• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

இலக்கணம் பிழையானதோ ..14

Samithraa

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 16, 2022
Messages
101
அத்தியாயம் ..14


ராமசாமி பேத்தியை அறைக்குள் அனுப்பிவிட்டு வெளியே வந்தவர், காளியப்பன் வரவதைக் கண்டு பதட்டத்துடன் வெளியே வந்து நின்றவர்க்கு இதயத்தில் சுருக்கென்று வலி தோன்றினாலும் , இவன் எங்கே வந்தான்:, என்ன கலாட்டா செய்யப் போறானா? என்ற பயமே அந்நேரத்தில் அவருக்குத் தோன்றியது.


அந்தப் பதற்றத்திலே வெளியே வேகமாக வர, வேலப்பனைத் தள்ளிவிட்டு உள்ளே வந்தக் காளியப்பன், ''ஏன் பெரிசு உன்கிட்ட பலமுறை சொல்லிட்டு போய்யும் உன் புத்தியை காமிச்சிட்டிலே'', என்று மறையாத குறைவாகப் பேச,


அதைக் கேட்ட ராமசாமிக்கு,'' காளிப்பா இன்று என் பேத்தியை பெண் பார்க்க வராங்க, இந்த நேரத்தில் இதுயென்ன கலாட்டா, இப்ப போய்ரு.. மற்றதை எல்லாம் அப்பறம் பேசிக்கலாம்'', என்று குரலில் மன்றாலோடு பேசிய ராமசாமியைக் கண்ட காளிப்பன் நக்கலாகச் சிரித்து,


''எனது உன் பேத்தியை பெண் பார்க்க வராங்களா, அது தான் நா வந்துட்டேனே.. அதுவும் தாலியோட, இந்த பாரு பதினாறு பவுன்ல தாலி வாங்குவாங்களா.. நா வாங்கிட்டு வந்துட்டேன் பாரு'', தாலிக் கொடியை எடுத்துக் காமித்துக் கொக்கலித்தவன், ''இன்னிக்கு வரேனு சொன்னவனை ஊருக்குள் நுழைற முன்னாலே தூரத்தில் விட்டாச்சு.. இனி எவனாவது பொண்ணு கேட்டு இந்த வாசற்படி ஏறினால் அரிவாள் வெட்டு தான்'',


''என்னை என்ன ஒன்றுக்கு உதவாத வெட்டிப் பையன் நினைச்சியா.. இந்த மில்லு என் கைக்கு வந்தாகணும், அதே மாதிரி உன் பேத்திக்கு நா தான் தாலி கட்டுவேன், வேறு எவனையும் கட்ட நினைத்தாலே வெட்டி விடுவேன்'', என்று கருணையற்ற அவனின் பேச்சில் எதுவும் செய்ய முடியாமல் தளர்ந்து போய் நின்றார் ராமசாமி.


அதுவரை தாய்ம்மா பிடியிலிருந்த சுகாசினியோ அங்கே இருந்த கதிர் அறுக்கும் அரிவாளை எடுத்தவள் விரைந்து கண் சிமிட்டும் நேரத்தில் காளிப்பனின் கழுத்தில் அதை வைத்து, ''என்ன மாமா பூச்சாண்டி காட்டிறீயா... வயசானவர்க்கிட்டே பேசறதவிட சொல்லத் விஷயத்தை என்கிட்ட நேரடியா சொல்லு'', என்று அரிவாளை கழுத்தில் நெருக்க,


அவளின் வேகமும், அரிவாளைப் பிடித்து இருக்கும் லாவகத்தைப் பார்த்தக் காளியப்பன் சிறிது மிரண்டாலும், தனக்குரிய திமிறால், ''என்னடி குட்டி துள்ளுற.. உன் கையை திருப்பு திருப்பினால் அரிவா என் கைக்கு மாறிவிடும் தெரியுமோ'',.. என்று சொல்லியபடியே அவளின் கையை விலக்க முயற்சிக்க,


பெண்ணாக இருந்தாலும் அவளின் பிடியிலிருக்கும் அரிவாளை அசைக்க முடியாது என்று உணர்ந்தவனுக்கு சிறு பயமும் இருக்க, அது அவன் கண்ணில் தெரிந்ததும்,


சுகாசினி சிறு சிரிப்பை உதிர்த்துவிட்டு, ''எனக்குத் தாலி கட்ட பதினாறு பவுன்ல வாங்கிட்டு வந்தேன் பெருமை பீத்துகிற, இத்துண்டு அருவாளைக் கண்டு மிரண்டு கிடக்கிற… நீயெல்லாம் என் தாத்தாவை மிரட்டுவீயா, இனி ஒரு தரம் ஏதாவது பண்ணினா ,அப்பறம் உன் உசிரு உனக்கு இல்லை '', என்று செல்லிய மெல்லியவளின் கரங்களோ வேகமாக அவனைத் தள்ளிவிட்டது.


ஆஜானுபாகுவாக இருந்தவன் சீறும் சிறுத்தையாக நிற்கும் பெண்ணின் முன் தோற்று தான் போனான். ஆனாலும் அதை வெளியே காமிக்காமல், ''என்ன பெரிசு சிறுசு துள்ளுது.. சொல்லி வை உன் பேத்திகிட்டே, இந்த அரிவாளை திருப்பி உன் கழுத்தில் ஒரே சீவு தான்'',.. 'அப்பறம் தலை சாய்த்து, மேலே காமித்து நாக்கை துருத்தி சைகை செய்தான்', காளியப்பன்..


அவனின் சைகையில் கோபத்தில் அரிவாளை உயர்த்திக் கொண்டு அவனை நோக்கிக் போனச் சுகாசினியை அடக்கிய ராமசாமி, காளியப்பனைப் பார்த்துத் ''தயவு செய்து போய்விடு'', என்று அவனிடம் கை கூப்ப ..


''என்ன தாத்து, அவனிடமெல்லாம் கெஞ்சிக் கிட்டு இருக்கீங்க, விடுங்க இன்னிக்கு அவனா நானா பார்த்துக்கிறேன்'', என்றவளிடம் கொஞ்சம் நஞ்சமிருந்த மரியாதை தலை தெறிக்க ஓடிவிட, தன் தாத்தாவை மிரட்டும் அவனை வெட்டிப் பொலி போட்டு விடணும் என்ற ஆவேசமே அதிகமாக இருந்தது சுகாசினிடம்…


காளியப்பனோ.. ''இங்கே பாரு குட்டி இன்று தாலி கட்டவில்லை என்றாலும், என்னிக்கா இருந்தாலும் இந்தத் தாலியை நா தான் உனக்குக் கட்டுவேன்.. வேறு எவன் வந்தாலும் அவன் தலை தப்பாது'',… என்றவன் ''ஏய் பெரிசு, உன் பேத்திகிட்ட சொல்லிவை.. ஏதோ அசந்த நேரம் பார்த்து என் கழுத்தில அரிவாளை வச்சிட்டா.. எல்லா நாளும் இதே மாதிரி இருக்காது ஞாபகம் வைச்சுக்கோ'', என்று மிரட்டிட்டு வண்டியை எடுத்துப் போக..


அங்கிருந்த அனைவருக்கும் சுகாசினியின் செய்கையும், காளியப்பனின் மிரட்டலையும் கண்டு சினிமா காட்சிப் போல ஒரே நொடியில் நடந்து முடிந்த காட்சிகளாயின.


ராமசாமியோ தொய்ந்து தன் இதயக்கூட்டில் ஏற்பட்ட குத்தலோடு, அப்படியே சாய, அவரை வேகமாக சுகாசினியும் வேலப்பனும் பிடித்துப் படுக்க வைத்த நேரம் தான் ரங்கநாயகி வந்தது .. அவர் வரும்போது காளியப்பன் வண்டியிலிருந்து மிரட்டி விட்டுச் சென்றதை கவனித்தவர், ராமசாமியின் அருகே விரைந்தார்


சுகாசினியோ தாத்தாவின் முகத்தில் தெரிந்த வலியை கண்டு அதிர்ந்து அழுகைக்குச் செல்ல, என்ன தான் வீரமாக மற்றவனிடம் பேசினாலும் தன்னை உயிருக்கு உயிரா வளர்த்துத் தாத்தாவின் வலியை தாங்கிக் கொள்ள முடியாமல் தவித்தாள்.


''எல்லாரும் விலகுங்க '',என்று சொல்லிவிட்டு காற்றாடியை அதிகமாகச் சுற்ற வைத்து ரங்கநாயகி அருகிலிருந்த தாயம்மாவிடம் ''கொஞ்சம் சுடுதண்ணீ எடுத்து வா, அப்படியே அங்கே அலமாரியிலே மாத்திரை இருக்கும் அதை எடுத்து வா'', என்று சொல்லியவர்,


''சுகா, சுகாசினி'', என்று அழுத்தமாக அழைக்க, கண்ணீரோட நிமிர்ந்தவள் ஆச்சி அவர் மடியைத் தேடி ஓடினாள்..


அவளைத் தட்டிக் கொடுத்தவர், ''டாக்டர்கிட்டே போகணும், அதற்குமுன் என் வீட்டில் என் பேரன் இருக்கான் அவனைச் சீக்கிரம் காரை எடுத்து வரச் சொல்லு'', என்றவரைத் திகைப்போடு நோக்கினாள் சுகாசினி.


அதைக் கண்ட ரங்கநாயகி ''இப்ப திகைச்சு நின்றால் வேலை ஆகாது, நீ போய் கூப்பிடு…,''அதற்குள் வேலப்பனும் மற்றவர்களும் தாத்தாவை மெதுவாக வெளியே தூக்கிட்டு வருவாங்க'', என்று சொல்லி ''விரசா ஓடு'', என்று அவளையை விரட்டினார்.


ரங்கநாயகியின் வீட்டுக்கு ஓடியவள் வீட்டிற்குள் சோபாவில் கால் மேல் கால் போட்டு அலைபேசியை பார்த்தபடி கம்பீரமாக அமர்ந்திருந்தவனைக் கண்ட பயமோ அதிர்வோ எதுவோ ஒன்று அவனிடம் நெருங்க முடியாமல் தடுத்தாலும் தாத்தாவை ஹாஸ்பிட்டல் அழைச்சிட்டு போய்யே ஆகணும் என்று இக்காட்டான சூழலை நினைத்து அவனிடம் மூச்சு வாங்க நிற்க,


தன் முன் சர்வ அலங்காரத்தோடும் கூந்தலில் பிரிந்த முடிகள் காற்றில் பறக்க மல்லிகையின் வாசம் அவள் வந்து நின்ற நிமிடத்தில் நறுமணம் வீசினாலும் சுகாசினியின் பதட்டமான முகத்தில் வேர்வை நீர் துளிகளாக மின்னிக் கொண்டிருக்க அதைப் பார்த்த ஒரு நிமிடத்தில் நிஷாந்தனின் முகம் மாறி உள்ளத்தில் ஒரு கலவையான உணர்வுகளின் மாற்றம் ஏற்பட்டாலும், அதைவிடுத்து என்னவென்று அவளைப் பார்க்க..


அவளோ திக்கித் திணறி.. ''அங்கே தாத்தா..,தா...தாத்தா'', என்று சொல்லிச் சைகை காமிக்க ,


அவனுக்குப் புரியவில்லை … ''என்ன விசயம்.. நீ சொல்ல வரது ஒண்ணும் புரியல.. ஆச்சி இங்கே இல்லை வெளியே போய்ருக்காங்க'', என்று சொல்லியவனை,


''அய்யோ ஆச்சி உங்களை கூட்டிட்டு வரச் சொன்னாங்க வாங்களேன்.. அங்கே என் தாத்தாவிற்கு'', என்றவளின் குரல் அழுகைக்குச் செல்ல..


என்ன உங்க தாத்தாவிற்கு? என்று கேட்டபடி எழுந்தவனின் கையை இறுகப் பிடித்தவள், வேகமாக தன் வீட்டை நோக்கிக் கூட்டிச் சென்றாள் சுகாசினி.


அவளை எது உந்தித் தள்ளியது அவன் கைகளைப் பிடிக்கச் சொல்லி என்று அவளுக்கும் புரிகிற நிலையில் அவள் இல்லை …


ஆனால் அவனோ அவள் தன்கையை பிடித்ததும் தன்னிச்சையாக விலக்கி விட முயன்றவனை திரும்பி ஒரு பார்வை பார்த்தவளின் கண்களிலிருந்த யாசிப்பில் தன்னுடைய இறுக்கமான மனநிலை மாறி அவள் பின்னால் தானும் போக…


அவள் ஓடும் அவளின் வேகத்திற்கு இவன் நடந்தே செல்ல, அங்கே அதற்குள் ராமசாமிக்கு மாத்திரை கொடுத்துக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திய ரங்கநாயகி அவரிடம் மெதுவான குரலில் சில விஷயங்களை சொல்லவும், அதிலே முகமும் மனமும் தெளிய ,


''ரங்கநாயகி நிசமாலும் இது நடக்குமா'', என்று கேட்டவரை,


''நடக்கும், நடத்தி வைக்கிறேன்'', என்று உறுதி கொடுத்த ரங்கநாயகி, தன் பேரனின் கையை பிடித்தபடி சுகாசினி ஓடி வருவதைக் கண்டு மகிழ்ச்சியில் அவரின் முகம் மலர்ந்து உவகையுடன் அக்காட்சியை ராமசாமியிடம் காமிக்க..


அவரோ சொல்ல முடியாத அளவிற்கு மகிழ்வில் அப்படியே படுக்கையை விட்டு விரைந்து எழுந்து அமர்ந்தார்.



தன் தாத்தாவின் முன் நின்றவள், ''ஹாஸ்ப்பிட்டல் போகலாம், வேலப்பா தாத்தாவை பிடி'', என்றவள் தன்கைகளை அவனுடைய கைகளிலிருந்து உருவிக் கொண்டு அவரைப் பிடிக்கப் போக, அவளின் தோள்பட்டையை பிடித்து ஒரு புறமாக மெதுவாக நகர்த்தியவன் தானே தன்னுடைய இருகரங்களால் தூக்கிக்கொள்ள முயல,


ராமசாமியோ ''வேண்டாம் தம்பி இப்ப நா நல்லாருக்கேன், என்றவர்.. உங்களை சின்னவயசிலே பார்த்ததுத்.. திரும்ப இப்ப தான் பார்க்கிறேன்… நல்லா இருக்கீங்களா, நீங்கள் வந்ததும் உங்களை தொந்தரவு கொடுத்துவிட்டேன் மன்னிச்சுடு தம்பி என்று குரல் தடுமாறிப் பேசியவர்க்கு பதிலளிக்காமல் '', திரும்பி சுகாசினியும் ரங்கநாயகியும் உறுத்து நோக்க,


அதில் ஒருயடி பின்னால் நகர்ந்த சுகாசினிக்கு அவனிடம் என்ன சொல்வது என்று புரியவில்லை.


தான் கூப்பிடச் சென்ற போது தன் தாத்தா இருந்தற்கும் இப்பத் தெம்பாக எழுந்து அமர்ந்து நல்லா இருக்கேன் சொல்வதையும் கேட்டபடி அவளும் திகைத்துப் போய் தான் நின்றாள்…


ரங்கநாயகியோ.. ''மாத்திரை கொடுத்ததும் அவர் நார்மல் ஆயிட்டாரு ராசா, நீ வா போகலாம் '',என்று பேரனின் கையைப் பிடிக்க,


அவனோ ''இது என்ன விளையாட்டா முடிலனா ஹாஸ்ப்பிட்டல் போகாமல் விளையாடிக் கிட்டு இருக்கீங்களா'', என்று முறைத்துப் பார்க்க, அவரோ ''மாத்திரை கொடுத்ததும் அவர் நார்மலுக்கு வந்துட்டாரு.. அதனால் தான் உனக்குத் தொந்தரவு தர வேண்டாம் என்று எண்ணி தான்.. என்று சொல்லிவிட்டு

'' வா ராசா போகலாம்'', என்று அவனைக் கூட்டிச் சென்றார்.


அவனின் மனமோ இவர்களே அவசரமென கூட்டிட்டு வந்துட்டுது, அவங்களே முடிவு பண்ணி வேண்டாம் என்று சொல்லியது அவனுக்கு ஒர்வித ஒவ்வாத தன்மை உண்டானது…. அதை விட அவளின் அலங்காரம் அவனுக்குக் கண்ணை உறுத்தியது.. காரணமறியாமல் கோபம் அவள் மேலே கீர்னு ஏறியது நிஷாந்தனுக்கு..



ஆச்சியின் வீட்டை நோக்கிச் சென்றவனைப் பார்த்தபடி நின்ற சுகாசினி தன் தாத்தாவின் அருகே அமர்ந்து அவர் தோளில் சாய அவரோ அவளைத் தட்டிக் கொடுத்து… ''என் வீராங்கனை பேத்தி இருக்கும்போது எமன் கூடப் பயந்து ஓடி விடுவான்'', என்று சொல்லி மெதுவாகச் சிரித்தார் ராமசாமி.


சிறு சிரிப்பும் அழுகையுடன் அவரைக் கட்டிக் கொண்டவளைப் பார்த்தத் தாயம்மா ''டேய், வேலப்பா இந்த அரிவாளை எல்லாம் தூக்கிப் பரணியிலே போடு.. இல்லை நம்மலயும் சீவிடும் சுகா'', என்று சொல்லிச் சிரிக்க அவ்விடமே சிறிது நேரத்திற்கு முன் இருந்த பயம் பதட்டம் எல்லாம் மறைந்து சிரிப்பொலி மட்டுமே கேட்டது..


அந்தச் சிரிப்பொலியில் முகம் கறுத்த நிஷாந்தன் தன் ஆச்சியிடம் கேள்வியோட பார்க்க, அவரோ ''வா ராசா எல்லாம் விசயமும் சொல்கிறேன்'', என்று அவனை அழைத்துச் சென்றார்.


ஆனால் நிஷாந்தனின் மனத்திலோ சுகாசினியின் பதட்டமும் அழுகையும், அடுத்த நொடி மாறிய சிரிப்பும் கண்டு பெண்களுக்கான நாடக மேடை மற்றவர்களின் முன் சட்டேன்று முக மாறி நடிப்பதும் வினாடிக்கு பலமுறையாக இருக்கிறது என்று நினைத்தவனுக்குத் தான் அவளைத் தவறாக யூகிக்கிறோம் என்று அறியவில்லை.


சுகாசினியோ தன்னை ஒருவன் தன்னுடைய மனதின் எண்ணங்களில் தவறாக சித்தரிக்கப்படுகிறோம் என்று அறியாமல் தன் தாத்தாவிடம் பேசிக் கொண்டிருந்தாள்.


நடக்கும் நிகழ்வுகளுக்குச் சூத்திரதாரி யாரென்று அறியாமலே இருவரும் அவரவர் நினைவில் மூழ்கினர் …


ரங்கநாயகி சொன்ன விசயத்தால் ராமசாமியின் மனம் திடம் பெற, இனி வருவதை தைரியமாகவே எதிர்க் கொள்ளலாம் என்று நினைத்தார்..


ஆனால் எதுவும் ஈஸியாக கிடைத்தால் அப்பொருட்களுக்கோ, இல்ல அந்த இடத்திலிருக்கும் மனிதனாக இருந்தாலும் மதிப்பின் தரம் குறைவாக இருக்கும் … அப்படி தரம் குறைந்தால் மரியாதை எங்கிருந்து வரும்…


கிடைப்பது சுலபமாக இல்லாமல் இருந்தால் தானே நல்லது .... கஷ்டப்பட்டு இஷ்டப்பட்டு கிடைக்கும் பேரன்பில் வாழ்க்கை நந்தவனமாக மாறி பூக்களால் நேசத்தை அள்ளித் தரும் பூவனத்தில் மலர்ந்த பூ மணம் பரப்பி ஆழ்நிலைக்குள் இருவரையும் ஆழ்த்தி காதலும் ஆசையும் மயக்கமும் கலந்த மனம் பேரன்பின் சாயலுக்கு அச்சாரமிடும்.......


அதற்காக அவர்கள் வாழ்வில் எவ்வளவு தூரம் போராட வேண்டும் என்பதை சுகாசினி உணருவாளா..இல்ல நிஷாந்தான் தான் உணருவானா…காலம் தான் அவர்களுக்கு உணர்த்த வேண்டும் .. ..


நிஷாந்தனின் மனம் தான் வந்த சேர்ந்த சில மணித்துளிகளில் நடந்தவற்றை யோசித்தபடி

ஆச்சியுடன் வீட்டிற்குள் வந்தவனுக்கு, வந்த போதே விட்டுச் சென்ற கோபம் இருக்க, இப்ப நடந்த நிகழ்வுகள் அவனின் உள்ளத்தை உறுத்த, ஆச்சியிடம் திரும்பி ''என்ன நடக்கது ஆச்சி இங்கே'', என்று கேட்டவனை,


அவன் அருகில் வந்தவரோ ''உனக்கும் சுகாசினிக்கும் நாளை காலையில் நம் குலத் தெய்வக் கோவிலில் கல்யாணம்'', என்று சொல்லிய ரங்கநாயகியை பார்த்து '' வாட்'', என்று கேட்டு எழுந்து நின்றான்..

தொடரும்..


ஹாய் ஹாய்.. மக்கா சர்ப்ரைஸ் யூடி உங்களுக்குக்காக படித்துப் பாருங்கள் 😍 😍 😍 😍 😍
20221216_155104.jpg
 

Joss uby

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
415
Woov... Surprise ud than.. Supr
 
Top