• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

இலக்கணம் பிழையானதோ ..17

Samithraa

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 16, 2022
Messages
101
அத்தியாயம் ..17


விடியற்காலையில் பிரமம் மூர்த்தத்தில் ஐயர் மந்திரம் சொல்ல கோவில் சன்னதியில் நிஷாந்தன் சுகாசினியின் கழுத்தில் தாலி கட்ட அந்த நொடியில் இருவரின் மனதிற்குள் ஓடிய எண்ணங்களுக்கு வடிவம் கொடுக்க இயலவில்லை..


நடப்பது எல்லாம் கனவா நிஜமா என்று அறியாத கண்ணோட்டத்தில் சுகாசினி இருக்க, நிஷாந்தனின் மனமோ எங்கோ அலைபாய்ந்து ஓடிக் கொண்டிருந்த நீரோட்டம் கடலில் வந்து கலந்த நிலை ..


அவனின் வாழ்க்கையில் எப்பவும் அவனுள் ஒரு வெற்றிடமும் வெறுமையும் குடிக் கொண்டிருக்கும்…


இன்று அது எல்லாம் இல்லாமல் தனக்கே தனக்காக ஒருத்தி தன் வாழ்க்கையில் வந்து இருப்பது அவனுக்குள்ளும் அதை எப்படி விவரிப்பது என்று அறியாத மனநிலையில் இருந்தான்…


பல தொழில்களை வழி நடத்துபவனாக இருப்பால் தன் முகத்தில் தோன்றும் உணர்வுகளை மறைத்துக் கொண்டு நிற்பது ஒன்றும் புதியது அல்ல...


அப்போது நிஷாந்தனின் கையில் ஐயர் தாலியை எடுத்துக் கொடுக்க அவன் முன் தலை குனிந்து நின்றவளின் கூந்தலின் அடர்த்தி மட்டுமே தெரியேவே நிமரமாட்டாளா இவள் என்று தோன்றிய உடனே தாலியைக் கட்டாமல் அவள் கழுத்தின் அருகே சென்ற கரங்களோ அப்படியே அந்தரத்தில் நிற்கவும், குனிந்து நின்ற சுகாசினிக்கோ என்ன இன்னும் தாலிக் கட்டி முடிக்கலயா என்று தோன்றிய உடன் அவனை நிமிர்ந்து பார்த்தவளுக்கு.., அவன் கண்கள் சொன்ன சேதியை நம்ப முடியாமல் மீண்டும் தலை குனிந்து விட எல்லாருடைய கைகளியிலிருந்த மஞ்சள் கலந்த அரிசியும்,பூவும் கலந்த அட்சதையை அவர்கள் மேலே தூவ கடவுளின் ஆசியும் அன்புடன் பாசத்துடன் வளர்த்த ஆச்சி, தாத்தாவின் ஆசீர்வாதத்துடன் அவளின் கழுத்தில் மஞ்சள் கயிற்றில் கோர்த்த மாங்கலயத்தைக் கட்டினான் நிஷாந்தன். அங்கே பெரியோர்கள் முடிவால் முகமறியாதவர்களாக இருவரும் திருமணம் என்னும் பந்தத்தில் அடியெடுத்து வைத்தனர்.


நிஷாந்தனின் தாயின் தாலியை இத்தனை வருடமாகப் பத்திரமாக வைத்திருந்த ஆச்சியோ அதை மஞ்சள் கயிற்றில் கோர்த்துக் கொடுக்க இவள் தான் தனக்கானவள் என்று எண்ணி அவளின் கழுத்தில் கட்டித் தருணத்தை அனுபவித்தவன், இத்தனை வருடங்களாக யாரும் தன்னை நெருங்க விடாமல் இருந்தவனுக்குத் தனக்காக ஒருத்தி வந்து விட்டாள் என்பதை நினைத்து மனதினுள் பரவசமாக இருந்தது. அவனின் உணர்வுவினையும் அக்கணங்களை தனக்குள் சேமித்து வைத்துக் கொண்டான்….


என்றுமே எதுக்கும் ஆசைப் படாதவனின் வாழ்க்கையில் புத்தம் புது மலராக மலர்ந்து அவனின் வாழ்க்கையில் மணம் வீச சுகாசினி அவன் நெஞ்சாங்கூட்டில் அடியெடுத்து வைத்தாள் மானசீகமாக ..


அதை உணர்ந்த நிஷாந்தனுக்கு அக்கூஷணத்தை எவ்விதம் உணரவது என்று அறியாமல் இருந்தவனுக்கு, நேற்று நடந்த நிகழ்வுகள் அவன் முன் காட்சிகளாயின..


ஆச்சியிடம் சொல்லிவிட்டு வேலப்பனை அழைத்துக் கொண்டுக் காளியப்பனைப் பார்க்கப் போனவன்.. காளியப்பனோ தோட்ட வீட்டில் பட்ட சாராயத்தைக் குடித்து புல் மப்புல இருப்பதைக் கண்டவனுக்கு அப்படியே அவனைத் தூக்கிப் போட்டு மிதித்தால் என்ன என்ற ஆத்திரம் தலைக்கேறியது..


ஆனால் இப்பக் கோபம் பட்டு காரியத்தைக் கெடுத்துக் கொள்ள கூடாது என்று எண்ணி அவனிடம் ஆக வேண்டிய வேலைகளை முன்னிறுத்தினான் நிஷாந்தன் ..


ஆச்சிடம் வரும்போதே பேசிய விசயங்களை வைத்துத் தனக்குத் தேவையானதை தன் வக்கீல் மூலமாக ஏற்பாடு செய்ய.. அவரோ அதற்காக பக்கத்து ஊரிலிருந்து வக்கீலை உடனேஅனுப்பி வைத்தார்..


எப்போவும் இருக்கமிடத்திலிருந்து எந்த வேலையும் நடக்கும்படி அமைத்துக் கொள்வது தானே கைதேர்ந்த தொழிலதிபர்களா முன்னேற முடியும். அதில் கில்லாடி தான் நிஷாந்தன் ..


அதனால் தான் முக்கியமான நேரத்தில் தன் வாழ்க்கையை கோட்டை விட இருந்து பின் அதைத் தன் கைக்குள் கொண்டு வந்த வித்தையை செய்தது அவன் மட்டுமே அறிந்த ரகசியம்..


தன் கைகளிலிருந்தப் பத்திரத்தில் காளியப்பனிடம் கையெழுத்து வாங்கியவனோ காளியப்பனின் கன்னத்தில் நாலு அறை வைத்து இனி சுகாசினிக்கோ , இல்ல ராமசாமிக்கோ தொந்தரவு கொடுத்தால் அடுத்த அதிரடி போலீஸ் ஸ்டேஷன் தான் என்று மிரட்டிவிட்டு வந்தவனை ஆச்சரியமாகப் பார்த்த வேலப்பனை நோக்கி மெல்லிதாகச் சிரிக்க....


''என்ன அப்படி பார்க்கீரே வேலப்பா'', என்று கேட்டபடி காரை ஓட்டியவன்.. ''இப்ப இங்கே நடந்த எதையும் யாரிடமும் சொல்லக் கூடாது'', என்று சொல்லிவிட்டு அவனையும் அழைத்துக் கொண்டு தன் ஆச்சி வீட்டிற்கு வந்து விட்டான் நிஷாந்தன்.


அவனுடைய செயல்கள் எல்லாம் அதிரடியாக தான் இருக்கும் . அது புதியதாகப் பார்க்கும் வேலப்பனுக்கு ஹீரோ கணக்காக இருக்காரே .. நம்ம சுகாசினிக்கு ஏற்ற மாப்பிள்ளை தான் என்று சந்தோஷத்தில் அவனுக்குத் தலைகால் புரியாமல் இருக்க ..


இத்தனை நாட்களாக ராமசாமியை குடைச்சல் கொடுத்து வந்தவனை ஒரே நொடியில் அடக்கிவிட்டு வந்த நிஷாந்தனைக் கண்ட வேலப்பனுக்குப் பிரமிப்பாகவும் இருந்தது.


ஆனால் அதை வெளியே சொல்லக் கூடாது என்று சொல்லியதால் தனக்குள்ள அவனைப் பாராட்டிக் கொண்டு கொண்டாடியவன்… அவர்களின் கல்யாணத்தில் எள் என்று சொல்லுமுன் எண்ணெயாக நின்று எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்தான்.. இல்லை என்றாலும் செய்வான் தான்.. ஏன் என்றால் சுகாசினி என்றால் அவ்வளவு பிரியம் வேலப்பனுக்கு…


ஆனால் மணப்பெண்ணான சுகாசினிக்கு காலையில் யார் எவர் என அறியாமலேயே கல்யாணத்திற்கு ரெடியாக.. அங்கே பட்டு வேட்டி சட்டையில் வந்து நின்ற நிஷாந்தனைப் பார்த்ததும் சுகாசினிக்குப் புரிந்து விட்டது .. இதுயெல்லாம் ஆச்சியின் கையங்காரியம் என்று…


அப்பொழுதை அவள் மௌனமாக நடப்பதைப் பார்த்துக்கொண்டும் சொல்வதைச் செய்தபடி இருந்தாள் .. அன்றைய பொழுது அவள் மற்றவர்களின் சொல்லுக்கு மறுச் சொல் சொல்லாமல் நடந்தாள்…


மெரூன் வண்ணத்தில் பட்டுத்தி நீண்ட கூந்தலில் மல்லிகை சரம் சரமாகத் சூடிட.. கைகளில் மெரூன் கலர் கண்ணாடி வளையல்கள் அணிந்திருக்க.. கழுத்தில் ஒரு ஜெயின் மட்டும் அணிந்திருந்தவளின் கழுத்தில் புதியாத மஞ்சள் கயிற்றில் தாலி கட்டியதும் அவளுக்கு அது அழகு மேல் அழகு சேர்க்க,அதைப் பார்த்த ராமசாமிக்கு நிலை கொள்ள முடியவில்லை .. தன் பேத்தியின் அழகை காண காண.. தன் மகளே நேரில் நிற்பதைப் போல பூரித்துப் போய் கிடந்தார்....


இரவு ரங்கநாயகி பேரனின் கல்யாணத்திற்குச் சொன்னதும் நிஷாந்தனின் அப்பாவானா மகேந்திரனும் ராஜலட்சுமி மட்டுமே கல்யாணத்திற்கு வந்திருக்க..,


மகேந்திரனோ தன் மகனின் கல்யாணத்திற்கு எதுவும் செய்ய முடியாமல் ராஜலட்சுமி அவரை வறுத்தெடுக்க, அவரோ முள் மேல் நிற்பதைப் போல நின்றார். இரவு சொன்ன தாயைக் கோவித்துக் கொள்வதா.. இல்லை மனைவியின் கேள்விக்கு.. யார் பொண்ணு? எதுவும் தெரியாத இந்த அவசரக் கல்யாணம் எதுக்கு? என்று ராஜலட்சுமியின் பேச்சை கேட்டுப் பதிலளிக்க முடியாமல் நிற்க..


தன் முதல் மகனின் கல்யாணத்தில் யாரோ போல நிற்கும் சூழ்நிலையை கொடுத்த தன் தாயையும், ராஜலட்சுமியும் கண்டு மனதிற்குள் கோபம் கொந்தளித்தாலும் எப்பவும் போல ஒன்று செய்ய இயலாமல் மண் பொம்மையாக நின்றார்.


ராஜலட்சுமிக்கு, இந்தத் திடீரென்று கல்யாணத்தைப் பற்றி அறிந்தலிருந்து ரங்கநாயகியின் மீது அடக்க முடியாத ஆத்திரமும், இதற்குச் சம்மத்தித்த நிஷாந்தனின் மீது கோபமும் கனன்றது.. அவளுடைய எண்ணமே வேறு ..


ஆனால் அதை அடியோடு மாற்றியதால் எப்போது அவ்விடத்தைவிட்டுக் கிளம்புவோம் என்ற எண்ணத்தில் நெருப்பு மேல் நிற்பது போல நின்று கொண்டிருந்தவள், தாலிக் கட்டிய அடுத்த நொடியில் மகேந்திரனை அழைத்துக் கொண்டுச் சென்று விட்டாள் ராஜலட்சுமி ..


ஆனால் இதை எல்லாம் கவனித்த நிஷாந்தனுக்குத் தன் தந்தையின் நிலையை எண்ணி வருந்தினாலும் தாய் தந்தையாக நின்றவர்களின ஒதுக்கத்தை இன்னும் இருந்து ஒவ்வொரு நொடியும் காமிப்பதை விட சென்ற விட்டதே பரவாயில்லை என்றே தோன்றியது..


ஆனால் ரங்கநாயகி அதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தனக்குரிய சந்தோஷமான நிகழ்வுகளான பேரனின் கல்யாணத்தை நடத்திய திருப்தியில் வயதுக் மீறிய ஆர்பாட்டத்துடன் இங்குமங்கும் அலைந்தார் ..


ராமசாமியோ எங்கே காளியப்பன் வந்து விடுவானோ என்ற பதட்டமும் இருந்தால் தாலிக் கட்டும் வரை பயத்துடன் இருந்தவர் வேலப்பன் அவரிடம் நிஷாந்தனின் செய்கையை மறைக்காமல் சொல்லிவிட அவரின் மகிழ்ச்சி இருமடங்காகப் பெருகியது ..


தன் பேத்தியை பொறுப்பான ஒருவரிடம் ஒப்படைத்தத் திருப்தி முகத்தில் தெரிய, பல நாட்களாக இருந்த மனயுளைச்சல் இன்று தீர்ந்து விட்டது என்று நிம்மதி அவரின் முகத்தில் தெரிய.. அதன்பின் அவரின் மனநிலை மாறி அடுத்த வேலைகளைப் பார்க்க வேலப்பனை அழைத்துச் சொல்லிவிட்டு, தன் வீட்டுக்குச் சுகாசினியும் நிஷாந்தனையும் அழைத்துக் கொண்டுச் சென்றார்.


ஆனாலும் மனதினுள் சிறு வருத்தம் மகேந்திரனையும் ராஜலட்சுமியும் நினைத்தது.. ஆனால் ரங்கநாயகியோ ''இதுயெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாதீங்க'', என்று சொல்லியவர், மாப்பிள்ளை பொண்ணும் வருவதற்குள் வீட்டில் சென்று மற்ற ஏற்பாடுகளை செய்தார்.


நிஷாந்தனின் காரில் முன்பக்கம் சுகாசினி அமர பின்னால் ராமசாமி அமரவும் மாப்பிள்ளை பந்தா இல்லாமல் அவனே காரை ஓட்ட, ராமசாமி வீட்டின் முன் கொண்டு நிறுத்தி இறங்கினான்..


காரினுள் ஏறி தன்னருகில் பதுமையாக அமர்ந்திருந்த சுகாசினியைப் பார்த்து அவனுக்குள் ஆச்சரியம் .. பயங்கரமாக வாயடிப்பாள் என்று வேலப்பன், ஆச்சி சொல்லிருக்க, தானும் அதைக் கண் கூடாகக் கண்டவனுக்கு அவள் பேசாமடந்தையாக இருப்பது கண்டு அவளுக்குள் என்ன ஓடுகிறது என்று அறிய முடியவில்லை ..


எப்பவும் பெண்களின் மனதினுள் ஓடும் நுண்ணுருணர்வுகளை அவர்களை தவிர யாரும் கண்டு பிடிக்க முடியாது .. அதுவும் நிஷாந்தனுக்கு புரிய எத்தனை நாட்களாக வருடங்களாக ஆகும் என்று தெரியாது..


ஏன்னென்றால் அவன் தாய் பாசம் அறியாமல் பெண் என்றாலே ஒதுங்கிப் போகும் சூழ்நிலையை உருவாக்கிய ராஜலட்சுமியால் என்பதால் அவனுக்குச் சுகாசினி ஏன் இப்படி அமைதியாக இருக்கிறாள்? என்று புரியாமல் இருக்க, இவள் தன்னைப் பிடித்துத் தான் கல்யாணம் செய்தாளா இல்லை அவளுடைய தாத்தாவிற்காக செய்தாலே,எனறு தோன்ற இதற்கான விடையை அவளிடம் கேட்க வேண்டும் என்று ஆவல் தோன்றியது..


அவனுக்கும் தெரியவில்லை .. அவள் யாரை மாப்பிள்ளை என்று ராமசாமி கை நீட்டினாலும் சரி என்று சொல்வாள் என்று… அதை முன் தினம் அவள் தாத்தாவிடம் பேசும்போது கேட்டவனுக்கு அது எல்லாம் மறந்தும் போனது அந்த வினாடி....


தாலி கட்டிய அடுத்த நொடியிலிருந்து தன் எண்ணத்தின் பிரதிநிதியாக அவளும் இருக்க வேண்டும் என்று மட்டுமே தோன்ற.. அவனுள் சிறு கோபம் எழ.. காரை விட்டு இறங்கியதும் வீட்டினுள் போக இருந்தவனை நிறுத்திய ஆச்சி இருவருக்கும் ஆலம் சுற்றி உள்ளே அழைத்துச் சென்றார் ..


சாங்கியம் சம்பிராயதமாக அவர்களுக்குப் பாலும் பழமும் கொடுத்துவிட்டு சாமியறையில் சுகாசினி விளக்கேற்ற இருவரும் கீழே விழுந்து கும்பிட்டனர்..


சொன்னதைச் சொல்லும் கிளிப் பிள்ளையா இருவரும் நடத்தையும் இருக்க, இதுவல்லவே இவர்களின் குணம் என்று அறிந்த ரங்கநாயகி இருவரின் முகத்தையும் உற்று நோக்க..

மௌனமாகவே இருக்கும் சுகாசினியைக் கண்ட ரங்கநாயகி, திரும்பித் தன் பேரனை காண அவனோ முகத்தில் சிறு கோபத்தின் சாயலைக் கண்டார் ..


எந்தவித அவகாசமின்றி நடந்த

அவசர திருமணத்தால் இருவருக்கும் புரிதல் இல்லாமல் போனதா அந்த நொடிகள்…


படபடவென்று பேசுபவள் மௌனமாக மாறவும் எந்த உணர்வுகளையும் யாரிடமும் காட்டாமல் ஒதுங்கி நிற்பவனிடம் தன் முகத்தில் உணர்வுகளை துடைத்துவிட்டாலும் சிறு கோபத்தின் சாயல் இருப்பதைக் கண்டவர்க்கு அவனை என்னவென்று பார்க்க, அவனோ பதிலின்றி அங்கிருந்த சோபாவில் அமர்ந்து விட்டான். ,


ரங்கநாயகியோ சுகாசினி மட்டும் அழைத்து உள்ளே போனவர் அவளிடம் ஏதோ சொல்ல …. அவளோ ஆச்சியின் பேச்சில் அதிர்ந்து வெளியே வந்தவள் சட்டென்று தன்னவனிடம் நெருங்க அதற்கு மேல் அவனிடம் என்ன கேட்பது என்று தெரியாமல் நிற்க, ஊரே அவள் வாய்க்கு பதில் சொல்ல முடியாமல் இருந்த நிலையில் , இன்று அவளோ பேசமுடியாமல் நிற்பதைக் கண்டு அவளுக்குமே தன்னை நினைத்து ஆச்சரியம்… எப்படி இப்படி வாய் பேசும் ஊமை பெண்ணாக மாறினேன்.. என்று யோசனைகள் நாலா திக்கிலும் ஓட கற்சிலையாக நின்றாள் சுகாசினி … ..

தொடரும்..

ஹாய் ஹாய் மக்கா அடுத்த அத்தியாயம் பதிவு பண்ணிவிட்டேன்.. படித்துப் பாருங்கள் மக்கா..😍 😍
20221216_155104.jpg
 
Top