• வைகையின் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..

  • வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

இறுதி அத்தியாயம் 17

Rithi

Active member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
343
அத்தியாயம் 17

“பவா! கிளம்பிச்சா? அங்கே ஐயர் அதை காணும் இதை காணும்னு கேட்டுட்டு இருக்கார்.. நீ இங்கே என்ன பண்ற.. அக்கா அங்கே தனியா வேலை பார்த்துட்டு நிக்குறாங்க” குமரன் வந்து சொல்ல,

“இதோ கிளம்பிட்டேன்ங்க.. இந்த பொண்ணுங்க தான் லேட் பன்றாங்க” என்றவர்,

“அபி எங்கே இன்னுமா கிளம்பல? அஸ்வினி ரெடியா? இந்த மது பொண்ணுக்கு அலங்காரம் நடக்குது.. கூட போங்க டி ன்னு சொன்னா இன்னும் இவங்களே ரெடியாகாமல் இருக்காங்க..” அங்கும் இங்குமாய் அலைந்தபடி பேசிக் கொண்டிருந்தார் பவானி.

“விடு பவானி! அதுவும் சின்ன பசங்க தானே? மெதுவா கிளம்பட்டும்.. நீ ஐயர் கேட்குறதெல்லாம் இருக்குதான்னு போய் பாரு. நான் இவங்களை கூட்டிட்டு வர்றேன்” என்றபடி வந்தார் கனகா.

“அண்ணி முஹூர்த்தத்துக்கு நேரம் ஆயிடுச்சு.. ரெண்டு பேரும் அப்பவே ரூம்குள்ள போய்ட்டாங்க.. இந்த அஸ்வினிக்கு சேலை கட்ட தெரியாதாம்.. அபி ஹெல்ப் பன்றேன்னு உள்ளே போனா.. சீக்கிரம் கூட்டிட்டு வாங்க அண்ணி.. நான் போய் ராஜ் கிளம்பிட்டானான்னு பார்த்துட்டு ஐயரை பாக்குறேன்” என்றபடி அந்த அறையை விட்டு வெளியே சென்றார்.

“அபி, அஸ்வினிம்மா என்ன டா பண்றீங்க” கனகா..

“இதோ வந்துட்டோம் அத்தை” என புடவையை சரி பண்ணியபடி வந்தனர் இருவரும்.

“ராஜ் கிளம்பிட்டியா?” பவானி கேட்க,

“அல்மோஸ்ட் ரேடி அத்தை!” என்றான் ஆனந்த் ராமுடன் வந்து.

“சீக்கிரம் டா.. ஐயர் கூப்பிடவும் அழைச்சிட்டு வந்துடுங்க.. நான் மேடையில என்ன தேவைனு பாக்குறேன்.”

“சரி அத்தை! நீங்க போய்ட்டு பாருங்க.. நாங்க இங்கே பார்த்துக்குறோம்”

“சரி சரி சீக்கிரம்!”

“ம்மா ஐயர் பூ கேட்குறாங்க” என வந்தாள் ஸ்ரீ.

“அங்கே தான் டா தாம்பூலத்துல வச்சுருக்கேன்.. இரு நான் வந்து எடுத்து தந்துடுறேன்” என்றவர் அவளுடன் சென்றார்.

“பொண்ணை வந்து முஹூர்த்த புடவையை வாங்கிக்க சொல்லுங்கோ” ஐயர் சொல்ல, அழைத்து வர சென்றாள் ஸ்ரீ.

அஸ்வினி, அபி, ஸ்ரீ மூவரும் அழைத்து வர மது வந்து பெரியவர்களை நமஸ்காரம் செய்து புடவையை வாங்கிக் கொண்டு மாற்றி வர சென்றாள்.

மாப்பிள்ளையையும் அதே போல வரவைத்து உடையை கொடுக்க வாங்கிக் கொண்டு மாற்றி வர சென்றான்.

“அபி! நாமளும் திரும்ப கல்யாணம் பண்ணிக்கலாமா?” ஆனந்த் கேட்க,

“வேணாம் வேணாம்.. இந்த தண்டனையே போதும்” பயந்தது போல அபி சொல்ல,

“அடிங்க.. வாயாடி உன்னை...”

“அத்தை வர்றாங்க..” என்றவள் அவன் கண்ணிலிருந்து தப்பினாள்.

மது, ராஜ் இருவரும் மணமக்களாய் தயாராகி வர, ஐயர் மந்திரங்களை ஓத மங்களகரமாய் வாத்தியங்கள் வாசிக்க தாலியை மது கழுத்தில் கட்டி தன்னவள் ஆக்கிக் கொண்டான் ராஜ்.

“அப்படி பார்க்காத டா.. இன்னைக்கு பார்த்து வெட்கம் வேற வந்து தொலையுது” மது ராஜிடம் சொல்ல,

“ஹாஹா! அதிசயம் தான் மது..” என்றவன் குங்குமம் எடுத்து பின்னால் சுற்றி வகிட்டில் வைத்துவிட்டான்.

பெரியவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியவர்கள் உடன் சிறுவர்கள் பட்டாளம் மொத்தமும் சேர்ந்து ஆட்டம் போட்டது.

ராஜ், ஆனந்த், ராம் மூன்று ஜோடிகளுக்கும் பரிசு என ஆளுக்கு ஒவ்வொரு தனிப் பெட்டியைக் கொடுத்தாள் அஸ்வினி.

“என்ன இருக்கு அச்சு?” அபி கேட்க,

“என்னால முடிஞ்ச சின்ன கிப்ட் அபி” என்றாள் அஸ்வினி.

“பிரிச்சு எங்களுக்கும் என்னனு தான் காட்டுங்களேன்!” பவானி கேட்க,

“ஒருவேளை பெரியவங்க கேட்கக் கூடாதோ என்னவோ” என்றார் தினகரன்.

“அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல அங்கிள்! அவங்களே பிரிப்பாங்க” அஸ்வினி சொல்ல,

“பிரிச்சு காட்டுங்க பா” நடராஜன்.

பெண்கள் கைகளில் ஆண்கள் கொடுத்துவிட மூன்று பெண்களும் அவரவர் பெட்டிகளைப் பிரித்தனர்.

“டிக்கெட்ஸ் மாதிரி இருக்கு” முதலில் பிரித்த மது சொல்ல,

“ஓஹ் ஹனிமூன் டிக்கெட்ஸ்ஸா?” என்றாள் ஸ்ரீ.

“ஹேய் ஊட்டிக்கு.. மை பாவ்ரைட்.. தேங்க் யூ அச்சு” என்றாள் அபி.

“ஊட்டியா? ஆனா எனக்கு கேரளா இருக்கே” – மது.

“ஹேய் எனக்கு ஏர்காட்” – ஸ்ரீ

“அட என்னம்மா நீ ஒரே இடத்துக்கு போட்ருக்க கூடாது? இப்படி தனித்தனியா போட்ருக்க” தாத்தா சொல்ல,

“யோவ் நடராஜா.. ஜோடியா போனா தான் ஹனிமூன்.. கூட்டத்தோட போனா அது ஆன்மீக சுற்றுலா” கடுப்பில் கூறினான் ராஜ்.

“எதுக்கு அச்சு அக்கா இதெல்லாம்?” மது கேட்க, அஸ்வினி கண் சிமிட்டி சிரித்த நேரம்

“நீ வேணா வீட்ல இரு டா.. நான் போய்ட்டு வர்றேன்” என்று ராஜ் கிண்டல் செய்ய,

“டேய் கல்யாணப் பொண்ணுனு அமைதியா இருக்கேன்.. பேச வைக்காத!” என்றாள் மது முறைத்தபடி.

“இதே சந்தோஷத்தோட எப்பவும் இருங்க” என்று அஸ்வினி கூறவும் அபி அவளை அணைத்துக் கொண்டாள்.

திருமணக் கொண்டாட்டம் அங்கே அழகாய் அரங்கேற, மாலை வரவேற்பும் களைகட்டியது இவர்களின் ஆட்டத்தில்.

“அம்மா! நேத்து ஏதோ சொன்னிங்களே! இன்னைக்கு சொல்லுங்க பார்க்கலாம்” ராஜ் பவானியிடம் சொல்ல, அவன் கேட்டதை உடனே புரிந்து கொண்டார் பவானி.

“இன்னைக்கும் கூட நாங்க எல்லாம் பேச வேண்டியது நிறைய இருக்கு டா. நீங்க போங்க.. மது, அபிமா வாங்க போலாம்” பவானி சொல்ல,

“அத்தை! இவன் வாயை வச்சுகிட்டு சும்மா இல்லாமல் என்னையும் சேர்த்து கோர்த்து விடுறான்.. நீங்க மதுவை மட்டும் கூட்டிட்டு போங்க.. அபி நீ மேல வந்துடுமா” கெஞ்சலாய் ஆனந்த் அழைக்க,

“தேவ்! அதெல்லாம் சும்மா! இல்லம்மா” – ராஜ்

“பேசாமல் ரூம்க்கு போங்க டா.. எப்ப பாரு எதாவது பேசிட்டு “ என்றவர் பாலை காய்ச்ச செல்ல, அபி மதுவை தயார் செய்தாள்.

“அபி, மது ரெண்டு பேருக்கும் ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோங்க..” பவானி சொல்ல, என்ன என கேட்டனர் இருவரும்.

“உங்க வாழ்க்கை உங்க கையில தான்.
பெரியவங்க என்ன சொன்னாலும்.. நீங்க வாழுற வாழ்க்கை தான் உங்க எதிர்காலத்துக்கு அடையாளம்.. நீங்களும் சந்தோசமா இருக்கனும்.. மத்தவங்களையும் சந்தோசமா பார்த்துக்கணும்”

“சரிங்க அத்தை” – மது

“சரி பவானிம்மா”- அபி.

“சரி டா.. அபி நீ அவளை ரூம்ல விட்டுட்டு வா” என்றார் பவானி.

“மது! ஆல் தி பெஸ்ட்!” அபி அனுப்பி வைக்க, ராஜ் அறையினுள் சென்றாள் மது.

“நீ போ அபி மா.. போய் ரெஸ்ட் எடுத்துக்கோ.. மீதி வேலையை காலையில் பார்த்துக்கலாம்” அபியை பவானி சொல்ல,

“சரிங்க அத்தை!” என்றவள் முடிந்து அறைக்குள் வந்தாள்.

“அபி உனக்காக தான் வெயிட்டிங்.. வா வா!” என்றவன் அவளை இழுத்துக் கொண்டு மாடிக்கு சென்றான்.

“இங்கே ஏன் கூட்டிட்டு வந்திங்க?”

“சும்மா தான் அபி! கொஞ்ச நேரம் உன்கூட அமைதியா இருக்கனும் தோணுச்சு.. அதான்..”

“நான் ஒன்னு சொல்லவா?”

“என்ன ஒன்னு? இப்படி கேட்குறதை விடவே மாட்டியா?”

“கேட்கவா வேணாமா?”

“கேளு டி”

“இல்ல வேணாம்!”

“ஏனாம்?”

“நான் ஒன்னு சொல்றேன்”

“சரி சொல்லு”

“அது நீங்க இப்படி நின்னா சொல்ல முடியாது” தன்னை சுற்றி வளைத்து பிடித்து முகத்தில் முகம் உரச நிற்பவனை அவள் சொல்ல,

“வேற எப்படி நிற்கணும்? கிளாஸ் எடுக்க போறியா?”

“ப்ச்! கொஞ்சம் கேப் விட்டு நில்லுங்களேன்”

“இன்னுமா? இவ்வளவு நாள் அப்படி தானே டி நின்னேன்?”

“அச்சோ! அது இல்ல.. இப்ப கொஞ்சம் தள்ளி நில்லுங்க சொல்றேன்”

“அப்ப நீ சொல்லவே வேணாம்.. அப்புறம் தள்ளிவிட்டுட்டு ஓடிடுவ.. இது தானே உன் பிளான்?”

“சரி போங்க நான் சொல்லல..”

“கோபமா மேடம்?”

“இல்லையே! இந்த பனிக்கு அப்படியே குளுகுளுன்னு இருக்கு”

“அப்ப கோபம் தான்.. உன்னை கூட்டிட்டு வந்ததும் இதுக்கு தான்”

“எதுக்கு?”

“ம்ம் இப்ப குளுருது தானே? அதுக்கு தான்.. சரி வா ரூம்க்கு போலாம்”

“முடியாது முடியாது! நான் வர மாட்டேன்..”

“ஹாஹாஹா புரிஞ்சிடுச்சு போல.. பெர்மிஸ்ஸன் யாரு கேட்டாங்களாம் உன்கிட்ட?” என்றவன் அவளை தூக்கிக் கொண்டான்.

ஆனந்த் அபியின் இல்லற வாழ்க்கை நல்லறமாய் ஆரம்பித்தது கடவுளின் இயற்கையின் ஆசிர்வாதத்தோடு.

நீயில்லா நாழிகை
தீயில் வேகும் ஓர் நிலை
கூடவே நீ வர
கூறு நீயும் யோசனை

“வா வா வசந்தமே! சுகம் தரும் சுகந்தமே!” ராஜ் மதுவை அறைக்குள் வரவேற்க,

“எதுக்கு இந்த பில்டப் எல்லாம்?”

“என்னோட மகாராணியை நான் வரவேற்கிறேன்”

“ரொம்ப பழைய மெத்தட் ராஜ்.. புதுசா எதாவது எதிர்பார்த்தேன்”

“இப்ப அதுவா முக்கியம்? நீ எதிர்பார்க்காத நிறைய விஷயம் இன்னைக்கு இருக்கே”

“ஆஹான்! ஆனா எனக்கு தூக்கம் வருதே!”

“அடியேய்! ஃபர்ஸ்ட் நைட்ல தூக்கம் வருதா? ஐம் பாவம் மது”

“பொறுக்கி பொறுக்கி! ஃபர்ஸ்ட் நைட்ல ஃபர்ஸ்ட் நைட் நடந்தே ஆகணுமா என்ன?”

‘போச்சு! இவ ஏதோ பிளான் பண்ணிட்டா’ மைண்ட்வாய்ஸ் குரல் கொடுக்க,

“அப்படியெல்லாம் என்னை ஏமாத்திடாத மதுமா!” என்றான் பாவம் போல்.

“சரியான கேடி டா நீ.. ஆனா ராஜ் இந்த நாள் இந்த நிமிஷம் எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? நடக்குமா நடக்குமானு எதிர்பார்த்து எப்போ எப்போனு நினச்ச நாள்... இப்ப நம்ம கையில.. ஐம் சோ எக்ஸைட்டட் ராஜ்.. அண்ட் ஐம் வெரி ஹாப்பி டூ” உற்சாகமாய் அவள் பேசிக் கொண்டிருக்க, அவளையே உற்று பார்த்துக் கொண்டிருந்தான் ராஜ்.

“ஏன் டா அப்படி பாக்குற? முழுங்குற மாதிரி”

“கனவு மாதிரி இருக்கு மது.. காலேஜ் படிக்கும் போது கூட இவ்வளவு தூரம் வரும்னு எக்ஸ்பெக்ட் பண்ணல”

“டேய்! அப்ப கழட்டி விட பார்த்தியா?” முறைத்து தான் கேட்டாள்.

மெலிதாய் சிரித்துக் கொண்டான். “நிச்சயமா இல்ல.. ஆனா அப்ப லவ் மட்டும் தான்.. லவ்ல கான்ஃபிடன்டா நின்னேன்.. அடுத்த ஸ்டேஜ் பத்தி யோசிச்சது இல்ல..”

“ஹ்ம்ம்”

“ஐ பீல் தி லவ் டா.. இந்த லவ் நமக்குள்ள எப்பவும் இருக்கும் அண்ட் நம்ம கல்யாணம் என்கேஜ்மென்ட் நடந்த சிடுவேஷன்.. எல்லாமே ஒரு புதுசா இருந்துச்சு இல்ல..”

“ஹ்ம்ம் இந்த ஃபீலோட...” அவள் இழுத்து சொல்ல,

“ஃபீலோட???” ஏதோ சொல்லப் போகிறாள் என கண்களை விரித்துப் பார்த்தான் ராஜ்.

“இந்த ஃபீலோட அப்படியே தூங்கலாமா?”

“திருந்த மாட்ட டி.. நீ திருந்த மாட்ட”

“ச்சீ! போ டா”

“இதுக்கு மேல உன்னை பேச விட்டா தான டி பேசுவ..” என்றவன் நிஜமாய் அவளை பேசவும் விடவில்லை.

காற்றில் கலந்துவிட்ட வாசம் போல, பூக்களில் தேங்கிவிட்ட தேன் துளி போல இவர்களின் வாழ்வில் என்றும் வசந்தம் வீசும்.

தன்னையே நம்பி வந்தவளை தன் வாழ்நாள் முழுதும் துணையாய் வைத்து அவளை மட்டுமே தன் ராணியாய் வைத்து வாழும் ராஜாக்களின் வாழ்வு என்றும் புது மலராய் மலர்ந்திடும்.
 

Apsareezbeena loganathan

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
106
காற்றெங்கும் நின் வாசம்....

கல்யாணத்தில் சலசலப்பு
காணவில்லை மணப்பெண் அச்சு
கண்ணீருடன் ஒரு பெண் அபி
கலங்கமாய் உறவுகள்
காதலிப்பதாக பொய்கூறி அபியை
கைபிடிக்கும் தேவ் ஆனந்த்....

அத்தையின் படியில்
ஆனந்த் பேரில்
அபாண்டமாக பலி சுமத்த
அதை ஏற்ற தேவ்... தாங்காமல்
அவன் அம்மா கோபமாக செல்ல
அழையா விருந்தாளி போல
அபி புகுந்த வீடு போக.....

மனதில் பயத்துடன்
மிரண்ட மானாய்
மாடிக்கு செல்ல
மன்னவன் கோபமாக பார்க்க
மனைவியின் கண்ணீரில்
மனதை தொலைக்க.....தேவ்
மனதில் இருக்கும் காதலை
மறைக்காமல் நண்பனிடம் பகிர
முளிக்கும் ராஜ்...

மாப்பிள்ளையாக ராஜை கொண்டு வர
மணப்பெண்ணை மாற்றி
மண்டபத்தில் குழப்பம் செய்து
மகளை மணம் செய்து குடுக்க
மகள் ஶ்ரீ ராமை காதல் செய்ய
மாஸ்டர் பிளான் போடும் விமலா
மதுவை காதலிக்கும் ராஜ்க்கு
மயக்கம் வராத குறை.....

முடிச்சுக்கள் நிறைந்த பக்கம்
முன் நின்று தேவ்
முயன்று அழகாய் நேர்த்தியாய்
முயற்சிகள் செய்து
மகிழ்சியாக திருமணம் முடித்து
மூன்று குடும்பதிற்க்கும் சுபம் ...

அனைவரையும் அரவணைத்து பார்த்துக் கொள்ளும்
பவானி அம்மா
அவரின் அறிவுரைகள் ஆலோசனைகள் அனைத்தும்
அருமை....

ஆளுமையாக கங்கா
அம்மாவாக ஆனந்த் மேல்
அவரின் கோபம்
அதன் பின் சமாதானம்
ஆப்பு விமலாக்கு சூப்பர்....

தென்றலாய் ஒரு
காதல்....
காற்றெங்கும் உன் வாசம்
 
Last edited:

Rithi

Active member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
343
காற்றெங்கும் நின் வாசம்....

கல்யாணத்தில் சலசலப்பு
காணவில்லை மணப்பெண் அச்சு
கண்ணீருடன் ஒரு பெண் அபி
கலங்கமாய் உறவுகள்
காதலிப்பதாக பொய்கூறி அபியை
கைபிடிக்கும் தேவ் ஆனந்த்....

அத்தையின் படியில்
ஆனந்த் பேரில்
அபாண்டமாக பலி சுமத்த
அதை ஏற்ற தேவ்... தாங்காமல்
அவன் அம்மா கோபமாக செல்ல
அழையா விருந்தாளி போல
அபி புகுந்த வீடு போக.....

மனதில் பயத்துடன்
மிரண்ட மானாய்
மாடிக்கு செல்ல
மன்னவன் கோபமாக பார்க்க
மனைவியின் கண்ணீரில்
மனதை தொலைக்க.....தேவ்
மனதில் இருக்கும் காதலை
மறைக்காமல் நண்பனிடம் பகிர
முளிக்கும் ராஜ்...

மாப்பிள்ளையாக ராஜை கொண்டு வர
மணப்பெண்ணை மாற்றி
மண்டபத்தில் குழப்பம் செய்து
மகளை மணம் செய்து குடுக்க
மகள் ஶ்ரீ ராமை காதல் செய்ய
மாஸ்டர் பிளான் போடும் விமலா
மதுவை காதலிக்கும் ராஜ்க்கு
மயக்கம் வராத குறை.....

முடிச்சுக்கள் நிறைந்த பக்கம்
முன் நின்று தேவ்
முயன்று அழகாய் நேர்த்தியாய்
முயற்சிகள் செய்து
மகிழ்சியாக திருமணம் முடித்து
மூன்று குடும்பதிற்க்கும் சுபம் ...
Wowww thank uuu sooo mch sisssss
 

Rithi

Active member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
343
காற்றெங்கும் நின் வாசம்....

கல்யாணத்தில் சலசலப்பு
காணவில்லை மணப்பெண் அச்சு
கண்ணீருடன் ஒரு பெண் அபி
கலங்கமாய் உறவுகள்
காதலிப்பதாக பொய்கூறி அபியை
கைபிடிக்கும் தேவ் ஆனந்த்....

அத்தையின் படியில்
ஆனந்த் பேரில்
அபாண்டமாக பலி சுமத்த
அதை ஏற்ற தேவ்... தாங்காமல்
அவன் அம்மா கோபமாக செல்ல
அழையா விருந்தாளி போல
அபி புகுந்த வீடு போக.....

மனதில் பயத்துடன்
மிரண்ட மானாய்
மாடிக்கு செல்ல
மன்னவன் கோபமாக பார்க்க
மனைவியின் கண்ணீரில்
மனதை தொலைக்க.....தேவ்
மனதில் இருக்கும் காதலை
மறைக்காமல் நண்பனிடம் பகிர
முளிக்கும் ராஜ்...

மாப்பிள்ளையாக ராஜை கொண்டு வர
மணப்பெண்ணை மாற்றி
மண்டபத்தில் குழப்பம் செய்து
மகளை மணம் செய்து குடுக்க
மகள் ஶ்ரீ ராமை காதல் செய்ய
மாஸ்டர் பிளான் போடும் விமலா
மதுவை காதலிக்கும் ராஜ்க்கு
மயக்கம் வராத குறை.....

முடிச்சுக்கள் நிறைந்த பக்கம்
முன் நின்று தேவ்
முயன்று அழகாய் நேர்த்தியாய்
முயற்சிகள் செய்து
மகிழ்சியாக திருமணம் முடித்து
மூன்று குடும்பதிற்க்கும் சுபம் ...

அனைவரையும் அரவணைத்து பார்த்துக் கொள்ளும்
பவானி அம்மா
அவரின் அறிவுரைகள் ஆலோசனைகள் அனைத்தும்
அருமை....

ஆளுமையாக கங்கா
அம்மாவாக ஆனந்த் மேல்
அவரின் கோபம்
அதன் பின் சமாதானம்
ஆப்பு விமலாக்கு சூப்பர்....

தென்றலாய் ஒரு
காதல்....
காற்றெங்கும் உன் வாசம்
:)
 

Apsareezbeena loganathan

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
106
அட கடவுளே... எவ்ளோ பெரிய விமர்சனம் பண்ணி இருக்கேன் ஒரு ஸ்டிக்கரோட முடிச்சிட்டீங்களேப்பா 🤔🤔🤔🤔😱😱😱😱
 

Rithi

Active member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
343
அட கடவுளே... எவ்ளோ பெரிய விமர்சனம் பண்ணி இருக்கேன் ஒரு ஸ்டிக்கரோட முடிச்சிட்டீங்களேப்பா 🤔🤔🤔🤔😱😱😱😱
அயோ சிஸ் அதுக்கு மேல ரிப்ளை பண்ணிருக்கேன் பாருங்க
 
Top