• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அருள்மொழி காதலி 'ஷர்மி' - செம்புனலாய் கலந்தவனே

Dharsini

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 3, 2021
Messages
20
தாய் சேய் அன்பையும், ஏக்கத்தையும்,பாசத்தையும் அழகாய் விவரித்தவிதம் அருமை..கனவுதான் பயங்கரமா இருந்துச்சு..வரு அண்ட் ஆதி க்யூட்..வெற்றி பெற வாழ்த்துக்கள் சிஸ்..
 

அருள்மொழி காதலி

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
22
தாய் சேய் அன்பையும், ஏக்கத்தையும்,பாசத்தையும் அழகாய் விவரித்தவிதம் அருமை..கனவுதான் பயங்கரமா இருந்துச்சு..வரு அண்ட் ஆதி க்யூட்..வெற்றி பெற வாழ்த்துக்கள் சிஸ்..
Thank you so much sis 💝
 

bjayaprabha11

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 8, 2021
Messages
1
செம்புனலாய் கலந்தவனே


எங்கும் யாவும் உறங்கிவிட
அவனின் கண்களுக்கு மட்டும் உறக்கமே இல்லை... விடிய விடிய கண் பதித்திருப்பான் வீடியோ காலில்.
கண் இமைத்தாலும் மறைந்து விடுவாளோ எனும் பயத்திலே கண் மூடாது அமர்ந்திருப்பான் அவன். யார் என்ன கூறிடுனும் அவனுக்கு கவலை இல்லை.. அவளின்றி அவனில்லை. ஆனால் அவள் தான் அருகிலில்லை.. வந்துவிடு என்று அவன் கதறாத நாட்களில்லை. அவன் கதறலை சமாதானமாக்கி முத்தமொன்றை பறக்கவிட்டு அவனை சமாதானப் படுத்துவதில் கை தேர்ந்தவள் அவள்.
இமை மூடாது விழித்திருப்பேன் என்று அடம் பிடிப்பவனுக்கு அழகிய மைவிழிகளால் முறைப்பை காட்டி உள்ளுக்குள்ளே ரசிக்கும் கள்ளி அவள். அடம்பிடித்து அழுது முடித்து
கண்கள் மூடி அவனறியாது நித்திரை தேடும் அவனை அந்த குழந்தை முகத்தை விழியகலாது பார்க்கும் பைத்தியகாரி அவள்...
அன்றும் அங்கனமே தொலைதூரம் இருவரையும் படுத்தி எடுக்க இருவரும் இணைந்தனர் அந்த வீடியோ காலில்...
அந்த இருவர் தான் வருணா, ஆதித்யா

வருமா... இன்னைக்கு ஏன் லேட்... எவ்ளோ நேரம் உங்களுக்காக வெயிட் பண்ணேன் தெரியுமா? என கோவித்து கொண்டவனிடத்தில்


என்ன ஆது... வந்துதும் கோச்சுக்கிறீங்க... வேலை அதிகம் பா அதான் டைமுக்கு வரமுடியலடாமா...

நேர்ல தான் பார்க்க முடியல.. சரி இருக்கிற ஒரே வழி இப்படி தான்..இதுலயாச்சும் பேசலாம்னு பார்த்தா லேட்டா வந்ததும் இல்லாம இப்படி வேலைனு காரணம் வேற சொல்லுறீங்க

உண்மையை தானே டா சொன்னேன்.

நான் பொய்னு சொன்னேனா?

ஙேஙே என விழித்தவளை பார்த்து சிரிப்பு வந்தாலும் அடக்கி கொண்டான் அந்த கள்வன்‌

சாரிடாமா என்று அவளே இறங்கி மன்னிப்பு கேட்கவும்

சரி சரி.. சாரிலாம் வேணாம்.. சாக்கி வாங்கி தாங்க

இவ்ளோ வளந்துட்ட இன்னுமா உனக்கு சாக்கி கேட்குது ?


என்ன அப்படி பெருசா வளர்ந்துட்டேன்.இப்போ கூட என் அம்மாவுக்கு நான் குட்டி பாப்பா தான் தெரியுமா 🥱

ஆங்... தெரியுமே ரொம்ப நல்லா தெரியுமே என்று அவளும் மென்னகை சூடியே பதில் கூற அவன் முகமும் பொய்க்கோவம் மறந்து புன்னகையில் ஜொலித்தது.

சாப்பிட்டயா என்று அவள் வினவ
வேலை முடிந்ததா என்று அவனும் வினவ. இருவரின் வினாக்களும் ஒரே நேரத்தில் ஒரே ஸ்ருதியில் ஒலித்தது. இருவரும் மீண்டும் புன்னகைத்தனர். இது இருவருக்குள்ளும் அடிக்கடி நடப்பதுவே.. இருவரும் மற்றவரின் முகத்தில் புன்னகை ஒளி வீசுவதை மனதில் சேமித்து கொள்ள ஆதித்யாவோ மறுநாள் அவளை காணும் வரையில் அதையே நினைத்து தன் ஏக்கத்தை தீர்ப்பான்.

இருவரும் இன்றும் ஒன்றாக கேள்வி கேட்டதை நினைத்து சிரித்துகொண்டிருக்க வருணாவே நீ சொல்லு ஆதி... சாப்டியா ?
இன்னைக்கு என்னென்ன பண்ணின? எப்படி நாள் போச்சுது என கேட்க

அவனும்.... அதை ஏன் கேட்கிற வரு.. தினமும் போல டிவி பார்த்தேன். சாப்டேன். தூங்குனேன். அவ்ளோ தான். செம போரிங் 😪 வந்து உன்கூடவே என்னையும் கூட்டிட்டு போயேன்..நீ இல்லாம ரொம்ப கஷ்டமா இருக்கு.. சாப்பாடு ஊட்ட கூட ஆளில்லை எனக்கு .ப்ளீஸ்.... கூட்டிட்டு போயிடு இங்கே இருந்து... இங்க இருக்கவே பிடிக்கல எனக்கு..... என அவளில்லா பிரிவினை கூற அது அவளுக்கும் புரிய அவளும் என்ன செய்வாள். அவன் கேட்டதும் சென்று அழைத்து வர இருவரும் என்ன கோயம்புத்தூரிலும் ஊட்டியிலுமா இருக்கின்றனர்‌. அவன் ஊட்டியிலும் அவள் ஜெர்மனியிலும் அல்லவா தங்கள் வாழ்நாளை கடத்துகின்றனர்.
இருவரும் தங்கள் நாட்களை எண்ணுகின்றனர். ஆம் அவள் ஊட்டி வந்து சேர எத்தனை நாட்கள் என்பதை இருவரும் ஒருநாள் தவறாது எண்ணிவிடுவர். உண்பதை மறந்தாலும் கூட இதனை மறப்பதில்லை. அவ்வளவு நெருக்கம் இருவருக்கும்...இருவருக்குள்ளுமே ஏக்கம்.

பின் அவளும் அன்றைய நாளின் நடப்பினை அவனுக்கு கூற அவனோ அவள் பாதி கூறுமுன்னே உறங்கியிருந்தான். கேமரா வழியே தெரிந்த அவனின் முகத்தை வருடியவள் அவன் கேசத்தினை வருடினாள். அவள் மென்விரல்கள் கண்ணாடித்திரையை தொட்ட நொடி அவன் உதடுகள் உரைத்தது மிஸ் யூ வருமா ☺️

மிஸ் யூ டூ டா கண்ணா என்றவள் அழைப்பை அணைத்து விட்டு தன் வேலையை பார்க்க சென்றாள். மனதிலோ மனபாரம் இன்னும் ஏறியிருந்தது‌. ஏன் தான் இந்த வாழ்க்கை என சலித்து கொண்டது.
குடும்பம் குடும்பம் என ஓடியவள் மறந்து போனது தான் இந்த ஆதித்யா... வருமானம், செலவு , கட்டுப்பாடு என ஓடிக்கொண்டிருந்த வாழ்க்கையில் இலவச இணைப்பாக வந்தவன் தான் ஆதித்யா. அவன் வந்த மூன்று வருடத்திலேயே ஆன்சைட் செல்ல கம்பெனி அறிவித்து விட அவளும் குடும்பம் வருமானம் என‌ நினைத்து கடல்தாண்டி மலைகள் தாண்டி வான்வெளி ஊர்தியிலே தன்‌பயணமதை மேற்கொண்டாள்.
மூன்று வருட பிணைப்பாயினும் இருவருக்குமான நெருக்கம் அந்த பிரிவிலே தெரிந்தது. அவள் செல்கிறாள் என்று அவன் அறிய வில்லை... ஆயினும் விடாமல் அழுதான் அவன். நாட்கள் கடந்திட வருடங்களும் ஓடின... தினமும் வீடியோ கால் இருந்திடும்‌. வீடியோ காலில்லே தங்கள் நெருக்கத்தை இன்னும் அதிகரித்து விட்டிருந்தனர் இருவரும்.
ஆதியின் நினைவிலே இருந்தவளு‌க்கு குற்றவுணர்ச்சியும் உயிரை கொல்லாமல் கொன்றது. யாரும் செய்ய தவிர்க்கும் செயலதனை அவள் செய்திருக்கிறாள். யார் ஏற்றுக்கொண்டாலும் அவளது மனமே அதனை ஏற்றுகொள்ளாது. இந்நினைவிலே உழன்றவளை வேலை இழுத்து கொள்ள மீண்டும் வேலையென ஓடினாள்.

இங்கோ ஏதுமறியாது அயர்ந்து உறங்கி கொண்டிருந்தவன் திடீரென நினைவுக்கு ஏதும் வந்ததுவோ உறக்கத்திலிருந்து விழித்தவன் தன்‌முன்னே பார்க்க மொபைல் ஸ்டாண்டில் மொபைல் இருக்க அழைப்போ துண்டிக்கபட்டிருந்தது.

போ வரு... உனக்கு என்‌மேலே பாசமே இல்ல..என குழந்தைதனமாக கோபித்து கொண்டு வாட்சப்பில் சில ஆடியோக்களையும் அனுப்பிவிட்டான்.
அனுப்பிவிட்டது மட்டுமல்லாது அவளது எண்ணையும் ப்ளாக் செய்திருந்தான் அவன் ஆதித்யன்.
அதை கண்டதும் தான் அவளுக்கு கண்கள் கண்ணீருடன் போரிட்டது... என்ன செய்வதென்று அறியாது அலுவலகத்தில் அரை நாள் விடுப்பு எடுத்து தன் வீட்டிற்குள் சென்றாள். வீட்டிற்குள் வந்ததும் புதுவித தெம்பு கிடைத்தது அவளுக்கு. அறை முழுவதும் ஆதித்யனின் புகைபடங்கள் முற்றிலும் நிறைந்திருந்தது. தவழும் வயது முதல் இதுவரையிலான அனைத்து படங்களும் வரிசை கட்டிருந்தது அந்த சுவரில். சுற்றிலும் திரும்பி புகைபடங்களை பார்த்தவள் மனதும் உள்ளமும் புதுபொலிவு பெற அவனது புகைப்படத்தையே வருடியவள்
அவனை கண்ட நாட்களுக்கு தன் நினைவுகளோடு பயணித்தாள்.


அந்த நாளில்
அந்தி நேரம்
உன்னை பார்த்தேன் கண்ணம்மா...
அந்த பார்வை ஒன்றே போதும்
என்ன வேண்டும் என் கண்ணா....




கண்களாலே காதல் வளர்த்து பெற்றோரை எதிர்த்து நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்து இல்லற வாழ்வில் அடியெடுத்து வைத்தவர்கள் பிரகாஷ், வருணா.
பெற்றோரை பிரிந்தாலும் காதல் கரம்பிடித்ததை எண்ணி இருவருக்கும் அளவில்லா ஆனந்தம். ஆனந்தத்தோடே தங்கள் வாழ்வின் அடுத்தடுத்த கட்டங்களுக்கு சென்றனர். இல்லறமும் நல்லறமாய் அரங்கேற இருவரும் அந்த நாட்களில் சொர்க்கத்தையே அனுபவித்து வந்தனர் இனி வரும் நாட்கள் நரகத்தை காட்டப்போவதை அறியாமல்.


இருவரின் காதலின் பரிசாய் பிரகாஷின் உயிர் அவள் உதிரமதில் உதிக்க இருவருக்கும் அளவில்லா பேரின்பம்.

ஆகாயமே கைக்கு எட்டிய வண்ணம் மகிழ்வாய் மிதப்பாய் இருந்தனர் இருவரும். இருவரின்‌ பெற்றோரையும் தொடர்பு கொள்ள முயற்சிக்க பலன் என்னமோ பூஜ்யம் தான். ஆனால் அதை நினைத்து கவலை கொள்ளும் நிலையில் அவர்கள் இல்லை.
நாட்கள் மாதங்களாய் முன்னேற
வருணாவின் வயிறும் பெரிதாக வளர்ந்தது. அடிக்கடி தன் வயிற்றை
கண்டு தானே பூரித்து கொள்வாள் வருணா. தந்தையின்‌ பேச்சும் தாயின் வருடலும் உள்ளிருக்கும் உயிருக்கும் உற்சாகமூட்ட உள்ளிருந்த உயிரும் கைகால் முளைந்த பறவையாய் பறக்க தயாராகி வெளிவந்த வேளையில் தாங்கி கொள்ள கைகளில்லை.... தாயோ மருந்தின் வீரியத்தில் மயக்கத்திலிருக்க செவிலியரின் கையால் சுத்தம் செய்யப்பட்டு தாயின் கைவளைவில் படுத்திருந்தது அந்த இளஞ்சிட்டு.
ஆம் தந்தை உயிர்விட தனயனாய் உதித்திருந்தான் ஆதித்யன்.


கணவனை இழந்த வருணாவிற்கு யாதுமாகி போனான் ஆதி. ஆதிக்கு தாயும் தந்தையும் உறவுகள் யாவும் வருவே...
அழகான கூண்டுக்குள்ளே இருவரும் இணைந்து அன்பாய் வாழக்கை புத்தகம் எழுதிட அவர்களுடன் இணைந்து கொண்டனர் வருணாவின் தாயும் தந்தையும்.
அன்று காலையில் வீட்டு அழைப்பு மணி ஒலிக்க ஆதியை வீட்டு சோபாவில் படுக்கவைத்து விட்டு
கதவை திறந்தவளுக்கு ஆனந்த அதிர்ச்சி. அங்கே அவளும் தாயும் தந்தையும்.... வீட்டிற்குள்ளே அழைக்கவும் மறந்து அவள் அதிர்ச்சியில் உறைந்திருக்க அவர்களும் அதையாவும் மறந்து

யம்மாடி வருணா.... எங்களை மன்னிச்சிடு மா😐 நீ காதலிச்சது... எங்களை மீறி கல்யாணம் பண்ணதுலாம் மனசை ரொம்ப காயப்படுத்திடுச்சு. அதனால தான் உன்கிட்ட பேசாமலே இருந்திட்டோம்.
மன்னிச்சிடுமா.. என்று பெற்றோர் மன்னிப்பை யாசிக்க அவர்களின் மன்னிப்பில் கரைந்தவள் வீட்டினுள்ளே அழைத்து வந்தாள்.
சோபாவில் படுத்திருந்த பேரனை கண்டது முதியவர் இருவருக்கும் பயணக் களைப்பு கூட களைந்து போயிற்று. அத்தனை ஆனந்தம்.
பிரகாஷின் மரணம் ஏற்கனவே அறிந்திருந்ததால் அதைகுறித்து எதுவும் கேட்கவில்லை.
முதலில் அவர்களிடம் முரண்டு பிடித்த ஆதியும் பின்வரும் நாட்களில் அவர்களுடன் ஒன்றிவிட ஆதி, வரு , வருவின் பெற்றோர் என திங்கள்களும் வேகமாய் கடந்தது.
இவர்களின் பாசமழையும்
அன்பு அருவியும் எல்லையில்லா கடலாய் பரந்து விரிந்திட அந்நேரம்,
வருணாவிற்கு கடல்தாண்டிய வேலைக்கான கடிதம் வந்து சேரந்தது. அழுகையும் ஆர்பாட்டமுமாக ஜெர்மனி வந்து சேர்ந்தாள் இளம்காரிகையவள்...
நினைவுகளின் பிடியில் இருந்தவளுக்கு மீண்டும் அழைப்பே
இந்தியாவில் இருந்து........
இந்தியாவில் அந்நேரம் காலையாக இருக்க அழைப்பை ஏற்றவள் கண்டது
எட்டு வயதான ஆதித்யாவையே....
அழுகை நிறைந்த விழிகளுடன்
சிவந்து போன வதனத்துடன் அவனிருக்க வருவிற்கும் கண்கள் பனித்தது.

என்னடா கண்ணா... ஏன்‌ அழுதிருக்கீங்க

வருமா... இங்க வந்திடேன்.. எனக்கு இங்க தனியா இருக்கிற‌ மாதிரி இருக்கு. தாத்தாவும் பாட்டியும் ஏதேதோ பேசுறாங்க... நான் இருக்கிறதுனால தான் நீ இப்படி கஷ்டபடுறியாம். நான் இல்லனா நல்லா இருப்பியாம். அப்பா மாதிரியே என்னையும் செத்து போ னு கூட சொன்னாங்க.... என்றவன் கேவிகேவி அழ வருணாவிற்கோ அழுகையும் ஆத்திரமும் முட்டிக்கொண்டு வந்தது. இதுவரையிலும் அவனை பிரிந்ததற்கு வேதனையுற்றவள் முதல்முறையாக ஒரே உறவென நம்பிய தாய் தந்தையிடம் தன் மகனை விட்டு வந்ததை நினைத்து உள்ளுக்குள் குமைந்தாள்.

கண்ணா... நீங்க எதுவும் நினைச்சு கஷ்டபடாதீங்க.. அம்மா உங்களை என்கூடவே கூட்டிட்டு வந்திடுவேன்டா கண்ணா என்றவளுக்கு என்ன சொல்லி அவனை தேற்றுவது என்று கூட தெரியவில்லை.. அருகிலிருந்தால் கூட அணைத்து ஆறுதல் படுத்தியிருப்பாள். தொலைதூரம் கொல்லாமல் கொன்றிருந்தது.

போ வருமா... எப்பவும் இப்படி தான் சொல்வ... ஒண்ணு இந்தியா வருவேன் சொல்லுவ இல்லனா அங்க கூட்டிட்டு போறேன்ப.. ஆனா எதையுமே பண்ண மாட்டா... ஐ ஹேட் யூ.... அழுகையினூடே அவன் கூற
இவளுக்கு வாயடைத்து போனது...

கண்ணா.. அழாதடா கண்ணா என்றவளுக்கு அப்போது தோன்றவில்லை தான் அழுவது இன்னும் அவனை பலவீனப்படுத்துமென்று.. ஏற்கனவே வருத்தத்தில் இருந்தவள் தன்னை மறந்து கண்ணீரை கொட்டி கொண்டிருந்தாள்.

இருவரும் கண்ணீரிலே கரைய
பாரு வருமா இப்போ கூட என்னால தான் அழுற நான் போறேன்.என்னை பார்க்க பிடிக்காததுனால தானே இப்படி தூரமா போய் இருக்கிற நீ . நான் போனா சந்தோஷமா இருப்ப தானே... நான் போனா உன் அம்மா அப்பா கூட ஹேப்பியா இருப்பியாம். தாத்தா சொன்னாங்க ... அதனால போறேன்
என்றவன் பாத்ரூமிலிருந்து சிவப்பு நிற ஹார்பிக் பாட்டில் எடுத்த வந்து இதை குடிச்சா செத்து போயிடுமாம்...
டிவி ல வந்திச்சு என்றவன் அதை திறந்து குடிக்க ஆரம்பித்தான்.
ஹார்பிக்கும் சொட்டு சொட்டாக விழவே இரண்டு சொட்டு உள்ளே சென்றிருக்க
நல்லாவே இல்ல... டிவில எப்படி தான் அந்த அக்கா குடிச்சாங்களோ என கூறிக்கொண்டே மீண்டும் குடிக்க ஆரம்பிக்க
இவளோ கண்ணா கண்ணா என‌ அழைத்து சத்தமிட்டு கதற ஆரம்பித்தாள்.

ஐயோ கண்ணா.... அதை குடிக்காதடா.... கண்ணா அம்மா சொல்றதை கேளுடா என்று கதற அவனோ எதையும் கேட்டபாடில்லை...

அவனும் இரண்டு மூன்று சொட்டு என நின்று போன‌மழையை ரசிக்கும் சிறுவனாக கண்ணை மூடி சொண்டு சொட்டாக விஷத்தை அருந்தியிருந்தான்.

கண்ணா... கண்ணா... என‌முனகிகொண்டே மயங்கியிருந்தாள் வருணா...


கண்விழிக்கையில்.. சுற்றிலும் வெளிச்சம் நிறைந்திருக்க கையில் ட்ரிப்ஸ்ஸூம் ஏறிக்கொண்டிருந்தது. என்ன ஏது என‌ எதுவும் தெரியாமல் முழித்தவளுக்கு ஆதி நினைவுக்கு வர அவனுக்கு அழைத்து பார்த்தாள்.
அவனது எண்ணோ இவளது அழைப்பை ஏற்காது இருந்தது.
பயம் தலைக்கேற,நெஞ்சம் படபடக்க படுக்கையில் வருணா அமர்ந்திருக்க, அறைக்கதவை திறந்து வந்தாள் இவளது தோழி ஹெலன். ஜெர்மனில் வருவிற்கு இருக்கும் ஒரே உறவு இவள் மட்டுமே.

ஏன்டி உனக்கும் உன்‌ பையனுக்கு என்னடி பொருத்தம் அப்படி... இரண்டு பேரும் சேர்ந்து ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகிருக்கீங்க...என்று ஹெலன் கிண்டலாக கூற வருவின் முகமோ வெளிறி போயிருந்தது.
அதை கண்டு கொண்ட ஹெலன் அவளை உற்சாகப்படுத்தும் வேகத்தில்
என்ன மேடம்.. சோகமா? ஒரு‌ஹேப்பி நியூஸ் சொல்லவா...... உங்களுக்கு ஜாப் ட்ரான்ஸ்பர் போட்டிருக்காங்க.. நீங்க இனி ஜாலியா இந்தியா போய் அங்கயே செட்டில் ஆகிடலாம் என்றிட அப்போதும் வெளிறியிருந்த வருவின்‌ முகத்தில் எந்த மாற்றமும் இல்லை... இது சரியில்லையே என நினைத்த ஹெலன் வருவை பிடித்து உலுக்க நினைவுக்கு வந்த வரு

இந்தியால இருந்து கால் வந்திச்சா? என்ன சொன்னாங்க ஹெலன்? ஆதி எப்படி இருக்கான் என வினவிட

ஏய்.... எதுக்கு இப்போ இவ்ளோ டென்சன் ஆகுற நீ.... ஆதி ரொம்ப நல்லா இருக்கானாம். நைட் உன்கிட்ட பேசிட்டு அழுதுட்டே படுத்திருப்பான் போல.. பீவர் ஆகிடுச்சு...அவ்ளோ தான். வேற எதுவுமில்லை... அவன் ரொம்ப நல்லாயிருக்கான் என்றிட அப்போது பெருமூச்சொன்றை வெளியிட்டவள். அப்போது தான் கண்டது எல்லாம் வெறும் கனவு என்பதனை ஏற்றுக்கொள்ளவே சிறுது நேரம் தேவைபட்டது வருணாவிற்கு.... அத்தகைய கொடிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது கனா....

ஹெலனின் மொபைல் எடுத்து தன் தந்தைக்கு அழைத்தாள். பெரும்பாலும் அவளின் தந்தையின் போனில் தான் வீடியோ கால் பேசுவார்கள்.

சில ரிங்களிலே அழைப்பை ஏற்று கொண்டவர்

எப்படிமா இருக்க? என்னாச்சு உனக்கு ? இங்க ஆதி பாப்பாவுக்கு காய்ச்சலாகிடுச்சு... உனக்கு சொல்ல கால் பண்ணேன்.. நீ எடுக்கவே இல்ல.அதான் ஹெலன் பொண்ணுக்கு கால் பண்ணி சொன்னேன்.அவ வந்து பார்த்தா நீ மயங்கி இருக்கியாம் . ஒழுங்கா சாப்பிடுறதில்லையாடாமா என்றிட

அதெல்லாம் எதுவுமில்லைபா.. கொஞ்சம் வொர்க் டென்சன் அவ்ளோ தான். ஆதியை ஒரே தடவை காட்டுறீங்களா என‌க் கேட்க அவரும் மருந்தின் வீரியத்தில் உறங்கி கொண்டிருந்த ஆதியை காட்ட,. அலைபேசி திரையிலேயே அவனது முகத்தை வருடியவள் தந்தைமுகம் காண‌த் தயங்கி டயர்டா இருக்குபா.. அப்ரோ பேசுறேன் என்று அழைப்பை துண்டித்தாள். மனதினுள் குறித்து கொண்டாள் கூடிய சீக்கிரம் இந்தியா செல்ல வேண்டுமென்று...

ட்ரான்ஸ்பர் ஆர்டர் ஏற்கனவே வந்திருக்க அதையும் பெற்றுக் கொண்டு இரு தினங்களில் இந்தியா வந்து சேர்ந்தாள். இரு தினங்களும் கம்பெனி வேலை டிக்கெட் விசா சரிசெய்யும் வேலை என அனைத்தும் இருந்தாலும் உள்ளம் முழுக்க ஆதியையே சுற்றியது.

டெல்லி வந்திறங்கியவள் அங்கிருந்து கோயம்புத்தூர் வந்து அங்கிருந்து காரில் ஊட்டி வந்து சேர்ந்தாள். வீட்டிற்கு செல்லும் வழியெல்லாம் இயற்கையை ரசித்தாலும் எண்ணம்‌முழுக்க மகனிடமே இருந்தது.

அந்த அழகான வீட்டில் கார் நிறுத்த
காரிலிருந்து இறங்கி தன்‌ உடமைகளை எடுத்து வைத்து கொண்டிருந்தவளை கலைத்தது அக்குரல்..... ஆம். அம்மாஆஆஆஆ பெருங்குரலெடுத்து கத்தி ஓடி வந்து கொண்டிருந்தான் ஆதி... கடந்த இரு தினங்களாக மனதை வருத்திக் கொண்டிருந்த பாரம் மனம்விட்டு விலக, ஓடி வந்த மகனை வாரியணைத்து கொண்டாள் அந்த தாய்...
இனி அவர்களின் பிரிவு அரியதே 😍😍😍


தொலைதூரத்தில் காதலன்
தொலைதூரத்தில் கணவன்
தொலைவாய் இருந்தாலும்
தூரமாய் போவதில்லை உறவுகள்.....
தொலைதூரத்தில் தாயிருக்க,
தொலைபேசியில் அன்பினை வளர்த்தாலும்,
ஏங்கும் குழந்தைக்கு
எதிர்பாரா அன்பினை பொழிய முடியும்
தாய் அருகிலிருந்தால் மட்டுமே....

இனி வருணா ஆதி வாழ்வில் தொலைதூரம் தொலைவாய் போக
அழகிய அன்பு பூக்கள் பூங்கொத்துகளாய் மிளிரட்டும்....

***
நன்றி.
காதல் கதை மாதிரி கற்பனைல மனசு படிக்கிற வேளை, சின்னதா ஒரு மாறுதல் கதையில்...
அழகிய திருப்புமுனை..
தாய் மகனின் பாசப் போராட்டம்..
உறவுகள் இணைந்ததில் உற்சாகம் படிக்கும் மனதிற்கும்..
மிக மிக அருமை மா..
 

அருள்மொழி காதலி

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
22
வாவ்.. சூப்பர் ஸ்டோரி டா மா. தமிழும் வார்த்தைக் கோர்வையும் அழகா இருந்தது. வருணா, ஆதியோட கன்வர்ஷேன் ரியலிஸ்டிகா இருந்து. காட்சிகள் கண் முன்னாடி விரியிது.

போட்டியில் வெற்றா பெற வாழ்த்துகள் மா..❤️❤️
Thank you so much akka ❤️
 

அருள்மொழி காதலி

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
22
வாவ்... சிம்பிளி சூப்பர் டா.. வார்த்தைகளால சில உறவுகளையும் சில வலிகளோட உணர்வையும் விளக்க முடியாது,, ஆனா நீ அதை சூப்பரா சொல்லிருக்கடா.. எனக்கே கண்ணு வேர்த்திருச்சி மூமெண்ட்... சீரியஸாவே செம்ம டச்சிங். கண்டிப்பா நீ போட்டியில ஜெயிக்க என்னோட வாழ்த்துகள்... வேற லெவல் டா...
Thank you akka ❤️❤️
 

அருள்மொழி காதலி

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
22
மிகவும் அருமையான கதை. என்னையே கண்கலங்க வச்சிட்டியே 😭. ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு மா.

வாழ்த்துக்கள் மா ❤❤
Achooo 😂
Thank you so much akka 💞❤️
 

அருள்மொழி காதலி

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
22
காதல் கதை மாதிரி கற்பனைல மனசு படிக்கிற வேளை, சின்னதா ஒரு மாறுதல் கதையில்...
அழகிய திருப்புமுனை..
தாய் மகனின் பாசப் போராட்டம்..
உறவுகள் இணைந்ததில் உற்சாகம் படிக்கும் மனதிற்கும்..
மிக மிக அருமை மா..
Thank you amma 🥰🥰
 
Top