அத்தியாயம் 8
மாலை ஸ்ரீனிவாசன் வீடு வந்ததும் மிருதுளா துகிரா கூறியதை சொல்ல,
"ஹாஸ்டலா?" என அவருக்குமே அதை ஏற்க முடியவில்லை.
"அவ வீட்டுக்கு போல பிளான்ல இல்லைங்க. நிச்சயமா சேர்த்துக்க மாட்டாங்கன்னு அடிச்சு சொல்றாங்க. அவளை அவங்க பேமிலில யாரும் நம்பலையாம்!" மிருதுளா சொல்ல,
"மிரு! எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. இந்த பொண்ணு பேசுறத பார்த்தா ரொம்ப நல்ல பொண்ணா தெரியுது!" ஸ்ரீனிவாசன் சொல்ல,
"ஆனா விஷ்வாவை லீவ் பண்ணினதை பத்தி ஒரு வார்த்தை இப்ப வரை பேசலையேங்க. அவனை கொஞ்சமும் நினைச்சு கவலைப்பட்ட மாதிரியும் தெரியலையே!" என்றார் மிருதுளாவே.
"எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லிட்டே இருப்பாளா? என்ன மிரு நீ? பழசையே பேச வேண்டாம். வாழ வேண்டிய பொண்ணு. நாம தான் அவங்க வீட்டுல போய் பேசி சேர்த்து வைக்கனும்" என்றார் ஸ்ரீனிவாசன்.
"அவ எனக்கு ஒரு வேலை இருக்கு ஹாஸ்டல்ல சேர்த்து விடுங்கன்னு நிக்குறாங்க! நீங்களே வேணாலும் கூப்பிட்டு பாருங்க. அவ வர்றதா இல்ல" என்று சொல்லவும்,
"ஆமா அந்த பொண்ணு பேர் என்ன சொன்ன?" ஸ்ரீனிவாசன் கேட்க,
"தெரிலயே! கேட்கல!" என்றவரை கணவன் முறைக்க,
"விக்கிகிட்ட கேட்டேன். அவன் வல்லுன்னு விழுந்தான். அப்புறம் இந்த பொண்ணுகிட்ட கேட்க மறந்தே போச்சு. இப்ப என்ன பண்ண போறீங்க. அதை சொல்லுங்க!" என்றார் மிருதுளா.
"என்கிட்ட கேட்டா? அன்னைக்கு இவன் அன்று பொண்ணை கூட்டிட்டு வரும் போதே அவ வீட்டுல கொண்டு விட்ருக்கணும். அன்னைக்கு இங்க தங்க விட்டுட்டு... இப்ப அய்யோ அம்மான்னா..." என்றார் கொஞ்சம் கோபமாய்.
"ஏங்க கோவப்படுறீங்க?"
"பின்ன என்ன? என்ன பண்ணிட்டு இருக்கீங்க எல்லாரும்? ஒருத்தன் வாழவே கூடாதுன்னு போய்ட்டான். இன்னொருத்தன் போனவன் விரும்பின பொண்ணை கல்யாணத்தை நிறுத்தி கூட்டிட்டு வந்துட்டு இப்ப அவளை பார்த்தாலே எறிஞ்சு விழுறான். அந்த பொண்ணும் வீட்டுக்கு போகமாட்டேன் ஹாஸ்டல் தான் போவேன்னு சொல்றதா சொல்ற. நான் என்ன பண்ணுவேன்? எனக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம் முதல்ல?" என்றவர்,
"ஒரு வயசுப் பொண்ணை வச்சுட்டு எல்லாரும் விளையாடிட்டு இருக்கோம். தெரியுதா இல்லையா உனக்கு? நாளை பின்ன பிரச்சனைனு வந்தா நாம பேர் தான் வரும் வெளில வரும்" என்று சொல்ல, அதை கேட்டபடி வந்திருந்தாள் துகிரா.
"என்னால உங்களுக்கு அப்படி பிரச்சனை எல்லாம் வராது சார். நான் வேணா எழுதி கையெழுத்து போட்டு தரவா?" துகிரா கேட்க, சங்கடமாய் போனது மிருதுளாவிற்கு.
"என்னம்மா நீ! நான் அந்த அர்த்தத்துல சொல்லல. நீ ஹாஸ்டல் போகணும் சொன்னதா மிரு சொன்னா. அதை தான் சொல்றேன். அப்படி சேர்க்க எங்களுக்கு உரிமை இல்லை மா. உன் அம்மா அப்பா இருக்கும் போது நாங்க சேர்த்தா அதெல்லாம் கேள்வி வரும். எல்லாம் என் பையனால. அதை தான் கோவமா சொல்லிட்டு இருந்தேன்!" என்று ஸ்ரீனிவாசன் சொல்ல, துகிராவாலும் புரிந்து கொள்ள முடிந்தது.
"எண்ணை சொன்னாலும் தப்பில்ல சார். எனக்காக இவ்வளவு நீங்க யோசிக்குறீங்களே!" என புன்னகைத்தவளைக் கண்ட மிருதுளா,
"ஆமா உன் பேர் என்ன டா?" என கேட்க,
"துகிரா மிரும்மா!" என்றாள்.
"மிரும்மாவா?" என ஸ்ரீனிவாசன் பார்க்க, இரு பெண்களுமே புன்னகைத்தனர்.
"துகிரா. நல்ல பேர் தான்." என்றவர் மீண்டும் அந்த பெண்ணை அனுப்புவதை பற்றி சிந்திக்க ஆரம்பிக்க, உள்ளே வரும்போதே அத்தனை கோபமாய் வந்தான் விக்ரம்.
"இன்னைக்கு ஏங்க போய் பிரச்சனையை வழிச்சுட்டு வந்த? ஏன்டா எப்பவாச்சும் வீட்டுக்கு நிம்மதியா வர்றியா நீ?" என மிருதுளா கேட்க, அங்கே துகிராவும் இருப்பதை கண்டவன்,
"நீங்க வீட்டுக்குள்ளயே பிரச்சனையை வச்சிருக்கீங்க. நான் சொன்னா கேட்குறீங்களா என்ன?" என திருப்பி விக்ரம் கேட்க,
"விக்கி! பார்த்து பேசு!" என்ற ஸ்ரீனிவாசன்,
"வாய்க்கு வந்ததை பேசுறான். அவன் இஷ்டத்துக்கு விட்டது தான் தப்பா போச்சு!" என்று எழுந்தார்.
"நீ இருக்குற இடத்துலயே இருக்க கூடாதுன்னு தான் அந்த பொண்ணு ஹாஸ்டல் போறேன்னு நிக்குறா. எதாவது பேசின." என மிருதுளாவும் கோபம் கொள்ள, அவர்கள் பேச்சை அறிந்தவள் அறை பக்கம் செல்ல திரும்பிக் கொண்டாள்.
நிஜமாய் இவன் இருக்கும் இடத்தில் இருக்கவே கூடாது என்ற எண்ணம் தான் அவளுக்கும்.
"அம்மாடி.. துகிரா... அவன் சொல்றதை எல்லாம் மனசுல வச்சுக்காத டா!" என மிருதுளா அழைத்து சொல்ல, தலையை லேசாய் ஆட்டி சென்றாள் அவள்.
அவளை கவனிக்கவே இல்லை விக்ரம். அன்னை பேசியதை கேட்டுவிட்டு, "நீங்க சொல்லியும் எவ்வளவு திமிரா போறா பாருங்க.. உங்களுக்கு எப்ப தான் நான் சொல்றது புரியுமோ?" என மாடிப்படி ஏறியவன், நினைவு கூர்ந்து நின்று அன்னையிடம் திரும்பினான்.
"இப்ப என்ன பேர் சொன்னிங்க?" என புருவங்கள் சுருங்க விக்ரம் கேட்க,
"யார் பேரு?" என்றார்.
"அதான் அவ பேரு?"
"துகிரா! ஏன் அதான் நீ சொல்ல மாட்டேன் சொன்னியே!"
"முழுப்பேரு?" என கேட்க, அத்தனையும் அத்தனையும் அறை அருகே டைனிங் டேபிளில் தண்ணீரை எடுத்து குடித்துக் கொண்டிருந்த துகிரா காதுகளில் விழ தான் செய்தது.
"இப்ப தான் அறிவு வந்திருக்கும் போல" என முணுமுணுத்த துகிரா,
"என்னோட முழுப்பேரு துகிரா சூர்யமூர்த்தி!" என சொல்ல, கண்களை அங்கும் இங்கும் சுழலவிட்டு சுருங்கிய புருவங்களும் நீண்ட யோசனைக்கு சென்றுவிட்டான் விக்ரம்.
நூறு சதவிகிதம் உறுதி விஷ்வா காதலித்த பெண் பெயர் இனியா என்பதும் கூட. ஒருமுறை இவர்கள் இருந்த அறை சுவற்றில் இனியா என எழுத வந்த விஷ்வாவின் கைகளில் பட்டென ஒரு அடி கொடுத்து தான் சுவற்றில் எழுத விடாமல் செய்திருந்தான் விக்ரம்.
அடிக்கடி அவன் அலைபேசியில் கூட இனியா என்ற எண்ணில் இருந்து அழைப்பு வருவதையும் கண்டிருக்கிறானே!
'ஒருவேளை இருக்குமோ! தான் தான் தவறோ!' நினைத்துப் பார்க்கவே முடியாமல், மீண்டும் யோசித்தான்.
'எங்கே தவறு?' என புருவங்கள் முடிச்சிட சிந்தித்தவன்,
விஷ்வா கூறிய அதே மண்டபதிற்கு தான் கல்யாணப் பெண்ணை தூக்கிவர தான் சென்றது. வாசலில் கூட பார்த்தேனே அந்த இனியா விவேக் என்ற பெயரை' என எண்ணி இன்னுமாய் மூளைக்குள் அலச, தன்னிடம் தவறு இல்லை என்றே தோன்றியது.
"நிமிஷத்துக்கு நூறு முகத்தைக் காட்டுறான்" மகனை திட்டியபடி நகர ஆரம்பித்த அன்னையை நிறுத்தி இருந்தான் விக்ரம்.
இன்னுமே அத்தனை தீர்க்கமாய் அவனைக் கண்டபடி தண்ணீரை கையில் வைத்து நின்றிருந்தாள் துகிரா.
"ம்மா! ம்மா!" என விக்ரம் அழைத்த அவசரத்தில் என்னவோ என வேகமாய் அவரும் திரும்ப,
"ம்மா!" என அழைத்துவிட்டு அவளைப் பார்ப்பதும் அன்னையை பார்ப்பதுமாய் விக்ரம் நிற்க,
"என்ன டா பாக்குற? எதுக்கு கூப்பிட்ட?" என்றார் மிருதுளா.
"அவ பேரு..." என்றவன் குழப்பமாய் அவரைப் பார்க்க,
"அதான் அவளே சொன்னாளே! பின்ன என்ன விக்கி? அவ ஹாஸ்டல் போக போறேன்னு சொல்லிட்டா. உன்கிட்ட இவ்ளோ பேச்சு வாங்குறதுக்கு அவ ஹாஸ்டல் போறது தான் சரினு எனக்கும் இப்ப தோணுது!" என்றார் மிருதுளாவும்.
"ம்மா! அவ பேரு அதில்ல. அவ பொய் சொல்றா!" விக்ரம் சொல்ல, அதிர்ந்தவர் அதிர்ந்தபடி துகிராவைக் கண்டார்.
"என்ன டா சொல்ற!" என குழப்பமாய் இப்பொழுது அவர் துகிராவை பார்க்க,
"எனக்கு என்னவோ நீங்க தான் பேர் வச்சீங்கன்ற மாதிரி சொல்றிங்க? என் பேரு துகிரா சூர்யமூர்த்தி தான். ப்ரூப் இப்ப என் கையில இல்லை தான். ஆனா நான் பொய் சொல்ல எந்த அவசியமும் இல்ல!" துகிரா சொல்ல,
"யாரை ஏமாத்த பாக்குற. எனக்கு நல்லா நியாபகம் இருக்கு. நான் மண்டபத்துல பார்த்தேன். அந்த விவேக் பேருக்கு முன்னாடி உன் பேர் இருந்துச்சு!" விக்ரம் கோபத்திலும் அவள் ஏமாற்றுவதிலும் என சத்தமாய் சொல்ல,
"எப்படி துகிரான்னா இருந்துச்சு?" என்றவளை இன்னும் கொலைவெறியோடு கண்டான் விக்ரம்.
வேண்டுமென்றே தான் துகிரா விக்ரமை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தாள். 'உண்மை தெரியாம வாய்க்கு வந்தபடி பேசின இல்ல. அனுபவி!' என்று நினைத்து அவள் பேச, மிருதுளாவிற்கு எங்கேயாவது முட்டிக் கொள்ளலாம் போல தான் வந்தது.
"என்ன விக்கி? என்னனு சொல்லாம உளறிட்டு நிக்குற?" என்றவருக்கு விஷ்வா காதலித்த பெண் பெயர் தெரியாதே!.
"ம்மா! இவ பேரு அதில்ல" என சொன்னதையே அவன் சொல்ல,
"இப்ப என்ன பேரா இருந்தா உனக்கென்ன டா? பேசாம போயேன்!" என்றும் கூட சொல்லிவிட்டார். ஆனாலும் விக்ரமால் அப்படி செல்ல முடியவில்லை.
ஒருவேளை தன் தவறு தானோ என்று ஒரு அழுத்தம். அந்த அழுத்தத்தோடு விக்ரம் துகிராவைக் காண, அவளுமே எதிர்பார்வை பார்த்து நின்றாள்.
"என்ன டா என்ன பண்ணிட்டு இருக்க நீ? அந்த பொண்ணை பயமுறுத்திட்டு நிக்குறியா நீ?" என ஸ்ரீனிவாசனும் உடைமாற்றி வந்துவிட்டார்.
"வேற வழி இல்லைனா நாளைக்கு நானும் அம்மாவுமே அந்த பொண்ணை ஹாஸ்டல்ல சேர்த்துடுறோம். வர்றது வரட்டும் பார்த்துப்போம். இப்ப எதுவும் பிரச்சனை பண்ணாத!" என்றார் ஸ்ரீனிவாசன்.
"அய்யோ அதில்ல! இவ பேரு இதில்ல!" என சொல்ல, துகிராவிற்கு நான்கு நாட்களுக்கு பின் இன்று இப்பொழுது தான் சிரிப்பு பொத்துக் கொண்டு வரப் பார்த்தது.
"இவன் ஒருத்தன் அதில்ல இதில்லனு.." என துகிரா எதுவும் நினைத்துக் கொள்வாளோ என அவள் பக்கம் பார்த்த மிருதுளாவிற்கு அவள் புன்னகையை மறைப்பது தெரிந்தது.
அதில் அவருமே சந்தேகமாய் பார்க்க,
"ம்மா! விஷ்வா விரும்பின பொண்ணு பேரு வேற ம்மா!" என தெளிவாய் விக்ரம் கூறிவிட, அத்தனை அமைதி சில நொடிகள் அங்கே.
இவன் என்ன கூறுகிறான் என மகனை நம்பாமல் இருக்க முடியாமல் பார்த்தனர் பெற்றோர்கள். கோபப்படுவானே தவிர்த்து பொய் சொல்ல மாட்டான் என்பதாய் அவர்கள் யாரிடம் என்ன கேட்க என பார்க்க,
"அதே தான் சார்!" என்ற துகிரா,
"உங்க விஷ்வா விரும்பின பொண்ணு பேர் மட்டும் இல்ல பொண்ணே நான் இல்ல!" என்று சொல்லவும் மொத்த குடும்பமும் அதிர்ந்து பார்க்க,
"ஹே என்ன சொல்ற நீ? விளையாடுறியா?" என்றான் விக்ரம் கோபமாய்.
"யார் நான் விளையாடுறேனா? இன்னுமா புரியல உங்களுக்கு? தண்ணி கேன் போட வந்தவளை தான் தூக்கிட்டு வந்திருக்கிங்க நீங்க!" என துகிரா சொல்ல, குடும்பமாய் பேயறைந்தார் போன்று விழித்தனர்.
தொடரும்..