• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Viswadevi

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
317
இன்னிசை- 14

நாட்கள் பல கடந்திருக்க…

மேனகா, பழங்குடி மக்களின் இடத்திற்கு சர்வ சாதாரணமாக சென்று வந்துக் கொண்டிருந்தாள்.

ரிஷிவர்மனின், கால் சற்று குணமாகவும் அன்று தான் வேலைக்கு மீண்டும் வந்திருந்தான்‌.

ரிஷிவர்மனின் கவனம் வேலையில் இருந்தாலும், விழி அவ்வப்போது அவனது பேச்சை கேட்காமல் அலைப்பாய்ந்துக் கொண்டிருந்தது.

" க்கூம்…" என்ற கார்த்திக்கின் குரலில் தான் அவன் வந்ததையே கண்டு கொண்டான் ரிஷிவர்மன்.

" சார்…"

" இப்போ ஹெல்த் எப்படி இருக்கு ஓகேவா?" என்று தன்மையாக கார்த்திக் வினவினான்.

" ஃபைன் சார்."

" ரொம்ப ஸ்டெயின் பண்ணிக்காதீங்க ரிஷி. வந்தவுடனே வேலையில இன்வால்வ் ஆகணுமா?"

" அப்படியெல்லாம் பெருசா வொர்க் எதுவுமில்லை. ஜஸ்ட் ரவுண்ட்ஸ் போயிட்டு வந்தேன் சார்."

" ஓ… ரவுண்ட்ஸ்லாம் போயிட்டு வந்தாச்சா? எந்த ப்ராப்ளமும் இல்லையே." என்று கார்த்திக் அதிகாரியாக அவனிடம் பேசிக் கொண்டிருக்க.

" இல்லை சார்." என்று ரிஷிவர்மனும், மரியாதையாக பதிலளித்துக் கொண்டிருந்தான்.

" ஓகே ரிஷி. நெக்ஸ்ட் வீக் விலங்குகளை எப்படி கணக்கு எடுக்கிறது என்று ஒரு டெமோ காண்பிக்கணும். வொர்க்கர்ஸ் எல்லோரும் அசெம்பிளாகணும்.அதுக்கு ஏற்பாடு பண்ணிடுங்க." என்ற கார்த்திக், அப்போது தான் அங்கிருந்த முகுந்தனை பார்த்தது போல்," ஓ காட்… நீங்க ஏன் முகுந்தன் வெயிட் பண்ணிட்டு இருக்கீங்க. நீங்க வேணும்னா ஜீப்ல போய் இருங்க. கொஞ்ச நேரத்தில் நான் வந்துடுவேன்." என்றான்.

" சரிங்க சார்." என்ற முகுந்தனோ,' கார்த்திக் சார் எவ்வளவு நல்லவரா இருக்காரு. இவருக்கு கீழே வேலைப் பார்க்குறவங்களோட நலன் மேல அக்கறையாக இருக்குறாரு.' என்று சிலாகித்துக் கொண்டு சென்றான்.

முகுந்தன் அங்கிருந்து செல்லும் வரை அமைதியாக இருந்த கார்த்திக், அவன் சென்றதும் வேகமாக ரிஷிவர்மனின் தோள் மேல் கை போட்டு, "எப்படி இருக்க ரிஷி? கவனமா இருக்க கூடாதா?" என.

" டேய் மச்சி… நான் ஓகே தான். நீ ஏன் இவ்வளவு எமோஷன் ஆகுற?" என்று ஆராய்ச்சியாக பார்த்தான் ரிஷிவர்மன்.

"அது ஒன்னும் இல்லடா. முதல்ல நீ யாருக்காக இங்க வெயிட் பண்ணிட்டு இருக்க? அதை முதல்ல சொல்லு."

"மேகிய இன்னும் பார்க்கலை. அவ வேலையை முடிச்சிட்டு வர்ற நேரம் தானே. அதான் இங்க வெயிட் பண்ணிட்டு இருக்கேன்."

" உனக்கு எதுவும் தெரியாதா?" என்று அதிர்ச்சியாக கார்த்திக் வினவ.

"என்னது எனக்குத் தெரியாதான்னு கேட்குற? ஒழுங்கா தெளிவா கேளுடா. எனக்கு தானே அடிபட்டிச்சு. அதுவும் கால்ல தான். ஆனா நீ பேசுறதெல்லாம் பார்த்தா, உனக்கு மண்டையில அடிப்பட்ட மாதிரி இருக்கு." என்று தனது கோபத்தை, கிண்டலாக அவனிடம் கொட்டினான் ரிஷிவர்மன்.

" நண்பன் பாவம்ன்னு கவலைப்பட்டா… என்னையே கிண்டல் பண்ற. இது தான் நல்லதுக்கு காலமில்லைங்குறது." என்ற கார்த்திக்கை புரியாமல் பார்த்தான் ரிஷிவர்மன்.

"டேய் நீ இங்கே யாருக்காக கால்கடுக்க நின்னுக்கிட்டு, பார்வை அலைபாய காத்துக்கிட்டு இருக்கியோ, அவங்க இப்போதைக்கு வரப்போவதில்லை."

" ஏன் டா மேனகாவுக்கு எதுவும் வேலை குடுத்திருக்கியா?"

" நான் எதுவும் வேலை கொடுக்கலை. ஆனாலும் அவங்க பிஸி. அவங்க வொர்க் முடிஞ்சு வர்றதுக்கு எட்டு மணி ஆகும்‌."

"அது வரைக்கும் என்னடா பண்ணிட்டு இருக்கப் போறா. அதுவும் நீ எதுவும் சொல்லாமல் அப்படி என்ன வேலை இருக்கப் போகுது.நான் போய் பார்க்கிறேன்."

" நீ போய் பார்த்தாலும் அங்க மேனகா இருக்க மாட்டாங்க."

" டேய் கார்த்தி…. புதிர் போடாம, என்ன சொல்ற வர்றேன்றதை புரியற மாதிரி சொல்லு."

"அது வந்து மேனகா டெய்லி அந்த பழங்குடி மக்களை போய் பார்த்துட்டு லேட்டா தான் வருவாங்க."

" டேய் கார்த்தி பொய் சொல்லாத. அவ என் பேச்சை மீற மாட்டா."

"நான் ஏன்டா பொய் சொல்ல போறேன். இன்ஃபாக்ட் உனக்குத் தெரிஞ்சு தான் அவ அங்க போறான்னு நினைச்சிட்டு இருந்தேன். ரெண்டு நாளுக்கு முன்னாடி நைட் ரவுண்ட்ஸ் போனேன். அப்போ தனியா வந்துட்டு இருந்தாங்க. இவ்வளவு நேரம் எங்கே போனீங்க? இந்த நேரத்தில எதுக்கு தனியா வந்துட்டு இருக்கீங்கன்னு விசாரிச்சா, அந்த பழங்குடி பசங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துட்டு வர்றேன்னு சொன்னாங்க."

" ஓ…" என்றவனோ உள்ளுக்குள் கொதித்துக் கொண்டிருந்தான்.

" சரி டென்ஷனாகத ரிஷி. ஆனால் மேனகா அங்க போறதை தடுக்கப்பாரு. ஏன்னா அந்த கேங் இன்னும் இரண்டு நாள்ல வர்றேன்னு சொல்லியிருக்காங்க. அவங்க வர்ற நேரத்துல இவங்க பாட்டுக்கு காட்டுக்குள்ள போறதும், வர்றதுமா இருந்தா சரி வராது. அப்புறம் ரெண்டு பேரும் மாட்டிக்குவோம். நானே நீ வரலையேன்னு ரொம்ப டென்ஷனா இருந்தேன். இப்போ தான் நிம்மதியா இருக்கு."

" சரி கார்த்திக். நான் இங்கே எல்லாவற்றையும் பார்த்துக்குறேன். அப்புறம் என்னோட ஷேர்…" என்று ரிஷி இழுக்க.

" டேய் அவங்க அனுப்பியதும், உனக்கு வந்துடும் டா." என்ற கார்த்திக், மேலும் சில விஷயங்களை அவனிடம் ரகசியமாக பகிர்ந்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.

கார்த்திக் கிளம்பி போன பிறகும், ரிஷிவர்மன் அங்கிருந்து நகரவில்லை. மேனகாவின் வருகைக்காக காத்திருந்தான். அவனது கால் வலியையும் பொருட்படுத்தாமல் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தான்.

மேனகாவோ சில நாள் பழக்கம் போல் தாமதமாகவே வந்தாள். அவள் முகமுமோ, அகத்தை போல் நிறைவாக இருந்தது. அவளால் முடிந்த சிறிய உதவியாக சில குழந்தைங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தாள்‌. என்ன தான் பள்ளியில் படித்தாலும், அவர்களுக்கு ஏற்படும் சில சந்தேகங்களை நிவர்த்தி செய்ய, அக்குழந்தைகளோ, இவளை கொண்டாடினர். அவர்களுக்கு கற்பிப்பதில் அவளுக்கும் ஒரு திருப்தி.

அந்த திருப்தியுடனே துள்ளி குதித்து வந்தவள், அங்கு நின்று கொண்டு எங்கோ பார்வை பதித்திருந்த ரிஷிவர்மனை கண்டதும், வியப்புடன் அவனருகே சென்றாள்.

" அத்தான்… நீங்க தானா. உங்களை மாதிரி தெரியுதேன்னு தான் வந்தேன். உங்களை எதிர்ப்பார்க்கவே இல்லை." என்று ஆச்சரியப்பட்டாள் மேனகா.

" ஏன் நான் வரவே மாட்டேன்னு முடிவு பண்ணிட்டியா?"

" அத்தான் இன்னைக்கு வர்றதா சொல்லவே இல்லையே. அதான் கேட்டேன்." என்று அவனை அதிர்ச்சியாக பார்த்தாள்.

" அதுக்கு நீ எனக்கு ஃபோன் போடணும். அடிப்பட்டு கிடந்தேனே. எத்தனை நாள் என் கிட்ட பேசுனேன்னு சொல்லு பார்ப்போம்." என்ற ரிஷிவர்மனை, விழியகல பார்த்துக் கொண்டே நின்றாள் மேனகா.

"...."

" என்ன பதிலை காணும் மேகி? அவ்வளவு தான் உனக்கு அத்தான் மேல் பாசம். இவன் எங்க திரும்ப வரப்போறான்னு நினைச்சுக்கிட்டு, உன் இஷ்டத்துக்கு இருக்க. அதானே." என்று கடுப்பாக கூற.

" ஐயோ! அத்தான்…ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க. இங்கே டவர் கிடைக்காதுன்னு தெரியாதா உங்களுக்கு. அப்படியும் நான் தினமும் டவர் கிடைக்கிற இடத்துக்கு வந்து ஃபோன் போட்டுட்டு தான் இருந்தேன். நீங்க தான் பேசலை. நீங்க தூங்கிட்டு இருக்கிறதா அத்தையாவது, மாமாவாவது சொல்லுவாங்க." என்று குரல் நடுங்க கூறினாள் மேனகா.

" ஆமா இது உனக்கு ஒரு சாக்கு ."

" ஏன் அத்தான் இப்படி பேசுறீங்க? நான் என்ன தப்பு பண்ணேன்."

" ஏன் அதை என் வாயால சொல்லணுமா?"

" அத்தான்… நான் என்ன தப்பு செய்தேன். அதை சொல்லுங்க. எதுவும் சொல்லாமல் உங்க இஷ்டத்துக்கு பேசிட்டு இருக்க வேண்டாம்."

" ஓஹோ… திமிர்… சம்பாதிக்கிறல்ல அந்த திமிர். இனி யார் தயவும் வேண்டாம்னு உன் இஷ்டத்துக்கு சுத்துற"

" அத்தான்…" என்று ஆக்ரோஷமாக கத்தினாள் மேனகா.

"...." அவளது ஆக்ரோஷத்தில் வாயடைத்து நின்றான் ரிஷிவர்மன்.

" அத்தான்… நீங்க ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்கன்னு எனக்குத் தெரியலை.
எனக்கு பண தேவை இல்லை என்று உங்களுக்கு நல்லாவே தெரியும். பெத்தவங்க தான் இல்லாமல் போயிட்டாங்க‌. ஆனால் அவங்களோட சேவிங்ஸ் பேங்க்ல தூங்கிட்டு தான் இருக்கு. அதை எடுக்காமல் தான் அத்தையும், மாமாவும் என்ன கஷ்டப்பட்டு வளர்த்தாங்க. நானும் பணம் தான் முக்கியம்னு நினைச்சிருந்தா, மேஜரானதும் கிளம்பியிருப்பேன். அதுக்கு வேலையில் சேர்ந்ததும் தான் நான் என் இஷ்டப்படி நடக்கணும்னு அவசியமில்லை அத்தான்." என்று மரமரத்த குரலில் கூறினாள் மேனகா.

பேச்சுப் போகும் பாதை பிடிக்காமல், உடனே மன்னிப்பு கேட்டு சரணாகதி அடைந்தான் ரிஷிவர்மன்.

" சாரி மேகி. ஊர்ல இருந்து வந்ததும் உன்னைப் பார்க்குறதுக்காக வேகமா வேலை முடிச்சிட்டு வந்து எவ்வளவு நேரம் காத்திட்டிருந்தேன் தெரியுமா? இங்கே பாரு கால் கூட வீங்கிடுச்சு. அந்த டென்ஷன்ல கொஞ்சம் தேவையில்லாமல் பேசிட்டேன். " என்று அவன் முடிக்கக் கூட இல்லை, " ஐயோ! அத்தான் என்னாச்சு?" என்று கண்கள் கலங்க பதறினாள் மேனகா.

" ப்ச்… இது ஒன்னும் பெரிய விஷயமில்லை. என்னால தாங்க முடியாத வலிக் கிடையாது. ஆனால் நான் சொல்லியும் கேட்காமல் தனியே அந்த பழங்குடி மக்கள் கிட்ட போன பாரு. அது தான் வலிக்குது. எவ்வளவு ஆபத்தான இடம். நீ அங்கே டெய்லியும் போய்ட்டு வர்றேன்னதும், ஒரு நிமிடம் உயிரே என் கிட்ட இல்லை தெரியுமா?" என்றான் ரிஷிவர்மன்.

" அத்தான்… உங்க பேச்சை என்னைக்கும் நான் மீறினது கிடையாது. நீங்க என்ன சொன்னீங்க? தனியா போகாதேன்னு தானே சொன்னீங்க. நானும் உங்க பேச்சுக்கு மதிப்பு கொடுத்து தனியா போகலை. முருகன் ஸ்கூல் விட்டு இந்த வழியா தான் போவான். அவன் கூடத் தான் போனேன். திரும்ப வரும் போதும், யாராவது துணைக்கு வந்து விட்டுட்டு தான் போறாங்க. நான் ஒரு ஃபாரஸ்ட் ஆஃபிஸர். ஆனாலும் எத்தன நாளைக்கு இன்னொருத்தன் உதவியோட போறது? ஆனாலும் உங்க பேச்சுக்கு மதிப்பு கொடுத்து இருக்கேன். ஆனால் நீங்க ஈஸியா என்னை திட்டிட்டீங்க." என்று முறுக்கிக் கொண்டாள் மேனகா‌.

" சாரி… சாரி… தவுஸண்ட் டைம் சாரி கேட்குறேன். மோகினி… உன்னை இவ்வளவு நாளா பார்க்காத டென்ஷன். அதைத் தான் உன் கிட்ட நான் காண்பிச்சிட்டேன். ம் நான் தான் தவிச்சு போனேன் போல… ஆனா உனக்கு அப்படி ஒன்னும் இல்ல. என்ன விட்டுட்டு ஜாலியா இருந்திருக்க. ஆனால் இதுக்கெல்லாம் பணிஷ்மென்ட் உண்டு." என்று அவளை காதலாக பார்க்க.

" ஹான்…" என்ற மேனகாவோ, உள்ளங்கை வியர்க்க, அவனைப் பார்த்தாள்.

" ஹேய் வன மோகினி. நீ தேவையில்லாமல் கற்பனை பண்ணிக்காத. ஒரு வாரத்துக்கு நீ என் கூட தான் டைம் ஸ்பென்ட் பண்ணணும். வேற எங்கேயும் போகக்கூடாதுன்னு தான் சொல்ல வந்தேன். வேற எந்த பனிஷ்மென்ட்டும் இப்போதைக்கு இல்லை." என்று காதலாக சொல்வது போல் சொல்ல.

அவளோ மகுடிக்கு மயங்கியே பாம்பென தலையாட்டினாள்.

' அப்பாடா! இந்த வாரத்துல அவனுங்த வந்துட்டு போற வரைக்கும், மேனகாவை அங்க போக விடாமல் பார்த்துக்கிட்டாச்சு.' என்றுஎண்ணி ஆசுவாசப்பட்டுக் கொண்டான்.

ரிஷிவர்வன் இவ்வளவு கவனமாக இருந்தும், மேனகாவிடம் கையும் களவுமாக மாட்டிக் கொண்டான். எவ்வளவு திட்டங்கள் போட்டாலும் பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது போல் மாட்டிக் கொண்டான். ஆனால் ரிஷிவர்மனது இருண்ட பக்கத்தை மேனகா அறிந்துக் கொள்வதற்காகத் தான் ஒரு உயிர் பலியானதோ? என்னவோ?

 
Top