• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அந்தமான் காதலி - 18

Vathani

Administrator
Staff member
Joined
Jul 23, 2021
Messages
862
அந்தமான் காதலி – 18




தன்மீது கால்களையும், கைகளையும் போட்டவாறு சிறு குழந்தையென, உறங்கிக் கொண்டிருந்த மனைவியின் மென்மையான ஸ்பரிஷத்திலிருந்து வெளிவர மனமின்றி, அசையாமல் படுத்திருந்தான் சித்தார்த்.



தன் கைகளுக்குள் இருப்பவளுக்கு சந்தேகம் வராமல் இரவில் விட்டதைப் பகலில் பிடிப்பதாக எண்ணி, தன்னவளின் விருப்பத்தை ஏற்று அவளுக்கு வலிக்காமல் பயத்துடன் ஒரு கூடலை முடித்திருந்தான் அவன்.



தன் எண்ணம், பயம் எதையும் வெளியில் காட்டாமல் இருக்க பெருமளவில் கஷ்டப்பட்டு போனான் அந்த ஆறடி ஆண்மகன். கூடல் முடிந்து வெகு நேரமாகியும் தன் மார்பில் கிடந்தவளை இறுகிய அணைப்பில் வைத்திருந்தவன், நொடிக்கு ஒருமுறை நெற்றியில் இதழ் பதித்துக் கொண்டிருந்தான். கைவளைவில் இருந்த அவளுமே அந்த சுகத்தில் கண்மூடி திளைத்துக் கொண்டிருந்தாள்.



சுற்றம் எல்லாம் மறந்து கிடந்தவர்களைக் கடிகாரக் குயில் கூவி மணி பத்தென்று காட்ட, அதில் நிலை கடந்தவள் அவனிடமிருந்து விலகப் பார்க்க, அவனோ மேலும் பிடியை இறுக்கி, “இன்னும் கொஞ்ச நேரம் இரு அம்மு..” என காற்றான குரலில் முணுமுணுக்க,



“ம்ம்… போலாம் மாமா.. அத்தை ஏர்லி மார்னிங்கே வரச் சொன்னாங்க கோவிலுக்குப் போகனும்னு. இப்போ பாருங்க மணி பத்தாகிட்டு.. என்ன நினைப்பாங்க..” எனச் சினுங்க



“யார் என்ன நினைக்கப் போறாங்க, நினைச்சாலும் எனக்கு டோன்ட் கேர். இங்கதான் யாரும் இல்லையே. அம்மா அப்பவே கால் செஞ்சி பெரிய வீட்டுக்குப் போயிட்டு லஞ்ச் கொண்டு வர்ரேன்னு சொன்னாங்க. டிபன் இருக்காம், சாப்பிட்டு ரெஸ்ட் எடுக்க சொன்னாங்க..” என மனைவியிடம் விளக்க,



“ஓ.. ஆனா நைட் அத்தை ஏன் அப்படி சொன்னாங்க, இப்போ ஏன் இப்படி..” எனத் தன் முதல் சந்தேகத்தை ஆரம்பிக்க, அதில் அலார்ட் ஆன சித்தார்த்



“ம்ம்… அம்மா அப்பவே வந்து கதவை தட்டிப் பார்த்துட்டு நாம எழுந்துக்கலன்னதும் தான் டிஸ்டர்ப் செய்ய வேண்டாம்னு எல்லாரையும் இழுத்துட்டு பெரிய வீட்டுக்கு போயிட்டாங்க, கும்பர்கர்னி கூட சேர்ந்து நானும் கும்பகர்னன் ஆயிட்டேன்னு என்னைத் திட்டினாங்க தெரியுமா..?” என அவள் நம்பும்படியாக ஏற்றி இறக்கி பேச,



“அச்சோ.. என் மானமே போச்சு, அத்தை என்ன நினைச்சிருப்பாங்க.. நீங்க என்னை எழுப்பிருக்கலாம்தான..” என அவன் மார்பில் செல்லமாக அடிக்க,



“என்ன நினைப்பாங்க, அப்படியே நினைச்சாலும் இப்ப என்ன.? அதெல்லாம் தாண்டி தான் அவங்க வந்திருப்பாங்க.. நீ இதெல்லாம் யோசிச்சு மூளையை சூடாக்காம குளிச்சிட்டு வா.. எனக்கு பசிக்குது..” எனப் பேச்சை மாற்ற,



அதற்கு உடனே அவளிடம் பலன் கிடைத்தது, “இதை முன்னாடியே சொல்ல வேண்டியது தான..” என அவனிடம் முறைத்துவிட்டு, தன் மேலிருந்த போர்வையோடு குளியலறைக்குள் புகுந்திருந்தாள் நிரதி.



செல்லும் அவளையே சிறு புன்னகையோடு பார்த்தவன், குளித்து வந்ததும் மாற்றுவதற்கான உடையை அவளுக்கு எடுத்து வைத்துவிட்டு, பத்து நிமிடத்தில் நிரதிக்கு அழைத்து மெடிசின் எடுக்க வேண்டும் என ஞாபகப்படுத்துமாறு பவனுக்கு மெசேஜ் செய்தவன், விஷால் சென்னை கிளம்பிவிட்டானா.? என அவனுக்கும் மெசேஜ் போட்டுவிட்டு அறையை சுத்தம் செய்ய ஆரம்பித்தான்.



பத்து நிமிடத்தில் வந்தவள், கணவன் செய்த வேலைகளைப் பார்த்து வியப்பாக புருவம் உயர்த்த, அவனும் பதிலுக்கு ‘இப்போ என்னவாம்’ என்பது போல் புரிவம் உயர்த்திவிட்டு, பவன் கால் செய்துவிடுவான் அதற்குள் அவளுக்குத் தனிமைக் கொடுத்து குளியலறைக்குள் சென்றுவிட வேண்டும் என வேகாமாக டவலோடு நகரவும், பவனின் கால் வரவும் சரியாக இருந்தது.



போனை அட்டென்ட் செய்யும் முன் குளியலைறைக் கதவை ஒருமுறை பார்த்தவள், அட்டென்ட் செய்து காதில் வைத்தாள் “ஹலோ பவன்..” என்ற வார்த்தையோடு.



“ஹாய் நிதிமா.. சாரி டா. டிஸ்டர்ப் செஞ்சிட்டேனா..?” எனக் குற்றவுனர்வான குரலில் கேட்க,



“அட.. ரொம்பத்தான்டா பன்றீங்க. டைம் என்னனு பார்த்தியா.. இப்போ என்ன வேலை செய்ய போறேன், நீ டிஸ்டர்ப் செய்ய. சரி சொல்லு, சைந்து எப்படி இருக்கா.? நீ எப்படி இருக்க.? கிரன் என்ன சொன்னார்..?” என வரிசையாக கேட்க,



“மேடம்… நாங்க எல்லோரும் நல்லாவே இருக்கோம். நீங்க எப்படி இருக்கீங்க. மச்சான் எப்படி இருக்கார். வீட்டுல எல்லாம் ஓக்கே தான.?” என பவன் ஒரு நண்பனாக, அண்ணனாக உண்மையான அக்கறையுடன் கேட்கவும், நிரதியின் கண்களில் நீர் நிறைந்தது.



இந்த சொர்க்கம் எல்லாம் தனக்கு எத்தனை நாளைக்கு. எந்த சொந்தங்களூம் தனக்கு கடைசி வரை நிலைக்காது என்பது எழுதப்பட்ட விதி போல என நினைத்தவள், பவன் லைனில் இருப்பது புரிய, அவசரமாக குரலை செறுமிக் கொண்டாள்.



“இங்க எனக்கு என்ன கஷ்டம் வந்திட போகுது பவன். மாமா என் கூடவே இருப்பாங்க. அவங்க இருக்கும் போது எனக்கு எந்த க்ஷ்டமும் வருத்தமும் இல்ல. இப்போ இந்த செகன்ட் என் உயிர் போனாலும் சந்தோசம் தான்..” என உணர்ச்சி மிகுந்த குரலில் பேச,



“இடியட்.. இடியட்.. இப்படி பேசக்கூடாதுன்னு உங்கிட்ட பலமுறை சொல்லிட்டேன். இன்னும் நீ இப்படியே பேசினா நான் சித்தார்த்கிட்டயும், விஷால்கிட்டயும் எல்லாத்தையும் சொல்ல வேண்டி வரும், உன் விருப்பம் அதுதான்னா எனக்கு ஒரு பிரச்சினையும் இல்ல..” எனக் கண்டிப்பான குரலில் வந்து விழுந்தன வார்த்தைகள் பவனிடமிருந்து.



“ம்ச்.. பவன் நான் உங்கிட்ட மட்டும் தான் என்னால இப்படி பேச முடியும் உனக்கு புரியுதா.” என சிறு சலிப்பான குரலில் கேட்டவள். “சரி இனி நான் இப்படி பேசல, ஐம் சாரி..” என உடனேத் தன் பேச்சை மாற்றிக் கொண்டாள்.



“சரி விடு.. நானும் அப்படி பேசியிருக்கக் கூடாது சாரி.” என்றவன், “இப்போ நான் எதுக்கு கால் செஞ்சேன்னா நைட் நீ மெடிசின் எடுத்த தானே, இனி கரக்டா ஃபாலோவ் செய்யனும். உன் அலார்ட் மெசேஜ் எனக்கு ஃபார்வேர்டாகி வரக்கூடாது புரியுதா..” என்றான் உண்மையான அன்போடு.



“ம்ம் நைட் எடுத்தேன் பவன், ஆனா எல்லாரும் இருக்கும் போது எப்படி கண்டியூ செய்ய.? யாருக்கும் தெரிஞ்சிட்டா.? பயமா இருக்கு. மாமாவுக்கு தெரிஞ்சா ரொம்பவே உடைஞ்சி போயிடுவாங்க. நான் தப்பு பண்ணிட்டேனோன்னு தோனுது பவன்..” எனக் குற்ற உணர்ச்சி மேலோங்க சின்ன குரலில் கூறினாள் நிரதி.



“ம்ச்.. நிதி ஒரு முடிவு எடுக்குற வரை மட்டும் தான் யோசிக்கனும். எடுத்த பிறகு அந்த யோசனை துளியும் இருக்கக் கூடாது. இருக்குறவரை எப்படி ஹேப்பியா இருக்குறதுன்னு மட்டும் யோசி. யாரையும் கஷ்டப்படுத்தாம உன் வேலையை பார். எப்போ டியூட்டில ஜாயின் பன்ற..” எனப் பேச்சை மாற்ற,



“இன்னும் ஒன் வீக் இருக்கு பவன். நான் இன்னும் வீட்டுல பேசல, மாமா என்ன சொல்வாங்க தெரில, அப்புறம் நான் ஜாபை ரிசைன் பண்ணிடலாம்னு இருக்கேன். எப்படியும் ஒரு ஃபோர் மந்த்ஸ்க்கு அப்புறம் என்னால எதுவும் செய்ய முடியாது. ஆல்மோஸ்ட் ரெஸ்ட்ல தான் இருப்பேன்.. சோ..” என இழுக்கவும், குளியலறைக் கதவு திறக்கவும் சரியாக இருந்தது.



“பவன்.. மாமா வந்துட்டாங்க, நீ சொன்னதைப் பத்தி நான் மாமாக்கிட்ட பேசுறேன், இப்போ வைக்குறேன்..” என வைக்கப் போக,



“ஹேய்.. சித்தார்த் இருக்காரா பக்கத்துல கொடு, நான் விஷ் பண்ணிடறேன்..” எனவும், அவளூம் மறுக்க வழியில்லாமல் கொடுக்க, பவனும் திருமண வாழ்த்துக்களைக் கூறி, நிரதிக்கு சந்தேகம் வராததைப் போல் பேசி வைத்துவிட்டான்.



அவளாக சொல்லும் வரை எதுவும் கேட்கக்கூடாது என உறுதியாக இருந்த சித்தார்த் என்ன விஷயம் என தன்னவளிடம் கேட்கவே இல்லை. சிறு சிறு சீண்டல்களும், தீண்டல்களுமாக இருவரும் கிளம்பி காலை உணவை முடித்து மணியைப் பார்க்க அது பணிரெண்டை நெருங்கியிருந்தது.



வெளியில் அழைத்துச் செல்லலாம் என நினைத்தவன், வெயிலையும், அவள் உடல்நிலையையும் நினைத்து அந்த எண்ணத்தை விட்டான். ஆனால் நிரதிக்கோ வேறு யோசனை இன்னும் சில நிமிடங்களில் மெடிசின் எடுக்க வேண்டும். சித்தார்த்திற்கு தெரியாமல் எப்படி என அங்குமிங்கும் நடக்க, மனைவியின் எண்ணத்தைப் படித்தவன், ஹாலில் இருந்த டிவியை ஆன் செய்துவிட்டு கால்நீட்டிப் படுத்துவிட்டான்.



“அம்மு நான் நியூஸ் பார்த்துட்டு ஒரு ஆப்னவர்ல வரேன், உனக்கு போரடிக்கும் ரூமுக்குப் போ..” என அவளைப் பார்க்காமலே சொல்ல, ‘அப்பாடா’ என ஒரு ஆசுவாசப் பெருமூச்சை விட்டு, வேகமாக அறைக்குள் நுழைந்து கதவைச் சாற்றியிருந்தாள்.



உள்ளே வந்தவள் ‘எத்தனை நாள்களுக்கு இது போல அனைவரையும் ஏமாற்ற முடியும்.?’ என்ற கேள்வியைப் பலமுறை அவனது மனத்திடமே கேட்டிருக்கிறாள். இன்னும் சில நாட்கள், சில மாதங்கள் என மனதை சமாதானம் செய்தாலும், இதெல்லாம் கணவனுக்கு செய்யும் துரோகமாகப் பட்டது.



தவறு செய்துவிட்டோமோ என்ற எண்ணம் சிறு விதையென முளைத்து வேர்விட்டு விருட்சமாக வளர்ந்ததை அவளால் தடுக்க முடியவில்லை.



தன் தந்தையின் குடும்பத்தை பழிவாங்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டவளால் இப்போது தொடர்ந்து அதை தொடர்ந்து செய்ய முடியும் போல தெரியவில்லை.



சித்தார்த்தை வலிக்க வைத்தால் மொத்தக் குடும்பமும் வலியில் துடிக்கும் என நினைத்து தான் அவனுடனான திருமணத்தை ஏற்றுக் கொண்டாள். ஆனால் இப்போதோ அவனுக்கு வலித்தால் அதை விட பலமடங்கு தனக்கு வலிக்கும் என்பதை உணர்வுப் பூர்வமாக உணர்ந்து கொண்டாள். இனி பழிவாங்கும் படலம் என்று ஒன்றுமில்லை. இருக்கும் காலம் தொட்டு அவனோடு மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் ஒரு வாழ்க்கையை வாழ்ந்துவிடூ போய்விட வேண்டும் என மனதிற்குள் உறுதி எடுத்துக் கொண்டாள். ஆனால் அவளது எண்ணத்திற்கு ஆண்டாள் வழி செய்து கொடுப்பாரா என்ன.?

மாத்திரைகளை விழுங்கியவள் தற்போது கணவனைப் பார்க்கும் துணிவின்றி அப்படியே கட்டிலில் விழுந்தாள். அப்போது தான் தன்வீரும், விஷாலும் அவளுக்கு அழைக்கவே இல்லையெனத் தோன்ற, மொபைலைத் தேடி எடுத்து இருவருக்கும் மாற்றி மாற்றி அழைத்துப் பார்த்தால் இருவர் எண்ணுமே பிசி என்று வர, பிறகு பேசிக் கொள்ளலாம் என கண்களை மூடியவளை. இதற்காகத்தான் காத்திருந்தேன் என்பது போல எடுத்துக் கொண்ட மருந்தின் வீரியத்தில் உறக்கம் வந்து அவளைத் தழுவிக் கொண்டு தாலாட்டியது.



இங்கு பெரிய வீட்டில் அழுகையுடன் அமர்ந்திருந்த பவித்ராவை சமாதானம் செய்ய பெரும்பாடாக இருந்தது ரத்னவேலுவிற்கு. வந்ததில் இருந்து எதையும் சொல்லாமல் அழுது கொண்டே இருந்தால் அவரும் தான் என்ன செய்வார்.

உருட்டி, மிரட்டி, கெஞ்சி, மிஞ்சியென பல வழிகளில் கேட்டும் வாயைத் திறக்காமல் அழௌது கொண்டு மட்டுமே இருக்க, அப்போது பார்த்து அவளைத் தேடி ஆண்டாளம்மா வர, பவித்ரா தன் கணவணை முறைத்துப் பார்த்தார்.



“என்ன ஏண்டி முறைக்குற, நான் ஒன்னும் சொல்லல, அக்கா ஏன் வந்தாங்க, எதுக்கு வந்தாங்கன்னு எல்லாம் தெரியாது.. நீயே கேட்டு ஒரு முடிவுக்கு வா.. இந்த அழுமூஞ்சைப் பார்த்து எனக்குத் தலைவலி வந்ததுதான் மிச்சம்..” என மனைவியிடம் பல்லைக் கடித்தவர், அக்காவைப் பார்த்து வரவேற்பாக தலையை ஆட்டினார்.



“என்னாச்சு பவி.. ஏன் முகம் இவ்ளோ சிவந்திருக்கு. வந்ததுல இருந்து ரூமைவிட்டு வெளிய வரவே இல்லையாம். சாப்பிட்டியா இல்லையா.? என்ன பிரச்சினை.? உன் மரௌம எதுவும் சொல்லிட்டாளா.?” எனத் தேவையில்லாமல் வாயை விட,



“இப்போ எதுக்கு தேவையில்லாம என் மருமகள இழுக்குறீங்க. எனக்குப் பிரச்சினை வந்தா என் மருமகளாலர்தான் வரனுமா.? உங்க தம்பியால வராதா.? வயசாச்சேன்னு தான் பேரு.. கொஞ்சம் கூட அதுக்கு தகுந்த மாதிரி நடந்துக்குறட்ஹே இல்ல..” எனக் கத்தவும், அக்காவும் தம்பியும் பவியின் இந்த புதிய பரிமானாத்தில் அதிர்ச்சியடைந்தனர்.



“ரத்னம் நீ என்ன பண்ண.” எனத் தம்பியிடம் விசாரனையை ஆண்டாளம்மா ஆரம்பிக்க, “அக்கா நான் என்ன பண்ணேன், நான் ஒன்னுமெ பண்ணல, அவ தான் என்ன எதுக்குன்னு தெரியாம அழுதுட்டு இருக்கான்னா, நீ வேற எதையாவது கேட்டு என் கோபத்தைக் கிளறாத..” என அவர் தமக்கையிடம் கடுப்படிக்க,



“இப்போ உனக்கு என்ன வேணும், நான் உங்கிட்ட வந்து எனக்கு பிரச்சினைன்னு சொன்னேனா இல்லைதானே உன் வேலையைப் பார்த்துட்டு கிளம்பு..” எனத் தாயிடம் முகத்தில் அடித்தது போல் பேச, இந்தப் பேச்சில் ரத்னவேலிற்கே கோபம் பொத்துக் கொண்டு வந்தது.



இதுவரை மரியாதைக் குறைவாக ஒருவார்த்தை பேசியிராத, மகளின் இந்த உதாசீனப் பேச்சைக் கேட்ட ஆண்டாளம்மாவிற்கு முகமே விழுந்துவிட்டது. ஆனால் ‘இந்தப் பேச்சிற்குப் பின் நிச்சயம் நிரதி இருக்கிறாள் என்று மட்டும் நிச்சயம், அவளை’ எனப் பல்லைக் கடித்தவர், ஒன்றும் பேசாமல் அமைதியாக வெளியேற, அவரை சமார்தானம் செய்யவென பின்னாடியே நகர்ந்த கணவரைப் பார்த்து முறைத்து “இப்போ அவங்களை சமாதானம் செய்யலன்னு யாரும் அழுகல, கீர்த்தியயிக் கூட்டிட்டு வாங்க, உங்கக்கிட்ட நான் கொஞ்சம் பேசனும்..” என்ற மனைவியை குழப்பமாகப் பார்த்தார். இவளௌக்குப் பைத்தியம் தான் பிடித்திருக்கிறது என்று அவர் முடிவே செய்துவிட்டார். ஆனால் வெளியில் சொல்ல முடியாதே, ஏர்கனவே பேயாட்டம் ஆடுகிறாள், இதில் பைத்தியமா என்று கேட்டு அதற்கு காளி அவதாரம் எடுக்கவா..’ என நினைத்தவர் ஒன்றும் பேசாமல் கீர்த்தியை அழைத்து வந்தார்.



உள்ளே வந்தவள் இருவரையும் கேள்வியாகப் பார்க்க, அவள் கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்து, “கீர்த்திமா பெரியம்மா உனக்கு நல்லது மட்டும் தான் செய்வேன்னு உனக்கு நம்பிக்கை இருக்கா.?” எனக் கேட்கவும்,



“என்னப் பெரியம்மா பேச்சு இதெல்லாம். உங்களைத் தவிர வேற யார் எனக்கு நல்லது செஞ்சிட முடியும். என் பேரன்ட்ஸ் விட நீங்க தான் எனக்கு முக்கியம். அவங்க என்னை வளர்த்ததை விட, நீங்கதான் என்னை வளர்த்தீங்க.. அது எல்லோருக்கும் தெரியும். ஆனா இப்போ எதுக்கு இதெல்லாம்” என கேள்வியாகக் கேட்க,

“அது அதுவந்து நான் யாரோட சம்மதமும் இல்லாம, யாருக்கிட்டயும் கேட்காம ஒரு முடிவு எடுத்திருக்கேன்.” என்றவர் குழப்பமான முகத்துடன் அமர்ந்திருந்த கீர்த்தியைப் பார்க்காமல், “உனக்கு மாப்பிள்ளைப் பார்த்திருக்கேன். இன்னும் ஒரு வாரத்துல உனக்கும் அவருக்கும் கல்யாணம் முடிக்கலாம்னு நினைக்கீறேன்..” என அவள் தலையில் குண்டைத் தூக்கிப் போட, கீர்த்தி அதிர்ந்ததைவிட ரத்னவேலுதான் அதிகம் அதிர்ந்தார் என்று சொல்ல வேண்டும்.



“பவி என்ன இது முட்டாள்தனம். உனக்கு பைத்தியம் பிடிச்சிருக்கா..” எனக் கத்த, அவர்கள் இருவருக்கும் வாக்குவாதங்கள் நடக்க, கீர்த்தியோ தான் கேட்ட செய்தி உண்மையா.. அப்போ என் காதல் விஷால் என மனம் அங்கேயே நின்று காற்றை விட வேகமாக துடிக்கத் தொடங்கியது.




 

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,934
அருமை அருமை சகி ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️கீர்த்தி லவர் விஷால் தான் மாப்பிள்ளையா பவி தேர்ந்தெடுத்திருப்பாங்கன்னு நினைக்கிறேன் 😍😍😍😍😍😍
 
Top