அந்தமான் காதலி – 10
உள்ளே சென்ற அனைவரும் நிரதியை எழுப்பி, அது முடியாமல் தோல்வியுடன் திரும்புவதைப் பார்த்த சித்தார்த், வேறு வழியில்லாமல் தன் கண்ணாட்டியின் அறைக்குள் முதன்முதலாக நுழைந்தான்.
ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள் பெண். அவளுக்கு மிக மிக அருகில் அமர்ந்து, விழியெடுக்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் சித்தார்த். கைகள் தன் போக்கில் அவள் கார் கூந்தலை வருட ஆரம்பித்தது. மனமோ, 'என்னதான் வேண்டுமாம் என் கண்மணிக்கு? யாரை பழிவாங்க இந்த திருமணமாம்?' மெல்ல சிரித்துக் கொண்டான் சித்தார்த்.
திருமணம் முடியட்டும் பெண்ணே, உனக்கு பிடிக்காத எதையும் உன் மாமா மனதளவில் கூட நினைக்கமாட்டான். அவன் இமைகளை காவலாக்கி, உன்னை அதற்குள் வைத்துப் பாதுகாப்பான்.' என மனதுக்குள் பேசிக்கொண்டே அவள் தலையை வருட, அந்த வருடலில் விழித்தவளும் அவனைப் பார்த்து மெல்ல புன்னகைக்க,
“எழுந்துக்கோடா... ரொம்ப நேரமா உன்னை வந்து எழுப்பிட்டு இருக்காங்க. நீ அசைஞ்ச மாதிரியே தெரியல. அதுதான் நான் வந்தேன்.” என அவள் எழ உதவ,
“ம்ம்ம்... அப்படியே தூங்கட்டா? டயர்டா இருக்கு, தூக்கமா வருது.” என அவன் கையில் தன் தலையை சாய்த்துக் கொண்டாள்.
“தூங்கலாம், தூங்கலாம்... சாப்பிட்டு நல்லா தூங்கலாம். வா, உனக்காகத் தான் எல்லாருமே வெயிட் செய்றாங்க. உன் அண்ணங்காரன் வேற, என்னை எப்போ பார்த்தாலும் முறைச்சிட்டே இருக்கான்.” என பேசியபடியே அவளை எழுப்பிவிட்டான்.
“ம்ம்... பசிக்கல மாமா, தூங்கினா சரியாகிடும். நான் வந்து அங்க இருக்கேன், எல்லாரும் சாப்பிடுங்க ப்ளீஸ். என்னை கட்டாயப்படுத்தாதீங்களேன்...”
“நீ ஃப்ரெஷ் ஆகிட்டு வாடா, அங்கிள் ரொம்ப நேரமாவே சாப்பிடாம இருக்கார். உனக்கு பால் மட்டும் கொடுக்க சொல்றேன், மத்தத நான் சொல்லிக்கிறேன்.”
“ஓகே... நீங்க போய் சொல்லுங்க, நான் வந்துடுறேன்.” என ஃப்ரஷாக செல்ல,
வெளியே வந்தவன், “ஆன்ட்டி டின்னர் எடுத்து வைங்க, அவ வந்துடுவா. நிதிக்கு டின்னர் வேண்டாமாம், பாதாம் இருந்தா பால் மட்டும் காச்சி கொடுங்க. வாமிட் வர மாதிரி இருக்குனு சொல்றா.” என்றவாறே டைனிங் சேரில் அமர,
அவரும் சரியென்று அனைவருக்கும் உணவை எடுத்து வைக்க, நிதியும் வந்தாள். வந்தவள் விஷாலுக்கும் சித்தார்த்துக்கும் இடையில் இருந்த சேரில் அமர்ந்து, விஷாலிடம் பேச ஆரம்பித்துவிட்டாள்.
அடுத்த போஸ்டிங் பற்றி அவன் கேட்க திரும்பி சித்தார்த்தைப் பார்த்தவள், “கொச்சின்ல போஸ்டிங்க்டா, இன்னும் ஃபிஃப்டீன் டேஸ்ல ஜாய்ன் செய்யணும்.” என்று எல்லோர் முன்னமும் சொல்ல,
அவர்களுக்குத் தெரிந்தது, இன்னும் இருவரும் எதுவும் உருப்படியாக எதையும் பேசி முடிக்கவில்லை என்று. சரி, பேசி ஒரு முடிவுக்கு வரட்டும், அதன்பிறகு மற்றதை பேசலாம் என மூவரும் ஒன்றாக நினைத்து, அந்தப் பேச்சை அப்படியே விட்டனர்.
பிறகு, “டேடி, இன்னைக்கு நான் அங்க எங்க வீட்டுக்கு போய் தூங்கட்டுமா?” என அவளே ஆரம்பித்தாள்.
“நோ!” என்ற ஒற்றை வார்த்தையில் பட்டென்று பதில் கொடுத்தான் விஷால்.
விஷாலின் பட்டென்ற அழுத்தமான பதிலில் சித்தார்த்தின் முகம் யோசனையானது. அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவன், விஷாலிடம் தன் பார்வையை நிறுத்தி, ‘ஏன்’ என்பது போல் புருவம் உயர்த்த, இதற்கு விஷாலுக்கு பதில் சொல்ல விருப்பம் இல்லைதான்.
ஆனால் தங்கைக்கு கணவனாகப் போகிறவனிடம் அதைக் காட்டப் பிடிக்கவில்லை. ஒருவழியாக தன் கோபத்தை தனக்குள்ளே அழுத்திக் கொண்டு, “அவளுக்கு அங்க போனா பழசெல்லாம் ஞாபகம் வரும். அப்புறம் அவளால நிம்மதியா தூங்க முடியாது.” என விட்டேத்தியாகப் பதில் சொல்லிவிட்டு, உணவில் கவனம் வைத்தான்.
“ஓ...” என்ற சித்தார்த்தும் வேறு எதுவும் பேசவில்லை. அமைதியாக அவனது உணவில் கவனமானான். ஆனால் நிரதியால் தான் சும்மா இருக்க முடியவில்லை.
“இப்போ ஒன்னும் பிரச்சனை இல்லை விஷால், ஐ கேன் மேனேஜ் எவெரிதிங். ப்ளீஸ்டா அண்ணா...” என அவனிடம் கெஞ்ச,
“நோ வே நிதி! என் முடிவுல எந்த மாற்றமும் இல்ல. உன் மேரேஜ் முடிஞ்சதும் ரெண்டு பேரும் வந்து இருங்க, நான் வேண்டாம் சொல்லல. பட் இப்போ என்னால ஒத்துக்க முடியாது.” என்றவன் எழுந்து கிளம்பிவிட,
“டேடி!” என இப்போது அவள் தன்வீரைப் பார்க்க, “நான் என்ன சொல்ல முடியும் நிதிமா? அவன் முடிவுதான்.” எனவும்,
“பரவாயில்ல அங்கிள், நான் அவ கூட இருக்கேன். என் மேல நம்பிக்கை இருந்தா, நீங்க விஷால்கிட்ட இருந்து கீயை வாங்கி குடுங்க. எனக்கும் அவக்கிட்ட தனியா பேச நிறைய விஷயம் இருக்கு. அப்புறம் மேரேஜ் பத்தியும் பேசணுமில்ல, டைமும் ரொம்ப கம்மியாதானே இருக்கு.” என தன்வீரிடம் கேட்டான்.
“அதுவந்து மாப்பிள்ளை...” என தன்வீரின் மனைவி இழுக்க, சித்தார்த்தின் முன் சாவியைக் கொண்டு வந்து வைத்தான் விஷால். “எனக்கு உங்க மேல நம்பிக்கை இருக்கு, இதுவரைக்கும் நீங்க எப்படியோ எனக்குத் தெரியாது. ஆனா இனி அவளை ராணியாட்டம் பார்த்துப்பீங்கன்னு நம்பிக்கை இருக்கு.” என உண்மையாகச் சொல்ல,
சாப்பிட்ட கையைக் கழுவ வேண்டும் என்று கூட யோசிக்கவில்லை. அப்படியே எழுந்தவன் விஷாலை அணைத்துக் கொண்டு, “தேங்க்ஸ் விஷால்!” என்றான்.
மற்ற மூவரும் மிகவும் நெகிழ்வாகவே அதை பார்த்துக் கொண்டிருந்தனர். நிரதியின் வீட்டில் தங்குவதாக முடிவு செய்யப்பட்ட பிறகு, இருவரும் பேசி ஒரு முடிவுக்கு வரட்டும் என முடிவு செய்து, நிரதி சாப்பிடவில்லை என்பதால், இரவில் பசித்தால் என்ன செய்வது என, சில உணவுப் பொருட்களும் ப்ளாஸ்கில் பாலும் என கொடுத்துவிட்டனர்.
பல மாதங்களுக்குப் பிறகு சொல்லப் போனால், சில வருடங்களுக்குப் பிறகு தன் வீட்டிற்குள் நுழைகிறாள். அவளது ஒவ்வொரு இன்பத்தையும் துன்பத்தையும் சிரிப்பையும் சந்தோசத்தையும் அழுகையையும் பார்த்த வீடு. அந்த வீட்டில் நுழைந்ததும் உள்ளுக்குள் மகிழ்ச்சி ஆர்ப்பரித்தது.
உள்ளே நுழைந்ததும் அவர்களை வரவேற்றது, ஹாலில் மாட்டியிருந்த ஆளுயர புகைப்படம் தான். கடற்கரையின் அந்திமப் பொழுது. ஆதவன் மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருந்தது. அந்தப் புகைப்படத்தின் பின்புறம் வானம் மஞ்சளாகவும் கடல் நீர் நீல நிறத்திலும் காட்சியளிக்க, பச்சையாய் மலைத்தொடர்கள் வரிசைக்கட்டி நின்றிருந்தது.
விதுரனும் வாணியும் அந்த கடற்கரையில் ரிலாக்சாக உட்கார்ந்திருக்கும் போது, பின்னாடி வந்து நிரதி அவர்களை பயமுறுத்தியிருக்க வேண்டும்.
நிரதி பின்னிருந்து அணைத்து ஒரு கண்ணை சிமிட்டுவது போலவும், பேலன்ஸ் இல்லாமல் வாணி கீழே விழப் போவது போலவும், விதுரன் இருவரையும் பிடிப்பது போலவும் இருந்தது அந்த ப்ரேம். பார்க்கவே அத்தனை அழகாக, உயிர்ப்பாக இருந்தது அந்தப் புகைப்படம்.
சித்தார்த் இதற்கு முன் இந்த வீட்டில் அந்தப் புகைப்படத்தை பார்த்தது இல்லை. அவன் ஃபாரின் சென்ற பிறகு எடுத்திருக்க வேண்டும். மாமா இறந்த பிறகு இந்த போட்டோவை நிரதி ஃப்ரேம் செய்திருக்க வேண்டும் என அவனாக யூகித்துக் கொண்டான். வீட்டுக்குள் வந்ததும் நேராக தன்னை இழுத்த, இந்தப் புகைப்படத்தின் முன்பு போய் நின்று அதையே பார்த்துக் கொண்டிருந்தான்.
ஆனால் நிரதியோ கதவைத் திறந்ததும் மூச்சுக் குழாய் நிரம்பும் அளவிற்கு, மூச்சை உள்ளிழுத்து பின் அதை அனுபவித்து மெதுவாக விட்டவள், தன்னுடைய அறைக்குள் நுழைந்து கொண்டாள். வெகுநாட்களுக்குப் பிறகு அந்த நடையில் ஒரு துள்ளல் இருந்ததோ? எப்போதும் இப்படி வந்தால் மனம் மிகவும் அழுத்தமாகி, பாரம் ஏறிப் போகும். ஆனால் இன்றோ அப்படியில்லாமல் இறகைப் போல லேசாகியிருந்தது.
சில நிமிடங்களில் தன்னை ரெஃப்ரஷ் செய்து கொண்டு வெளியே வந்தவள் சித்தார்த்தை தேட, அவனோ அந்தப் புகைப்படத்தை பார்த்தபடியே நின்றிருந்தான். அதைப் பார்த்தவள் சில நொடிகள் அப்படியே நின்று, பின் மெல்ல அவனிடம் வந்தாள்.
“இந்த போட்டோ அம்மா, அப்பாவோட லாஸ்ட் அனிவர்சரிக்கு நாங்க அந்தமான் போயிருந்தப்ப எடுத்தது.” என காற்றாகி போன குரலில் சொல்ல, அடுத்த நொடி அவனின் இறுகிய அணைப்பில் இருந்தாள் சித்தார்த்தின் கண்ணாட்டி.
“நிதி... நிதிமா... நான் பாவி... நான் பாவி...” என்ற வார்த்தைகளைத் தவிர வேறொன்றையும் உதிர்க்கவில்லை அவன். அவனது அணைப்பும் இறுகிக் கொண்டேப் போனது.
அவளுக்கு ஆறுதல் சொல்ல வேணும் என்று எண்ணியவனுக்கே, ஆறுதல் தேவைப்பட்டதை என்னவென்று சொல்ல?
சித்தார்த்தின் இந்த செய்கையை வியப்பாகப் பார்த்திருந்தாள் பெண். தன் தந்தையை அவனுக்குப் பிடிக்கும் என்று தெரியும் தான். ஆனால் இப்படி அவரைப் பிரிந்தால் தவித்துப் போவான் என்று தெரியாது. அவனது அன்பில், அவளது பாறை இதயம் மெல்ல கரைய ஆரம்பித்தது நிஜம்.
அதன் முதற்படியாக, அவனை சுற்றிக் கைகளைப் போட்டு அணைப்பை அவளதாக்கி இருந்தாள்.
***
“என்ன பவி, நீ சொல்றது நம்புற மாதிரி இல்லையே... நிதிக்கு நம்ம மேல இருந்த கோபமெல்லாம் போயிடுச்சா என்ன?” மகன் போன் செய்து சொன்னதைக் கேட்டதில் இருந்து, பத்தாவது முறையாக கேட்டிருப்பார் பவித்ராவின் கணவர்.
“அட என்ன மாமா! நான் என்ன பொய்யா சொல்லப் போறேன்? உண்மையாதான் மாமா. சித்து போன் செஞ்சு சொன்னதும், நான் எப்படி ஃபீல் பண்ணேன்னு தெரியுமா? எனக்கு சந்தோசத்துல அழுகையே வந்துடுச்சு மாமா...” என இன்னும் அந்த மகிழ்ச்சியில் இருந்து மீளாதவரைப் போல பவித்ரா சொல்ல,
“அக்கா என்ன சொன்னாங்க?” என்றார் ஆண்டாளம்மாவை மனதில் வைத்து.
“அம்மா என்ன சொன்னாலும் அதை காதுல ஏத்துறதா இல்லை. இவங்க பிடிவாதத்துக்கும் வெட்டிக் கௌரவத்துக்கும் அவங்க புள்ளையை பழி கொடுக்கலாம். என் பிள்ளைய இழக்க நான் தயாரா இல்ல.” என பட்டென்று சொல்லி விட்டார்.
“ம்ச்ச் பவி... எதுக்கு வெடுக் வெடுக்குன்னு பேசுற? அக்காவை பத்தி தெரிஞ்சும் நான் கேட்டுருக்க கூடாதுதான். தெரியாம கேட்டுட்டேன், விடு.” என சலிப்பாக சொல்ல,
“உங்க அக்காவை சொன்னதும் உடனே கோபம் வருது உங்களுக்கு. எவ்வளவு தப்பு பண்ணிருக்காங்க, என்னைக்காவது அதை தட்டிக் கேட்டுருப்பீங்களா? என்கிட்ட வந்து முறைச்சா நான் ஒன்னும் பண்ண முடியாது.”
“பவி விடுன்னு சொல்லிட்டேன், கல்யாண வேலை தலைக்கு மேல இருக்கு. அதை விட்டுட்டு சும்மா என் அக்காவை பத்தி பேசிட்டு இருக்க...” என நைசாக நழுவி விட, பத்திரகாளியாக மாறிவிட்டார் பவித்ரா.
“உங்களை எல்லாம் என்னத்தான் செய்றதுன்னு எனக்கே தெரியல. அக்கா அக்கான்னு சொல்லிட்டு ச்சே...” என கடுப்பாக சொன்னவர், “வேலை வேலைன்னு ஓடாம, ஒழுங்கா பையனோட கல்யாண வேலையை பாருங்க. இந்த குடும்பத்தோட முதல் வாரிசுகளோட கல்யாணம். இந்த மதுரையே அசந்து போயிடணும்.” என கண்டிப்பாக கணவனிடம் கூறியவர்,
போனை எடுத்துக் கொண்டு வெளியேற, “ஷப்பா! வாயா இது?” என பெருமூச்சுவிட்டார் இரத்தினசாமி.
இரவு உணவின் போது அனைவரும் அமர்ந்திருக்க, திருமணத்தைப் பற்றிய பேச்சுக்கள் மட்டுமே அங்கு நிரம்பி வழிந்தது. பெரியவர்கள் அனைவருக்கும், நிதி எப்படி ஒத்துக் கொண்டாள் என்ற பெருங்கேள்வி மனதில் ஓடிக் கொண்டே இருந்தது. அதற்கான பதில் சித்தார்த்திடம் கூட இல்லையென்றால், நிதியைத் தவிர வேறு யார் சொல்ல முடியும்?
அவள் தன் வாய் திறந்து சொல்வாளா? அதுவும் நிச்சயமில்லை. ஆனாலும் அவள் ஒத்துக்கொண்டதே போதும், அவள் மனம் மாறுவதற்குள் திருமணத்தை முடித்துவிட வேண்டும் என, அனைவரும் முனைப்பாக இருந்தனர்.
ஆன்டாளம்மாள் என்ற ஒரு ஜீவன் அங்கிருப்பதாகக் கூட யாரும் நினைக்கவில்லை. கண்டிப்பாக அவர் ஏதாவது ஏடாகூடாமாகத்தான் பேசுவார், நல்ல காரியம் பேசும்போது ஏன் அவரிடம் பேசி அவச்சொல்லை வாங்க வேண்டும் என, யாரும் ஒரு ஒப்பினியன் கூட கேட்கவில்லை.
இதையெல்லாம் பார்த்த ஆண்டாளம்மாவிற்கு இருப்புக் கொள்ளவில்லை. நான், வேண்டாம் எனத் துரத்தியடித்தவளின் மகள் இந்த வீட்டு மருமகளா? என உள்ளம் வஞ்சம் கொள்ள,
“அவ ஆத்தா இப்படித்தான், என் பையனை எங்கிட்ட இருந்து பிரிச்சா, இப்போ இவ என் பேரனைப் பிரிச்சிட்டா...” என குரூரமாகச் சொல்ல, இந்தப் பேச்சில் அங்கிருந்த அனைவரும் ஸ்தம்பித்து போயினர்.
முதலில் சுதாரித்தது ரத்தினசாமி தான், “அக்கா, என்ன பேசுறோம்னு யோசிச்சு பேசு. நீ பேசுறது என் மருமகளை... என் மகனோட மனைவியை.. என் வீட்டு மகாலட்சுமியை... எங்களை, நீ என்ன வேண்டுமானாலும் சொல்லலாம், அதுக்கு உனக்கு எல்லா உரிமையும் இருக்கு. ஆனா என் மருமகளை சொல்ல அந்த உரிமை இல்ல. இனி பேசும் போது பார்த்து பேசு.” என கோபமாகக் கத்திவிட்டு வெளியே சென்றுவிட்டார்.
“ஏன்மா இப்படி இருக்க?” என ஒரு மகளும்,
“நீ திருந்தவே மாட்டியா?” என இன்னொரு மகளும் சொல்ல, மருமகன்களோ அவரை ஒரு பார்வை பார்த்துவிட்டு எழுந்துவிட்டனர்.
மீதமிருந்த சிறியவர்களோ, “ஏன் பாட்டி, இப்படியெல்லாம் பேசுறீங்க? சித்து அண்ணாவுக்கு மட்டும் இது தெரிஞ்சா, அண்ணியையும் கூப்பிட்டுட்டு இங்க இருந்து மொத்தமாவே போயிடுவாங்க.” ஏற்கனவே சித்தார்த் அந்த முடிவை எடுத்துவிட்டான் என்பதை அறியாமல் சொல்லிக் கொண்டனர்.