• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உன்னால் உயிர்த்தேன் - இறுதி அத்தியாயம்

Dheera

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 17, 2023
Messages
234
இறுதி அத்தியாயம்


உன் விழிகளில் தொலைந்த என்னை...
உன் மனதினுள் புதைத்து வைத்தாய்...
நான் இழந்தவைகளுக்கு அர்த்தம்...
நீ வரத்தான் என்றறிந்தேன்...
என் உதிரத்தில் உறைந்து...
என் உயிருமானாய்...
நானே நீ...
நீயே நான்...
நாம் வாழ்வோம்...
நம் காதலையும் வாழ வைப்போம்...


"அக்ஷு கொஞ்சம் ஆடாம நில்லுடி" நம் கதாநாயகனிடமிருந்து ஓர் வேண்டுகோள்.

"அச்சோ... எவ்வளவு நேரங்க இந்த பிளிட்ஸ வச்சு சரி பண்ணுவிங்க...? டைமாகிட்டு பாருங்க..." இதுவோ அவனவள்.

"ஃபினிஸ்ட்..." என்ற ஆதவ் குனிந்திருந்து எழுந்து கொண்டான்.

அவளது சாரியின் ப்ளிட்ஸை எடுத்து விடுவதற்கே இந்த அக்கப்போர்..

எழுந்தவன் அவளை முழுவதுமாக பார்த்து விட்டு திருப்தியான புன்னகையை சிந்தினான்.

வழக்கம் போல அந்தப் புன்னகையில் மயங்கி நின்றது என்னவோ அக்ஷய ப்ரியா தான்.

எதற்காக இந்த அவசரம் என்று தான பாக்குறீங்க...? வேறெதற்கு ருத்ரனுக்கு பெண் பார்க்கும் படலம் தான்.

தன் நண்பர்கள் மூவரும் மனைவி சகிதம் வர வேண்டும் என்பது ருத்ரனின் வேண்டுகோள்.

மூனு நண்பர்களா??? யார்ரா அந்த மூன்றாம்மவன்...?
நம்ம விக்ரம் தான்...

அங்கே ஆதவின் இல்லத்தின் ஹாலிலே அனைவரும் ரெடியாகி நின்று கொண்டிருந்தனர்.

மெல்லப் படி இறங்க வைத்து அக்ஷய ப்ரியாவை அழைத்து வந்து கொண்டிருந்தான் ஆதவ்.

வெள்ளை சேர்ட் ப்ளசர் மற்றும் கறுப்பு நிற பேன்ட் அணிந்து வந்தவன் என்றும் போல இன்றும் கர்வத்துடன் படிகளில் இறங்கி வந்தான்.

கையில் கோட் உடன் வந்தவனின் உடல்மொழி சிங்கமோ என அஞ்ச வைக்கும். அவன் அக்மார்க் நடை அவனுக்கு தனி அழகு...
நேர்த்திக்கு இவனிடம் தான் பயிற்சி பெற வேண்டுமோ...?காலணிகளில் கூட ஒரு தூசு படிந்து இருக்காது..
கூனாத முதுகுத் தண்டு.. நிமிர்ந்த நடை...
இதழசையா பேச்சு...
சிரித்தால் கூட கண்ணில் இருக்கும் கூர்மை மங்காது...
ஆம் அவன் ஆணினத்திற்கே கர்வம் சேர்த்தவன்...
அவனே ஆதவ் க்ரிஷ்.

அவனினுக்கு ஏற்றது போல அவளும் சாரியுடன் இறங்கி வந்து கொண்டிருந்தாள் அவளவன் கைவளைவினுள்.

அக்ஷய ப்ரியாவின் அருகில் வந்த சங்கவி பாசத்துடன் முத்தம் வைக்க தர்மலிங்கம் பக்கவாடாக வந்து தலையை தடவ அவரை கனிவுடன் பார்த்தாள் அக்ஷு.

"அப்போ எனக்கு...?" என்ற விது மூஞ்சியை ஏழு முழத்துக்கு தூக்கி வைத்துக் கொள்ள "இங்க வாடா அம்மு.." என அழைத்து அவளுக்கும் முத்தமிட்டனர்.

அவளோ சின்ன குழந்தை போல தந்தையின் கழுத்தை கட்டிக் கொண்டு சிரிக்க அங்கிருந்த அனைவருக்கும் முகத்தில் புன்னகை குடி கொண்டிருந்தது.

ஆளாளுக்கு ருத்ரனின் தொலைபேசியில் இருந்து அழைப்பு வந்து கொண்டிருக்க, அட்டண்ட் செய்த தீக்ஷனுக்கு காரசாரமாக வந்து விழுந்தன ருத்ரனிடமிருந்து திட்டுக்கள் "வந்துத் தொலைங்கடா க்ராதக கூட்டங்களா..." என்றவன் அழைப்பை துண்டிக்க தீக்ஷன் பாவமாக பார்த்து வைத்தான்.

"என்னடா..?" என்ற ஆதவிடம்

"அந்த கஞ்சக்கபோதிக்கு இப்போ தான்டா லவ் மூட் எக்டிவ் ஆகிக்கு..அது தான் ஆட்டம் காட்டுறான்...கிடாமாடு.."என இங்கே தீக்ஷன் தன்னை தாளித்து கொட்டுவதறியாத ருத்ரனோ அங்கே பல்லை இழித்துக் கொண்டு தயாராகிக் கொண்டிருந்தான்.

"ஓகே..ஓகே..லெட்ஸ் கோ..." இப்போது ஆதவ்.

"வேற வழி.." என தலையில் அடித்துக் கொண்ட தீக்ஷனை பார்த்து அனைவரும் மறுபடியும் சிரிக்க நேரம் ஆவதை புரிந்து கொண்டு அங்கே சென்றனர்.

அங்கே நல்லபடியாக அனைத்தும் முடிவாக்கப்பட்டு ஓர் தினத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

அவளின் பெயர் முதல் அட்ரஸ் வரை அனைத்தையும் விதுவிடமே கேட்டுப் பெற்றுக்கொண்டான் ருத்ரன்.

அதற்குள் அவனை வைத்து ஓட்டி தள்ளிவிட்டாள் விது என்பது வேறு கதை...


...


அன்றிரவு தீக்ஷன் முகத்தை பாவம் போல வைத்துக் கொண்டு சோஃபாவில் அமர்ந்திருக்க விதுவோ நறுக்கிய அப்பிள் துண்டுகளை வாயில் போட்டு அறைத்துக் கொண்டிருந்தாள்.

திரும்பியவள் தீக்ஷனை பார்த்து விட்டு "டு யூ வான்ட்...?" என கண்ணை உருட்டி கேட்க ஏதோ பஞ்சாமிர்தத்தை வானலோக தேவதைகள் தரவா என கேட்டது போல ம்ம் என முகம் பிரகாசிக்க தலையை ஆட்ட "ஐயே...எச்சப் பய..போயா தரமாட்டேன்..." என விது அதையும் வாயில் போட்டு அதக்க, தீக்ஷனுக்கு முகம் தொங்கிவிட்டது.

"யோவ்...திரும்புயா வயிறு வலிக்க போகுது எனக்கு..."

"விது ப்ளீஸ்டா இந்த அப்பாவி ஜீவன மன்னிச்சி விட்டுடுடா."

"யாரு நீ அப்பாவி ஜீவன்?" என்கவும் ம்ம் என அவன் உதட்டை பிதுக்கினான்.

போடாங்....என இழுத்தவளை ப்ளீஸ் என தொண்டையில் கைவைத்து கெஞ்ச...

"சரி பொழச்சிப் போ..."என்றவள் தன் வயிற்றை நிரப்புவதே தலையாய கடமை என நிரப்பிக் கொண்டிருந்தாள்.

"ச்சே..வர வர ஒரு மரியாதை இல்லாமல் போச்சு" என முணுமுணுத்துக் கொண்டே காலை தூக்கி சோபாவில் வைத்துக் கொண்டு பிளோவை கட்டிக் கொண்டு இருந்தவனின் பேச்சு அவளுக்கு துல்லியமாக கேட்டது..
இதழ் கடையோரம் வந்த சிரிப்பை அப்பிளை இட்டு அடைத்து விட்டாள்.

எதற்கு இந்த சிலேப்பி இப்படி சீன் காட்டுறானு பாக்குறீங்களா...?கற்காலத்துல அவன் அறைஞ்சதுக்கு ரிவென்ச்சாம்...நல்லா பண்ணுறா போ...

அவனோ இப்போ பார்ப்பா அப்போ பார்ப்பா என கன்னத்தில் கைகுற்றி அவளை பார்த்து வாயைபிளந்து கொண்டிருக்க அவளோ ஐம்பது சதத்துக்கும் கூட அவனை கணக்கில் எடுக்கவில்லை.

ஒரு நாவல் கதையை அவள் வாசித்து முடியும் வரை அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு தூக்கத்தை விட அவளின் மன்னிப்பு பெரிதாகிப் போனது.

நாவலில் வந்த சில்மிஷங்களை கடைக்கண்ணால் தீக்ஷனை பார்த்துக் கொண்டே வாசித்து வெட்கப்பட்டவளுக்கு அவனின் மடியிலே ஏறிக் குதிப்போமா என்றிருந்தது.

இருந்தும் கல்நெஞ்சக்காரி அமைதியாகவே இருந்துவிட்டாள்.

ஒரு கொட்டாவியுடன் லைட்டை ஆஃப் செய்துவிட்டு தூங்க சென்றவளை "அட கிரகமே...இன்னைக்கும் தரைலதான் ஃபஸ்ட் நைட்டா" என உண்மையாகவே அவளுக்காக ஏங்கினான் தீக்ஷன்.

பக்கி இன்னும் ஃபஸ்ட் நைட் கூட செலிப்றேட் பண்ணைல்ல...ஹா..ஹா...

தரையில் விரிப்பை உதறிவிட்டு தடார் என தலையணையை தூக்கி போட்டவன் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு கீழே படுக்கப் போக "டாக்டர் சார்..." என்றவளின் குரலில் அடித்துப் பிடித்து கொண்டு தீக்ஷன் எழும்பிப் பார்த்து இளிக்க, அவளோ அந்தப் பக்கம் திரும்பி படுத்துக் கொண்டாள்.

ச்சே...என்றவன் தன் பிரம்மையோ என மறுபடியும் அமர்ந்து மல்லாக்காக படுத்துக் கொண்டு கண்களை மூடிவிட்டான்.

உப்புத் திண்டவன் தண்ணி குடித்து தானே ஆக வேண்டும் என எண்ணிக் கொண்டு அவன் கிடக்க, சிறிது நேரத்தில் தன் நெஞ்சில் மென்மையான பாரத்தை உணர்ந்தவன் நிமிர்ந்து பார்க்க விது அவனை பார்த்து அழகாக கண்ணடித்து சிரித்து வைத்தாள்.

"ப்..ப்ரியா...இ..இஸ் இட் ட்ரூ...?" என கனவு தானோ என பயந்து அவன் கேட்க...

எஸ் என தலையை அவள் ஆட்ட மனைவியை கட்டிக் கொண்டான்...

இனி என்ன அங்கே டும்..டும்...டும் தான்...வாங்க நாம கெளம்புவோம்...

...


பால்கனியில் அவள் நின்றிருந்தாள்.

தன்னவளை தன் கண்களில் நிறைத்துக் கொண்டு பின்னாலிருந்து அணைத்து நின்றான் ஆதவ்.

தெளிவான வானம். கலங்கம் இல்லாத நிலவொளி... கண்ணை சிமிட்டிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்கள்.. பார்க்கவே இதமாய் இருந்தது...

"எவ்வளவு அழகாக நம்முடைய வாழ்க்கை மாறிட்டில்ல...நீ, நான் நம்ம பேபி...ஆசம்.." என ஆதவ் உணர்ந்து கூற

"ம்ம்.." கொட்டினாள் அக்ஷு.

"தனியே இருந்த எனக்கு வரமாய் கிடைத்தவள் நீ... அதற்கு பரிசாய் கிடைச்சது நம்ம குழந்தை..." என்கவும் அவளுக்கும் அது தானே நிலை.

மௌனமாக அவனின் அருகாமையை இரசித்து நின்றவள் அவன் கையுடன் தன் கை கோர்த்தாள்.

அவளுடன் சேர்ந்து அந்த வானை இரசிக்க தொடங்கினான் ஆதவ் க்ரிஷ்...

பின் அவளை அழைத்துக் கொண்டு வெளியே வர அவள் இந்த நேரத்தில் எதற்கு வெளியே என புரியாமல் பார்க்க பார்க்கிங் ஏரியாவிற்கு அழைத்து சென்றவன் போர்த்தி இருந்த போர்வையை எடுக்க அங்கே அழகாக அவனை போல கம்பீரமாக வீற்றிருந்தது அப்பாச்சி (Apache) ஒன்று...

அவள் ஆச்சர்யமாக கண்ணை விரிக்க அவளை முழுவதுமாக உரசிக் கொண்டு காதருகில் குனிந்து கன்னத்தில் முத்தம் வைத்தவன் "அப்பாச்சி உனக்கு பிடிக்கும்...அதுல உன் கூட ரைட் போக எனக்கு பிடிக்கும்..சோ சிம்பில்...கம் எஞ்சோய் த நைட்..." என்றவன் பைக்கில் ஏறி அமர்ந்து அவளை அமரச் செய்தவன் சென்றதோ யாருமற்ற வீதியில் தனியையில் தன் கர்வத்தை வீழ்த்திய தேவதைப் பெண்ணுடன்...

அவர்களுக்கு வழிவிட்டு அந்த இனிமையை நாமும் ரசிப்போம்.


முற்றும்.


தீரா.
 
Top