• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உன்னால் உயிர்த்தேன் - எபிலோக்

Dheera

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 17, 2023
Messages
234
எபிலோக்

ஐந்து வருடங்களுக்கு பிறகு சென்னையில் ஏ.கே.ஏ.பி பெலஸ். ஆமாங்க ஒரு ஏ.பி கூடிட்டு ஃபோர் அக்ஷய ப்ரியா.

"ப்ளீஸ்டா குட்டி..." ஆதவ் கெஞ்சிக் கொண்டிருந்தான். ஆனால் அது அக்ஷய ப்ரியா இல்லை.

என்ன அக்ஷு இல்லையா...? அப்போ யார்ட்டடா நம்ம சிங்கம் சிதைஞ்சு போய் நிக்கு..!?

வேற யாரு அவன் பெத்த முத்து ரத்தினம் கிட்டதான்.

இரண்டு அரை வயதேயான குட்டி தேவதை அவளோ..
அவட பெயர அவதான் சொல்லுவாலாம். நான் வாய் தொறக்கலம்மா..

அப்படியே அக்ஷய ப்ரியாவின் அச்சு... ஆனால் வாய் மட்டும் விதுவை உரித்து வைத்திருப்பவள்.

"டாதி..டாதி...இந்த தியா குத்தி சொல்லுறத கேப்பிங்க தான..?" என்ற வாண்டு அப்பனின் பாதி இங் பண்ணியும் பாதி வெளியேயும் தொங்கிக் கொண்டிருந்த அந்தப்பக்க சேட்டை ஒரு கையாலும் மற்ற கையில் டையையும் இழுத்துக் கொண்டு அவனை விடாமல் கதை அளந்து கொண்டு இருக்கிறது.

"தியா குட்டி டாடி செல்லம் தான..? அப்போ அப்பா சொல்றத கேப்பிங்களாம்...அப்பா ஆபிஸ் போய் வந்து உங்கள கூட்டிட்டு போவேணாம்..." என தந்தையானவுடன் குழந்தையாக மாறி தன் உதிரத்தில் உதித்த அடங்காபிடாரியிடம் மண்டியிட்டு அமர்ந்து கொண்டான் தாங்கமுடியாமல்.

அரை மணித்தியாலமாக இப்படி தான் நடந்து கொண்டிருக்கிறது சங்கதி..

வாசலை எட்டிப்பார்ப்பதும் மறுபடியும் இந்த வாலிடம் மாட்டுவதுமாக விழி பிதுங்கி நின்றான் அந்த உலகம் போற்றும் தொழிலதிபன்.

ஆபிஸ் ரெடியாகிக் கொண்டிருந்தவனை பீச் ஹவுஸ் இற்கு அழைத்து செல்லுமாறே கேட்டுக் கொண்டிருக்கிறது அந்த சில்வண்டு.

"நோ டாதி..வாங்க போலம்..." என மண்டியிட்டு அமர்ந்தவனின் மடியில் போய் ஒய்யாரமாக அமர்ந்து கொண்டது வாண்டு.

தன் பிஞ்சுக் குழந்தையின் இந்தச் செயல் இரசிக்க வைத்தாலும் அவனது கடமை அவனை அழைத்துக் கொண்டிருக்கிறதே.

காலையிலேயே முக்கியமான மீட்டிங் இருந்தது அவனுக்கு.

"அது டாதி இல்லடா பேபி..டா..டி.." என குழந்தைக்கு பிழையானதை திருத்தவும் தவறவில்லை அந்த ஆசான்.

"ஓகே டாதி..." அப்போதும் அப்படியே கூறியது ஆதவின் தவப்புதல்வி.

சிரித்துவிட்டு பால் மணம் மாறாமல் இருந்த தன் மகளின் கன்னத்தில் முத்தமிட்டவன் "டாடிக்கு முக்கியமான மீட்டிங் இருக்குடா...பேபி மம்மி கூட இருங்க..டாடி வேலை முடிஞ்ச உடனே ஓடி வந்துர்ரேன்" என கூறியதெல்லாம் அந்த குட்டி கணக்கில் எடுக்கவே இல்லை.

கையில் பிடித்திருந்த ஆதவின் ஆடையை கசக்கி விளையாடிக் கொண்டிருந்தது.

அதை பார்த்தவனுக்கு சப் என்றாகிவிட்டது. உடை வேறு மாற்ற வேண்டுமே..ஏற்கனவே நேரம் எட்டு தாண்டி போய்கொண்டிருந்தது.

அவன் போனால் மட்டும் தான் அனைத்தும் அங்கே அரங்கேறும். அதற்காக மற்றவர்களை காக்க வைக்க அவன் விரும்பவில்லை.

அப்போது தான் உள்ளே வந்த அக்ஷய ப்ரியா கணவன் இருந்த கோலம் பார்த்து அதிர்ந்தது ஒரு நிமிடம் தான். அடுத்த கணம் கோவமாகிவிட்டாள்.

"அடியேய் தியா எழும்புடி..." என அதட்டினாள் மகளின் குறும்பறிந்த தாயாக

அதுவோ "மம்மி தியா சொல்லாத...ஐ ஆம் ஆதியா...சன் ஓப் ஆதவ்..." இது மட்டும் தான் அந்த குழந்தை பிழையில்லாம் சொல்லும் அழகான மொழி.

தகப்பன் கர்வத்தில் தன் மகளை அணைத்து முத்தமிட அதுவும் தந்தையின் தாடியுடன் கூடிய கன்னத்தில் தன் பிஞ்சு இதழ் பதித்து சிரித்தது.

அது என்னவோ உலகத்திலே இல்லாத டாடி பேபி தான் இதுங்க. அவனுக்கு தன் குழந்தைகள் எல்லோரும் ஒன்று தான்..இருந்தும் முதல் பெண் குழந்தை அதுவும் குறும்பரசி என்பதால் ஆதவ் இவளை கொஞ்சித் தீர்த்து வைப்பான்.

அதற்கு மேல் இந்த வாண்டு. அப்பன் மட்டுந்தான் செல்லம்...அவனை விட்டு ஓரடி நகர மாட்டாள். அவனின் நெஞ்சிலே தூங்கி, அவன் நெஞ்சில் கிடந்தே முழிப்பாள்.
டாதி..டாதி என அவனையே சுற்றி வருவாள்.

அக்ஷய ப்ரியா காண்டாகி விடுவாள் அப்பன் பிள்ளை அலப்பறை தாங்கமுடியாமல்.

தன் கணவனை குழந்தைகளிடம் கூட விட்டுக் கொடுக்க மாட்டாள். அவனும் அதனை புரிந்து நடந்து கொள்வான். அதனால் இரண்டு பக்கமும் பேலன்ஸ் செய்து சரி கட்டி விடுவான்.

குழந்தையின் பேச்சில் கடுப்பான அக்ஷு "இந்தக் கொழுப்புக்கு மட்டும் கொறச்சல் இல்லை.. அதென்னடி உன்ட டாடி மட்டும் தியா சொல்லலாம்..நான் சொல்ல கூடாதாடி...?"

"இல்லை.." என தலையாட்டியது அக்ஷுவின் அடங்காபிடாரி..

"கொழுப்பெடுத்தவ...முதல்ல நகருடி என்ட புருஷன விட்டு..." அவளுக்கு இது தான் பிரச்சினை. ஆதவுக்கு மகளாய் இருந்தாலும் அவன் யாரிடமும் சிரம் தாழ்த்தி நிற்க கூடாது.

மனைவியை பற்றி அறியாதவனா அவன். காதல் பொங்கி வழிய அக்ஷய ப்ரியாவை பார்த்து ஜொள்ளுவிட்டுக் கொண்டிருந்தான்.

கணவனின் பார்வை உணர்ந்து முகம் சிவந்து போனாலும் பேச்சு என்னவோ மகளிடம் தான் தொக்கி நின்றது.

"நோ மம்மி...நா டாதி செல்லம்..வர மாத்தேன்.."

"அடியேய் சிங்காரி...அவர் என்ட புருஷன் டி...முதல்ல எழுந்திரு.." என மகளிடமே கணவனுக்காக சண்டை போட்டுக் கொண்டிருந்தாள் ஆதவின் அக்ஷு.

"அக்ஷு குழந்தை கூட என்னடி போட்டி..." என்று பிள்ளையின் தலையை தடவி விட இன்னும் கோவமாகியது அக்ஷுக்கு.

"இவளா குழந்தை...குட்டி பிசாசு..." என சாரியை தூக்கி இடுப்பில் சொருக அந்தோ பரிதாபம் ஆதவ் கவுந்துவிட்டான்.

"காலைலயே உசுப்பேத்தி விடுறா இந்த செல்ல ராட்சசி..." என மனதில் மனைவியை செல்லம் கொஞ்சியவன் அவளின் இடையில் பார்வையை வெட்கமேயின்றி தவழ விட்டான்.

அது தானே அவளுக்கும் வேண்டும். தன்னை மட்டுமே அவன் கொஞ்ச வேண்டும் என்ற காதல் சைகோ அவள்.

"அந்தா மாம்ஸ் ஃபோமுக்கு வந்துட்டார்..இனி அக்ஷுட காட்டுல மழை தான்" என்று நினைத்து மனதில் கிளுக்கி சிரித்தவள் வேண்டுமென்றே குனிய முடியாமல் குனிந்து குழந்தையை தூக்க ஆதவ் இவ்வுலகிலே இல்லை.

வந்த வேலை முடிந்தது. அப்பனையும் மகளையும் பிரிச்சாச்சு என்றெண்ணியவள் விலகி நடக்கப் போக, கிட்ட வந்த ஆதவை குழந்தையை கண்காட்டி அக்ஷு கண்ணடிக்கவும் பரிதாபமாக பார்த்து வைத்தான்.

மனைவியை பிடிக்க வந்த ஆதவை மகள் பிடித்துவிட்டாள்.

"மம்மி விது..டாதி..டாதி..என்னைய தூக்கு..." என்று அடம் பிடித்தவளை ஆதவ் தூக்கச் செல்ல முறைத்துக் கொண்டே மகளை பிடித்துக் கொண்டு தள்ளிப் போனவள் "உனக்கு அவன் தான்டி சரி..." என்றவள் "தீரா..தீரா.." என அழைக்க அங்கே ஆஜர் ஆகினான் ஆதவ் அக்ஷுவின் மூத்த புதல்வன் ஆதிரன்.

ஆதவின் ஜெராக்ஸ்...அந்த ஐந்து வயதிலே அதே நிமிர்வு, அதே கர்வம், நேர்த்தி என அப்பன் தான்...ஆனால் அமைதியின் மொத்த உருவம் அம்மாவைப் போல..

ஆதவ் சிறுவயதில் அடம் என்றால் இவன் அமைதிப் பேர்வழி. அமைதியாக இருந்து அனைத்தையும் சாதிப்பவன். படிப்பில் படு கெட்டிக்காரன்...

கணவனைப் போலவே இருப்பதால் அத்தனை பிடித்தம் அக்ஷுவுக்கு மகன் என்றால்.

எப்போதும் கொஞ்சி முத்தாடிக் கொண்டிருப்பாள். அவனும் அம்மா என்றால் போதும்.. அப்படியே அடங்கிப் போய்விடுவான்.

தாயின் அணைப்புக்கு அழையா விருந்தாளி அவன்...அது மட்டும் தந்தைக்கு தாங்கிக் கொள்ள முடியாது..இவளும் வேண்டுமென்றே ஆதவை சுற்ற விடுவாள் மகனுடன் கொஞ்சிக் கொண்டு.

இருந்தாலும் ஆதவுக்கும் அவனை ரொம்பப் பிடிக்கும். அவர்களின் காதலின் முதல் சாட்சி அல்லவா அவன். இன்னொன்று தன்னைப் போன்று இருந்ததால் என்னவோ...

ஆதிரனுக்கு தந்தை எப்போதும் ரோல் மாடல் தான்.

பாசம் காட்டுவதில் தந்தையாக, பாடம் சொல்லித் தருவதில் ஆசானாக, தப்பை சுட்டிக்காட்டி சரி செய்வதில் தாயாக, நண்பனாக இருக்க வேண்டிய இடத்தில் சிறந்த நண்பனாக என்று ஒரு பெர்பெக்ட் தகப்பன் தான் ஆதவ்.

மகள் அறியாமல் "தீரா செல்லம் காப்பாத்துடா.." என்ற அக்ஷு மகனை பாவமாக பார்க்க அவனும் அச்சாப் பிள்ளையாக "ஆதியா..அண்ணா கூட விளையாட வரலயா...?நான் நிவ் கேம் சொல்லி தரேன்.." என்றழைக்க அடுத்த நொடி அண்ணனின் செல்லமாகிப் போனாள் தியா குட்டி.

"வேணும்..வேணும்...அண்ணா நானும்..நானும்..." என்ற குட்டி பாய்ந்து இறங்கி அண்ணன் அருகில் சென்றுவிட்டாள்.

அவனின் சின்ன விரலை தன் குட்டிக் கையால் பிடித்து "போலாம்..போலாம்..." என பறக்க துடித்தது.

அவன் சிரித்துக் கொண்டே தன் தாயை பார்க்க "என் சமத்து..." என்று அவனின் கன்னத்தில் முத்தமிட சோலி முடிந்துவிட்டது என தங்கையை மெல்ல நடத்திக் கூட்டி சென்றுவிட்டான்.

அதற்குள் ஆதவ் வேறு ஆடை மாற்றி வந்து பெர்பெக்ட் புருஷன் ஆகி அக்ஷயாவை கண்ணால் காதலித்துக் கொண்டிருந்தான்.

மகனை விட்டு விட்டு திரும்பியவளை வரவேற்றது அவளின் அழகிய கணவனின் முகம்.

அவளுக்கு மிக அருகில் குனிந்து நின்றவன் உதட்டை காட்ட விரும்பியே தன்னை தொலைத்தாள் அவனிதழில்.

அவள் ஆரம்பித்த முத்தத்தை முடித்து வைத்தது என்னவோ அவன் தான்.

மனைவியை பார்த்து குறும்பாக கண்சிமிட்டி சிரித்தவன் முழங்காலிட்டு அமர்ந்து நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அக்ஷுவின் வயிற்றில் முத்தமிட்டான்.

"டாடி ஆபிஸ் போய் வரேன்..அது வரைக்கும் அம்மாக்குள்ள சமத்து பிள்ளைங்களா இருக்கனும்.. அம்மா பாவம்ல..சோ ரொம்ப சேட்ட பண்ணக் கூடாது.." என்றவன் மீண்டும் முத்தமிட அவனவளின் கைகள் அவனின் சிகையை கோதி விட்டது.

ஆம் அக்ஷயாவிற்கு ஸ்கேனில் இரட்டை குழந்தை என கூறி இருந்தான் தீக்ஷன். அதனால் தான் ஆதவ் இன்னும் கலங்குவது.

எழும்பியவன் மறுபடியும் மனைவியை கொஞ்சிவிட்டு "அக்ஷு அவசரம் என்றால் ஒரே ஒரு மிஸ்டு கால் தந்துரு...ஓடி வந்துடுவேன்..." என்கவும் அவளும் மண்டையை ஆட்டி வைத்தாள்.

இந்த மாதிரி நேரத்தில் அவளை தனியே விட்டுச் செல்வதும் அவனுக்கு கஷ்டம் தான். ஆனால் இன்று அவனுக்கு முக்கியமான அலுவல்.. அதனாலே கிளம்ப வேண்டிய சூழ்நிலையில் இருந்தான்.

அவளை மெல்ல படியிறக்கி கூட்டி வந்தவன் ஆதிரனிடம் "தீரா...அம்மாவ கவனமா பார்த்து கொள்ளனும்..ஏதாச்சும் அர்ஜன்ட் என்றால் டாடிக்கு கால் தரனும் சரியா...?" என்று ஆயிரம் பத்திரம் வைத்து விட்டு, ஆபிஸ் நோக்கி சென்றுவிட்டான்.

...


"ப்ரியா..ப்ரியா...வாடி.. எவ்வளவு நேரம் டி வராத சமையல வா வானு கூப்பிடுவ...வந்து இதுங்கல பாரு..." என விளையாடிக் கொண்டிருந்த நான்கு வயது அதிக்ஷா என்ற மகளையும் இரண்டு வயது சமரன் என்ற புத்திரனையும் வைத்துக் கொண்டு கத்திக் கொண்டிருந்தான்.

"என்ன சும்மா சும்மா கூப்பிட்டு டிஸ்டப் பண்ணிட்டு இருக்கிங்க..." என அகப்பை கரண்டியுடன் ரூம் வரை வந்து நின்றாள் விது.

வியர்வையில் குளித்து போய் நின்றிருந்தாள். அவளின் அழகில் ஜெர்க் ஆகிவிட்டான் டாக்டர்.

அவனின் பார்வையின் அர்த்தம் புரிந்தாலும் வேணுமென்றே "யோவ் டாக்டர் என்னய்யா காலைலயே கோழி பிடிக்க போற மாதிரி பாக்குற..." என முகத்தை திருப்ப

"ஆமா..கோழி தான்...இந்த சேவலுக் கேத்த கோழி..அதுவும் வெடக் கோழி..." என இரட்டை பொருள் பட கூறிக் கொண்டே அவளை அணைக்க

அவனை தள்ளிவிட்டவள் "ச்சீ..வர வர ஆளும் சரியில்லை பேச்சும் சரியில்லை...அம்மாஞ்சினு நெனச்சா இப்படி அடாவாடியா பேசுறீங்க.." என போலியாக சலித்தாலும் இப்போது கூட அவனின் பேச்சில் மெய் சிலிர்த்தது.

"என்னடி ரொம்பதான் என் பேர டேமேஜ் ஆக்குற...ரீடர்ஸ் என்ன நினைப்பாங்க..." (அவ சொன்னத தான் நெனப்பாங்க)

"ஓஓஓ...ரீடஸ் என்ன நெனச்சா எனக்கென்னயா...அவங்களுக்கே தெரியும் உங்க டகால்டி வேலையெல்லாம்..."

"அப்படிங்கிற...? அப்போ நோ ப்ராப்ளம்..." என்றவன் இச் என அவளின் கன்னத்தில் முத்தம் வைக்க கண்களை அகல விரித்த விது.."தீக்ஷா...இரண்டு பிள்ளை பெத்தும் இன்னும் உங்க குசும்பு அடங்கல பாரு.." என்கவும்

"எனக்கென்னடி இப்போ கூட இளமையா தான் இருக்கேன்...இன்னும் பத்து பெத்தாலும் அப்படி தான் இருப்பேன்.." என அவளிடையில் வீணை மீட்டினான்.

நெளிந்து கொண்டே "ஆமா..ஆமா..நெனப்பு தான் பொழப்ப கெடுக்குமாம்..." என்கவும்

மீசை முடி கழுத்தில் குத்த முத்தமிட்டுக்கொண்டே "உனக்கென்னடி..?கொடுக்க நான் ரெடி..பெத்துக்க நீ ரெடி இல்லையா...ம்ம்?" என கேள்வி கேட்க வெட்கத்தில் அப்படியே திரும்பி அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.

...


"மூனு பிள்ளைங்களையும் நடுத்தெருல போட்டுட்டு மேக்கப் ஒன்னு தான் கொறச்சல் இவளுக்கு..ராட்சசி...சதிகாரி..." என புலம்ப வேண்டியது அவன் முறையாகிற்று...

வேற யாரு விக்ரம் தான்....ஹா..ஹா..

முணுமுணுத்துக் கொண்டிருந்தவனின் மிக அருகில் பரிட்சயமான வாசம் வர திரும்பிப் பார்க்க அங்கே முறைத்துக் கொண்டு நின்றிருந்தாள் அமர்த்தி...

"அம்மா பேய்..." என்றவன் பாய்ந்து போய் நான்கு வயதான மகன் வர்ம தேவின் அருகில் அமர

தேவ்வோ "அச்சோ டாடி..அது அம்மா தான்.கண்ண திறந்து பாருங்க.." என்கவும்

"அது எனக்கு தெரியாது பாரு..." என அவன் காதில் குசுகுசுக்க

"அம்மா...டாடி உங்கள காஸ்டாம்..." என போட்டுக் கொடுக்க

"அடேய்..அடேய் சதிகாரா போட்டா கொடுக்குற..." என அவனை கட்டிக் கொண்டு வலிக்காமல் தலையில் தட்ட

"டேய் விக்ரா..இங்க பாருடா..." என்ற மனைவியின் மரியாதையில் மகனை விட்டு விட்டு திரும்பிப் பார்க்க அங்கே அவள் பத்ரகாளி அவதாரம் எடுத்து நின்றாள்.

"அச்சோ என் செல்லத்துக்கு கோவம் வந்திருச்சு போல.." என்று விழி பிதுங்கியே அவளருகில் சென்று கன்னம் கொஞ்சி விளையாட

"தள்ளிப் போடா தடிமாடு...நான் என்ன பேய் மாதிரியாடா இருக்கேன்...?" என உதட்டை பிதுக்க அதில் சறுக்கி விழுந்தவன் அவளை இன்னும் நெருங்கி "நான் எப்படி அப்படி சொன்னேன்..." என்கவும்

"மம்மி இப்போ தான் சொன்னாரு..." என்றுவிட்டு மீண்டும் தேவ் அவனின் விளையாட்டில் மும்மூரமாகி விட மகனின் செயலில் பல்லைக் கடித்த விக்ரம் அவனை முறைக்க "அங்க என்ன முறைப்பு..?இங்க கேட்டதுக்கு பதில் சொல்லுங்க..." என இடுப்பில் கைகுற்றி நின்றாள்.

"அதில்லடா..நீ எப்பவும் எனக்கு அழகான டெவில் தானடி...அத தான் நம்ம செந்தமிழ்ல சொன்னேன்.." என அழகாக சமாளித்து விட்டு சிரிக்க அவனின் கோணச் சிரிப்பில் எப்போதும் மனதை பறிகொடுத்துவிடுவாள் அமர்த்திகா...

"அது சரி...எதே மூனு கொழந்தனு சொன்னிங்க..எங்க இன்னொன்னு...?" என மறுபடியும் சீர

"ஈஈஈஈ...அது நான் தான்" என விரலை வாயில் வைக்க சிரித்தே விட்டாள் அமர்த்தி..

"அதென்னவோ உண்மை தான்..." என கணவனை குழந்தையாக தாங்கும் மனைவி சிலாகித்துக் கூற அவளை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தான் விக்ரம்.

"டாடிடிடி...எனக்கு.." என வந்து நின்றாள் அவனின் கடைக்குட்டி ரக்ஷா மதி...

"வாடா செல்லம்..." என்றவன் அவளை தூக்கி சுற்றிவிட்டு இரு கன்னங்களிலும் முத்தம் வைத்தான். இதுவும் அப்பாச் செல்லம் ஒன்று...


...


காலையிலேயே முதுகில் தன் ஒற்றை முத்தை சுமந்து கொண்டு உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தான் ருத்ரன்.

கொஞ்ச காலம் லைஃபை எஞ்சோய் செய்கிறோம் என்ற பேரில் பல லூட்டிகள் அடித்துவிட்டு பெற்றெடுத்தவள் தான் இந்த திரன்யா...வயது மூன்று..

அவள் கேட்கும் கேள்விக்களுக்கு பதில் அளித்துக் கொண்டே தரையில் கையை ஊன்றி எழுந்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தான்.

"டாடி...யாரு டாடி உங்களுக்கு வேலை போட்டுக் கொடுத்தா...?"

ஏ.சி.பி பதில் அளிப்பதற்குள்ளே அங்கே வந்த பாவ்யா "யாரோ மரமண்ட ஒருந்தன் தெரியாமல் போஸ்டிங் கொடுத்துட்டான்..." என்றவள் அவன் மேலே அமர்ந்து கொண்டாள்.

மகள் கிளுக்கி சிரிக்க ருத்ரனோ "அடிங்க.." என்றவன் விடவேயில்லை தன் உடற்பயிற்சியை...அவளையும் சுமந்து கொண்டே செய்து முடித்தான்.

இது வழமையாக நடக்கும் ஒன்று தான். குழந்தையுடன் சேர்ந்தமர்ந்து அவளும் குழந்தையாக மாறி அவனின் பலத்தை சோதித்து விடுவாள்.

குழந்தை தாத்தா பாட்டியிடம் ஓடிவிட எழும்ப எத்தணித்தவனை விடாமல் தரையில் தள்ளிவிட்டவள் அவன் மீது ஏறி அமர்ந்து கொண்டு வியர்வையை துடைத்து விட்டுக் கொண்டிருந்தாள்.

அவன் கைகளோ அவளின் உடலின் நீளவிட்டங்களை அளந்து கொண்டிருந்தன.

அவன் மீதே முழுவதுமாக சரிந்தவள் மீசையை இழுத்து விட "அவுச்..." என்றவன் அவளிடையில் கிள்ளிவிட்டான்.

அவளோ மேலே பார்த்து கலகலவென சிரிக்க அப்படியே அவளை கீழே தள்ளிவிட்டு அவள் மீது படர்ந்தான் ருத்ரன்...

அவனை தன் இதயக் கூண்டினுள் சிறைகைதியாக்கி வைத்திருந்தாள் பாவ்யா...


...


மாலை நெருங்கவே பிள்ளைகளின் விளையாட்டை இரசித்துக் கொண்டிருந்த அக்ஷய ப்ரியாவிற்கு அடிவயிறு வலிக்க ஆரம்பித்து விட்டது...

ஆஆஆஆஆ என்ற அன்னையின் அலறலில் விளையாட்டிக் கொண்டிருந்த பிள்ளைகள் திடுக்கிட்டு முழித்தனர்.

அக்ஷயா விடாது கத்த ஒன்றுமறியா குட்டி தாய் அழுகிறாள் என அதுவும் அழுதது...

"மம்மி..மம்மி..." என குழந்தையும் அழத் தொடங்க அம்மாவின் அலறலில் அதிர்ந்து நின்ற ஆதிரனுக்கு திடீரென தன் தந்தை காலையில் சொல்லிவிட்டு சென்றது நினைவு வர அடுத்த கணம் அவனுக்கு அழைத்திருந்தான்.

இன்று ஏதோ போல் இருக்க மனைவியை காண அப்போது தான் காரில் ஏறப் போனவனுக்கு வீட்டு லேன் லைனில் இருந்து கால் வர நடந்தவற்றை சரியாக கணித்தவன் ஒரு ரிங்கிலே அட்டண்ட் செய்து காதில் வைத்தவனுக்கு மனைவியின் கதறலில் சித்தமும் கலங்கி விட்டது.

இந்த நேரத்தில் அவளை தனியே விட்டுவிட்டு வந்த தன் மடத்தனத்தை நொந்து போனான் ஆதவ்.

"டாடி..மம்மி அழுறாங்க..." என்றவனையும் தன் தாயின் கண்ணீர் கலங்க வைத்தது.

இருந்தும் அந்த சின்ன வயதிலே தந்தை சொல்லிக் கொடுத்த பாடம் சரியாக வேலை செய்ய தைரியமாக இருந்தான்.

"ஈசி..ஈசி தீரா...டாடி இதோ பக்கத்துல வந்துட்டேன்...அம்மாவ கவனமாக பக்கத்துல இருந்து பாரத்துக்கோ...அ..அம்மாக்கு ஏதாவது..." என்ற ஆதவ் பன்னீர் குடம் உடைந்து விட்டதோ என்பதை எப்படி கேட்பது என புரியாமல் காரை அந்த ஹைவேயில் பறக்க விட்டிருந்தான்.

ப்ளூடூத்தில் ஃபோனை கனெக்ட் பண்ணியவனிடம் "அம்மாக்கு உடம்புல எதுவும் இல்ல டாடி...ஆனா..ஆனால் வயிற்றை பிடிச்சிட்டு அழுறாங்க.." என்று என்னானதோ அம்மாவுக்கு என்ற சிறியவனின் குரலில் தெரிந்த கலக்கத்தில் தந்தையாக நொந்துவிட்டான் ஆதவ்.

அவன் கேட்க நினைத்ததை மகனே ஏதோ வழியில் கூற அப்போதைக்கு மனநிம்மதி அடைந்தவின் கையில் கார் ஜெட் வேகத்தில் சென்றது... நல்லவேளை அது ஹை வே...

"ஓகே..ஓகே...தீரா ஸ்ராங் போய் இல்லையா...அம்மாக்கு பக்கத்துல ஃபோனை வைங்க..." என்றவுடன் தந்தை தந்த தைரியத்தில் அவன் கூறியதை அப்படியே செய்தான்.

"பே..பேபி... கொஞ்சம் பொறுத்துக்கடா...இதோ பக்கத்துல வந்துட்டேன்..." என பரிதவித்தான் ஆதவ்.

கணவனின் குரலில் புது தெம்பு கிடைத்தாலும் பிரசவ வலி அதிகரித்துக் கொண்டே போக "ஆஆஆ மு..டி..யலங்க... சீ..க்கிரம் வாங்க...ஆஆஆஆஆஆ"என்றவள் எந்தளவு துடித்தாளோ அதே அளவு அவளை நெஞ்சில் சுமப்பவன் துடித்து விட்டான்.

அடுத்த சில வினாடிகளில் வீட்டின் முன் காரை நிறுத்தியவன் கார் கதவை கூட மூடுமளவு பொறுமையில்லாமல் மனைவிடம் ஓடினான்.

அதற்குள் விக்ரமையும் வரவழைத்தவன் பிள்ளைகளை அவனிடம் ஒப்படைத்து விட்டு அக்ஷய ப்ரியாவை கைகளில் ஏந்திக் கொண்டு ஹாஸ்பிட்டல் நோக்கி பயணமானான்.

ஏற்கனவே தீக்ஷனிடம் விக்ரம் சொல்லி வைத்திருக்க அங்கே ட்ரீட்மெண்ட் இற்காக அனைத்து வசதிகளுடன் அவன் காத்திருந்தான்.

ஹாஸ்பிட்டல் வளாகத்தினுள் நுழைந்தவுடனே அவளை அழைத்துக் கொண்டு ஆப்ரேஷன் அறையினுள் நுழைய ஆதவும், உடன் உள் நுழைந்தான்.

அவனை யாரும் தடுக்கவுமில்லை. இரண்டு குழந்தைகளுக்குமே அவனே மனைவி பக்கத்தில் இருந்தான். இருந்தும் இது மூன்று உயிர்கள் சம்பந்தப்பட்டது. எனவே தான் இன்னும் கலங்கினான்.

அவளோ அவனின் கையை இறுக்கி பிடித்துக் கதற அவன் தான் நொருங்கிப் போய்விட்டான். இப்போது தான் கலங்கினால் அவள் இன்னும் பலவீனமாகிவிடுவாள் என்று மனதை ஒரு நிலைபடுத்திக் கொண்டிருந்தான்.

ஆனால் அது என்ன சாதாரண வலியா..?மரணத்தின் உச்சத்தை தொட்டு மீளும் வலியல்லவா... தன் உயிரை கொடுத்து தன் குழந்தையை இந்த பூமியில் வாழ வைக்கும் உன்னத உயிரல்லவா தாய்...!!

காதலுக்கு தாஜ்மகால் கட்டுகிறான் மனிதன். ஆனால் உயிர் கொடுத்து உயிர் தந்த தாயிற்கு ஒரு செங்கல் கூட நட மாட்டார்கள். இந்தக் காதலை காண வைத்த தாயையே தன் காதலுக்கு இடைஞ்சல் என இரக்கம் இல்லாமல் தனியே விட்டு விடுகின்றனர். இப்படிப்பட்ட ஈனப்பிறவிகளும் வாழ்ந்து தான் வருகின்றன இவ்வுலகில்.

தன் மனைவியின் பிரசவ அறையில் இருப்பவனுக்கு தெரியும் அந்த தாயின் அந்தஸ்து..

அதே நிலைமையில் தான் இன்று இருக்கின்றான் ஆதவ்.

"ஆதவ் தங்கச்சிய இன்னும் கொஞ்சம் வயிற்றை தள்ள சொல்லுடா..." என்றான் தீக்ஷன்.

ஏனென்றால் சாதாரணமாக இரட்டை பிரசவம் சிசரிங் செய்து தான் குழந்தையை வெளியே எடுப்பார்கள். ஆனால் இவளுக்கு சாதாரணமாக கிடைக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாலே தீக்ஷன் போராடிக் கொண்டிருக்கிறான்.

"பேபி..யூ கேன்...காப்ரேட் வித் தெம்..." என்றவன் நிமிடத்துக்கு நிமிடம் அவளுக்கு நெற்றியை தடவித் தடவி முத்தம் வைத்து தைரியப்படுத்தினான்.

"மு...முடி..ய..ல...ஆஆஆ" என எவ்வளவு முக்கினாலும் அவளுக்கு முடியவில்லை. மூச்சுவாங்கிக் கொண்டு அவள் அலற...ஆதவுக்கு கண்ணை கரித்துக் கொண்டு வந்தது...இருந்தும் மனைவிக்காக அடக்கிக் கொண்டான்.

"அக்ஷும்மா...யூ கேன்...லவ் யூ டா...ப்ளீஸ் புஷ்..." என்றவனும் வாழ்வா சாவா என்ற கட்டத்தில் போராடினான்.

ஆயிரம் ஆறுதல் அழிக்காத புது தைரியத்தை அவனின் காதல் மொழி கொடுக்க ஆதவின் கையை இறுக்கி பற்றிக் கொண்டவள் "ஆஆஆததவ்வ்வ்..." என்ற இறுதி கத்தலில் மூச்சை ஆகினாள்.

அவளின் வலி அவள் தன் கையில் கொடுத்த இறுக்கத்தில் புரிந்து கொண்டான். அவனுக்குமே தன் கை என்பு முறிந்துவிட்ட வலி...

அவளின் வலியை அவனும் உணர்ந்தான் அது தான் இங்கு விந்தை..

வீல் என்ற ஒரு குழந்தையின் அழுகையின் இரண்டு நிமிடம் கழித்து அடுத்த குழந்தையின் அலறல் அந்த அறையை நிறைத்திருந்தது.

அவளின் பிடி மெல்லத் தளர அவனின் வலது கண்ணிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் அவளின் கன்னத்தில் விழுந்தது.

அதில் விழித்தவள் குழந்தைகளை இந்த பூமியில் இறக்கிய நிம்மதியில் மீண்டும் மயக்கத்தின் வழி சென்றுவிட்டாள்.

தீக்ஷனோ தன் மருமகள்களை கையில் தாங்கிக் கொண்டு வந்து ஆனந்தத்துடன் ஆதவிடம் காட்ட அப்போது தான் சுயத்தை அடைந்தவன் மனைவியின் நெற்றியில் இதழ் பதித்துவிட்டு இரு குழந்தைகளையும் இரு கையில் தாங்கினான்.

இரண்டும் இளம் சிவப்பு நிறத்தில் அப்படியே ஆதவைப் போலவே பிறந்திருந்தன. இரண்டும் ஒரே வாக்கு...

சந்தோஷத்தில் முகம் சிவந்திருக்க..குட்டீஸின் பட்டுக் கன்னத்தில் வலித்துவிடுமோ என அஞ்சி குனிந்து இரண்டுக்கும் முத்தம் வைத்து வரவேற்றான் தந்தையானவன்.

"டேய்... அப்படியே உன்ன மாதிரியே ரெண்டும் இருக்குடா...க்யூட் குட்டீஸ்.." என மறுபடியும் மாமன் ஆன சந்தோஷத்தில் தீக்ஷன் கூற அழகாக சிரித்தான் ஆதவ்.

மயக்கத்திலிருந்து அப்போது தான் விழித்த அக்ஷு கணவனை காதலுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவள் பார்ப்பதை உணர்ந்தானோ.. மனைவியை திரும்பிப் பார்க்க அவர்களுக்கு தனிமை கொடுத்துவிட்டு வெளியே இருந்தவர்களுக்கு சந்தோச செய்தியை கூற தீக்ஷன் பறந்துவிட்டான்.

மொத்தக் குடும்பமும் அங்கே தான் இருந்தது..

விக்ரமின் மடியில் ஆளுக்கொரு பக்கம் மாமு..மாமு..என இருந்தனர் ஆதிரன் மற்றும் ஆதியா..

மாமன் என்றால் போதும் அவனுடனே ஒட்டிக் கொண்டு திரிவர் இருவரும். ஆதியா அடங்கிப் போகும் ஓரிடம், ஒன்று ஆதவ் மற்றையது விக்ரம்.

அவனுக்கும் தன் உயிரான தங்கையின் மகவை பிடிக்காமல் போகுமா..!? தன் குழந்தைகளை விட இவர்களே அவனுக்கு அனைத்தும்.

அவன் அழக்கூடாது என்று சொன்ன ஒரே காரணத்திற்காக இப்போ வரை உதட்டை பிதுக்கிக் கொண்டிருக்கிறது அந்த வாண்டு.

விக்ரமிற்குமே பாவமாகிப் போய் விட்டது..அவளை அணைத்து தாய்மாமன் மாரிலே தட்டிப் போட தூங்கிவிட்டாள் ஜான்சி ராணி...

அங்கே ஆதவோ மனைவியிடம் குழந்தைகளை காட்ட "அடுத்த ஆதவ் குட்டீஸ்..." என்றவாறு சிரிக்க அவனும் சிரித்து வைத்தான்.

பின் மனைவியிடம் குழந்தைகளுக்கு பசியாற கொடுத்து வந்தவனை குடும்பமே வாழ்த்தியது.

விக்ரமின் கையிலிருந்த தன் மூத்த புதல்வர்களை பார்த்தவன் ஆதிரனுக்கு முத்தம் வைத்து ஆதியாவை கைகளில் வாங்கிக் கொள்ள தந்தையின் கை சூட்டில் விழித்தவள் அவனிடம் சென்று கழுத்தைக் கட்டிக் கொண்டு விட்ட தூக்கத்தை தொடர்ந்தது..

இக்கட்டான நிலையில் இப்படி கை கொடுக்க பாசமானவர்கள் இருந்தால் போதும் விதியை வெல்லலாம்...

அந்த இரு குழந்தையுடன் உள்ளே நுழைந்த ஆதவை மனைவி கை நீட்டி அழைக்க அவளருகில் சென்றவனை இழுத்து இதழில் இதழ் பதித்தாள் அக்ஷய ப்ரியா..

அவர்களின் குடும்பம் நிறைவாகிவிட்டது...


உன் கடைவிழிப் பார்வையில் சித்தம் கலங்கி பித்தனாகிப் போனேனடி..!!
உன் நெஞ்சில் தஞ்சம் புகுந்து உன் காதலால் வாழ்வை வென்றேனடா கண்ணா..!!


தீரா.
 

Hemanaresh

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Feb 18, 2023
Messages
1
Super , nice story
 
Top