• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

இலக்கணம் பிழையானதோ ..16

Samithraa

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 16, 2022
Messages
97
அத்தியாயம்…16



ராமிசாமி தன் பேத்தியின் முகத்தில் விழுந்த கூந்தல் சுருளை விலக்கி விட்டவர் அவளிடம் தான் எதிர்ப்பார்க்கும் பதிலே அவள் சொல்வாளா? என்று ஆர்வமாகப் பார்த்தார் .


தாத்தாவின் அன்பான செய்கையும் அவரின் ஆர்வமான பார்வையும் கண்டு அவருக்கு சரி என்று சொல்லி விடத் தோன்றினாலும், அவளால் அதற்கு உடனே பதில் சொல்ல முடியாமல் எங்கோ வெறித்தபடி பார்த்தவளைக் கண்டு மனம் கலங்கிய ராமசாமி,"ஏன் கண்ணு?, கேட்டதற்குப் பதிலை சொல்லாமல் இருக்கே", என்றவரை நோக்கிய சுகாசினி ….


சிறிது நேரம் அமைதியாக அவரின் தளர்ந்த கரங்களைப் பிடித்தவள், "ஏன் தாத்தா நா உனக்குப் பாரமா இருக்கேனா?", என்று கேட்க,


அவரோ "என்ன தாயீ இப்படி கேட்கீர.. நீ எனக்குப் பாரமா.. கொடிக்குக் காய் பாரமாகுமா தாயீ",.. என்றவரின் வார்த்தைகளிலிருந்த வலியை உணர்ந்தாலும் சுகாசினி, "அப்பறம் ஏன் தாத்து அவ்வளவு அவசரமா கல்யாணம் பண்ணனும் நினைக்கீர..


''நீயும் ஆச்சியும், யாரோ முன்ன பின்னே தெரியாத ஒருவரைச் சொன்னீங்க.. பெயரோ ஊரோ எதுவும் கேட்கல.. நீங்க சொன்னீங்களே என்று தானே சம்மதம் சொன்னேன்.. ஆனால் என்னாச்சுப் பாருங்க.. என்னைப் பார்க்காமலே பயந்து ஓடிட்டாங்க… இப்ப நாளைக்குக் கல்யாணம்னு முடிவே பண்ணிட்டிங்க.. இப்பவும் நா யாரு மாப்பிள்ளை என்ன பண்ணறாங்க கூடக் கேட்கல.. நீங்க ஒரு வார்த்தை சொன்னாப் போதும் சரினு சொல்றேன் வச்சுக்கோங்க, அவக கல்யாணம் ஆனதும் ஓடிப் போய்யிட்டாங்கனா.. அப்ப மட்டும் காளியப்பன் வர மாட்டானா இல்ல மிரட்ட மாட்டானா",… என்று கேட்டவளுக்குப் பதிலைச் சொல்லமுடியாமல் தவித்த ராமசாமி…


"அவன் அந்த மில்லுக்காகத் தானே என்னைக் கட்டிக்கணும் நினைக்கிறான்.. நமக்கு மில்லே வேண்டாம் தாத்து.. அதை அவனுக்கே எழுதிக் கொடுத்து நாம் வேறு ஊருக்குப் போய்விடலாம்.. என்னாலே முடிந்த வேலையைச் செய்து உன்னைப் பார்த்துக்கிறேன்… இன்று ஒருத்தன் ஓடிட்டான்.. நாளைக்கும் ஒருத்தனா . எனக்கு நினைச்சாலே படபட வருது.. என்றவள்..


''உனக்காக என்ன வேண்டுமானலும் செய்வேன்.. ஆனால் இந்தக் கல்யாணம் மட்டும் வேண்டாம் தாத்து", என்று சொல்லியவளை என்ன சொல்லிச் சரிபண்ண என்று புரியாமல் ஓய்ந்து அமர்ந்த ராமசாமி..


சுகாசினின் பதிலை கேட்டுக் கொண்டிருந்த நிஷாந்த்க்கு என்னவென்ற புரியாமல் இருக்க, அங்கே ராமசாமி பேச ஆரம்பித்தார்..


"மில்லுக்காகவோ காளியப்பனுக்காவோ பயந்து நாளைக்குக் கல்யாணம் வைக்கல.. அதேமாதிரி இந்த மாப்பிள்ளை கல்யாணம் பண்ணிட்டு விட்டுவிட்டு போய்ருவாரோ கவலைப்பட தேவையில்லடா… எனக்கு நூறு சதவீதம் மாப்பிள்ளை மேல் நம்பிக்கை இருக்கு.. அவர் உன்னைத் தங்கமா தாங்குவாரு.. அதில் சந்தேகமில்லை மா. ஆனால் என் உடல்நிலை என்று எப்போது எப்படி ஆகும் தெரியாமலும் உன்னை அம்போ என்று விட்டுட்டுப் போய்விடுவானோ பயமா இருக்க தாயீ..


''காளியப்பன் மிரட்டி போனதலிருந்து என் மனம் தளர்ந்து போச்சு.. நா இருககும்போதே தாலியை எடுத்துக் கொண்டு வந்தவன்.. நாளைக்கு நானுமில்லை என்றால் உன் நிலமை என்ன ஆகும்.. என்று தவிப்பு அதிகமாக இருக்கு கண்ணு…

அதனால்தான் இவ்வளவு அவசரப்படறேன்.. புரிஞ்சுக்கோ தாயீ", .. என்று குரலில் மன்றாலோட கேட்க அவளோ தாத்தாவின் வேதனையான முகமும் தழுதழுத்த வார்த்தைகளில் உள்ள வலியும் உணர்ந்தவள், இனி என்ன ஆனாலும் சரி தாத்தாவுக்காக ஒத்துக்கணும் என்ற முடிவை எடுக்க…


அதைச் சொல்லு முன், ராமசாமி "மாப்பிள்ளை யாரு தெரிஞ்சா நீ வேண்டாம் என்று சொல்ல மாட்டாய்",.. என்று மாப்பிள்ளை பற்றி சொல்ல வர…,


"வேண்டாம் தாத்து… உங்களுக்குப் பிடிச்சிருந்தால் சரியாகத் தான் இருக்கும் அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு… உங்க பொண்ணு அவங்களுக்குப் பிடிச்ச மாதிரி கல்யாணம் பண்ணியதால் தானே நீங்க ஒதுக்கி வச்சிட்டு இன்று வரை அதை நினைச்சு வேதனை படுவது எனக்கும் தெரியும்.. நா அந்தக் கஷ்டத்தை உங்களுக்குத் தர மாட்டேன்.. நீங்க யாரை சொன்னாலும் நா கல்யாணம் பண்ணிக்கிறேன்", என்று சுகாசினி சொல்லியவள்,


''ஆனா கொஞ்சம் யோசித்துப் பாருங்க தாத்து, எனக்கு கொஞ்சம் டைம் கொடுக்கலாமலே.. இன்று காளியப்பன் வந்து இன்று செய்யதை ஜீரணிக்க முடியாமல் மனசு தடுமாறது.. இதில் அடுத்தது நேரடியாக கல்யாணம் என்றால் என்ன சொல்லவது? எனக்கு யோசிக்கவே அவகாசம் இல்லாமல் போலத் தோனது தாத்து"… என்று சொல்லிய சுகாசினி ராமசாமியின் முகத்தைப் பார்த்தும் மனதினுள் ஏதோ திக்கொன்று ஊசியால் குத்தியது போல இருந்தது ..


தன்னைப் பார்த்ததும் அவரிடம் இருக்கும் சிரிப்பு இப்போ எங்கோ மறைந்துவிட்டது போல வலியும் வேதனை மட்டுமே அதிகமாக இருக்கவும் அவளுள் ஏதோ சொல்ல தெரியாத ஒன்று மனசை பிசைந்தது


சுகாசினி பேசுவதைக் கேட்ட படி நின்ற நிஷாந்தனுக்கு அவளைப் பற்றி நினைத்து பெருமிதம் கொண்டானா .. இந்தக் காலத்திலும் இப்படியும் பெண்கள் இருக்கிறார்களா என்ற எண்ணம் தோன்றியது ஆனால் இவள் தாத்தாவிற்காகத் தன்னைக் கல்யாணம் செய்துக் கொள்ள நினைக்கிறாளோ.. எனக்கா இல்லையோ என்று நினைத்தவன் மனது சிறிது சஞ்சலமுற்றது.., ஆனால் அவளுக்கு யார் மாப்பிள்ளை என்ரே தெரியாது என்பதை அந்நொடியில் மறந்தான்..… அவனின் மனம் என்ன வேண்டும் எதிர்ப்பார்க்கிறது.. அவள் சரியென்று சொன்னால் தனக்கும் ஒகேனு அர்த்தமா.. என்று அவனுக்கு உள்ளத்தில் அலையலையாக மகிழ்ச்சியா என்று எதும் என அறியாமலே ஒரு பொறுப்பும் பிடிப்பும் உருவாகியது..


ராமசாமியோ தன் கண்களை துடைத்துக் கொண்டு ''என் ராசாத்தி உன் மனம் போல மாங்கலயம் அமையும் தாயீ.. உனக்குப் பிடிக்காதே எதுவும் நா செய்ய மாட்டேன்'',.. என்றவர்,


''உன்னை வற்புறுத்தி தான் இதைச் செய்யணும் நினைத்தால் வேண்டாம் நானே சொல்லிருவேன்… ஆனால் என் மனசில் இந்த மாப்பிள்ளை கட்டிக்கிட்டா ரொம்ப சந்தோஷமாக இருப்பேன் தோனது.. இழப்புகளால் தளர்ந்த மனங்களுக்கு ஒரு துளி அன்பால் ஈடு செய்ய வாழ்வின் நீரோட்டமும் செழிப்பாக இருக்கும்… இதை உனக்காக மட்டும் நா யோசிக்கல தாயீ… எனக்கு வரப் போகிற மாப்பிள்ளைக்காவும் யோசிக்கிறேன்'',…என்று ராமசாமி சொல்வதைக் கேட்ட சுகாசினியை விட அதிர்ந்தான் நிஷாந்தன்.


தனக்காக ஒரு ஜீவன் யோசிப்பதைக் கண்டவனுக்கு இரும்பால் செய்த இதயக்கூட்டில் ஒரு துளி தேன் தடவியதுப் போல தித்தித்தது…. அவனோ ராமசாமியைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்க..


சுகாசினியோ ''என்னை விடப் புதுசா பார்க்கிற அவர் மேலே பாச ஊற்றாக பெருகுதே தாத்து .. என்ன விசயம்.

எனக்குத் தெரியாமல் இருவரும் எதும் டீல் போட்டு இருக்கீங்களா'', கேட்டு சட்டென்று சிரித்தவள், ''ஆனா தாத்து நா அரிவாளை இன்று தூக்கினதை புதுசா வர மாப்பிள்ளைக்கிட்ட கொஞ்சம் லேசுபாசா சொல்லிட்டிங்களா, இல்ல புதுசா பார்த்தால் அவகளும் பயந்து பின்னாங்கால் பிடரி பட ஓடிப் போயிற போறாங்க '',.. அந்த நேரத்திலும் அவளின் பேச்சில் ஆர்ப்பாட்டம் நிறைந்திருக்க.. அதைக் கண்ட ராமசாமிக்கு உள்ளம் குளிர்ந்தாலும் சிறு நெறுடலும் உண்டானது..


நிஷாந்தனோ பிடிச்சப் பிடிவாதமாக உடும்பு பிடியில் நிற்பவனுக்கு, அருவியாய் ஆர்பாட்டமாகக் குறும்பு கொப்பளிக்க இருப்பவளை கட்டி வைப்பது ஆண்டவனின் சித்தம் போல என்று எண்ணிய ராமசாமி ''நீ எப்பவும் இதே சிரிப்பு வாடாமல் இருக்கணும் தாயீ '',என்று சொல்லி சுகாசினின் தலையை வருடிவிட்டவரைப் பார்த்துச் சிரித்த சுகாசினி,


''உங்க திடீருனு எங்கிருந்தோ குதிச்ச மாப்பிள்ளையிடம் என்னைப் பற்றி சொல்லி வைங்க'', என்று சொல்லியவள், ''இன்னொரு விசயம் நா எங்கே இருக்கேனோ அங்கே நீயும் இருக்கனும் அவ்வளவு தான்'', என்று சொல்லியவள், ''ஆமாம் இந்த ஆச்சி எங்கே காணாம்.. அவக பேரன் வந்திருக்காங்கனு ஓடிப் போயிருச்சு..பாரேன் தாத்து'', என்று சொல்லியவளை கண்டவர்,


''அந்தப் பையன் எப்போவோ ஒரு முறை வருகிறான்.. அதனால ஆச்சி போயிருக்கும் .. இனி அடிக்கடி வர இருப்பாக'', என்று எதையும் உடைத்துச் சொல்லாமல் பூடகமாகச் சொன்னவர் ..


''இங்கே பாரு தாயீ மனசிலே எதையும் போட்டுக் குழப்பிக் கொள்ளாமல் நல்லதே நினைக்கலாம் கண்ணு.. நீ நாளைக்கு வெள்ளேனே எந்திருக்கணும், மற்ற வேலை எல்லாம் பார்க்க வேலப்பனை வரச் சொல்லிருக்கேன்.. நீ முகத்தை மலர்ச்சியா வச்சுக்கோ'',.. என்று சொல்லிவிட்டு ''வா கண்ணு உள்ளே போலாம் '',என்று சொல்ல ..


''அவளோ நா மலர்ச்சியா இருக்கேனோ இல்லையோ திடீர் மாப்பிள்ளை நினைச்சா தான் எனக்கு லேசா கண்ணு கலங்கது'', என்று வராதா கண்ணீரை துடைப்பது போல செய்துக் கலாய்க்க, அவரோ ''வாலு'' என்று சொல்லியவர் பேத்தியுடன் தன் வீட்டிற்க்குள் போனார்.


ஆச்சி வீட்டிலிருந்து இதை கவனித்த நிஷாந்தன், அவளை விட அவனுக்கு அவளுடைய தாத்தாவை பிடித்தது. பார்த்துப் பழகாத ஒருத்தர் தன்னைப் பற்றிய கணிப்பை நினைச்சு ஆச்சரியப்பட்டு நிற்க, அப்போது ரங்கநாயகியோ உள்ளே கூப்பிட்டார்,


அவரின் அழைப்பின் பேரில் உள்ளே சென்றவன், ஆச்சியின் அருகில் அமர அவரோ ''என்ன கண்ணு முடிவு பண்ணிருக்க'', என்று கேட்டவரை உற்றுப் பார்த்தவன், ''ஏன்? ஆச்சி நீங்க சொன்னீங்களே நா சரி சொல்ல முடியுமா'', .. என்று கேட்க அவரின் முகம் வாடிப் போயிற்று.


''இல்ல கண்ணு, பொண்ணு நல்ல பொண்ணு குணமும் தங்கம் அது தான்'', என்று தயங்கிப் பேசுபவரைக் கண்டு


''தங்கத்தை உரசிப் பார்த்தீங்களா'', என்று சுருக்கென்று கேட்டவன், ''நா இன்று வந்தே இருக்கக் கூடாது'', .. என்று சொல்ல..


''என்ன ராசா இப்படி படக்னு சொல்லிட்டா'', என்று கேட்டவரின் குரலிலிருந்த வலியை உணர்ந்தவன், ''இத்தனை வருடங்களாக எனக்கான முடிவை நானே எடுத்துத் தான் பழக்கம்'', என்று அழுத்திச் சொல்லியவன்,


''இது வாழ்நாள் பந்தம், அவசர அவசரமாகப் பண்ணிவிட்டு நாளைக்கு ஆளுக்கொரு திசையில் நிற்க கூடாது ஆச்சி'', என்று அவருக்குப் புரிகிறது மாதிரி சொல்ல,


அவரோ சட்டென்று ஒரு ஐடியா தோன, ''நீ வேணா சுகாசினிடம் ஒரு முறை பேசு… உனக்குத் தான் ஆளைப் பார்த்தாலே எடைப் போடுகிற திறமை இருக்கே அதனால சட்னு நீயே புரிஞ்சுக்கவே'', என்று சொல்ல,


தன்னை எப்படியாவது இந்தப் பந்தத்தில் இழுத்துவிட வேண்டும் என்று நினைக்கும் ஆச்சியின் ஆர்வத்தைப் பார்த்தவன், அதற்குப் பதில் சொல்லாமல், சுகாசினி வீட்டின் நிலவரத்தை விசாரித்தான்.. ஏன்னென்றால் ராமசாமியும் சுகாசினி பேசியது சிலது புரியாதால் அதைக் கேட்க,


அவரோ காளியப்பனைப் பற்றி சொல்லிவிட்டு ''அதைவிடு ராசா நீ சுகாசினியிடம் பேசீறியா'', என்று கேட்க


''எங்கள் இருவருக்கிடையே நீ என்ன மீடீயேட்டரா'', என்று கேட்க,


'''என்ன ராசா இப்படி சொல்லிட்டே'', என்று முகம் வாடியவரைப் பார்த்தவன், '' அதை விடுங்க ஆச்சி, பணம் பிரச்சினை என்றால் நம்ம தீர்த்து வைத்து விடலாம்'', என்று தான் சொல்ல,


அவரோ ''பணமனா நா கொடுக்க மாட்டேனா.. இங்கு அவருடைய பேத்தி வாழ்க்கை தான் கேள்வி குறியா நிற்கது, இன்று வந்தவங்க உங்க அப்பா சொன்ன ஆட்கள் தான், அவர்களை ஊர் எல்லையிலே காளியப்பன் விரட்டி விட்டுடான்.. இப்படியே விட்டால் வருகிற எல்லாரையும் துரத்தி விட்டால் அந்தப் பெண்ணின் வாழ்க்கை அந்தரத்தில் தான் தொங்கும் அதுக்காகத் தான் இந்தத் திடீர் ஏற்பாடு'', என்று சொல்ல,


''உன் மகன் செய்த வேலைக்கு என் வாழ்க்கையை உள்ளே நுழைச்சு அதைச் சின்னபின்னமாக்குவதே உன் வேலையா போச்சு'', என்று சிறு சிரிப்புடன் சொல்லியவனுக்கு, ஏனோ ராமசாமியின் அன்பான பேச்சும் அவளின் குறும்புதனமான பேச்சும் அவன் மனத்தை கொஞ்சம் இலகுச் செய்ய தனக்கும் இப்படி பேச வரும்போல என்று எண்ணியவன், இவளோட..சேர்ந்தால் தானும் மாறிவிடுவேன் போல என்ற எண்ணியவன்,


''எனக்கு சுகாசினியோட பேச நேரமில்லை, ஆனால் அதற்கு முன் முக்கியமான ஒரு வேலை இருக்கு, அதைச் செய்திட்டு வந்தரேன்'',.. என்றவன், ''உன் இஷ்டம் போல இக்கல்யாணத்திற்கு வாக்கு கொடுத்திருக்க, அதுபடியே நடக்கட்டும்'', மறைமுகமாக சம்மதம் சொல்லியவன், '' நீங்க அந்த வேலப்பனை வரச் சொல்லு ஆச்சி'', என்று நிஷாந்தன் சொன்னான்.


தன் பேரனின் சம்மத்ததைக் கேட்டு மகிழ்ந்தவர், ''அவன் எதுக்குக் கண்ணு'', என்று கேட்க,


அவனோ ''உன்ர பேத்தி அருவாளை கழுத்தில் வைச்சு விரட்டினால் தானே, அவன் கழுத்து நல்ல இருக்கா… உசிரோட இருக்கானா பார்க்கத் தான்'', என்று சொல்லியவனை,


தன் தாவாங்கட்டையில் கை வைத்த ரங்கநாயகியோ, ''இதென்ன கூத்து'', என்று அதிசயிக்க, அவனோ ''இதை அவளிடமோ ராமசாமிடம் சொல்ல வேண்டாம்'', சொல்லிவிட்டு வெளியே கிளம்பினான்… அவனின் வேகத்தைப் பார்த்த ரங்கநாயகி இவன் ஏன்? தொழிலில் இவ்வளவு வேகமாக வளர்ந்தான் என்று புரிந்தது.


பிரச்சினைக்கு மூலக்காரணம் யார்? என்று தெரிந்து அதை விலக்கி விட்டாலே மற்றவை சரியாக நடக்கும் என்பதை தானும் உணர்ந்து இருந்த ரங்கநாயகி தன் பேரனும் அதை நொடியில் தீர்க்கக் கிளம்பிட்டானே என்று நினைத்துவர், தன் பேரன் கல்யாணத்திற்குச் சம்மதம் சொல்லிவிட்ட மகிழ்ச்சி செய்தியைத் தன் மகன் மகேந்திரனுக்குச் சொல்லப் போன் பண்ணினார்.


''நாளைக்குக் காலையில் நிஷாந்தனுக்குக் கல்யாணம் எல்லாரையும் கூட்டிட்டு வா'', என்று சொல்லியவர்...
20221216_155104.jpg
பொண்ணு யார் எவரு? என்று போனை வைத்து விட்டார்…


அடுத்து அடுத்து மளமளவென்று காரியம் ஆக திடீர் மாப்பிள்ளையான நிஷாந்தனுக்கும் சுகாசினிக்கும் டும்ம்டும்..கல்யாணமாம் கல்யாணம்

ஊரெல்லாம் கொண்டாட்டாமா....


தொடரும்..

ஹாய் ஹாய் அடுத்த அத்தியாயம் பதிவு பண்ணிருக்கேன் மக்கா படித்துப் பாருங்கள் 😍 😍 😍 😍 😍
 

Joss uby

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
415
Arumaiyana ud sis..
keep rocking
 
Top