• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Anitha Kumar

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 15, 2024
Messages
21
அத்தியாயம்: 12


புறப்படும் போது இருந்த சந்தோஷம் இப்போது இல்லை.. ஏதோ சூனியம் பிடித்தது போல் தன் கைகளையே வெறித்துப் பார்த்தவளை பேச வைக்கும் முயற்சியில் இறங்கினர் அனைவரும்.. பலன் மட்டும் பூஜ்ஜியம் தான்.. அனைவரையும் சுமந்து கொண்டு அந்த ஜீப் வீட்டின் கேட்டை நோக்கிச் சென்றது.. பிரகாஷ்ஷின் முகத்தில் மட்டும் சிறு கவலை இருந்தது.. கூடத்தில் இவர்களுக்காக குடும்பமே காத்திருந்தது..

உள்ளே வந்த இந்துமதியை ஏற இறங்க பார்த்து அவளின் நலத்தை அறிந்தவன் , இடியென தன் கரத்தை பிரகாஷ்ஷின் கன்னத்தில் இறக்கினான் தரன்.. வலியின் மிகுதியால் கன்னத்தை பிடித்தபடியே, " ஸாரிண்ணா நா கவனமில்லாம..ஆ...‌" மீண்டும் ஒரு அடியை பெற்றான்..

" எதுக்குடா அவள அங்க கூட்டீட்டு போன.. அவளப் பத்தி உனக்கு தெரியும்ல , அவா பயப்படுவான்னு . பின்ன எதுக்கு கூட்டீட்டு போய்..‌ தனியா தண்ணீல விளையாட விட்ட.." என கையை உயர்த்தியவனை தடுத்தது ஹரிணியின் குரல்..

" ஸ்டாப்பிட்.. என்ன பண்ணுறீங்க நீங்க.. என்ன நடந்ததுன்னு கூட விசாரிக்காம எதுக்கு மாட்ட அடிக்குமாதிரி அடிக்குறீங்க.. "

" எங்களுக்குள்ள வராத.. மரியாதையா போய்டு.." கோபமாக..

அவனை விட இவளுக்கு இப்போது கோபம் அதிகமாக வந்தது.. " ஹலோ.. வர மாட்டேன்னு சொன்ன உங்க அத்த மகள கம்பள் பண்ணி கூட்டீட்டு போனது நா.. சோ எனக்கு இந்த விசயத்துல தலயிட உரிம இருக்கு.."

" கூட்டீட்டு போக தெரிஞ்ச உனக்கு ஒழுங்கா பாத்துக்க தெரியலையோ.." நக்கலாக..

" பாத்துக்கிறதுக்கு உங்க அத்த மக என்ன எல்கேஜீ பாப்பா வா.. இடுப்பில தூக்கிகிட்டு திரிய.. கிராமத்து பொண்ணு எல்லாத்துலையும் தைரியமா இருப்பாங்கன்னு கேள்விப் பட்டுருக்கேன்.. ஆனா இங்க.. உங்க அத்த மகளுக்கு எதுக்கெடுத்தாலும் பயம்.. இந்த ஊர் தான இவ இதுக்கு முன்னாடி அங்க போனதே இல்லையாம்மே.. முதல்ல உங்க வேலையெல்லாம் ஒத்தி வச்சுட்டு அவளுக்கு ஊர சுத்தி காட்டி.. தேவையானத எல்லாம் சொல்லிக்குடுங்க.. இப்படி பாலோ பண்ண பாடி கார்ட் போடுறதுக்கு பதிலா.." அவனுக்கு குறையாத நக்கல் குரலில்.

அவளை முறைத்து கொண்டு நின்றவனிடம் இருந்து இழுத்துச் செல்ல.. அவனுடன் நடந்து சென்ற ஹரிணி " கௌதம் தண்ணிக்குள்ள முங்குன அவா நனைஞ்சிருக்கா ஓகே..‌ காப்பாத்த போன நீ ஏன்னடா முழுசா நனையல.." என்றாள் சிந்தனையுடன்..

அதன் பின்தான் அனைவரும் கவனித்தனர் கௌதமின் உச்சந்தலையில் ஈரம் இல்லாமல் இருந்ததை.. அதாவது அவள் விழுந்தது ஐந்தடி ஆழம் கூட இல்லாத பகுதி.." ச்ச.. இதுக்காகவா நாம ஹீரோ மாறி குதிச்சோம்.." என்றிருந்தது கௌதமிற்கு..

" என்ன ஃபீலிங்கா.. வா‌.. நீ ஹீரோல்லாம் கிடையாது ப்பா.." ஹரிணி என கேலி செய்ய அனைவருக்கும் சொல்லாமலேயே புரிந்தது நடந்து என்ன என்பது..

தரன் பிரகாஷ்ஷிடம் ஸாரி கேட்பான் என அவள்‌ எதிர்பார்க்க.. ஏதும் சொல்லாமல் சென்று விட்டான் தரன்..

" ஹரிணி.. நீ.. எனக்காக.. எங்கண்ணன்ட்ட.. பேசி... " பிரகாஷ் அவளின் கைகளை பிடித்தபடி ஆக்ஷன் கொடுக்க..

" இப்ப நீ எதுக்கு மணிரத்னம் படத்த இங்க ஓட்டுர.." கௌதம்..

" அண்ணா.. அவளுக்கு.. எம்மேல எவ்வளவு.. அக்கற.. பாத்தீங்களா.. எங்க ரெண்டு பேத்துக்குள்ள ஏதோ இருக்குது.. ஹரிணி.. ஹரிணி.. " பிரகாஷ்..

" இது வரைக்கும் எதுவுமில்ல இப்ப இருக்கும்.. " என பவி‌ தேடி கண்டுபிடித்து கட்டையை எடுத்து வந்து இடையில் வைத்தாள்..

" ஏய் என்ன பழக்கம் பெரியவங்கள அடிக்கப் போறது.." கௌதம்..

" ஹாங்.. அப்படி சொல்லுண்ணா.. பச்ச புள்ள மேல கை வைக்கப் பாக்குறா.."

" அவன் உனக்கு அண்ணன்.. சோ நான் தா அவன அடிக்கனும்.. ஏன்னா எனக்கு தம்பி அவன்.." என கட்டையை வாங்கிக்கொண்டவன்..

"மொளைக்கவே இல்ல.. அதுக்குள்ள உனக்கு.. இந்த பேச்சு.. ஏய்.. நில்லுடா நின்னு அடிவாங்கீட்டு போடா.. டேய்.."
இருவரின் சேட்டையில் இந்து உட்பட அனைவரும் சிரித்தனர்..

ஹரிணி , நாச்சியம்மாளிடம் " கிராணி கோயில் தா பெருசா இருக்கே அப்பறம் ஏன் ஊருக்குள்ள திருவிழா வைக்குறா‌ங்க.. காட்டுலேயே வச்சிருக்கலாம்ல.. "

" ஆம்பி பூத்த வீடு உருப்படாதுங்கிற மாறி.. மனுசன் காட்டுக்கு போனா என்ன ஆறது.. காடே இல்லாம போய்டும்.. அதா சாமியக் கொண்டாந்து இங்க வச்சு விழா நடத்துறாங்க.. "

" என்ன என்ன பண்ணுவாங்க அப்பத்தா திருவிழால்ல.. " பவி..

பேத்தியின் கன்னத்தை வருடியவர்.. " ஆத்தா பேரு சேனையம்மன் இல்லடா கண்ணா சோலையம்மன்.. ஏழு ஊருல இருக்க நம்மல மாதிரி பெரிய குடும்பம் ஏழும் சேந்து தான் இந்த திருவிழாவ வருஷா வருஷம் ஒரு ஒரு ஊர்லையும் நடத்துவாங்க.. இந்த வருஷம் நம்ம ஊருல நடக்கப் போது.. உன்னோட பெரியப்பன் தலைமைல.. முதல்நாள் அந்த ஏழு குடும்பத்து ஆளுகளும் அவங்களோட ஆண் வாரிசுகளும் சேந்து, அம்மனை அலங்காரம் பண்ணி பூப்பல்லாக்குல தூக்கீட்டு வந்து ஊர் மண்டபத்துல வப்பாங்க.. ரெண்டாது நாளு சனங்க எல்லாரும் பொங்க வச்சு கொண்டாடுவாங்க.. மூனாது நாளு பூ மிதி திருவிழா.. நேந்துக்கிட்டு தீ சட்டி எடுப்பாங்க..

நாலாது நாளு கல்யாணம் ஆகாத பொண்ணுங்க குழந்த இல்லாதவங்க இப்படி ஏதாவது குறை இருக்குறவங்க வேண்டீட்டு மாவிளக்கு , மண்சோறு , கரும்புத் தொட்டில் அப்படி வேண்டுதல செய்வாங்க.. கடைசி நாளு அம்மன தேர்ல நிறுத்தி , தேர வடம் பிடிச்சு இழுத்து , ஏழு ஊரு சுத்தீட்டு திரும்பவும் சோலையிலேயே வச்சிடுவாங்க.. அவ்வளவு தான்.. கடைசி நாளுக்கு முன்னாடி இளசுங்கல்லாம் சேந்து போட்டி நடத்துவாங்க.. கரகாட்டம், ஒயிலாட்டம், பொம்மலாட்டம் , ராக்கூத்து இப்படி எல்லா ராத்திரியும் போடுவாங்க.. ஊரே ஒன்னு கூடிய சந்தோஷமா இருக்கும்.." பெருமிதத்துடன்.

" ஓ.. நா இப்பத்தா இத எல்லாம் பாக்குறேன்.. ஐ ஆம் சோ எஸ்ஸைட்டடு.." பவி..

" கொளத்துக்கு அழகு தாமர ; பொண்ணுக்கு அழகு பொடவ.. இந்த ஆப்பத்தாக்காக இந்த கொலா உடுப்பெல்லாம் விட்டுட்டு , திருவிழா முடிற வர தாவணி கட்டிப்பியா கண்ணு.. " என்றார் ஏக்கமாக..

" ம்.." பவி சம்மதமாக..

" டோன்ட் வரி கிராணி.. நாளைக்கே போய் எல்லாத்தையும் வாங்கீட்டு வந்துடுவோம்.. கௌதம் மார்னிங் எய்ட் ஓ கிளாக் ரெடியா இரு.. நாம சாப்பிங் போலாம்.." ஹரிணி..

" என்னது எட்டு மணியா.. அப்பத்தா சொன்னது உன்ன இல்ல.. அவளுக்கு அம்மா எடுத்து வச்சுருக்காங்க.. பவி இருக்குள்ள.. " கௌதம் பதட்டத்துடன்..

" அப்ப எனக்கு.." ஹரிணி சிறு வருத்தத்துடன்..

" நீயும் என்னோட பொண்ணு மாறி தான்ம்மா.. உனக்கு வேண்டியத நாளைக்கு வாங்கிக்க.. டேய் அவள கண்டிப்பா கூட்டீட்டு போற.." நங்கை உத்தரவிட்டார் கௌதமிற்கு..

காலை பத்து மணி ஆகியும் கௌதம் ரூமை விட்டு வெளியே வரவே இல்லை.. ஹரிணியும் பவித்ராவும் சேர்ந்து தண்ணீர் ஊற்றி கூடப் பார்த்து விட்டனர்.. ஆனாலும் எழவில்லை.. அதனால் அவர்கள் பிரகாஷ்ஷை அழைத்துக்கொண்டு சென்றனர்.. அவர்கள் சென்றதை உறுதி செய்து கொண்டு கீழே வந்தான்.. ஏன் என்று கேட்டவர்களிடம்..

" இவளுக கூட போறதும் அம்மிக்கல்லுகுள்ள தலையை விடுறதும் ஒன்னுதான்.. ஒரு பொண்ணு போனாலே ஒரு டிரெஸ் எடுக்க கெறஞ்சது மூனுமணி நேரம் ஆக்குவாங்க.. நாலு பேர் சேர்ந்தா.. ப்பா.. நெனச்சுப் பாக்கவே முடியலையே.. " என்றுவிட்டான் அவன்...

இந்து ஜெர்கின்னை அவனிடம் நீட்டி " தேங்ஸ்.." என்றாள்..

" ஏய்.. நீ போலயா..." என்க இல்லை என தலையை அசைத்தாள்..

" இதுவே உனக்கு வழக்கமாகிடுச்சில்ல.. இது ரெண்டாவது டைம்.. என்னோட ஜெர்கின்ன நீ போடுறதது.. அடுத்து கவனமா இரு.. உன்னைய காப்பாத்த நா கூடவே இருக்க முடியாதுல்ல. " என வாங்கிக் கொண்டு கூற..

அதிர்ந்து பார்த்தவள், " அப்ப நாம இதுக்கு முன்னாடி பெங்களூர்ல பாத்துருக்கோம்.. இல்லையா.. அப்புறம் ஏன் என்ன தெரியாத மாறி நடந்துக்கிட்டீங்க.. என்ன அவாட் பண்ணாம இருந்தா இப்படி ஆகிருக்காதுல்ல.." என சிராய்ப்பு ஏற்பட்ட கையைக் காட்டினாள்..

அவளின் முகம் பார்த்தவன் குற்ற உணர்ச்சியுடன், " ஸாரி.. நா ஏ அப்படி நடந்துக்கிட்டேன்னா.."

" உங்க விளக்கம் எனக்கு தேவை இல்ல.. அப்புறம் எனக்கு உங்கள பிடிச்சுருக்கு.. இன்னைக்கு நேத்து இல்ல மூனு வருஷமா உங்களத்தா மனசுல நா நினைச்சுட்டு இருக்கேன்.. ஐ லவ் யூ.." என ஒப்பித்தவள் பதிலை எதிர்பாராது ஓடி விட்டாள்..

திருதிருவென முழித்தவன், " இவா பயந்தாங்கொள்ளி அப்படீன்னு தான பிரகாஷ் சொன்னான்.. தப்பா சொல்லிட்டான் போல.. ஹீம்.. எந்த புத்துக்குள்ள எந்த பாம்போ யாருக்குத் தெரியும்.. " என புலம்பியவன் மனதில் சிறு கலக்கமும் ஏற்பட்டது..

மருதாணி இலையை அரைத்து தன் கை விரல்களில் அழகாக வைத்துக் கொண்டு இருந்தனர் மங்கையர்கள்.. கௌதம், ரைஸ் மில்லிற்கு சென்றுவிட்டு இப்போது தான் வீடு வருகிறான்.. வந்தவன் கண்களுக்கு முதலில் தரிசனம் தந்தது , சோஃபாவில் கிழிந்த காகிதம் போல் கசங்கியவாறு படுத்திருந்த பிரகாஷ்..

என் சோக கதைய கேளு தாய்க்குலமே
ஆமாம் தாய்க்குலமே
அத கேட்டாத்தான் தாங்காதம்மா உங்க மனமே
ஆமாம் உங்க மனமே

என பாடியவனின் அருகில் அமர்ந்து, " டேய்.. அந்த தாய்க்குலத்தால தா உனக்கு இந்த நிலம. "

" ஆமால்ல.. அண்ணே.. ஏந் தெய்வமே.. ஒரு வார்த்த.. இல்ல கண் ஜாட காட்டிருந்தா கூட நா இப்படி சிக்கீருக்க மாட்டேன்ல்ல.. ஏண்ணே இந்த கொலவெறி.."

" அதுவாடா.. நேத்து நீ பண்ணுன அலும்பலுக்கு இதுதான் தண்டன.."

" ஐயோ.. புரியலையே.. " என தலையைச் சொறிந்தபடி கேட்டவனுக்கு..

" நேத்து தான சொன்ன ஹரிணிக்கு ஒம்மேல அக்கறன்னு.. அதுக்குத்தான்.. புதுசால்லாம் ஒன்னுமில்ல ஆம்பள படத்துல விஷால் சொல்லீருப்பாரே.. பாஸ்தா, பழையசோறு காமினேஷன் அதான்.. ஹரிணி மாறி சிட்டி கேர்ள்லாம் பாஸ்தா மாறி மெல்லவும் முடியாது , முழுங்கவும் முடியாது.. அதாவது கழட்டிவிடவும் முடியாது , சேந்து வாழ்வும் முடியாது.. சோ நீ ஆசைப் பட்டு ஏமாந்துடக்கூடாதுன்னு தா அண்ணே உனக்கு ப்ராட்டிக்கல் வச்சு புரியவச்சேன்.. அண்ணனோட நல்ல எண்ணத்த நீ பாராட்டனும்.. "

" அதாவது உங்க ஃப்ரெண்டுக்கு நா ரூட் விட்டது உங்களுக்கு பிடிக்கல.. அதுனால இப்படி மாட்டி விட்டு வேடிக்கைப் பாத்தீங்க.. அப்படித்தான.."

" கககபோ..."

"எனக்குப் புரிஞ்சதுண்ணே.. ஆனா உங்க பின்னாடி நிக்குறவங்களுக்கு புரியலன்னு நெனைக்குறேன்.. அப்பத்துல இருந்து மொறச்சுட்டே இருக்காங்க.. என்னனு கேளுண்ணே.." என்க..

திரும்பினால் ஹரிணி கோபமாக நின்றுக்கொண்டு இருந்தாள். " மலக்கொரங்கே எவ்வளவு திமிரு உனக்கு.. காலைல என்ன டென்ஷன் படுத்துனதுமில்லாம இப்ப நா பாஸ்தா வா.. உந் தம்பிய காப்பாத்துரீயோ.. நில்லுடா.. டேய்.." என கூறியவாறே தன் கைகளில் இட்ட மருதாணியை அவனின் சட்டையில் தடவச் சென்றவளிடமிருந்து தப்பித்து ஓட.. அவனை பிடிக்க முயன்றாள்.. வாசலுக்கு சென்றவனை பின்தொடர்ந்து சென்றவள் எதிலோ இடித்து கீழே விழுந்தது விட்டாள் .

மறுபடியுமா..

" ஏய் உனக்கு கண்ணு தெரியுமா இல்லையா.. எப்பப் பாத்தாலும் ஏதுலயாவது மோதிகிட்டே இருக்க " என தூணில் மோதி விழுந்தவளைப் பார்த்துக் கேட்டான் ரிஷி தரன்..

" எனக்கு கண்ணு நல்லாத்தான் தெரியுது.. கீழ விழுந்தவங்கள தூக்கி விடனும் அப்படீங்கிற மனிதாபிமானம் தான் உங்க கிட்ட இல்ல.." என்றவள் தட்டுத்தடுமாறி எழுந்து நின்றாள்..

" அதெல்லாம் இருக்கு அத நா மனுசங்க கிட்ட காட்டிக்கிறேன்.." நக்கலாக..

" இடியட்..." என கூறிச் சென்றவளை சொடக்கிட்டு அழைத்தான் அவன்..

" சட்டைல உன்னோட மருதாணி கற பட்டுருச்சி.. அத தொவச்சி கொடு.." அதிகாரமாக சொன்வனை கோபமாக திரும்பி பார்த்தாள்..

'நா அவெ பக்கத்துல கூட போகல.. கறங்கிறான்.. ' எங்கே கறை என தேட.. மிக மிக சிறிய அளவே பட்டிருந்தது.. அவள் எழும் போது கைகளை உதறியதால் சட்டையில் தெரித்திருக்கும் போலும்..

" அதாவது நா உங்க சட்டைய தொவச்சி , காய வச்சு , அயன்‌ பண்ணித்தரனும் . அப்படித்தான.." அவனை நெருங்கி நடந்தவாறே கேட்க..

" ம்.. கஞ்சி போட்டு அயன் பண்ணித் தந்தா இன்னும் நல்லாருக்கும்.. " அவளிடம் வம்பிலுக்க வேண்டும் என்றே கூறினான்..

" நா முடியாதுன்னா என்ன பண்ணுவீங்க.. "

" என்ன பண்ணுவேன்னா.... ஏய்.. ஏய்.." அவனின் வெள்ளைச் சட்டையில் தன் கை அச்சை மருதாணியால் பதித்துவிட்டு ஓடிச் சென்றவளின் மீது கோபம் கொள்ளாமல் உதடுகளில் உறைந்த சிறு புன்னகையுடன் பார்த்தான்..

தப்பிவிட வேண்டும் என வேகமாகச் சென்றவள் இரண்டு அடியெடுத்து வைத்ததும் நின்று விட்டாள்.. கீழே குனிந்து தன் லாங் ஸ்கேட்டை பார்த்தவளின் முகம் அஷ்டகோணமாக மாறியது..

அவனின் மென்னகை இப்போது சிரிப்பாக மாறியது.. அதே புன்னகையுடன்.." கால் தரைல படாம பறந்துகிட்டே திரிஞ்சா இப்படித்தா ஆகும்.. " ஸ்கேட்டை சுட்டிக்காட்டி சத்தமாகவே சிரித்தான்..

நாளை கோவிலுக்குச் செல்வதால் மஞ்சளை ஊறவைத்து அரைத்து சிறிய கின்னத்தில் வைத்திருந்தனர்.. தப்பித்து ஓடுகிறேன் என்று அதை தட்டிவிட்டதால் நீல நிற ஸ்கேட் இப்போது மஞ்சள் கலவையானது..

ஏழு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது அவன் சென்னையை விட்டு இங்கு வந்து.. தந்தையின் விபத்து தங்கையின் நிலை என அவனை வாட்டி வதைக்க பல நிகழ்வுகள் நடந்தேறியதால் முகம் எப்போதும் இறுக்கமாகவே இருக்கும்.. அவன் சத்தமாக சிரித்து பார்த்ததே இல்லை எனலாம்.. வீட்டினர் அனைவரும் அவனின் சிரிப்பில் தங்களை மறந்து பார்த்துக் கொண்டு இருந்தனர்..
 
Top