• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உன்னால் உயிர்த்தேன் - 09

Dheera

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 17, 2023
Messages
234
அத்தியாயம் 09

அன்றைய தினத்தில் நடந்த சம்பவத்திற்குப் பிறகு அக்ஷய ப்ரியா அறையை விட்டு வெளியே வருவதை முற்றும் தவிர்த்திருந்தாள். அவனும் அவளை தவிர்த்திருக்க இருவரும் நேரில் சந்தித்து பல நாட்கள் ஆகி இருக்கும். இவளோ தன்னைப் பார்த்தால் தானே அவனுக்கு காரணமின்றி கோபம் வருகிறது. ஆகவே அவனிடமிருந்து விலகியே இருப்போம் என நினைத்திருந்தாள். வேலா வேலைக்கு மரகதம் உணவை தந்துவிட்டு போவார். அதன் பின் அவள் அதனை சாப்பிடுகிறாளா? இல்லையா? என்பது இறைவன் அறிந்த ஒன்று.

தனிமையில் தன்னுள்ளே சிதைந்தவள் பார்க்க ஏதோ ஒன்றை இழந்ததைப் போலத் தான் காணப்பட்டாள். என்ன ஏதோ ஒன்று..!?, அது தான் ஒட்டு மொத்த வாழ்க்கையையுமே இழந்து விட்டாளே. மனதில் நிம்மதியின்றி தவித்தவள் கூண்டிக் கிளியானாள்.

ஆதவோ ஆபிஸ் முடிந்து நேர தாமதமாகவே வீடு வந்து சேர்ந்திருக்க இருந்த களைப்பில் குளித்து முடித்து தூங்கியும் போனான்.

...


விக்ரமோ தனது பெட்டில் தலையை வைத்தது தான் தாமதம் அவனது ஃபோன் அதன் இருப்பை உணர்த்தியது.

ஏற்கனவே ஆபிஸில் வேலைப்பளு காரணமாக பென்ட் கழன்று வந்திருந்திருந்தவனுக்கு இந்த அழைப்பு எரிச்சலைத் தர கோபத்துடன் கையில் எடுத்தவன் கண்டதோ அன்நொன் நம்பரில் இருந்து வந்த அழைப்பை.

"யாரு..?"என நெற்றியை சுருக்கியவாறு அழைப்பை ஏற்று காதில் வைத்தவனுக்கு அந்தப் பக்கம் பெண் ஒருத்தியின் குரல் கேட்க, ஜொள்ளு பார்ட்டி விக்ரமிற்கோ பெண்ணின் குரலில் தேன் வார்த்ததைப் போலிருந்தது.

அதில் "ஹலோ..." என மயக்கும் குரலில் பேசியவன் வேறொன்று எதிர்பார்த்திருக்க, மற்றைய பக்கமிருந்து காரசாரமான திட்டுக்கள் வந்து விழுந்தன. சட்டென காதிலிருந்த ஃபோனை அகற்றியவன் காதைக் குடைந்து விட்டு மீண்டும் வைக்க இன்னும் காரமாய் வந்து தெறித்தன அம்முவிடமிருந்து வார்த்தைகள்.

"ப்பாஹ்..யார்ரா இது..?" என்று மனதில் பீதியானவனுக்கு அப்போது தான் அந்தக் குரல் அம்முவை நினைவூட்டியது. அதில் சத்தம் வராமல் பல்லைக் காட்டியவன் அவளை சீண்ட நினைத்து "இந்தப் பக்கம் விக்ரம். அந்தப் பக்கம் யாரு...?" என்றான்.

இங்கே சூடானவள் "ஆங் உங்க ஆயா..." என்றாள்.

"ஆயாவா..? எனக்கு எந்த ஆயாவையும் தெரியாதே. நீங்க மாறி கால் பண்ணிட்டிங்கனு நினைக்கிறேன்."

"செருப்புப் பிஞ்சிறும் நாயே. நான் யாருனு தெரியலையாடா...?"

"ஐய்யே..தெரியலனு தானேம்மா இவ்வளவு நேரம் சொல்லிட்டிருக்கேன். மனுசனே டயேட்ல வந்து இருக்கான். நீ வேற ஏம்மா சும்மா கால் பண்ணி தொந்தரவு பண்ணிட்டு இருக்க..." என்றவன் வாய் மறைவில் கொட்டாவி விட அம்முவும் குழம்பி விட்டாள். பட்டென அவளது அழைப்பு துண்டிக்கப்படவே தலையில் அடித்துக் கொண்டவன் மீண்டும் அவளுக்கு அழைப்பெடுத்தான்.

"சா..சாரி ராங் நம்பருக்கு ட்ரை பண்ணிட்டேன்..." என்றவள் அழைப்பை துண்டிக்கப் போக அவளை அவசரமாக தடுத்தான் விக்ரம்.

"ஹலோ ஹலோ ராங் நம்பர் இல்லடி. கரெக்ட் நம்பருக்கு தான் எடுத்திருக்கடி என் ராட்சசி..." என்றானே பார்க்க மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறி விட்டது.

"ஏய்..ஏய் என்னடி இப்படி பச்சை பச்சையா திட்டுற. உன்ன பெத்தாங்களா செஞ்சாங்களா...?" என சீரியஸாக அவன் டவுட் கேட்க ஏகத்துக்கும் பீ.பி ஏறி நின்றவள் "ஓஓ வாங்க உங்களுக்கு அதையும் சொல்லி டவுட்ட க்ளியர் பண்ணுறோம். வளர்ந்து கெட்டவனே. நான் என்னடான்னா கஷ்டப்பட்டு இவர்ட நம்பரை அப்பாட ஃபோன்ல இருந்து ஆட்டய போட்டு எடுத்திருக்க, இவர் என்னடானா கூலா லவ்வர் கூட கடலை போடுற மாதிரி பல்ல காட்டிட்டு ஹலோவாம்மே. நீ எல்லாம் மனுஷனாடா. பேய், பிசாசு, கொரங்கு" என தன்பாட்டுக்கு வசைபாடிக் கொண்டிருந்தாள்.

அவனோ தலைக்குக் கீழ் கை போட்டுக் கொண்டு காலையாட்டி ஆட்டி அவளது திட்டுக்களை வாங்கிக் கொண்டிருந்தான்.

"ஹலோ..ஹலோ இருக்கியாடா பக்கி...?" என்றவளிடம் "ம்ம் இருக்கேன் இருக்கேன் நீ கன்டினிவ் பண்ணு..." என்று மீண்டும் அசதியில் கொட்டாவி விட்டான்.

அவனது குரலே அவளுக்கு சரியில்லாதது போலத் தோன்ற "என்னடா டயேடா இருக்கா...?ஆமா ஏன்டா பேச மாட்டேங்குற..?" என்றவளின் புரிதலில் சிரித்தவன் "நீ எங்கடி பேச விட்ட..? ஆபிஸ்ல ஹெவி வேர்க். ரொம்ப டயடா இருக்கு.. " என்றான்.

"சாப்பிட்டியாடா...?" என்றவளின் அக்கறையில் ஓர் முறை மூச்சை இழுத்து விட்டவனுக்கு நெஞ்சம் காந்தியது. எத்தனை வருடங்களின் பின்னர் இப்படியான அக்கறையான வார்த்தைகளை கேட்கிறான். பேச நாவெலாமல் மௌனம் சாதித்தவனிடம் எதுவும் கேட்க அவளுக்கு மனம் வரவில்லை. விக்ரம் பற்றித் தான் அவளது தந்தையிடமிருந்து அனைத்தையும் கேட்டு விட்டாளே. அவனுக்கு சொந்தமென்று யாருமில்லை என்ற செய்தி அவளை காயப்படுத்தியது. அதனாலே இதோ அவனது நம்பரை தேடி எடுத்து அழைத்து விட்டாள்.

ஆனால் விக்ரமோ எப்போதும் தனக்கு யாருமில்லை என்பதை வெளியில் கூறியது இல்லை. கூற ஆதவ் க்ரிஷ் அவனை விட்டால் தானே. முதன் முதலில் ஆதவிடம் வந்து நின்றவனிடம் ஃபேமிலி பற்றி விசாரிக்க விக்ரம் கூறிய செய்தியில் தலையை மேலும் கீழும் ஆட்டிவன் அவனது தோளை தட்டி விட்டு கூறியதெல்லாம் "உனக்கு நான் இருக்கேன். இனி யாரும் உன்னைப் பத்தி கேட்டா ஆதவ் இருக்கேனு சொல்லு..." என்று கடந்து விட்டான்.

எத்தனை ஆழமான வார்த்தைகள். அதை நினைக்கையில் இப்போது கூட விக்ரமிற்கு கண்கள் கலங்கி விடும். ஆதவும் இவனது இதே வலிகளைத் தானே அனுபவித்துக் கொண்டிருக்கிறான். அதன் பின்னரே விக்ரமிற்கு அவனைப் பற்றிய விடயங்கள் தெரிய வர அவனை விட இன்னும் காயப்பட்டது என்னவோ விக்ரம் தான். அன்றிலிருந்து இன்றுவரை அவன் தனக்கு பாஸ் என்பதை விட தோழமையுடன் அவனுக்கு பக்க பலமாக நின்று அவனது உயிரை காத்து வருகின்றான்.

மாறி மாறி அவரவர் சிந்தனையில் மூழ்கி இருக்க முதலில் கலைந்த விக்ரம் "நான் நாளைக்கு கால் பண்ணுறன்டா..." என்றதுடன் கட் பண்ணி விட்டான்.

அம்முவிற்கும் அவனது நிலைமை புரியாமல் இல்லை. சரி நாளைக்கு பார்த்துக்கலாம் என தூங்கப் போனவளுக்கோ விக்ரமுடன் ஏதோ பூர்வ ஜென்ம பந்தம் இருப்பது போலவே தோன்றியது.

இங்கே விக்ரமோ விழியோரம் கசிந்த கண்ணீரை துடைத்து விட்டு கண்களை மூடினான். அவன் விழிகளுக்குள்ளோ அவளது குழந்தை விம்பம்...!!

...


இன்று தன் வாழ்க்கையே ஓர் சுழலுக்குள் சிக்கப் போகிறது என்பதை அறியாத ஆதவ் தன் நண்பர்களுடன் ஜாகிங் போய் வந்து கொண்டிருந்தான். அவர்களது பேச்சுகளோ முற்றும் ஆதவ்வைத் தொடரும் கொலைகளைப் பற்றியே. வழமையாக தனியே ஜாகிங் சென்று வருபவர்கள் அன்றைய சம்பவத்தின் பின் ஆதவ்வின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு அவனுடனே ஒன்றாக காலையில் சென்று வருகின்றனர்.

இப்படியே வந்து கொண்டிருந்தவர்கள் தங்களது இடம் வர வர ஒவ்வொருவராக பிரிந்து சென்றனர். இறுதியாக வந்து கொண்டிருந்த ஆதவ் தனது வீட்டு வாசலினுள் நுழையும் போது கேட்ட குரலில் நிதானித்தது ஒரு நிமிடம் தான். அடுத்த கணம் செந்தனலாய் மாறிப் போயிருந்தது அவன் முகம். அவனது செவிகளை தீண்டிச் சென்ற வார்த்தைகளில் அதிர்ச்சியில் உறைந்து நின்றவனுக்கு கோபத்தில் நரம்புகள் புடைத்தன.

..

அந்த சென்னை விமான நிலையமே அதிகாலை வேளையதில் சன நெரிசலுடன் காணப்பட்டது.

அப்போது தான் வந்து தரையிறங்கி இருந்த அமெரிக்க விமான நிலையத்திலிருந்து இறங்கி வந்து அனைத்து ஃபோமாலிட்டிஸையும் முடித்துக் கொண்டு பார்கிங் ஏரியாவை வந்தடைந்திருந்தாள் நவநாகரீக மங்கை ஒருத்தி.

பாரின் கலாச்சாரத்துக்கிணங்க ஆடை அணிந்திருந்தவளின் வதனமோ மேக்கப்பில் மிளிர்ந்திருந்தது. திமிருடன் கூடிய அலட்சிப் பார்வையுடன் ஹை ஹீலுடன் நடந்து வந்து கொண்டிருந்தாள்.

சுமார் பதின்மூன்று ஆண்டுகள் கழித்து தாய் நாட்டிற்கு திரும்பியுள்ளாள். தாய் தந்தையோ இங்கேயே குடியேறி இருக்க இவள் வளர்ந்தது என்னவோ அவளது தாத்தா பாட்டியிடம் தான். அனைத்து சொத்திற்கும் ஒற்றைப் பெண் வாரிசு. அழகுடன் திமிரும் ஜாஸ்தியாகவே கொட்டிக் கிடந்தது.

வெளியே வந்தவளுக்கு சென்னையின் வெப்பம் தாக்க சூரிய வெளிச்சத்தில் கண் கூச, கூலர்சை அணிந்தவளோ அந்த சூரியனை விட சூடாக ஒருவனை தேடிக் கொண்டிருந்தாள். அவளது கண்ணசைவில் அவளருகில் வந்த ஆடவனுக்கு அறைய கை ஓங்கியவள் பின் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு அவனை கிழி கிழியென கிழித்து விட்டாள். அவன் அவமானத்தில் தலை குனிந்திருக்க "இடியட் டேக் இட் ஆல் என்ட் கம்.." என்றவாறு நடையைக் கட்டினாள்.

அவனும் வந்து காரை எடுத்திருக்க அதுவோ சென்னையில் இருந்த அந்த அரண்மனையை நோக்கி சென்றது.

..

அங்கே அந்த வீடே அதிரும் வகையில் ஃபோனில் யாரிடமோ கத்திக் கொண்டிருந்தான் தயாளன்.

"ஏய்.. அவன் அந்தப் பொடிப் பையன் கிட்ட மாட்டிக்கிட்டானா..? ஓஓ சிட்.. இவ்ளோ நாள் நான் பட்ட கஷ்டமெல்லாம் வீணாப் போச்சு. என்னத்த அவன் கிட்ட உலறி வைக்க போறானோ தெரில. டேமிட். அவனை அவன் உயிரோட விட மாட்டான்டா..." என்று கத்தியவருக்கு இரத்தக் கொதிப்பு அதிகமானது.


தொடரும்...


தீரா.
 

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,940
ஆதவ் பழிவாங்க கல்யாணம் பண்ணனும்னு இருந்த பொண்ணு இவளா தான் இருக்கும் 🤔🤔🤔🤔🤔அச்சோ ஆனா அக்ஷய மாட்டிகிட்டாளே 😲😲😲😲😲😲😲
 
Top