• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அள்ளிக் கொண்ட தென்றல் - 12.

Infaa

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 7, 2022
Messages
803
பகுதி – 12.

பிரபஞ்சன், தென்றல் பேசப் பேச முழுதாக அதிர்ந்து போயிருந்தான். அனைத்தையும் அவள் தன் மனதுக்குள் போட்டு அழுத்திக் கொண்டிருப்பது புரிய, எதுவும் செய்ய முடியாத கையறு நிலையுமாக தடுமாறிப் போனான்.

“ஷ்... மோனா... தென்றல்... என்னைப் பாரு...” தன் நெஞ்சுக்குள் புதைத்துபோய் விம்மிக் கொண்டிருந்தவளை நிமிர்த்த போராடினான்.

“தென்றல் சொல்லாதீங்க...” அவனிடமிருந்து வெடுக்கென நிமிர்ந்தவள், பட்டென சொல்லிவிட்டு, மீண்டுமாக அவன் நெஞ்சுக்குள் புதைய, அந்த நிலையிலும் அவனுக்கு சிரிப்பு வந்தது.

“சரி, தென்றல் சொல்லலை... ஆனா அதுதானே உன் பேரு?” அவளை சற்று இயல்பார்க்க முயன்றான்.

“உங்களுக்கு நான் மோனா தான்...” ‘அப்படித்தான் நான் இருக்க ஆசைப்படுகிறேன்’ என்னும் விதத்தில் அவள் சொல்ல, அவள் கன்னம் அவன் இலக்காகி இருந்தது.

அவளது வலக்கன்னம் முழுமையும் மென்மையாக கவ்வி, சுவைத்து இழுக்க, அவன் சட்டையை இறுக பற்றிக்கொண்டு அவனோடு ஒட்டிக் கொண்டாள். அவனை விலக்கித் தள்ளவெல்லாம் தோன்றவில்லை.

“சில நேரம், உங்களை நினைச்சாலே ஒரு மாதிரி ஃபீல் பண்றேன். படிக்க உக்காந்தா, சாப்பிட உக்காந்தா, பாத்ரூம் போனா கூட... உங்க நினைப்பாவே இருக்கு...” அவள் குழைந்த குரலில் சொல்லி, மெல்லியதாக கலங்க, முழுதாக அதிர்ந்தான்.

தான் அவளுக்கு என்ன செய்துகொண்டிருக்கிறோம்? என்ன செய்து வைத்திருக்கிறோம்? என்பதன் கனம் புரிய, அவனுக்குள் பெரும் நடுக்கம் உதயமானது.

‘அவ படிக்கற பிள்ளைடா...’ பரமேஸ்வரனின் குரல் உள்ளுக்குள் ஓங்கி ஒலிக்க, வேகமாக அவளை விலக்கினான்.

“என்ன? ஏன்? போதுமா...?” ஒரு மாதிரி சுழலுக்குள் அமிழ்ந்து கொண்டிருந்தவளை, சட்டென விலக்கித் தள்ள, மலங்க விழித்தவள், அந்த இதத்தில் இருந்து விடுபட முடியாமல் அவனிடம் கேட்டாள்.

அவளுக்கோ அவனுக்குள் புதைந்துபோக ஒரு வேட்கை எழுந்தது. அவனோடு ஒட்டிக்கொண்டு அவள் உரச, ஒரு முடிவுக்கு வந்தவன் ஆழமாக மூச்செடுத்தான். அவள் கன்னம் தாங்கியவன், அவளைத் தன் கண்களைக் காண வைத்தான்.

“மோனா... இங்கே பாரு. இனிமேல் நீ எனக்கும், உங்க அப்பாவுக்கும் நடுவில் போராட வேண்டாம். நான் இனிமேல் உன்னைப் பார்க்க வர மாட்டேன். நீ உன் படிப்பை முடி, நான் உனக்காக காத்துட்டு இருப்பேன். நமக்கான நாள் இன்னும் இருக்கு.

“முடிஞ்ச அளவுக்கு என் நினைப்பு வரும்போதெல்லாம் படி... நீ யூனிவர்சிட்டி ரேன்க் வாங்கணும்... உன்னால் முடியும். என்னோட ஆசை அது... உனக்காக நான் எப்பவும் இருப்பேன்... காத்துட்டு இருப்பேன், என்ன புரியுதா?” அவன் அழுத்தமாக சொல்ல, அவன் தன்னைப் பார்க்க வர மாட்டான் என்பதிலேயே அவள் மனம் சிக்கித் தவித்தது.

“இனிமேல் என்னைப் பார்க்க வர மாட்டீங்களா?” அவள் கேட்க, அழுத்தமாக தலையசைத்து மறுத்தான்.

“இது நீ படிக்கற வயசு மோனா... படி... ஃப்ரண்ட்ஸ் கூட என்ஜாய் பண்ணு. லைஃப் என்ன ஆகுமோன்னு கவலைப் படாதே. நான் இருப்பேன்...” அவன் சொல்ல, அத்தனை நிம்மதியாக உணர்ந்தாள்.

“நிஜமாவா? என்னைப் பார்க்கலைன்னா மறந்துட மாட்டீங்களா?” அவள் கேட்க, அவனது புருவம் முடிச்சிட்டது.

“உன்னை மறக்காம இருக்கவா பார்க்க வர்றேன்னு நினைக்கற?” அவள் சின்னப்பெண் என்பதை நிரூபித்தாள்.

“அப்பா சொன்னாங்களே, நேரில் பார்க்கலைன்னா, என்னை நீங்க மறந்துடுவீங்கன்னு?” அவள் அவனிடம் கேட்க, அவள் தகப்பனை கொன்று குவிக்கும் வேகம்.

“அப்போ என்னைப் பார்க்கலைன்னா, நீயும் என்னை மறந்துடுவியா?” அவன் கேட்க, அவள் கண்களில் அத்தனை கலக்கத்தைக் காட்டினாள்.

“எனக்குள்ளே, என்னைச் சுத்தி எல்லாம் நீங்க மட்டும்தான் இருக்கீங்க” அவள் சொல்ல, அவனுக்கு அப்படி ஒரு ஆசுவாசம்.

“என்னால் மட்டும் எப்படி முடியும்? நம்மளைச் சுத்தி பார்... எத்தனை ஆணும் பொண்ணும் இருக்காங்க. இந்த ஊருக்குள், இந்த நாட்டில், இந்த உலகத்தில் எத்தனைபேர் இருந்தாலும், எனக்கானவள் நீ மட்டும்தான்... புரியுதா?” தன் நேசத்தை அவளுக்கு எப்படி சொல்லி புரிய வைக்கவென அவனுக்குத் தெரியவில்லை.

தன் தகப்பன் சொல்வதை எல்லாம் வேத வாக்காக எடுக்கும் அவளுக்கு, தன்னவனின் தவிப்புகள் முழுதாக புரிந்தும் புரியாத நிலைதான்.

“எனக்கு பரீட்சைக்கு நேரமாச்சு...” அவள் சொல்ல, இனிமேல் அவளை எப்பொழுது பார்ப்போமோ என தவித்துப் போனான். மீண்டுமாக அவள் கன்னம் பற்றி கடித்து சுவைக்க, இமைகளை மூடிக் கொண்டாள்.

“சரி போ... நல்லா படி...” அவன் சொல்ல, கார் கதவைத் திறந்துகொண்டு இறங்கப் போனாள்.

“மோனா... எனக்கு எதுவும் கிடையாதா?” அவன் அவளைத் தடுக்க, புரியாமல் திரும்பிப் பார்த்தாள். அவனுக்கு இசைந்து கொடுக்கத் தெரிந்தவளுக்கு வேறு எதுவும் தெரியவில்லை.

“இல்ல... எதுவும் இல்லை... நல்லா படி, சாப்பிடு, தூங்கு... உன்னை நீதான் பார்த்துக்கணும். நீ நல்லபடியா இல்லன்னா, என்னால் நிம்மதியா இருக்க முடியாது” அவன் சொல்ல, தலையசைத்துவிட்டு சென்றாள்.

அவள் வரவே, தோழியர் இருவரும் அவளைச் சூழ்ந்து கொண்டார்கள். அவளது கன்னம் முழுதாக சிவந்திருப்பதையும், அவள் அழுதிருப்பதையும் பார்த்த எலினா, “என்ன தென்றல், அவர் உன்னை அடிச்சுட்டாரா?” நம்பமுடியாமல் கேட்டாள்.

“இல்லை... நான் கொஞ்சம் படிக்கறேன்...” அவள் அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தாள்.

“கன்னம் இப்படி சிவந்துபோயிருக்கு, அவர் அடிக்கலைன்னு சொல்ற? நாங்க எப்படி நம்பறது? என்ன ஹதி இது? அவர் நல்லவர்ன்னு பார்த்தா...”.

“வாயை மூடு எலினா... எல்லாரும் ஏன் இப்படியே கேக்கறீங்க? அவரைத் தப்பா நினைக்கறீங்க? அவர் என்னை அடிக்கலை அவ்வளவுதான்...” அவள் திடுமென கத்த, அங்கிருந்த சிலர் அவர்களைத் திரும்பிப் பார்த்தார்கள்.

“எலி, நீ கொஞ்சம் போ... தென்றல், ரிலாக்ஸ்... படி...” அவள் சொல்ல, தன் கைப்பையில் இருந்த சின்ன கண்ணாடியை எடுத்து தன் முகம் பார்த்தாள். கன்னம் சிவந்துபோயிருப்பது அப்பட்டமாகத் தெரிய, மென்மையாக அதை வருடினாள்.

திடுமென என்ன நினைத்தாளோ, “ஹதி... நான் இந்த பேப்பர் எழுதலை, அரியர் வச்சுக்கறேன்... வீட்டுக்குப் போய் அடுத்த டெஸ்ட்க்கு படிக்கறேன்” அவள் சொல்ல, அவளிடம் மறுத்து எதுவும் அவள் பேசவில்லை.

தன் தகப்பனுக்கு அழைத்தவள், ‘அவர் வருகிறாரா?’ எனக் கேட்க, அப்பொழுதுதான் அலுவலகத்துக்கு வந்தவர், மீண்டுமாக கிளம்பி வந்தார்.

“என்னம்மா, உடம்பு சரியில்லையா? ஹாஸ்பிடல் போகலாமா? ரொம்ப முடியலையா?” கேட்டவர், செமஸ்டர் குறித்து எதையும் கேட்டுக் கொள்ளவே இல்லை.

“ரொம்ப தலை வலிக்குதுப்பா... என்னால் உக்கார முடியலை அதான்...”.

“அப்படின்னா நம்ம ஜகதா டாக்டர் கிட்டே போகவா?”.

“வேண்டாம்ப்பா... வீட்டுக்குப் போங்க...” சொன்னவள் அமைதியாக அமர்ந்து விழிகளை மூடிக் கொண்டாள். என்னவோ மனதுக்குள் வெகுவாக பாரம் அழுத்த, அந்த அமைதி அவளைப் பிடித்து வதைத்தது.

வீட்டில் அவளை விட்ட பரமேஸ்வரன், வேலை இருப்பதாகச் சொல்லி உடனே கிளம்பிவிட, ஹாலில் அமர்ந்திருந்த தாயைப் பார்த்தவள், உடை கூட மாற்றாமல் அப்படியே சென்று அவர் மடியில் படுத்துவிட்டாள். இப்பொழுதெல்லாம் தகப்பனை விட தாயை மனம் நெருக்கமாக உணர்ந்தது.

“தென்றல்... காலேஜ் போகல? என்ன திரும்பி வந்துட்ட? உடம்பு சரியில்லையா?” கேட்டவர், மகளின் தலைகோதினர்.

“அவங்க வந்தாங்க... அவங்ககிட்டே பேசினேன்... இனிமேல் என்னைப் பார்க்க வராதீங்கன்னு தைரியமா சொல்லிட்டேன். ஆனா மனசே சரியில்லம்மா” சொன்னவள் கண் கலங்க, மகள் இப்படி கலங்கித் தவிப்பது அவருக்கு பெரும் வருத்தத்தைக் கொடுத்தது.

“அதான் தைரியமான முடிவெடுத்து இருக்காளே என் பொண்ணு, பிறகு எதுக்கு கலக்கம்? எல்லாம் கொஞ்ச நாள்ல சரியாப் போயிடும்மா...” மகளுக்கு ஆறுதல் சொன்னார்.

மகளுக்கு என்னதான் வெளியில் இருந்து ஆறுதல் சொன்னாலும், உள்ளுக்குள் அவள் அனுபவிக்கும் துன்பத்தை அவரால் எதுவும் செய்ய முடியாதே.

“இப்படில்லாம் ஆகும்ன்னு இந்த அம்மாவுக்குத் தெரியாதும்மா. தெரிஞ்சிருந்தா...” அவர் வேதனையாக நிறுத்த, தாயின் இடையை இன்னும் அழுத்தமாக கட்டிக் கொண்டாள்.

“பிளீஸ்ம்மா... இப்படி பேசாதீங்க, அவங்க இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால் நினைச்சு கூட பார்க்க முடியலை. அப்பாவுக்கு ஏன்மா அவங்களைப் பிடிக்கலை? அவங்க தப்பானவங்க இல்லம்மா” தன்னவனுக்காக தன்னிடம் பேசும் மகள், தகப்பனிடம் வாயைத் திறக்க மறுப்பதை என்ன செய்ய?

“அப்பாவுக்கு அவங்களைப் பிடிக்கும் தானே?” அவள் ஏக்கமாக கேட்க, மகளை வருடினார்.

“நீ என்ன நினைக்கற?”.

“எனக்குப் பிடிச்சது எதையும் அப்பா மறுக்க மாட்டாங்கம்மா... எனக்கு நம்பிக்கை இருக்கு” அவள் தனக்குத் தானே ஆறுதல் சொல்லிக் கொள்ள, பார்வதி எதையும் பேசவில்லை.

இங்கே இவள் தாயிடம் பேச, அங்கே பிரபஞ்சன் தன் அக்காவிடம் பேசினான்.

“அவ என்னென்னவோ சொல்லி அழுதப்போ, என்னால் தாங்கிக்கவே முடியலைக்கா. அவளை கொஞ்ச நாள் தனியா விடு’ன்னு நீங்க சொன்னப்போ புரியலை, இப்போ புரியுது” தன்னைக் காண வந்ததுமுதல், புலம்பித் தவிக்கும் தம்பியை அமைதியாகப் பார்த்திருந்தாள்.

“அவளைப் பார்க்கப் போக மாட்டேன்னு சொல்லிட்டு வந்துட்டேன்... ஆனா அதை எப்படி செய்யப் போறேன்னுதான் தெரியலை. செஞ்சாகணும்...” அவன் உறுதியாக உரைக்க,

“தம்பி, நீ தனியா ஆபீஸ் போடறதைப் பத்தி யோசிச்சியா? தனியா க்ளையின்ட் கிடைப்பாங்களான்னு பாரு... அது உனக்கு ஹெல்ப் பண்ணும்” அவள் சொல்ல, அது அவனுக்குச் சரியாகத் தோன்றியது.

மறுநாள்முதல் இருவரும் தங்கள் கவனத்தை வேறு திசையில் குவிக்க முயன்றார்கள். முதலில் இருவருக்கும் அது கடினமாக இருந்தாலும், சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம் என்பதுபோல், தங்கள் முயற்சியில் வெற்றியும் கண்டார்கள்.

அப்படி இருக்கையில்தான், அவர்களது முதல் திருமணநாள் வர, இரு உள்ளங்களும் ஒருவர் மற்றவரை எண்ணிக் கொண்டது.

‘அவளைப் பார்க்கப் போகலாமா?’ என அவனும், ‘அவங்க வருவாங்களா?’ என அவளும் தவித்துக் கிடக்க, அந்த காலை அழகாக விடிந்தது.

அவன் கீழே இறங்கி வருகையில், பொன்னம்மாக்கா அவன் கையில் சூடாக பாயாசத்தைக் கொடுக்க, அது எதற்கு எனப் புரிய வேகமாக அதைப் பருகினான். உணவை விட, டீ, பாயாசம், சூப் இவையெல்லாம் அவனுக்கு அதிக சூடாக இருந்தால்தான் பிடிக்கும்.

“பிரபா, மருமகளை கூட்டி வர்றியாப்பா?” அவனது தாய் கேட்க, மறுப்பாக தலை அசைத்தான்.

“முதல் வருஷ கல்யாண நாள்... எல்லாம் சரியா இருந்திருந்தா, பெருசா கொண்டாடி இருக்கலாம்” மேகலை புலம்ப, அவனுக்கு மட்டும் ஆசை இல்லையா என்ன?

‘அவளைக் காணக் கூடாது’ என என்னதான் முயன்றாலும் முடியாமல், அவளுக்கென பூவும், ஒரு கடிதத்தையும் எழுதியவன்... அதை அவளது தோழியிடம் கொடுத்து அனுப்பினான்.

“சார்... நீங்களே இதை அவகிட்டே கொடுக்கலாமே...” அவள் கேட்க, தான் கொண்டுவந்த பாயாசத்தையும் அவளிடம் கொடுத்துவிட்டு சென்றுவிட்டான்.

அதேபோல், அவளது வீட்டில், பார்வதியும், வடை, பாயாசம் செய்திருக்க, “இன்னைக்கு என்ன விசேஷம்? அமாவாசையா என்ன?” கேட்டவாறே பரமேஸ்வரன் அனைத்தையும் உண்ண, தென்றலுக்கு தன் காதை நம்ப முடியவில்லை.

‘என் அப்பா, அவரோட பொண்ணோட கல்யாண நாளை மறக்கறதா?’ எண்ணியவள், தாயைப் பார்க்க, அவள் நெற்றியில் முத்தமிட்டு, பாயாசத்தை அவள் கரத்தில் கொடுத்தார்.

“தேங்க்ஸ்ம்மா...” அவள் சொல்ல, கலங்கிய கண்களை அவர் மகளுக்குக் காட்டாமல் மறைத்தார்.

“ஃப்ரண்ட்ஸ்க்கும் கொடுக்கணும்மா...” தாயிடம் அவள் கேட்க, “எடுத்து வச்சுட்டேன் தென்றல்...” தாயும் மகளும் செய்வதை பார்த்திருந்த பரமேஸ்வரன், எதையும் கேட்டுக் கொள்ளவில்லை.

தென்றல் கல்லூரிக்குச் செல்ல, ஹதிஜா அவளது கரத்தில், பிரபஞ்சன் கொடுத்துவிட்டுச் சென்றதைக் கொடுக்க, அத்தனை வேகமாக அதை வாங்கிக் கொண்டாள்.

பூவை தலையில் வைத்துக் கொண்டவள், அந்த கடிதத்தைப் பிரித்தாள். ‘ஹேப்பி ஃபஸ்ட் அனிவர்சரி மோனா... இன்னைக்கு முழுக்க உன்னோடவே இருக்கத்தான் ஆசையா இருக்கு... ஆனா அது முடியாதே. அது பரவாயில்லை... நம்ம வாழ்க்கை நமக்காக காத்துட்டு இருக்கும். காதலுடன்... பிரபஞ்சன்...’ அவன் கடிதத்தை சுருக்கமாக முடித்திருக்க, அந்த கடிதத்தை அன்று முழுவதும் படித்துக் கொண்டே இருந்தாள்.

அன்று மட்டுமா....?
 

Infaa

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 7, 2022
Messages
803
அடுத்து வந்த நாட்கள் எல்லாம், அவன் சொன்னதை மட்டுமே நினைவில் கொண்டு, பிடிவாதமாக தன் கவனத்தை படிப்பில் செலுத்தினாள். ஆனால் கண்ணாடியைப் பார்க்கும் ஒவ்வொரு நேரமும், அவன் அவளுக்குள் ஆழமாக இறங்கிக் கொண்டிருந்தான்.

அடுத்து வந்த அனிவர்சரியும் இப்படியே கடக்க, மூன்றாம் வருட அனிவர்சரிக்கு முன்னர், முதுமையின் காரணமாக ரத்தினம் காலமாகி இருந்தார்.

அதே நேரம், தென்றல் இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க, விஷயத்தைக் கேள்விப்பட்டு, தென்றலும், பார்வதியும் அங்கே வந்தார்கள். பரமேஸ்வரன் ஊரில் இல்லாத காரணத்தால் மட்டுமே அவர்களால் வர முடிந்தது.

அவனது வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தது முதல், தென்றலின் பார்வை தன்னவனைக் காண சுழன்றது. தன் அத்தையின் அருகே சென்று அவள் அமர, அவளது கரத்தை பற்றியவர், “இந்த தள்ளாத காலத்தில் என்னை மட்டும் தனியா விட்டுட்டு போய்ட்டார்...” அவளிடம் அவர் சொல்ல, அவளுக்கு கண்கள் கலங்கியது.

“உங்களுக்கு நாங்க எல்லாம் இருக்கோம் அத்த...” சொன்னவள், அவரது கரத்தை அழுத்தமாக பற்றிக் கொண்டாள்.

நிவேதிதா அவளுக்கு அருகே வந்து அமர, “அண்ணி... அவங்க எங்கே?” இப்பொழுது கேட்பது சரியா? தவறா? எனத் தெரியாத தடுமாற்றம் அவளிடம் இருக்க, இரண்டு வருடங்களாக அவனைக் காணாத ஏக்கம் குரலில் வழிய அவளிடம் கேட்டாள்.

நிவேதிதாவுக்கோ அவள் கேட்டதில் அப்படி ஒரு நிம்மதியாக இருக்க, “அவன் ரூம்ல இருக்கான்... போய் பாரு போ...”.

“இப்போவா...?” அங்கே பெரிதாக கூட்டம் இல்லை என்றாலும், அந்த நேரம் அவனைச் சென்று காண தயங்கினாள்.

“நீ அவனைப் போய் பாரு தென்றல்...” இப்படி இந்த சூழ்நிலையை விட்டால், மீண்டுமாக அவளை எப்பொழுது காண முடியும் எனத் தெரியாததால் சொன்னாள்.

தென்றலின் கல்லூரிப் படிப்பு முடியப்போகையில், நிவேதிதாவும், பிரதாப்பும், தன் தம்பியின் விஷயத்தைப் பற்றி பேசப் போயிருக்க, “உங்க தம்பிக்கு என் பொண்ணை கொடுக்கறதில் எனக்கு விருப்பமில்லை. நீங்க போகலாம்...” அவர்கள் பேசுவதை கேட்க கூட செய்யாமல் அவர் பேசியிருக்க, அவர்களுக்கு பயம் வந்திருந்தது.

“அவ உங்க பொண்ணு இல்லை, அவனோட பொண்டாட்டி...” நிவேதிதா அப்படியும் பேசினாள்.

“அதை நான் பார்த்துக்கறேன்...” அவர் சொன்ன விதம், நிவேதிதாவின் மனதுக்குள் அபாயமணியை ஒலிக்க விட்டுக் கொண்டிருந்தது. இதை அவள் இன்னும் தன் தம்பியிடம் கூட சொல்லியிருக்கவில்லை. அவளுக்குமே தென்றலிடம் பேச ஆசை இருந்தாலும், முதலில் தன் தம்பி அவளிடம் பேசட்டும் என நினைத்தாள்.

தென்றல் உறுதியாக இல்லாத வரைக்கும், தன் தம்பியின் வாழ்க்கை சரியாகாது எனத் தோன்றவே, இப்பொழுது தன் தம்பியிடம் அவள் பேசினால் நன்றாக இருக்கும் எனத் தோன்றவே அவளை அனுப்ப முயன்றாள்.

தென்றல் அப்படியும் தயங்கி அமர்ந்திருக்க, “பட்டு... அத்தையை மாடிக்கு கூட்டி போ...” அவர் மகளை அழைக்க, நைனிகாவைப் பார்த்த தென்றலுக்கு அத்தனை ஆச்சரியம்.

“நைனி... நீயா...?”.

“அத்த... வாங்க...” அவளைக் கைப்பிடித்து எழுப்பினாள்.

“நைனி... எவ்வளவு வளந்துட்ட...” அவளிடம் கேட்க, நைனிகா அவளை முறைத்தாள்.

“நான் வளந்துட்டேன்... நீங்க எப்போ வளரப் போறீங்கன்னு தெரியலை” அவள் வெடுக்கென பேச, தென்றலின் முகத்தில் பெரும் அதிர்ச்சி.

“நைனி...” அந்த ஒரு நாள், தன்னோடு அத்தனையாக விளையாடி, ஒரு தோழி அளவுக்குப் பழகியவள், இப்பொழுது இப்படிப் பேசினால், அதிராமல் என்ன செய்வாள்?

“மாமா உள்ளேதான் இருக்காங்க... போங்க...” அவள் செல்லப் போக, அவளது கரத்தை அழுத்தமாக பற்றிக் கொண்டாள்.

“நீயும் வா...” அவள் அழைக்க, நைனிகா நிச்சயம் இதை எதிர்பார்க்கவே இல்லை.

“லூசா நீங்க...?” அவள் கத்த, தன் குரல் ஓங்கி ஒலிப்பது புரிய, சட்டென வாயை மூடிக் கொண்டாள்.

அவளது குரலைக் கேட்டு அறைக்குள் இருந்து வெளியே வந்த பிரபஞ்சன், அங்கே தன்னவளைப் பார்த்துவிட்டு, அப்படியே நின்றுவிட்டான்.

நொடிகளில் தெளிந்து, “என்ன பட்டு? எதுக்கு கோபம்?” அவனுக்கும் தன் குரல் கேட்டுவிட்டது புரிய, என்ன சொல்லி சம்மாளிப்பது என அவள் யோசிக்க,

“நான் என்னோட இருக்கச் சொன்னேன், அதுக்கு கோபப்படறா” அவள் சொல்ல, “சுத்தம்...” சத்தமாக அலுத்துக் கொண்டாள்.

“ஓ... பரவாயில்லை... உள்ளே வா பட்டு...” அவன் அழைக்க, வேறு வழியின்றி உள்ளே வந்தாள்.

நைனிகா வேகமாகச் சென்று, அங்கிருந்த பால்க்கனியில் நின்றுகொள்ள, அறைக்குள் இவர்கள் இருவர் மட்டும் தனித்திருந்தார்கள்.

“சாரி... மாமா...”.

“இதுக்குமேலே அவர் இருந்து கஷ்டப்படறதுக்கு... இது பரவாயில்லை. அப்பாவுக்கு ஷுகர் ஜாஸ்த்தியாகி, இரண்டு காலிலும் புண் வந்து, காலையே எடுக்கற அளவுக்கு போயிடுச்சு... சோ...” அவனுக்குள் வருத்தம் இருந்தாலும், அவரது கஷ்டத்துக்கு, மரணம் அவருக்கு பெருத்த விடுதலையாகத் தோன்றியது.

“ஹையோ... எனக்குத் தெரியாது... தெரிஞ்சிருந்தா வந்து பாத்திருப்பேன்” அவள் வருத்தமாக சொல்ல,

“என்னோட தனியா இருக்க, உனக்கு என்ன பயம்? அப்படி நான் உன்னை என்ன பண்ணிடுவேன்னு பயப்படற?” அவளைத் தனியாக பார்க்க, பேச, அவன் தவித்துக் கிடக்கையில், அவள் இப்படிச் செய்தால் அவனும் என்ன செய்ய?

அவளுக்கும் அவனைத் தனிமையில் சந்திக்கத்தான் பேராசையாக இருந்தது. ஆனால், முதல்முறை அவனைப் பார்த்தபொழுது அவள் தன் உணர்வுகளை அவனிடம் வெளிப்படுத்தியவிதம்... இப்பொழுதோ அதைவிட மனதுக்குள் அதிக வேகமாக இருக்க, அவனை என்ன செய்துவைப்போம் என பயந்து போனாள்.

அவளுக்கோ தன் உணர்வுகளைக் குறித்தே அத்தனை பயம் பிடித்திருக்க, இந்த மாதிரி நேரத்தில், எங்கே ஏதும் செய்துவிடுவோமோ?’ எனப் புரியாமல், அதைத் தவிர்க்கவே நைனிகாவை உடன் பிடித்து வைத்தாள்.

அவனுக்கு பதில் சொல்லும் மன தைரியம் கூட அவளுக்கு அந்த நொடி இருக்கவில்லை. அரும்பு மீசையில், முழுதாக கிளீன் ஷேவில் என அவனைப் பார்த்து இருந்தவளுக்கு, இந்த இரண்டு வருடம் அவன் உருவத்தில் ஏற்படுத்தி இருந்த மாறுதலை பார்த்துக் கொண்டே இருந்தாள்.

இன்னும் கொஞ்சம் வளர்ந்திருந்தான்... இன்னும் கொஞ்சம் உறுதியானவனாக, சற்று முரட்டுத் தோற்றத்துக்கு மாறி இருந்தான். ட்ரிம் செய்த கத்தை மீசையும், அழுத்தமான இதழ்களும், கூர்மையான விழிகளுமாக அவன்மேல் இருந்து பார்வையை அவளால் திருப்ப முடியவில்லை.

அவனுக்குமே அவளது தோற்றம், உள்ளுக்குள் அலையடிக்கச் செய்தது. சின்னப் பெண்ணாக அவளைப் பார்த்திருக்க, அவளும் இன்னும் கொஞ்சம் வளர்ந்து, அந்த குண்டு கண்கள் அவனை விழுங்கிக் கொண்டிருக்க, அவளிடம் துலங்கிய நளினம் அவனைப் புரட்டிப் போட்டது.

“மோனா...” உணர்ச்சிவசப்பட்டு அழைத்தவன், அவளை இறுக அணைத்திருக்க, அவனுக்குக் குறையாமல் அவனை அவள் தழுவினாள்.

அவளது கன்னமும், தாடையும் அவன் இதழ்களால் சுவைக்கப் பட்டுக் கொண்டிருக்க, ‘என் கன்னத்தை திங்கறது மட்டும் இவருக்கு ஏன் இவ்வளவு புடிச்சிருக்கு?’ தனக்குள் கேட்டுக் கொண்டவள், அடுத்த நிமிடம், அவன் இதழ்களைக் கவ்விக் கொண்டாள்.

இரண்டு வருட பிரிவு, ஏக்கம், எதிர்பார்ப்பு, ஆசை அத்தனையையும் அந்த ஒற்றை முத்தத்தில் அவள் வெளிப்படுத்திக் கொண்டிருக்க, அவன் இதழ்களில் ரத்தமே துளிர்த்துவிட்டது.

அவள் தன் இதழ்களை கடித்து சுவைக்க, அவனுக்கு வலியெடுத்தாலும், அவள் உணர்வுகளை உள்வாங்கி திளைத்தான். எத்தனை நேரமோ தெரியாது, ஒரு கட்டத்தில் அவள் சற்று நிதானமாக, அவன் இதழ்களில் துளிர்த்திருந்த ரத்தத்தைப் பார்த்தவள் பதறிப் போனாள்.

“ஹையோ... ரத்தம்... நான்... சாரி... சாரி...” அவள் பதற,

“ஷ்... ஷ்... மோனா...” அவன் அவளை அமைதிப்படுத்த முயல, அதை எல்லாம் அவள் எங்கே கவனித்தாளாம்?

“நைனி... நைனி...” அவள் கத்த, அவள் கத்தியதில் பயந்துபோன நைனிகா, ஓடி வந்தாள்.

“அத்த... என்ன ஆச்சு...?” அவள் உள்ளே வர, அவள் முதுகின் பின்னால் மறைந்தாள்.

“ஏன் என்னைத் தனியா விட்டுப் போன? ஏன் போன?” தான் செய்துவைத்த அனர்த்தத்தை எண்ணி அவள் கதற, தான் அவளைத் தீண்டியதால் அவள் இப்படி செயல்படுகிறாளோ என அவன் நொந்து போனான்.

“மாமா...” அவன்தான் என்னவோ செய்துவிட்டான் என நைனிகா நினைத்து எதையோ கேட்கவர,

அவன் உதட்டில் துளிர்த்துவிட்ட ரத்தத்தை பார்த்துவிட்டுத்தான் நைனிகா கேட்கிறாளோ என எண்ணி “என் தப்புதான்... நான்தான்... நான்தான்... என்னால்தான்...” பதறிய தென்றல் நடுங்கிப் போனாள்.

“பட்டு... கொஞ்சம் விலகு...”.

“இல்ல... வேண்டாம்... போகாதே...” அவளைக் கெட்டியாக பற்றிக்கொண்டு விட மறுத்தாள்.

அவளது தேகம் மொத்தமும் நடுங்குவது நைனிகாவுக்குப் புரிய, “மாமா, கொஞ்சம் தண்ணி கொண்டு வாங்க... நடுங்கிட்டு இருக்காங்க” அவளைப் பிடித்து அங்கிருந்த படுக்கையில் அழுத்தி அமர வைத்தவள், அவன் கொண்டுவந்த தண்ணீரைக் கொடுத்தாள்.

கைகள் நடுங்க அதை வாங்கி, கடகடவென அவள் குடித்து முடிக்கவே, அவளுக்கு எதிரே மண்டியிட்டு அமர்ந்தான்.

தென்றலின் கண்களில் பயத்தைப் பார்க்கவே, “பட்டு, இவ பக்கத்திலேயே நீ உக்காரு...” நைனிகாவை அவள் அருகே அமர வைத்தவன், தன்னவளின் கரத்தைப் பற்றிக் கொண்டான்.

தென்றலின் கண்களில் இருந்து கண்ணீர் வழிய அவனை ஏறிட்டாள். ‘என்னைத் தேடவும் செய்யறா, பயப்படவும் செய்யறா... ஏன்...?’ அவனுக்கு சுத்தமாகப் புரியவில்லை.

“மோனா... யூஜி முடிச்சுட்ட... அடுத்து என்ன பண்ணப் போற?” அவனிடம் அத்தனை எதிர்பார்ப்பு வழிந்தது.

அவள் மட்டும், தன்னோடு வருகிறேன் என ஒரு வார்த்தை சொல்லிவிட்டால், அவளுக்கென எதைச் செய்யவும் அவன் தயாராக இருந்தான்.

“அப்பா பீஜி படிக்கச் சொல்றாங்க... அங்கேயே அப்ளிகேஷன் போட்டுட்டேன்” அவள் சொல்ல, அவனுக்குள் அப்பட்டமான ஒரு ஏமாற்றம் படர்ந்தது.

“இங்கே வந்து படிக்கறியா?” பெரும் எதிர்பார்ப்போடு கேட்டான்.

“இல்ல... இல்ல... அப்பா இன்னும் கொஞ்சம் கோபமாத்தான் இருக்காங்க” அவள் பேச்சில், நைனிகாவுக்கே கோபம் வந்தது.

ஆனாலும் தன் மாமா பேசவேண்டிய இடத்தில், தான் பேசக்கூடாது என்பது அவளுக்குப் புரிய, அமைதியாக அமர்ந்திருந்தாள்.

“உங்க அப்பா கோபம் குறையவே இல்லன்னா என்ன செய்வ?” தன் கோபத்தை அவளிடம் வெளிப்படுத்திவிடக் கூடாது என்பதில் கவனமெடுத்தான்.

“எனக்குப் பிடிச்சதைத்தான் அப்பா செய்வாங்க” தன் தகப்பன் மீதான நம்பிக்கையை அவள் வெளிப்படுத்த, அவனுக்கு சலிப்பாக இருந்தது.

“நானா? உங்க அப்பாவான்னு வந்தா?” அவன் கேட்க, அவளால் அதை நினைத்துப் பார்க்க கூட முடியவில்லை.

“எங்க அப்பா அப்படியெல்லாம் விட்டுட மாட்டாங்க” அவள் உறுதியாக சொல்ல, அவளை விட்டு விலகி எழுந்தான்.

“உன்னோட இந்த நம்பிக்கையை, உங்க அப்பா காப்பார்த்தணும்னு, அந்தக் கடவுளை நான் வேண்டிக்கறேன்...” சொன்னவன் அங்கிருந்து சென்றுவிட, அவன் இப்படி சொன்னதற்கான காரணம் அவளுக்குப் புரியவே இல்லை.

புரிந்தபொழுது அவன் அவளை விட்டு சென்றிருந்தான்.

தென்றல் வீசும்..........
 

ஆனந்த ஜோதி

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Feb 14, 2022
Messages
111
அந்த பரமேஸ்வரனால் அவங்க படுற பாட்டை விட, எங்க பாடுதான் பெரும் திண்டாட்டமா இருக்கு.

எப்போ இறுதி அத்தியாயம் வருமோ, அதுவரை சோக ராகம் தான் வாசிப்பாங்க போலிருக்கு ரெண்டு பேரும்.

வெயிட்டிங் ரைட்டரம்மா...
 

Infaa

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 7, 2022
Messages
803
அந்த பரமேஸ்வரனால் அவங்க படுற பாட்டை விட, எங்க பாடுதான் பெரும் திண்டாட்டமா இருக்கு.

எப்போ இறுதி அத்தியாயம் வருமோ, அதுவரை சோக ராகம் தான் வாசிப்பாங்க போலிருக்கு ரெண்டு பேரும்.

வெயிட்டிங் ரைட்டரம்மா...

அவ்வளவு நாள் சோகம் இருக்காது, நிலைமை சரியாகர வரை இருக்கும்.

நன்றி!
 

sme

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 9, 2024
Messages
28
Mudichchathum moththamaa padikkalamnu thonuthu eppo....
Aanaalum evlo appa gondaa erukka koodaathu 🤧🤧🤧
 

Kothai Suresh

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
108
அய்ய நைனிகாவே மெச்யூர்டா இருக்கா, யூ. ஜி முடிக்க போறா இன்னும் தெளியல. கஷ்டம், பாவம் டா நீ
 

Infaa

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 7, 2022
Messages
803
Mudichchathum moththamaa padikkalamnu thonuthu eppo....
Aanaalum evlo appa gondaa erukka koodaathu 🤧🤧🤧

ஹா...ஹா.... அவர் ஆட்டம் எல்லாம் இன்னும் ஒரு பதிவுதான்

நன்றி!
 

Infaa

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 7, 2022
Messages
803
அய்ய நைனிகாவே மெச்யூர்டா இருக்கா, யூ. ஜி முடிக்க போறா இன்னும் தெளியல. கஷ்டம், பாவம் டா நீ

என்ன செய்ய? அப்பா பொண்ணு....

நன்றி!
 

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,986
தென்றல் பீலிங்ஸ் எல்லாம் ரெம்ப கொடுமை writer சகி வித்தியாசமான கேரக்டர் உள்ள ஸ்டோரி முதல் தடவை படிக்குறேன் செம செம சூப்பர் 💚💚💚💚💚💚💚💚💚💚💚💚
 

Infaa

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 7, 2022
Messages
803
தென்றல் பீலிங்ஸ் எல்லாம் ரெம்ப கொடுமை writer சகி வித்தியாசமான கேரக்டர் உள்ள ஸ்டோரி முதல் தடவை படிக்குறேன் செம செம சூப்பர் 💚💚💚💚💚💚💚💚💚💚💚💚

மிக்க மகிழ்ச்சி....

நன்றி!
 
Top