• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வாணிலா அழகன்

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
21
அவள் -1
🤎🤎🤎

காலிங் பெல்லை அழுத்தி விட்டு காத்திருந்தான்.. அந்த காத்திருக்கும் நிமிடத்தில் காத்திருபவரை பற்றி தெரிந்து கொள்வோம் சுந்தர் ( பெயருக்கு ஏற்ப பவுத் சுந்தர்ஹே கலையானவன்)..

சிலை மென்பொருள் மேலாளர்.. கலை நயமிக்கவர்..

கதவு திறந்த பாடுயில்லை.. மீண்டும் ஒலி ஒலித்து அடங்கியது.. ஷாலு குட்டி தான் வந்து கதவை திறந்து விட்டு ஓடினாள்..

வீடே சுனாமிக்கு பின் வரும் அமைதி.. அப்பொழுது தான் ஞாபகம் வந்தது.. அச்சோச்சோ மணியை பார்த்தான் 8.00 தாண்டியதை முள் காட்டியது..

"அஜித்.. அஜித்" ( நம்ம ஆளு பக்க தல ரசிகராக்கும்) "அஜித் அம்மா எங்கடா".. பதிலே காணும்.. அவன் கையில் இருந்த வீடியோ கேம் ( செல் போனில் தான் அம்மாக்கள் பாவம் அனுபவம்) பிடிங்கினான்..

"அம்மாஆஆஆஆஆஆ.. அம்மா".. அவன் அலறல் ஒலியை அடங்கிட மீண்டும் அவனிடம் திணித்து விட்டு அப்படியே அம்மா மாதிரியை என்றவாறே நகர்ந்தான்..

நேராக சென்றவன் பெட்ரூமை எட்டி பார்த்தான். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தால் சிந்தியா.. அருகில் சென்றவன் எழுப்ப மனமின்றி விலகி வந்தான் .. லூங்கிக்கும்.. பனியனுக்கும் மாறியவன்.. முகம் கழுவி காஃபி கலக்கிறேன் பேர்வழி என பாத்திரங்களை பறக்க விட பதறியடித்து ஓடி வந்தாள் சிந்தியா..

"ஏங்க என்னை எழுப்ப வேண்டியது தானே".. அவளுக்கு யார் மீது கோபம் இருந்தாலும் சரி அவர்களின் (பசி மீது மட்டும் கோபம் வருவது இல்லை) உணவு அளித்தலில் காட்ட மாட்டாள்..

"இல்லமா.. நீ நல்லா தூங்கிக்கிட்டு இருந்த அதனால் தான் உன்னை ஏன்?? எழுப்ப வேண்டாமே என்று தான்"..

"சரி.. சரி விலகுங்க என சட சடவென்று சமையலில் நுழைந்தாள் சிந்தியா"..

இரவு உணவாக ரவா தோசையும் அதற்கு இணையாக இஞ்சி சட்னியும் கார துவையலும் சற்று என பசிக்கு பறந்து போனது..

குழந்தைகள் எல்லாம் தூங்க வைத்த பின்னர்.. பாலை டம்ளரை எடுத்துக்கொண்டு பெட்ரூக்கு சென்றவள் சுந்தர் இடம் பாலை தந்தாள்..

பாலை வாங்கியவன் அருகில் இருந்த டேபிள் விளிம்பில் வைத்து விட்டு ஆசையுடன் அருகில் சென்ற சுந்தரின் நாசியினை துளைத்தது காலையில் இருந்து இரவு வரை சமைத்த சமையல் மசாலாவின் நாற்றம் நெடி ஏறியது..
சற்றென விலகி கொண்டவன் சிந்தியா.. சிந்தியா..

"ம்.. ம்.. சொல்லுங்க"..

"சாரி.. ம்மா.. ஆபிஸ்ல இன்றைக்கு மீட்டிங் அதனால் தான் என்னால வர முடியல.. நீயாவது ஒரு போன் செய்து இருக்கலாம் தானேமா. நீ சும்மா தானே வீட்டில் இருக்கிற".

"அப்ப நீங்கள் போனை கூட பார்க்கவில்ல?"

அகவையில் அகப்பட்ட எலியை போல விழித்துக்கொண்டே 'ஏன் டா வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டியா' "சாரிமா.. சாரிமா.."

"நீ அத்தையை கூப்பிட்டுக்கொண்டு போய் விட்டு வரவேண்டியது தானே எங்க, இப்ப கால் வீக்கம் எப்படி இருக்கு காட்டு".. இழுத்து மெத்தையில் அமர வைத்து புடவையே மேலே தூக்கியவன் கையை தட்டி விட்டு எழ முயன்றவளை ஒரு கையால் பிடித்துக்கொண்டு சேலையை விலக்கி பார்த்தான். "என்னடி இப்படி வீங்கி இருக்கு.. நான் வரலன்னா என்ன நீ அத்தையை அழைச்சிக்கிட்டு போக வேண்டியது தானே சிந்தியா"..

"ஏன், சிந்தியா இப்படி எல்லாவற்றிற்கும் தர்க்கம் செய்கிற வாழ்க்கை வாழ்வதற்கு.. வாழ்க்கையே வேறு கோணத்தில் பார் சிந்தியா மிகவும் அழகானது!! இதை ஏன் நீ புரிந்துக்கொள்ளவே மாட்டேங்கிற"..

அவ்வளவு தான் தாமதம் மூக்கை உறிஞ்ச ஆரம்பித்தாள்..

"என்ன, செய்ய உங்கள் கர்மம் என்னை உங்க தலையில் கட்டி விட்டார்கள். நீங்களும் வளர்த்த பாவத்திற்கு எனக்கு வாழ்க்கை தந்து விட்டீர்கள். ஆஆஆ" என வாய் விட்டு அழ ஆரம்பித்தாள்..

" அம்மா.. தாயே வேணாம் நான் எதை பற்றி பேசினாலும் எந்த கோணத்தில் யோசித்தாலும், நீ திரிக்கோணத்தில் தான் போய் நிற்ப குழந்தைகள் எழுந்து வந்து விட போகுந்துங்க.. ஆளை விடுமா" என்றவாறே குப்புற படுத்து காலை ஆட்டிய படியே உறங்கி போனான்.

மறுநாள் அதிகாலை பொழுது எப்படி புலரும் என்ற உணர்வுகளுடன் உறங்கினான்..


அவள் வருவாள் -2
 

வாணிலா அழகன்

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
21
அவள் -2
🤎🤎🤎


சிந்தியா சுந்தரின் அத்தை மகள்.. அத்தையின் வேண்டுக்கோளுக்கு இனங்க திருமணம் செய்துகொண்டான்.. ஆனால் அவன் ஒருபோதும் அப்படி சிந்தியா இடம் நடந்து கொண்டது கிடையாது.. இருவரும் நல்லொரு தம்பதியினர் தான்..

அவளால் அவன் ரசனைக்கு ஈடுக்கொடுத்து போக இயலாமை தான் அப்ப.. அப்ப.. இந்த மூக்குறிஞ்சும் படலம்..

ஒருவாரமாக இப்படியாக தேங்காய் சட்னி.. இட்லி மட்டுமே தொடர்ந்தது..

"சிந்தியா.. இன்றைக்கு என்ன?"

"இட்லி, தக்காளி சட்னி"..

"ஏன்டாமா, சிந்து வீட்டில் மளிகை பொருட்கள் இல்லையா?"

"ஏன் கேட்கிறீங்க.. இந்த நெக்கலுக்கு ஒன்றும் குறைச்சல் இல்ல.. என்னால் இவ்வளவு தான் முடியும்.. உடம்புக்கு இதான் நல்லது"..

"யார் உடம்பிற்கு மா"😀

"ஏன் சொல்லமாட்டிங்க காலையில்" என சிந்தியா அவளுடைய வேலைகளை பட்டியல் போட ஆரம்பித்தாள். கண் விழிக்கும் போது அங்கிருந்த பட்டாளமே மறந்து போய் இருந்தனர்..

சின்ன.. சின்ன விசயத்திற்கு கூட சிந்தியாவின் கத்தல் ,, தொட்டதற்கு எல்லாம் ஒரு குத்தல் பேசி எப்படி தொடங்கினாலும் அது யூடேன் அடித்து கடைசியாக சண்டையில் வந்து முடிவடைவதுமாக தான் இருந்து..

ஆபிஸில் கண்களை உறக்க மூடி ஆழ்ந்து போய் இருந்தான் சுந்தர்..

"சார்.. சார்... சார்"..

தன்னை தட்டிய எழுபிய பின் உணர்வுக்கு வந்தவனாய்.. "ஓ.. சாரி சேதுராமன் சார்.. என்ன சொல்லுங்க"..

"சார் இன்றைக்கு"..

"ஆஹா.. சாரி சார்.. கவலைப்படாதீர்கள் ஷார்ப்பா 5.30 க்கு பார்ட்டி.. நீங்க எல்லாருக்கும் பத்திரிகை தந்து விட்டிர்களா??"

"ம்ம்.. தந்துட்டேன் சார்.. நான் அதற்காக வரல உங்களை தான் பார்க்க வந்தேன்"..

"சொல்லுங்க சார்"..

"சொல்கிறேன் என்று தப்பாக நினைக்காதீர்கள்.. நீங்களும், என்னை அப்படி தான் நடத்தி உள்ளீர்கள், நானும் உங்களை அப்படி தான் நானும் பார்க்கிறேன் தம்பி"..

"எதுவாக இருந்தாலும் சொல்லுங்க" "சார்! நான் எப்பொழுதும் உங்களை என் அப்பா ஸ்தானத்தில் வைத்து தான் பார்க்கிறேன் நீங்கள் தாராளமாக சொல்லாம் சார்!!"

கொஞ்சம் தயங்கியவர் பின்னர் தொடர்ந்தார்.

"நீங்க ஆபிஸிக்கு வந்ததிலிருந்து நான் பார்க்கிறேன்.. நீங்கள் தேனீ மாதிரி உழைப்பாளி.. சிரித்த முகம் மாறாதவர்.. இங்கே உள்ள எத்தனை பெயருக்கு உங்களால் கஷ்டம் போன இடம் தெரியாமல் போய் இருக்கின்றன.. ஓடி.. ஓடி வளைய உதவி செய்தவர்.. ஆனால் கொஞ்ச நாட்களாக ஏனோ ஒருவித சோகம் முகத்தில் ஒட்டிக்கொண்டு இருக்கு சீக்கிரமாக அந்த முகமூடியினை கழற்றி வீசி விடுங்கள் தம்பி.. அது உங்களுக்கு பொருந்தவில்ல" என்றவர் சற்று என வெளியேறினார்..

சுந்தர் அவர் சொன்ன விதத்தினை ரசித்தவன் மௌன சிரிப்புடன் அன்றைக்கு முழுவதும் குதூகலத்துடன் அனைவருடனும் சேர்ந்து உழைத்தான்..

பார்ட்டி முடிந்த பின்னர் அனைவரும் சேதுராமன் சாரை கட்டி தழுவி அணைத்தபடி அவரின் ரிட்டயர்மென்ட்க்கு வாழ்த்துகள் கூறி வழி அனுப்பினர்..

நல்ல மனுசன் என அனைவரும் கூறி மல்கினர்..

விழா முடிந்து வீட்டிற்கு முன் கார் வந்து நின்ற பொழுது நடுதிசையை தொட்டு விட்ட பரப்பரப்பில் இருந்தனர் மேக மூட்டங்கள்!!


அவள் வருவாள் -3
 

வாணிலா அழகன்

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
21
அவள் -3
🤎🤎🤎

மேகங்கள் இடையே கண்ணாமூச்சி காட்டி கண்சிமிட்டும் நட்சத்திர கூட்டங்கள் சுந்தரை கண்டு நகர்ந்து கொண்டன..

காலிங் பெல் ஒருமுறைக்கு இருமுறை ஒலித்து அடங்கின..

தலையை சொறிந்தபடியே அரை தூக்கத்தில் நடந்து வந்த சிந்தியாவை பார்க்கும் போது சித்தானைக்குட்டி போல அந்த இருட்டில் தெரிந்தாள். வாய் விட்டு வெளியே வந்த சிரிப்பினை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டான் சுந்தர்..

"என்னங்க சாப்பாடு எடுத்து வைக்கவா.. தூக்கம் கலையாமலே கேட்டாள்"..

"ஒன்னும் வேணாமா!! பார்ட்டியில் சாப்பிட்டு வந்துட்டேன். நீ சாப்பிட்டியா, பசங்க சாப்பிட்டு விட்டிர்களா?"

"வேணாமா, அப்ப டைனிங் டேபிளில் உள்ள சாப்பாட்டை எல்லாம் கொஞ்சம் ப்ரிட்ஜ்ல எடுத்து வைச்சிட்டு படுங்க"..

ப்ரிட்ஜ்ல சாப்பாட்டை எடுத்து வைத்துக்கொண்டே, "இன்னைக்கு என்னம்மா சாப்பாடு செய்து தந்த பசங்களுக்கு, சிந்துமா.. சிந்து".. குறட்டையே சத்தமே பதிலாக வருவதை கண்டு நகைத்தவாறு அங்கிருந்து நகர்ந்தவன்..

ஷோபாவிலேயே படுத்து உறங்கும் தன் மனைவிக்கு போர்வை போர்த்தி விட்டு.. பசங்க அறைக்கு உறங்க சென்றான்.

மறுதினம் காலை;

நிர்வாகத்தில் இருந்து போன் அழைப்பு வந்தது..

சுந்தர்..

"வணக்கம் சார்"..

"வணக்கம் சுந்தர்".

"சொல்லுங்க சார்"..

"கம்பெனிக்கு துணை மேலாளர் தேர்வு செய்ய ஆட்கள் எடுக்க விளம்பரம் தந்து இருந்தோம் அல்லவா அதற்கான தேர்வு நாளை தானே"..

"ஆமாம் சார்"..

"ஓகே சுந்தர்".

" சார் நான் எத்தனை மணிக்கு வரனும் சார்" என்ற போதே அவன் குரல் கொஞ்சம் தொவ்வல் விழுந்து இருந்தது. 'நாளைக்கு ஒரு நாள் தான் லீவ், ம்ஹூம்' என மனதுக்குள் யோசித்தபடியே பெருமூச்சை வெளியே விட்டான்.

"சுந்தர் நான் கூப்பிட்டது. நாளை நீங்கள் வரனும் என்ற அவசியம் இல்லை நாங்கள் இண்டர்வியூ நடத்தி முடித்து விடுகிறோம்.. நீங்கள் மண்டே ஆபீஸ் வந்தால் போதும் என சொல்ல தான்" என்றவரின் குரல் அவனுக்கு தெய்வாதினமாக ஒலித்தது.

"ஆஹ்! ஓகே சார், ஓகே சார், தேங்க்ஸ் சார்". என்றவனிடம்.

" இட்ஸ் ஓகே சுந்தர் .. நல்ல எஞ்சாய் செய்யங்க".. என்றவரின் இணைப்பு துண்டிக்கப்பட்டது..

சுந்தர் குஷி மூட் உடன் பசங்களை அழைத்தான்..

"இன்றைக்கு எங்க போகலாம்.. எங்க..??

"அப்பா பீச்.. பூங்கா"..

" அப்பா.. அப்பா.. பொம்மை .. பொம்மை".. ( மாதம் இருமுறை பொம்மை ஷாப்பிங் தான் சின்னம்மா குட்டிக்கு).

"ஓ..ஓகே.. ஓகே.. சிந்தியா நீ சொல்லு எங்க போகலாம்"..

"எங்காவது அப்பாவும், புள்ளையும் போய் விட்டு வாங்க. என்னை விடுங்க.. நான் கொஞ்சம் நிம்மதியாக தூங்குவேன்"..

"சிந்துமா உன் மதியம் தூக்கம் என்னைக்கு உன்னை விட்டு தொலைகிறதோ அன்னைக்கு தான் உன் உடம்புக்கு நல்லது"..

"அப்ப.. இப்ப.. என்ன சொல்ல வரிங்க??

"நான் சினிமா.. பூங்காவானு கேட்க தான் வந்தேன். ஒன்னும் சொல்ல வரல" என்று சிரித்தான்.. அவனுக்கு நன்றாக தெரியும் இதற்கான முடிவு.. ஆதலால் அவன் குழந்தைகள் முன்பு விவாதங்களை முடிந்தவரை தவிர்த்து விடுவதே அதிகம் முற்பட வேண்டி இருக்கிறது..

ஒருவழியாக குழந்தைகளின் அழுகையே மேலோங்கி ஜெயித்தது.. அனைவரும் சேர்ந்து ஷாப்பிங்.. சினிமா.. ஹோட்டல் என முடிவுற்றது..

காரில் வரும் போது பசங்க உறங்கி போய் இருந்தனர்..

"சிந்துமா!! சிந்து".. ரம்மியமான குரலில் அழைத்தான்..

" ம்.. சொல்லுங்க"..

"மூவி எப்படி இருக்கு??

சொரம்மே இல்லாத குரலில் "நல்லா இருக்கு"..

"அந்த படத்தில் வந்த ஹீரோயினியே பார்த்தால், கல்யாணம் ஆன பொழுது நீ இருந்ததை போலவே இருக்கிறாள் இல்ல"..

"இல்ல.".

"அவ தமிழ் பொண்ணு மேக்கப் இல்லாமல் தமிழச்சிக்கே உரித்தான கலர்.. நல்ல உடல்வாகு எல்லாம் அளந்து வைத்தார் போல் ரம்மியமான அழகு"..

--------------

"ஹீரோ சறட்டு என அவள் அறியாத வண்ணம் இழுத்து அணைக்கும் பொழுது அவள் விழி உண்மையாகவே பேசாமல் பேசுகிறது, ச்சே.. சான்ஸ்சே இல்ல"..

"என்னுடைய நொம்ப நாள் ஆசை சிந்து.. இப்படி யாருமே இல்லாத ரோட்டில் நள்ளிரவில் மெல்லிசை கேட்டப்படி நீ என் தோளில் சாய்ந்து பேசியபடியே நான் காரை ஓட்டனும்.. பனியின் காற்றை சுவாசித்தபடி சில்லென்ற மேகத்தில் நிலாவின் தென்றலை தீண்டியபடி .. இப்படி நிறைய சின்ன.. சின்ன ஆசைகள் இருக்கு.. அதில் இப்ப ஒன்று நிறைவேற போகிறது" என்றவனின் சந்தோஷத்தை கலைத்தது சிந்தியாவின் குறட்டை ரிங்காரம்..

சிந்தியாவின் தூக்கத்தை கலைக்காமல் மனதிற்குள் சிரித்தபடியே காரை விரட்டினான்..

அவள் வருவாள் -4
 
Top