• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

இலக்கணம் பிழையானதோ.. 2

Samithraa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 16, 2022
131
58
28
Karur
அத்தியாயம் ..2


நிஷாந்தனின் கையில் கார் ஹைவேல பறக்க, அவன் மனமோ ஏஸி காற்றிலும் மனத்தைக் குளிர்விக்க முடியாமல் கொந்தளித்துக் கிடந்தது.


எத்தனை கனவுகளோடு ஆரம்பித்த வாழ்வு இன்று கனவை கலைத்துக் குப்பையாக எறிந்து சென்று விட்டதை இழுத்துப் பிடிக்க நினைக்கும்போது பெரிய சுழலில் சிக்கி மீண்டு வந்துவிட்டமா இல்லையா என்று அறியாமலே வண்டியை செலுத்தியவனின் விழிகள் முன்னால் இருக்கும் கண்ணாடி வழியே தன் மனைவியை நோட்டமிட்டான்.


அதில் தெரிந்தது என்னவோ அவளின் ஆழ்நிலை உறக்கம் மட்டுமே. ஆதினியும் உறக்கம் கலையாமல் இருக்க அவளை இறுக்கிக் கொண்டுத் தன்னை மறந்து தூங்கினாள் சுகாசினி.


எத்தனை நாட்கள் உறக்கமின்றி தவித்த விழிகளுக்கு இன்று தன்னையறியாமல் உறக்கம் கொண்டது.


அவனின் பார்வையோ அவளை உற்று நோக்க அதில் அவளின் உடல் மெலிவும், முகத்தின் பொலிவின்றி கறுத்துக் கிடக்க, வெளுத்து அணிந்திருந்த ஆடையும் கண்டவனுக்குத் தன்னை அறியாமல் கோபம் அவனுள்..


இவ்வளவு பணம் சம்பாதிப்பது எதற்காக, தன் குடும்பத்திற்காகத் தானே, ஆனால் அதை அனுபவிக்க வேண்டியவளோ, வேண்டாம் என்று மறுதலிப்பது அவனின் உழைப்புக்கு என்ன மதிப்பு இருக்கு. உலகமே பாரட்டினாலும் கட்டினவளின் பாராட்டும் அன்பும் தானே ஒரு மனுசனை மேன்மேலும் உழைக்கும் சக்தியைக் கொடுக்கும் என்று எண்ணியவன் இவள் இவ்வளவு தூரம் கறுவழிந்துப் போகத் தானும் ஒரு காரணமா.. அந்தளவுக்கு இவளைக் கவனிக்காமல் பிசின்ஸ் பிசின்ஸ் என்று பறந்த நாட்களை எண்ணி மருகினான்.


தான் அருகில் இருந்திருந்தால் இவள் இந்த முடிவை கட்டாயம் எடுத்து இருக்க மாட்டாள்.


அருகில் இல்லாமல் போனதால் தான் இந்த முடிவு.


அப்படி ஒன்றும் கோழை இல்லையே இவள். தைரியமும் சாமர்த்தியமாக நடக்கும் புத்தியும் கொண்டவள் தானே.. எதிலும் உணர்ச்சி வயப்படாமல் இருப்பவள் இந்த விசயத்தில் ஏன்? இவ்வளவு பிடிவாதமும் திமிரும், என்று தோன்றியது.


அவளை ஆராய்ந்துக் கொண்டே காரை ஓட்டியவனுக்கு அவள் நன்றாகச் சாப்பிட்டு எத்தனை நாளாச்சோ, என்ற எண்ணம் தோன்ற, எதாவது ஹோட்டல் அருகில் தெரிகிறதா என்று வெளிப் பக்கம் பார்த்து ஓட்டினான். தூரத்தில் ஒரு உயரதரமான ஹோட்டல் தென்படவும் அங்கே முன்னால் இருக்கும் மரத்தடியில் காரை நிறுத்திவிட்டு பின்னால் திரும்பி அவளை எழுப்பினான் நிஷாந்தன்.


''சுகாசினி, சுகாசினி '', என்று முழுப் பெயரை அழைத்து அவளை எழுப்ப, எங்கோ கிணற்றிலிருந்து ஒலிக்கும் குரலாக அவளின் செவியில் விழவும் அந்தக் குரலுக்கேப் பதறி எழுந்தவளைக் கண்ட நிஷாந்தன் ''ஹேய் ரீலாக்ஸ்'', என்று சொல்லிவிட்டு ''கீழே இறங்கு'', என்றவன் தானும் கார் பெல்ட்டை கழற்றிவிட்டு இறங்கினான்.


மறுபக்கம் இறங்கியவளோ ஆதினியை தோளில் போட்டுத் தட்டிக் கொடுக்க,'' வா '',என்று சொல்லிவிட்டு முன்னால் போனான் நிஷாந்தன்.


தன் பின்னால் அவளும் வருவாள் என்ற நினைப்பில் நடந்தவன், ஹோட்டல் கதவைத் திறக்கும் போதுத் திரும்பிப் பார்க்க சுகாசினியோ காரின் அருகே நின்று கொண்டிருந்ததுக் கண்டு கடுப்பாகிப் போய் விரைவாக அவளை நோக்கி வந்து '' வா என்று சொல்லிவிட்டுத் தானே சென்றேன், பின்னால் வரத் தெரியாதா'', என்று வார்த்தைகளைத் கடித்துத் துப்பியவனைப் பார்த்தவளின் முகமோ நிர்மலமாக இருந்தது.


அவளோ எதுவும் பேசாமல் இருப்பதைப் பார்த்தவனுக்குக் அதீதக் கோபம் வர அவள் கையிலிருந்த ஆதினியை பிடுங்காத குறையாகப் பிடுங்கியவன், திரும்பி வேகமாக ஹோட்டலை நோக்கி நடந்தான்.


ஆதினியை கை மாறவும் தூக்கக் கலக்கத்திலே சிணங்கவும், ''ஹேய் பேபி, அப்பாடா குட்டி '',என்று முதுகில் தட்டிக் கொடுத்தவன் ஹோட்டலில் குடும்பத்தோடு தனியாக அமர வசதியுள்ள இடத்தில் போய் அமர்ந்தான்.


அவள் பின்னால் வந்தால் வரட்டும் என்ற எண்ணம் அவனுள். ரொம்ப தான் பண்ணுகிறாள், என்று நினைத்தவன் அவள் வர வேண்டுமே கடவுளே என்று வேண்டியும் கொண்டான் நிஷாந்தன்.


சிறிது நேரம் காரின் அருகே நின்றவளோ, அதன்பின் ஆதினியின் அழுகை அதிகமானால் அவனால் சமாளிக்க முடியாது என்று நினைத்தவள் குட்டிக் கென்று கொண்டு வந்ததை எடுத்துக் கொண்டுத் தானும் ஹோட்டலுக்குள் நுழைந்தாள் சுகாசினி.


அவள் உள்ளே போனதும் நிஷாந்தனும், ஆதினியும் எங்கே அமர்ந்திருக்கிறார்கள் என்று சுற்றிலும் பார்க்க, அதுவரை அவளையே கவனித்துக் கொண்டிருந்த நிஷாந்தன் தன் கைகளை உயர்த்திக் காட்ட, அவர்களை நோக்கிப் போனவள் அவனுக்கு எதிரே உள்ளே சேரில் எதுவும் பேசாமல் கையை கட்டிக் கொண்டு அமர்ந்தாள் சுகாசினி.


அவள் அமைதியாக அமர்ந்தத் தோரணையைப் பார்த்தும் பாராமல் தன் மகளோடு ஐக்கியமானான்.


அன்று தான் அவர்களின் திருமண நாள், அன்று தான் அவர்களின் திருமணம் ரத்து ஆக இருந்ததை தவிர்த்து திருமண பந்தம் நீடிக்க வேண்டும் என்று முடிவெடுத்தவன், இனி வாழ்க்கையில் இந்த ஒரு சூழ்நிலை உருவாக்கிக் கொள்ள கூடாது என்று நினைத்த நாளும் அதுவே...


அவர்களின் வாழ்வின் அச்சாரமாக உதிர்த்த பெண் மகவு அவனின் கையில் சிரித்துக் கொண்டும் அவனின் தலை முடியை பிய்த்து கன்னத்தைக் கடித்துத் தன் மகிழ்ச்சியை தந்தையுடன் பகிர்ந்து கொண்டாள் ஆதினி.


குழந்தை இழுத்த இழுப்பிற்கு எல்லாம் சென்றவன், அது மழலைக் குரலில் பா,ப்பா..,ஆ.. என்று பேசுவதைக் கேட்டவனுக்கு இவ்வுலகை வாங்கித் தன் மகளின் காலடியில் போட்டு விடுமளவுக்கு மனதில் பாச ஊற்றுகள் பொங்கிப் பெருகியது. அதை ஆனந்தமாக ரசித்தான் நிஷாந்தன்.


ஆதினி தான் இப்போது இவர்களை இணைக்கும் பாலம் .. மகள் இல்லை என்றால் அவன் அவளை கோர்ட்டில் விட்டுச் சென்று இருப்பான் என்று எண்ணம் அவளுள்.


அவளுக்குப் புரியவில்லை இன்னும் அவன் தான் மகளை வைத்து அவளை மடக்கும் திட்டங்களைத் தனக்குள் வகுத்திருப்பதை அவளால் அறியவும் முடியாது உணரவும் முடியாது.


அவள் என்று தான் அவனை உணர்ந்திருக்கிறாள் என்றுமே இல்லை என்று தான் சொல்வான் நிஷாந்தன்.


ஒரு தொழில் சாம்ராஜ்யத்தைக் கட்டி ஆள்பவனின் மனைவி ஆளுமையும் கம்பீரமும் இருக்க வேண்டாமா…


இப்படி கோழைதனமாக மற்றவர்களின் பேச்சிற்குச் செவிச் சாய்த்து தங்களுடைய வாழ்க்கையின் இறுதிக் கட்டம் வரை கொண்டு சென்ற அவளிடம் அடக்க முடியாத அதீத சினம் இருந்தாலும் அதைக் காமிக்காமல் ஆதினுடன் விளையாடிக் கொண்டிருந்தான் .


அப்போது அவர்களின் டேபிளுக்கு வந்த பேரரிடம் ஆர்டர் எடுக்க அவளுக்குத் தேவையானதும் தனக்கும் தேவையானதை ஆர்டர் பண்ணியவன், ''இப்ப ஆதினிக்கு என்ன சாப்பிட கொடுப்பே'', என்று சுகாசினியிடம் கேட்டான் நிஷாந்தன்.


''அவளுக்கு வெளியே உணவுக் கொடுப்பதில்லை, வீட்டிலே செய்துக் கொடுப்பது தான்'', என்று சிறு குரலில் இயம்பியவள், தன் கொண்டு வந்த பையிலிருந்து குழந்தைக்கான உணவு ராகி கூழை எடுக்க, அதைப் பார்த்தபடி இருந்தவனோ,


அந்தப் பையில் ஆதினிக்குத் தேவையான ஒரு டிரஸ், டைப்பர், கிளாஸ், ஸ்பூன், வாட்டர் பாட்டில், டிபன் பாக்ஸ் என்று அனைத்தும் ஆதினியின் பொருட்கள் மட்டுமே இருப்பதைக் கண்டு அவளை மனதிற்குள் மெச்சிக் கொண்டான்.


ராகி கூழ் பாக்ஸ் ஓபன் பண்ணிவிட்டு ஆதினியைக் கூப்பிட, அவனோ ''அதை என்கிட்ட கொடு, நான் பாப்பாவுக்குக் கொடுக்கிறேன்'', வேகமாக அவள் கையிலிருந்து பிடுங்கியவன் , ஆதினியை கொஞ்சியபடியே கூழை ஊட்ட அதுவும் சமத்தாகச் சாப்பிட்டது.


அதைப் பார்த்தவளுக்கு மனதிற்குள் புகைச்சலே உருவாகிறது . தான் ஊட்டும் போது பல அழிசாட்டியம் பண்ணிச் சாப்பிடாமல் அடம்பிடிக்கும் குட்டி, இன்னிக்குப் பாரு அப்பாரு ஊட்ட ஊட்ட என்னமோ அமிர்த்தை கொடுக்கிற மாதிரி சீன் விடுது, அவனும் அதற்குத் தகுந்தவாறு தலையாட்டிக்கிட்டு இருக்கான் என்று முணுமுணுத்தாள்.


அவளின் முணுமுணுப்பில் மென்மையாகச் சிரித்தவன், ''குட்டிக்கு மட்டும் ஊட்டுகிறேனா, வேண்டும் என்றால் சொல்லு உனக்கும் ஊட்டி விடுகிறேன்'' என்று சொல்லி ஒற்றை புருவத்தை உயர்த்திப் பார்க்க,


அதைக் கண்ட சுகாசினி அவனை முறைத்தாள்.


அவளின் முறைப்பில் என்ன கண்டானோ அவன், இறுகிய முகம் மலர்ந்து கம்பீரமாகப் புன்னகை புரிந்தது.


அப்போது அவர்களின் உணவை எடுத்து வந்த பேரர் அவரவர் முன் தட்டை வைத்துவிட்டு, அவளின் பேவரைட் உணவான வெஜ் புலாவ், பன்னீர் மாசலாவை வைக்க அதைக் கண்டவளுக்கு, உள்ளமோ கரித்தது.


என்றோ ஒருநாள் குடும்பமாக ஹோட்டலில் உணவு உண்ணும் போது பரிகாசமாகப் பேசிய சொற்கள் இன்னும் செவியில் ஒலிக்க, அவளால் அவ்வுணவை உண்ண முடியாமல் தொண்டை குழியில் சிக்கி இருமலே வர,


அதைப் பார்த்தவன், "மெதுவா மெதுவா என்று சொல்லி தண்ணீர் குடித்துவிட்டு சாப்பிடு",என்று சொன்னவன், ஆதினியின் கையில் சிப்பரைக் கொடுத்து பேபி சிட்டரில் அமர வைத்தான் நிஷாந்தன்.


அதற்க்குள் தன்னிலை திரும்பியவள் தட்டிலிருந்த உணவை அளைந்துக் கொண்டே இருக்க அதைக் கண்டு காணாமல் தன்னுடைய மீல்ஸ் எடுத்து உண்ண ஆரம்பித்தான் நிஷாந்தன்.


அதை ஓரக்கண்ணால் பார்த்தவன், ''கனி சாப்பிடு'', என்று அவளின் செல்லப் பெயரை சொல்லி அழைக்க,


அதைக் கேட்டவளோ, இது நிஜமா தன் காதில் அவன் தன் பெயரை கூப்பிட்டானா அதிர்ந்துப் பார்க்க,


அதைக் கண்டு கண்களை சிமிட்டியவன், ''சாப்பிடு சுகாசினி'' என்று சொல்ல,


'அது கனவு தான் ' என்று நினைத்தபடி சிறிதளவு உண்டாள் .


இருவருக்கும் இன்று வாழ்க்கையில் நடந்ததை எண்ணி அதைப் பற்றிய எந்தவிட விவாதங்களோ எதுவுமின்றி அவர்களுக்கிடைய நீண்ட மாதங்களுக்குப் பிறகு கிடைத்த தனிமையான சூழ்நிலையின் இனிமையை குறைக்காமல் நடந்துக் கொண்டனர் .


சாப்பிட்டதும் " நீ போய் கை கழவிவிட்டு வா, , அதன்பின் நான் போகிறேன்", என்று சொல்ல, அவளோ சரி என்று தலையசைத்துவிட்டு எழுந்துச் சென்று வந்தவுடன் நிஷாந்தன் சென்றான் .


பேரர், பில்லை கொடுக்க அதை வாங்கி வைத்துவிட்டு நிஷந்தானுக்காகக் காத்திருந்தாள்.


அவன் வந்ததும் பில்லை கொடுக்க பில் புக்கை ஓபன் பண்ணியவன் அதில் அவளுக்கான உணவின் பணம் இருப்பதைக் கண்டு அவளை முறைத்தான்.


அவளோ "உங்களோட கடமை ஆதினிக்கு மட்டும் தான், எனக்கு இல்லை, நீங்கள் கோர்ட்டில் சொல்லிய எல்லா விஷயத்திற்கும் தலையாட்டியவள், இங்கே இப்படி பேசுகிறாளே தோனுதா…


எனக்கும் உங்களுக்கும் ஆன பந்தம் இன்றோடு முடிந்து விட்டது. இனி என் மேல் எந்த உரிமையும் உங்களுக்குக் கொடுக்கப் போவதில்லை , உங்கள் வீட்டில் நான் வந்து இருப்பது இயலாது, அப்படி தங்கினால் அங்கே தங்குவதற்கான வாடகை என் சாப்பாட்டுக்குப் பணம் எல்லாம் வாங்கிக் கொள்ள சம்மதம் என்றால் உங்கள் கூட தடை எதுவுமில்லை….


என்னால் என் மகளை எந்தக் குறையும் இல்லாமல் சிங்கிள் பேரன்டா வளர்க்க முடியும்.. முடியாமல் ஒன்றுமில்லை, அதுவும் என்னைப் போல அப்பா இல்லை என்ற ஏக்கத்தோடு வளர வேண்டாமே என்ற எண்ணத்தில் தான் நான் எதுவும் சொல்லவில்லை…


உங்களை எதிர்த்து நிற்க என்னால் ஒரு நொடி போதும், ஆனால் அதைச் செய்து என் வாழ்க்கையை திசை மாறி சிதைச்சுக்க முடியாது",… என்று சொல்லியவள்,


"இனி நமக்கிடைய நடக்கும் பேச்சு வார்த்தை எல்லாம் ஆதினியின் பற்றிய மட்டுமே, இதைப் புரிந்து நான் நடந்துக் கொள்வேன். அதற்கு நீங்களும் உதவீர்கள் என்று நம்புகிறேன்", என்று சொல்லியவள்


ஆதினியை தூக்கிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்து ஹோட்டலை விட்டு வெளியேறினாள் சுகாசினி


அவளின் பேச்சைக் கேட்டு முகம் இறுகியவன் வேறு எதுவும் பேசாமல் பில்லை செலுத்திவிட்டு வெளியே வந்தவன் சுகாசினி காரின் அருகே ஆதினியோடு நிற்பதைக் கண்டு அவளருகே போனான். ஏனோ கோபத்தை அவளிடம் காட்டாமல் இருக்க தன்னை அடக்கிக் கொள்ள உள்ளே பெரும் போராட்டமே நடந்தாலும் அதை மறைத்தவன், அவளைப் பார்த்து


"ஏனுங்க அம்மணி, இந்த சீரியல் டயலாக் எல்லாம் எதுக்கு, உங்ககிட்ட எதுவும் கேட்கலயே.. பணத்தை அங்கே வச்சிட்டு வந்தீங்க, நானும் அதைப்பற்றியே பேச்சே எடுக்கல, அதற்கு எதுக்கு இவ்வளவு நீளமாக டைலாக் பேசிட்டு வரீங்க,


அதைவிட உங்க பணத்தை மட்டுமே வைச்சிட்டு வந்திட்டிங்க, உங்க அப்பாவி புருசனுக்கும் சேர்ந்துக் கொடுத்தாக் குறைந்தாய் போய் விடும் உங்கள் சொத்து", என்று நக்கலும் கேலியுமாகக் கேட்டவனை முறைத்த சுகாசினி,


"எனக்கு உறவு சொல்லிக்க என் மகள் ஆதினி மட்டும் தாங்க,வேறு யாருமில்லாத அனாதை, இன்று சாப்பாட்டுக்குக் கொடுத்தப் பணத்தை நான் ஒரு வாரத்திற்கான காய்கறி செலவுக்கு ஆகிருக்கும், ஆனால் எங்கயும் என் தன்மானத்தையும் சுயமரியாதையும் விட்டுக் கொடுக்க முடியாது என்பதால் தான் பணத்தைக் கொடுத்துவிட்டு வந்தேன்", என்று சொல்லியவளை,


அதன் வலியை மனதிற்குள் மறைத்தவன் 'யாருமில்லாத அனாதை என்ற சொல்', அவனைச் சுட்டெரித்தது.


குத்துக்கல்லாகப் புருஷன் இருக்கும்போது யாருமில்லை என்று சொல்வதற்கு உள்ளத்தில் எத்தனை காயங்களைப் பட்டு இருப்பாள் என்று எண்ணியவன், அவளோடு வாதாடாமல் காரில் ஏறி அமர்ந்தான்.


பின்னால் அவளும் ஏறியதும், காரை கிளப்பியவனின் மனமோ இவளை இந்தளவிற்குப் பிடிவாதம் பிடிக்கும் அளவுக்கு யாரால் காயம்பட்டாளோ , என்று மனம் வெதும்பியவன், இதற்கு சீக்கிரம் தீர்வு கண்டு பிடிக்க வேண்டும் என்று மனதில் எண்ணிக்கொண்டான் நிஷாந்தன்.


அவளுக்கோ இன்னும் ஒரு வருடமா, அச்சோ எனக்குப் பைத்தியம் தான் பிடிக்கப் போகிறது .. என்று நினைத்துப் பெருமூச்சு விட்டாள் சுகாசினி.

தொடரும் ..




ஹேய் ஹேய்.. கதையின் அடுத்த அத்தியாயம் பதிவு பண்ணிட்டேன் படித்துப் பாருங்கள் மக்கா.. கதை பிடித்து இருக்கா.. இல்லையா என்று ஒரு வார்த்தை சொல்லுங்கள் ... 😍 😍 😍 😍 😍
20221216_155104.jpg
 
  • Love
Reactions: Vimala Ashokan