• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Rizka muneer "Rizii"

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 12, 2022
Messages
16
பறவைகளின் கவிபாட்டு காதுகளில் ரீங்காரமிட ஏதோ பாறை மேல் உறங்கியிருப்பதை போல் தலையணை கணக்க மைவிழிகளை கசக்கியவாறு மெதுவாக கண்ணை திறந்து பார்த்தவள் விழிகளோ சாசர் போல் ஏகத்துக்கு விரிந்தது..

இரவு உறக்கத்தில் உருண்டு சென்று வீரின் படிக்கட்டு வயிற்றை மஞ்சமாய் கொண்டு கட்டிப்பிடித்து சுகமாய் உறங்கியிருந்தவள் தற்போது தான் அதை கவனித்தவள் உறக்கக்கலக்கம் எங்கோ பறந்து விட்டது...

பதிறி அடித்து பாய்ந்து விலகி கட்டிலின் ஓரத்தில் அமர்ந்து கொண்டவள் தன்னையே நொந்து கொண்டாள்.

"அய்யோ நான் எப்போ அவர கட்டி பிடிச்சேன்.. நான் இங்க தானே தூங்கிகிட்டிருந்தேன் "தன்னை தானே கேட்டவாறு கன்னத்தில் ஆள் காட்டி விரலை வைத்து யோசித்தாள்..
தன் வீட்டுல் தினமும் தேஜூவை கட்டிப்பிடித்து உறங்குவதை அம்மணி மறந்து விட்டார் போலும் ..

மெதுவாக எட்டிப்பார்த்தாள் வீரை.. அவனின் மூச்சுக்காற்று சீராக வெளியேறிவதே அவன் நன்றாக உறங்குகிறான் என்பதை குறித்துக் காட்ட நிம்மதியாய் நெஞ்சில் கையை வைத்து நிம்மதியாய் ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டவாரே "நல்ல வேற அவருக்குத் தெரியல.. நான் அவர கட்டிப்பிடிச்சு தூங்கினத பார்த்திருந்தாரு சலங்கை இல்லாமலே வானத்துக்கும் பூமிக்கும் தையா தக்கான்னு குதிச்சிருப்பாரு" தனக்கு தானே கூறிக்கொண்டு சத்தமில்லாது எழுந்து அங்கிருந்து ஓடி விட்டாள் தன் அறையை நோக்கி..

நேற்று வாங்கி வந்த தாவணிகளில் கருப்புநிற தாவணி மற்றும் அதற்கு பொருந்தும் விதமாக சிவப்பு நிற ரவிக்கை மற்றும் பாவாடையை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் நுழைந்தாள்..

கண்ணாடியில் தன் முகத்தை பார்த்தவள் விழிகள் அன்னிச்சையாய் சங்குக்கழுத்தில் பதிந்தது..
"அவரோட செயின் எப்படி என் கழுத்துக்கு வந்தது" யோசனையுடன் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த வீரின் செயினை மென்மையாய் தன் விரல் வருடினாள்.

மதியிற்கு நெற்று நடந்த சம்பவம் பொரி தட்டியது.. ரவிக்கையில் செயின் மாட்டியிருந்ததால் அதை வீர் முத்தம் கொடுக்கும் வேலையில் பெண்ணவளின் கழுத்திற்கு இடம் மாத்தியிருந்தான்..

வீர் மாங்கல்யத்தை கழட்டியதால் மதியின் மனதில் ஏற்பட்ட வலியிற்கு மருந்திட்டது போல் சில்லென்ற உணர்வு உள்ளத்தில் பரவியது,, மாங்கல்யத்தை வாங்கி எடுத்தவன் அவன் கையாலேயே அவன் கழுத்திலிருந்த செயினை அவளுக்கு அணிவித்ததால் அது அவளுக்கு ஓர் பொக்கிஷமாய் தெரிந்தது... அவனுக்கு அது வெறும் செயின் ஆனால் அவளுக்கு அது மாங்கல்யத்தை விடவும் பெருமதியானது.. அது தன்னவன் கழுத்தில் இவ்வளவு காலம் முத்தமிட்டுக் கொண்டு இருந்ததல்லவா... செயினிற்கு வலிக்காது அதை வருடியவாறு உதட்டை கடித்து கன்னங்கள் சிவக்க அரும்பாய் புன்னகையை சிந்திந்திவிட்டு தன் காலை கடன்களை செய்யத் துவங்கினாள்.


கடிகாரத்தின் பெரிய முள் மணி ஏழை தாண்டிக் கொண்டிருக்க இரவு முக்கியமான வேலை செய்து விட்டு தாமதமாய் உறங்கியதால் தினமும் அதிகாலையிலேயே எழுபவனுக்கு இன்று தாமதமாய் விழிப்பு தட்டியது... எழுந்தவன் கைகளை முறுக்கி சோம்பல் முறித்தவாறு அறையை சுற்றிப்பார்த்தவன் வழக்கம் போல் தன் அறைக்கு அருகே இருந்த உடற்பயிற்சி அறைக்குள் புகுந்து கொண்டான்.

சிலமணிநேரம் தன் உடலுக்குத் தீனி போட்டவன் களைப்பின் காரணமாய் ஊற்றாய் ஊர்ந்து வடிந்து கொண்டிருந்த வியர்வையை துவாயால் துடைத்தவாறு குளியலறைக்குள் நுழையந்தவன் சிறிது நேரத்தில் பேன்ட்ட்டுடன் தலையை துவட்டியவாறு வெளியே வந்தவன் பின் தனது சர்ட்டை அணிந்து பட்டனை போடச் சென்றவன் விழிகளில் அருகிலிருந்த கண்ணாடி யன்னலில் போடப்பட்டிருந்த திரைசீலை காற்றில் அசைந்தாட அதன் வழியாக சிறிதாக ஓர் உருவம் புலப்பட புருவமுடிச்சிசுடன் யன்னலருகே சென்று திரைசீலையை முழுமையாய் விலக்கினான்..

காற்றில் மதி அணிந்திருந்த தாவணி மிதந்தாட கைகள் பூச்செடிகளுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்தாலும் கண்களோ தேர்ச்சிப் பெற்ற ஆய்வாளர் போல் தன் முன் மேலோங்கி எழுப்பப்பட்டிருந்த மதிலை ஆய்வு செய்து கொண்டிருந்தது.

ரிஸிமதி எனும் பிள்ளை பூச்சி ஆய்வாளரின் ஆய்வின்படி இந்த மதிலிருந்து தாவி குதிப்பது ஓன்றும் அவ்வளவு பெரிதாக இல்லை,
அவள் மனதோ இதெல்லாம் ஒரு உயரமா என கூச்சலிடும் அளவு வாகாய் அமைக்கப்பட்டிருந்தது..
அவள் வீட்டு மதிலை விட ஓர் அடி உயரமாக காணப்பட்டது..

"ச்சி.. லோகேஷன் மாறினாலும் இந்த பழக்கம் மட்டும் விட்டு போகமாட்டேங்குது" முணுத்தவாறு தன்னை தானே நினைத்து தலையில் அடித்துக் கொண்டாள் தன்னை ஒருவன் வைத்த கண் வாங்காது பார்த்துக் கொண்டிருப்பதை உணராது..

வீர் போட்டிருந்த கணக்கு முதல் முதலில் தப்பாய் போனது..
ஆம் அவன் நினைத்திருந்தது ராகுல்நாத், சீதா தேவியின் மகள் ஆடம்பர வாழ்கையுடனேயே பிறந்ததால் அவன் இதுவரை தொழில் விடயமாக சந்தித்திருக்கும் பணக்காரவீட்டுப் பெண்களை போல் நவநாகரிக பெண்ணாகவும் நவநாகரிகஉடை பழக்கத்தை உடையபளாகவும் திமிரிற்க்கு எந்த வித குறைச்சலின்றி வேலை என்று ஒன்றை கூறினால் பத்தடி சென்று நின்று இலட்சம் வார்த்தை எதிர்த்து பேசுபவளாய் இருப்பாள் என்றல்லவா நினைத்திருந்தான்,,,

ஆனால் இங்கோ அனைத்தும் மாறுபட்டுக் காணப்பட்டது..
ஆடம்பரம் என்பதே இவளிடன் கிடையவே கிடையாது..
இவளை கேட்டால் திமிரு எந்த கடையில் கிடைக்கும் என்று கேட்பாள் போலும்... அனைத்து வேலைகளையும் எதிர்பின்றி செய்கிறாள்..
மாசற்ற வதனம், விழிகளை பார்த்தவுடனே புரிந்து விடும் எந்த வித கல்லக்கபடமற்றவளென..
சொல்லப்போனால் ஓர் அப்பாவிக்கு உண்டான பத்து பொறுத்தமும் பாக்கவாக இவளுக்குப் பொருந்துகிறது..

மதி ஓர் குழந்தை மனம் கொண்டவள் என வீர் அறிவான்,, அவன் நினைத்ததை விட இவள் முற்றும் மாறுபட்டவள்.. இருப்பினும் இதை ஏற்றுக்கொள்ள அவன் தயாராக இல்லை.. ஏன் என்று காரணம் தேடினால் ஒன்றே ஒன்றும் தான் இவளால் என் தன் பாப்பாவை தான் இழுந்தேன்,, நினைக்கும் போதே கண்கள் சிவந்து இதயத்துடிப்பு எகிறியது..

பூக்களுக்கு நீர் ஊற்றிக் கொண்டிருந்தவளை பார்த்துக் கொண்டிருந்தவன் தன் சர்ட் பட்டனை போடாது தன் பார்வையை அவள் மேலிருந்து அகற்றி திரைசீலையை மூடிவிட்டு கண்களை இறுக்கி மூடித் திறந்தவன் "ஏய்.. பேப்ஸ், மேல வாஆஆ.. " என்று உச்சத்தானியில் கத்த
வீரின் ஆளுமை நிறைந்த குரல் வீட்டை தாண்டி வீட்டுத்தோட்டம் வரை எதிரொலித்து மதியின் செவிகளை எட்ட மாடியிலிருந்து குரல் வந்ததை யூகித்து கையிலிருந்த பூவாளியை நிலத்தில் போட்டு விட்டு பாவாடையை தூக்கிக் கொண்டு விரைந்தாள்.

வீரின் முன் காபி கப்புடன் மூச்சிவாங்க நின்றவளைப் அழுத்தமாய் பார்த்தவன் இங்க வா என்று அழைக்க அவனருகே வந்து நின்றவளின் கையிலிருந்த கப்பை எடுத்து அருகிலிருந்த மேசையின் மேல் வைத்து விட்டு அவளை நெருங்க அவளோ அவன் கோலத்திலும் செயலிலும் விழித்துப்பார்த்தாள்...

சர்ட்டின் பட்டன்களை போடாததால் படிக்கட்டு தேகத்தை தெளிவாக வெளியே எடுத்துக்காட்ட மார்பில் கொட்டை எழுத்துக்களால் அழகாக பாப்பா என்று பதித்திருக்க அதை பார்த்தவுடன் ஏனோ அறியாத ஓர் வலி மனதில் குடிகொண்டது..

யாரா இருக்கும்,, ஒரு வேல யார சரி லவ் பன்றாரோ,, நினைக்கும் ரணமாய் வலித்தது..

கண்ணை அகற்றாது பார்த்துக் கொண்டிருந்தவள் சிந்தையை கலைக்கும் வகையில் வீரின் உஷ்ன மூச்சுக்கள் வதனத்தை உரச அப்பொழுது தான் தன்னை நூலிடையின்றி நெருங்கியிருந்தவனை கண்டவள் இதயத்துடிப்பு எகிற சங்கடமாய் தலையை குனித்துக் கொண்டாள்..

"ஓய்.." என்றதும் நிமிர்ந்து மெல்ல பார்த்தவளை "பட்டன போட்டு விடு" என்று தன் சர்ட்டை நோக்கிக் கண்ணை காட்ட மதி ஸ்தம்பித்து நிற்க,

"உன்ன இங்க கூட்டிட்டு வந்தது எனக்கு வேல செய்யதான், சொல்ல போனா.. அது என்ன சொல்லுவாங்க வீட்டு வேல செய்றவங்கள.. " என்று யோசிப்பது போல் பாவனை செய்தவன் அவளையே கேட்டு வைக்க,

கண்களில் உவர்ப்பு நீர் கரித்துக் கொண்டு வர அதை கட்டுப்படுத்திக் கொண்டு "வே.. வேலைக்காரி" என்றதும்,

எல்லாலளாக நகைத்தவன் "ஆ யூ கரெக்ட் வேலைக்காரி.. இப்ப புரியுதா இங்க இருக்க உன் தகுதி என்னன்னு" என்று அழுத்தமாய் வார்த்தைகளால் இதயத்தை குத்திக் கிழிக்க அவன் அடுத்த வார்த்தையை பேசும் முன் கைகள் தானாய் அவன் அவன் சர்ட்டின் ஒவ்வொரு பட்டனாக பூட்ட ஆரம்பித்தது..


வீரின் முகத்தை நிமிர்ந்து பார்க்காது அனைத்து பட்டனையும் பூட்டி முடிந்து இரண்டு அடி பின்னால் சென்று தள்ளி நிற்க,

"அப்போ யாரு காலர்ர சரி பண்ணுவா" ஒற்றை புருவம் உயர்த்தில் வீர் வினவ வலியுடன் அவனை ஓர் பார்வை பார்த்துவிட்டு மறுபடியும் அவனை நெருங்கி காலரை சரி செய்துவிட்டாள்.

அவள் நகர முன் "போ போய் என் கோர்ட் கபோர்ட்ல இருந்து எடுத்துட்டு வா" என்று அடுத்த கட்டளை பிறப்பிக்க தலையை ஆட்டி விட்டு சென்று கபோர்ட்டை திறக்க அதில் விதவிதமாக பல கோர்ட்கள் அடுக்கி வைத்திருக்க அதை எடுத்துச் செல்வது இதழை பிதுப்பியவாறு திரும்பாது மெல்ல தலையை மட்டும் திருப்பி அப்பாவியாய் பார்த்து வைக்க அவள் பார்வையை உணர்ந்தவன் சர்ட் கைகளை சரி செய்தவாறு அவளை பாராது "எல்லாத்தையும் எடுத்துட்டு வா" என்க கண்களை விரித்து " எல்லாத்தையும் ஒரேயடியா போட போறாரா என்ன. " யோசனையுடன் தலையை ஆட்டி விட்டு அனைத்தையும் அள்ளிக்கொண்டு வீரின் முன் நிற்க,

"ப்ளாக் கலர்ர எடு" என்றதும் கட்டிலில் அனைத்தையும் வைத்து விட்டு கருப்பு நிறக் கோர்ட்டை எடுத்து நீட்ட,

அவளை பாராது "ஏன் மேடம் போட்டு விட முடியாதோ.. போட்டு விட்டா உங்க இமேஜ் டேமேஜ் ஆகிடுமா என்ன.." என்றவாரே அவள் முகம் பார்க்க சட்டென இல்லை எனும் விதமாய் தலையை தாறு மாறாய் இருபுறமும் ஆட்டி வைத்தவள் அவன் பின் புறம் செல்ல அவளுக்கு வாகாய் வீர் கையை நீட்ட கோர்ட் அணிந்து விட்டாள்..

"அந்த வோட்ஸ்ச எடு" என்க மேசையின் மீதிருந்த வோட்ஸ்சை எடுத்து அதையும் அணிவித்தும் விட்டாள்.

வோட்ஸ்சை ஓர் சூழற்று சூழற்றி சரி செய்தவன் கட்டிலிலிருந்த ஒரு தூசி துரும்பின்றி சுத்தமாயிருந்த அனைத்துக் கோர்ட்டையும் அவள் கையில் திணிக்க தடுமாற்றத்துடன் அனைத்தையும் பற்றிக் கொண்டவளை கணக்கில் கொள்ளாது "எல்லாத்தையும் பர்பெக்டா கிளீன் பண்ணிடு.. அண்ட் வோஷிங் மெஷின் யூஸ் பண்ண கூடாது.." என்று அழுத்தமாய் கூற அப்புறம் எப்படி எனும் விதத்தில் மதி பார்வை வீச " வீட்டுக்கு அவுட் சைட் ஒரு ஸ்டோன் இருக்கு.. அத யூஸ் பண்ணி கையால வோஷ் பண்ணு" என்று இதழை வளைத்து நகைத்தவாரே இடது கையால் மதியின் கன்னத்தை லேசாக தட்டினான்,

இவளுக்கு இது கடினம் என அவன் நினைக்க மதியோ ஆர்வமாய் தலையை ஆட்ட விசித்திரமாய் அவளை பார்த்து வைத்தவன் வேக நடையுடன் அறையை விட்டு வெளியேற அவன் பின்னே கைகளில் ஆடைகளை ஏந்தியவாறு பின் தொடர்ந்தாள் மதி..

மாடிப்படிகளிலிருந்து இறங்கியவன் நாசியை துளைத்தது சமையலறை பக்கமிருந்து காற்றில் பறந்து வந்த உணவின் மணம்..

வீரின் கால் அவனின் அனுமதியின்றியே சாப்பாட்டு மேசையை நோக்கிச் சென்றது...

மதி கையிலிருந்த ஆடைகளை ஒரு ஓரமாய் வைத்து விட்டு அவனிற்க்கு பரிமார ஆரம்பித்தாள்.

முகத்தில் எந்த வித உணர்வும் வெளிக் காட்டாது தட்டில் வைத்த இட்லியையும் சட்னியுடன் உண்ண ஆரம்பித்தான்..

சாப்பிட்டு முடிந்தவன் கையை கழுவி விட்டு மதி எதிர்பாரா நேரத்தில் அவள் தாவணியை பிடித்து இழுத்து அதில் கையை துடைக்க அவள் தான் விழி விரித்து பார்த்து வைத்தாள்..

அவள் பார்வையை அலட்டிக் கொள்ளாது அங்கிருந்து நகர்ந்தவன் பின் ரிவர்சில் வந்து "என்னோட பர்மிசன் இல்லாம நீ இங்கே இருந்து ஒரு அடிகூட நகரக்கூடாது.. இந்த வீர்ர பத்தி உனக்கு நல்லா தெரிஞ்சிருக்கும்னு நினைக்குறேன்.. சோ மைன்டிட்.. " என்று விரலை நீட்டி எச்சரிக்கை செய்து விட்டுச்செல்ல அவன் சென்ற திசையையே இமைகள் படபடக்க வெறித்து நோக்கினாள் மதி ..


துடிக்கும்...
Wʀɪᴛᴇʀ : Rɪᴢɪɪ💘
 
Top