• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Rizka muneer "Rizii"

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 12, 2022
Messages
16
"நோ எக்ஸ்யூஸ்.. இந்த மன்த்குள்ள எல்லாம் கிளியர் பண்ணிடனும்.. எல்லா ப்ரோப்லமும் கிளியர் ஆவும் வர அங்கயே இருந்து எல்லாம் ஒர்க்கயும் பார்த்துக்க.." வீர் தீவிரமாய் மொபைலில் தனது பி.ஏவுடன் உரையாடிவாரே தன் வண்டியை நிறுத்தி வைத்து விட்டு வீட்டினுள் நுழைந்தவனுக்கு சுர்ரென மண்டை சூடாகியது.

"ஐ கால் யூ பெக்.."என்று எதிர் புறத்தில் ஏதோ பேச வர அதை செவியில் ஏற்றாது அழைப்பை துண்டித்து விட்டவன் விழிகள் சோபாவில் அமர்ந்திருந்த மதியின் மேல் பதிந்தது..

கண்களில் ஆர்வம் மின்ன கைகளால் கன்னத்தை தாங்கியவாறு வாயை பிளந்து அவள் முன்னே வைக்கப்பட்டிருந்த பெரிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த நேரலை நிகழ்ச்சியை விழியகற்றாது பார்த்துக் கொண்டிருந்தாள்.

விட்டால் உள்ளேயே சென்றிடுவாள் போலும்.. அப்படி பட்டவர்கள் நிகழ்ச்சிதான் தொலைகாட்சியில் ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருந்தது. கொரியாவின் பிரபலமான BTS♥︎ ஏழுபேர் கொண்ட குழுவின் பாடல் நிகழ்ச்சியே சென்று கொண்டிருந்தது..

வீர் வீட்டிற்குள் நுழைந்ததை கூட அறியாது ஆர்வமாய் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்...
அந்த நிகழ்ச்சி கொரிய மொழியில் ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருந்தது.. அந்த பாஷை அவள் மண்டைக்கு சுத்தமாய் ஏறவில்லை.. இருப்பினும் பாஷை எதற்கு அவர்களை மட்டும் பார்த்தால் போதும் எனும் விதத்தில் தலையை ஒருபுறம் வளைத்து கண்களை விரித்து பார்த்துக் கொண்டிருந்தாள்..

அந்த குழுவிலே அவளுக்கு மிகவும் பிடித்தமானவர்கள் என்றால் அது ஜங்குக்(JK) மற்றும் வீ(V) இருவரும் தான் ..
அவளின் விழிகளிலேயே அப்பட்டமாய் காட்டிக் கொடுத்தது அவள் எவ்வளவு தூரம் அவர்களை ரசனைராலென்று..
அதை பார்த்தவுடனே கண்டு கொண்டு விட்டான் அவள் ராட்சசன்..

வேறு உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தவளை மீட்கும் வகையில் முன்னே வைக்கப் பட்டிருந்த தொலைக்காட்சி டமார் என்ற சத்தத்துடன் நிலத்தில் விழுந்து சின்னா பின்னமாய் சிதறிப்போனது..

என்ன ஏது என்று யூகிக்க முன் புயல் வேகத்தில் மதி முன் தோற்றமளித்தவன் காட்டமாய் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த தொலைகாட்சியின் வயர்களை பிடிங்கி வேகமாய் நிலத்திற்கு விட்டெறிந்தான்..
வீரின் செயலில் ஸ்தம்பித்துப் போனவள் தொலைகாட்சி விழுந்து அது எழுப்பிய பெரிய சத்தத்தில் மிரட்சியுடன் காதுகளை கரங்கள் கொண்டு இறுக்கி மூடிக் கொண்டாள்.

வேகமாய் துடித்த இதயத்தை ஆசுவாசம் செய்ய பல நிமிடமெடுத்தது அவளுக்கு.. ஒரு வழியாக சமப்படுத்தில் பயநத்தில் மூடியிருந்த விழிகளை திறந்து பார்க்க அவன் இருந்த சுவடு எதுவுமே இன்றி வரவேற்பு அறையே காலியாக இருக்க மதி தொப்பென சோபாவில் அமர்ந்தாள்...

வீடு சுத்தம் செய்வதிலிருந்து அனைத்து வேலைகளையும் முடித்தவள் இரவானதும் இரவு உணவை தயாரித்து விட்டு வீர் வருகிறானா என்று வாசலில் பார்வையை பதித்தவாறு அன்யோன்யமாய் பழகும் தம்பதிகளில் கணவன் வருகைக்காய் தவிக்கும் மனைவியை போல் அங்கும் இங்கும் நடைபயிற்சி செய்ய அவனோ மணி பத்தை தாண்டியும் வராது போக தூக்கம் வேறு கண்ணை கட்ட அதை விரட்டி அடிக்கும் வகையிலேயே தொலைகாட்சியை உயிர்ப்பித்தாள்...
ஆனால் அவள் முருகன் செய்த சதியில் தொலைகாட்சியில் BTS நிகழ்ச்சி போய் கொண்டிருந்தது.. அவளும் காலேஜ் செல்லும் காலத்திலிருந்தே வெறித்தனமான BTS ஆர்மி என்பதால் அதில் மூழ்கிவிட்டாள்.. அதன் பிறகு நடந்ததுதான் அனைவருக்கும் தெரியுமே..

ஏன் அவன் தொலைகாட்சியை உடைத்தான்.. ஒரு வேலை நான் அவனனுமதியின்றி பார்த்ததாலோ என்ற யோசனையுடன் "இருந்தும் இப்படியா பண்ணுவாங்க ராட்சசன் போல.. கொஞ்ச நேரத்துல ஹார்ட்டடாக்கே வந்திருக்கும்" என்ற நெஞ்சில் கையை வைத்து கண்ணை மூடி பெரிய பெரிய மூச்சுக்களை எடுத்துவிட்டாள் மதி.. அவளும் அவன் செய்த செயலில் கதிகலங்கியல்லவா போய்விட்டாள்..


இங்கு அறைக்குள் நுழைந்தவன் மனமோ ஒரு நிலையிலின்றி தள்ளாடிய அவன் மனதில் என்ன உள்ளது என்பதை அவன் மட்டுமே அறிவான்.. எதுவாயினும் அவனாக கூறினால் தான் உண்டு.. இந்த பழாப்போன எழுத்தாளினியிற்கு கூட அவன் மனதை அறிய சரியாக கனிக்க முடியவில்லை.. இல்லை இல்லை அவன் கணிக்க அனுமதிக்கவில்லை என்றே சொல்லலாம்..
அவனை போன்று அவன் மனது கூட இறுகியே காணப்படுகிறது..

"வீர் வீர் வீர்" என்று தன் பெயரையே கூறி தன்னை மீட்கும் முகமாய் தலையை தட்டி உளுக்கிக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்தான்..

நார்மல் பேண்ட் மற்றும் ஆம்கட் அணிந்து வெளியே வந்தவன் லேப்டாப்பை எடுத்து வேலைக்குள் தன்னை புகுத்திக் கொண்டான்.

வீர் சாப்பிட வராததால் தயங்கியவாரே அவனறைக்குள் உள்ளே நுழைந்தாள் மதி.. அவள் வந்ததை அறிந்தும் அவளை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாது நிமிராது தன் வேலையில் கண்ணாய் இருந்தான் அவன்.

"சாரிஈஈஈ.." என்றாள் கையை பிசைந்தவாறு..

அவனோ லேப்டாப்பிலிருந்து விழிகளை அகற்றாது இறுகியக் குரலில் "எதுக்கு?" என்க,

"அது.. நான் உங்க பர்மிசன் இல்லாம டிவி பார்த்தேன் ல.. அதுக்கு தானே நீங்க கோவப்பட்டு டிவி ய உடச்சிங்க.. என்னால தானே அப்படி நடந்தது. அதான்.. சாரி.. இனி நான் டிவியே பார்க்கமாட்டேன்" என்று அப்பாவியாய் தன் பாட்டிற்கு ஒன்றை நினைத்து கூறியவள் குனித்திருந்த தலையை நிமிர்த்தி அவனை மெல்லல் பார்க்க அவனும் அவளைத் தான் பார்த்து கொண்டிருந்தான்.. அவள் வார்த்தையுடன் சேர்ந்து அவள் விழிகளும் அவனிடம் மன்னிப்பை யாசித்தது..

வீர் தன்மடியிலிருந்த லேப்டாப்பை மூடி கட்டிலின் மீது போட்டவன் அடிமேல் அடி வைத்து மதியை நெருங்க மதியிற்கு தானாய் வந்து மாட்டிக்கிட்டோமோ என்றிருந்தது.. அவன் அடிமேல் அடிவைத்து நெருங்க அவளோ அடிமேல் அடிவைத்து பின்னோக்கி நகர்ந்தாள்.

நொடிப் பொழுதில் வீர் மதியை நூலிடை வெளியில் நெருங்கியிருக்க அவள் பின்னோக்கிச் சென்று சுவற்றில் மோதி ஒட்டியிருந்தாள்..
வீர் தன் ஒற்றை கரத்தால் அணையிட்டு அவள் விழிகளை நோக்கியவாறு "எனக்கு கோவம் வந்தா டீவிய மட்டுமில்ல உன் முகத்தையும் உடைப்பேன்" என்க மதி எந்த உணர்வும் காட்டாத அவன் வதனத்தை பார்த்து விழித்தவாரே எச்சிலை கூட்டி விழுங்கினாள்..

அவன் மேலும் "சோ எனக்கு கோவம் வர மாதிரி நடந்துக்காத.. அது உனக்கு ரொம்ப நல்லது.." என்றவன் ஓர்கரம் கொண்டு கன்னத்தை தட்டி விட்டுச் விட்ட வேலையை கவனிக்கச் செல்ல மிரட்சியுடன் வந்த வேலையை மறந்து அங்கிருந்து நழுவப் பார்க்க "ஆ.. உன் மேலதான் குத்தம்னு நீயே ஒத்துகிட்டல்ல.. சோ உனக்கு பனிஷ்மென்ட் இருக்கு" என்ற வீரின் குரல் அவளை தடுக்க அறைவாசல் வரை சென்றவள் இதயம் எகிற என்ன தண்டனை தரப்போகிறானோ என்ற பயத்தில்
ஸ்லோ மோசனில் அவனை திரும்பிப் பார்த்தாள்.

திக்கித் திணறி "எ..என்ன பனிஷ்மென்ட்.. " என்றாள் மனதில் பல முறை முருகனை ஜபித்துக் கொண்டு..

வீர் அவளை பாராது "போ போய் டின்னெர் எடுத்துட்டு வா.. " என்றவுடன் தான் மதியிற்கு ஆறுதலாய் இருந்தது.. அவன் ஏதும் பெரியதாய் தண்டனை கொடுத்து விடுவானோ என்று சிந்தித்தவளுக்கு உணவு கொண்டு வா என்றால் முக மலர்ச்சியாய் இருக்குமா இல்லையா அதே நிலைதான் இவளுக்கும் முகமலர்ச்சியுடன் உடனே உணவு கொண்டு வரச் சென்றாள்...
அவன் இதழ்களோ வில்லங்கமாய் நகைத்தது..


மதி சென்ற வேகத்திலேயே உணவுத் தட்டுடன் அவன் முன் நின்று தட்டை அவனிடம் நீட்ட அவனோ நிதானமாய் லேப்டாப்பை மூடி வைத்து விட்டு அவள் புறம் திரும்பி வாயை திறக்க மதி விழி விரித்து முழித்தாள்.

"என்ன பேப்ஸ் முழிக்குற, ஊட்டி விடு இதான் உன் பனிஷ்மென்ட்.. " என்று சாதாரணமாய் உரைத்து வாயை திறக்க மதி வேறுவழியின்றி தயங்கியவாறு அவனுக்கு ஊட்டிவிட உணவை வாங்கிக் கொண்டவன் பற்கள் அவள் விரல்களை பதம் பார்த்தது..

"ஸ்ஆ.. " சிணுங்கலுடன் விருட்டென கையை பின்னோக்கி இழுத்து அவனை பாவமாகப் பார்க்க,

உணவை மென்றவாரே "வலிக்குதா..?" என்க

"ம்ம்" என்றவாரே மேலும் கீழும் தலையை ஆட்டினாள்.

"வலிக்காம எப்படி இருக்கும்.. வலிக்க தானே கடிச்சேன்.." என்று வீர் தனது கடை சிரிப்பை சிந்த தன் வலியை மறந்து மதியின் விழிகள் அவனை ரசித்தது..

இந்த கடை சிரிப்பே இவனுக்கு எவ்வளவு அழகாக உள்ளது.. இதழை முழுமையாய் விரித்துச் சிரித்தாள் இன்னும் எவ்வளவு அழகாக இருக்கும்.. என்று அவளுக்குத் தோன்றியது..

"ஹலோ.." என்று அவள் சிந்தையை கலைக்கும் விதமாய் முகத்திற்கு நேராய் சொடக்கிட்டவன் "என்ன கனவு கண்டுட்டு இருக்க..சீக்கிரம் நிறைய ஒர்க் இருக்கு" என்றதும் தன் தலையை உளுக்கிக் கொண்டு அவனுக்கு உணவை ஊட்டி கரத்தை கொண்டு செல்ல அவள் கரத்தை பிடித்து நிறுத்தினான் வீர்..

வீரின் விழிகள் லேசாய் விரிந்தது மதி தன் கரத்தால் உணவை தாங்கியிருக்கும் விதத்தில்.. முதல் தடவை ஊட்டும் போது கவனத்தில் விழாது செல்ல தற்போது அவன் கவனத்தில் விழுந்தது..
ஆள்காட்டி விரலை சேர்த்துக் கொள்ளாது உணவை நான்கு விரல்களால் தாங்கியிருந்தாள்.. வீரின் இதயம் ஓர் நிமிடம் நின்றுத்துடித்தது...

மதியோ புரியாது தவிப்புடன் " என்னாச்சு.. சாப்பாடு நல்லா இல்லையா? " மெல்லிய குரலில் கேட்க எதுவும் கூறாதுமறுப்பாக தலையை ஆட்டி அவள் கரத்தை விடுவித்தவன் அடுத்த வாயை தானாய் வாங்கிக் கொண்டான்.

தட்டிலிருந்த அனைத்து உணவையும் அவள் முகத்தை ஏறிட்டவாரே வாங்கிக் கொள்ள மதியிற்கு தான் எதுவும் புரியாது போனது..

அவன் சாப்பிட்டு முடிந்ததும் கீழே சென்று தன் வயிற்றுக்கு இரண்டு பிடியை போட்டுவிட்டு மறுபடியும் மேலே வந்து அவனருகே சத்தமின்றி பக்கவாட்டாய் முதுகுகாட்டி உறங்கினாள்..

அவளோ தலை வைத்தவுடன் தன்னை மறந்து ஆழ் உறக்கத்திற்குச் செல்ல இங்கு ஓருவனோ உறங்க மறந்து விழியகற்றாது புருவம் முடிச்சுடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்..


துடிக்கும்..

Wʀɪᴛᴇʀ : Rɪᴢɪɪ💘
 
Top