• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

இராக்கதனின் கண்மணி! 10

kkp2

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
62
65
18
Tamil nadu
அத்தியாயம் 10

இனியா எங்கே சென்றாளோ என்ற கவலையில் அவளை எங்கே தேடுவது என மலைத்து துகிரா நிற்கும் நேரம்,

"அந்த மண்டபத்துல இருந்து போனதா தானே சொல்ற? அப்போ மண்டபத்துல சிசிடிவி இருக்கும் தானே?" என்று உடனே விக்ரம் கேட்க, துகிராவிற்கு சட்டென ஒரு வெளிச்சம் கிடைத்ததை போலிருந்தது.

"ஆமா துகிரா! அங்க போய் கேட்கலாம் இல்ல?" என்றார் மிருதுளாவும்.

"அப்போ நான் இப்பவே போய்ட்டு வரவா?" துகிரா ஆவலுடன் கேட்க,

"இப்போவா? இருட்டிருச்சே ம்மா?" என்றார் ஸ்ரீனிவாசன்.

"ப்பா! மணி எட்டு தான் ஆச்சு. ஒரு விஷயத்தை செய்யணும்னா முதல்ல அதை தள்ளிப் போட கூடாது!" என்றான் விக்ரம்.

விக்ரம் சொல்லியதை கவனித்த மிருதுளா "ஆமா! விக்கி சொல்றது தான் சரி. எட்டு மணி தானே? நேரா மண்டபம் போய் விசாரிச்சு செக் பண்ண எவ்வளவு நேரமாகிடும்?" என்றவர்,

"விக்கி! கூட்டிட்டு போய் பார்த்துட்டு வா!" என சொல்ல,

"ம்மா!" என்றான் கோபமாய்.

"அம்மா தான்! நான் தான் சொல்றேன். கூட்டிட்டு போ! உன்னால தான் இவ்வளவும். கன் வச்சு பொண்ணை மாத்தி தூக்கிட்டு வர தெரிஞ்சது இல்ல? போய் ஹெல்ப் பண்ணு" என்றார் கட்டளையாய்.

"அது தெரியாம நடந்தது. முதல்ல அவளே எனக்கு யாரோ தான். இதுல..." என துகிரா பக்கம் திரும்பியவன் அவள் தன்னை முறைத்ததில் வார்த்தையை நிறுத்தி இருக்க,

"இப்படி கண்டிக்க ஆள் இல்லாம தான் உன் அடாவடித்தனம் எல்லாம் கூடி போச்சு விக்கி. யாரோ தான். எங்கேயோ இருந்திருந்தா யாரோ தான். அனா உன்னால பாதிக்கப்பட்டவங்க இவங்க இப்ப!" என்று சொல்ல,

"இல்ல மிரும்மா! அதெல்லாம் வேண்டாம். நான் கேப் போட்டுக்குறேன்." என்றவளும் அவனுடன் செல்ல விரும்பவில்லை.

"இல்ல இல்ல! நீ அவனோடவே போய்ட்டு வா ம்மா! இல்ல உனக்கு நம்பிக்கை இல்லைனா சொல்லு நான் வர்றேன்!" என்றார் ஸ்ரீனிவாசனும்.

"ப்பா!" என விக்ரம் முறைக்க,

"சார்! எனக்கு கராத்தே எல்லாம் தெரியும். எனக்கு எதுவும் இல்ல. உங்களுக்கு கஷ்டம் கொடுக்கவேண்டாம்னு தான் நினைச்சேன்!" என்றவளை எண்ணியும் பல்லைக் கடித்தான் விக்ரம்.

மிருதுளா மகனைக் கண்டு வாய் மூடி சிரிக்க, ஸ்ரீனிவாசனும் சிரித்தவர்,

"அவன் செய்வான். நீ போய் பார்த்துட்டு வாம்மா. தப்பு பண்ணினவன் தண்டனையை அனுபவிக்கனும் தானே?" என்றும் கூறினார்.

"நான் என்ன வேணும்னா பண்ணினேன்? அதையே சொல்லிட்டு இருக்கீங்க?" விக்ரம் கோபமாய் சொல்ல,

"தெரியாமலே செஞ்சாலும் நீ இன்னும் அதுக்காக வருந்தல விக்கி. என்னவோ சின்னதா ஒண்ணுமில்லாத ஒன்னை செஞ்ச மாதிரி சொல்ற. கல்யாணப் பொண்ணை தூக்கிட்டு வந்ததே தப்பு. அதுவும் மாத்தி தூக்கிட்டு வந்திருக்க!" என்றார் அன்னையும் கோபமாய்.

தன்னை நினைத்தே அவ்வளவு கடுப்பானது விக்ரமிற்கு கூட. இதையே மாறி மாறி மூவருமாய் சொல்ல,

"இப்ப சரியா அந்த பொண்ணை தூக்கி இருந்தா மட்டும் விஷ்வா வந்திருவானா என்ன?" என அபத்தமான கேள்வி என தெரிந்தும் அவன் கேட்க,

"இல்ல தான் ஆனா நீ அவனையும் கூட்டிட்டு போய் அந்த மண்டபத்துல நின்னுருந்தா பரவால்லயே! இவ்வளவு சிக்கலாகி இருக்காதே!" மிருதுளா சொல்ல,

"விடுங்க ம்மா! என் விதி! அதோட இப்படி நான் இங்க வரலைனா இனியா அவ விரும்பினாவனோட போய்ட்டானு தானே என் குடும்பத்துல நினைச்சுட்டு இருக்குற மாதிரி நானும் நினைச்சுட்டு எங்கேயோ எப்படியோ இருந்திருப்பேன். அதனால இதுவும் நல்லது தான்" என்றாள் தனக்கு தோன்றியதாய்.

"சும்மா பேச்சு! ஒரு பொறுக்கிக்கிட்ட இருந்து நான் தான் காப்பாத்திருக்கேன். அது நியாபகம் இருக்கட்டும்!" விக்ரம் கோபமாய் துகிராவைப் பார்த்து சொல்ல, மறுபடியும் தலையில் கை வைத்தார் விஷ்வாவை எண்ணி ஸ்ரீனிவாசன்.

"இப்ப சண்டை போடுற நேரமாவிக்கி? அதுவும் சின்ன பசங்க மாதிரி? நீ பண்ணினது தப்பே இல்லைன்ற மாதிரி தான் பேசிட்டு இருக்க. எப்ப தான் திருந்த போறியோ நீ?" என்ற மிருதுளா,

"அந்த மினிஸ்டர் பையன் அன்னைக்கு நைட்டு ஒன்பது மணிக்கு மேல வந்து பயம் காட்டுறேன்னு பூச்சாண்டி காட்டிட்டு போறான். இந்த பொண்ணை பார்த்து வேற உனக்கு கட்டி வச்சிருக்கான்னு கேட்டு வாழ வேண்டாமான்னு அவ்வளவு பேச்சு! எங்க தலையெழுத்து. உன்னை கேட்டா அவனெல்லாம் ஒரு ஆளான்ற!" என சொல்ல,

"இவ்வளவு பேசினானா அந்த ராஸ்கல்? இதை ஏன் ம்மா முன்னாடியே சொல்லல நீங்க?" என்றான் மீண்டும் மலையேறி.

"சொல்லிருந்தா? இப்பவே அவனை என்ன பண்ணினியோன்னு இருக்கு. எப்ப போலீஸ் கேஸ்னு பேரு வர போகுதோ!" என ஸ்ரீனிவாசன் சொல்ல,

"என்னங்க நீங்க? இப்படியா பேசுவீங்க?" என கணவனை பிடித்தார் மிருதுளா.

"ம்ம் இப்படியே பொத்தி பொத்தி வச்சுக்க. இப்ப மினிஸ்டர், சினிமா ஹீரோனு பிரச்சனை பண்ணிட்டு வர்றவன் நாளைக்கு எல்லாத்தையும் பண்ணிட்டு வருவான். அப்ப புரியும் உனக்கு" என கணவனுக்கும் மனைவிக்கும் முட்டிக் கொண்டது.

"இப்ப கொஞ்சம் நிறுத்துறிங்களா? என்ன? தப்பு பண்ணவனை விட்டுட்டு என்னை பேசுங்க!" என விக்ரம் இன்னுமே கொதிக்க,

"அவனுங்க பண்ணினாலும் வெளில தெரியாது. நீ பண்றது தான் தெரியும். எங்க சொன்னா கேட்குற!" என்ற ஸ்ரீனிவாசன்,

"நின்னு நேரத்தை கடத்திட்டு இருக்காத! அந்த பொண்ணு கூட போய் உருப்படியா எதையாவது கண்டுபிடிச்சுட்டு வா!" என்று சொல்ல, இவர்கள் குடும்பத்தை புரிந்து கொள்ளவே முடியவில்லை துகிராவால்.

அதட்டி கோபம் கொள்வது போல தெரிந்தாலும் அதில் அதிகபட்சமாய் இருப்பதென்னவோ பாசம் மட்டும் தான் இந்த பெற்றோரிடம்.

'முதல்லேயே நாலு குடுத்து வளக்குறதை விட்டுட்டு இவங்களுக்குள்ள சண்டை போட்டே இப்படி வளத்து வச்சிருக்காங்க போல. யார் பேச்சையும் கேட்க மாட்டேன்னு தனி ட்ராக்ல போறாரு!' என விக்ரமை அதிருப்தியாய் தான் நினைத்துக் கொண்டாள்.

"போ விக்கி! தெரியாதவனுக்கு எல்லாம் உதவி பண்றேன்னு தானே இதெல்லாம் பண்ணிட்டு இருக்க? உன்னால வந்த பிழையையும் நீ தான் திருத்தணும். ரொம்ப யோசிக்காத. போய் என்னனு கவனிச்சுட்டு வா!" என அவன் பொறுப்பில் மிருதுளா சொல்ல,

"ப்ச்!" என்றவன் மீண்டுமாய் கார் சாவியை கையில் எடுத்துக் கொண்டு வெளியே சென்றான்.

"அப்படினா அவன் பின்னாடியே நாம போனும்னு அர்த்தம் டா!" என தலையில் அடித்துக் கொண்டு துகிராவிடம் மிருதுளா சொல்ல, சிறு புன்னகை வந்தது அவளிடம்.

"எப்படி வளத்து விட்ருக்கேன்னு தானே சிரிக்குற?" என மிருதுளாவே கேட்கவும் பக்கென்று ஆனது துகிராவிற்கு.

"ரொம்ப ஷாக் ஆகாத மா! எங்களுக்கு அடிக்கடி வர்ற சந்தேகம் தான்!" என்ற ஸ்ரீனிவாசனுடன்,

"எனக்கே தோணுது என்ன பிள்ளை வளத்தேன்னு. உனக்கு தோணாதா? வா!" என சொல்லி முன்னே மிருதுளா சென்று பார்க்க, காரை தயாராய் வைத்து துகிராவிற்காக நின்றான் விக்ரம்.

"சும்மா சும்மா எறிஞ்சு விழக் கூடாது விக்கி! இந்த பொண்ணுக்கு உன்னால முடிஞ்ச ஹெல்ப் நீ பண்ணி தான் ஆகணும். காணாம போயிருக்குறது விஷ்வா விரும்பின பொண்ணு. அதையும் நியாபகம் வச்சுக்கோ!" என சொல்லி தான் அனுப்பி வைத்தார் மிருதுளா.

வழி முழுதும் அத்தனை மௌனம். இருவருமே மற்றவரிடம் வாயை திறக்கவில்லை.

மண்டபட்டிற்கு வந்து சேர்ந்தந்திருந்தனர் விக்ரம் துகிரா இருவரும். வாட்ச்மேன் மட்டும் அங்கிருக்க,

இரண்டு நாட்களாகியும் இனியா விவேக் என்ற பெயர் பலகை மண்டபதில் கேட்டுக்கு உள்ளே அப்படியே இருந்தது.

"நெக்ஸ்ட் இங்க எந்த ஃபன்க்ஷனும் நடக்கல போல" என்ற விக்ரம்,

"போய் கேளு!" என்றான் விக்ரம் காரினுள் இருந்தே. அதில் சுருசுருவென வந்தது துகிராவிற்கு.

இதற்கெதற்கு இவன் தன்னுடன் வர வேண்டும்? அதுவும் இந்த நேரத்தில் என கதவை திறக்க கை வைத்தவள் பின்,

"மிரும்மாக்கு கால் பண்ணி குடுங்களேன்!" என்றாள் அவனிடம்.

போனை எடுத்து அன்னையின் எண்ணை அழுத்திக் கொண்டே சாதாரணமாய் "எதுக்கு?" என விக்ரம் கேட்க,

"எனக்கு கேட்க ஒரு மாதிரி இருக்கு. அதுவும் இந்த டைம்ல. அதான் மிரும்மாவை போன்ல கேட்க சொல்ல போறேன்!" என்று அவள் சொல்லவும் சட்டென அவன் திரும்பி அவளைப் பார்க்க, அவள் விளையாடவெல்லாம் இல்லை. நிஜமாய் தான் கூறி இருந்தாள்.

"ப்ச்!" என்ற சத்தத்தோடு விக்ரம் இறங்கி சென்று அந்த வாட்ச்மேனிடம் பேச, 'உச்சுக் கொட்டாம ஒரு வேலை பார்க்க முடியாது போல' என அவன் பேசுவதை காரில் இருந்தே பார்த்துக் கொண்டிருந்தாள் துகிரா.

"ஓனர் பெர்மிஸ்ஸன் இல்லாம அதையெல்லாம் காட்ட முடியாதாம். அவங்களைப் பார்த்து கேட்டா ரீசன் சரியா இருந்தா அவங்களே குடுப்பாங்களாம்" தகவலாய் வந்து துகிராவிடம் விக்ரம் சொல்ல,

"அப்போ ஓனர் வீட்டுக்கு போலாம். வீடு எங்கனு கேட்டீங்களா?" என்றாள்.

"கேட்டாச்சு! ஆனாலும் அப்படி அடுத்தவன் வீட்டுல நைட்டு பத்து மணிக்கு போய் நிக்கணும்னு எனக்கு ஒன்னும் அவசியம் இல்ல. காலைல பார்த்துக்கோ!" என்று சொல்லி வண்டியை அவன் திருப்ப,

"இதுக்கு வராமலே இருந்திருக்கலாம்!" என அவன் கேட்கும்படிக்கே முணுமுணுத்தாள் துகிரா.

அடுத்து விக்ரமிற்கு அழைப்பு வந்து கொண்டே இருக்க, அவனும் பேசியபடி தான் வந்தான் கார் ஸ்பீக்கரில் அலைபேசியை பொருத்திக் கொண்டு.

"மாணிக்கராஜ் மினிஸ்டர் பையன் உங்களை பார்க்கணும்னு சொல்றாங்க சார்!" என எதிர்ப்பக்கம் சொல்ல,

"எனக்கு விருப்பம் இல்லைனு சொல்லுங்க!" என விக்ரம் சொல்லிவிட,

"சார் கண்டிப்பா பார்த்தே ஆகணும் ரெண்டு நிமிஷம்னு கேட்குறாங்க!" என மீண்டும் அழைப்பு.

"அப்படி அவனைப் பார்க்க வேண்டிய அவசியம் எனக்கு இல்ல. பார்த்தா சேதாரம் அவனுக்கு தான். அதையெல்லாம் தாங்குவானானு கேட்டுக்கோ! கேட்குறதுக்கு முன்னாடி என் வீட்டுக்குள்ள நுழைஞ்சிருக்கான். அங்க இருந்தவங்களை எல்லாம் தேவையில்லாம பேசி இருக்கான்" நறநறவென பற்களைக் கடித்து சொல்லிய விக்ரம்,

"அதுக்கெல்லாம் அனுபவிக்க வேண்டாம்? நான் சொல்லும் போது மட்டும் அவன் நம்ம பார்வைக்கு வந்தா போதும். அதுவரை கவனிச்சுக்கோங்க!" என்று சொல்லி வைத்திருந்தான்.

"என்ன பெரிய அப்பாடக்கர்? பேசுற ஒன்னும் புரியல. பண்றதும் அவ்வளவு நல்ல வேலையா தெரியல! அனா அவ்வளவு நல்ல அம்மா அப்பா!" இப்படி தான் விக்ரமை பார்க்க தோன்றியது துகிராவிற்கு.


வீட்டிற்கு வந்து துகிரா இறங்கி செல்லவும் தானுமாய் இறங்கியவன் அன்னை தந்தையிடம் எதுவும் சொல்லாது மாடிக்கு தன் அறை நோக்கி சென்றுவிட்டான்.