• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Rizka muneer "Rizii"

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 12, 2022
Messages
16
சமையலறைக்குள் நுழைந்த மதியோ ஒவ்வொரு பொருளும் எங்கு எங்கு இருக்கிறது என்று தேடியே கலைத்து போய் விட்டாள்.

ஒரு வழியாக அலசி ஆராய்ந்து கண்டு பிடித்து சூட சூட காபியை தயாரித்து கப்பில் ஊற்றியவள் வெளியே வரும் முன் ஒரு தடவை வெளியே எட்டி பார்க்க வீரின் கண்களோ இன்னும் தொலைபேசி தான் இருந்தது. ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டவள் தைரியத்தை இழுத்துப் பிடித்துக் கொண்டு அவனை நோக்கி காபி கப்புடன் நடந்தாள்.

என்னதான் மதி வசதி படைத்த வீட்டுப்பெண்ணாக இருந்தாலும் தனது வேலைகளை தானே செய்து கொள்ளவதே அவளுக்குப் பிடித்தம்... வீட்டில் சமைப்பதற்க்காகவென்றே வேலையாற்கள் நியமிக்கப் பட்டிருந்தாளும் எந்த வித தாழ்மை மனப்பாங்குமின்றி அவர்களுடன் சேர்ந்து சிரித்து சகஜமாக பேசி தனக்கு தெரியாதவைகளை அவர்களிடம் கேட்டு அறிந்து கற்றுக் கொள்வாள். அனைவருடனும் நன்றாக ஒரே விதமாய் பழகுவாள், அவளின் ஆடம்பரமற்ற இக்குணமே அங்கு வேலைபார்க்கும் அனைவரின் மனதிலும் அவள் மீது ஒரு தனி மரியாதையையும் பாசத்தையும் உருவாக்கியுள்ளது.


வீரின் அருகே வந்தவள் மெல்லிய குரலில் "காபி" என்று தலையை குனித்தவாறு கப்பை நீட்ட அவளை அழுத்தமாய் பார்த்தவன் கப்பை கையில் எடுத்து வாயில் வைத்தான்.

அடுத்தநொடி காபி கப் அந்தரத்தில் பறந்து சென்று நிலத்தில் விழுந்து "சலார்" என்ற சத்தத்துடன் தூள் தூளாய் நாளா புறமும் சிதறியது.

மதியோ இதை எதிர்பார்க்காதவள் காபி கப் உடைந்த சத்தத்தில் கண்களை இறுக்கி மூடியவள் கால்கள் தானாய் பயத்தில் இரண்டு அடி பின்வாங்கியது.

"என்னடி இது.. காபி போட சொன்னா என்ன கருமத்த போட்டிருக்க.." அவன் கர்ஜிக்க சட்டென கண்ணை திறந்து விழி விரித்து அவனை பார்த்தாள்.

"என்ன பாக்குற.. இடியட்.. ஒரு காபி கூட உனக்கு போட தெரியாதா.. இதுக்கு பாய்சனே பெடர்.. "

" நான்சென்ஸ்... காபி போடுறாலாம் காபி... இதுக்கு இங்க இதுக்கு முன்னாடி வேல பார்த்த வேலக்காரி உன்ன விட ரொம்ப நல்லா போடுவா.." என்று அழுத்தமாய் அவளை காயப்படுத்தும் நோக்கில் வார்த்தையை எரிந்தான்.

பெண்ணவளின் கண்களில் கண்ணீர் சுரக்க தலையை குனித்துக் கொண்டாள்.

"இங்க நிக்காத.. உன்ன பார்க்கும் போதே இரிடேட் ஆவுது.. கெட் லாஸ்" என்று ரௌத்திரனாய் கத்த சிறு விசும்பலுடன் குனிந்த தலை நிமிராது அங்கிருந்து நகரப்போனவளை நோக்கி சொடக்கிட்டான்.

அவன் புறம் திரும்பி மிரட்ச்சியுடன் அவனை பார்க்க "போக சொன்னா அதே சாட்டுன்னு போயிடுவியா.. அப்போ இத யாரு கிளீன் பண்ணுவா " எரிக்கும் பார்வையுடன் சிதறிக் கிடந்த கண்ணாடி துண்டுகளை சுட்டிக்காட்டி எள்ளலாய் வினவ மதி எந்த வித எதிர்ப்புமின்றி அவற்றை கைகளாலேயே சுத்தம் செய்யத்துவங்கினாள்.


நாளா புறமும் சிதறிக் கிடந்தவை அனைத்தையும் குனிந்து சுத்தம் செய்து விட்டு எழுந்தவளை மொபைலை பார்த்தவாறே அவளை இருப்புக் கொள்ளவிடாது "போ போய் என் ரூம்ம கிளீன் பண்ணு" என்றதும் சிறு தலையசைப்புடன் நகரச் சென்றவள் கால்கள் அவன் குரலில் அதே இடத்தில் நின்றது.

"ஒரு டஸ்ட் கூட என் கண்ணுல படக்கூடாது.. மோஸ் இம்போர்ட்டண்ட் ஆல் தின்ங்ஸ் ஆ இன் பர்பெக்ட்.. அண்டர்ஸ்டேன்ட் " குரலை உயர்த்த பெண்ணவளோ அதே இடத்தில் நின்றவாறே நாளா புறமும் தலையை ஆட்ட அது அவன் விழிகளில் விழுந்தால் தானே,, அவன் விழிகள் தான் மொபைலில் பதிந்திருந்ததே...

அவள் குரல் காதில் விழாததால் எரிச்சலுடன் "உன்னதான், அண்டர்ஸ்டேன்ட்.." என்று அவள் காதுமடல் கிழியும் வகையில் கர்ஜிக்க அவன் குரலில் நெஞ்சில் நீர் வற்றிப் போக உள்ளிருந்த குரலில் "ஆ" என்று தலையையும் சேர்த்து ஆட்டி வைத்தாள்.

"ம்ம்" இரு விரலை சேர்த்து செல்லுமாறு அசைக்கு ராட்சசனிமிருந்து தப்பித்தால் போதும் என்ற வகையில் கைகளால் சேலையை தூக்கிப்பிடித்து மாடிப் படிகளால் அவசரமாக ஒட்டமும் நடையுமாய் ஏறினாள்.


மேல் மூச்சு கீழ் மூச்சி அனைத்தையும் ஒன்று திரட்டி விட்டவளாய் மாடியை சுற்றிப் பார்த்தாள் வரிசையாக சில அறைகள் காணப்பட அப்பொழுது தான் அவள் மூளைக்கு உரைத்த அவனறை எது என்று கேட்காது வந்தது.

"ஐயோ இத மறந்து போய்டேனே" தனக்கு தானே மானசீகமாய் கூறி தலையில் அடித்துக் கொண்டவள் " போய் கேட்டுட்டு வந்துடலாம்" என்று திரும்பியவள் அப்படியே நின்று விட்டாள்.

"இல்ல இல்ல வேணாம்.. மறுபடியும் போனா அவரு ராட்சசன் போல பிஹேவ் பண்ணுவாறு... அம்மாடியோவ் வேண்டவே வேண்டாம்.." அவன் கத்திய கத்து காதில் இன்னும் எதிரொலி ஒலிக்க தலையை இரண்டு புறமும் தனக்கு தானே ஆட்டிக் கொண்டாள் மிரட்சியுடன்..

"நாமலே கண்டு புடிக்கலாம்" என்று சிறு சிரிப்புடன் விழிகளை சூழல விட்டவாறு முன்னே நடந்தாள்.

அவளின் வதனத்தில் தோன்றிய வசீகர புன்னகையை பார்த்தாள் யாராயினும் இதற்கு முன் கண்ணை கசக்கிக் கொண்டிருந்தவள் இவளா என்று வாயை பிளக்கத்தான் தோன்றும்!''

மதிமகளின் குணம் அதுவல்லவா,,

ஒவ்வொரு அறையாய் கதவை திறந்து எட்டி எட்டிப் பார்த்து வந்தவள் கண்களில் பட்டுது என்னவோ ஓர் அறையில் சுவரில் பிரேம்மாக தொங்கிக் கொண்டிருந்த அவன் புகைபடம்.

கோர்ட் சூட்டுடன் சிரிப்பு என்பது துளியுமின்றி இறுக்கமாக தாடையுடம் ஓர் கரத்தால் காதை நீவுவது போல் இடுப்பு வரை இருந்த அந்த புகைபடம் அவன் ஆண்மையையும் கம்பிரத்தையும் முழுதாய் தன் வசப்படுத்தி சுண்டியிலுத்தது...

மான் விழிகளை அகல விரித்து அந்த புகைபடத்தை மெய் மறந்து நோக்கியவாறு அந்த அறைக்குள் காலடி வைத்தவள் காலில் சுளீர் என்று வலி எடுக்க "ஸ்ஆ" என்று கத்தியவாரே காலை தூக்கிப்பார்க்க நிலத்தில் சிதறிக்கிடந்த கண்ணாடித் தூண்டுகளில் ஒன்று காலை ஆழமாக பதம் பார்த்திருந்தது.

வலியில் கண்கள் கூட கலங்க அவ்விடத்திலே முட்டி போட்டு அமர்ந்து அத்துண்டை காலிலிருந்து அகற்ற முயற்சிக்க அதுவோ ஆழம் வரை சென்றிருந்ததால் அவளால் தொடும் போதே அதன் வலியை பொறுக்க முடியவில்லை,, பின்பு எப்படி அகற்றுவது....

அவன் அறையே அலங்கோலமாக இருக்க சுத்தம் செய்யாது விட்டால் அவன் வந்து என்ன செய்வானோ என்று எண்ணும் போதே உடம்பில் உதறல் எடுக்க காலிலிருந்து இரத்தம் சொட்ட சொட்ட தன் வலியை பொருட்படுத்தாது நொண்டியவாறு அந்த அறையிலிருந்த குளியலறையிற்குச் சென்று நெற்றிருந்த கோலத்திலிருந்தவள் முகத்திலிருந்த ஓப்பனையை முற்றாகக் கலைத்து முகத்தை கழுவி விட்டு வெளியே வந்து அவனறையை சுத்தம் செய்யத் தொடங்கினாள்.



சீதாவதியின் கண்ணிலோ நெருப்பின்றியே அனல் தகித்துக் கொண்டிருந்தது.

"என்ன தைரியமிருந்தா அவ இப்படி சொல்லிருப்பா.. எனக்கு வர கோபத்துக்கு அவ மட்டும் என் கைல கெடச்சா அவ்வளவு தான்" என்று வாய் விட்டு பெண்ணவளை திட்டித் தீர்த்து தன் ஆதங்கத்தை கொட்டிக் கொண்டிருந்தார்.

ராகுல்நாத்தோ அதீத யோசனையில் இருந்தவர் மனைவியின் புலம்பலில் எரிச்சலடைந்து " நீ கொஞ்சம் சும்மா இருக்கியா,, நானே இங்க கடுப்புல இருக்கேன்.. ப்ச் நீ வேற.. " சலித்துக் கொள்ள...

ஏதோ யோசனை தட்ட சட்டென "என்னங்க அவக்கு எல்லாம் தெரிஞ்சிருக்குமா.. அதான் வர முடியாதுன்னு சொல்லிட்டாளா.." பீதியில் அதி முக்கியமான சந்தேகத்தை முன் வைத்தார் தன் கணவரிடம்.. .

"ப்ச் அப்படியெல்லாம் இருக்காது, அவன் ஏதாச்சும் சொல்லி மிரட்டிருப்பான்.. அதான் அவ அப்படி சொல்லிருக்கா, உனக்குதான் அவளபத்தி தெரியுமே " என தன் மகளின் சுபாவத்தை அறிந்தவறாய் உறுதியாய் கூறினாலும் மனதில் ஓர் உந்தல் இருந்து கொண்டே இருந்தது.

"அதுவும் சரிதான், ஆனா நான் இத கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்ல.. திடீர்னு வந்து இப்படி எல்லார் முன்னாடியும் தாலி கட்டி இழுத்து போய்ட்டானே.. ச்சஅ ,, எல்லார் முன்னாலயும் ரொம்ப அவமானமா போச்சு " எரிச்சலுடன் கூறி பல்லை கடித்தார் சீதா.

"நான் மட்டும் இத எதிர்பார்த்தேனா என்ன,, வெளிய தெரிய கூடாதுன்னு மீடியாகாரங்க கைல இருந்த கேமரா, மெமரி கார்ட் எல்லாம் புடிங்கி எறிச்சி போட்டாச்சு... இல்ல மினிஸ்டரால அவர் பொண்ணயே கவனமா பார்த்துக்க முடியல இதுல இந்த மாநிலத்த எப்படி பாதுகாக்க போறாருன்னு பேப்பர், டி.வி, மீடியான்னு போட்டு கிழிச்சிருப்பானுங்க " ஆதங்கமாய் பல்லை கடித்து கோபத்தை வெளிப்படுத்தினார்.

"அத தடுத்துட்டோம் ஆனாலும் மேரேஜ்க்கு வந்திருந்த சொசய்ட்டில உள்ள பெரிய தலைங்க முன்னாடி எல்லாம் ரொம்ப இன்சல்ட்டா போச்சு.." கை முஷ்டியை இறுக்கி கட்டிலில் குத்தியவார் நெற்றியில் புருவ முடிச்சுக்கள் தோற்றம் பெற "அவனுக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கு,, அவன் இருக்குற பொசிஷன்க்கு அவன் நெனச்சிருந்தா ஒரு செகன்ட்ல என்ன இந்த பதவிலயிருந்து தூக்கி நடுரொட்டுல நிற்கவெச்சியிருக்கலாம் ஆனா அவன் ஏன் அப்படி பண்ணல?... " என்று யோசிக்க சீதாதேவியும் அதைதான் யோசிக்கத் துவங்கினார்.



இங்கு வீர் 'ஏன்னா உடனே ரிவேன்ஜ் எடுத்தா அதோட ரியேக்க்ஷன் கொஞ்சமாதான் இருக்கும்... அதோட அது முடிஞ்சி போயிடும்,, அதுவே கொஞ்சம் கொஞ்சம் ரசிச்சு அத அனுபவிச்சு ரிவேஞ் எடுத்தோம்னு வையேன் அதோட ரியேக்க்ஷன் ரொம்ப பெருசா இருக்கும்.... எப்போ எங்கள அடிப்பான்னு நினச்சி பயந்துகிட்டே இருக்கனும்.. அந்த பயம் எனக்கு வேணும்... "

"அதனால ஏற்படுற காயம், வலி, அவமானம் எல்லாம் நெஞ்சுல முள்ளா குத்திகிட்டே இருக்கனும்... எதுவும் பண்ண முடியாம தவிப்பாங்க பாரு அந்த... அந்த... தவிப்பு எனக்கு வேணும்..." தன் மொபைலில் எதிர்புறமிருந்து கேட்ட கேள்விக்கு பதில் வழங்கியவன் கையிலிருந்து கழுத்து வரை நரம்புகள் புடைக்க கண்கள் இரத்த நிறத்தில் சிவந்து தன் கோபத்தை கட்டுப்படுத்தும் முகமாய் கை முஷ்டி இறுக இறுக்கமாக பொத்திக் கொண்டான் வீரேந்திர ஆதவன் (எ)வீர்.

எவ்வளவு கோபத்தை கட்டுப்படுத்திகிறானோ அதை விட பலமடங்கு வெறி மனதில் கொழுந்து விட்டு தகிக்கத்துவங்கியது.

"அப்புறம் உன் வேல எப்படி போயிட்டிருக்கு.." மறுபுறம் கூறிய பதில் காதில் வந்து விழ "வெல்.. கூடிய சீக்கிரம் சந்திக்கலாம் ஆல்தபெஸ்ட் " என்றவன் இதழோரம் கடைபுன்னகை முறை முகமாய் பூத்து மறைந்தது.



துடிக்கும்...
 
Top