• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உன்னால் உயிர்த்தேன் - 05

Dheera

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 17, 2023
Messages
234
அத்தியாயம் 05

அதிகாலையிலே தன் கட்டுக்கடங்காத கேசத்தை கரத்தால் கோதி விட்டுக் கொண்டே ஓடி வந்து கொண்டிருந்தான் அவன். அதுவோ உன்னைப் போலவே நான் அடங்கமாட்டேன் என அவனது வியர்வையுடன் கூடிய நெற்றியில் சரிந்து விழ ஆம்கட் டீசேட் மற்றும் சோட்ஸுடன் ஜாக்கிங் சென்று வந்து கொண்டிருந்தவனின் சிந்தனை முழுக்க அவனது மனைவியே வியாபித்து இருந்தாள்.

அவனின் சிந்தனையை கலைக்கும் முகமாக அவ்விடமே கொஞ்சம் வித்தியாசமாகப் பட சந்தேகம் வராதவாறு சுற்றுப் புறத்தை ஆராய்ந்தான் காளை.

இது வழமையாக நடப்பது தானே. அவனை கொலை செய்ய பல தடவைகள் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவை அனைத்திலுமிருந்து ஈசியாக தப்பி விட்டவனுக்கு அவை ஒன்றும் பெரிய விடயம் இல்லை. தொழில்துறை என்றால் அப்படித்தானே என நினைத்து தூசு போல தட்டி விட்டு செல்பவனுக்கு இன்று ஏதோ உறுத்தல்.

திடீரென அவன் கண்களை ஸ்பொட் லைட் ஒளி ஊடுருவிச் செல்லவும் உதட்டை வளைத்தவன் சட்டெனக் குனிய ஒரு தோட்டா அவன் பக்கம் இருந்த மரத்தை பொத்துக் கொண்டுச் சென்றது.

சத்தத்தில் அதிர்ந்த சக மக்கள் கீசிக் கொண்டு ஆங்காங்கா அனைவரையும் தள்ளி விட்டுக் கொண்டு ஓட ஆதவின் காட்ஸ் உடனே அவ்விடம் வந்து சேர்ந்து அவனை சுற்றி வளைத்து பாதுகாத்துக் கொண்டனர்.

அப்போது தான் நிமிர்ந்தவனின் கண்ணில் பட்டதோ பக்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் வண்டியொன்று.

அதனைப் பார்த்து மர்மமாக சிரித்துக் கொண்டவன் தனக்காக காத்திருந்த காரில் ஏறி புறப்பட்டு விட்டான்.

...

அனைத்து சேனல்களிலும் பரபரப்புடன் செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தன.

இளம் தொழிலதிபர் ஆதவ் க்ரிஷ் மீது துப்பாக்கிச் சூடு.

உரியவனோ அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்க செய்தியை விட சூடாக இருந்தது என்னவோ அவனை சுற்றி இருந்தவர்கள் தான்.

அவர்கள் வேறு யாருமில்லை. தீக்ஷனின் குடும்பமும் ஆதவ்வின் மற்றைய நண்பனுமான ருத்ரன். ஏ.சி.பி ருத்ரன்.

ருத்ரனோ போலிஸாக இருந்தாலும் தன்னருகில் இருப்பவனின் உணர்ச்சிகள் துடைக்கப்பட்ட முகத்தைப் பார்த்து கொந்தளித்து "டேய் கொஞ்சமாச்சும் ரியெக்ட் பண்ணுடா..." என தலையில் அடித்துக் கொள்ள தீக்ஷனோ "நிமிர்ந்து நம்மல பார்க்குறானா பாரு..இடியட்..." என பல்லை நறநறுத்தான்.

"நாம அவனுக்கு என்னாச்சோனு பயந்து ஓடி வந்தா அவன் யாருக்கு வந்த விருந்தோன்ற மாதிரி உட்காந்து இருக்கான். கடுப்பேத்துறான் மை லாட்..." என இருந்த சிட்டுவேஷனில் பட லயலாக் அடித்து விட்ட ருத்ரனை முறைத்த தீக்ஷன் "கொஞ்சம் உன் திருவாய மூடுறியா..." என்றான்.

அதில் ருத்ரன் பக்கென வாயை மூடிக்கொள்ள இந்தப் பக்கம் திரும்பியவன் "டேய் க்ரிஷ். நாங்க என்னடான்னா உன்னையே கொல்லப் பார்த்திருக்கானுங்கனு கடுப்புல இருக்கோம் நீ என்னடான்னா இதொன்னும் புதுசில்லனு அசால்டா சொல்லுற.. என்னடா நடக்குது இங்க..?" என பரிதவிப்புடன் கேட்க அவனை நிமிர்ந்து பார்த்த ஆதவ்வின் பார்வையில் இருந்தது என்ன..? பின்னர் அப்படியே குனிந்து ஃபோனில் தலையைப் பதித்தவனைப் பார்த்து புஸ் என்றிருந்தது தீக்ஷனுக்கு.

அதில் கடுப்பாகி ருத்ரனை திரும்பிப் பார்த்தவனைப் பார்த்து வாயை மூடி சிரித்தான் ருத்ரன்.

அவனது சிரிப்பு தீக்ஷனை மேலும் கடுப்பாக்க "பல்ல காட்டுன விஷ ஊசி ஏத்தி சாவடிச்சுறுவேன்..." என அடித்தொண்டையால் சீற

"செஞ்சாலும் செய்வடா நாதாரி..." என முழித்து விட்டு பயத்தில் எழுந்து போய் ஆதவ்வின் அருகில் அமர்ந்து கொண்டான்.

இவர்களைப் பார்க்காவிட்டாலும் அவர்களின் பேச்சிற்கு செவி தாழ்த்திக் கொண்டிருந்தவனின் இதழ்கள் ஓர் கணம் விரிந்தன புன்னகையில்..

இங்கே சங்கரும் மீராவும் இவர்களின் கூத்தில் தலையில் அடித்துக் கொண்டனர்.

அதில் அசட்டு சிரிப்பு சிரித்த இருவரும் ஒன்று சேர ஆதவ்வின் புறம் திரும்பவும் அவனுக்கு தொலைபேசி அழைப்பு வரவும் சரியாக இருந்தது.

அதனை ஏற்று காதில் வைத்துக் கொண்டு அவன் எழுந்து செல்ல தீக்ஷனும் ருத்ரனும் தான் தங்கள் முகத்தை மாறி மாறி பார்த்து உச்சுக் கொட்ட வேண்டியதாகிப் போனது. வெளியேறப் போன ஆதவ் திரும்பி ருத்ரனைப் பார்த்து அர்த்தமாக கண்ணை மூடித் திறக்க அதன் அர்த்தம் புரிந்தவனாக அவனும் அமைதியாகி விட்டான்.

சற்று நேரத்தில் ருத்ரனை கடமை அழைக்க அவன் சென்ற பின் தனித்து விடப்பட்டதோ தீக்ஷன் மட்டுமே.

மீராவும் சமையலறைக்கு சென்று விட்டார். வாரம் ஒரு நாள் இங்கே அவர்கள் தங்கிவிட வேண்டும் என்பது ஆதவ்வின் எழுதப்படாத சட்டம். அதன் பிறகும் அங்கே மறுபேச்சு இருக்குமா..!?

மேலே பார்த்து பெருமூச்சு விட்டுக்கொண்ட தீக்ஷனின் சிந்தனையோ நேற்று நடந்ததை மீட்டிப் பார்த்துக் கொண்டது.


..


நேற்றிரவு அவளை அந்நிலையில் பார்த்தும் எதுவும் செய்யாமல் வெளியே வந்த கல் நெஞ்சக்காரனோ, அவனறையினுள் செல்லும் முன் அவன் மனக்கண்ணில் தோன்றியதோ அவளது விழிகள்...!!

முன்னேறப் போனவனின் கால்கள் அப்படியே அந்தரத்தில் தடைப்பட்டு நிற்க இடுப்பில் கைகுற்றி காற்றை குவித்து ஊதியவன் கொஞ்ச நேரம் அந்த வாசலில் நடைப் பயின்றான்.

பின் ஒரு முடிவோடு தீக்ஷனுக்கு அழைத்து நடந்ததை சுருங்கக் கூறியவன் அழைப்பைத் தூண்டித்திருக்க மீண்டும் அவளறையைப் பார்க்க அவனுக்கு கோபம் தலைக்கேறினாலும் நல்லவன் போல் உள்ளே நுழைந்து அதே அசுர வேகத்தில் அவளை கைகளில் ஏந்தி இருந்தான்.

கட்டிலில் கிடத்தி விட்டு குனிந்து அவளைப் பார்த்தவனின் பார்வை அந்தக் கண்களில் நிலைத்திருந்தது. அழுது வீங்கி இமை மூடியிருந்த அவளது விழிகள் அவனுக்கு ஏதோ ஒன்றை உணர்த்துவது போல இருக்க தன்னுயரத்திற்கு நிமிர்ந்து பேண்ட் பாக்கெட்டினுள் கையிட்டவாறு நின்று கொண்டான். பழிவெறியும் அவள் மீதான இந்த அக்கறையும் மாறி மாறி தோன்றி பலவித உணர்ச்சிகளுக்கு உள்ளானவனுக்கோ இறுதியில் தன் மீதே அனைத்து கோபமும் திரண்டிருந்தது.

சினத்தில் மூக்கு விடைக்க நின்றிருந்தவன் வெளியேற எத்தணிக்க சரியாக தீக்ஷன் அங்கு வந்து சேர்ந்திருந்தான்.

தீக்ஷனில் நிலைத்திருந்த அவன் பார்வை அக்ஷய ப்ரியாவைப் பார்க்க அவனும் அவளைத் தான் பார்த்தான்.

அவளது மதி முகம் தன் காதலை நினைவு கூற தலையை உலுக்கி தன்னை சமப்படுத்திக் கொண்டவனின் பார்வை இப்போது அவளை பேஷன்டாக நலம் விசாரித்தது.

ஆதவும் அங்கே நின்று கொண்டிருக்க தலையை இடம் வலம் ஆட்டியவாறு அவளருகில் சென்று பரிசோதித்தான். இறுதியில் அவன் ஆதவ்வை முறைக்கவும் தவறவில்லை.

ஆதவின் அழுத்தமாக பார்வையில் "இவ சாப்பிட்டு முழுசா ஒரு நாளாச்சு..." என்ற தீக்ஷனை பார்த்து இப்போதும் அதே பார்வை வீசியவனுக்கு ரெண்டு அடி போட்டால் என்னவென்று தான் தோன்றியது. பின்ன இவன் அதிர்வான் என்று பார்த்தால் இப்படி ஒரு பார்வை பார்க்கிறான்..? எனத் தான் யோசிக்க முடிந்தது தீக்ஷனால்.

"என்னடா...?" என்ற தீக்ஷனிடம் "வந்த வேலை முடிஞ்சிட்டுல..அப்போ கிளம்பு..." என்றானே பார்க்க சுவரில் போய் தலையை இடித்துக் கொள்ளாத குறை தீக்ஷனிடம்.

ஆதவ்வை முறைத்தவன் ப்ரிஸ்க்ரிப்ஷன் தாளை அவன் கையில் திணித்து விட்டு வெளிப்படையாகவே தலையில் அடித்துக் கொண்டு சென்று விட்டான்.

போகும் அவன் "இவனெல்லாம் மனுஷனா...?"என திட்டிக் கொண்டே முனுமுனுக்க "ஏன் சுவரைப் பார்த்து திட்டுற..?" என்ற ஆதவ்வின் கேள்வியில் அதிர்ந்தவன் "நான் பைத்தியம் தானே..." என்றுவிட்டு நடையைக் கட்டினான்.

போகும் அவனையே உதட்டில் உறைந்த சிரிப்புடன் பார்த்து நின்றவன் அக்ஷயா கண்விழிக்க காத்திருந்தான்.

சிறிது நேரத்தில் மெதுவாக கண்களைத் திறந்தாள் அக்ஷய ப்ரியா. முதலில் மங்களாக தெரிந்த விம்பங்கள் இப்போது தெளிவாக தெரிய விழிகளை விரித்தவள் முதலில் கண்டதோ தன் முன் ருத்ரமூர்த்தியாக நிற்கும் அவனையே.

பதறியடித்துக் கொண்டு எழும்பியவளின் செயலில் கோபம் கொஞ்சம் மட்டுப்பட சாப்பாட்டைக் கண் காட்டியவன் "என்ன..? இப்படியே இருந்து சாகுற ஐடியாவா..? சாப்பிட்டு ரெடியா இரு. உனக்கு எமன் நான் தான்..." என விரல் நீட்டி எச்சரித்தவன் தீயாய் வார்த்தைகளை வீசிவிட்டு சென்று விட்டான்.

இவளுக்குத் தான் ஏன் பிறந்தோம் என்றிருந்தது. தன் விழிநீரை துடைத்தவள் பசி வேறு வாட்டி எடுக்க உணவை எடுத்து கொறிக்கலானாள். உணவின் அருமை அறிந்தவள் ஒன்றும் மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு முடித்த பின் உடல் சோர்வில், மீண்டும் தலையணையில் தலைவைத்து கண்களை மூடிக் கொண்டாள்.

***

சிந்தனையிலிருந்து வெளிவந்த தீக்ஷனுக்கோ குழப்பங்களே மிஞ்சி இருந்தன.

தன் நண்பனைப் பற்றி நன்கு அறிந்திருந்தவனுக்கு இந்தத் திருமணத்தில் ஏதோ ஒரு விடயம் மறைந்திருப்பது தெளிவாகப் புரிந்தது. தன் மனைவி சாப்பிட்டாளா? இல்லையா? என்பதைக் கூட அறிந்திராதவனாக இருக்கிறானே தன் நண்பன்..! என வெகுவாக குழம்பியவன் இது பற்றி ருத்ரனுடன் பேச வேண்டும் என நினைத்துக் கொண்டே ஹாஸ்பிடல் நோக்கி பயணமானான்.


***


வெளியே வந்த ஆதவ் தன் காரை எடுத்துக்கொண்டு நேரே வந்தது அந்தப் பாதுகாப்பு நிறைந்த வெட்டவெளி பிரதேசமொன்றில் அமைந்திருந்த பழைய கட்டிடம் ஒன்றிற்கே...

காரிலிருந்து ஸ்டைலாக இறங்கி தன் கூலர்சை கலட்டி சேட்டில் செருகியவன் தன் எட்டுக்களை ஆணித்தரமாக பதித்துக் கொண்டு நடந்து வந்தான்.

வேட்டையாடத் துடிக்கும் சிங்கமென சிவந்த விழிகளுடன் நடந்து வந்து கொண்டிருந்தவனைப் பார்த்தால் எதிரிக்கே சர்வமும் நடுங்கிப் போகும். ஆனால் அவனுக்கு மாட்டியதோ ஓர் எலி..

ஆம் காலையில் அவனைக் கொலை செய்ய முயற்சித்தவனை தன் தந்திர வலையில் சிக்க வைத்திருந்தான் காளை. சம்பவம் நடந்த இடத்தில் குனிந்திருந்து நிமிர்ந்தவன் மர்மமாக சிரித்ததன் அர்த்தம் என்னவென்றால், அங்கே தரித்து நின்ற பைக்கின் கண்ணாடியில், பின்னால் தாக்கியவன் தலையில் கை வைத்து நின்ற காட்சியை கண்டுவிட்டான்.

பின் வீடு சென்று சேர்வதற்குள் தன் பலம் கொண்டு அவனை கடத்தியும் விட்டான்.

அதனாலே தீக்ஷனும் ருத்ரனும் அவ்வளவு திட்டியும் அவன் அமைதியாக இருந்தது.இங்கே கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் இவன் செய்யும் இந்த வேலைகளுக்கெல்லாம் ஏ.சி.பி ருத்ரன் வேறு துணை. (நல்ல ஃப்ரெண்டுடா நீ...)

ஆனால் இவற்றில் சிலதை தீக்ஷன் அறிந்திருக்க வாய்ப்பில்லை. உயிரை காப்பவனே உயிரை எடுக்க விடுவானா என்ன..? (இருங்கடா உங்கள அவன்ட போட்டுக் கொடுக்கிறேன்..)

ஒரு காவலாளி அவனுக்கு வழிகாட்ட மின்னலென அவ்விடம் வந்து சேர்ந்தான் ஆதவ்.

வந்தவன் கண்டதோ மூக்கில் இரத்தம் சொட்ட கை கால்கள் எல்லாம் கதிரையில் கட்டப்பட்டு தலையைத் தொங்கப் போட்டிருந்த ஓராடவனை. அரை மயக்கத்தில் இருந்தவனுக்கு ஆதவ்வின் கட்டளைக்கிணங்க நீரடித்து எழுப்பப்பட கஷ்டப்பட்டு கண்களைத் திறந்தனுக்கு தென்பட்டதோ தன் முன் நின்ற வேங்கையவன்.

சேர்ட்டின் கையை முழங்கை வரை மடித்து விட்டவன் கையசைக்க கதிரையுடன் அவ்விடம் ஆஜரானான் விக்ரம். (அடடே தம்பி இங்க தான் இருக்கியாப்பா..)

வெளியில் விறைப்பாக நின்றிருந்தாலும் பேஸ்மன்ட் என்னவோ விக்ரமிற்கு வீக்காகத் தான் இருந்தது..(ஹா..ஹா..)

கதிரையை இழுத்து கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தவனின் தோரணை கண்டு எதிரில் இருந்தவனுக்கு பயம் தொண்டையை அடைத்தது.

ஆதவ் பேச முன்பே முந்திக் கொண்டவன் "சா..சார் நா..நான் எதுவும் பண்ணல..." சொல்லும் போதே இடையில் ஆதவ் கையைத் தூக்க அவன் பயத்தில் அப்படியே நிறுத்தி இருந்தான். வழமை போல ஸ்டைலாக தன் கேசத்தை கோதி விட்ட ஆதவிற்கோ,தன் முன் இருந்தவனைப் பார்த்து இகழ்ச்சியாய் இதழ் ஓர் புன்னகை..

விக்ரமோ நெஞ்சழுத்தம் வராத குறையாக தன் நெஞ்சை பிடித்துக் கொண்டு நின்றிருந்தான். பின்ன!? சிரிப்பு என்ன விலைனு கேக்குறவன் சிரிக்கிறான்ல..!!

அந்த ஒற்றையனோ மீண்டும் "நா..ன் ப..பண்ணல...." என்று திக்கித் திணற "இஸ் இட்..?" என்ற தன் அக்மார்க் வசனத்துடன் அவனை தலை சரித்துப் பார்த்தான் ஆதவ்.

அவனது இதழ் புன்னகையே தன்னுயிர் இனி தன்னிடமிருக்காது என்பதனை அந்த ஒற்றையனுக்கு புரிய வைக்க உண்மைக் கூறாமலே மாய்வோம் என முடிவெடுத்து விட்டான்.

ஆதவோ எலியிடம் படம் காட்டி வேலையில்லை எனக் கருதி நிதானமாக எழ, விக்ரம் போய் அவன் பின்னே நின்று கொண்டான்.

வாசலை நோக்கி திரும்பியவன் காட்ஸிடம் விழியசைத்து விட்டு கூலர்சை அணிந்து, வந்த வேகத்திலே திரும்பிச் செல்ல அங்கே அந்த ஒற்றையன் அலறிய அலறலில் விக்ரமிற்குத் தான் இதயம் நின்று துடித்தது.


தொடரும்...


தீரா.
 
Top