• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

இலக்கணம் பிழையானதோ ..20

Samithraa

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 16, 2022
Messages
101
அத்தியாயம் ..20


ராமசாமியின் திடீர் மறைவு அங்கிருந்த எல்லாருக்கும் மிகவும் அதிர்ச்சியை உண்டாக்கியது… நல்ல சாவு என்று ஆளுக்கொன்று சொன்னாலும் கடமையை முடித்துவிட்டு நிம்மதியாகப் போய்விட்டார் என்று உறவுகளுக்குள் சலசலப்பு பேச்சாக இருந்தது.


நிஷாந்தனோ சுகாசினியின் வீட்டின் முன் அமர்ந்திருக்க, ராமசாமிக்குத் தெரிந்தவர்கள் எல்லாரும் வருவதும்.. போவதுமாக இருப்பதைப் பார்த்தும் அவர்களுக்கு முன் நின்று கேட்டக் கேள்விக்குப் பதிலை சொல்லிக் கொண்டு இருந்தவனுக்கு மனம் மிகவும் ரணப்பட்டது ..


அவர் தன்னைப் பார்ப்பதற்கு முன்பே தன் மேல் நல்ல அபிப்பியராயமும் அன்பு வைத்தவர், கடைசி நிமிடங்கள் அவனிடம் தனியாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தப் போது தன் பேத்தியை பற்றி சொல்லியதைவிட தன் மகளின் மரணத்திற்கு தானும் ஒரு காரணம் என்று சொல்லி வருத்தப்பட்டதும்.. இத்தனை நாள் இவ்வுயிரை பிடித்துக் கொண்டு இருந்தது என் பேத்திக்காகத் தான் என்று தழுதழுத்தக் குரலில் சொன்னதும் காட்சிகளாக அவன் கண்முன் விரிந்தது....


அதைக்கேட்ட நிஷாந்தனும் அவரின் தளர்ந்த கால்களைத் தட்டிக் கொடுக்க…,


''மாப்பிளை தம்பி நீங்க காளியப்பனை போய் பார்த்து இனி பிரச்சினை வராத அளவுக்கு எல்லாம் செய்தீங்க வேலப்பன் சொன்னான்.. அதைக் கேட்டதும் என் மனசிலே இருந்த பாரமெல்லாம் குறைந்து விட்டது'', ..


''தங்கமான குணமுள்ள மாப்பிள்ளையை தந்த கடவுளுக்கு மனமார நன்றி சொல்லி வேண்டுவது மட்டுமல்லாமல் இருவரும் தீர்க்க ஆயுசோட பல்லாண்டு மனமொத்த தம்பதிகளா வாழணும் வேண்டிகிட்டேன்'',..என்று சொல்லிவிட்டு தன் பேத்தியை பற்றியும் பேசியவர் ''சுகா கண்ணு கலகல பேசவாள் தவிர கள்ளகபடமற்ற பெண் தான் தாயில்லாப் பிள்ளை … … வேலை எல்லாம் வரிந்துக் கட்டிச் செய்வாள் .. ஆனால் உறவுகள் இல்லாமல் தனியாக வளர்ந்தால் அவளுக்கு உறவுகளோடு சேர்ந்து வாழும் போது எதாவது தவறாகப் பேசினால் நீங்க அவளை வெறுத்து விடாதீங்க'',.. என்று மன்றாலாட கேட்டவர்.. ''இனி அவளுக்கு எல்லாமே நீங்க தான்.... எனக்கு இன்னும் எத்தனை நாள் வாழ இறைவன் படியளந்து வைத்து இருக்கான் தெரியல கண்ணு.. இனி அவள் உன் பொறுப்பு", என்று சொல்லிவிட்டு "நாளைக்கு எதாவது எனக்கு ஆனால் அதற்கான காரியங்களை நீங்க தான் செய்யணும்", என்று வாக்கும் வாங்கிக் கொண்டார் ராமசாமி.


அதைக் கேட்டவனின் மனமோ பாரமாக ''அப்படி எல்லாம் சொல்லாதீங்க தாத்தா.. உங்க கொள்ளு பேத்தியையும் நீங்க தானே வளர்க்கணும்'', என்று சொல்லியவனை அர்த்தமுடன் பார்த்தவரின் கண்களோ ஆனந்த கண்ணீரால் ஈரமானது …


பார்க்கும் முன்னே தன் மேல் நம்பிக்கை வைத்த நல்ல மனிதர் பார்த்த ஒரேநாளில் பிரிந்து காற்றோடு கலந்த அவரின் ஆத்மாவை நினைத்து மனதிற்குள் குமறிக் கொண்டிருந்தான் நிஷாந்தன் …


வீட்டினுள்ளே உள்ளே அவரே படுக்க வைத்திருந்த இடத்தில் அமர்ந்து கதறிக் கொண்டிருக்கும் தன் மனையாளை நினைத்து வருந்தியவன், அவளின் அருகே சென்று தன் கைக்குள் வைத்து அவளுக்கு ஆறுதலாக இருக்க வேண்டும் என்று நினைத்தவனுக்கு அதைச் செயல் படுத்த இயலவில்லை ..


சுற்றியும் கூட்டமாக இருக்கும்போது அவளிடம் நெருங்க முடியாமல் தவித்தவனுக்கு.. தண்ணீர் கூட அருந்தாமல் அழுதுக் கொண்டிருப்பவளை தூர நின்று வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது நிஷாந்தனாலே..


அவளைத் தன் பார்வைக்குள்ளே வைத்தபடி வந்தவர்களுக்குப் பதிலளித்தவன், திடீர்னு அங்கே பரபரப்பாக அங்கிருந்த கூட்டம் பேசுவதைக் கண்டு திரும்பிப் பார்த்தவனோ அங்கே காளியப்பன் தன் மனைவி மட்டும் சில உறவினர்களோடு அங்கே வரவும் அதைக் கண்டவனோ புருவத்தைச் சுருக்கினான்..


எதாவது பிரச்சினைக்கு வருகிறானா என்று அவன் முகத்தை ஆராய… அவனோ தன் கொண்டு வந்த மாலையை அவர்க்குப் போட்டு விட்டு தன் கூட வந்தவர்களிடம் ஏதோ சொல்ல அவர்கள் நிஷாந்தனை நெருங்கினர்..


''தம்பி'', என்று விளித்து ''இப்பச் செய்ய வேண்டிய முறைகளை செய்ய ஆரம்பிக்கலாம்… அது தான் காளியப்பன் வந்துட்டான் .. அவனை வச்சு செய்து விடலாமா'', என்று கேட்க..


அவனோ அவர்களை ஒருமுறை பார்த்துவிட்டு உள்ளே சுகாசினியைப் பார்க்க, அழுதுக் கொண்டிருந்தவள் ஏதோ உணர்வில் நிமிர்ந்து பார்க்க, நிஷாந்தனின் தீட்சண்ய பார்வையில் தன் தாத்தாவை விட்டு எழுந்து நேராக அவனிடம் அருகில் நெருங்கி… "என் தாத்தாவிற்குச் செய்யும் எல்லா சடங்குகளையும் நீங்க தான் செய்யணும்", என்று யாசிக்கும் குரலில் கேட்டவளை தோளோடு இழுத்து அணைத்தவனோடு இணைந்து நின்றவளோ… "நீ இங்கே நிற்க கூடாது… அவர் உன்னால் தான் இவ்வளவு சீக்கிரம் என்னை அனாதையாக விட்டு போய்யிட்டார்", என்று காளியப்பனைப் பார்த்து கத்தியவள், அவருக்கு ஈமச்சடங்கு செய்யும் உனக்கு அருகதை இல்லை வெளியே போ'', என்று சொல்லியவளைக் கண்ட நிஷாந்தன் ..



அவளிடம் ''போதும் மா பேச வேண்டாம்'', என்று ஒற்றை வார்த்தையில் அடக்கியன்…''நீ சொன்னாலும் சொல்லாவிட்டாலும் இவனை இந்தச் சடங்கை செய்ய விட மாட்டேன்.. இதை உனக்காக மட்டுமல்ல உன் தாத்தாவின் வார்த்தைக்காகவும் தான் என்று சொல்லி நீ உள்ளே போ… அவரின் கடைசி ஆசையே இது தான்'', என்று உரைத்தவன் காளியப்பனை நோக்கி 'வெளியே போ', என்று கையால் சைகை செய்ய..


அவனோ ''அதெப்படி நீ செய்யலாம் பங்காளி நானிருக்கப்ப நீ எப்படி செய்யலாம்'', என்று எகறிக் கொண்டு வருபவனை வேலப்பன் அருகில் வந்து ''நேற்று வாங்கியது மறந்திருச்சா காளியப்பா'',.. என்று அவன் காதின் அருகில் மெதுவான குரலில் சொல்லியவனைக்.. கண்டு முறைத்த காளியப்பன் எதுவும் பேசாமல் விருட்டென்று போய்விட்டான்..


வாசலில் நின்றே நிஷாந்தனை திரும்பிப் பார்த்தவன் , ''நா காலைச் சுற்றிய பாம்புடா … கொத்தாமல் விட மாட்டேன்'', என்று முணுமுணுத்துவிட்டுச் சென்று விட, அவனுடன் வந்தவர்களும் சென்று விட்டார்கள் …


உறவுகளோ.. இதை எல்லாம் பார்த்து அவர்களுக்குள்ளே குசுகுசுவென்று ஆளுக்கு ஒன்று பேசினாலும் அதை நிஷாந்தன் காதில் வாங்காமல் மற்ற காரியங்கள் நடக்க ஆட்களை ஏவியவன்.. மடமடவென்று வேலை முடிய வீட்டிலிருந்து ராமசாமியை காட்டிற்கு எடுத்துச் செல்ல அங்கே அவருக்குச் செய்வதை எல்லாம் நிஷாந்தன் செய்து முடித்து விட்டு சுகாசினின் வீட்டிற்கு வந்தான்.


அவரை எடுத்துப் போகும்போது கதறிய சுகாசினியோ மயக்க நிலையில் ரங்கநாயகியின் மடியில் படுத்திருக்க, அங்கே வந்தவன் அவளை அலுங்காமல் தூக்கிப் படுக்கையில் படுக்க வைத்தவன் , அவளுக்குக் குடிக்க எதாவது தருமாறு ஆச்சிடம் சொல்ல, அவர் கொண்டு வந்த பாலை மெதுவாக அருந்தச் செய்ய ''வேண்டாம்'', என்று மறுத்தவளை வற்புறுத்திக் குடிக்க வைத்துவிட்டு திரும்பப் படுக்க வைக்க அவளோ ஆழ்ந்த நித்திரைக்குப் போனாள்.


அதுவரை அவள் அருகிலே அமர்ந்திருந்தவன் அவள் உறங்கியதும் வெளியே வந்து ஆச்சிக் கொடுத்த உண்வை உண்டவனுக்கு அங்கே வீட்டில் ராமசாமி இல்லாது அவனுக்கும் கஷ்டமாக இருந்தது.. ரங்கநாயகியோ தன் கண்ணீரை துடைத்தபடி பேரனின் அருகில் அமர்ந்தவர்..


''ராமசாமியை நாம் அப்பவே ஆஸ்பத்திரிக்குக் கூட்டிப் போய்ருக்கலாம் அவர் வேண்டாம் சொல்லவும் இப்படி விட்டுட்டோமே'', ஒரு மூச்சு சொல்லி அழுது தீர்த்தவர், ''இனி என்ன பண்ணலாம் ராசா'', என்று கேட்க..



அவனோ ''நாளை செய்யும் சடங்குகளை முடித்து விட்டு அவளை அழைத்துக் கொண்டு நாம் சென்னை போகலாம் ஆச்சி.. எனக்கு கம்பெனியிலே வேலை நிறைய இருக்கு… அதுவுமில்லாமல் அவளை இங்கே தனியாக விட்டுச் செல்ல முடியாது'', என்று சொல்ல,


அவரோ'' இங்கு முப்பது நாளைக்கு விளக்குப் போடணும் கண்ணு, அதன்பின் வந்து கூட்டிப் போறீயா'', என்று தயக்கத்துடன் கேட்டவரை…


''இங்கே தனியாக விட்டுப் போனால் அழுதே கரைஞ்சிருவாளே'', என்று சொல்ல,


''அவ அழுகாமல் நா பார்த்துக்கிறேன் ராசா…. நீ நாளைக்குக் கிளம்பிப் போய்யிட்டு வா.. இடையில் நேரம் கிடைத்தால் ஒருமுறை வந்துட்டுது போ.. அப்பறம் முப்பது நாள் சாமிக் கும்பிட்டதும் முறைப்படி அவளை அழைத்துப் போகலாம்'', என்று சொல்லியவர், ''அதுவரை அவளை நா பார்த்துக்கிறேன் ராசா'', என்று சொன்னார் ரங்கநாயகி ..


அவனுக்கு அவளை இங்கே தனியே விட்டுச் செல்ல தயக்கமாக இருந்தாலும், அவனின் வேலை இழுக்கச் சரியென்று தலையை ஆட்டினான்…


அடுத்த நாள் வெகுநேரம் கழித்து விழித்தவள் தன் கணவன் ஊருக்குப் போய்யிட்டான் என்று தெரிந்து அதிர்ச்சி அடைந்தவளோ.. இந்த நிலையிலும் தன்னை விட்டுச் செய்தவனை நினைத்தவளுக்கு மனதில் அந்த நிகழ்வும் நீங்காத வடுவாக மாறியது ….


அந்த நிகழ்வு தான் ரணமாக மனதில் பதிந்த வடுவானதால் அவளின் வாழ்க்கையின் இறுதியாக எடுக்கும் முடிவுக்கு அச்சாரமிட்டது..


தாலி கட்டிய காரணத்திற்காக அவன் அவளுக்காகவும் ராமசாமிக்காகவும் செய்த செயல்கள் எதுவும் ஞாபகமில்லாமல் போனது தான்

விதி என்று தான் சொல்ல வேண்டுமோ.. …


கணவன் தன்னை விட்டுப் போய்விட்டான் என்பதை அறிந்தலிருந்து மனம் வெம்பியவள், தாத்தாவின் பிரிவு அவளை மேலும் நிலை கொள்ள முடியாமல் சோர்ந்து படுத்தே கிடந்தாள்..


ரங்கநாயகியோ அவளோட நித்தம் சாப்பிட குளிக்க வைக்க போராட வேண்டியாதாக இருந்தது ….


அங்கிருக்கும் வாண்டுகளோ… அவளை பழைய மாதிரி மாற்றி துறுதுறுவென்று இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில்

அவளைக் குறும்பு பண்ணத் தூண்டினாலும் அவளோ எங்கோ வெறித்தபடி அமர்ந்திருப்பவளை மாற்ற முடியாமல் எல்லாரும் திகைத்தனர்..


ஊருக்குப் போன கணவனிடமிருந்து போன் பண்ணியாவது பேசுவான் என்று எதிர்ப்பார்த்தவளுக்கு ஏமாற்றமே அதீதமாக இருக்க அவள் தனக்குள்ளே ஒடுங்கிப் போனாள் சுகாசினி..


பிறந்தலிருந்து தாய்க்குத் தாயாக தந்தைக்குத் தந்தையாக வளர்ந்தத் தாத்தாவின் இழப்பு பேரழிப்பாக இருக்கும்போது அதன் வலியை தாங்கிக் கொள்ள அவனின் தோள் கொடுத்து சாய்த்து அணைத்துக் கொள்ளும் கணவனை எதிர்ப்பார்ப்பது விழுலுக்கு இறைத்த நீராக மாறியதே என்று நினைத்து மறுகியே இளைத்தும் கறுத்தும் போய் சுகாசினியா இது என்ற அளவிற்கு ஆளே மாறிப் போனாள்.. மனதிற்குள் தனக்கு யாருமில்லாத அனாதையாக உணர்வு தான் மேலோங்கி இருந்தது.


ரங்கநாயகியோ சுகாசினியை எதாவது இயல்பாக இருக்க வைக்க முயற்சித்தார்.. ஆனால் அத்தனையும் கற்சுவரிடம் பேசுவது போல எதுவும் அவள் செவியில் விழவில்லை ..


அவளுக்குள்ளான உலகத்திற்குள் அவளின் மனம் அலைகலைத்துக்குக் கொண்டிருந்தது…


நாட்கள் செல்ல கம்பெனியின் அதீத வேலையாக திரும்ப வெளிநாடு செல்லவும்..அங்கிருந்து சென்னை வந்துபின் அதற்கான வேலை என்று நிற்க நேரமின்றி அலைந்தவனுக்கு நிழல் முகமாக சுகாசினியின் உருவம் அவன் மனக்கண்ணில் தோன்றினாலும் அவனால் ஊர்க்குச் செல்ல முடியாத இக்கட்டான நிலையில் இருந்த நிஷாந்தனுக்கு, அங்கே ஊரிலிருந்து ரங்கநாயகியோ திரும்பத் தொடர்ந்து போனில் விடாமல் அழைத்துக் கொண்டே இருந்தார்..


மீட்டிங் இருந்தனவோ 'என்ன விடாமல் ஆச்சி அழைக்கிறாங்க', என்று ''எக்ஸ்யூஸ் மீ'', என்று சொல்லிவிட்டு வெளியே வந்து அவருக்குத் திரும்பிக் கூப்பிட அங்கே நடக்கும் நிகழ்வுகளை கேட்டவுடன் மனதில் பதட்டம் இருந்தாலும் ''இதோ கிளம்பிட்டேன்'', என்றவன், தன் பிஎவை அழைத்து மீட்டிங் கேன்சல் பண்ணச் சொல்லிவிட்டு மற்ற வேலைகளை பொறுப்பானவர்களிடம் ஓப்படைத்துவிட்டு தன் காரை நோக்கிச் சென்றவன் டிரைவரை தவிர்த்து விட்டு ஊரை நோக்கிச் சீறிப் பாய்ந்தது அவனின் கார்..


காரின் வேகமும் அவனுள் இருந்த வேகமும் ஊரில் கொண்டு நிறுத்த அங்கே ரங்கநாயகியின் கைக்குள் இருந்த சுகாசினி தன் கணவன் வந்துவிட்டதை கூட அறியாமல் மயக்கத்தில் இருந்தாள்.


ரங்கநாயகியோ அவள் முதுகை தட்டியபடி காளியப்பனை கண்டு விரட்ட அவனோ ''முதல நீங்க எல்லாரும் வெளியே போங்க.. இது எல்லாம் என் பாட்டன் முப்பாட்டன் சொத்து'', என்று கத்திக் கொண்டிருந்தான்..


காளிப்பனுக்கு நிஷாந்தன் இல்லாமல் போனதும், கையெழுத்து வாங்கினால் என்ன பாட்டன் சொத்து பேரனுக்கு கிராமத்தில் பழமை பேசும் மக்களிடம் வாழ்பவனுக்கு நிஷாந்தன் செய்த விஷயங்கள் அவனுக்குப் பிடிப்படாமல் போனதால் ஆச்சிடமும் சுகாசினியிடமும் எகறிக் கொண்டிருந்தான்..


ஆச்சியோ அங்கிருந்த கம்பை எடுத்துத் துரத்த நினைக்க, சுகாசினியின் நிலையை கண்டு அவளை விட்டு விலக முடியாமல் அவளுடன் துணையாக நிற்க வேண்டிய சூழலில் தன்னால் முடிந்த அளவிற்கு பேரனுக்கு போனில் அழைத்துக் கொண்டே இருந்தார் ரங்கநாயகி.


எதற்கும் துணிந்து அரிவாளோடு நிற்பவளுக்கு காளியப்பனின் கொச்சையான பேச்சுகளைக் கேட்டதும், தாலி கட்டியதும் விட்டுச் சென்ற கணவனின் செயலுக்குக் காரணங்கள் இருந்தாலும் உன்னைக் கண்டாலே பிடிக்காமல் தான் ஓடிப் போய்யிட்டான்.. என்று பரிகாசமாகப் பேசி அவளின் நடத்தைப் பற்றியும் அவதூறாகப் பேசவும்.. அவளால் தாங்க முடியாமல் மயங்கி விட அவளைத் தாங்கிப் பிடித்தபடி ரங்கநாயகி நிற்க… அங்கே வேகமாக வந்த காரிலிருந்து இறங்கிய நிஷாந்தனைக் கண்டு ரங்கநாயகி மனம் ஆசுவாசப்பட.. காளியப்பனோ அரண்டு போய் நின்றான் …


தொடரும்..


ஹாய்.. சாரி மக்கா மூன்று நாட்கள் யூடி போட முடியாத சூழ்நிலை .. மன்னிச்சுடு.. கதை எப்படி இருக்கு படிப்பவர்கள் கொஞ்சம் சொன்னால் நான் இன்னும் கொஞ்சம் நல்ல எழுத முயற்சிப்பேன்.. நன்றி மக்கா 😍 😍 😍 😍
20221216_155104.jpg







































.
 
Top