• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

இதயம் 6

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
264
48
43
Salem
தேவநந்தன் தன் அலுவலகத்தில் நுழையும் நேரம் அவனின் அலைபேசி அடித்து அதன் இறுப்பை உணர்த்தியது.

அதை எடுத்து காதுக்கு கொடுத்தவன் எதிர்புறம் என்ன செய்தி கொல்லப்பட்டதோ போனை அணைத்து விட்டு மீண்டும் வேகமாய் வந்த தன் வண்டியை ஸ்டார்ட் செய்தவன் வேகமாய் எங்கோ பறந்து சென்றாள்.

ஒரு மணி நேரத்தில் வர வேண்டிய இடத்திற்கு இருபது நிமிடத்தில் வந்தவன் அந்த உயர்ந்த கட்டிடத்தை பார்க்க அது ஒரு சிறப்புமிக்க தனியார் மருத்துவமனை.

அவனை கண்டதும் அவனருகில் வேகமாய் வந்த ஆடவன் ஒருவன்,

"பாஸ் இங்கே தான் பார்த்தேன்.. உள்ளே போனவங்க இன்னும் வெளியே வரலை.. நான் உள்ளே போய் பாக்கவா பாஸ்.." என்றான் உண்மையான விசுவாசியாய்.

"இல்லை நானே போய் பாக்குறேன்.. நீங்க வெளியே வந்தாங்கன்னா எனக்கு கால் பண்ணு.." என்றவன் வேகமாய் உள்ளே சென்றான்.

மருத்துவமனையின் உள்ளே சென்றவன் அனைத்து பக்கங்களிலும் தன் பார்வையை செலுத்தி யாரையோ தேட அவன் தேடலுக்கு சொந்தமானவர்களோ அவன் கண்ணில் சற்றும் படவேயில்லை.

ஒரு மணி நேரம் அந்த மருத்துவமனை முழுவதும் சல்லடை போட்டு சலித்தவன் ரிசப்ஷனில் சென்று யாரோ ஒரு பெயரை சொல்லி விசாரிக்க அந்த பெண்ணோ மருத்துவமனை ரிஜிஸ்டரில் செக் செய்து அப்படி ஒரு பெயரே இல்லை என்று கூற அதை கேட்டு பைத்தியம் பிடிக்காத குறையாய் வெளியே வந்தவனுக்கு கண்ணை கட்டி காட்டில் விட்டதை போல் இருந்தது.

தான் தேடி வந்தவர்களை கண்டுபிடிக்க முடியாமல் தன் மேலே ஆத்திரம் பொங்க அதை தன் வண்டியை தட்டி காட்டியவனின் முன்னே வந்து நின்றான் அவனுக்கு தகவல் கூறியவன்.

"அவங்க தப்பிச்சிட்டாங்கன்னு நினைக்குறேன்.. உள்ளே அந்த பேருல யாருமே இல்லை தாண்டவம்.." என்றான் ஆத்திரமாய்.

"அதுக்கு வாய்ப்பே இல்லை பாஸ்.. இந்த பக்கம் அவங்க வரவே இல்லை.. ஏன் இந்த ஹாஸ்பிடலுக்கு இந்த ஒரு பாதை தான் பாஸ் இருக்கு.. வேற வழி இல்லை.." என்றான் அவன் அழுத்தமாய்.

" உள்ளே இல்லை தாண்டவம்.. அவன் யாருன்னாவது பாத்தீங்களா.. அவனோட பேரு எதாவது அடையாளம் இப்படி.." என்றான் யோசனையாய்.

" இல்லை பாஸ்.. அவனோட பின்பக்கத்தை தான் நான் பார்த்தேன்.. அவனோட முகத்தை நான் பார்க்கலை.. ஆனா அவங்களை நான் பார்த்தேன் பாஸ்.." என்றான் பதிலாய்.

"இந்த தேடலுக்கு பதில் எப்போ தான் கிடைக்கும் தாண்டவம்.. இதுக்கு விடை கிடைச்சா தான் என் வீட்டோட மர்மம் எனக்கு விலகும்.. பிஸ்னஸில் எத்தனையோ பெரிய பிரச்சனையை பேஸ் பன்ற நான் சொந்த வீட்டோட பிரச்சனையை எங்கே கவனிக்காம விட்டேன்னு தெரியலை.. என்னை சுத்தி என்ன என்னவோ நடக்குது.. யாரை நம்புவது நம்பாத போறதுனுன்னு புரியலை.." என்றான் விரக்தியாய்.

"இல்லைங்க பாஸ் கூடிய சீக்கிரமே இந்த பிரச்சனை தீரத்தான் போகுது.. நான் கண்டுபிடிக்கிறேன் பாஸ்.." என்றான் உறுதியாய்.

அவனிடம் சரி என்று தலையாட்டியவன் தன் காரை எடுத்துக் கொண்டு தன் அலுவலகம் சென்றான்.

அங்கே அவனுக்கு முன்னே மெர்லின் கோபமான முகத்தோடு அமர்ந்திருந்தாள்.

அவளை கண்டும் காணாதவன் போல் தன் வேலையை ஆரம்பித்தான்.

"தேவா நான் வந்து எவ்வளவு நேரமாச்சுன்னு தெரியுமா.. உனக்காக எவ்வளவு நேரம் காத்திருக்கேன்.. இவ்வளவு நேரம் எங்கே போயிட்டு வர்றே.. கேள்விப்பட்டேன் திரும்பவும் அவ வந்துட்டாளாமே.. அவ வந்தது தெரிஞ்சதுக்கு அப்புறம் உன்னோட அப்பா அம்மாவும் வந்துட்டாங்களாம்.. உன்னை விட அவங்களுக்கு அவ பெருசா போயிட்டாளா தேவா.." என்று ஏதோ உரிமையுள்ள மனைவியை போல் அவனிடம் கேள்வி கேட்டு நின்றாள்.

அதை கேட்டதும் ஆத்திரம் பொங்க, "இதோ பாரு மெர்லின் என் குடும்பத்தை பத்தி பேசுறதை இத்தகு நீ நிப்பாட்டிக்கோ.. அவங்க என்னோட அப்பா அம்மா தங்கச்சி அவங்களுக்கு எது சரின்னு படுதோ அதை செய்யறதுக்கு அவங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு.. என்னை விட அவ தான் அவங்களுக்கு பெருசு.. அதுக்குண்டான காரணத்தை உன்கிட்ட நான் சொல்லனும்னு அவசியம் இல்லை புரிஞ்சுதா.. என்னை கேள்வி கேக்குற வேலையை இத்தோட விட்டுரு நீ.. அதுக்கு உனக்கு எந்த விதமான உரிமையும் கிடையாது.. ரைட் நவ் இனி என் ஆபிஸ் பக்கம் நீ வரவே கூடாது.. கெட் அவுட்.." என்றான் கர்ஜனையாய்.

அவனின் கர்ஜனையை கேட்டவளுக்கு உடலெல்லாம் உதறியது.. ஆனால் அதை வெளியில் காட்டாமல்,

"தேவா என்னை பார்த்தா இப்படி ஒரு வார்த்தை சொன்ன.. எல்லோரும் உன்னை விட்டு போன போது உனக்காக நான் இருந்தேனே.. அதெல்லாம் மறந்துட்டியா தேவா.. எனக்கு உன் மேல உரிமை இல்லையா தேவா.. நான் உன்னை எந்தளவு காதலிக்குறேன்னு தெரிஞ்சும் ஏன் தேவா என்னை புன்படுத்துற.. சீக்கிரமே நம்ம கல்யாணம் செஞ்சுக்கலாம்னு சொன்னியே தேவா.. எனக்கு கொடுத்த வாக்கு என்னாச்சி தேவா.." என்றபடி வராத கண்ணீரை அவன் முன்னே துடைத்தவள் அவனை ஓரக்கண்ணால் பார்த்தாள்.

அவள் கூறியதில் இருந்த உண்மையை உணர்ந்தவன் அப்படியே தன் சீட்டில் சரிந்து அமர்ந்தான்.

ஆம் அன்று அவன் செய்த தவறு தான் இன்னும் சுழட்டி அடிக்கிறதே.. எங்கே போய் சொல்லுவது.. அன்று மட்டும் அவன் முன் கோபத்தை கட்டுபடுத்தியிருந்தால் இன்று யாரோ ஒருத்தி தன்னை வந்து அதிகாரம் செய்ய தேவையில்வையே..


அன்று ஒரு நாள் தன் ஆத்திரம் முன்கோபம் வறட்டு பிடிவாதம் அனைத்தையும் சற்று விலக்கியிருந்தாள் இன்று தன் குடும்பம் இப்படி சிதறி இருக்க தேவையில்லையே.

ஒரு ஆணின் கோபம் அவன் குடும்பத்தை வேறோடு கருவறுக்க காத்திருக்கும் என்பது எத்தனை உண்மை.

அன்று செய்த முட்டாள் தனத்தினை நினைத்தவனுக்கு இன்றும் உடல் நடுங்கியது.

தன் முன் கோபம் எத்தனை பெரிய சந்தோஷத்தை இழந்துள்ளேன்.

தன் செய்த முட்டாள் தனத்தை எண்ணி உருகியவனை கண்டவள் அவனை வன்மம் மின்னும் விழிகளோடு பார்த்திருந்தாள் மெர்லின்.

' சோ ஸ்வீட் தேவா.. எத்தனை பெரிய வீரன் நீ.. ஆனா இன்னைக்கு உன் குடும்பம் சிதறி போய் உன்னை யோசிக்க கூட விடாது பண்ணிடுச்சே.. இது பத்தாது தேவா நீ இன்னும் அனுபவிக்கனும்.. உன் குடும்பமும் நீயும் ஒரே முறையில சாக கூடாது.. அணு அணுவா சிதைஞ்சி சின்னா பின்னமாகனும்.. அப்போ தான் என்னோட பிறப்புக்கான அர்த்தம் கிடைக்கும்.. உன்னை பழி வாங்க நான் எந்த எல்லைக்கும் போவேன் தேவா..

இதோ இப்படி ஒடிஞ்சி போய் உட்காந்து இருக்கியே இதை பாக்க பாக்க எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா.. எந்த பணம் உன்னையும் உன் குடும்பத்தையும் காப்பாத்துச்சோ இப்போ அதே பணத்தால உன்னோட நிம்மதியை வாங்கிட முடியுமா என்ன.. முடியாது தேவா.. உன்னை அப்படி அவ்வளவு சீக்கிரமா உனக்கு எந்த நிம்மதியும் கிடைக்க கூடாது தேவா..' என்றாள் மனதினுள் சிரித்தபடி.

தான் வந்த வேலையை சிறப்பாய் செய்து முடித்த சந்தோஷத்துடன் அவனிடம் திரும்பிய மெர்லின்,

"போதும் தேவா நான் கிளம்புறேன்.. நீ ஒரு சீட்டட் தேவா.. உன்னையே நம்பியிருந்த என்னை ஏமாத்திட்ட தேவா.. நான் போறேன் இங்கேயிருந்து.." என்று அவனிடம் கூறியவள் அழுதபடி அங்கிருந்து சென்றாள்.. இல்லை அப்படி நடித்தாள்.



"கன்யா நான் சமைக்குறேன் நீ போய் வேற வேலை இருந்தா பாருமா.. " என்றபடி சமையல் காட்டிற்கு வந்த கஸ்தூரி கன்யாவை வெளியே அனுப்பி விட்டு பிள்ளையிடம் வந்தாள்.

அப்போது அங்கே வந்த கயல், "அண்ணி பாப்பாவோட பேரு என்ன அண்ணி.." என்றாள் பிள்ளையை தடவியபடி.

"இன்னும் வைக்கலையே மா.. இவ பிறந்ததுல இருந்து பிரச்சனை மட்டும் தானே நடந்துட்டு இருக்கு.. அதுல இவளுக்கு பேருன்னு ஒன்னு வைக்கனும்னே யாருக்கும் தோனலை.. இனி தான யோசிக்கனும்.. உங்க அண்ணா வந்ததுக்கு அப்புறம் தான் கேட்கனும் என்ன பேரு வைக்கலாம்னு.." என்றாள் மழலையை கையில் அள்ளி அணைத்தபடி.


அப்போது அங்கே வந்த வாஞ்சிநாதன், "என்னம்மா யாருக்கு பேரு வைக்கனும்..கஸ்தூரி இங்கே பாரு நீ கேட்டதை வாங்கிட்டு வந்துட்டேன்.." என்றபடி உள்ளே சென்று தன் மனையாளிடம் சொல்லி ஒரு.பையை கொடுத்து விட்டு வந்தவர் மகளிடமும் மருமகளிடமும் வந்தார்.

"அது இல்லை மாமா.. குட்டிக்கு ஒரு வருஷமே ஆச்சி.. ஆனா இன்னும் பேரு வைக்கலை.. அது தான் என்ன பேரு வைக்கலாம்னு கேட்டா.. நான் உங்க பையன் வரட்டும்னு சொல்லிட்டேன்.." என்றாள் தன் மாமனாரை பார்த்தபடி.

அடுத்த நொடி எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்றார் வாஞ்சிநாதன்.

போகும் அவரை வலியுடன் பார்த்தவள்,

'சீக்கிரமே இங்கே எல்லாமே மாறும் மாமா.. நான் மாத்துவேன்.. இந்த குடும்பத்தோட சந்தோஷத்தை திரும்ப மீட்டெடுப்பேன்..' என்றபடி தன் மனதிற்கும் உறுதி அளித்துக் கொண்டாள்.

பிள்ளையை கையில் எடுத்தவள், 'குட்டி இங்கே பாரு இந்த வீடு நீ வரதுக்கு முன்னாடி வரைக்கும் எப்படி இருந்துச்சின்னு தெரியுமா.. ஆனா எப்போ நீ உருவானியோ அப்பவோ இந்த சந்தோஷம் குலைஞ்சி போயிடுச்சி.. அதுவும் நீ பிறந்ததுக்கு அப்புறம் சுத்தமா நிம்மதி இல்லாம போயாடுச்சி.. நானும் அவரும் இந்த வீடு பழையபடி மாறனும்னு பாடுபடறோம்.. அது கூடிய சீக்கிரமே நடக்கனும்.. அதுக்கு ஒரே வழி யாரால இந்த குடும்பம் பிரிஞ்சிதோ அவங்களாலோ ஒன்னு சேரனும்.. சோ அப்போ நீதான் ஹீரோயின் சரியா.. உன்னால பிரிஞ்சி குடும்பம் உன்னால ஒன்னு சேரணும்.. நீதான் எனக்கு அதுக்கு சப்போர்ட் ஆ இருக்கனும் சரியா தங்ககட்டி..' என்று மழலையிடம் பேசினாள்.

அதற்கு என்ன புரிந்ததோ ஆ ஆஆ அ.. மா மா.. என்றபடி பினாத்தியது.

அந்த மருத்துவமனையில் உயர் ரக அறையில் சாலாவின் அருகே அமர்ந்திருந்தான் ரிஷி.

இரவெல்லாம் அவளின் புலம்பல் அதிகமாய் இருந்தது.. அவனை போட்டு படுத்தி எடுத்து விட்டாள் என்று தான் சொல்ல வேண்டும்.

ஆனாலும் அவளின் மேல் விழுந்த நேசம் கொஞ்சமும் குறையவில்லை ஆடவனுக்கு.

அத்தனை காதல் அவள் மேலிருந்தது.. காதல் என்றால் என்ன விலை என்று ஒரு காலத்தில் கேட்டவன் இன்று அது கிடைக்காமல் அனாதையாய் நிற்கின்றான்.

லவ் அன்பு காதலும் ஒரு வகையான அன்பு தான்.. அது காமத்தோடு மட்டும் சேர்ந்தது இல்லை.

காமமில்லா காதல் இந்த பிரபஞ்சத்தில் இல்லை.. காதலும் காமமும் தான் ஒரு திருமண வாழ்க்கையில் முதல் படி.

ஒரு காலத்தில் காமத்தை மட்டுமே கண்டவன் இன்று காதலுக்காய் அவன் செய்த செயல் தான் அவனை நிற்கதியாய் அவனவளுடன் நிற்க வைத்திருக்கிறது.


அவனுக்கு தெரியாத இன்னும் பல விஷயங்கள் அவன் வாழ்வில் மறைந்துள்ளது.. அதை அறியும் நேரம் அவனின் சாலா அவனுடன் இருப்பாளா என்ன..? பொறுத்திருந்து தான் பார்ப்போமே.


அடுத்த பாகத்தில் பாக்கலாம் மக்களே..


இதயம் நுழையும்...
✍️

 

Sampavi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 21, 2022
267
105
43
Theni
என்னதான் நடக்குது
இவன் யாரைத்தான் தேடுறான்
அந்த குழந்தை யாரோடது?
றிஷி ஏன் இவ்ளோ பயப்படுறான்?
 
  • Love
Reactions: ரமா

Vimala

Vaigai - Avid Readers (Novel Explorer)
Feb 10, 2023
112
29
28
Trichy
இந்த சாலாவுக்கு என்னதான் பிரச்சினை?
 
  • Love
Reactions: ரமா

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
264
48
43
Salem
என்னதான் நடக்குது
இவன் யாரைத்தான் தேடுறான்
அந்த குழந்தை யாரோடது?
றிஷி ஏன் இவ்ளோ பயப்படுறான்?
thanks for valuble comment sis