• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Viswadevi

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
317
இன்னிசை - 23

"டேய் ஆதி. எனக்கு உதவி செய்யறதுக்காகன்னு லீவ் போட்டுட்டு வந்தியே, ஏதாவது செய்றியா? நானும் எவ்வளவு நேரமா கூப்பிட்டுட்டு இருக்கேன்." என்றார் நிர்மலா.

"மா. நேத்து ஆரம்பிச்ச ஷாப்பிங் இன்னைக்கு மதியம் வரைக்கும் முடியலை. உங்களோட தானே கடை, கடையா ஏறி அலைஞ்சேன். இப்போ தான் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கலாம்னா விடுறீங்களா? தொண தொணன்னு பேசி உயிரை வாங்குறீங்க." என்று கண்ணை திறவாமலே புலம்பினான் ஆதிரன்.

" டேய் கண்ணா… வாங்கன பூ, பழம் எல்லாம் தட்டுல அடுக்கி வைக்கணும். அப்புறம் பொண்ணு வீடு ஓகே சொல்லிட்டா, இன்னைக்கே நிச்சயம் பண்ணிடலாம். புடவை, நகை, ஸ்வீட் இருக்கு. அதை தனியா பேக் பண்ணனும். அப்பா படுத்திருக்காங்கடா. அதான் உன்னை கேட்குறேன்."

" அதான் உங்க செல்ல மகன் வந்துட்டான்ல. அவனை கூப்பிட வேண்டியது தானே. அவன் சும்மா தானே இருக்கான்." என்ற ஆதிரன் இன்னும் முழித்துப் பார்க்காமலே பேசிக்கொண்டிருந்தான்.

" ம்ஹூம்! உன் அண்ணன் பண்ற கூத்தை நீயே பாரு." என்ற நிர்மலாவின் சலிப்பான குரலில், விருட்டென்று கண்ணை திறந்து பார்த்தான்.

அம்மாவை ஆராய்ச்சியாக பார்த்த ஆதிரன், " நீயா பேசியது? அன்பே நீயா பேசியது?" என்று பாட்டுப் பாட.

" டேய் ஆதி! நானே டென்ஷனா இருக்கேன். டைம் வேற ஆகிட்டிருக்கு. ஹெல்ஃப் பண்ண சொன்னா, ஏதேதோ உளறிட்டு இருக்க." என்று கடுப்பாக கூறினார் நிர்மலா.

" அண்ணனைப் பத்தி குறை சொன்னது நீயா? உன்னோட மூத்த மகன், முடி சூடா இளவரசனாச்சே. ஒன்னும் சொல்ல மாட்டியே! அதான் கேட்டேன்."

" அவன் ரூம்ல என்ன பண்ணிட்டு இருக்கான்னு போய் பாரு." என்ற நிர்மலாவின் வார்த்தையை கேட்டவன், மேலே போர்த்தியிருந்த ப்ளாங்கட்டை விலக்கி விட்டு எழுந்து பக்கவாட்டில் இருந்த அறைக்குச் சென்றான்.

அவர்கள் தங்கியிருந்தது மூன்று அறைகள் கொண்ட ஷூட்.

நுழைந்ததும் இருந்த மெயின் பெட்ரூமில் ஆதிரன் தங்கிக்கொள்ள, பக்கவாட்டில் இருந்த அறைகளில் ஒன்றில் ஜீவாத்மனும், மற்றொன்றில் நிர்மலாவும், ராஜனும் தங்கியிருந்தனர்.

விடுவிடுவென அண்ணனின் அறைக்கு சென்றான் ஆதிரன். அங்கோ கைகளில் இரண்டு, மூன்று சர்ட்டை வைத்துக் கொண்டு யோசனையில் ஆழ்ந்திருந்தான் ஜீவாத்மன்.

" டேய் அண்ணா. என்ன பண்ணிட்டுருக்க. இன்னும் கிளம்பலையா?"

" அது வந்து ஆதி… இதுல எந்த ட்ரெஸ் எனக்கு சூட்டாகும்?" என்று குழப்பத்துடன் வினவ.

ஆதிரன் அடக்கமாட்டாமல் நகைத்தான்.

" இப்போ ஒன்னும் நான் ஜோக் சொல்லலையே!" என்ற ஜீவாத்மன், தம்பியைப் பார்த்து முறைத்தான்.

" அது வந்து அண்ணா உன்னை எப்பவும் கெத்தா பார்த்துட்டு, இப்படி பார்க்கவும் சிரிப்பு வந்துடுச்சு. எல்லோரும் கல்யாணம்னு வந்துட்டாலே மாறிடுவாங்க போல."

" சரி அதை விடு. இதுல எதை போட சொல்லு டா."

"எப்படியும் நான் சொல்றதை நீ போட போறதில்லை. அதுக்கு நான் போய் அம்மாவுக்காவது ஹெல்ப் பண்றேன்."

"டேய் ஆதி."

" ஆளை விடு டா சாமி." என்ற ஆதிரன், நிர்மலாவிற்கு உதவினான்.

ஒரு வழியாக ஆதிரனின் உதவியுடன் எல்லாவற்றையும் பேக் செய்த நிர்மலா,"ஆதி நீ கிளம்பு. நான் உங்க அப்பாவும், அண்ணனும் கிளம்பியாச்சான்னு பார்த்துட்டு வரேன்."

அங்கு தூங்கிக் கொண்டிருந்த ராஜனையும், கண்ணாடி முன்னால் நின்றிருந்த ஜீவாத்மனையும் அதட்டி, உருட்டி கிளம்ப செய்து ஒரு வழியாக பொண்ணு வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

அங்கே தனமும், ராமனும் பதட்டத்துடன் இருந்தனர்.

காலையிலிருந்து மேனகாவிற்கு ஃபோன் செய்ய முயன்று தோற்றுப்போயினர். அவளை காண்டாக்ட் செய்ய முடியவில்லை.

மாப்பிள்ளை வீட்டாரின் கார் வந்து நிற்கவும், தன்னை சுதாரித்துக் கொண்ட ராமன்," வாங்க… வாங்க…" என்று அவர்களை வரவேற்று உள்ளே அழைத்து சென்றார்.

தனமும் முயன்று முகத்தை சாதரணமாக வைத்துக் கொண்டவள், " வாங்க…" என்று நிர்மலாவை பார்த்து புன்னகைத்தாள்.

நிர்மலாவும், ராஜனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டே உள்ளே நுழைந்தனர்.

இதை எதையும் கண்டு கொள்ளாமல் முதல் ஆளாக உள்ளே நுழைந்திருந்தான் ஜீவாத்மன்.

நிர்மலா தான் கொண்டு வந்திருந்த பூ, பழத்தட்டை கீழே வைத்தவள், யோசனையாக தனத்தை பார்த்தாள்.
அதற்குள் காரிலிருந்த ஆதிரன், நிர்மலாவிற்கு ஃபோன் செய்தான்.

" எங்கடா இருக்க?" என்று மெல்லிய குரலில் கடிந்துக் கொண்டார் நிர்மலா.

" அம்மா… புடவை, நகை தட்டு இங்கே இருக்கு. எடுத்துட்டு வரட்டுமா?"

"அது இருக்கட்டும். நீ வா." என்றவர், தனத்தை பார்த்து புன்னகைத்தார்.

தனமோ கையிலிருந்த ஃபோனில் யாருக்கோ அழைத்துக் கொண்டே கிச்சனுக்குள் நுழைந்தார்.

உள்ளே வந்த ஆதிரனோ, நிர்மலாவின் காதை கடித்தான்." ஏன் மா புடவை தட்டை வேண்டாம்னு சொன்ன?"

" முதல்ல பொண்ணை வரச் சொல்லு. பார்த்து ஒருத்தருக்கொருத்தர் பிடிச்சா, அப்புறம் ஆகுற காரியத்தை பார்ப்போம். வந்தவங்களை வாங்கன்னு சொல்லிட்டு ஃபோனையே பார்த்துட்டு, உள்ளே போயிட்டாங்க. உங்க அண்ணனும் கனவுலகுகத்துல மிதந்துட்டுருக்கான். அப்பாவும் வாயைத் திறக்காமல் இருக்காரு. நீயாவது பொண்ணை கூட்டிட்டு வரச் சொல்லுடா."

" நான் எப்படி மா சொல்றது? நீயே சொல்லு." என்றான் ஆதிரன்.

அதற்குள் கிச்சனிலிருந்து காஃபி எடுத்து வந்த தனம் எல்லோருக்கும் நீட்டினார்.

" இருக்கட்டுங்க. பொண்ணை முதல்ல வர சொல்லுங்க." என்று பட்டென்று கூறினார் நிர்மலா.

" அது வந்து சம்மந்தி. மதியம் வந்துடுவேன்னு சொன்னா. ஃபோன் பண்ணேன். எடுக்கலை. வந்துட்டே இருக்கா போல‌. முதல்ல காஃபியை குடிங்க. நாம மத்த விஷயம் பேசுவோம்." என்று தயக்கத்துடன் தனம் கூற.

நிர்மலா காஃபி கஃபை எடுக்காமல் இருக்க.

" எடுத்துக்கோ நிர்மலா." என்று வாயைத் திறந்தார் ராஜன்.

முகம் இறுக அமர்ந்திருந்த ஜீவாத்மன், தந்தையின் வார்த்தைக்காக எடுத்துக் கொண்டான்.

தர்மசங்கடமான நிலையை மாற்றுவதற்காக ராமன் வாயைத் திறந்தார். " எங்க பொண்ணுக்கு இந்த கல்யாணத்துல சம்மதம்னு சொல்லிட்டா. நாம மேற்கொண்டு ஆக வேண்டிய காரியத்தை பார்க்கலாம்."என்றார்.

" இல்லைங்க… இது சரி வரும்னு தோணலை." என்றார் நிர்மலா.

" அம்மா." என்று ஜீவாத்மனும், ஆதிரனும் ஒரு சேர அழைக்க.

இருவரையும் பார்த்து முறைத்தார் நிர்மலா.

" அது வந்துங்க…" என்று தனம் தடுமாற, அவரை காப்பது போல் ராமனின் ஃபோன் இசைத்தது.

வேகமாக அவரிடமிருந்து ஃபோனை வாங்கி ஆன் செய்த தனம், தெரியாமல் ஸ்பீக்கரையும் அழுத்தியிருந்தார்.

" மேனகா எங்க இருக்க? வந்திட்டியா? பஸ்ஸ்டாண்ட்ல இருக்கியா? மாமாவை வர சொல்லவா?" என்று பரபரத்தார்.

"அத்தை… நான் ஊருக்கு வரலத்தை." என்ற தயக்கத்துடன் கூடிய குரல் அந்த கூடத்தில் ஒலித்தது.

" வரேன்.. வரேன்னு சொல்லியே என் கழுத்தை அறுத்திட்டியே! உன்னை வளர்த்த எங்களுக்கு நல்ல பேரை வாங்கி கொடுத்துட்ட மேனகா. என்ன இருந்தாலும் நான் உன் அம்மா கிடையாது தானே." என்ற தனத்தின் குரல் தழுதழுத்தது.

" ஐயோ! அத்தை. எனக்கு அம்மாவுக்கு மேல நீங்க தான் முக்கியம்.நான் வரணும்னு தான் நினைச்சேன். ஆனால் என் நேரம் என்னோட மேல அதிகாரி இரண்டு நாளா லீவு. அடுத்த சுப்ரீயர் கிட்ட கேட்டால் லீவு தர மாட்டேன்னு சொல்லிட்டார். யார் மேல என்ன கோபமோ தெரியவில்லை. சரியான சாடிஸ்ட். அவர் மட்டும் லீவு போட்டுட்டு எங்கோ போயிட்டார். " என்று புலம்பினாள்.

அவள் பேசுவதைக் கேட்டு ஜெர்க்கான ஆதிரன், "டேய் அண்ணா. கல்யாண பொண்ணுக்கு லீவும் கொடுக்காமல், இங்கே பொண்ணோட தரிசனத்துக்காகவும் காத்துட்டுருக்கீயே. யூ ஆர் சான்ஸ்லெஸ். நீயெல்லாம் என்ன டிசைனோ?" என்று அருகிலிருந்த ஜீவாத்மனை கலாய்த்துக் கொண்டிருந்தான்.

"ஷ் சும்மா இரு டா." என்றவனுக்கு கொஞ்சம் தலை கிறுகிறுத்தது.

" உன்னோட மேலதிகாரி கிட்ட முன்னாடியே சொல்ல வேண்டியது தானே மேகி. அவர் ரொம்ப நல்லவர்னு சொல்வீயே!" என்று தனம், ஆற்றாமையில் மருமகளை விசாரித்துக் கொண்டிருந்தார்.

ஆதிரன் சற்று பெருமையாக அண்ணனைப் பார்த்தான்.
முறைத்தான் ஜீவாத்மன்.

"நல்லவர் தான் ஆனால் கொஞ்சம் லூசு. எங்க ரெண்டு பேரோட சுப்பீரியர், அவரை திட்டுனா கூட ஈன்னு சிரிச்சுக்கிட்டே இருப்பார். நான் லீவ் கேட்கப் போகும் போது, தேவையில்லாததை பேசி, என்னை டைவர்ட் பண்ணிட்டார். நீங்க மாப்பிள்ளை வீட்ல என்னோட சூழ்நிலையை சொல்லுங்கத்தை. புரிஞ்சுப்பாங்க."

" அதுக்குன்னு நீ மாப்பிள்ளையை பார்க்க வேண்டாமா? அவரும் உன்னை பார்க்க வேண்டாமா? ஒருத்தருக்கொருத்தர் பேசி முடிவெடுக்க வேண்டாமா?"

" அத்தை நான் தான் உங்க விருப்பம்னு சொல்லிட்டேனே. அப்படி மாப்பிள்ளைக்கு அவசியம்னா, இங்கே தானே வொர்க் பண்றாங்க. வந்து பார்க்க சொல்லுங்க. இன்னும் எந்த காலத்தில இருக்காங்க? பொண்ணு பார்க்கன்னு வீட்டுக்கு வந்து நிக்குறாங்க. கோவில்ல பார்க்குறதுன்னு ஆரம்பிச்சு, இப்போ ஹோட்டல்ல பார்க்குறதுன்னு உலகம் அப்டேட் ஆகிட்டுருக்கு. இன்னமும் இப்படி மாறாமல் இருக்காங்களே!" என்றாள் மேனகா.

'என்ன இந்த பொண்ணு இப்படி பேசுது.' என்று நிர்மலாவும், ராஜனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

அவர்களை சங்கடமாக பார்த்த தனம், கண்களில் மன்னிப்பை யாசித்து விட்டு, " என்ன மேனகா? மாப்பிள்ளை வேணும்னா அங்கே பார்த்துக்கலாம். ஆனால் மாப்பிள்ளையோட அம்மா, அப்பா உன்னை பார்க்கணும்னு நினைக்கமாட்ட்ங்களா? அவங்க என்ன நினைப்பாங்க?"

" சாரி அத்தை. நான் வேணும்னு வராமல் இல்லை. அவங்க ஃபோன் நம்பர் தாங்க. நான் மன்னிப்பு கேட்குறேன்."

" அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்டா. நீ சொல்றது கரெக்ட் தான். என் பையனை பாரு. உங்க ரெண்டு பேருக்கும் பிடிச்சிருந்தா, நானே வந்து பார்க்குறேன்டா." என்று படபடவென பேசினார் நிர்மலா.

' ஐயோ! இந்த அத்தை அவங்க இருக்கும் போதே வழக்கம் போல் தெரியாமல் ஸ்பீக்கரை ஆன் பண்ணிட்டாங்க போல.' என்று தலையில் கை வைத்து கொண்டாள்.

" மேனகா…" என்று அத்தையின் அதட்டலான குரல் ஒலிக்க.

" ஹான்."

" ம் பேசு. அவங்க கிட்ட…" என்று மருமகளை அதட்டினார் தனம்.

"நான் வர எவ்வளவோ ட்ரை பண்ணேன். முடியலை. சாரி ஆன்ட்டி."

" பரவாயில்லடா. நாளைக்கே என் பையனை வர சொல்றேன். பேசி பாருங்க. நீயே என் மருமகளா வந்தா ரொம்ப சந்தோஷப்படுவேன்." என்ற நிர்மலாவை மேனகாவிற்கும் பிடித்தது.

ஆனால் மறுநாள் வந்து நின்ற ஜீவாத்மனை பார்த்ததும், மேனகாவிற்கு மயக்கம் வராத குறை தான்.


 

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,934
மேனகாவுக்கு ஷாக் குடுக்குறாறம் மாப்பிள்ளை ஜீவாதுமன் 😃😃😃😃😃😃நல்லாவே மேனகா ஷாக் குடுத்தா கொஞ்சம் லூசுன்னு 😃😃😃😃😃😃
 

Viswadevi

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
317
மேனகாவுக்கு ஷாக் குடுக்குறாறம் மாப்பிள்ளை ஜீவாதுமன் 😃😃😃😃😃😃நல்லாவே மேனகா ஷாக் குடுத்தா கொஞ்சம் லூசுன்னு 😃😃😃😃😃😃
நன்றி சகி ❤️
 
Top