட்டுல இருந்து வர்ற நேரமும் ஆகிடுச்சு.” என உலுக்க,
அந்த, ‘மாமா வீடு’ என்ற பதத்தில், தங்கையின் கரத்தை வேகமாகத் தட்டிவிட்ட லாவண்யா, “நான்தான் சொன்னேன்ல, அண்ணனுக்குத் தெரியாம, அவருக்குப் பிடிக்காம, எந்த ஒரு காரியமும் செய்யாதீங்கன்னு... கேட்டீங்களா? இப்போ பாருங்க, அவர் எவ்வளவு வருத்தப்படுறார்ன்னு... எனக்கு... எனக்கு பிடிச்ச மாதிரி ஒரு வாழ்க்கை வேணும். உனக்கு உனக்கு பிடிச்ச மாதிரி ஒரு வாழ்க்கை வேணும். ஆனா அவருக்கு... அவருக்கு மட்டும் நம்ம எல்லாருக்கும் பிடிச்ச மாதிரி வாழ்க்கை இருக்கணும். என்ன ஒரு நல்ல எண்ணம்... இது என்ன நியாயம்?
சரி பொண்ணுதான் பார்த்தாங்களே, அத கூட சரியா செய்ய மாட்டாங்களா? ஊரு உலகத்துல அண்ணாவுக்கு பொண்ணா கிடைக்கல? அவர் ஒரு டாக்டர். அவருக்கு போயும் போயும் அந்த ராகவிதான் கிடைச்சாளா? எனக்குத் தெரிஞ்சு மூணு பையனுங்களை லவ் பண்றேன்னு ஏமாத்திட்டு வந்திருக்கா. தெரியாம எத்தனை பேரோ, யாருக்கு தெரியும்? எத்தனை அபார்ஷன் செய்துட்டு வந்தாளோ? எனக்குத் தெரிஞ்சே...” எனப் படபடவென ஆத்திரத்தில் கத்திய லாவண்யாவின் கையைப் பிடித்து தடுத்திருந்தாள் கலை.
“லாவண், என்ன பேச்சு இதெல்லாம்? அடுத்த வீட்டுப் பொண்ணை இப்படி பேசுறது தப்பு. என்ன இருந்தாலும் அவ நமக்கு அண்ணியா வரப் போறா, அவளைத் தப்பா பேசாதே...” என்று அடக்க,
“ஓஹோ... அப்போ ஒரு முடிவோட தான் இருக்கீங்க ரெண்டு பேரும், அப்படித்தானே? நடக்கட்டும்... நடத்துங்க... ஆனா, நான் இதுல எங்கேயும் இருக்க மாட்டேன். எனக்கு என் அண்ணனோட வாழ்க்கை ரொம்ப முக்கியம். அவருக்குப் பிடிக்காதது, எனக்கும் பிடிக்காது.” என்றவள், கலைக்குப் பின்னே நின்ற தாயைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தாள்.
“ஆக, இதுவும் உங்க வேலைதான், அப்படித்தான? அண்ணனுக்கு அவளைப் பிடிச்சிருக்குன்னு என்கிட்ட சொன்னது பொய் தானே? இன்னும் எத்தனை விசயத்தை மறைச்சு வச்சுருக்கீங்க? உங்களுக்கு இப்போ எல்லாம் மறந்துருக்கும், ஆனா எனக்கு எதுவும் மறக்காது, மறக்கவே மறக்காது...” என தங்கையைத் தள்ளிவிட்டு தாயிடம் சென்றவள்
“அப்பா இறந்த கொஞ்ச நாள்க்கு அப்புறம், அன்னைக்கு ஏதோ ஒரு ஞாயிற்று கிழமைன்னு, நாம சும்மாதான் ரகு மாமா வீட்டுக்குப் போனோம். அத்தை நம்மளைப் பார்த்ததுமே சமைச்ச எல்லாத்தையும் எடுத்து ஃப்ரிட்ஜில வச்சிட்டு ஒன்னுமே சமைக்கலன்னு சொல்லிட்டு, நமக்கு உப்பே போடாத ஒரு உப்புமாவை செஞ்சு கொடுத்தாங்க. அண்ணாவும் நானும் அன்னைக்கு சாப்பிடவே இல்லை.
நான் அண்ணன்கிட்ட சொன்னதும் அம்மாக்கிட்ட சொல்லாத, ரொம்ப வருத்தப்படுவாங்க. இனி இங்க வர வேண்டாம்னு சொன்னாங்க. சொன்ன மாதிரியே அடுத்து அங்க போகவே இல்லை, அப்படியே கடைப்பிடிச்சாங்க. அப்போ ஒரு நேரம் சாப்பாடு கூடப் போடாதவங்க, இன்னைக்கு எப்படி தன்னோட பொண்ணை, அண்ணனுக்கு கல்யாணம் பண்ணித் தர்றாங்க?” என ஆவேசமாகக் கத்த,
இத்தனை பேச்சையும் உள்ளிருந்து பவன் கேட்டுக் கொண்டுதான் இருந்தான். வெளியில் வரவில்லை. வந்தால் தாய் பேச்சை திசை மாற்றி விடுவார் என்று புரிய, அப்படியே நின்று கொண்டான். அவனுக்கு லாவண்யாவின் மேல் நம்பிக்கை இருந்தது. தனக்குப் பிடிக்கவில்லை என்று கோடிட்டு காட்டினால் போதும், மத்ததை அவள் பார்த்துக் கொள்வாள் என்று நினைத்துதான், தங்கையிடம் பேசினான். அது இப்போது சரியாக வேலை செய்திருந்தது.
லாவண்யாவின் பேச்சைக் கேட்ட கலையின் முகமும் யோசனைக்குத் தாவ, சுவிதாவிற்குத் தான் தன் திட்டம் தவிடு பொடியாகி விடுமோ என்ற பயம் தோன்றி விட்டது. அந்த பயம் கொடுத்த படபடப்பில் லாவண்யாவிடம்,
“வாயை மூடுடி! என்னப் பேச்சு பேசுற? பழசையெல்லாம் கிளறி சொந்த பந்தங்களைத் தள்ளி வைக்கச் சொல்றியா? அந்த நேரத்துல யாரா இருந்தாலும் அப்படித்தான் நடந்திருப்பாங்க. நானா இருந்தாலும் தான் சொல்றேன். அவங்க சூழ்நிலை தெரியாம எதையும் வாய்க்கு வந்த மாதிரி பேச கூடாது, புரியுதா? கடந்து போனது எல்லாம் போனது தான் லாவண்யா. அதுக்காக அதையே தொங்கிட்டு இருப்பேன்னு சொல்றது முட்டாள்தனம். நீயும் உன் அண்ணனும் இப்போ அதைத்தான் செய்துட்டு இருக்கீங்க. தப்பு செய்யாத மனுசங்க யார் இருக்காங்க? சொல்லு... அண்ணியும் முன்ன மாதிரி இல்ல, ராகவியும் உங்க எல்லாரையும் அனுசரிச்சு போவா.” என அவரும் தன் பிடியிலேயே நிற்க,
“ஓ... நாங்க முட்டாள் தனமா பேசுறோமோ? அப்படி நீங்க நினைச்சா எனக்குக் கவலை இல்லை. நான் இனி இங்க இருக்க மாட்டேன்.” என இருவரையும் விலக்கிவிட்டு விறுவிறுவென கீழே விரைந்தாள்.
“என்ன கலை, இவ இப்படி பேசிட்டு போறா? நான்தான் சொன்னேன்ல, உங்க அண்ணனுக்கு கொடி பிடிக்குறவ நமக்கு சரிப்பட்டு வரமாட்டான்னு... கேட்டியா? இப்போ மொத்தமா எல்லாத்தையும் கெடுத்து வைக்கப் போறா... உன் அண்ணன் வெளியே வரவும் பேசி சமாதானம் செஞ்சி அழைச்சிட்டு வா. அந்த கிறுக்குப் பிடிச்சவ எதுவும் ஏடாகூடமா சம்பந்திங்ககிட்ட பேசுறதுக்கு முன்னாடி, நான் போய் தடுக்குறேன்.” என சிறிய மகளை மகனின் அறையிலேயே விட்டுவிட்டு, பெரிய மகளின் பின்னே சுவிதா ஓடினார்.
ஆனால் அதற்கு முன்னமே அவள் தன் கணவனிடம் மேலோட்டமாக, பவனுக்கு இதில் விருப்பமில்லை என்ற விசயத்தை சொல்லிக் கிளம்ப ஆயத்தமாக இருந்தாள்.
“என்ன சம்பந்தி, லாவண்யா என்னமோ சொல்றாளே... பவனுக்கு பிடிக்காமலா இந்த ஏற்பாட்டை செஞ்சீங்க?” எனக் கலையின் மாமியார் கேட்க,
“என்ன அண்ணி, பிள்ளைங்க வாழ்க்கைத் தானே நமக்கு முக்கியம். தம்பிக்கு பிடிக்காம ஏன் இந்த ஏற்பாடெல்லாம்...?” என லாவண்யாவின் மாமியாரும் கேட்க,
“அது... அது வந்து... அண்ணி, என் அண்ணன் வந்து கேட்கும் போது எப்படி இல்லைன்னு சொல்ல முடியும்? அதோட, என் பேச்சை என் மகன் மீற மாட்டான்னு நினைச்சு...” என சுவிதா சொல்ல,
“அப்போ எங்க பசங்க எங்க வார்த்தையை மீறி, உங்க பொண்ணுங்களை கல்யாணம் செய்தது தப்புன்னு சொல்றீங்களா? நாங்க பையனுங்களை சரியா வளர்க்காம விட்டுட்டோம்னு குத்தி காட்டுறீங்களா?” என கலையின் மாமியார் சண்டைக்கு கிளம்ப, சுவிதாவிற்குத் திக்கென்றானது. எதையோ நினைத்து செய்ய, இப்போது வேறெதுவோ நடக்க, சூழ்நிலை சட்டென்று மாறி ஒரு கனமான சூழல் உருவாகியது.
“அச்சோ அத்தை! அம்மா அப்படி நினைச்சு சொல்லல. நீங்க தப்பா நினைக்காதீங்க. எங்களை விட நீங்கதான் மாப்பிளைங்களை அருமையா வளர்த்திருக்கீங்க. எப்படிச் சொல்றேன் தெரியுமா? என் தங்கைங்க திருமணம் முடிஞ்சு இந்த வீட்டை விட்டு போன பிறகு, ஒரு நாள் கூட வருத்தப்பட்டோ, அழுதோ, சண்டை போட்டோ வந்தது கிடையாது. உங்களைப் பத்தி ஒரு வார்த்தைத் தப்பா பேசினது கிடையாது. இதுலயே தெரியலையா, நீங்க எவ்வளவு நல்லவங்க, மாப்பிளைங்க எவ்வளவு நல்லவங்க, நீங்க எப்படி பசங்களை வளர்த்துருக்கீங்கன்னு?
இப்படி ஒரு புகுந்த வீடு கிடைக்க, என் தங்கைங்க ரெண்டு பேர் மட்டுமல்ல, நாங்களுமே கொடுத்து வச்சிருக்கணும்.” என அந்தக் கனமான சூழ்நிலையை அழகாக சமாளித்தான் பவன்.
இவர்கள் இங்கே பேசிக் கொண்டிருக்கும் போதே, தன் போனுடன் உள்ளே சென்ற லாவண்யா, ராகவிக்கு அழைத்து பவனின் விருப்பமின்னையைச் சொல்லி, அவர்களை வர வேண்டாம் என சொல்லிவிட்டாள்.
பவனின் இந்த பேச்சைக் கேட்டதுமே மாமியார்கள் இருவருக்கும், தலையில் யாரோ கூடை பூவைக் கொட்டிய உணர்வு. அது கொடுத்த மகிழ்ச்சியில், “ஏன் தம்பி, இந்த ஏற்பாட்டைப் பிடிக்கலன்னு சொல்லிட்டீங்க? இங்க நடந்தது எங்களுக்கு முழுசாத் தெரியாது. ஆனா மேலோட்டமாத் தெரியும். மருமகளுங்க சொல்லிருக்காங்க. அந்த பொண்ணை நீங்க பாதுகாப்பா கொண்டு வந்து பார்த்துக்கணும்னு நினைச்சது தப்பில்ல தான், ஆனா...” என இழுக்க,
“அத்தை...” என்று ஆரம்பித்து நிறுத்தியவன், “இப்போ இந்தப் பேச்சு வேண்டாம்னு நினைச்சேன். ஆனா நீங்க எல்லாரும் இருக்கும் போதே இதை பேசிடுறது நல்லது. சொந்தம், பந்தம்னு உங்களைத் தவிர வேற யார் இருக்கா எங்களுக்கும்?” எப்படி பேசினால் இவர்களை சமாளிக்க முடியும் என தெரிந்தவன், அப்படியே பேச்சை ஆரம்பித்தான்.
பவன் இந்தப் பேச்சை ஆரம்பித்ததுமே சுவிதாவிற்குப் புரிந்து விட்டது, தன் எண்ணம் பலிக்காது என்று. ஆனால் அவருக்கு சைந்தரியை, பவனின் மனைவியாக பார்க்கும் எண்ணம் துளியும் வரவில்லை. அதனால் அடுத்து என்ன செய்யலாம் என யோசிக்க ஆரம்பித்தார்.
ஆனால் அவர் மகனோ தன் பேச்சை ஆரம்பித்திருந்தான், “அத்தை, இன்னைக்கு மார்னிங் வரைக்கும்... ஏன், அம்மாவா இந்த பேச்சை ஆரம்பிக்குற வரைக்குமே எனக்கு சைந்தரி மேல, அப்படி ஒரு எண்ணம் வரவே இல்லை. இவங்க அப்படி பேசவும் தான், இருந்தா என்னன்னு தோனுச்சு.” எனவும்,
“இது அவசரத்துல, சைந்தரி மேல வந்த பரிதாபத்துல எடுத்த முடிவு பவன். நாளைக்கு அந்தப் பொண்ணோட வீட்டுல தெரிஞ்சு வந்து பிரச்சனை செய்தா என்ன செய்வ? நாங்க உன் கூட இருப்போம் தான், ஆனா பிரச்சனையை சமாளிக்கப் போறது நீ மட்டும்தான். அப்புறம் உன்னால ஒரு நார்மல் மேரேஜ் லைஃப் அந்த பொண்ணு கூட வாழ முடியும்னு நினைக்கிறியா? அதுக்கு சாத்தியம் இருக்கா?” என அதுவரை அமைதியாக, அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பெரிய தங்கையின் மாமானார் கேட்டார்.
‘இது சரிதானே?!’ என்பது போல எல்லாரும் ஒருவரை ஒருவர் பார்க்க, ‘நானும் இதைத்தானே சொன்னேன்.’ என சுவிதாவும் கடுப்பில் பவனை முறைத்துப் பார்க்க, அடுத்து அவன் என்ன சொல்லப் போகிறான் என, அனைவரும் ஒருசேர பவனைத்தான் பார்த்தனர்.
“மாமா, நான் அவசரப்பட்டு, பின்விளைவுகளைப் பத்தி யோசிக்காம முடிவெடுக்குற ஆள் மாதிரி தெரியுதா?” என்றவன், “இல்ல மாமா, எப்போ எந்த நொடி அவ மேல எனக்கு விருப்பம் வந்ததுன்னு சொல்லத் தெரியல. சைந்தரியை நான் விரும்ப ஆரம்பிச்சிட்டேன் அங்கிள். இங்க இருந்து போன இந்த மூனு மணி நேரத்துல நிறைய யோசிச்சிட்டேன், அவளை விட முடியாது. என்னப் பிரச்சனை வந்தாலும் என்னால சமாளிக்க முடியும், நீங்க எல்லாரும் என் கூட இருந்தா...” எனச் சொல்லவும்,
“நான் இதுக்கு சம்மதிக்க மாட்டேன் பவன். என் உயிர் இருக்குற வரைக்கும் நீ சொன்னதுக்கு என்னால சம்மதிக்க முடியாது. அப்படி ஒன்னு நடந்தா, நான் உயிரோட இருக்க மாட்டேன்.” என அங்கிருந்த யாரையும் பொருட்படுத்தாமல், ஆங்காரமாய் கத்த ஆரம்பித்தார் சுவிதா.
“அப்படிச் சொல்லு சுதா, சேத்தை அள்ளி உடம்பெல்லாம் பூசிக்கிட்டு, சந்தனம்னு சொன்னா யாராச்சும் ஒத்துப்பாங்களா? எனக்கு வாக்கு கொடுத்துருக்க, அதை ஞாபகம் வச்சு எந்த முடிவு எடுத்தாலும் சரி.” என மனைவி, மகள் சகிதம் உள்ளே வந்தார் ரகுபதி.
இனி அமைதியாக பேசி ஒரு முடிவுக்கு வர முடியாது என புரிந்துவிட்டது பவனுக்கு. அங்கிருந்தவர்களை எல்லாம் அமைதியாக ஒரு பார்வை பார்த்தான். அந்த பார்வையே சொன்னது, என்ன நடந்தாலும் யாரும் வாய் திறக்க கூடாது என்று.
லாவண்யாவின் கணவன் சுரேந்தர் தான் வேகமாக முன் வந்து, “பவன், பொறுமையா பேசி முடிக்கலாம், அவசரப்பட வேண்டாம்.” என யாரும் அறியாமல் மெதுவாக சொல்ல,
“நீங்க எல்லாம் எனக்காக பேசும் போது எனக்கு பயமெல்லாம் இல்லை சுரேன். இப்போ நான் பேசலன்னா, இனி எப்பவும் பேச முடியாம போயிடும். என்னை நீங்க யாரும் தப்பா நினைக்காம இருந்தா போதும்.” என அவனுக்கு பதிலளித்தவன், ரகுபதியை ஏளனமாக ஒரு பார்வைப் பார்த்துவிட்டு ராகவியிடம் வந்தான்.
“அப்படி என்னம்மா உனக்கு என் மேல அம்புட்டு லவ்வு? கல்யாணம் செஞ்சா என்னைத்தான் செய்யணும்னு உனக்கு ஏன் அவ்வளவு பிடிவாதம்? காவிய காதல் மாதிரி இருக்கே...” என நக்கலாய் கேட்க,
“ஹான்! லவ்வா? உன்னையவா? இப்படி உங்கிட்ட சொன்னது யாரு? நான் லவ் பண்ற அளவுக்கு நீ என்ன பெரிய இவன்? ஆக்சுவலி நான் உன்னை ரிஜெக்ட் பண்ணணும்னு நினைச்சேன். அதுவும் இங்க இருக்குற எல்லார் முன்னாடியும், உன்னை அசிங்கப் படுத்தணும் நினைச்சேன். ஏன் தெரியுமா? நீ இதுவரைக்கும் ஒரு பொருட்டா கூட என்னை மதிச்சது இல்ல. அந்த திமிரை அடக்கணும், உன்னை பழிவாங்கணும்னு நினைச்சேன். அத்தை வந்து கேட்கவும் நல்ல வாய்ப்பு பயன்படுத்திக்கலாம்னு இருந்தேன். ஆனா அதுக்கு நீ வாய்ப்பு கொடுக்கல...” என அவனை விட நக்கல் குரலில் பேசியவள்,
“ஆனா பாரேன், இதுவரைக்கும் உன்மேல வராத அந்த லவ்வு, இப்போ இந்த செக்கண்ட் பீர் மாதிரி பொங்கி வருது. என்ன செய்யலாம்...?” என திமிராக பேசி அவனைப் பார்த்து ஒற்றைக் கண்ணை சிமிட்டினாள்.
“ஏய்...! உனக்கு அவ்வளவு தான் மரியாதை...” என லாவண்யா முன்னே வர, சற்றும் யோசிக்காமல் அவளைக் கீழே தள்ளிவிட, தங்கையைக் கீழே தள்ளி விட்டவளின் கன்னத்தில், ‘பளார்’ என அறைந்து ஒற்றை விரலைத் தூக்கி பத்திரம் காட்டியவன்,
“வெளிய போ...” என கர்ஜித்திருந்தான் பவன்.
***
 
  • Like
  • Love
Reactions: saru and Sampavi

CRVS2797

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 11, 2023
117
5
18
Ullagaram
தேவையா..? இந்த அவமானம் எல்லாம் தேவையா..? பவன் அம்மா ஏன் தராதரம் தெரியாதவங்க எல்லாரையும் உள்ளே இழுக்கிறாங்கன்னு தெரியலை. இப்ப பாருங்க லாவண்யாவை கீழே புடிச்சு தள்ளி விட்டுட்டா அந்த ராகவி...? பதிலுக்கு பவன் அவ கன்னத்துல அடிச்சிட்டாலும்
இந்த கூத்தெல்லாம் தேவையா...?
இந்தளவுக்கு அந்த ரகுபதி குடும்பம் தலையெடுக்க யார் காரணம்...?
பெத்த பையனை தள்ளி வைச்சிட்டு மத்தவங்களுக்கு இடம் கொடுத்ததாலத்தானே.... இந்த கேவலமான நிலைமை..?
😃😃😃
CRVS (or) CRVS 2797
 
  • Like
Reactions: Sampavi

Sampavi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 21, 2022
267
105
43
Theni
தேவையா..? இந்த அவமானம் எல்லாம் தேவையா..? பவன் அம்மா ஏன் தராதரம் தெரியாதவங்க எல்லாரையும் உள்ளே இழுக்கிறாங்கன்னு தெரியலை. இப்ப பாருங்க லாவண்யாவை கீழே புடிச்சு தள்ளி விட்டுட்டா அந்த ராகவி...? பதிலுக்கு பவன் அவ கன்னத்துல அடிச்சிட்டாலும்
இந்த கூத்தெல்லாம் தேவையா...?
இந்தளவுக்கு அந்த ரகுபதி குடும்பம் தலையெடுக்க யார் காரணம்...?
பெத்த பையனை தள்ளி வைச்சிட்டு மத்தவங்களுக்கு இடம் கொடுத்ததாலத்தானே.... இந்த கேவலமான நிலைமை..?
😃😃😃
CRVS (or) CRVS 2797

Amma va irukkum podhu nallavankalaakavum, maamiyaar anthum kettavankalaaakaurathum ulaka valakkam thane sis
 

Sampavi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 21, 2022
267
105
43
Theni
Enakku intha suvitha mela iruntha mariyathaiye poiduchu\
enna amma ivanka, yaro orutharukkaaka peththa paiyanai othukkuranka
 

saru

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 24, 2022
441
6
28
Hosur
Lovely vani