• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அரவனைப் பாயசம்

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Joined
Jul 30, 2021
Messages
566
செய்ய தேவையான பொருட்கள்


images - 2021-08-01T204334.387.jpeg


பச்சரிசி ஒரு கப்
பொடித்த வெல்லம் 3கப்
நெய்யில் வறுத்த தேங்காய் துண்டுகள் சிறிதளவு
சுக்குப்பொடி சிறிதளவு
ஜாதிக்காய் பொடி சிறிதளவு
நன்கு பழுத்த கற்பூரவல்லி அல்லது பூவன் வாழைப்பழம் 2 nos ( optional)
நெய் ஒரு கப்

செய்முறை
பச்சரிசியை பிரஷர் குக்கரில் அரை வேக்காடு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து வெல்லத்தை நன்கு கரைத்து வடிகட்டவும் அடி மணல் நீக்கியபின் மேலும் ஒரு கப் நீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்
வெல்லம் இருக தொடங்கும்போது
வேகவைத்த அரிசியையும் சேர்த்து கைவிடாமல் கிளறவும் அவ்வப்போது சிறிதளவு நெய் சேர்த்துக் கொள்ளவும்
ஓரங்கள் ஒட்டாமல் வரும்போது அடுப்பை நிறுத்திவிட்டு வறுத்த தேங்காய் சுக்குப்பொடி ஜாதிக்காய் பொடி ஆகியவற்றை சேர்த்து கிளறி இறக்கவும் ஓரளவு ஆறியபின் மிதமான சூட்டில் இருக்கும்போது அல்லது சாப்பிட துவங்கும் நேரத்திற்கு முன்பாக வாழைப்பழங்களை பொடிப் பொடியாக கட் செய்து தூவி
பரிமாறவும் சுவையான அரவணைப் பாயசம் தயார்
 
Top