• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உன்னால் உயிர்த்தேன் - 12

Dheera

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 17, 2023
Messages
234
அத்தியாயம் 12


அந்தப் பூங்காவிலே விக்ரம் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு நின்றிருக்க அவனுக்கு முன்னே கைகளைக் மார்புக்குக் குறுக்காக கட்டிக்கொண்டு பார்வையால் அவனை எரித்துக் கொண்டிருந்தாள் அம்மு.

ஏனாம்..?

எவ்வளவு நேரம் சென்றதோ தெரியவில்லை. வந்ததில் இருந்து இரண்டும் இப்படியே இருக்க அப்போதும் அவன் பால் வடியும் முகத்தைக் காட்டிக் கொண்டிருத்தான்.

இதற்கு மேலும் இவன் சரிப்பட்டு வரமாட்டான் எனத் தோன்றியதோ, அம்முவே பேச ஆரம்பித்திருந்தாள்.

"முதல்ல ரியெக்ஷன மாத்து..பார்க்க சகிக்கல.." என சலித்துக் கொண்டவளை இப்போது விக்ரம் முறைத்து வைத்தான்.

அவளோ "நானும் எவ்வளவு நேரந்தான் உன் கேவலமான ரியெக்ஷனை பார்க்குறது. வழி விடு காத்து வரட்டும்..." என கைகளால் விசிறியவாறு அவனை இடித்து தள்ளிவிட்டுப் போய் பெஞ்சில் அமர்ந்தாள் விக்ரமின் ராட்சசி.

அதில் மேலும் கடுப்பானவன் "ராட்சசி.. உனக்கு என்னைப் பார்க்க சகிக்கலயாடி...?" என்றான். அவளோ ஆம் என தலையாட்ட அவனின் கை அவள் புறம் நீண்டிருந்தது.

பயத்தில் பைக்குப் பின்னே ஒழிந்தவளைப் பார்த்து உதட்டுக்குள் சிரித்தவன் அவளை இடித்தவாறு அவளருகில் சென்றமர அம்முவோ அப்படியே அவன் தோள் சாய்ந்தாள்.

சந்தோஷத்தில் திரும்பிய விக்ரமிற்கு லேசாக கண்களும் கலங்கி விட்டன. அவனுக்கென்று உரிமையுடன் வந்திருக்கும் ஓர் உறவு... நினைக்கையில் சந்தோஷக்கடலில் தத்தளித்தான் ஆடவன்.

அவளறியா வண்ணம் திரும்பி கண்ணீரை துடைத்தவனிடம் "ஏன்டா நேத்து கதைச்சிட்டு இருந்தப்பவே காலை கட் பண்ணின...?" எனச் முரண்பட்டவளிடம் என்னவென்று கூறுவான் தன் உணர்வுகளை. அவன் அமைதியாக தலை குனிந்து அவளை பார்த்துக் கொண்டிருக்க நிமிர்ந்து அமர்ந்தவள் அவனது மனதைப் படித்தவளாக "உனக்காக எப்பவும் நான் இருப்பேன்.." என்றவளை கண்ணீருடன் அணைத்துக் கொண்டான் விக்ரம்.

அவனது உடல் அழுகையில் குலுங்க அவளுக்குமே கண்ணை கரித்துக் கொண்டு வந்தது. விக்ரமின் முதுகை ஆதரவாக தடவிட்டவளிடமிருந்து பிரிந்தவன் "தெ..தெங்ஸ்.." என நெகிழ்ந்து கூற அவளது முகம் தான் இப்போது கோபத்தில் சிவந்தது.

அவனை தள்ளி விட்டு பையுடன் எழுந்து சென்றவளை புரியாமல் பார்த்தவன் கண்களை துடைத்து விட்டு அவள் பின்னே ஓடினான்.

"ஹேய் என்னாச்சு..?" என அவளை தடுத்து நிறுத்தி கேட்டவனிடமிருந்து முகத்தை தூக்கி வைத்தாள் பெண்ணவள்.

அதில் இன்னும் மனம் பாரமாக "என்னாச்சுடா..?" என்றவன் அவளிடமிருந்து நிச்சயம் இந்தக் கண்ணீரை எதிர்பார்த்திருக்கவில்லை.

பதறிக் கொண்டு அவளது கன்னம் தாங்க சென்றவனின் கையை தட்டி விட்டவள் "ப்ச்..போ.." என உதட்டைப் பிதுக்க அவனுக்குமே கண்கள் மீண்டும் கலங்கி விட்டன. காரணம் தெரியாமல் அழுபவளிடம் எப்படிக் கேட்பதென்று சத்தியமாக அவனுக்கு விளங்கவே இல்லை.

அவளைப் பார்த்துக் கொண்டே"ஏன்..?" என்று மட்டும் தான் கேட்டான். அவனது குரலில் தெரிந்த வலியில் முகத்தை அழுந்த துடைத்தவள் "இப்போ தானே உனக்கு நான் இருக்கேன்னு சொன்னேன். அதுக்குள்ள தெங்ஸ் சொல்லி என்னை உன்னை விட்டு தூரமாக்கிட்டல்ல..?" என்றவளின் சிறுபிள்ளைத் தனமான கோபத்தில் முகம் சிவக்க சிரித்தவன் அவளை தன் தோள் சாய்த்து "இனி சொல்லைல்ல போதுமா..?" என்றான்.

அவளும் வாகாக அவனுடன் ஒன்றிக் கொண்டு "ம்ம்.." என மூக்கை உறிஞ்சினாள். அதில் விக்ரமின் முகம் சிரிப்பில் இன்னும் விகசித்தது.


...



அக்ஷய ப்ரியாவும் மரகதமும் சமைலறையில் நின்று கொண்டிருக்க அறையிலிருந்து வந்து கொண்டிருந்தான் ஆதவ் க்ரிஷ்.

வேலைகளை முடித்து விட்டு மேலே செல்லலாம் என அக்ஷயா வெளியே வரவும் ஆதவ் டைனிங் ஹாலை அண்மிக்கவும் சரியாக இருந்தது. அவனைக் கண்டு சடுன் ப்ரேக் போட்டு அசையாமல் நின்று கொண்டவளை கடைக்கண்ணால் பார்த்து விட்டு நிமிர்ந்த நடையுடன் வந்து அமர்ந்து கொண்டான்.

அவனோ அவளை கவனியாதது போல ஃபோனை நோண்ட ஆரம்பிக்க சுயத்தை அடைந்த அக்ஷய ப்ரியா பயத்தில் மீண்டும் சமையலறையினுள் நுழைந்து கொண்டாள்.

பெருமூச்சுகளை விட்டுக் கொண்டு நின்றிருந்தவளை புரியாமல் பார்த்த மரகதம் "அம்மாடி என்னாச்சுமா...?" என கேட்க அவளோ அவரை பாவமாக பார்த்து வைத்தாள்.

"இப்போ என்னத்த கேட்டுபுட்டேனு இப்படி நிக்கிறா..." என நினைத்துக் கொண்டு வெளியே எட்டிப் பார்த்தவருக்கு நெஞ்சு வலி வராத குறைதான்.

பின்ன..? அவன் சாப்பிட அமரும் போது பரிமாற யாருமில்லை என்றால் அடுத்த நொடி தட்டு எல்லாம் பறந்து போய் விழும். அப்படி இருக்க, இன்று நேரத்துடன் வந்ததுமல்லாமல் அமைதியாய் இருப்பவனைப் பார்த்தால் நெஞ்சு வலி வருமா? வராதா..?

அவரோ விழிபிதுங்கி நின்றதெல்லாம் சில வினாடிகள் தான். பின் துரிதகதியாக அக்ஷய ப்ரியாவை கிளப்ப சென்று விட்டார்.

"அம்மாடி தம்பி பசில இருக்கு போலடா. போமா போய் உன் கையால பரிமாறு..." என்றவரின் கூற்றில் இப்போது இவள் நெஞ்சில் கை வைத்தாள்.

கண்களில் கண்ணீர் கோடாய் தெரிய பயத்தில் பதுங்கி நின்றவளைப் பார்க்கவும் அவருக்கும் பாவமாகத் தான் இருந்தது.

"இப்ப என்னத்தா சொல்லிப்புட்டேனு கலங்குறிங்க. இருங்க நானே போறேன்..." என்றவர் வெளியே போய் அவனுக்குப் பரிமாறப் போக அவரை பார்வையாலே தடுத்து சமையல்கட்டினுள்ளே பார்வையை செலுத்தியவனைப் புரிந்து கொண்டு மீண்டும் உள்ளே வந்தவர் கெஞ்சிக் கூத்தாடி அக்ஷய ப்ரியாவை அனுப்பி வைத்தார்.

அவளுக்கோ இன்று என்ன இடி வந்து தலையில் விழப்போகிறதோ என்றிருந்தது. பயப் பந்து தொண்டையில் உருள நெஞ்சுக்குழி ஏறி இறங்க வெடவெடுத்தவளாக மெல்ல மெல்ல ஆதவை நோக்கி எட்டுக்களை எடுத்து வைத்தாள்.

இப்படியே பூமி பிளந்து உள்ளே சென்று விட மாட்டோமா என்றிருந்தது. வந்தவளோ அவனருகில் செல்லப் பயந்து சற்றுத் தள்ளி வியர்த்துக் கொட்ட நின்றிருக்க, அவனோ ப்ளேட்டை திருப்பி வைத்து அவளுக்காக காத்திருந்தான்.

அவள் அசையாது சிலை போல் நிற்க தன் பொறுமையை இழுத்துப் பிடித்தவனாக பெருமூச்சுடன் தனக்குத் தானே பரிமாற பாத்திரத்தில் கை வைக்கப் போக, அந்த சிலைக்கும் உயிர் வந்ததுவோ..!? அவசர அவசரமாக அனைத்தையும் அவனுக்குப் பரிமாறினாள். அவளது பயம் அவளது கை நடுக்கத்தில் வெளிப்பட உணவுகள் சிலதோ மேசையில் சிந்தின. அவளது நிலை அவனுக்கு புரிந்ததாக சிரிப்பில் மீசை துடித்தது. (சிங்கம் சிரிக்கிதே...!!)

ஒரு கவலத்தை சாப்பிட்டவன் அப்படியே அதிர்ந்து அவள் முகத்தைப் பார்க்க அவளோ தரையே தஞ்சமென தலை குனிந்திருந்தாள்.

இதற்கு மேலும் தாங்க முடியாமல் அந்தக் கவலத்தை விழுங்கியவன் தட்டிலே கையை கழுவி விட்டு நிமிடம் கூட தாமதியாமல் எழுந்து சென்று விட்டான். இதனை எதிர்பாராதவள் கண்களை அகல விரித்து அவன் சென்ற பாதையை வெறித்தாள். தன்னையே வெறுத்தவளின் விழிகள் அதன்பாட்டில் கண்ணீரை சொரிந்தன.

மரகதம் வந்து தோளைத் தொட வெளிவரத் துடித்த விம்மலை அடக்கிக் கொண்டு ஓடினாள்.

அங்கே தனதறை வந்தவனுக்கு இன்னும் அவனவள் சமைத்த உணவை ருசித்துக் கொண்டிருப்பது போலவே தோன்றியது. இன்றைய சமையல், மரகதம் சமைத்தில்லை என்பது அதன் ருசியே காட்டிக் கொடுத்திருந்தது. இன்றைய உணவு அப்படியே தன் தாயின் கைப்பக்குவத்தை கொண்டிருக்கவே அவனுக்கு அது தொண்டைக்குழியில் இறங்க மறுத்தது. எத்தனை வருடங்கள் தவித்திருப்பான் இந்த சுவையை மீண்டும் புசிக்க மாட்டோமா என. இதோ இன்று அதனை நனவாக்கிக் தந்து விட்டாளே தன்னவள். தாங்கிக்கொள்ள முடியாமல் எழுந்து வந்தவன் தன் கைகளில் வாசம் பிடித்தான். தன்னிலை மறந்தவனாக கட்டிலில் தொப்பென அமர்ந்தவனுக்கு நிலை கொள்ள முடியவில்லை. இரும்பாக மாறியிருந்த இதயம் இலகுகின்றது என்பது உண்மை.

பின் முடிவுடன் மீண்டும் கீழே இறங்கி வந்தான்.



தொடரும்...


தீரா.
 
Top