• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

இராக்கதனின் கண்மணி! 9

kkp2

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
62
65
18
Tamil nadu
அத்தியாயம் 9

"இனியா தானே நீங்க சொல்ற பேரு?" என துகிரா சொல்லவும் மிருதுளா ஸ்ரீனிவாசன் இருவரும் மகனைப் பார்க்க, அவனும் ஆமாம் என்பதாய் தலையசைத்தான்.

"இனியா என் பெரியப்பா சிவமூர்த்தியோட பொண்ணு. அவளும் விஷ்வாவும் தான் லவ் பண்ணிருக்காங்க!" என துகிராவே தொடர்ந்தாள்.

"என் அப்பா அம்மா பெரியப்பா பெரியம்மானு நாங்க எல்லாரும் கூட்டு குடும்பம் தான். எனக்கு எதுவுமே முதல்ல தெரியாது. ஒரு மாசம் முன்னாடியே கல்யாண வேலையை ஆரம்பிச்சாச்சு. பத்திரிக்கை அடிச்சு ஊர் முழுக்க குடுத்துன்னு வீடு பரபரப்பா இருந்தது ஆனா பொண்ணு பார்க்க கூட வர்ல அந்த விவேக் வீட்டில இருந்து. ஏதோ வித்தியாசம் புரிஞ்ச அளவுக்கு என்னனு எனக்கு சொல்ல தெரியல" என அவள் பேச,

"முழுசா என்னனு சொல்லு. எதுக்காக அப்ப நீ மேடைக்கு வந்த? அங்கேயே சொல்ல வேண்டியது தானே?" விக்ரம் அவசரப்படுத்த,

"நீங்க கேட்டீங்களா என்னை? இல்ல பேச தான் விட்டிங்களா? என்ன ஏதுன்னு புரியாம நான் நிக்கும் போது என்னென்னலாமோ சொல்லி, விட்டா சுட்ருவானோனு பயந்து நிக்கும் போதே இழுத்துட்டு வந்துட்டிங்க. நீங்க பேசாதீங்க" என பதிலுக்கு பேசினாள் துகிரா.

"உன்னை எதாவது சொல்லிட போறேன் விக்கி! கொஞ்சமாவது அறிவிருக்கா டா உனக்கு? பேரு பெரிய பேரு வெளில விக்ரம்னு. ஆனா என்ன பண்ணி வச்சிருக்க நீ? இதுல கோவம் வேற வருதா உனக்கு?" என ஸ்ரீனிவாசனும் கேட்க,

"என்ன தான் டா நடந்துச்சு?" என்றார் மிருதுளா துகிராவிடம்.

"இனியாகிட்ட என்னை பேசவே விடல என் வீட்டுல. ஏதோ பிரச்சனைனு நினைச்சேன். ஆனா அவ லவ் பண்ற விஷயம் கல்யாணத்துக்கு முந்தின நாள் மண்டபத்துல வச்சு தான் எனக்கு தெரியும்!" என்றவள்,

"கல்யாணத்தன்னைக்கு காலைல இனியா அங்க இல்லைன்றது பெரிய ஷாக் எனக்கு. முந்தின நாள் நைட்டு தான் விஷ்வாகிட்ட இனியா பேசிட்டு இருந்ததை பார்த்தேன் அப்புறம் என்னோட பெரியம்மா விமலா தான் அவளை என்னவோ சொல்லி அவ அழுதுட்டு இருக்கும் போதே ரூம்க்கு கூட்டிட்டு போனாங்க. இனியா கூடவே தான் அவங்க இருந்தாங்க. எப்ப அவ அங்க இருந்து போனானு ஏங்க யாருக்குமே தெரியாது" என்று சொல்லவுமே ஒரு பதட்டம் மிருதுளாவிற்கு.

"அப்ப இனியா எங்க துகிரா?" மிருதுளா கேட்க,

"தெரில மிரும்மா! அவளை தான் தேட போறேன். ஆனா ஏங்க போய் தேட போறேன்னு தெரியல. அவ விஷ்வா கூட தான் போயிருப்பானு நினச்சேன். காலைல அவளை காணும்னதும் பெரியம்மா ரொம்ப அழுதாங்க. அப்புறம் தான் எங்கம்மா என்னை இனியா இடத்துல வச்சு பேச சொல்லி என் பெரியப்பாகிட்ட சொன்னாங்க. அந்த விவேக்கை முதல் தடவை பார்க்கும் போதே எனக்கு பிடிக்கல. அவன் பார்வையும் சரி இல்ல. ஆனா இனியா மாப்பிள்ளைனு பேசாம இருந்தேன். எனக்கு கல்யாணம்னதும் எனக்கும் ஷாக் தான்!" என்றவள்,

"அந்த விவேக் அப்பா அரசியல்வாதியை எல்லாம் தெரிஞ்சவராம். முதல்ல பொண்ணை காணும்னதும் ரொம்ப பேசிருக்கார். நான் ஒருத்தி இருக்கேன்னு சொன்ன அப்புறம் தான் சமாதானம் ஆகி இருக்காங்க. அப்பவும் என் விருப்பத்தை எல்லாம் யாரும் கேட்கல. என் அப்பா தான் என்னை பார்த்து எல்லாம் நல்லதுக்குன்னு நினைச்சுக்க சொன்னாங்க!" என்றாள்.

"இதெல்லாம் ஏன் டா வந்தன்னைக்கே சொல்லல?" மிருதுளா கேட்க, விக்ரமும் அவளைப் பார்த்தான்.

"சொல்ற நிலைமைல நானும் இல்ல கேட்குற நிலைமைல அன்னைக்கு நீங்களும் இல்லை மிரும்மா. விதி இது தான்னு நானும் அவங்க சொல்றதுக்கெல்லாம் தலையாட்டி தான் மேடைக்கு வந்தேன்!" என்றவள் பார்வை விக்ரமிடம் வந்தது.

"இவங்க வந்து என்னை பிடிச்சு இழுக்கும் போது எனக்குமே ஷாக் தான். இவங்க இனியானு நினச்சு பேசினது எனக்கு முதல்ல புரியவே இல்லை. ரொம்ப நேரம் ஆச்சு எனக்கு எல்லாம் புரிய. ஆனா இப்ப வரை என் வீட்டுல யாருக்கும் புரியல. என்னால புரிய வைக்கவும் முடியல"

"அன்னைக்கு உங்ககிட்ட சொல்லிக்காம என் வீட்டுக்கு போனேனே! அன்னைக்கு ரொம்ப பேசிட்டாங்க என்னை இனியாவோட அம்மா!" என்றவள் அந்த நாள் நினைவில் அமைதியானாள் ஓரு நிமிடம்.

"துகிரா!" என அவளருகே மிருதுளா வர,

"என் பொண்ணாவது விரும்புறேன்னு சொன்னா. நீ சத்தமே இல்லாம வசதியா ஒருத்தன் வந்ததும் கழுத்தை நீட்டிட்டு காதலிச்சவனை கழட்டி விட பார்த்துட்ட இல்லனு கேட்டாங்க என்னை!" என்றவள் கண்ணீர் வடித்து,

"ஒரு நாள் முழுக்க போய்ட்டு இப்ப வந்தா உன்னை ஏத்துக்கனுமோனு ரொம்ப பேசிட்டாங்க! என் அம்மாவே என்னை நம்பல. உன்னை கூட்டிட்டு போனவன் சரி இல்லையோ அதான் ஒரே நாள்ல வந்துட்டியோனு கேட்டாங்க! என் பெரியம்மாக்கும் அம்மாக்கும் ஆகாது. இனியா போனதுல என் அம்மாக்கு சந்தோஷம். அதனால நான் வீட்டைவிட்டு வந்ததை என் பெரியம்மா...." என்றவள் முடிக்காமல் அழ ஆரம்பித்துவிட்டாள்.

"இதெல்லாம் உங்களால! என்ன நடக்குதுன்னு கண்ணை மூடி திறக்குறதுக்குள்ள எல்லாமே எனக்கு முடிஞ்சு போச்சு. ஏங்க போகன்னு தெரியாம அனாதையா ரோடுல நின்னேன். எப்படி இவங்க கார்ல விழுந்தேன்னு இப்பவும் எனக்கு சரியா நியாபகம் இல்ல. அவ்வளவு பசி. இதெல்லாம் அனுபவிச்சிருக்கீங்களா? என்னவெல்லாம் பேசுறீங்க என்னை?" என்றவள் விக்ரம் முறைப்பில்,

"இனியாவை தான்னாலும் இப்படி பேச உங்களுக்கு என்ன ரைட்ஸ் இருக்கு? என் வீட்டுலயே என்னை புரிஞ்சிக்கல. பின்ன நீங்க யாரோ நான் யாரோனு தான் நானும் அமைதியா போனேன். அதுக்காக என்னலாம் பேசுறீங்க? உயிரை விட்டதால மட்டும் அவங்க உண்மையா காதலிச்சாங்கனும் இல்ல. உயிரோட இருக்கவங்களுக்கு அதோட வலி தெரியாதுன்னும் இல்ல" என்றாள் அதே கோபத்தோடு.

"புரிஞ்சிக்கோங்க மிரும்மா. என் வீட்டுல இவங்களோட சேர்த்து வச்சு இன்னும் என்னை தப்பா பேசினாங்க. அதெல்லாம் சொல்லவே எனக்கு வாய் கூசுது. எனக்கு இனியாவை கண்டுபிடிக்கணும். இனியாவும் பாவம். இனியா வந்தா தான் என் வீட்டுல நான் என்னையும் நிரூபிக்க முடியும். அவ்வளவு கேவலமானவ இல்ல நான்னு அவங்களுக்கு நான் சொல்லியே ஆகணும்." என சொல்ல, ஸ்ரீனிவாசன் தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டார்.

விக்ரம் நிலை சொல்லவும் வேண்டாம் என்பதாய் தான் இருந்தது. துகிராவை நினைத்து எல்லாம் அவனுக்கு கவலை இல்லை. தான் எப்படி இப்படி செய்தோம் என தான் தன்னை நினைத்தே தான் அவனுக்கு கோபம் இப்பொழுது.

"இனியா பாவம்னு அந்த கல்யாணத்துக்கு முந்தின நாள் நைட்டெல்லாம் அதே நினைச்சுட்டு நான் தூங்கவே இல்லை. அடுத்த நாள் காலைல எனக்கு கல்யாணம்னு சொன்னாங்க. அதையும் கேட்டு என் விதி அவ்வளவு தான்னு என் குடும்பத்துக்காக தான் சம்மதிச்சேன். அனா அவங்களே என்னை புரிஞ்சுக்கல. அன்னைக்கு உங்க மகன் என்னை கூட்டிட்டு வந்தப்ப கூட விஷ்வாவை இழந்த தூக்கத்துல இருக்க உங்களை கஷ்டப்படுத்தவானு நானும் அமைதியா இருந்துட்டேன். அதுக்கும் இவங்க என்னை என்னவெல்லாம் சொல்றாங்க? அதுக்காக தான் காலைல சொல்லிக்காம போனேனே. ஆனா என் நேரம் திரும்ப உங்க வீட்டுக்கே வர்ற மாதிரி ஆகிடுச்சு!" என்றாள் துகிரா.

"என்னங்க!" என மிருதுளா கணவனை அழைக்க, அவர் நிமிரவே இல்லை.

விக்ரமிற்கு தன் தாய் தந்தையை நிமிர்ந்து பார்க்கவே முடியவில்லை. தன்னால் மட்டும் தான் இத்தனை பெரிய குழப்பம் என தெளிவாய் புரிந்தது அவனுக்கு.

"என்னங்க பண்றது இப்ப?" மிருதுளா கேட்க,

"என்ன பண்ண? என்ன பண்ண முடியும்? என்ன பண்ணி வச்சிருக்கான் பார்த்தியா இவன்?" என ஸ்ரீனிவாசன் மகனைக் காட்ட, அவரைப் பார்க்கவே இல்லை விக்ரம்.

"எதுக்கெடுத்தாலும் கோபம். உடனே அடிக்குறது உதைக்குறது. இதுல கன்னை காட்டினேன் பொண்ணை இழுத்துட்டு வந்தேன்னு என்னவெல்லாம் பேசினான்?" என கேட்க கேட்க, கோபமான கோபம் அவருக்கு.

"அந்த பொண்ணை காதலிச்சு இப்ப எங்க இருக்கானே தெரியாம ஆக்கினான் விஷ்வா. இந்த பொண்ணை என்ன நிலைமைக்கு நீ கொண்டு வந்து விட்ருக்க தெரியுதா டா. ஏன் டா இப்படி இருக்க? இந்த கோபத்தால நீ இன்னும் என்னலாம் பார்க்க போறியோ!" என சொல்ல சொல்ல கேட்டு தான் நின்றான் பதில் பேசாமல்.

"ரெண்டு பொண்ணுங்க வாழ்க்கை மிரு!" என மனைவியிடமும் சொல்லி துவண்டு போனார் ஸ்ரீனிவாசன்.

"அப்படிலாம் நீங்க கவலைபடாதீங்க சார். அவ்வளவுக்கு தைரியத்தை நான் விட்டுடல." என கண்களை துடைத்துக் கொண்டு புன்னகைத்தாள் துகிரா.

"எனக்கு இப்ப இனியாவை நினைச்சு தான் கவலையா இருக்கு. உங்ககிட்ட இது எதையும் சொல்லாம இங்கிருந்து கிளம்பிடணும்னு தான் நினைச்சேன். அதுக்குள்ள அவசரப்பட்டுட்டேன்!" என தன்னையே தான் சொல்லிக் கொண்டாள்.

"இப்பவும் ஒண்ணுமில்ல. நாளைக்கு என்னை ஹாஸ்டல்ல சேர்த்து விடுங்க. நான் பார்த்துக்குறேன். நீங்க கவலைப்பட தேவையில்லை சார். என்ன நடக்கும்னு இருக்கோ அது தானே நடக்கும்?" என்றாள்.

"நீ பேச பேச தான் இன்னும் கஷ்டமா இருக்கு துகிரா!" என மிருதுளாவும் கவலையாய் அவளருகில் சென்று அணைத்துக் கொண்டார்.

"ம்மா!" விக்ரம் அழைக்க,

"போ விக்கி! ஏன் டா இப்படி பண்ணின?" என்றவருக்கு மகனை கணவன் போல கோபமாய் கேட்கவும் வரவில்லை.

நண்பனுக்காக மட்டும் என அவன் நினைத்து செய்தது. அவன் மட்டும் எதிர்பார்திருப்பானா என்ன இதையெல்லாம் என தான் தோன்றியது அவருக்கு.

"ப்ச்!" என தலையை பிடித்துக் கொண்டான் விக்ரம்.

அவனுக்குமே தெரிந்தது நடந்தது பெரிய தவறு என்று. ஆனாலும் இனி என்ன செய்திட என்று தான் தெரியவில்லை.

"இனியா பிரண்ட்ஸ் யாரையும் உனக்கு தெரியுமா? சொல்லு. நாங்களும் பேசுறோம்!" மிருதுளா துகிராவிடம் கேட்க,

"என்கிட்ட யாரோட போன் நம்பரும் இல்ல. போனும் இல்லை. எப்படி போனா எங்க போனா எதுவும் தெரியாது. ஆனா விஷ்வா.." என நிறுத்தியவள்,

"இனியா விரும்பினவங்க பேர் விஷ்வான்றது கூட இங்க நடக்குறதை வச்சு நானா புரிஞ்சிக்கிட்டது தான். அவ இங்கேயும் வரலைனா எங்க போயிருப்பான்னு தெரில. பாவம் அவ" என்றாள் துகிரா.

"அந்த மண்டபத்துல இருந்து போனதா தானே சொல்ற? அப்போ சிசிடிவில இருக்கும் தானே?" என்று உடனே விக்ரம் கேட்க, துகிராவிற்கு சட்டென ஒரு வெளிச்சம் கிடைத்ததை போலிருந்தது.

தொடரும்..