• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Viswadevi

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
317
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்... அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 💗💗💗💗💕💗💕💕💗💕💗💗💕💕💗

வனக்குயிலின் இன்னிசை கதையின் இறுதி அத்தியாயம் போட்டாச்சு. படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

இன்னிசை - 25

காலச்சக்கரம் வேகமாக சுழல, மாதங்கள் ஆறு ஓடியிருந்தது.

சண்டே எல்லோருக்கும் ஓய்வு நாள். ஆனால் ஜீவாத்மன் வீட்டிலோ சண்டை போடும் நாள்.

அன்றும் அமோகமாக ஆரம்பம்மானது.
" திஸ் இஸ் டூ மச். எனக்கு மட்டும் ஏன் இந்த சோதனை? என்னை மட்டும் மாட்டி விட்டுட்டு நீங்க ரெண்டு பேரும் எஸ்கேப்பாக பார்க்குறீங்களா? நீங்க ரெண்டு பேரும் சாப்பிட்டுட்டு எங்க வேணும்னாலும் போங்க."

"சாரி… எனக்காக கோல்ட் வெயிட் பண்ணுவாங்க. சோ நான் அங்க போய் சாப்பிட்டுக்குவேன். ஜீவாவும் என் கூட தான் வருவார். நீ நல்ல பையனா சாப்பிடுவீயாம். நைட் வந்து ரிவ்யூ கேட்டுக்கிறேன். பை." என்ற குரலுடன், கதவை மூடி விட்டு செல்லும் சத்தம் மட்டும் கேட்க.

தலையில் கை வைத்து யோசித்துக் கொண்டிருந்தவன், பெருமூச்சு விட்டுக் கொண்டு, 'இதுக்கெல்லாம் ஒரு எண்டு இல்லையா?' என்று புலம்பியவன், நிர்மலாவிற்கு அழைத்து விட்டான்.

" அம்மா …" என்று அழைக்க.

"என்னடா உனக்கு பிரச்சனை? ஞாயிற்றுக்கிழமை வந்தா போதும், என் உசுர வாங்க ஃபோன் பண்ணிடு. " என்று நிர்மலா சலிப்புடன் வார்த்தைகளை விட.

" அம்மா! நான் உனக்கு முக்கியமில்லையா? என்ன? ஏதுன்னு விசாரிக்காமல் நீ பாட்டுக்கு திட்டுறே."

" நீ என்ன சொல்ல வருவேன்னு எனக்கு தெரியும் டா. மேகி பாவம். வேலைக்கும் போயிட்டு, வீட்லயும் உங்களுக்கு வடிச்சு கொட்டிட்டு இருக்கா."

" அவ மட்டுமா செய்யுறா? நாங்களும் தான் செய்யுறோம். அதுவுமில்லாமல் நீங்க செஞ்சு வச்ச பொடியை வச்சு சாதத்தை கிளறுறா? அது பெரிய விஷயமா?"

" டேய் அதை செய்றதும் வேலை தான். லீவு நாள் கூட ரெஸ்ட் எடுக்காமல், புதுசு புதுசா செஞ்சு தர்றா தானே."

" நான் கேட்டேன்னா? நான் கேட்டேனா? அவ சமையல் கத்துகிறதுக்கு கிடைச்ச பரிசோதனை எலி நான் தானா." என்றவனது குரல் சோர்வாக ஒலிக்க.

" டேய் ஆதி! நீதானே ஒத்தக் கால்ல நின்னு இந்த பொண்ணுதான் அண்ணியா வரணும்னு சொன்ன. அது மட்டுமா, நல்லா சமைப்பா, நல்ல பொண்ணு, பொறுமையான பொண்ணு ஏகப்பட்ட சர்டிபிகேட் கொடுத்த. இப்ப வந்து என்னையும், என் மகன் ஜீவாவையும் ஏன் போட்டு படுத்துற?"

"அம்மா! நான் என்னமா பண்ணேன்?"

"நேத்து ஜீவா போன் பண்ணான். தினமும் நீயும், மேகியும் சண்டை போட்டுட்டு இருக்கீங்களாம். அதோட இருந்தால் பரவாயில்லை.அவனையும் ஏன் இழுக்குறிங்க? உங்க ரெண்டு பேர் கிட்டயும் மாட்டிக்கிட்டு படாதபாடு படுறான் ஜீவா."

" ஏன்மா சொல்ல மாட்ட? இதுவும் சொல்லுவே, இன்னமும் சொல்லுவே. நான் நினைச்சது எனக்கு சப்போர்ட் பண்றதுக்கு ஒரு ஆளு கிடைக்கும்னு, ஆனா நடந்ததோ வேற."என்று ஆதிரன் புலம்ப.


அந்தப் பக்கம் நிர்மலா சிரிக்க ஆரம்பித்தார்.

"என் கஷ்டம் உனக்கு சிரிப்பா இருக்கு. அப்படி தானேம்மா."

" புருஷன், பொண்டாட்டிக்குள்ள சண்டை வந்தா பஞ்சாயத்து பண்ணலாம். ஆனால் இங்க என்னன்னா கொழுந்தனுக்கும், அண்ணிக்கும் இல்ல சண்டை வருது. இதுல நான் என்ன பண்ண முடியும்."

" ஒன்னும் பண்ண முடியாது. சரி வை மா ஃபோனை, உன் கிட்ட வந்து நியாயம் கேட்டேன் பாரு. என்னை சொல்லணும்." என்று புலம்பியவன், கடனே என்று மேனகா செய்து வைத்த உணவை விழுங்க ஆரம்பித்தான்.

************************

"நேகா! ஆதி பாவம். அவனை விட்டுடு." என்ற கணவனைப் பார்த்து பொய்யாக முறைத்தாள் மேனகா.

ஆம், ஜீவாத்மன் 'நேகா' என்றழைத்தால், அவளது உள்ளத்தில் நேசம் பொங்கி வழியும். வனமோகினின்னு அழைக்க வேண்டாம் என்று கூறியதை புரிந்துக் கொண்டவன், அவனது அதிர்ஷ்டம் அவள் தான் என்று கூறி, அவளது பெயரின் பின் பாதியை கூப்பிட ஆரம்பித்தான்.

அவன் அவ்வாறு கூப்பிடும் போதெல்லாம் கோபமிருந்தாலும் உள்ளம் குளிர்ந்து விடும். இன்றும் அப்படி தான். ஆதிரனுக்கு சப்போர்ட் பண்ணி ஜீவாத்மன் பேச, மேனகா முறைத்தாள்.

"நேகா! எதுக்கு முறைக்கிற?"

" எனக்கும், ஆதிக்கும் நடுவுல வர்றாதீங்க."

" நானா உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல வர்றேன். நீங்க ரெண்டு பேரும் தானே கூப்பிடுவீங்க. கல்யாணம் ஆன அன்னையிலிருந்து உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல பஞ்சாயத்து பண்ணியே நான் டயர்டாயிட்டேன். அவன் பொய் கூட சொல்லலை. அவன் என் தம்பிங்குற உண்மையைத் தான் மறைச்சான். அதுக்கும் சாரி கேட்டுட்டான். அப்புறம் என்ன நேகா?"

" ஜீவா ஃபர்ஸ்ட் எனக்கு ஆதிமேல கோவம் வந்தது உண்மைதான். ஆனால் இப்போ மன்னிச்சு விட்டுட்டேனே!"

" அப்புறம் ஏன் நேகா சமையல்ன்ற பேர்ல கொடுமை படுத்துற?"

" ஜீவா! நான் அப்புறம் எப்படி சமைக்க கத்துகிறது?" என்று பாவமாக வினவினாள் மேனகா.

' அதுக்கு பலிகடா என் தம்பி தான் கிடைச்சானா.' என்று எண்ணிய ஜீவாத்மன், அமைதியாக இருந்தான். வெளியே சொன்னால் அவ்வளவு தான், உண்டு இல்லைன்னு பண்ணிடுவாள் மேனகா.

'ஆளுக்கு ஒரு வாரம் சமையல், கிட்சன் கிளினீங், வீடு துடைப்பது என்று மூன்று பேரும் வேலைகளை பகிர்ந்து கொள்ள. ஜீவாத்மன் மேனகாவின் சமையலைப் பொறுத்துக் கொள்வான். ஆதிரன் தான் மேனகாவுடன், மல்லுக்கட்டிக் கொண்டிருப்பான்.' இதையெல்லாம் நினைத்துப் பார்த்துக் கொண்டே வந்த ஜீவாத்மனின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.

ஒரு வழியாக பழங்குடி மக்கள் இருக்குமிடம் வந்தனர்.


அங்கு ஜீவாத்மன் பொன்னம்மாளுடன் பேசி, அவர்களுக்கு ஏதாவது உதவி தேவையா என்று வழக்கம் போல விசாரித்துக் கொண்டிருந்தான். வார இறுதி நாள் அன்று மேனகாவுடன் கிளம்பி வந்துவிடுவான்.

மேனகாவோ குழந்தைகளோடு குழந்தையாக விளையாடிக் கொண்டிருந்தாள்.

பொன்னம்மாளுடன் பேசிக் கொண்டிருந்த ஜீவாத்மன், மனம் விட்டு சிரிக்கும் மேனகாவின் அழகில் அப்படியே நின்று விட.

அவனது திடீர் அமைதியில், நிமிர்ந்துப் பார்த்த பொன்னம்மாளோ நகைக்க ஆரம்பித்தார்.

அவரது சிரிப்பில் ஜீவாத்மன் வெட்கப்பட்டான்.

" இன்னும் எத்தனை நாளைக்கு தம்பி இப்படி மோகினிப் பாப்பாவை பார்த்துக்கிட்டே இருக்கப் போறீக?"

" அது வந்து பாட்டி…" என்று தயங்க.

" மோகினி பாப்பா அந்த பொசக்கெட்டவன் கையில போய் மாட்டப் போகுதுன்னு விசனப்படாத நாளே இல்லை. எங்க குலச்சாமி தான் காப்பாத்திட்டாரு. பாப்பா முன்னே போல இல்ல, மாறிடுச்சு. உங்க மேல உசுரா இருக்கு. நீங்களும் காலந் தாழ்த்தாமல் உங்க அன்பை புரிய வைங்க தம்பி. என் மனசுக்கு பட்டதை சொல்லிட்டேன். தப்பா எடுத்துக்காதீக."

" அதெல்லாம் ஒன்னும் இல்ல பாட்டி. புரியுது நான் பார்த்துக்கிறேன் நீங்க கவலைப்படாதீங்க." என்று மறுமொழி கொடுத்தவன், மீண்டும் அவனது வேலையை செவ்வனே செய்தான்.

அது தான் மேனகாவை சைட் அடிப்பது. அவனது பார்வையை உணர்ந்த மேனகாவின் முகம் சிவந்தது.

சூரியன் தன் பணி முடிந்து ஓய்வெடுக்க செல்ல. " நேகா! கிளம்பலாமா?" என்று ஜீவாத்மன் வினவினான்.

மேனகாவோ அவன் முகத்தை நேரடியாக பார்க்காமல் தலையசைத்தாள்.

வரும் போது வாய் ஓயாமல் பேசிக் கொண்டிருந்த இருவரும், இப்பொழுது மௌனத்தை தத்தெடுத்துக் கொண்டனர்.

ஆளை விழுங்கும் ஜீவனின் உயிர்ப்பான பார்வையில், மேனகா முகமெல்லாம் வெட்கத்தின் சுவடுகள்.

ஒருவர் பார்க்காத போது மற்றவர் பார்க்க, என்று ரகசிய விளையாட்டு விளையாடிக் கொண்டே இருவரும் அவர்களது குவார்ட்டஸிற்கு வந்தனர்.

அங்கு வந்தும் தொடர்ந்தது.

இருவரையும் பார்த்த ஆதிரனோ," கடவுளே! சின்ன பையனை வச்சுக்கிட்டு இரண்டு பேரும் பண்ற அலப்பறையை பாருங்க." என்று புலம்ப.

" உன்னை யார் இங்கே இருக்க சொன்னா? முதல்ல இந்த இடத்தை விட்டு கிளம்பு." என்று ஜீவாத்மனும், மேனகாவும் ஓரே நேரத்தில் கூற.


இருவரது முகத்திலும் புன்னகை மலர்ந்தது.

" புருஷனும், பொண்டாட்டியும் சேர்ந்து என்னை கிண்டல் பண்றீங்களா? இருங்க அம்மாவுக்கு ஃபோன் பண்றேன்." என்றான் ஆதிரன்.

" அத்தை எனக்குத் தான் சப்போர்ட் பண்ணுவாங்க." என்ற மேனகா, ஆதிரனுக்கு அருகில் அமர்ந்து அவனது தோளைத் தட்டினாள்.

" அம்மா சப்போர்ட் இருக்குற தைரியத்துல தானே என்னைப் போட்டு படுத்துற மேகி." என்று புலம்பினான் ஆதிரன்.

அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்க, ஜீவாத்மனோ கிச்சனுக்கு சென்று இரவு உணவு தயாரித்தான்.

அவர்களது சண்டையும் ஓய்வதாக தெரியவில்லை. 'சாப்பாட்டை கொண்டு போனாலாவது சண்டை போடுவதை நிறுத்திவிட்டு, உணவை உள்ளே தள்ளுவதில் கவனத்தை செலுத்துவார்கள்‌.' என்று எண்ணினான் ஜீவாத்மன்.

அவன் நினைத்தது போலவே சாப்பாட்டை எடுத்துக் கொண்டு போகவும் தான், சண்டையை நிறுத்தி விட்டு அமைதியானார்கள்.


சாப்பிட்டுக் கொண்டிருந்த ஆதி இருவரையும் பார்த்துக் கொண்டே, " மேகி! கல்யாணத்துக்கு கிப்ட் கேட்டுகிட்டே இருந்ததில்ல. நேரம் வரும் போது கொடுக்குறேன்னு சொன்னேன்ல. அதுக்கான நேரம் வந்துடுச்சு." என்றான்.

" ஹே! சூப்பர். என்ன கிப்ட்? அதை முதல்ல சொல்லு." என்று ஆர்வமாக மேனகா வினவ.

"சஸ்பென்ஸ்! சாப்பிட்டு எடுத்துட்டு வரேன்." என்ற ஆதிரன், சாப்பாட்டை உள்ளே தள்ள.

" ஆதி! அப்போ எதுக்கு இப்ப சொன்ன? என்ன வம்பு இழுக்கணும். அதானே." என்று மேனகா அவனிடம் மீண்டும் ஒரு குட்டிச்சண்டையை ஆரம்பித்தாள்.

"விடு நேகா! என்ன பெரிய சஸ்பென்ஸ்? ஏதாவது ஊருக்கு ஹனிமூன் டிக்கெட் வாங்கியிருப்பான். அது தானே ஆதி." என்று மேனகாவிடம் ஆரம்பித்து ஆதிரனிடம் முடித்தான் ஜீவாத்மன்.

"கொஞ்சம் சரி, கொஞ்சம் தப்பு." என்றான் ஆதிரன்.

" நான் இங்க இருந்து எங்கேயும் போக மாட்டேன். " என்று வேகமாக மறுத்தாள் மேனகா‌.

ஜீவாத்மன் யோசனையாக அவளைப் பார்க்க.

ஆதிரனோ," ஐ நோ மேகி. உன்னால இந்த காட்டை விட்டு எங்கேயும் போக முடியாது. அதனால தான் உனக்கு ஸ்பெஷல் கிஃப்ட்." என்றுக் கூறிய ஆதிரன் கைக் கழுவி விட்டு அவனது அறைக்குச் சென்றான்‌. திரும்ப வரும் போது கைகளில் ஒரு பெரிய கவர் இருந்தது.

" டேய் அண்ணா, மேகி! இது தான் உங்களுக்கான கிஃப்ட். இதை எடுத்துக்கிட்டு மொட்டை மாடிக்கு போவீங்களோ, இல்லை வனத்துக்குள்ள போவீங்களோ, யுவர் சாய்ஸ். லெட் தி ஹேப்பி லைஃப் பிகின்." என்று விட்டு அவனது அறைக்குள் சென்று விட்டான்.

ஜீவாத்மனும், மேனகாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே பிரிக்க. அங்கே இருந்ததோ லேட்டஸ்ட் டென்ட். கையில் எடுத்துக் கொண்டு செல்ல எளிதாக இருந்தது. அதைப் பார்த்ததும் ஜீவாவின் முகத்தில் ரகசிய புன்னகை மலர்ந்தது. மேனகாவை இமைக்காமல் பார்த்தான். அவளோ சிவந்த முகத்தை மறைக்க, " நேகா!" என்று தாபமான குரலில் அழைத்தான்.

"...."

" என்னைப் பார் நேகா!"

" ம்ஹூம்." என்று தலையசைத்தாள்.

" நேகா! உன் ஃப்ரெண்ட் கஷ்டப்பட்டு கிஃப்ட் வாங்கியிருக்கான். நாம பயன்படுத்தலைன்னா எப்படி? என்ன இப்பவே கிளம்பலாமா?" என்றவன் கைகளை நீட்ட. அவன் கைகளை பற்றிக் கொண்டவளோ," மாடிக்கு போவோம். காட்டுல விலங்குகளை தொந்தரவு செய்ய வேண்டாம்." என்று மெல்லிய குரலில் கூறினாள்.


" வார்ரே வா…" என்றவன், அவளை அழைத்துக் கொண்டு மொட்டை மாடிக்கு சென்று, அந்த டென்டை செட் செய்தான். மேற்பகுதியில் நெட்டும், அதற்கு மேல் டெண்டும் இருந்தது. ஜீவா வானத்தைப் பார்ப்பது போல வெறும் நெட்டை மட்டும் மாற்றியவன், அவளைப் பார்த்தான்.

வானில் நட்சத்திரம் மின்ன, அதன் ஒளியில் தேவதையாக மின்னும் மேனகாவைப் பார்த்து, " நேகா! ஏதாவது பேசு." என்க.

அவளோ பதிலளிக்காமல் மௌனமாகவே இருந்தாள்.

" சரி பாடு நேகா."

அதுவரைக்கும் மலர்ந்திருந்த முகம் வாடியது.

"என்னாச்சு நேகா?" என்று பதறினான் ஜீவாத்மன்.

" அது வந்து… என்னை பாட சொல்லாதீங்க ஜீவா. நான் வாழ்க்கையில் மறக்கணும்னு நினைக்கிற நிகழ்வுகள் நினைவுக்கு வருது. "

" ஓ… உனக்கு பிடிக்கலைன்னா விடு."

" நீங்க நல்லா பாடுவீங்கன்னு ஆதி சொல்லிருக்கான். நீங்க பாடுங்களேன் ஜீவா." என்று பரிதவிப்புடன் கூற.

" டன்." என்ற ஜீவாத்மன் அவளைப் பார்த்துக் கொண்டே பாட ஆரம்பித்தான்.

"வனக்குயிலே குயில்
தரும் கவியே கவி தரும்
இசையே யே யே யே யே
கொடி மலரே மலர் விடும்
இதழே இதழ் தரும் மதுவே
யே யே யே யே" என்று பாட…

அவளோ உதட்டைக் கடித்துக் கொண்டாள்.

அவளை இழுத்து கையணைவில் கொண்டு வந்தவன், அவளது உதட்டை காப்பாற்றினான்.

கைகள் அதன் வேலை செய்ய, அவனோ இன்னும் அவளைப் பார்த்துக் கொண்டே பாடிக் கொண்டிருந்தான்.

"உன் ஞாபகம் நெஞ்சில்
வந்தாடுதே ஓயாமலே என்னைப்
பந்தாடுதே உன் பூ முகம் கண்ணில்
நின்றாடுதே நான் கொஞ்சவே
என்னை மன்றாடுதே

படித்தால் இனித்திடும்
புதினம் உன்னை நான் மறப்பது
கடினம் அலையாய் தொடர்ந்திடும்
நினைப்பு வலைக்குள் தவித்திடும்
தவிப்பு துளிர்க்கும் ஆசை துளிர்த்தால்
மேனி சிலிர்க்கும் மிதக்கும் பறக்கும்." என்று பாடி முடிக்கும் போது, அவனது பார்வையை சந்திக்க இயலாமல் அவனது தோளில் சாய்ந்தாள் மேனகா.

இறுக அணைத்த ஜீவாத்மனோ, அவளை வேறு உலகத்திற்கு அழைத்துச் சென்றான்.

கீச் கீச்சென்ற பறவைகளின் சங்கீதம், அவர்களின் சந்தோஷ வாழ்க்கைக்கு வாழ்த்தொலி பாடியது. இனி அவர்களின் வாழ்க்கையில் என்றும் வனக்குயிலின் இன்னிசை பாடும்.

முற்றும்.
 

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,972
அட டக்குனு கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க சூப்பர்ல 😍😍😍😍😍😍😍😍😍😍டெண்ட் ஹனி மூன்,,, வேற லெவல் தான் 😁😁😁😁😁😁😁😁😄
 

Viswadevi

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
317
அட டக்குனு கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க சூப்பர்ல 😍😍😍😍😍😍😍😍😍😍டெண்ட் ஹனி மூன்,,, வேற லெவல் தான் 😁😁😁😁😁😁😁😁😄
Thank you so much your lovely support 💖💖💖💖💖
 
Top