• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Viswadevi

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
317
இன்னிசை-7

"திடீர்னு எதுக்கு ஊருக்கு போனீங்கனு சொல்லுங்க"என்ற
ஆதிரனின் கேள்வியால் மலர்ந்த மேனகாவின் முகம் வாடியது.

அதை முயன்று சரி செய்தவள், அவனது கேள்விக்கான பதிலை கூறாமல்," சார்… அன்னைக்கு காயம்பட்ட அந்த யானை மறுபடியும் கிராமத்துக்கு வருவதற்கு முயற்சி பண்ணிட்டு இருக்கு. அதை மறுபடியும் காட்டுக்கு அழைச்சிட்டு போகணும்."

" ஓகே மேனகா… யானை இன்னும் கிராமத்துக்கு வரலைல. அதை வாட்ச் பண்ணிட்டு தானே இருக்கீங்க."

" எஸ் சார்… நம்ம சாமுவேல் அதைப் பார்த்துக்கிறார்." என்றாள் மேனகா.

யானைக்கு சிகிச்சை அளித்து காட்டில் விடும் போது சென்சார் வைத்திருந்தனர். அது எங்கே போகிறது, வருகிறது என்பதை கண்காணிப்பதற்காக… அதைப் பற்றி தான் ஆதிரன் இப்போது வினவினான்.

" ஓகே மேனகா. நீங்க அதைப் போய் பாருங்க. கேர்ஃபுல்… யானைக்கு எந்த தொந்தரவும் வராமல் பார்த்துக்கோங்க‌." என்று அவளை அனுப்பியவன், 'தான் கேட்ட கேள்விகளுக்கு மேனகாவிற்கு பதில் சொல்ல விருப்பம் இல்லை போல.' என்று எண்ணிக் கொண்டிருந்தவன், ஏன் அந்த யானை மீண்டும், மீண்டும் அந்த கிராமத்திற்கு வருகிறது என்பதை புரிந்துக் கொள்ள முயற்சி செய்யவுமில்லை, அதைப் பற்றி அவளிடம் விசாரிக்கவுமில்லை.

ஆதிரனின் கேள்வியை கடந்து வந்த மேனகாவால் அந்த நினைவுகளை கடக்க இயலவில்லை.

' இரண்டு நாட்களுக்கு முன்பு வேலைக்கு வந்த சற்று நேரத்திலே அவளது அத்தையிடமிருந்து ஃபோன் கால் வந்தது.

" மேனகா…மாமாவுக்கு முடியவில்லை." என்ற அத்தையின் கலக்கத்துடன் கூடிய குரலில், இவளுக்கு பதட்டம் ஆனது.

" அத்தை… பயப்படாதீங்க… முதல்ல ஆம்புலன்ஸ் வரச் சொல்லி ஹாஸ்பிடலுக்கு போங்க. நான் உடனே வந்துடுறேன்." என்றவளோ அத்தையின் மறுமொழியை எதிர்ப்பார்க்காமல், ஆதிரனிடம் பர்மிஷன் கேட்டுக் கொண்டு ஊட்டிக்கு கிளம்பியிருந்தாள்.

பேருந்திலிருந்து இறங்கிய மேனகா, அங்கு நின்றிருந்த அவரது மாமாவை பார்த்ததும் ஆனந்தத்தில் கட்டிக் கொண்டு அழுதவள், பிறகு தான் அவர்கள் ஏமாற்றியது புரிய முறைத்தாள்.

" சாரிடா குட்டிமா… நான் இல்ல உங்க அத்தை தான்… எதா இருந்தாலும் வீட்டில் வந்து பேசிக்கலாம். வா…" என்று அழைத்து வந்தார்.

வீட்டுக்கு வந்ததிலிருந்து இருவரையும் பார்த்து முறைத்துக் கொண்டே இருந்தாள் மேனகா‌‌.

தனமும், ராமனும் பேச … அதை காதில் வாங்குவதாக இல்லை.

" குட்டி மா‌… இன்னும் எவ்வளவு நேரம் நாங்க சொல்றதை கேட்காமல் மூஞ்ச தூக்கி வெச்சுக்கிட்டு இருக்கப் போற? முதல்ல என்ன சொல்ல வர்றோம்னு கேளேன் டா." என்றார் தனம்.

"எதுவாயிருந்தாலும் இப்படி பொய் சொல்லியிருக்க கூடாது." என்று தனத்தை பார்க்காமல் எங்கோ பார்த்துக் கொண்டு கூறினாள்.

" நாங்க என்ன பண்றது ஊருக்கு வந்துட்டு போன்னு சொன்னா நீ தான் கேட்கலை."

" அதுக்காக என்ன வேணும்னாலும் சொல்லுவீங்களா அத்தை‌."

" அது வந்து டா…" என்று தனம் ஏதோ பேச வர.

" என்ன தலை போற காரணமா இருந்தாலும் சரி, இனிமே இப்படி பொய் சொல்லாதீங்கத்தை.ஒரு நிமிஷம் உயிரே போகுற போல ஆகிடுச்சு. மாமாவும், நீங்களும் இல்லாம நான் எப்படி வாழ்வேன்னு பைத்தியம் பிடிக்கிற மாதிரி ஆயிடுச்சு."என்று அழுகையும், ஆத்திரமுமாக கூறினாள்.

" லூசு… மாமாவுக்கு உடம்பு முடியலைன்னு தானே சொன்னேன். அதுக்கு இவ்வளவு கற்பனையா? உன் வயசுக்கே இப்படி பயப்படுற? நாங்க இந்த வயசான காலத்துல பயப்படுறதுலே தப்பே இல்லை. உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சித்தராமல், எங்களுக்கு ஏதாவது ஆகிடுச்சுன்னா ஒரு பயம் மனசுக்குள்ள ஓடிக் கிட்டே இருக்கு. அதான் உன்னை வர சொன்னோம். உனக்கு கல்யாணம் பண்ணலாம்னு இருக்கோம்." என்றார் தனம்.

"அத்தை… நான் முன்பே சொன்னது தான். எனக்கு கல்யாணத்துல இன்ட்ரெஸ்ட் இல்லை."

" இங்க பாரு குட்டி மா. உன் மனசு புரியுது. எத்தனை நாளைக்கு ரிஷிய நினைச்சிட்டே உன் வாழ்க்கையை தொலைக்கப் போற? அதுக்கு நாங்க விட மாட்டோம்." என்று அவளது அருகே வந்த ராமன் கையைப் பிடிக்க.

ரிஷியின் பேச்சு வரவும் மேனகாவின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

" இப்போ எதுக்கு அழற? நீ பார்க்குற வேலைக்கு தைரியமாக இருக்கணும். இப்படி சும்மா கண்ணுல இருந்து பைப்ப திறந்து விட்டா என்ன அர்த்தம்.எங்களோட வளர்ப்பு சரியில்லைன்னு சொல்ல மாட்டாங்களா?" என்று தனம் கண்டித்தார்.

அத்தையின் பேச்சில் வேகமாக கண்களை துடைத்தவள், அவளது அறைக்குச் சென்று முகத்தை கழுவி, வேறு உடை மாற்றிக் கொண்டு வந்தாள்.

" வா… மேனகா… சாப்பிடு." என்று முழுப்பெயரிட்டு அழைத்த அத்தையின் கோபத்தை அவளால் உணர முடிந்தது.

அமைதியாக உணவருந்தினாள் மேனகா.

ஆனால் அவளை அமைதியாக இருக்கவிடவில்லை தனம்.

" தரகர் கிட்ட உன்னோட ஃபோட்டோ, ஜாதகம் கொடுத்துருக்கேன். நல்ல வரன் அமைஞ்சா உடனே கல்யாணம். அதை உன் கிட்ட நேர்ல சொல்லணும்னு தான் மாமாவுக்கு முடியலைன்னு வர சொன்னோம். போறவன் போய் சேந்துட்டான். அதுக்காக அதே இடத்தில் நாம் இருக்க முடியுமா? " என்று தனம் கூற.

" அத்தை கொஞ்சம் நாள் போகட்டும்." என்ற மேனகா தட்டில் உள்ள சாதத்தில் கோலம் போட்டாள்.

அவள் கையிலே ஒன்னு போட்ட தனம்," ஒழுங்கா சாப்பிடு. இள வயசு நல்லா சாப்பிடணும். நாங்க தான் வயசானவங்க… இன்னும் எத்தனை நாளைக்கு உயிரோட இருக்கப் போறோம்னு தெரியலை. அதுக்குள்ள உனக்கு ஒரு நல்லது செஞ்சு பார்க்கணும்னு ஆசைப்படுறேன்." என்று பெருமூச்சு விட.

வாயருகே எடுத்து சென்ற சாதத்தோடு மீண்டும் கண் கலங்க தன் அத்தையையும், மாமாவையும் பார்த்தவள், " அத்தை… கல்யாணம் பண்ணிக்கிறதுல விருப்பமே இல்லை. உங்களை விட்டு நான் எங்கேயும் போக மாட்டேன்."

" ப்ச்… நமக்கு தான் அந்த குடுப்பினை இல்லை. இல்லைன்னா நாம ஏன் நம்ம ரிஷிய பறிக்கொடுத்துட்டு தவிக்க போறோம்." என்றவர் தன்னை மீறி கேவ.

" அத்தை… தனம்…" என்று அங்கிருந்த இருவரும் பதறினர்.

வேகமாக கண்களை துடைத்துக் கொண்ட தனம், " குட்டி மா உன் இழப்பு பெரிசு தான். அவன் எங்களுக்கு பையன் மட்டும் தான். உனக்கு எலலாமே அவன் தான். நாங்க உனக்காக தான் அந்த இழப்புல இருந்து மீண்டு வந்திருக்கிறோம். அதே மாதிரி, நீயும் அதிலிருந்து வெளி வரணும். நீ அந்த காட்டுல வேலைப் பார்க்குற வரைக்கும் அவனுடைய இழப்பில் இருந்து மீண்டு வர மாட்ட. அங்க இருந்தா உனக்கு அவன் ஞாபகம் தான் வரும். உனக்கு அந்த வேலை வேண்டாம். வேலையை ரிசைன் பண்ணிட்டு எங்களோடயே இரு." என்றார் தனம்.

" இல்ல .. எனக்கு காடு முக்கியம். ஆங்க இருந்து என்னால வர முடியாது. வேலையை என்னால விடவே முடியாது என்று உறுதியாக மறுத்துக் கொண்டு இருந்தாள் மேனகா.'

" உங்களுக்கு இந்த காட்டுல வேலை வேணுமா? வேணாமா? காட்டுல இருக்க விருப்பம் இல்லைன்னா வேலையை ரிசைன் பண்ணிட்டு போயிட்டே இருங்க." என்ற குரலில் திடுக்கிட்டுப் பார்க்க, அங்கோ கைகளை கட்டிக்கொண்டு அவளை பார்த்துக் கொண்டிருந்தான் ஜீவாத்மன்.


"சார்…" என்றவளோ குழப்பத்துடன் இருந்தாள்.

நினைவுக்கும், நிஜத்திற்கும் ஒன்று புரியாமல் குழப்பத்திலிருந்தவளை காப்பது போல்," மிஸ் மேனகா… யானையை காட்டுக்கு அனுப்புற வேலையை பாக்குறேன்னு சொல்லிட்டு தானே வந்தீங்க. ஆஃபீஸ்ல உங்களுக்காக நம்ம டீம் வெயிட் பண்ணிட்டு இருந்தாங்க.உங்களை காண்டாக்ட் பண்ணவும் முடியலை. எங்கே போயிருந்தீங்க? ஆர் யூ ஓகே?" என்று மென்மையாக வினவினான் ஆதிரன்.

' ஓ… தேவையில்லாததை யோசிச்சுக்கிட்டே நடந்தே வந்துட்டோம் போல இருக்கே. ஆனால் ஸ்பாட் மட்டும் மைண்ட்ல இருந்ததால வேற எங்கேயும் போகாமல் நல்லவேளையாக வந்துட்டோம்.' என்று மேனகா தனக்குள் யோசித்துக் கொண்டிருக்க.

" ஆதிரன் முதல்ல நீங்க சரி கிடையாது. ஒரு ஃபாரஸ்ட் ரேஞ்சர் எப்படி இருக்கணும் தெரியுமா? எந்த பிரச்சனை நடந்தாலும் நீங்க முதல்ல நிக்கணும். அப்போ தான் உங்களுக்கு கீழே இருக்குறவங்க உங்களை ஃபாலோ பண்ணுவாங்க. நீங்க இவங்களை நம்பி அசால்டா இருந்திருக்கீங்க. நான் மட்டும் வந்து விசாரிக்கலைன்னா, இவங்க ஸ்பாட்டுக்கு போய் இருப்பாங்கன்னு நினைத்து நீங்களும் அமைதியா இருந்திருப்பீங்க. உங்க டீமும் அவங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்திருப்பாங்க.

அப்படி மட்டும் நம்ம வர தாமதம் ஆகி இருந்தால் யானை கிராமத்தில் புகுந்திருக்கும். மறுபடியும் யானைக்கு ஏதாவது ஆகிருக்கும். யானை காட்டுக்கு எவ்வளவு முக்கியம்னு தெரியாத இவங்கள நம்பி அனுப்பினதுக்கு தான் ஆடி, அசைஞ்சு வேற உலகத்தில் சஞ்சரிச்சிட்டு இருக்காங்க." என்று அதிரனை திட்டியது மட்டுமல்லாமல், மேனகாவையும் திட்டினான்.

மேனகாவோ தவறு செய்ததால் கோபப்படாமல் அமைதியாக,"சாரி சார்." என்று ஒரு வார்த்தை மட்டும் கூறினாள்.

" ஆமா இந்த ஒரு வார்த்தையை கத்து வெச்சுக்கோங்க." என்று கடுகடுத்தான் ஜீவாத்மன்.

மேனகாவோ உதட்டை கடித்துக் கொண்டு பொறுமையாக இருந்தாள்.

" ஆதிரன்… ஏன் இந்த யானை காட்டை விட்டு அடிக்கடி வெளியே வருது. அதுவும் இந்த கிராமத்திற்கு வருவது முதல் முறையில்லையே? ஏன் வருது ? எனி ஐடியா?" என்று வினவ.

"தெரியவில்லை." என்பது போல் தலையாட்டினான் ஆதிரன்.

ஜீவாத்மனின் கேள்வியில் மேனகாவின் முகமோ அதிர்ந்தது. அவளுக்கு ரிஷிவர்மனை இழந்த தனது அத்தையின் தவித்த முகமும், காட்டுக்குள் அனுப்பி வைக்கப்பட்ட யானையின் முகமும் வந்து, வந்து போனது.


 
Top