• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

இலக்கணம் பிழையானதோ ..18

Samithraa

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 16, 2022
Messages
97
அத்தியாயம் ..18


ரங்கநாயகியோ சுகாசினியை அறையினுள் அழைத்துச் சென்று, ஏன் கண்ணு?,இந்தக் கல்யாணம் உனக்குப் பிடிக்கலயா.. காலையிலிருந்து பார்க்கிறேன்… நீ எதுவும் பேசாமல் சொன்னதை மட்டுமே செய்துகிட்டு இருக்க … எங்களுக்காகத் தான் இந்தக் கல்யாணத்திற்குச் சரினு சொன்னீயா.. என்று கேட்டவரைப் பார்த்தவளோ…


''ஏன் ஆச்சி இப்படி கேட்கீறிங்க?.. உண்மையே அது தானே.. யாருக்கோ பயந்து இப்படி அவசரமான கல்யாணம் அவசியம் தானா என்று யாருமே யோசிக்கல தானே .. அதுவும் நேற்று ஒருவன் பொண்ணுப் பார்க்க வரானு சொல்லிட்டு ,அவன் வராமல் ஓடி விட, இப்படி உங்க பேரனை எனக்குக் கல்யாணம் செய்து வைக்கறீங்க….


அவரைப் பற்றி நீங்க கூடப் புலம்பி இருக்கீங்க.. இங்கு வரமாட்டாரு, போன் கூடப் பேச மாட்டேங்கீறாங்கனு.. என்று சொல்லிவிட்டு அவரையே எனக்குக் கல்யாணம் பண்ணி வச்சால் எப்படி? அவர் மனசுக்குள்ள என்ன இருக்கதோ தெரியாமல் உங்க பேச்சுக்காக சரியென்று சொல்லிருந்தால்'',....என்று சஞ்சலத்தோடும் சலுகை நிறைந்த குரலில் வினாவை எழுப்பியவளின் மனதில் நம் தாத்துவை அவர் கூட அழைத்துப் போக சரினு சொல்வாரா .. என்ற கேள்வியும் மனதிற்குள் பிரண்டியது….


''ஏய், குட்டி எப்பவோ என்றோ பேரனை வரலனு சொன்னா அதைப் பிடிச்சிட்டு இருக்காதே.. அது அந்த நேரத்தில் தோன்றிய என்னுடைய ஆதங்கத்தைச் சொல்லிருப்பேன்.. அதை மனசிலே வச்சிட்டு சுத்தாதே.. என் பேரனுக்குக் கல்யாணம் ஒன்று நடக்குமா.. அவனும் மற்றவர்கள் போல குடும்பம் குழந்தை என்று வாழ்வனா என்று பயந்துகிட்டு இருந்தேன்.. எந்த சாமிப் புண்ணியமோ அது நிறைவேறிருச்சு…


இத்தனை நாள் அவனுடைய திருமணத்தைப் பற்றி நா அவனிடம் பேசியதும் இல்லை.. நேற்று பேசும்போதும் அவன் வேண்டாம் என்று தான் சொன்னவன்… அதன்பின் எனக்கே என்ன காரணம் தெரியல, கல்யாணம் செய்துக்கிறேன் என்று ஒத்துக்கிட்டான்.. அதைவிட உனக்காக ஒரு வேலையும் செய்திருக்கான்.. அது எனக்கே ஆச்சரியமான காரியம்…


அந்த வேலை என்னவென்று நான் சொல்வதை விட அவனிடம் நீயே கேட்டுத் தெரிந்துகோ'',.. என்று சொன்னவர், ''இனியாவது என் பேரன் வாழ்க்கை நந்தவனமாக மாறனும்.. அது உன் கையிலே தான் இருக்கு ராசாத்தி'', என்று அவளின் கன்னத்தை வருடி விட்டவர்,


''இத்தனை வருடங்களாக அவனுக்குத் தனிமை என்னும் பெரும் நோய்யால் தவித்து இருந்தவனுக்கு மருந்தாக நீ இருக்கணும் தாயீ'', என்று தன் கண்களில் வடிந்த கண்ணீரைத் துடைத்தவர், தன் பேரன் வாழ்க்கை இவளால் மாறும் என்று பெரும் நம்பிக்கையோடு பேசினார் ரங்கநாயகி …


அவர் பேசுவதைக் கேட்டவளுக்கு அவனின் குணத்தை விட.. முதல வேண்டாம் சொன்னவன் பின் எதனால் கல்யாணம் பண்ணச் சரி சொன்னான், தனக்காக அவன் செய்த வேலை என்ன? என்று அவளின் தலைக்குள் வண்டாகக் குடைய,


அதன்பின் அவர் பேசியது சொன்னது அவள் மனதில் பதியவில்லை.. அது அந்நேரத்தில் பதியாமல் பின்னர் பிரிவை தேர்ந்தெடுத்துப் போதும் அது அவளுள் உரைக்காமல் இருந்து காலத்தின் நிகழ்வுகளின் தீரா விளையாட்டாக மாறியது தான் விந்தை …


''இப்பப் போய் அவனிடம் உட்கார்ந்து பேசு.. அவனுக்கு இனி நீதான் துணையாக இருந்து அவனை நல்லா பார்த்துக்கணும், அவனுக்காகச் சிறு வயதில் கிடைக்க வேண்டிய எந்த சந்தோஷமும் அழிய நானும் ஒரு காரணம். .. அதை நிவர்த்திச் செய்ய உன்னை என் பேரனுக்குக் கட்டி வைத்தேன் .. இந்த அவசரமும் எதற்கு என்றால் இந்த இக்கட்டான சூழ்நிலையிலால் தான்'',..


''இல்லை என்றால் அவனிடம் கல்யாணத்தை பற்றி என்றுமே பேச முடியாமல் போய் அவன் வாழ்வில் திருமண பந்தம் நடக்க முடியாமல் கடைசி வரை தனிமையில் கழிக்க வேண்டிய வரலாம் என்ற எண்ணம் என் மனதில் கீறிக் கொண்டே இருந்தது தான்.. அதனால் தான் இந்த அவசரக் கல்யாணத்திற்கு ஒரு காரணம்..


அவன் தனியாக ஹாலில் உட்கார்ந்து இருக்கான்.. அறைக்குள் கூட்டி வந்து உட்கார்ந்து பேசு.. உன்னுள் இருக்கும் பல கேள்விக்கு விடை கிடைக்கும்'', என்று சொன்ன ரங்கநாயகி… ''போய் அவனிடம் பேசு'', என்று நிஷாந்தனிடம் பேசச் சொல்லி அவளை வெளியே அனுப்ப,


அவளோ ஆச்சி சொன்னதை விட தனக்காக அவன் என்ன செய்தான் என்று அறிவதே முதலில் தோன்றவும் வேகமாக அறையை விட்டு வந்தவள், நிஷாந்தன் தனியாக அமர்ந்து தன் அலைபேசியைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு நெருங்கியவள், அவனின் கம்பீரமும் ஆளுமையும் ஏதோ ஒன்று சகஜமாக பேச முடியாமல் நிற்கும் அளவிற்கு அவனின் தீட்சண்யமான பார்வையும் கண்டு தயங்கி நின்றாள் சுகாசினி ..


அவளின் வாழ்வில் என்றுமே தயக்கமில்லாமல் சலசலவென்று ஓடும் அருவியாய் ஆர்பரிப்பவளுக்கு பேச்சே வராமல் திகைத்துத் திணறிக் கொண்டு நிற்க,


தன் முன் நிழலாடும் உணர்வில் நிமர்ந்தவன் தன் ஒற்றை புருவத்தை உயர்த்தி என்னவென்று கேட்க,


அவளோ கேட்க வேண்டிய கேள்வியை மறந்து நின்றவளுக்கு, அவனின் பார்வை உயர்த்தலுக்கும் பதிலின்றி நிற்க…


அப்போது வெளியே இருந்து வந்த ராமசாமியோ தன் பேத்தியைப் பார்த்து ''என்ன கண்ணு?, இப்படி பார்த்துக்கிட்டு நிற்கிற.. அறையிலே மாப்பிள்ளையை கொஞ்சம் நேரம் படுக்கச் சொல்லு.. நா மதிய சாப்பாட்டை வேலப்பனை பார்க்கச் சொல்லிருக்கேன், என்னவென்று பார்க்கிறேன்'' என்றவர்…


''மாப்பிள்ளை'', என்று நிஷாந்தனை அழைக்க,


அவனோ ''தாத்தா நீங்க மாப்பிள்ளை என்று கூப்பிட்டாமல் பெயரைச் சொல்லிக் கூப்பிடுங்க'',என்று சொல்லவும்… ராமசாமி மனதிற்குள் அவனைப் பற்றிய எண்ணங்கள் உயர்ந்து கொண்டே போனது..


''சரி கண்ணு, நேரமே எழுந்தது அசதியா இருக்கும் , அலைச்சலும் அதிகமாக இருக்கும் கொஞ்சம் படுத்து தூங்குங்க கண்ணு,.. வேலை வேலை ஓடுகிற உங்களுக்கு கிடைக்கும் நேரத்தில் ஓய்வு எடுத்துக்கணும்'', என்று நிஷாந்தனிடம் சொல்லியவர், ''தாயீ அவருக்குக் குடிக்க எதாவது கொடு'', என்று சொல்லிவிட்டு செல்ல..


ராமசாமியின் பேச்சைக் கேட்ட சுகாசினியோ , ''ஏன் தாத்து நா மட்டும் நேரமே எந்திரிக்கலயா'',.. என்று கேட்டவளுக்குப் போகிற போக்கில் பதில் சொல்லிச் சென்றார் ..


''முதல் முறையாக நம் வீட்டுக்கு வந்திருக்கிறார் உன்னைக் கல்யாணம் செய்து.. நாம் தான் இதை எல்லாம் கவனிக்கணும்.. உனக்கே தெரியாதா .. கண்ணு… முதல மாப்பிள்ளையை கவனி'', என்று சொல்ல.. அவளோ ''மக்கூம்'' கவனிக்கிறேன் கவனிக்கிறேன் என்று மனதிற்குள் அழுத்திச் சொல்லிக் கொண்டவள்,'' போகிற ராமசாமியின் முதுகை முறைத்தவளின் விழிகள் வட்டமாக விரிந்து முகத்தில் கண்கள் மட்டுமே பெரிதாகத் தெரிய வர அவளை சுவாரஸ்யமாகப் பார்த்தான் நிஷாந்தன்.


''ஆச்சியும் இதைச் சொல்லுச்சு தாத்தாவும் இதைச் சொல்லறாங்க'', என்று முணுமுணுத்தவள், மாப்பிள்ளை என்றால் கொம்பு முளைத்து விடும் போல… ஆள் ஆளுக்குத் தாங்கிறாங்க என்ற நினைத்தவளுக்கு அவனிடம் கேட்க வேண்டியதை கேட்காமல் , ''என்ன குடிக்கீறிங்க?'', என்று பட்டென்று சிறு கோபம் கலந்தக் குரலில் கேட்க ..


அவனோ பக்கென்று சிரித்தான்.. சிரிப்பை மறந்து பல ஆண்டுகளானவனுக்குச் சிரிப்பும் புதியதாக மலர, அவளின் சிறு பிள்ளை போல பிடிவாதமான பேச்சாலும் அவளின் செய்கையிலும் மீண்டும் சிரிப்பு வர.. வாய்விட்டுச் சிரித்தான்…


அவனின் சிரிப்பை கண்டவள் திகைத்து வாயில் 'ஈ' 'நுழைந்தால் கூடத் தெரியாமல் வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்த சுகாசினியும்,


ஏதோ வேலையாக அவ்விடத்திற்கு வந்த ரங்கநாயகிக்குக் கண்களில் கண்ணீர் வடிய, தன் பேரனின் அருகில் போனவர், ''என் ராசா'', என்று கன்னத்தை வழித்து சொடுக்கு எடுத்தவர்,'' என்னைக்கும் இந்தச் சிரிப்பு உனக்கு நிலைக்கட்டும் கண்ணு'', என்று சொல்லிவிட்டு,


''மசமசவென்று நிற்காமல் என் பேரனுக்கு ஜூஸ் போட்டு எடுத்து வா சுகா'', என்று அதிகாரமாகச் சுகாசினிடம் சொல்லியவர் அவனின் அருகிலே அமர, அவரையும் முறைத்தவள்..


''அதிகாரமெல்லாம் தூள் பறக்கது.. பேரன் வந்திருக்காங்கனு.. சப்போர்ட் ஆள் இருக்கிறதோ என்று சொல்லியவள்.. ''இரு ஆச்சி உன் ஜூஸ்ல உப்பை போட்டு தரேன்'', என்று சொல்லிவிட்டு விருட்டென்று அடுப்படிக்குப் போனாள் சுகாசினி..


அவரோ ''அதை உன் புருசனுக்குக் கொடுத்து விடுவேன்..சுகா.. பார்த்துக்கோ'', என்று கேலி இடையிடையே சொல்ல..


அவளோ ''உனக்கு ஜூஸ் கிடையாது ஆச்சி'', என்று சத்தமாக அங்கிருந்தே குரல் கொடுத்தாள் சுகாசினி .. .


அவள் கேட்க வந்ததை கேட்காமல் போவதும், அதைப் புரிந்த அவனோ என்ன கேட்க வந்தாள் என்று அறிய அவளிடம் பேசத் தோன்ற இருவரும் அதற்கான நேரத்திற்குக்காக காத்திருக்க..


சுகாசினின் பேச்சைக் கேட்டுச் சிரித்த ரங்கநாயகியோ தன் பேரனிடம் திரும்பி ''ராசா'' என்று அழைத்தவர், ''இன்னும் இரண்டு நாளைக்கு இங்கே இருக்கீறியா'', என்று கேட்க,


'' இல்ல ஆச்சி நைட் கிளம்பணும், வேலை இருக்கு, அதைவிட என் கல்யாணத்தை என்னுடைய பிசின்ஸ் சைட்டில் சொல்லி எல்லோருக்கும் ஒரு வற்வேற்ப்பு வைக்கணும், அதற்கான வேலை அப்பறம் இரண்டு நாளாக இங்கே இருப்பதால் மற்ற கம்பெனி வேலைகளும் பென்டிங் இருக்கும் அதையும் பார்க்கணும்னு'', என்று சொல்லியவனிடம்…


அதைக் கேட்டவரோ''இன்று மட்டுமாவது இருக்கலாமல கண்ணு.. சில சடங்கு சம்பிரதாயத்தை முடிச்சிட்டுப் போலாமல'', என்று சொல்ல,


அவனோ ரங்கநாயகியை நிமிர்ந்து பார்த்தவன் அவர் சொல்ல வருவது புரிந்தாலும், உடனே தன் வாழ்க்கையை தொடங்க எண்ணமில்லை.. புதியதாக தன் வாழ்க்கையில் வந்தவளைப் பற்றி எதுவும் தெரியாமலே அவளிடம் இன்னும் ஒரு முறை கூடப் பேசாமல் அவளிடம் சகஜமாக எதுவும் உரையாடாமல் சம்பிரதாயத்திற்காக அவளை வற்புறுத்தக் கூடாது என்று எண்ணமிருக்க..


'' அதை அப்பறம் பார்த்துக் கொள்ளலாம் ஆச்சி'', மேலோட்டமாக ஒற்றை வார்த்தையை உதிர்த்தவன், ''நா கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணும் முக்கியமாக கம்பெனி கால் ஒன்று பேசணும்'', என்று சொல்லி எழுந்தவனை…


''அந்த அறையிலே போய் படு ராசா… நா சுகாவிடம் ஜூஸ் கொடுத்து விடுகிறேன்'', என்று பதிலளித்தவர், தன் பேரனின் பட்டும்படாத பேச்சில் மனதில் சிறு வலியும் உண்டாகியது .. மதியம் விருந்து முடிந்ததும் அவனின் அம்மாவின் சமாதிக்குப் போக வேண்டும் என்று முடிவெடுத்தவர்.. அதைத் தன் பேரனிடம் சொல்ல அவனோ 'ம்' தலையாட்டிவிட்டு உள்ளே சென்று விட.. அவனைப் பார்த்தபடி அமர்ந்திருந்தார் ரங்கநாயகி.


ஜூஸ் போட்டு எடுத்து வந்து ஆச்சிக்குக் கொடுத்துவிட்டு சுகாவின் கண்களோ நிஷாந்தனைத் தேட.. அதைப் பார்த்த ரங்கநாயகியோ ''அவன் உள்ளே இருக்கான் கொண்டுப் போய் கொடு சுகா'', என்று சொல்ல..


அதைக் கேட்ட சுகாசினிக்கோ அறையினுள் அவனிடம் தனியாகக் கொண்டுக் கொடுக்க தயங்கியவளுக்குக் கால்களும் தள்ளியாடியது…


அவளுக்கும் அவன் புது உறவு அல்லவா… பார்த்து அறியாதவனின் ஒரு முறை கூடப் பேசியிடாதவனை தனி அறையில் அவனிடம் போக தயங்கியவளுக்கு, அவன் தானே இந்த வாழ்வின் மொத்தத்திற்கும் கூட வருகிற உன்னதமான உறவின் பந்தம் என்பது அவளுள் பதிய நாளாகுமோ…


சில தயக்கங்களோட நின்றவளுக்கு அப்போது தான் அவனிடம் கேட்க வேண்டிய விசயங்கள் இருப்பது ஞாபகம் வர விரைவாக அறையினுள் நுழைந்தாள் சுகாசினி ..


அதுவரை அவள் முகத்தில் வந்து போன உணர்வுகளைக் கண்டவர்க்கு அவளின் வேகத்தைக் கண்டு சிரிப்பும் வர, ''மெதுவா போ சுகா'', என்று கேலிக் குரலில் சொல்லுவதைக் காதிலே வாங்காமல் சென்றவள்,


கட்டில் விசாராந்தியாக காலை நீட்டி முதுகை தலையணை வைத்து சாய்ந்து அமர்ந்திருந்தவனிடம் ஜூஸ் டம்ளாரை நீட்ட,


முகத்திற்கு முன் வந்த டம்ளரைப் பார்த்தவன், நிமிர்ந்து அவளை நோக்கி, ''உப்பு போடலேயே.

நம்பிக் குடிக்கலாமலே'', .. என்று கேட்டபடி ஜூஸ் டம்ளரை கையில் வாங்கியவனுக்குத் தெரியவில்லை .. அவள் பேசினால் அருவியாகக் கொட்டித் தீர்ப்பாள் என்று..


அதைக் கேட்டவளோ சிறு முறைப்பை அவனுக்குப் பரிசளித்தவள் ''அது ஆச்சிக்குத் தான்.. முதல் தடவை என்பதால் போன போகது நாட்டுச் சர்க்கரை கலந்து வந்தேன்'', என்று சொல்லியவளின் பதிலில் சிரித்தபடி குடித்தான் ....


ஏனோ அவள் வாழ்க்கையில் இன்று தான் உள்ளே நுழைந்தாள் .. ஆனால் அவனின் மறைந்துப் போன சிரிப்பை உயிர்ப்பித்தவள், அவன் வாழ்யையும் மலரச் செய்யவளா சுகாசினி என்று அவன் நினைத்தபடி ஜூஸை குடித்தவன் அவள் முகத்தை ஆராய, அவள் முகத்தில் வந்து போகிற எண்ணக் கூற்றுகளைக் கண்டு தன்னிடம் அவள் கேட்க வந்த கேள்வியை தானே அவளிடம் கேட்டு பேச்சிற்கு முதல் தொடக்கத்தைத் தொடங்கி வைத்தான் நிஷாந்தன்.


தன் காலை மடக்கி அவளிடம் ''உட்காரு சுகாசினி'', என்று அமரச் சொல்ல,


அவளும் கட்டில் ஓரத்தில் அமரவதைக் கண்டு ''நல்லா உட்காரு, இது உங்கள் வீட்டு கட்டில் தான்.. இரண்டு பேர் உட்கார்ந்தா தாங்கும் தானே'', என்று இலகுவான பேச்சைக் கேட்டவளுக்கு இவன் இப்படி எல்லாம் பேசுவானா என்று அதிர்ந்து பார்க்க..


யாரிடமும் இவ்வளவு உரிமையாக பேசாதவனுக்கு, சுகாசினியிடம் இலகுவாகப் பேசுவது அவள் கழுத்தில் தான் அணிவித்த மஞ்சக் கயிற்றின் மகிமையா.. இல்லை தனக்கே தனக்காக வந்த புது உறவால் ஏற்பட்ட பாசமோ அன்பாக இருக்குமோ என்று நிஷாந்தனுக்குத் தோன்றினாலும், அவளிடம் பேச வேண்டிய அவசியத்தை உணர்ந்து…


''இப்ப உனக்கு என்னிடம் என்ன கேட்க வேண்டும் சுகாசினி, .. ஏன் இந்தக் கல்யாணத்திற்கு சரியென்று சொன்னேன்?.. என்று தெரிந்து கொள்ளனுமா'',.. இல்ல காளியப்பனைப் பற்றி தெரிந்துக் கொள்ளணுமா?'', என்று கேட்டவனை திகைத்து நோக்கினாள் சுகாசினி.


தொடரும் ..


ஹாய் ஹாய் கதையின் அடுத்த அத்தியாயம் பதிவு பண்ணிட்டேன் படித்துப் பாருங்கள் மக்கா.. லைக்ஸ் கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் மிக்க அன்பின நன்றி 😍 😍 😍 😍
20221216_155104.jpg









.
 
Top