• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Rizka muneer "Rizii"

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 12, 2022
Messages
16
மேல்மூச்சு கீழ்மூச்சு அனைத்தும் ஒரே நேரத்தில் வாங்க இதயத்துடிப்பின் வேகத்தில் பெண்ணவளின் நெஞ்சாங்கூடு மேலே ஏறி கீழே இறங்க வீரின் முன் வந்து நின்றாள் மதி.

மொபைலை பார்த்துக்கொண்டிருந்த வீர் சிறிது நேரத்தின் பின் நிதானமாய் எழுந்து கைகளை மேலே உயர்த்தி சொம்பல் முறித்து விட்டு தன் முன் நின்றிருக்கும் மதியை கண்டு கொள்ளாது அங்கிருந்து நகர்ந்தான்..

மதியோ சேலை நுனியை கசக்கியவாறு "ஒரு நிமிஷத்துல வர சொல்லிட்டு ஒன்னும் சொல்லாம போறாரு" நினைத்தவாரே முழித்தவாரு வாசல் அவ்விடத்திலேயே நின்று கொண்டிருக்க...

வாசல் வரை சென்றவன் இதழை குவித்து உஷ்ன மூச்சை வெளியிட்டவாறு அவள் புறம் திரும்பி "மேடமுக்கு வெத்துலை வெச்சி கூப்பிட்டா தான் வருவீங்களோ..." என்று ஒற்றை புருவம் உயர்த்தி கேட்டுவிட்டு நகர்ந்து சென்றான்.

மதி உதட்டை சுளித்தவாறு "வெத்திலை வெச்சி கூப்பிட்டா தான் கொறஞ்சி போயிடுமா என்ன.." தனக்கு தானே மனதினுல் கூறிக்கொள்ள...

மதியின் கூற்றிற்கு மாராய் அவள் மனசாட்சி "நீ இங்கயே நின்னுகிட்டு இருந்தன்னு வையேன் உன் ஆளு உனக்கு வெத்துல என்ன ஒரே அடியா பாலே ஊத்திடுவான்" என்றதுதான் தாமதம் அதை துரத்தி விரட்டிவிட்டு பதற்றமாய் ஜெட் வேகத்தில் காலில் உள்ள காயத்தையும் பொருட்படுத்தாது ஓடினாள் அவன் சென்றவழியே...

வீர் காரில் ஓட்டுநர் இருக்கையில் அமர மதி பின் இருக்கையில் அமர கதவை திறந்தவள் கை அப்படியே அந்தரத்தில் நின்றது அவன் ஆளுமை தழும்பும் குரலில்,

"நான் என்ன உனக்கு டிரைவரா,, வந்து முன்னாடி உட்காரு" என்றதும் கதவை அப்படியே மூடி விட்டு தயங்கியவாறு முன்னாடி இருக்கையில் வந்து அமர அடுத்தநொடி வண்டி மின்னல் வேகத்தில் அங்கிருந்து நகர்ந்தது,, இல்லை இல்லை பறந்தது என்றே கூறலாம்...

வீரின் வண்டி ஓர் விசாலமான மாலின் முன் நின்றது... மதியிற்கு வண்டி நின்றதும் தான் மூச்சே சீராக வெளியானது..

வண்டியை அவன் செலுத்திய வேகத்தில் நெஞ்சில் கையை வைத்து கண்ணை இறுக்கி மூடியிருந்தவள் கதவு திறப்படும் சத்தத்தில் கண்ணை திறந்தாள்..

அவன் தான் வண்டியிலிருந்து இறங்கியிருந்தான்.. மதியும் பெருமூச்சை இழுத்துவிட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு இறங்கினாள்.

தன் கையிலிருந்த கார் சாவியை வாட்ச்மேனை நோக்கி போட்டவன் பார்க் பண்ணுமாரு கூறிவிட்டு "வா" என்று ஒற்றை அழைப்புடன் முன்னேறி மாலை நோக்கி நடக்க அவனின் பின்னே அவன் நடைக்கு ஈடு கொடுக்கும் வகையில் ஒட்டமும் நடையுமாய் பின் தொடர்ந்தாள் மதி.

உள்ளே நுழைந்ததும் அங்கு போடப்பட்டிருந்த சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டவன்..

"போ போய் உனக்கு வேண்டிய திங்ஸ் அப்புறம் ட்ரஸ் எல்லாம் பர்ஷஸ் பண்ணிட்டு வா" என்றவன் காதில் இயர் பொட்டை அடித்துக் கொண்டு தனது மொபைலில் தனது வேலையை செய்ய மதியோ தயங்கியவாறு அதே இடத்திலேயே நின்றிருக்க அதை அவதானித்தவன்,

"ப்ச் இன்னும் என்ன பண்ணற,, உனக்கு இதே ட்ரஸ்சோட காலம் பூரா இருக்க ஓகேன்னா எனக்கு ஒன்னும் பிரச்சன இல்ல.." என்று தோலை குலுக்க இவன் இருக்க வைத்தாலும் வைத்து விடுவான் என்று சட்டென மதி அங்கிருந்து நகர்ந்து கேர்ள்ஸ் செக்க்ஷனை நோக்கிச் சென்றாள்.


சிறிது நேரம் தன் முன் நிழலாட வீர் தலையை தூக்கிப் பார்க்க மதி தான் நின்றிருந்தாள்.. மூன்று தாவணியை கையில் வைத்தவாறு கண்ணை சிமிட்டியவாறு நின்றிருந்தவளை மேலிருந்து கீழாய் பார்த்தவன்,,

"என்ன இது" என்று அழுத்தமாக கேட்க,,

"அ..அது நீங்க தானே ட்ரஸ் எடுக்க சொன்னிங்க,, அதான்.." என்று தலையை குனித்தவாறு கையை தூக்கி கையிலிருந்ததை காட்டினாள்.

"ஓ... ரொம்ப நல்லது.." நக்கலாய் கூறியவன் பின் சரமாரியாக முறைத்தவாறு "இந்த மால்ல ஒர்க் பண்ணுற வாட்ச்மேன் கூட இங்க பர்ஷஸ் பண்ண வந்தா இவ்வளவு கம்மியா பர்ஷஸ் பண்ணிட்டு போக மாட்டான்.. என்னை பார்த்தா உனக்கு எப்படித தெரியுது.. சோத்துக்கு சிங்கி அடிக்குறவன் போல இருக்கா.." கடுகடுக்க மதி சட்டென மறுப்பாக தலையை ஆட்டினாள்.

"வீரேந்திர ஆதவன்னா யாருன்னு தெரியுமா.. " வீர் புருவத்தை உயர்த்திக் கேட்டான்..

மதி விழிகளை விரித்து யோசனை செய்தவள் பின் இதழை பிதுப்பி தெரியாது என்பது போல் தலையை இடவலமாக ஆட்ட,

வீர்ரிற்கோ எங்காவது சென்று தலையை முட்டிக் கொள்ளலாம் போல் இருந்தது.

அவள் எப்படி தெரியும் என்று சொல்வாள்.. அவளுக்கு தான் அவனை பற்றி ஒரு விபரமுமே தெரியாதே அதன் பிறகு பெயர் மட்டும் எப்படி தெரியவரும்..

வீர் பல்லை கடித்தவாறு "விலங்கிடும்.. " என்று முணுமுணுக்க அந்த மோலில் உரிமையாளர் வீர் அமர்ந்திருப்பதை அறிந்து அவனருகே ஓடி வந்தார்.

"ஹலோ வீரேந்திர ஆதவன் சார்.. நீங்க என்ன சார் வெளிய இருக்கீங்க,, உள்ள வாங்க சார்" பணிவுடனும் அதே சமயம் பதற்றமாகவும் அழைத்தார்..

ஏனெனின் வீரேந்திர ஆதவன் நினைத்தால் அந்த மாலையே விலை கொடுத்து வாங்குமளவு அவனிடம் பணபலம் மட்டுமின்றி ஆளுமையும் உள்ளதல்லவா.. அதுவே அவர் பதற்றத்திற்கான காரணம்..

அவர் அவன் பெயரை கூறியதும் மதியோ அப்படியே ஜெர்க் ஆகிவிட்டாள்..
"அய்யயோ இவரு பேரா அது,," மனுதுக்குள் புலம்பியவாறு பாவமாய் அவனை பார்த்து வைத்தாள்.

வீர் மதியை அழுத்தமாய் பார்த்து விட்டு அவர் புறம் திரும்பி தன் கம்பிரமான குரலில் "ஹலோ மிஸ்டர்.." என்று இழுக்க..

"திலீப் சார்"

"ஆ.. மிஸ்டர் திலீப்,, நான் இங்க பர்ஷஸ் பண்ணதான் வந்தேன்,, டோன்ட் ஒர்ரி" என்று அவர் மனதில் உள்ளதை அறிந்தவனாய் இடது புறமாய் இதழை வளைத்து அனைவரையும் சுண்டி இழுக்கும் வகையில் ஓர் புன்னகையை சிந்தினான்.

மதியோ அவன் புன்னகையில் இமை மூடாது அவனையே பார்த்தாள்.

மாலில் உரிமையாளருக்கு அவன் அப்படி கூறியவுன் தான் பதற்றம் குறைந்தது..

" சார் உங்களுக்கு ஏதாச்சு ஹெல்ப் வேணுமா சார்.. "பவ்யமாய் கேட்க..

"நோ நீட் மிஸ்டர் திலீப்.. யாராச்சும் ஒர்க் பண்ற கேர்ள் இருந்தா கொஞ்சம் வர சொல்லுங்க.. "

"ம்ம் ஓகே சார் நான் இப்பவே அனுப்பிறேன் " என்று கூறி விட்டு அவர் செல்ல அடுத்த நொடி பெண் ஊழியர் ஒருவள் வீரின் முன் ஆஜரானாள்.

"சொல்லுங்க சார் நான் உங்களுக்கு என்ன ஹெல்ப் பண்ணணும்" பணிவுடன் கேட்டாலும் அவள் விழிகளோ அவனை ரசிப்பதிலேயே குறியாய் இருந்தது..

"வெல் நீங்க இவங்களுக்கு வேண்டிய ட்ரஸ் அப்புறம் மேஷிங்கா ஜுவலர்ஸ் அப்புறம் தேவையான திங்ஸ் எல்லாம் பர்ஷஸ் பண்ண ஹெல்ப் பண்ணுங்க" எங்க அந்த பெண் மதியை அழைத்துக் கொண்டு சென்று அவளுக்கு தேவையான அனைத்தையும் எடுத்து கொடுத்தாள்.

சிறிது நேரத்தில் வாங்கிய பொருட்களை எடுத்து வந்து பில்போடும் இடத்தில் வைத்து விட்டு அந்த பெண் செல்ல மதி விழிகளை சூழற்றி அந்த மாலை அலசி ஆராய்ந்தாள்..
வீர் அமர்ந்திருந்த இடங்களில் அவன் இருக்கவில்லை.. அவனிருந்த இடத்தில் வேறு சிலர் அமர்ந்திருந்தனர்.

"எங்க போய்ட்டாறு..." யோசனையுடன் நகத்தை கடித்தவாறு நின்று கொண்டிருக்க அவள் சிந்தையை கலைத்தான் பில் கவுண்டரில் உள்ள ஊழியர்.

"மேம் பில் போட்டாச்சு.. கேஸ்சா கார்ட்டா.." என்று கையை நீட்ட அவனையும் அவன் கையையும் மாறி மாறி பார்த்து விழித்தாள்.

மதி எதுவும் பேசாமல் இருப்பதை பார்த்து அவன் மறுபடியும் "மேம் உங்களத்தான்"

"அவ..ரு வரணும்.." என்று மதி கையை பிசைந்தவாறு கூற,

அவனோ மதியை எல்லளாக பார்த்தவாறு "உங்க முழியே சரில்ல.. நான் அப்பவே நெனச்சேன்.. காசு இல்லன்னா எதுக்கு வந்து எங்க டைம்ம வேஸ்ட் பண்ரீங்க.. இதுக்காகன்னே சிலது வருதுங்க.. கண்ணசையுர நேரத்துல எல்லாம் சுருட்டிட்டு போகலாம் பார்த்திங்களா.. " கடுமையான சொற்களை கொண்டு தூற்ற மதியின் விழிகளோ கரித்துக் கொண்டு வந்ததை..

அவர்களை சுற்றியிருந்த அனைவரும் அவளையே பார்த்துக் கொண்டிருக்க அவமானமத்தில் தலையை குனித்தவாறு அவன் மேலும் பேசும் முன் உதட்டை கடித்து கண்ணீரை அடக்கியவாறு "சாரி.. நீங்க நினைக்குற மாதிரி நான் ஒன்னும் அப்படி பட்டவ இல்ல.. இருந்தும் என் மேலதான் தப்பு ஐ அம் எக்ஸ்டிரீம்லி சாரி.."

மறுபடியும் "மன்னிச்சிடுங்க.." என்றவள் கண்களிலிருந்து கண்ணீர் உருண்டோட அவன் முகத்தை பாராது மறுபடியும் திரும்பி அவ்விடத்தில் விட்டு ஓடினாள்.

கண்ணீரை துடைத்தவாறு வாயிலை நோக்கி வந்தவள் முன்னே வந்து கொண்டிருந்தவனை கவனிக்காது அவன் திண்ணியமார்பில் மோதி தலையை தேய்த்தவாறு விசும்பலுடன் "ஸ்ஆ.. சா..சாரி.." என்றவாறு நிமிர்ந்து பார்த்தாள்..

"இங்க என்ன பண்ற.. திங்ஸ் எல்லாம் பர்ஷஸ் பண்ணிடியா.. " ஒற்றை புருவமுயர்த்தில் அவளை அழுத்தமாக ஊடுருவும் பார்வையில் நோக்கியவாறு வினவினான் வீர்..
அவசரமாக ஒரு அழைப்பு வர உள்ளே இரைச்சல் காரணமாக வெளியே வந்தவன் பேசிவிட்டு உள்ளே வரும் போதே மதி கவனிக்காதி ஓடி வந்து அவன் மேல் மோதினாள்...

சட்டென தன் கண்ணீரை புறங்கையால் துடைத்துக் கொண்டாள். இருந்தும் அவன் கூர் விழிகளில் அது நுன்னியமாய் படம் பிடித்தது..

"உன்னைதான்,, இங்க என்ன பண்ற,," குரலுயர்த்திக் கேட்க அவளுக்கு வார்த்தை வந்தால் தானே.. ஏனோ இவனை கண்டால் மட்டும் உள்ள தைரியம் அனைத்தும் வடிந்து செல்கிறதல்லவா..

"எல்லாம் வாங்கியாச்சா" என்றதும் நாளாபுறமும் தலையை ஆட்டி வைத்தாள்.

"ப்ச்" வீர் சலித்துக் கொண்டு உள்ளே செல்ல மதியும் அவன் பின்னே சங்கடமாக மெல்ல நடந்து சென்றாள்..

உள்ளே நுழைந்தவன் நேராக பில் போடும் இடத்திற்குச் சென்று நின்றான்..

"சொல்லுங்க சார் நான் ஏதாச்சும் உங்களுக்கு பண்ணணுமா" என்று அங்கிருந்தவன் பவ்யமாய் வினவினான்..

வீர் தன் பின்னே தலையை குனித்துக் நின்று கொண்டிருந்த மதியை சுட்டிக்காட்டி தன் வாலட்டிலிருந்து கார்டை நீட்டி "இவங்க பர்ஷஸ் பண்ண திங்ஸ்க்கு பில் போட்டு கார்ல வைக்க சொல்லுங்க" என்று கூற அந்த ஊழியர் மதியை பார்த்து அதிர்ந்து எச்சை விழுங்கியவாரே கார்டை உரசி வீரிடன் நீட்ட வீர் அவனை அழுத்தமாய் பார்த்து விட்டு வெளியே செல்ல மதியும் அவனின் பின் சென்றாள்...

அவர்கள் சென்ற பின் அவன் நெஞ்சில் கையை வைத்து "நல்ல வேல அந்த பொண்ணு நம்மல போட்டு கொடுக்கல,, இல்ல என் கதை இன்னைக்கே காலி.. " என்று பெரு மூச்சை எடுத்து விட்டான்..



நிலமகள் ஏனோ வாட்டமாய் கரு மேகங்களுக்குள் மறைந்து கொள்ள அச்சமூட்டும் வகையில் வானை பிளந்து கொண்டு இடியுடன் கூடிய மின்னல் வெட்டியது..

சாரளத்தின் வழியாக பளீச்பளீச் என பெரும் சத்தத்துடன் ஒளி வீச விடாபிடியாய் தன்னை போர்வைகுள் மறைத்துக்கொண்டு மதி..

வீட்டுக்கு வந்ததும் வெளியே செனற வீர் வந்தது என்னவோ இரவாகித்தான்... வந்தவன் தன் அறைக்குள் சென்று விட மதிக்கோ அது வசதியாய் போனது,,, தான் ஒருத்தியாய் அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு உறங்குவதற்கு தனி அறை ஒன்றினுள் நுழைந்து கொள்ள தூக்கம் தான் வருவேனா என்று விந்தை காட்டியது,,

ஏனோ இந்த விசாலமான வீட்டில் அதுவும் தனிஅறையில் தனியாக உறங்க அவளுக்கு பயமாக இருந்தது,, அது மட்டுமின்றி இடி வேறு முழங்கி பெரிய சத்தயமா பீதியை கிளப்ப காதை மூடிக்கொண்டு எழுந்தமர்ந்தாள்..

"முருகா,, எனக்கு மட்டும் எதுக்கு முருகா இந்த சோதன.. நான் தூங்கிதுக்கு அப்புறம் இந்த இடி முழங்கக் கூடாதா.." சிணுங்கியவாறு வாய் விட்டு புலம்பியவள் ஒரு முடிவுடன் எழுந்து மாடியை நோக்கிச் சென்றாள்..

ஏதோ ஒரு குருட்டு தைரியத்தில் வந்து விட்டால்,, மதியின் பாதங்கள் நின்றது என்னவோ வீரின் அறைக்கு முன்பாகத்தான்,,

"தட்டவா,, இல்ல வந்த வழில ஓடிடலாமா" கன்னத்தில் ஆள் காட்டி விரலை வைத்து பெரிய ஆராய்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாள் மதி..

"மதி ஈஸ்ச ஸ்ட்ரோங் கேர்ள்,, " தனக்கு தானே கூறி தைரியப்படுத்திக் கொண்டவள்,,

"வந்தது வந்துட்டோம் என்ன நடக்குதுன்னு தான் பார்க்கலாம்,, முருகா எப்பவும் தன் பக்தினியை கை விட மாட்டாரு" என்று மேலே பார்த்துக் கூறி ஒரு பெரு மூச்சை எடுத்து விட்டவள் கதவில் அழுத்தமாய் கை வைக்கவும் உள்ளிருந்து கதவு திறப்படவும் சரியாக இருந்தது...

கதவு திறப்படும் என்று யூகிக்காதவள் பிடிமானமின்றி கீழே விழச்செல்ல அவள் விழுவாள் என்று யூகிக்காத வீரும் அவளுடன் செர்ந்து நிலத்தில் விழ இருவரின் இதழ்களும் பச்சக் என்று ஒன்றிக் கொண்டது..


துடிக்கும்...

Wʀɪᴛᴇʀ : Rɪᴢɪɪ💘
 
Top