• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அன்பும் பண்பும் (02/08/21)

Viba visha

Member
Staff member
Joined
Jul 31, 2021
Messages
90
வணக்கம் நண்பர்களே.. இந்த இனிய நன்னாளில் நீங்களும் எங்களுடன் இணைந்ததில் பெருமகிழ்வு எங்களுக்கு.

அன்பும் பண்பும் என்னும் இப்பகுதியில் நமக்குள்ளாக அன்பினை வெளிப்படுத்துவோம் நாம்..

அன்பு என்ற ஒன்றிலேயே கருணை, காதல், பக்தி என்ற அனைத்தும் அடங்கிவிடுகிறது. இம்மூன்றும் அடங்கிய இடத்தில் பண்பும் சேர்ந்துவிடுகிறது. ஆனால் ஒருவர் மேல் நாம் கொள்ளும் அதீத அன்பு, இன்னொருவரை காயப்படுத்தாது பார்த்துக்கொள்ள வேண்டும் அல்லவா?

கருணை - நம்மைவிட எளியோரை பார்த்து மட்டும் தான் நமக்குள் கருணை பிறக்கிறது. அது சில நேரங்களில் நம்மையும் அறியாது இளக்காரமாக போய்விடுகிறது. அதனால் கருணையின் கருப்பொருளாம் காருண்யத்தை மனதின் மொழியாக கொள்வோம் நாம்.

காதல் - எங்கு தான் இல்லை காதல்? ஆண், பெண் இணைவது மட்டும் தானா காதல்? நண்பர்களுக்குள், பெற்றோர் - பிள்ளைகளுக்குள்.. ஏன்.. நமது கரத்தினில் தவழ்ந்து கொண்டிருக்கும் மொபைல் மீது கூட அதீத காதலுடன் தானே திகழ்கிறோம் நாம்? காதல் என்பது தவறான வார்த்தையில்லை.. ஆனால் அதில் தவறிவிட வாய்ப்புள்ளது. எனவே காதல் படிப்போம்.. கண்ணியத்துடன். ஏனெனில் காதலில்லாத உலகு.. சுகந்தமில்லாத மலராகிவிடும் அல்லவா?

பக்தி - பக்தியாளர்களுக்குள் அதீதமாகவே அன்பும்.. அதன் உட்பிரிவுகளான காதலும், கருணையும் இருக்கிறதென தோன்றுகிறது. இறையை துதிக்கும் பாடல்களை கேட்கும் போது கூட பக்தி பரவசம் வந்து கண்ணீர் ததும்புகிறதே.. அதுவும் அந்த இறை மீது கொண்ட அன்பினால் தானே? பாரதி.. கண்ணனை, காதலனாகவும், காதலியாகவும், குழந்தையாகவும், சத்குருவாகவும் பாவித்து பாட்டெழுதினானே.. அதில் வெறும் பக்தி மட்டுமா தெரிந்தது? அந்த கண்ணன் மேல் அவன் கொண்ட காதலும், சிறுபிள்ளையாய் எடுத்துக் கொஞ்சிடுகையில் தோன்றும் கருணையும், இறுதியில் சத்குருவாக ஏற்று, கண்ணனிடம் தன்னை சரணாகதி அடைந்துவிட்டதும் அதீத அன்பின் பெயரால் தானே?

எனவே நாமும் ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாய் போல, பாரபட்சமின்றி அன்பை விதைப்போம்.. அந்த ஆதவனின் கதிர்களால், தழைத்தோங்கும் நெல் மணியாய், பண்பும் நமக்குள்ளாக பெருகட்டும்.

அன்பு கொள்ளும் இதயம் அகிலத்தையே தனக்குள் அடக்கும் வல்லமை பெற்றது.

எனவே பாரபட்சமின்றி அன்பு செய்வோம்..

அன்பினால் விளையும் பண்பால் உலகை வெல்வோம்.
 
Top