• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

இலக்கணம் பிழையானதோ ...30

Samithraa

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 16, 2022
Messages
97
அத்தியாயம் ..30


''சுகா மாடிக்குப் போகும் முன் கண்ணம்மாவிடம் சொல்லி ஆதினிக்கும் உங்க இருவருக்கும் சேர்த்து சாப்பிட எடுத்து போ'', என்று போற போக்கில் சொல்லியபடி ரங்கநாயகி அறைக்குள் போய்விட்டார்..


அவர் சொன்னபடி கண்ணம்மா கொடுத்த ஹாட்பேக்கில் உணவினை எடுத்துக் கொண்டு போனவளின் எண்ணங்கள் தறிகெட்டு ஓடியது …


ஒருவித தயக்கமும் தவிப்பும் அவளிடம் என்றுமில்லாத உணர்வுகளின் குவியல்களோடு மாடிக்குப் போனவள், அங்கே பால்கனியில் அப்பாவும் பொண்ணும் ஊஞ்சலில் அமர்ந்தபடி ஆடிக் கொண்டு அவன் ஏதோ சொல்வதைக் ஆதினி அதை உன்னிப்பாகக் கேட்பதும் பார்க்கக் பார்க்கத் தெவிட்டவில்லை .. அழகிய கவிதையாக இருந்தது …எப்பவும் பெண்கள் அப்பாவுக்கு இளவரசி தான்.. ஆனால் இங்கே தலைகீழாக பெண்ணே தாயாக அவனுக்குத் தோற்றத்தை உருவாக்கியதைக் கண்டு ரசித்து நின்றாள் சுகாசினி .


அவர்களின் உலகில் தனக்கு இடமில்லை என்பதை அவர்களின் செயல்களே காமித்துக் கொடுப்பதைக் கண்டு சிறு கோபமும் உருவாக வேகமாகக் காலடித் எடுத்து வைத்து அவர்களிடம் சென்றவளின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.


அதை ஓரக்கண்ணில் பார்த்த நிஷாந்தனுக்குக் கண்களில் சிரிப்பும் உதடுகளில் நெளிந்த புன்னகையை மறைத்துக் கொண்டு அவளைக் கவனிக்காமலே இருக்க, ஆதினியோ.

''ம் …மா..மா ''என்று கூப்பிடவும் ''குட்டிக்கு அம்மா வேணுமா'',.. என்று கேட்டபடி நிஷாந்தன் சுகாசினியை ஊடுருவிப் பார்த்தான்..


அதிலே அவளுள் குளிர் பரப்ப மேனியெங்கும் ஒரு நடுக்கம் உண்டாகியது..


ஆனாலும் கால்களை அழுத்தி ஊன்றியபடி அவர்களின் அருகிலே நிற்க அவளின் கைகளிலிருந்த உணவினை அருகிலுள்ள மேசையில் வைத்துவிட்டு நிற்பவளை தன் மகளின் கைகளின் துணைக் கொண்டு அவளை தன்னருகில் அமர வைத்து ஊஞ்சலை கால்களால் ஊந்தித் தள்ள அதன் வேகத்தில் ஆதினி சிரிக்க, சுகாசினியோ பிடிப்பு இல்லாதால் தன் தலைவனின் தோள்களை அழுந்தப் பற்றிக் கொண்டவள், ''போதும் போதும் பாப்புக்கு வயிற்றில் குரல் ஏத்தம் விழுந்திடப் போகது'', பதட்டத்துடன் சொல்வதைக் கேட்டவன், ''அதுயெல்லாம் என் அம்முக்கு ஒண்ணும் ஆகாது'',…என்று சொல்லி விட்டு ஊஞ்சலை மெதுவாக நிறுத்தினான் நிஷாந்தன்.


அவன் நிறுத்தியதும் ஊஞ்சலை விட்டு எழுந்தவள் ''அம்முக்குப் பசிக்கும்'', .. என்று சொல்லிவிட்டு ஆதினிக்கு பருப்பும் ரசம் கலந்து குழைந்த உணவின் கிண்ணத்தை எடுத்துக்கொண்டு ''உங்களுக்கும் சேர்த்து கொண்டு வந்துவிட்டேன் நீங்க சாப்பிடுங்க'',.. அவள் போக்கில் சொல்லிக் கொண்டிருக்க,


நிஷாந்தனோ அவள் கையிலிருந்த அம்முக்குரிய உணவினை வாங்கியவன், ''பாப்புக்கு நான் ஊட்டுகிறேன்.. நீ'',..என்று சொல்லி.. அவனுக்குரிய சாப்பாட்டைப் பார்த்தவன் வேறு எதுவும் சொல்லவில்லை .. ஆனால் அவனின் கண்களிலிருந்து ஏக்கத்தைக் கவனித்தவள், அதற்காகத் தன் மனம் கூறிய விடையில் அதிர்ந்தாள் சுகாசினி.


ஆனால் அவளால் அதைச் சுலபமாகச் செய்ய மனம் தடுமாறியவளை ஒரு ஏக்கத்துடன் ஆதினிக்கு வேடிக்கை காட்டியபடி உணவை ஊட்டிக் கொண்டிருந்தவனின் வாயின் அருகே தயக்கத்தை துறந்து கண்ணாடி வளையல்கள் அணிந்த நீண்ட கரம் வருவதைக் கண்டு ஆச்சரியத்துடன் வாயைத் திறக்க, ஒவ்வொரு கவளம் அவனுக்கும் ஊட்டிக் கொண்டிருந்தாள் சுகாசினி ..


அங்கே தங்களுடைய மனவருத்தங்களையோ கோபதாபங்களையோ எதுவும் பகிரவில்லை எதுக்கும் விளக்கமும் கொடுக்க வில்லை. ஆனால் அன்பு பறிமாறப்பட்டது. கண்களால், கரங்களால் அங்கே பறிமாறிய அன்பில் அவன் உள்ளமும் குளிர்ந்தது.. வயிறும் நிறைந்தது…


அதுக்குள் குழந்தையும் உண்டனர், அதன் வாயை துடைத்துவிட்டவன்.. உண்ட களைப்பு தொண்டனுக்கு என்றபடி ஆதினி உறக்கத்தை நாட அங்கே இருந்த திவானில் படுக்க வைத்துத் தட்டிக் கொடுத்த நிஷாந்தன், குழந்தை தூங்கியதும்.. சுகாசினியின் அருகில் மெதுவாக வந்தான்.


அவன் வருவதைக் கண்ட அவளுக்குள் பட்டாம்பூச்சியின் வண்ணச் சிறகாய் படபடப்பு உண்டாகுவதைத் தடுக்கயிலாமல் பார்த்துக் கொண்டிருந்தவளின் கையிலிருந்த தட்டை வாங்கி அவளுக்கான உணவினை அவனே தன் கரங்களால் ஊட்டிவிட்டான்.


குழந்தை பருவத்தில் தனக்குக் கிட்டாத ஒன்றை தன் மனைவியின் கையால் அன்று நிறைவேறியது மனதிற்கு உவகை கொடுக்க தன் மனைவிக்கும் தன் கைகளால் உணவினை ஊட்டி அவளின் பால் இருக்கும் அன்பை பறைசாற்றியதைக் கண்டவளுக்குக்

கண்களுக்குள் கண்ணீர் கரை கட்டி ஒற்றை துளி உருண்டு கன்னத்தில் வழிந்தது..


அதைத் இடது கரத்தால் துடைத்தவன், ''இனி இக்கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் வரக் கூடத் தடை விதிக்கப்பட்டது என்பதை தெரிவித்துக் கொண்டு'', .. என்று அவன் கேலியாகச் சொல்வதைக் கேட்டவளுக்கு சிரிப்பு வர .. வாயினுள் இருந்த உணவால் தொண்டை குழியில் சிக்கிப் புறையேறி இருமத் தொடங்கினாள் சுகாசினி.


அவள் தலையில் தட்டியவனோ ''மெதுவா, மெதுவா'', என்று சொல்லியவன் கரங்களைச் சுத்தப்படுத்திவிட்டு அவளைத் தன்னருகில் இழுத்து அமர வைத்துக் கொண்டவன் அவளைத் தன் தோளில் சாய்த்துக் கொண்டான்.. அப்பொழுது இருவருக்குள்ளும் பேரமைதி உண்டாக அதை மௌனமாக அந்நிமிடங்களை கடக்க முயன்றனர் இருவரும் .


சுகாசினியின் உள்ளம் தனக்கானக் கேள்விகளுக்கு அவனிடம் விடை தேடி அலைந்தாலும் தான் செய்தற்கு அவனிடம் என்ன விளக்கம் தரப்போகிறோம் என்ற பதட்டமும் அவளிடம் உண்டாகி மேனி இறுகிப் போனது சுகாசினிக்கு…


அவளைத் தோளை மெதுவாக வருடிக் கொடுத்தவன் ''ரீலாக்ஸ்ஸாக இரு சுகா.. உனக்கும் எனக்கும் இடையே கேட்க வேண்டிய கேள்விகள் பல இருக்கலாம் அதை எல்லாம் உடனே தெரிந்துகொள்ள வேண்டும் ஏன் அவசரப்படுகிற?.. மெல்ல தெரிந்து கொள்ளலாம் .. இப்ப நீ நம்ம அம்மு இருவரும் என்னுடன் என் கைக்குள் இருப்பது எனக்கு அவ்வளவு மகிழ்ச்சியா இருக்கிறது தெரியுமா … இந்த உலகமே என் கைக்குள் அடங்கியது போல, இருக்கு.. எத்தனையோ தொழில்களில் என்னுடைய வெற்றி பல கிடைத்தாலும் எனக்குக் கிடைக்காத ஒன்று இந்த அன்பு காதல் நேசம் என் அம்மு.. இப்ப எல்லாம் எனக்குக் கிடைத்த இத்தருணத்தில் பழையதைப் பேசி இந்நொடியின் சந்தோஷத்தைக் குறைத்துக் கொள்ள விரும்பவில்லை'', …


''இனி வரும் காலங்களில் மெல்ல இருவரும் நம்மை பற்றிப் புரிந்துக் கொள்ளலாம் .. இதுவரை உனக்கும் என்மேல் கோபம் அதீதமாக இருந்தது .. இப்ப அதைக் குறைந்து இருக்கும் நினைக்கிறேன் … இனி வரும் நாட்களில் ஒரு புரிதல் நமக்குள் வந்தால் அது நம்முடைய நம்பிக்கையை கடைசிவரை இழுத்துப் பிணைத்து வைக்கும் .. இப்ப எதைப் பறறியும் யோசிக்காமல் இப்ப நான் உன் கூட இருக்கிற இந்தப் பொன்னான நிமிடங்களை ரசித்து என் ரசனைகளோடு உன்னுடைய காதலை உணர்ந்து கொள் .. அது போதும்'', என்று சொன்னவனை விழி விரித்துப் பார்த்தவளின் பெரிய கருவண்டு விழிகளில் மையல் கொண்டு இரண்டு விழிகளில் அழுந்த முத்தமிட அவளோ கண்களை மூடிக் கொண்டு அவன் சொன்னதைப் போல் அந்த சொர்க்கத்தின் நிகழ்வுகளை தனக்குள் பூட்டிக் கொண்டாள்.


ஒருவரின் தோளில் ஒருவர் சாய்ந்த பொழுதினை கழித்தவர்கள் அதற்கு மேலே செல்லவில்லை .. உடனுக்குடன் எந்தப் பிரச்சினைகளைப் பேசுவதைவிட கொஞ்சம் ஆறப் போட்டு பொறுமையாகப் பேசும்போது கோபமெல்லாம் வடிந்து அங்கே அன்பே பிரதானமாக இருக்கும் அதை உணர்ந்து தான் நிஷாந்தன் பேசுவதைத் தள்ளிப் போட்டான் ..


இப்படி ஒரிரு நாட்கள் அவரவர் வாழ்க்கையில் இருவருக்குள் ஒரு ஒட்டுதல் வர அதற்கு ஆதினியும் ஒரு காரணமானாள்.. அப்பாவை எந்தவளவுக்குத் தேடினாலோ அதை அளவு தன் அம்மாவையும் அவர்களுக்குள் இணைத்துக் கொண்டாள்.


இருவரையும் இணைக்கும் அன்பின் பாலமாக அவள் இருப்பதைக் கண்ட ரங்கநாயகிக்கு மனதிற்குள் உவப்பாக இருந்தது.


ஆபீஸ்க்கு இருவரும் ஒன்றாகக் கிளம்பவதும்.. மாலை இருவரும் சேர்ந்து வந்து அவளை வீட்டில் விட்டுட்டு குழந்தையோடு சிறிது நேரம் கொஞ்சிக் குலாவி விட்டு திரும்பக் கம்பெனிக்குச் சென்று இரவு தான் வீடு திரும்புவான்.. சுகாசினிக்கு அவனோடு போவதும் அங்கே வேலை செய்பவர்களிடம் பேசுவதும் .. எங்கே சிறு குறை இருந்தாலும் அதை கணவனோடு சேர்ந்து சரிப் பண்ண முயற்சிப்பதும் அவள் நேரங்கள் அவளுக்கு இனிமையாக இருந்தது ..


அதுவும் நிஷாந்தன் தன்னிடம்
20221216_155104.jpg
சிறிது கூட எந்த சஞ்சலமின்றி அன்பை பொழிவதைக் கண்டு உள்ளத்தில் காதல் அருவி பொங்கினாலும் அதை அவனிடம் வெளிப்படுத்த தயக்கமே உருவானது… அவனை எவ்வளவு உதாசீனப்படுத்தி விட்டு இப்பப் போய் நா உன்னை விரும்புகிறேன் என்று சொல்வது நாடகமாக அவளுக்கே தோன்ற.. நிஷாந்தன் சொல்வதைப் போல சொல்லாமலே மனதிற்குள் உணர்வுக் குவியலாக உணர்ந்து அவனிடம் சரணகதி ஆகும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பதை அவள் உணர்ந்தே இருந்தாள் …


ஆனால் அதற்கான நேரம் இருவருக்கும் வாய்க்கவில்லையா ..இல்லை அவர்கள் அதை தானே உருவாக்காமல் இயல்பாக ஒன்றி இணைய வேண்டும் என்ற எண்ணமோ என்னவோ .. மற்ற விஷயங்களில் தயக்கமின்றி இருப்பவர்கள் தங்களுடைய தனிமையான நேரத்தில் ஆதினியை வைத்தே நேரத்தைக் கடத்தினர்..…


காலை பொழுது காப்பியும் தொடங்கி மாலை எல்லாரும் தோட்டத்தில் அமர்ந்து சிரிப்பும் கும்மாளமுமாக இருக்க இதை எல்லாம் தூரமாக அமர்ந்து இருந்த ராஜலட்சுமி மனம் பொருமினாலும் அவர்களும் கூப்பிடவில்லை ராஜலட்சுமியும் அவர்களை நெருங்கவில்லை..


சிறுவயதிலும் வளர்ந்து தொழிலில் ஜாம்பவானாக உயர்ந்த போதும் சரி எல்லாரும் அவ்வீட்டில் இருக்கும்போது தனித் தீவுவாக நிஷாந்தன் இருந்ததைப் போல இப்ப ராஜலட்சுமி நிலை அவ்விதம் ஆனது..


தன்விகா அஸ்வினும் ஆதினியோடு போடும் ஆட்டமும் விளையாட்டையும் கண்டு மகேந்திரனுக்கு நிறைவாக இருந்தது .. தனக்குப் பின் தன் குழந்தைகள் ஒருவர்க்கு ஒருவர்விட்டுக் கொடுக்காமல் இருப்பார்கள் என்பதே அவர்க்கு மனத்தை நிறைத்தது.


அன்றைய மாலையில் மதியமே ஆபீஸிலிருந்து வந்துவிட்டாள் சுகாசினி .. நிஷாந்தனுக்கு அன்றைக்கு வேலை அதிகமாக இருந்தால் வர முடியவில்லை ..


மாலை எல்லாரும் தோட்டத்தில் ஸ்னேக்ஸ் காப்பி என்று குடும்பமே கூடி இருக்கும்போது ரங்கநாயகி அஸ்வினும் ஒரு பக்கமும் தன்விகா சுகாசினி ஒருபக்கமும் மகேந்திரன் ஆதினியை வைத்திருக்க அங்கே விளையாட்டு ஆரம்பமானது…


கபடி கபடி… ஆட்டம் களைகட்டியது. ''அவர்களுக்குள் விளையாடுவதால் விளையாட்டு முறைகளை தேவையில்லை'' என்று சொன்ன ரங்கநாயகி'' நாம என்ன ஒலிம்பிகில விளையாடப் போகிறோம்'', என்று நக்கலாகச் சொல்லிவிட்டு இரண்டு பேராக பிரிந்து நின்று கொண்டனர்..


மகேந்திரன் மடியிலிருந்த ஆதினி கையைத் தட்ட ரங்கநாயகியோ…


''வாடியம்மா வாடி வண்டாட்டம் வாடி

ஆத்தங்கரைபக்கம் காத்திருக்கேன் வாடி..

காவேரி தண்ணீல குளிச்சு வந்தவ தான்டி..

கரிகால சோழனிடம் பாடம் படிச்சவ தாண்டி.

காவேரிப்பட்டினம் பட்டினத்தை பார்த்திருக்கிறேன் வாடி..

கண்ணகி வீடு எங்க வீட்டு பக்கம் தாண்டி'', ..


தன்னுடைய வெங்கலக் குரலில் பாடியபடி வர…


சுகாசினியோ அதை அசலாட்டாக அவரை டபாய்க்க.. தன்விகா தன் ஆச்சியை ஆச்சரிமாகப் பார்த்தாள் ..

இந்த வயசில ஆச்சி என்னமா விளையாட்டும் பாட்டுமா கலக்கது என்று நினைக்க.. அஸவினோ.. ''ரங்குஸ் சூப்பரு'', என்று சொல்ல..


சுகாசினியோ தோள்பட்டையில் கழுத்தை இடித்துக் கொண்டவள்..


''காத்து காத்து

வரவிடு

பூங்காத்து வீசட்டும்..

தள்ளி போய் விடு

வழிவிடு வழிவிடு

தென்றல் காத்து வீசட்டும்

வழிவிடு வழிவிடு'',…


என்று அவளும் பாட.. அங்கே குடும்பத்தில் எல்லோரின் சிரிப்பின் சத்தத்தில் நிஷாந்தன் காரைவிட்டு இறங்கி அங்கே வந்து நின்று தன் மனைவியை ரசனையோடு பார்ப்பதை யாரும் கவனிக்கவில்லை ..


சுரிதாரின் துப்பாட்டாவை இடுப்பில் கட்டியபடி அவள் பாடிக் கொண்டு செல்வதைப் பார்த்தவன்…


என்கூட காதல் சடுகுடு விளையாடாமல் இங்கே கிழவிக் கூட சடுகுடு விளையாடுகிறாளே.. இவளை வச்சுகிட்டு என்ன செய்ய என்று யோசனையோடு பார்த்தவனை ரங்கநாயகி பார்த்ததும் ''என்ன ராசா நீயும் வரீயா ஆட்டத்திற்கு'',… என்று கேலியாகக் கேட்டவரைக் கண்டு முறைத்தவன் ''பொண்டாட்டி கூட விளையாடு சொன்னால் நியாயம்'', .. என்று முணுமுணுக்க..


ஆச்சி சொன்னதும் திரும்பித் தன் கணவனைப் பார்த்துச் சிறிது அதிர்ந்தவள் அவனின் பார்வையில் மேற்கில் மறையும் பகலவனின் வண்ணமான செங்கொழுந்தாகச் சிவந்து போனாள் சுகாசினி….


தொடரும்


ஹாய் மக்கா அடுத்த அத்தியாத்தில் கதை முடிந்து விடும் படித்த கருத்துக்களை கூறி எல்லாருக்கும் மிக்க நன்றி 😍 😍 😍















.



















.
 

Lakshmi murugan

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 14, 2022
Messages
606
Nice
 
Top