• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வாணிலா அழகன்

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
21
அவள்-6
🤎🤎🤎


சுதா என்ன ஒன்றும் சொல்லவில்லை??

"வேண்டாம் சார் ஏன், உங்களுக்கு சிரமம்? என் தம்பியே வர சொல்லி இருக்கிறேன்.. நீங்கள் கிளம்புங்க"..

"இதில் என்ன, சிரமம் நானா உங்களை தூக்கி போக போகிறேன்.. கார் தானே சுமக்கிறது.. வாங்க சுதா"..

சுந்தர் எவ்வளவு அழைத்தும் சுதா மறுத்ததாள்..

"சுதா ஏன்?? என்னுடன் வர இவ்வளவு தயக்கம் காட்ட வேண்டும்"..

"அப்படி எல்லாம் ஒன்னுமில்ல சார்! என் தம்பிக்கு போன் செய்து இருக்கேன். இப்ப வந்து விடுவான்.. நீங்கள் கிளம்புங்க சார்!"

"சுதா இனி எதற்கு சார்! எல்லாம் நீங்கள் சுந்தர் என்றே கூப்பிடலாம்".

"ஓகே சார்! இப்பொழுது அவள் கண்ணில் மது ரசத்துக்கு பதிலாக பதற்றம் தொற்றி இருந்தது தெரிந்தது"..

"மறுபடியும் சாரா?? ஹாஹாஹா"

"சுதா உங்கள் தம்பி வரும் வரை உங்களை பற்றி சொல்லுங்களேன் தெரிந்து கொள்வோம்"..

"என்னை பற்றி தெரிந்து கொள்ளும் அளவிற்கு பெரிசா ஒன்றுமில்லை சார்! சாரி சுந்தர்.. ஒரு சின்ன குடும்பம்.. அதில் அம்மா!! நான் என சிறு கூட்டு பறவைகள் கூட்டம் அவ்வளவு தான்"..

"உங்களை பற்றி கூறினீர்கள்! என்னை பற்றி கேட்கவே இல்லை?"

"ஓஓஓஓஓ?? சாரி தம்பி வருகையை எதிர்பார்கிறேன் அதனால் தான் சொல்லுங்க சுந்தர்"..

"சுதா நான் கிராமத்தில் பிறந்தவன் என்னுடன் பிறந்தவர்கள் ஆறு பேர் நான் தான் கடைசி பையன் படிப்பில் அதிக ஆர்வமும் எனக்கு தான் எங்க ஊரில் படிப்பு வசதி குறைவு அதனால் எங்க அப்பா என்னை அத்தை வீட்டில் வந்து விட்டு விட்டார்கள் அத்தையை சும்மா சொல்ல கூடாது அவங்க பசங்களையும் என்னையும் பேதம் பார்க்காமல் வளர்த்தார்..

மேல் படிப்பு முடிந்ததும் அத்தையின் வேண்டுக்கோளுக்கு இனங்க அப்பா என்னை அவர்கள் மூத்த மகளுக்கு திருமணம் செய்து வைத்தார்கள் இப்ப எங்களுக்கு ஆண் ஒன்று பெண் ஒன்றென என அழகான குடும்பமாக வாழ்கின்றோம்"..

" ஓகே சுந்தர் இப்பொழுது நீங்கள் கொஞ்சம் நிதானமாக இல்லை காரை தனியாக ஒட்டிக்கொண்டு சென்று விட முடியுமா? நான் வேணும் என்றால் அருகில் இருக்கும் ஆட்டோவை கூப்பிடவா?"

"அதெல்லாம் எதற்காக சுதா நான் நல்லா தான் இருக்கேன் நானே டிரைவிங் செய்து விட்டு சென்று விடுவேன் நோ ஆட்டோ பேபி என்றவாறே காரின் அருகில் சென்றவன் பை சுதா நாளை சந்திப்போம்"..

ம(மா)து- வும் சேர்ந்த மயக்கத்தில் சற்றே நிலை தடுமாறி தான் போனான்..

சுந்தரின் கார் கார்னரை விட்டு மறையும் வரை காத்திருந்து பின்னர் சேர் ஆட்டோ ஒன்றில் தம்முடைய இருப்பிடத்தை அடைந்தாள்..

மேகங்கள் ஒன்றை ஒன்று உரசியபடி வண்ண ஜாலங்களில் கண்சிமிடும் வெள்ளி நிலவினை ரசித்து கொண்டு ஓடி மறைந்தன..

ஜன்னல் வழியாக இதனை எல்லாம் பார்த்த படியே உறங்கி போனாள்..

ஏ.சி அறையினுள் இமைகள் மட்டும் மூடி இருந்தது இதயம் ஏனோ உறங்கமின்றி தவித்தது சுந்தருக்கு!!

பின் வரும் நாட்களில் எல்லாம் சுந்தர் கேபின் வழியாக அவளை நோக்குவதே வாடிக்கையாகி போனாது..

சுந்தர் இது நீ இல்ல இது உன் குணம் அல்ல ஏன் இந்த மாற்றம் வர காரணம் என்ன?? மனசாட்சி கேட்கும் ஆயிரம் கேள்வி கனலுக்கு விடை தேட ஆரம்பித்தான்..

அவள்;
எப்பொழுதும் உதட்டோரத்தில் ஒட்டி இருக்கும் மாறாத மறையாத சிறு புன்னகை.. வழியே சென்று உதவிடும் உணர்வுகள்.. திகட்டாத தேன் பேச்சுகள்.. பெண்களுக்கு உதவி என்றால் ஒருபடி மேலே சென்று உதவிடும் நற்குணம்..

அவள்;
அவள் உடுத்திய உடையை மறுமுறை உடுத்தி யாரும் கண்டதில்லை.. வாங்கும் சம்பளத்தை இதற்கே செலவிடவாளோ ..

அவள்;
தேனீ போன்ற சுறு.. சுறுப்பு.. வேலையில் நளினம்.. இவ்வளவிலும் அவளை தவறான கண்ணோடத்தில் யாரும் பார்த்தது இல்லை.. அனைவரையும் அரவணைத்து அவள் நடத்திய விதத்தில் தான் கம்பெனி முன்னேறி என்பதில் சிறிதும் ஐயமில்லை..

அவள்;
அன்புடன் கூடிய அழகு சுந்தரை மட்டுமல்ல பார்ப்பவர்கள் மனதை கிரங்க தான் செய்வாள்..

அவள்;
மதிய இடைவேளையில் உணவை பகிர்ந்து உண்பதே வழக்கமாக வைத்து உள்ளாள்.. அவளை விரும்பி படிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.. லட்ச வாசகர்களில் நானும் ஒருவன் என்பதில் ஆனந்தமே..

"என்ன?? இன்றைக்கு நானும் உங்களுடன் சேர்ந்து சாப்பிடலாமா?"

சுந்தரின் திடீர் வருகையால் அனைவரும் எழுந்து நிற்க சார்?? நீங்க??

"பரவாயில்லை எல்லாரும் உட்கருங்க.. ஏன் நான் உங்களுடன் சாப்பிட கூடாதா?"

"அப்படி எல்லாம் இல்லை சார்?" என்றவர்கள்.. அவருக்கு என ஒரு இருக்கை ஒதுக்கப்பட்டது..

"இன்றைக்கு வீட்டுக்காரர் அம்மா அவங்க வீட்டிற்கு போய் இருக்கிறார்கள் அதனால் சாப்பாடு கொண்டு வரவில்லை.. உங்களிடம் ஷேர் பண்ணிக்கலாமா?"

"சார்.. நீங்க கேட்கவே வேண்டாம்??"

ஒரே தட்டில் அனைத்து உணவுகளும் சங்கமித்தை கண்டு சுந்தர் தன் பள்ளி பருவத்தை நினைவுகள் நிழல் படிய கண்ணின் கடைவாயில் நீர் திவலைகள் எட்டி பார்ப்பதை கவனித்த..

"சார் காரமாக இருக்கிறதா?? அப்ப அந்த உணவு நம்ம ராஜேஸ்வரி மேடத்துடையதாக தான் இருக்கும்.. ஹாஹாஹா"..

"சார் அதில் சுவையான உணவாக இருந்தால் அது தான் நம்ம சுதா மேடம் உணவாக தான் இருக்கும்"..

"சுதாவா!" அவள் இப்படி சாகசமாக அனைவரிடமும் அன்பாக பழகுவதை பார்க்கும் ஒவ்வொரு நிமிடமும் அவள் மீது அன்பும்.. மரியாதையும் அவள் மீது அதிகமாகிறது சுந்தர் மனதிற்குள் எண்ணிய படியே உணவை உண்டான்..

சுதா தந்து விட்டு சென்ற பேப்பர்ஸ் எல்லாம் சரி பார்த்தப்படி இருந்த பொழுது தான் சுந்தரின் மனதில் சற்று என தோன்றிய மின்னல் அடித்த கேள்வி??

"ஆமாம்" - அவள் பெயர் சுதா இதை தவிர ஆபிஸில் உள்ளவர்களுக்கு அவளை பற்றி வேறு ஒன்றும் தெரியவில்லை..

அவள் கொஞ்சம் அறிய வேண்டிய புரியாத புதிராக தான் தோன்றி மறைந்தாள்..

பின்வரும் நாட்களில் புதிருக்கு விடை கிடைக்குமா என நாமும் சுந்தருடன் சேர்ந்து பார்ப்போம்..


அவள் வருவாள்-7
 

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,934
நிறைய திருமணங்கள் நீர்பந்தம் மூலமோ, நன்றிகடன் மூலமோ நடக்கிறது, சுந்தர் போல ஆசைகளை அடக்கி குடும்பம் நடத்தும் இருபாலரும் கொஞ்சம் போற்றகூறியவர்கள் தான் 😊😊😊😊😊😊
 

வாணிலா அழகன்

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
21
நிறைய திருமணங்கள் நீர்பந்தம் மூலமோ, நன்றிகடன் மூலமோ நடக்கிறது, சுந்தர் போல ஆசைகளை அடக்கி குடும்பம் நடத்தும் இருபாலரும் கொஞ்சம் போற்றகூறியவர்கள் தான் 😊😊😊😊😊😊
உண்மை தான் என் தோல் ❤️ ❤️
 
Top