அத்தியாயம் 11
இதோ மீண்டும் விக்ரமுடன் ஒரு பயணம். இவனிற்காகவே அந்த வீட்டில் இருக்க கூடாது என துகிரா நினைத்திருக்க, ஆனால் நடந்ததென்னவோ அதற்கு தலைகீழ் தான்.
"எனக்கு இதுல எந்த கஷ்டமும் இல்ல. சொல்லப் போனா என்னால தான் உங்களுக்கு ரொம்ப கஷ்டம். அதனால தான் நான் சொல்றேன். நானே பார்த்துக்குறேன்." என காலை எழுந்ததும் அந்த வீட்டை விட்டு செல்ல தயாராய் தான் நின்று கூறினாள் துகிரா.
"என் பையனை விட நீ மோசம் துகிரா! அவன் தான் நான் பிடிச்ச முயலுக்கு மூனே முக்கா காலுன்னு நிப்பான். இப்ப நீயும் அதே மாதிரி பண்ற." என குறைப்பட்டார் மிருதுளா.
"என்னால உங்களுக்கு கஷ்டம் வர கூடாதே மிரும்மா. இனியா எங்க என்ன பண்றானு தெரியல. ஆனா நேத்து விக்ரம் சார் சொன்ன மாதிரி அந்த சிசிடிவி மட்டும் ஒரு டைம் பார்க்க முடிஞ்சா எதாவது வழி கிடைக்கும்னு நம்பிக்கை வந்திருக்கு. நான் பாத்துக்குறேனே!" என்றாள்.
"சரி தான் ம்மா! நீ தைரியமான பொண்ணு தான். எல்லாம் பார்த்துக்குவ தான். ஆனா சில விஷயங்கள் அதுக்கான ஆட்கள் இருந்தா தான் நடக்கும். இப்ப ஹாஸ்டல் நீ போறது ஈஸி தான். ஆனா என் பையன் இருக்கானே!" என்ற ஸ்ரீனிவாசன்,
"பெருமைக்கு சொல்றேன்னு எல்லாம் நினைச்சுக்காத! அவன் பண்றது எங்களுக்கு புடிக்காத வேலை தான். ஆனா அவன் உன்கூட இந்த நேரம் இருந்தா உன் வேலை சீக்கிரம் முடியும். அதுக்காக தான் சொல்றேன். அந்த பொண்ணு இனியா கிடைக்குற வரையாவது நீ இங்க இரு. அடுத்து உன் முடிவு எதுவா இருந்தாலும் சரி தான்" என்று சொல்ல, அவர்களின் இத்தனை வற்புறுத்தலின் பின்பும் மறுத்து கிளம்ப முடியவில்லை துகிராவிற்கு.
"உன்னை வற்புறுத்துறதா நினைக்க வேண்டாம் துகிரா. எங்களுக்கும் உன்னை அனுப்ப மனசில்ல. உன் வீட்டுக்கு நீ இப்ப போகலைனும் போது இது தானே சரி? உன்னோட பாதுகாப்பும் இருக்கே இதுல" என்று மிருதுளாவும் சொல்ல,
"சரிம்மா!" என அவளே ஏற்றுக் கொண்டிருந்தாள்.
விக்ரம் காலை எழுந்து கிளம்பி தயாராகி தன் அலுவலகம் செல்ல கிளம்பி வர,
"துகிமா! விக்கி வந்துட்டான்!" என குரல் கொடுத்தார் மிருதுளா.
"ம்மா! அதை எதுக்கு அவகிட்ட சொல்றிங்க?" விக்ரம் கேட்க,
"நீ தானே காலைல கூட்டிட்டு போறேன்னு நைட்டு வீட்டுக்கு கூட்டிட்டு வந்தியாம்? இப்ப இப்படி கேட்குற?" என்ற மிருதுளா மகனின் முறைப்பை எல்லாம் கண்டுகொள்ளவே இல்லை.
"எனக்கு வேலை இருக்கு ம்மா. அவன் தான் போய்ட்டானே! இனி இந்த பொண்ணு என்ன ஆனா எனக்கு என்ன?" என விக்ரம் கேட்கும் நேரம் தான் துகிரா வெளியில் வந்தது.
"வாய்லேயே போடுவேன் விக்கி! எவ்வளவு தான் சொல்றது இப்படி பேசாதன்னு!" என சொல்லி துகிராவைக் கண்டவர் சங்கடமாய் பார்க்க,
"எனக்கு மட்டும் தான் வாய் இருக்குன்னு இஷ்டத்துக்கு பேச கூடாது. உங்க பிரண்ட் லவ் உண்மைனு தானே அந்த மண்டபத்துக்கு பொண்ணை தூக்க வந்துட்டு மாத்தி பொறி உருண்டையை தூக்கிட்டு வந்திங்க? அதே மாதிரி இனியாவும் உண்மையா உங்க பிரண்ட்டை லவ் பண்ண போய் தான் அந்த மண்டபத்துல இருந்து போனது. என்னை தெரியாம தப்பா பேசின மாதிரி அவளை தெரிஞ்சே தப்பா பேசினிங்க... நான் சும்மா இருக்க மாட்டேன்!" என்றாள் துகிரா வேகமாய் அவர்கள் அருகில் வந்து.
சில நொடிகள் நின்றுவிட்டார் மிருதுளா துகிராவின் இந்த பேச்சில். பின் தான் அவள் உதாரணம் நியாபகம் வர பக்கென்று சிரித்தவர்,
"உன்னை நீயே பொறி உருண்டைனு சொல்றியா!" என கேட்டும் இன்னும் சிரித்தார்.
"ம்மா!" என பல்லைக் கடித்து சத்தமாய் கூறியவன்,
"அவ என்னை என்ன சொல்லிட்டு இருக்கா. நீங்க சிரிக்குறிங்க?" என கேட்க,
"பின்ன! எவ்வளவு தான் நானும் தடவி தடவி சொல்லிக் கொடுக்குறது. கேட்டியா நீ? இப்படி தட்டி சொல்லி கொடுக்கவும் ஒரு ஆளு வேணும். இனி பேசுவ?" என்றார் மகனை முறைத்து.
"திஸ் ஐஸ் டூ மச்! இவ்வளவு பேசுறவளை தனியா போய் தேடிக்க சொல்லுங்க. எனக்கு என்ன அவசியம்?" என்றான் இன்னும் கோபமாய்.
"என்ன அவசியமா? பொண்ணுங்க பாவம் எல்லாம் பொல்லாதது. நேத்து போய்ட்டு வெறும் கையை வீசிட்டு வரவா அனுப்பி வச்சேன். பொண்ணுங்ககிட்ட மட்டும் தான் கன்னை காட்டி பயமுறுத்துவியோ? நேத்து உன் பவர் யூஸ் பண்ணி அந்த சிசிடிவியை பார்த்துட்டு வந்திருந்தா கூட பெருமை பட்டிருப்பேன். நீ என்ன பண்ணின?" என மிருதுளா கேட்க,
"ஓஹ் காட்! ம்மா என்ன பேசுறிங்க நீங்க? நீங்களா பேசுறீங்க?" என்றான் விக்ரம்.
"விக்கி! எவ்வளவு சாதாரணமா அந்த பொண்ணை பேசுற நீ? தப்பு டா. ஏன் உனக்கு இதெல்லாம் தெரியல? அப்படியா நான் உன்னை வளர்த்தேன்?" என்றார் கவலையாய்.
"அதுக்குன்னு அவ கூடவே அலைவாங்களா? என்னம்மா நீங்க? சரி தப்புன்னே இருக்கட்டும். சாரி கூட கேட்டுக்குறேன். முதல்ல இவளை...." என விக்ரம் சொல்ல வர,
"மிரும்மா! முன்ன பின்ன தெரியாதவங்களை பேர் சொல்லி கூப்பிடுறதே தப்பு. அவ இவன்னு பேசுறாங்க விக்ரம் சார்! சொல்லுங்க!" என எடுத்து கொடுத்தாள் துகிரா.
"ஹே! என்ன விட்டா பேசிட்டே போற? என்னன்றேன்? அடுத்த வீட்டுக்குள்ள வந்து..."
"போதும் விக்ரம்! எவ்வளவு மரியாதையா விக்ரம் சார்னு உன்னை கூப்பிடுறா அந்த மரியாதை எங்க போச்சு உன்கிட்ட?"
"ம்மா! என்னை பேசவே விடல நீங்க!"
"நீ பேசின வரை போதும். அம்மா முக்கியம்னா துகியை கூட்டிட்டு கிளம்பு. போய் என்னனு பார்த்துட்டு வா!" என்றவர்,
"பார்த்து போய்ட்டு வா துகிமா!" என துகிராவிடம் சொல்லி கண்ணடித்துக் காட்டிவிட்டு செல்ல, சிரிப்பை அடக்கி நின்றாள் துகிரா.
"ப்ச்!" என கண்ணை மூடி மூச்சை இழுத்துவிட்டு விக்ரம் வாசல் நோக்கி நடக்க, 'உச்சு கொட்டியாச்சு அப்ப போகலாம்' என நினைத்தபடி தான் சென்றாள் துகிரா.
இவ்வளவு சலிச்சுக்குறவங்க கூட போக வேண்டியதா இருக்கே எனும் எண்ணம் இருந்த போதும் மிருதுளாவிற்காக அமைதி காத்தாள் துகிரா.
"உன் வீடு எங்க?" செல்லும் வழியில் விக்ரம் கேட்க,
"அது இங்க தான் பக்கத்துல...." என அந்த ஏரியா பெயரை சொல்ல வந்தவள்,
"ஆமா ஏன் கேட்குறீங்க?" என்றாள் சந்தேகமாய்.
"என்னால டாலரேட் பண்ண முடியல. நானே பேசி விட்டுடறேன். சொல்லு! உன் வீடு எங்க?" என்றான்.
"ஹெலோ! எதாவது புரிஞ்சு தான் பேசுறிங்களா?" சட்டென்று கோபமாய் துகிரா கேட்டுவிட,
"நீ மரியாதையா பேசுறது கூட என்னை டீஸ் பண்ணி தான் பேசுற. அது புரியாத குழந்தை இல்ல நான். ஓப்பனா சொல்றேன் எனக்கு உன்னை பிடிக்கல!" விக்ரம் சொல்ல,
"ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்! அப்படியே இருந்துக்கோங்க. ஆனா என் வீட்டுல விட சொல்லி நான் உங்ககிட்ட கேட்கலயே! பின்ன ஏன்?"
"ஏன்னா? உனக்கு தெரியாதா? பிடிக்காத உன்னை என் வீட்டுல வச்சுக்கவும் பிடிக்கல!"
"எப்பவுமே உங்களை பத்தி மட்டும் தான் யோசிப்பிங்களா?" என்றவள்,
"கொஞ்சம் புத்தியோட யோசிச்சு பாருங்க! என் வீட்டுல ஒரு ராத்திரி நான் இல்லைனதுக்கே என்னை அந்த பட்டம் கட்டி வெளில தூரத்திட்டாங்க. இப்ப ரெண்டு நாள் கழிச்சு அதுவும் உங்களோட நான் போய் நின்னா... என் நிலைமை புரியுதா உங்களுக்கு?"
"சோ?" விக்ரம் அத்தனை சாதாரணமாய் பேசுவதே அவளுக்கு இன்னும் கோபத்தைக் கொடுத்தது.
"நானும் உங்க வீட்டுல ஆசைபட்டு தங்கல. மிரும்மாக்காக தான்!" என சொல்லும் போதே இகழ்ச்சியாய் ஒரு புன்னகை விக்ரமிடம்.
என்னவோ சுத்தமாய் துகிராவை பிடிக்கவில்லை. இனியா என்று நினைத்த போதாவது காரணம் என்று ஒன்று உண்டு. இப்பொழுது அதுவும் இல்லை. ஆனாலும் பிடிக்கவில்லை.
"இந்த நக்கல் பார்வை கிண்டல் பேச்செல்லாம் சரி தான். நான் போய் சொல்ல அவசியம் இல்லை. இப்பவும் நான் நினைச்சா சொல்லலாம். என்னை மண்டபத்துல இருந்து தூக்கிட்டு வந்திங்க தானே நான் போக மாட்டேன்னு!" என சொல்லும் போதே விக்ரம் முகம் இறுக,
"ஆனா நான் அப்படி சொல்ல மாட்டேன். எனக்கு அப்படி முகத்துக்கு நேரா பேச தெரியாது. இதுவும் நீங்க பேசினதுக்கு பதில் பேச்சு. நீங்க பேசினா நானும் பேசுவேன். அமைதியா போக எனக்கும் எந்த தேவையும் இல்லை. பிடித்தமும் இல்லை!" என்றாள்.
அடுத்து அந்த மண்டபத்தின் உரிமையாளர் வீடு வரும் வரை விக்ரமிடம் மாற்றமே இல்லை. அத்தனை கோபத்தையும் அடக்கிய பார்வையுடன் தான் வந்தான்.
இருவருமாய் அந்த வீட்டினுள் நுழைய,
"வாங்க!" என வரவேற்றது அந்த மண்டபத்தின் உரிமையாளர் தான்.
"மண்டபம் புக்கிங்கா?" அவர் கேட்க,
"இல்ல சார்!" என்ற விக்ரம், நடந்ததை கூறி,
"அந்த பொண்ணு எப்படி போச்சுன்னு தெரியல. இப்ப எங்க இருக்காங்கன்னும் தெரியல. சிசிடிவில யார் கூட போனாங்கன்ற விஷயம் தெரிஞ்சா எங்களுக்கு ஹெல்ப்பா இருக்கும்" என்றான் தன்மையாகவே.
"நீங்க அந்த பொண்ணுக்கு யாரு?" என அவர் கேட்கவும் விக்ரம் என்ன சொல்ல என்பதாய் பார்க்க,
"என் அக்கா தான் அவங்க. ப்ளீஸ் சார்! ஹெல்ப் பண்ணுங்க!" என்றாள் துகிராவும்.
"ஹ்ம் சரி! என அவர்களை புரிந்து கொண்டு அந்த நாளைக்கான பதிவுகளை தேடி எடுத்தார் கம்ப்யூட்டரில்.
திருமணத்தின் முந்தைய நாள் தான் மண்டபதிற்கு அனைவரும் வந்திருந்தது. இனியா தன் குடும்பத்துடன் அங்கே வருவது முதல் காண்பிக்க, ஒவ்வொன்றையும் கூர்ந்து கவனித்தனர் இருவருமே!
"விஷ்வா?" என அதிர்ந்து தான் இரவு பத்து மணி அளவில் விஷ்வாவை அந்த மண்டபத்தின் வெளியில் பார்த்து விக்ரம் இப்பொழுது அதிர்ந்தான்.
"விஷ்வா மண்டபத்துக்கு வந்தானா?" அதுவே புது செய்தி தான் அவனுக்கு.
துகிரா நேற்று இனியா தனியே செல்ல வாய்ப்பில்லை என்ற போது கூட, "விஷ்வா என் கூட தான் அன்னைக்கு நைட் இருந்தான். தனியா அந்த பொண்ணு எங்க போச்சோ!" என்று சொல்லி அன்னையிடமும் சேர்த்து முறைப்பை வாங்கி இருக்க, இப்பொழுது அதை நினைத்தபடி பார்த்துக் கொண்டிருந்தான்.
"இவர் தான் விஷ்வாவா?" என கை வைத்து காட்டி துகிரா கேட்க, ஆம் என தலையசைத்தான் விக்ரம்.
தொடரும்..