• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உன்னால் உயிர்த்தேன் - 03

Dheera

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 17, 2023
Messages
234
அத்தியாயம் 03

தரையில் வீழ்ந்து கிடந்தவளின் மனதில் உதித்த முதல் கேள்வி "யார் அப்பா..இவர் கூறும் அந்த நபர் யார்..?".

இவளுக்கெங்கே தெரியப் போகிறது அவனின் அவசரப் புத்தியால் சரியாக ஆராயாமல் தன் வாழ்வில் விளையாடுகிறான் என்பது.

எவ்வளவு நேரம் தான் கீழே கிடந்தாளோ தெரியவில்லை. திடீரென காற்றின் இரைச்சல் சத்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்துக் கொண்டவள் சுற்றும் முற்றும் ஆராய எங்கும் கும்மிருட்டு.

சும்மாவே இருட்டென்றால் இவளுக்கு பயம் ஜாஸ்தி. அதிலும் இந்த பங்களா அவளை மேலும் பயமுறுத்த வியர்த்துக் கொட்டியது காரிகைக்கு. யாருமற்ற தனிமை, அவனின் அறைக்குள் செல்லவும் பயம், அந்த இடத்தை விட்டு நகரவும் பயந்து போனவளுக்கு தலையைச் சுற்றிக்கொண்டு வர தொப்பென தரையில் மயங்கி வீழ்ந்தாள்.


...



அடுத்த நாள் பொழுது அழகாக விரிந்தது. இரவு தன்னவளை காயப்படுத்தியிருந்தும் அந்த கண்களில் கண்ட வேதனையில் இவனுக்கு அடிமனதில் வருத்தம் எட்டிப்பார்த்தது என்பதை அவன் அறிவான். இருந்தும் அந்த வலி அடுத்த நொடி பழிவெறியால் காணாமல் போனது தான் விந்தை. தன் முதல் படி வெற்றிகரமாக நடந்தேறிய திருப்தியில் உறங்கியவன் காலை தாமதமாகவே எழுந்திருந்தான்.

வழமையாக ஜாகிங் செல்பவன் இன்று ஆபிஸிற்கு நேரமாவதை உணர்ந்து குளித்து வந்து, தன் யூசுவல் ட்ரெசிங் படி வெள்ளை நிற சேர்ட், சாம்பல் நிற பேண்ட் மற்றும் ப்ளசர் அணிந்து தன் ட்ரைவர் ஷூவுடன், டை முதற்கொண்டு ராயல் கடிகாரத்தைக் கட்டியவாறு கண்ணாடியில் தன்னைப் பார்த்து சிகை கோதியவனை பார்க்க ஆயிரம் கண்கள் வேண்டும். கண்ணாடியின் முன் ஆணினத்திற்கே கர்வம் சேர்ப்பவனாக அத்தனை கம்பீரமாக நின்றிருந்தான்.

பின் தொலைபேசியை எடுத்து தன் பீ.ஏ விக்ரமிற்கு அழைப்பெடுத்தவாறே வெளியே வந்தவனை வரவேற்றதோ கட்டாந்தரையில் மயங்கிக் கிடக்கும் அவனவள்.

இதனை எதிர்பாராதவன் அதிர்ந்ததெல்லாம் ஒரு கணம் தான். அதற்குள் அவளிடம் அசைவு தெரிய, தான் வந்த சுவடு தெரியாமல் தட தடவென படிகளில் இறங்கி சென்று விட்டான். (நானும் கல்லுக்குள் ஈரமானு உத்துப் பார்த்தேன். ம்ஹூம் இவன் இந்த ஜென்மத்துல திருந்த மாட்டான் போலயே..)

வந்தவன் நேரே தன் ராயல் ப்ளூ லம்போர்கினியில் ஏறி சிட்டாக பறந்து விட்டான்.

இங்கு எழ முடியாமல் தலையைப் பிடித்துக் கொண்டு எழுந்தவளுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. பின் தலையை உலுக்கி விட்டு நிமிர்ந்து பார்க்க அவள் கண்களில் பட்டதோ அவனின் அறை.

நேற்று நடந்தவைகள் எல்லாம் கண் முன் காட்சியாய் விரிய மழுக்கென எட்டிப் பார்த்தது கண்ணீர்..! பின்னர் மனம் பாரமாக இருக்க அருகில் தெரிந்த வெற்று அறைக்குள் புகுந்து கொண்டவள் இதற்கும் தன்னை வருத்துவானோ என கலங்கினாள். சோர்வு அவளது சிந்தனையைக் களைக்க கட்டிலுக்கு அருகில் தரையில் அமர்ந்து கொண்டாள். அவள் தான் தரையில் உண்டு,உறங்கி பழக்கப்பட்டவளாகிற்றே..

மனதும் உடலும் சோர்வாக இருக்க குளித்தால் கொஞ்சம் நன்றாக இருக்கும் என்று யோசித்தவள் குளியலறைக்குள் செல்லும் போது தான் தன்னிடம் மாற்றாடை இல்லை என்பதே நினைவுக்கு வந்தது.

அதில் இன்னும் சோர்ந்து போனவளுக்கு என்னடா வாழ்க்கை என்று தான் இருந்தது. இதுவரை யாரிடமும் வாய் விட்டு எதுவும் கேட்டுப் பழக்கப்பட்டிறாதவள் முதன் முறை யாரிடம் கேட்பது? எப்படி கேட்பது? என தன்னுளே தவித்துக் கொண்டிருந்தாள்.

சரியாக அந்நேரம் பார்த்து மரகதம் பையுடன் உள்ளே நுழைந்தார்.

தன்னைப் புரியாமல் பார்த்தவளிடம் "அம்மாடி தம்பி தான்டா உன்ட கொடுக்க சொன்னாரு..." என பையை நீட்ட தயக்கத்துடனே வாங்கியவள் உள்ளே தனக்கான ஆடை இருக்கவும் எப்படி உணர்ந்தாள் என்பது அவளுக்குமே புதிர் தான்.

பின் குளித்து முடித்து அவன் வாங்கிக் கொடுத்த சேலையைக் கட்டிக் கொண்டு வந்தவளைப் பார்த்து மரகதம் மயங்காத குறை..!

"என் கண்ணே பட்டுடும் போல இருக்கம்மா..."என கன்னம் வழிந்தவரை அவளுக்குப் பிடித்துப் போனது.

அவளது புன்னகையில் தெளிந்தவர் அவள் மறுக்க மறுக்க சாப்பிட கீழே அழைத்துச் சென்று விட்டார். கீழே வந்தவள் எதிலே அமர்வதென வெகுவாக குழப்ப அவளது கையைப் பிடித்து டைனிங் டேபிளில் அமர வைத்து உணவு பரிமாற இவளுக்குத் தான் மனதைப் பிசைந்தது. விழிநீர் வடிய அவரை நோக்கியவளைப் பார்த்தவர், பெற்றோரை பிரிந்து வந்ததால் வருந்துகிறாள் என தவறாக நினைத்து தலையை வருடி விட்டார்.

இவை அனைத்தும் அப்போது தான் உள்ளே நுழைந்தவனின் கண்களில் படம் பிடிக்கப்பட்டன. ஏதோ முக்கியமான கோப்பு ஒன்றை விட்டுச் சென்றதால் மீண்டும் எடுக்க வந்திருந்தான்.

ஒரு கவலத்தை உள்ளே தள்ளப் போனவள் அவன் வந்ததைப் பார்த்து பதறி எழும்ப மரகதம் பயந்தே விட்டார்.

இதனை அவன் கண்டும் காணாமல் படிகளில் தாவி ஏறினாலும் திரும்பி அவளை மேலே வருமாறு கண் ஜாடை காட்டி விட்டே சென்றேன். அதில் அவளுக்கோ உள்ளுக்குள் குளிரெடுத்தது.

மேலே வந்தவனின் உள்ளம் எரிமலையாக வெடிக்க அதனை தனிக்க தலையைக் கோதி விட்டுக் கொண்டே நின்றிருந்தான். அவளும் இன்னும் வராமல் போக பற்களை நறநறுத்தவன் கட்டுக்கடங்கா கோபத்துடன் புயலென வெளியேறியவனின் எதிரில் தென்பட்டாள் மாது. அதில் அவள் நடையோ சட்டென தடைப்பட்டது.

அவளை நோக்கி தன் நீள எட்டுக்களை எடுத்து வைத்து அவன் முன்னேற அவளின் கால்களோ பயத்தில் பின்னோக்கி பயணித்தன.

...


திருமணம் முடிந்தவுடன் வெளியே வந்த தீக்ஷன் நேராக கடற்கரையை நோக்கி சென்றிருந்தான்.

இலக்கே இல்லாமல் கடலை வெறித்துக் கொண்டிருந்தவனின் மனமும் கடலலைகள் போல ஓயாமல் இரைந்து கொண்டிருந்தது.

ஆடவனின் விழியோரம் நீர்த் துளிகள். மனதிலோ கவலைகள் ஓராயிரம். எங்கே அவள்..?? மனம் தவித்தது.

அவன் வலி அவனுக்கு. தன்னை ஏமாற்றி விட்டாளே...ஹ்ம் ஏமாற்ற அவள் எங்கே இவனை காதலிப்பதாகவா கூறியிருந்தாள்.!? இவன் தானே காதல் என பின்னால் சுற்றினான். என்பதை எண்ணும் போதே இதயத்தை கசக்கிப் பிழிந்த வலி.

இனி அவள் தனக்கில்லையோ..? என்றதை நினைத்த மாத்திரமே அழையா விருந்தாளியாக ஆதவ்வின் முகம் அவன் மனக்கண்ணில்...

அதிர்ந்தே விட்டான். பின் மௌனமாக யோசிக்கத் தொடங்கினான்.

"என் நண்பன்..!? நோ நோ அவள் இனி என் நண்பனின் ம..மனைவி. நா..நான் இனி அவளைப் பத்தி யோசிக்க கூடாது. எனக்கு அவன் வாழ்க்கை தான் முக்கியம்.." என இன்னும் பலதை சிந்தித்து தன் மனநிலையை மாற்றிக் கொண்டவனாக ஒரு முடிவுடன் எழுந்தான் டாக்டர் தீக்ஷன்.

ஆனாலும் நீ சொல்லி நான் என்ன கேட்பது என அவனின் கண்ணீர் கன்னத்தைத் தழுவ அதனை துடைத்தவன் கசந்து புன்னகைததான். உடனே மறக்க அதென்ன காயமா..!? காதல் தோல்வியல்லவா.. கலங்கினான் ஆடவன்.


...


தடுமாறிய வண்ணம் அக்ஷயா எட்டுக்களை பின்னே வைக்க அவனோ வேட்டையாடும் அசுரனாக அவளைத் தாக்க முன்னோக்கி நகர்ந்தான். ஒரு கட்டத்துக்கு மேல் நகர விடாமல் சுவர் தடுத்திருக்க அப்படியே அதில் ஒட்டிக் கொண்டவளை இழுத்து அறையினுள் தள்ளி தாழ்ப்பாளிட்டான்.

அவள் பயந்து போய் உடல் வெடவெடுக்க நின்றிருக்க அவளது தோள் புஜத்தை பிடித்து அழுத்தினான் வேங்கை. அவளோ வலியில் கதற

"ஏய் என்னடி நெனச்சிட்டு இருக்க. என்ன எதையுமே அனுபவிக்க விடாம பண்ணிட்டு நீ ஜாலியா உட்காந்து சாப்புடுறியா...?ஆங்..?" என்றவனின் கர்சனையில் திடுக்கிட்டவள் தோள்பட்டை வலியுடன் "நா..நான் என்ன செஞ்சேன்...?" என குழந்தை போல் விழித்தாள்.

"ஓஓ என்ன செஞ்சேனு மகராணிக்கு தெரியாதோ...? ம்ம் இதுவும் உங்க ட்ராமாவா என்ன..? நீ என்ன ப்ளேனோட உள்ள வந்திருக்கேனு எனக்கு தெரியும்..."

அனைத்திலும் ஒரே தடவையிலே சரியாக கணித்து திடமாக உறுதி கொள்பவன் முதன் முறை தன் வாழ்க்கை பாடத்தில் சறுக்கி இருந்தான்.

"உன் நடிப்ப பார்த்து உடனே நீங்க செஞ்சதெல்லாம் மன்னிச்சு ஏத்துப்பேனு நினைச்சியா..? உன்ன பழிவாங்க இந்த தாலியக் கட்டின நான், உன் நடிப்புக்கு அசருவேனா என்ன..? "

"என்ன சொல்லி விட்டான் பழிவாங்கவா..? ஏன்..?" இது அவள் யோசனை.

"அது இருக்கட்டும். நான் உன்னைய பழிவாங்க தாலி கட்டுனேன் ஓகே.. ஆனா நீ என்ன நோக்கத்துல முன்னப் பின்ன தெரியாத என்னை கல்யாணம் பண்ண சம்மதிச்ச...?"

சரியாகத் தானே கேட்டு விட்டான். கலங்கினாள் பெண்ணவள்.

தொடர்ந்தவன் "ஓஓ சொத்துக்காகவா...?" என்றதும் விலுக்கென அவனை நிமிர்ந்து பார்த்தவளின் முகத்தில் வெறுமை படர்ந்திருந்தது.

அவளது பாவனையில் "ஓஹோ அப்போ இதுக்கில்லையா.. பின்ன வேறெதுக்கு?" என யோசிப்பது போல பாவனை செய்தவன் "அப்போ சொகத்துக்காகவா...?" என நாக்கிலே நரம்பில்லாதவன் போல நஞ்சைக் கக்கி விட்டான். ஆனால் அது சென்றடைய வேண்டிய இடம் தான் தவறாகிப் போனது.

அவனது வார்த்தைகள் அவளை சென்றடைய ஓரிரு கணங்கள் தேவைப்பட்டன. புரிந்த நொடி பாவம் பெண்ணவள் துடித்து விட்டாள். உதடு வேதனையில் துடிக்க, நெஞ்சு முழுக்க வேங்கையின் வார்த்தையின் வீரியம் தாங்க முடியாமல் காந்த, அப்படியே நெஞ்சை அழுத்திக் கொண்டு வீழ்ந்தாள்.

"எ..என்னைப் பார்த்தா இப்படியொரு வார்த்தை கேட்டு விட்டார்.?" கேவல் வெளிப்பட்டது அவளில். தாங்கமாட்டாமல் வாயை தன் கையால் பொத்திக் கொண்டு அழுதவளின் நிலை கூட அவனுக்கு நடிப்பாகப் போனது தான் இங்கே வேதனை.

அவளை ஆயுதம் இல்லாமல் கொலை செய்தது போதாது எனக் கருதினானோ மீண்டும் வார்த்தைகளை விட்டிருந்தான்.

"என்ன நடிப்புடா சாமி.. ஏன்டி நீயெல்லாம் என்ன ஜென்மம்?. ஒருத்தனை ஏமாத்தி பொலக்கிறதென்டா அவ்ளோ இஷ்டமாடி. லிசின் நான் அனுபவிச்ச அத்தனை கஷ்டத்தையும் நீயும் அனுபவிக்கனும்..."

இவை அனைத்துக்கும் அவள் அசைந்தாள் இல்லை.

"என்ட் வன் மோர் திங். இங்க நான் வரும் போது ஒரு ட்ராமா நடந்திட்டு இருந்துச்சே என்ன அது..ஆங்..?" கண்ணில் ரௌத்திரத்துடன் வினவியவன் அவளது அசைவில்லாத நிலையில் கடுப்பாகி மீண்டும் "நீயும் அவங்கள மாதிரி வேலைக்காரி தான்..." என்றதும் சட்டென அவனை வேதனையுடன் பார்த்தாள். அது அவளை வேலைக்காரி என்றதற்கில்லை. மாறாக இந்தத் திருமணமும் தாலியும் எதற்காக என்று தான். அது தான் அவனே கூறி விட்டானே தன்னைப் பழிவாங்கவென்று. இருந்தும் எதற்காக இந்த தண்டனை என்று தான் அவளுக்குப் புரியவில்லை. அப்படியே தலைகுனிந்தவளின் இதயம் வெகுவாக காயப்பட்டிருந்தது.

இவனே மேலும் "மோர் ஓவர், என் வேலை எல்லாம் இனி நீ தான் பார்த்துக்கனும்.. டோன்ட் வொரி பணம் தருவேன்.." என அவளின் தாலிக்கு உடையவனே விலை பேசி இருந்தான்.

பெண்ணவளோ இவனுக்கு வேலைக்காரியாக கூட இருக்க தான் தகுதியில்லையென நினைத்து தன்னிலையை நொந்து கொண்டாள்.

அவள் மௌனியாக இருக்க இங்கே இவன் தான் கட்டுக் கட்டாக பேசினான்.

"ஆ அப்பறம் இந்த சாரி எதுக்குன்னா என் கிட்ட வேலை பார்க்க கூட ஒரு தகுதி வேணும். இனி இப்படி எனக்கு சரிக்கு சமனா இருக்க நினைச்ச தொலைச்சுகட்டி விடுவேன்." என விரல் நீட்டி எச்சரித்தவன் கதவை திறந்து வெளியே சென்றான்.

புயல் அடித்து ஓய்ந்தது போல் இருந்தது அவளுக்கு.

நடப்பது புரியாமல் தலை வெடித்து விடும் போல் இருந்தது.



தொடரும்...


தீரா.
 
Top