• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Viswadevi

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
317
இன்னிசை - 15

மேனகாவை பழங்குடி மக்களோடு இலகுவாக பழகுவதை தடுக்கவும், இரவு நேரத்தில் காட்டில் உலவுதை தடுப்பதற்காகவும் தனது காதலையே ஆயதமாக வைத்து சமார்த்தியமாக தடுத்ததாக நினைத்துக் கொண்டிருந்தான் ரிஷிவர்மன்.

ஆனால் அவன் நினைப்பதெல்லாம் நடக்கப்போவதில்லை என்பதை அறியாமல் ஆணவத்தோடு கார்த்திக்கிடம் பேசிக் கொண்டிருந்தான்.

" டேய் கார்த்தி. அதான் நான் வந்துட்டேன்ல. ஒன்னும் பிரச்சினை ஆகாது."

" ரொம்ப டென்ஷன் ஆயிடுச்சு டா ரிஷி. மேனகா வேற எப்ப பார்த்தாலும் காட்டுலையும், மலையிலையும் நைட்டு நேரத்துல போயிட்டு வந்துட்டு இருந்தாங்களா. அதான்… கொஞ்சம் பயமாகிடுச்சு. இவனுங்களுக்கும் வேற வேலையே கிடையாது போல. பெத்தவங்க சம்பாதிச்சு வச்சிருக்காங்க. செலவு செய்றது தான் இவங்களுடைய ஒரே வேலை. அவங்க கஷ்டப்பட்டாதானே காசோட அருமை தெரியும். ஊதாரித்தனமா குடிச்சு கூத்தடிக்கிறாங்க.கொடுத்தவச்சவங்க.ஹூம்." என்று பெருமூச்சு விட.

"டேய் கார்த்தி! அவனுங்க அப்படி இருக்கறதுனால தான் நம்மளும் கொஞ்சம் சம்பாதிக்க முடியுது. "

" நீ சொல்றதும் உண்மைதான். அவங்க இப்படி இருக்கிறதுனால தான் நமக்கு பணம் கிடைக்குது. ஆனா அவங்க வந்துட்டு போற வரைக்ககும் நம்ம உயிர் தான் போய், போய் வருது. "

" டேய் கார்த்தி! இதுல எல்லாருக்கும் தான் பங்கு கொடுக்குறீயே. அப்புறம் ஏன் டா இப்படி நடுங்கிட்டு இருக்க."

"டேய் நான் ரவுண்ட்ஸ் வர்றவங்கள்ல இருந்து அதிகாரிங்க வரைக்கும் கவனிக்கிறேன் தான்.இருந்தாலும் யாராவது மேலிடத்துக்கு புகார் பண்ணிட்டா, என்ன பண்றதுன்னு பயமா இருக்கு. இதுல உன் மாமா பொண்ணு வேற நீதி நேர்மைன்னு இருக்காங்க. அது தான் இந்த முறை எனக்கு கொஞ்சம் அள்ளு விடுது."

" மேகியை நினைச்சு நீ பயப்படாதடா. நான் எல்லாத்தையும் பாத்துக்கறேன். எப்பவும் போல அவங்க வந்து சத்தம் இல்லாம போயிடுவாங்க. " என்று கார்த்திக்கு தைரியம் கூறிக் கொண்டிருந்தான் ரிஷிவர்மன்.

" ம்கூம்… அவங்க சத்தம் இல்லாமல் போனால் நான் ஏன் டா இப்படி புலம்புறேன். கையை வச்சுக்கிட்டு சும்மா இல்லாமல் மரத்தை வெட்டிக்கிட்டு இருக்காங்க. இல்லை வேட்டையாடுறேன்னு விலங்குகள் எல்லாம் துன்புறுத்திட்டு இருக்காங்க. போன முறை வந்து சமைச்சு சாப்பிடறேன்னு பண்ண கலாட்டவெல்லாம் மறந்துட்டியா? விட்டா காட்டையே எரிச்சிருப்பாங்க. நீயும், நானும் சமாளிக்கலைன்னா அவ்வளவு தான்."

" சரி விடு டா. அது தான் வார்ன் பண்ணிட்டோம்ல. இனிமேல் அப்படி பண்ண மாட்டாங்க."

" சரி டா. நைட் பார்ப்போம்." என்று கார்த்திக் ஃபோனை கட் செய்ய.

ரிஷிவர்மனோ, மேனகாவை எண்ணி தனக்குள் புன்னகைத்துக் கொண்டான்.
**************************


ரிஷிவர்மன் கூறிய பனிஷ்மெண்டை மனதார ஏற்க தயாராக இருந்தாள் மேனகா. அதனால் தினமும் மாலையில் பழங்குடி மாணவர்களுக்கு நடத்தும் டியூஷனுக்கு அங்கு செல்லவில்லை. ஆனாலும் அந்த பசங்களிடம் பள்ளி முடிந்து வரவும், அவளிருக்குமிடத்திலே சொல்லிக் கொடுத்தாள்.

ரிஷிவர்மன் ஏதோ வேலை என்று எங்கோ சென்றிருக்க… அவன் வந்தாலும் அவனையும் இவர்களுக்கு சொல்லிக் கொடுக்கச் சொல்லலாம் என்று எண்ணியிருந்தாள். அவன் தான் வரவேயில்லை. வேலை நேரம் முடிந்ததும், தினமும் ஒரு அரைமணி நேரம் மட்டும் வந்து மேனகாவுடன் செலவு செய்தவன் வேலை இருப்பதாக கழன்று கொண்டான். ஆனால் மேனகாவிடம், " மேகி..
ஒரு வேலை இருக்குது. ஒரு பத்து நிமிஷத்துல முடிச்சிட்டு வந்துடறேன்." என்று சொல்லி செல்பவன், திரும்ப வருவதற்கு தான் நேரமாகும். இப்படியே ஒரு வாரம் கடந்திருந்தது.

" பூனை கண் மூடினால் உலகம் இருட்டாகிடும்." என்று எண்ணுவது போல் ரிஷிவர்மன், பழங்குடி மக்களோடு மேனகா பழகுவதை தடுத்து விட்டதாக எண்ணிக் கொண்டிருந்தான். ஆனால் அந்தக்குடிமக்களோ கீழே வரும் போது ஒரு எட்டு மேனகாவை வந்து சந்தித்து விட்டு தான் செல்வார்கள்.

அன்று பொன்னம்மாளே அங்கு வந்திருந்தார்.

" வனமோகினி…" என்று கனிவாக அழைக்க.

"கோல்ட்…" என்று உற்சாகமாக கூவிய மேனகாவோ, அவரை அணைத்துக் கொண்டாள்.

" எப்படி இருக்க தாயி."

" உங்களை பார்க்க முடியலைங்குற குறை மட்டும் தான். அதுவும் இன்னைக்கு நீங்க வந்துட்டீங்கள்ல… இனி எனக்கென்ன பிரச்சினை. மீ ஹேப்பி." என்ற மேனகா புன்னகைக்க.

கள்ளமில்லாத புன்னகை பார்த்தவரோ,' இந்த புள்ளைக்கு போய், அந்த பொசக்கட்ட பையன் முறைபையனாம்.
இனி அவன் எங்க கூட இந்த பொண்ணை பழக விடமாட்டான். அதுக்கு அச்சாணியாம தான் வரவிடாம பண்ணிட்டான்.'என்று எண்ணிக் கொண்டிருந்தார்.

" என்ன கோல்ட்… ஒன்னும் பேசாமல் என்னையே பார்த்துக்கிட்டே இருக்க. என் மேல கோபமா இருக்கியா?"

" அதெல்லாம் ஒன்னும் இல்லை தாயி. நான் ஏன் கோபப்பட போறேன். நீ அங்கன வரலைன்னா என்ன, அதான் நானே வந்துட்டேனே."

"அது சரி தான் கோல்ட். நீங்க எல்லாரும் என்னை வந்து பார்க்குறீங்க தான். இருந்தாலும் அங்க வந்து உங்களைப் பார்த்துவிட்டு, அப்படியே உங்க கையால சாப்பிடுற போல ஆகுமா?" என்று எண்ணி பெருமூச்சு விட்டாள்.

" அட இதுக்கு போய் விசனப்படுவாங்களா? உனக்கு புடிச்சதை நான் சமைச்சு தான் எடுத்துட்டு வந்திருக்கேன்." என்றவர் கையில் இருந்த இலை பொட்டலத்தை மேனகாவிடம் நீட்ட.

ஆவலாக அதை வாங்கிய மேனகா, வேகமாக உண்ணத் தொடங்கினாள்.

" மெள்ள சாப்பிடு தாயி."

" கோல்ட்… உண்மைய சொல்லட்டா, உங்க சாப்பாட்டை ரொம்ப மிஸ் பண்ணேன் தெரியுமா? நீங்க இன்னைக்கு எடுத்துட்டு வரலைன்னா நானே நாளைக்கு அங்க வந்திருப்பேன்."

" ஐயோ! கொஞ்ச நாளைக்கு அங்கிட்டு வரவேணாம் பாப்பா."

" ஏன் கோல்ட்?" என்ற மேனகா ஆச்சரியமாக பொன்னம்பாளை பார்த்தாள்.

" அது வந்து மோகினி… அங்கன புலியோட நடமாட்டம் இருக்கு. அதான் வர வேணாம்னு சொன்னேன். ஜாக்கிரதையா இருக்கணும்."

" ஐயோ! நீங்க முதல்ல அதிகாரிங்க கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணீங்களா? அவங்க வந்து புலியை பிடிக்க ஏதாவது ஏற்பாடு பண்ணுவாங்க." என்று பதறினாள் மேனகா.

"அதெல்லாம் எங்கூட்டுக்கார் போய் நடையா நடந்துட்டு வந்துட்டார். ஒன்னும் வேலைக்காகல‌‌. "

" என்ன கோல்ட் அலட்சியமா சொல்றீங்க. அங்கே எத்தனை குடும்பம் இருக்கு. எவ்வளவு புள்ளைங்க இருக்கு. கேர்லசா இருக்கீங்க. நான் எங்க அத்தான் கிட்ட சொல்றேன்‌."


"எல்லா அதிகாரிகளும் ஒன்னு தான். இங்கன மனுஷங்களுக்கு மதிப்பு கிடையாது. நாங்க காட்டுல இருக்குறதால தான் இப்படி ஆகுதுன்னு, எங்களை விரட்ட தான் பார்ப்பாங்க."

" அத்தான் அப்படி எல்லாம் இல்லை."

" நான் யாரையும் குறையா நினைக்கலை. இது எங்களுக்கு பழகிடுச்சு. நாங்க பார்த்து ஜாக்கிரதையா இருந்துப்போம். நீ இப்போதைக்கு அங்கன வாராத தாயி. அதான் உனக்கு நல்லது. நான் வரேன் தாயி."

" அப்படி எல்லாம் விட முடியாது கோல்ட். நான் போய் எங்க அத்தான் கிட்ட பேசுறேன்." என்றவள், கிளம்பும் வரை கூட காத்திருக்கவில்லை. அப்போதே ரிஷிவர்மனை தேடி சென்றாள்.


அவளை பார்த்ததும் புன்னகைத்த ரிஷிவர்மன், " சாரி மேகி. உன்னோட டைம் ஸ்பென்ட் பண்ணலாம்னு பார்த்தால், ஏதாவது வேலை வந்துக் கிட்டேயிருக்கு. எல்லாம் என் நேரம். கடவுள் வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்க மாட்டேங்குறார்." என்று புலம்பியபடியே பெருமூச்சு விட்டான்.

" ப்ச்…அதை விடுங்க. நான் உங்கக் கிட்ட முக்கியமான விஷயம் பேசணும். அதுக்காகத்தான் வந்தேன்.

"என்ன விஷயம் மேகி சொல்லு…" என்றவனது குரல் சற்று மாறியிருந்தது.

" அது வந்து பழங்குடிமக்கள் இருக்குற ஏரியாவுல புலி நடமாட்டம் இருக்குதாம். அதை பிடிக்க ஏற்பாடு பண்ணுங்க அத்தான்." என்றவளது குரலில் பதட்டம் அதிகமாக இருந்தது.

"உன்னை அங்கு போகக்கூடாது தானே சொன்னேன். என் பேச்சுக்கு அவ்வளவு தானே மதிப்பு."

" என்ன உளறீங்க அத்தான்? உங்க கூட இருக்கணும்னு தானே சொன்னீங்க. பழங்குடி மக்கள் இருக்கிற இடத்துக்கு போக கூடாதுன்னு சொல்லலையே. நான் அங்க போறதுல உங்களுக்கு என்ன பிரச்சினை?" என்று புரியாமல் அவனைப் பார்த்தாள் மேனகா.

" அதெல்லாம் எதுவும் கேட்காதே. எனக்கு நீ அங்கே போறது பிடிக்கலை. நான் சொல்றதைத் தான் நீ கேட்கணும்."

" இதுவரைக்கும் நீங்க சொன்னதை தான் கேட்டுட்டு இருக்கேன். நீங்க உங்க கூட இருக்கணும்னு சொன்னதால, தான் நான் எங்கேயும் போகாமல் உங்களுக்காக காத்துட்டிருந்தேன். அப்போ தான் கோல்ட் என்னைப் பார்க்க வந்தாங்க. புலி நடமாட்டம் இருக்குங்குறதையும் அவங்க தான் சொன்னாங்க." என்று மரமரத்த குரலில் கூறினாள்.

' ஷிட்…' என்று தன்னை நொந்துக் கொண்ட ரிஷிவர்மன், " மேகி… அங்க புலி நடமாட்டம் இருக்குன்னு சொல்லவும் நீ அங்கே போனீயோன்னு பயந்துட்டேன். அங்க புலி வருவதற்கு வாய்ப்பில்லை. எதையும் பார்த்திருக்கவும் மாட்டாங்க. சும்மா அவங்க மன பிரம்மையா இருக்கும். ஏதாவது வந்து போன தடயம் இருந்தா, நம்ம ஆக்ஷன் எடுக்கலாம் சரியா. இப்போ நீ போய் ரெஸ்ட் எடு." என்றவன், அவளது தலையை வருட முயல.

" சரி அத்தான்." என்று அவனிடமிருந்து நகர்ந்து அங்கிருந்து சென்று விட்டாள்.

அவளது கோபம் புரிந்த ரிஷிவர்மனோ, அவசரப்பட்ட தன்னுடைய முட்டாள்தனத்தை நொந்துக் கொண்டு அவனது இருப்பிடம் நோக்கி சென்றான்.

ரிஷிவர்மன் அங்கிருந்து செல்லும் வரை பொறுத்திருந்தவள், முதல் முறையாக அவனது பேச்சை மீறி, பழங்குடி மக்களின் இருப்பிடத்திற்கு சென்றாள்.


அவளை அந்த நேரங்கெட்ட நேரத்தில் பார்த்த பொண்ணம்மாள் பதறினார்." அடியே லட்சுமி… அங்கன வரது மோகினியா?" என்று கத்த.

"ஆமாம்… மேனகா புள்ள மாதிரி தான் தெரியுது." என்ற லட்சுமியின் முகமும் கலக்கத்தை சுமந்து இருந்தது.


வேகமாக மேனகாவின் அருகே சென்றவர்கள், " உன்னை யார் இங்க வர சொன்னா தாயி. கடவுளே! " என்று புலம்ப.

" புலியோட காலடித் தடம் இருந்தா ஃபோட்டோ எடுத்துட்டு போகலாம்னு வந்தேன். நீங்க தூங்க போயிருப்பீங்க. சத்தமில்லாமல் வந்துட்டு போகலாம்ன்னு நினைச்சேன் கோல்ட்."

" ஃபோட்டோ புடிச்சு விளையாட இது தான் நேரமா? ஏன் இப்படி கூறு கெட்டத்தனமா நடந்துக்கீறிக?" என்று வழக்கத்திற்கு மாறாக சினத்துடன் வினவ.

" சும்மா விளையாட்டுக்கு ஃபோட்டோ எடுக்க வரலை கோல்ட். புலித்தடத்தை ஃபோட்டோ எடுத்து நம்ம கம்ப்ளைன்ட் கொடுக்கலாம். அப்போ அவங்களால ஒன்னும் பண்ணாம இருக்க முடியாது." என்று மெதுவான குரலில் கூறினாள் மேனகா.

"தாயி…" என்ற பொன்னம்மாளுக்கு வேறு வார்த்தைகள் எதுவும் வரவில்லை. ' இந்த பொண்ணு என்ன இப்படி வெள்ளந்தியாஇருக்குது. தன்னோட உசுரப்பத்தி நெனைக்காமல் எங்களுக்கு ஒன்னுனதும் ஓடிவந்துருக்கு.' என்று கலங்கியவர், அதை வெளிக்காட்டாமல், "விளையாடாத தாயி. இங்கனேயே கெடக்குற எங்களுக்கு எப்படி தப்பிக்கணும்னு தெரியும். நீ முதல்ல இங்கிருந்து கிளம்பு." என.

" இருங்க கோல்ட். வந்துது தான் வந்துட்டேன். வந்த வேலையை முடிச்சிட்டு போறேன். இங்கே எத்தனை குழந்தைங்க இருக்காங்க. அவங்களோட உயிர் எனக்கு முக்கியம். என் உயிர் போனாலும் பரவாயில்லை." என்று மேனகா சொல்ல.


அவளது பாசத்தை எண்ணி இருவரது கண்களும் கலங்கி விட்டது.

அவளது உறுதியை புரிந்துக் கொண்ட பொன்னாம்மாள், " இரு தாயி. வெளக்கு எடுத்துட்டு வாரேன்." என்று அவரது குடிலை நோக்கி செல்ல.

அந்த நேரம் புலி உறுமும் சத்தம் கேட்டது. அது கேட்ட திசையை கண்டு அதிர்ந்த மேனகா, அடுத்த நொடி சிட்டாக அங்கு பறந்தாள்.

" ஐயோ! மேனகாம்மா…" என்ற லட்சுமியின் அலறல் காட்டில் பயங்கரமாக எதிரொலித்தது.
 
Last edited:
Top