• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உன்னால் உயிர்த்தேன் - 39

Dheera

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 17, 2023
Messages
234
அத்தியாயம் 39


தன் தங்கையின் சிரிப்பில் அகம் மகிழ்ந்தவன் அவளின் நெற்றியில் முத்தம் வைத்தான் பல வருடங்கள் கழித்து.

அதில் அவளது இதழ்களும் அழகாக விரிந்தனவோ..!!? அதில் இறுதியாக தான் பார்த்த அக்ஷய குழந்தையை மீண்டும் விக்ரம் கண்டான் அந்த ஒற்றைப் புன்னகையில்.

"மை பேபி" என விக்ரம் மெதுவாய் கூற அதை அவளும் ஆமோதிப்பது போல தலையசைத்து சிரித்து வைத்தாள்.

எல்லா உறவுகளும் ஏதோ ஒன்றை எம்மிடம் உணர்த்தும். அதில் இந்த அண்ணன் என்ற உறவு தனிசிறப்பு கொண்டதுவோ..!!?
தன் தங்கையின் சிரிப்பிற்காக எதையும் செய்யும் அண்ணன் இருக்கும் தங்கைகளுக்கு தான் தெரியும் அந்த நான்கெழுத்து கூட ஓர் கவிதை என்று...

"க்கும்..." என்ற சத்தத்தில் இருவரும் திரும்பிப் பார்க்க அங்கே கலையுடன் இதழோடிசைந்த புன்னகையுடன் ஆதவ் க்ரிஷும் இடுப்பில் கைகுற்றி முறைப்புடன் விதுர்ஷன ப்ரியாவும் நின்றிருந்தனர்.

விக்ரமும் அக்ஷுவும் ஒருவரை ஒருவர் ஏறிட்டுவிட்டு அவர்களை திரும்பிப் பார்த்து "என்ன..?"என புருவம் உயர்த்தி ஒரே நேரத்தில் கேட்க அது போலவே ஆதவும் விதுவும் தங்களை திரும்பி பார்த்து விட்டு மீண்டும் அவர்களை ஏறிட்டு "நத்திங்" என்றவண்ணம் தோளை உலுக்கிவிட்டுக் கொண்டனர்.

தங்களின் செய்கையில் அவர்களுக்குமே சிரிப்பு வர அடுத்த கணம் அவ்விடமே அவர்களின் சிரிப்பொலியில் நிறைந்திருந்தது..

ஆதவ் அக்ஷய ப்ரியாவின் அருகில் மையல் பார்வையுடன் வர விது இல்லாத சேட் கையை மேலே உயர்த்திய வண்ணம் வந்து விக்ரமின் எட்டாத தோளில் முழங்கையை முட்டுக் கொடுக்க முடியாது எட்டி நின்று முட்டுக் கொடுத்துக் கொண்டு "என் மேலேயும் கொஞ்சம் உங்க பாச மழைய பொழிஞ்சு விடுங்க அண்ணனாரே...நானும் உங்க தங்கச்சி தான் நெனவுல இருக்கட்டும்" என இன்ஸ்டென்டாக ஒரு பொறாமை எட்டிப் பார்க்க முகத்தை உற்றென வைத்துக் கொண்டாள்.

அவளது சிறுபிள்ளை தனத்தில் அண்ணாக இல்லாமல் தந்தையாக மாறி விக்ரம் பக்கவாடாக அணைக்க முற்பட அதனை தடுத்து மீண்டும் அது போல நின்று கொண்டாள் விது.

"இந்த எட்டாத வேலை நமக்கு தேவ தானா..?"என விக்ரம் அவளை கலாய்க்க

"நீ வளரத் தெரியாம வளர்ந்ததுக்கு நான் பொறுப்பில்லை..." என்றவளை இன்றிருந்த மகிழ்ச்சியான மனநிலையில் விக்ரம் சண்டைக்கு இழுக்க விரும்பவில்லை. ஆனால் அதுவே சண்டையாக மாறிப் போனது இங்கே..

"அடடே...சாருக்கு தங்கச்சி கிடைத்த சந்தோஷத்துல என் கூட பேச பிடிக்கலையோ..." என்றவள் உண்மையாகவே முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள்.

அது விக்ரமை பாதிக்க "அப்படி இல்லடா...
நீ என்ன? அவ என்ன? ரெண்டு பேரும் எனக்கு ஒன்னு தான்...
நீ எனக்கு கிடைச்ச விதம் வேற அவ கிடைச்ச விதம் வேற...
அது தான் டிஃபரென்டே தவிர நீங்க ரெண்டு பேருமே எனக்கு கெடச்ச ப்ளசிங்ஸ்.." என்கவும் அவனை பாசத்துடன் கட்டிக் கொண்டாள் விது.

"அது சரி நம்ம அண்ணி மேட்டர் என்னாச்சு...?" என சுற்றி இருப்பவர்களை மறந்து நினைவு வந்தவளாக விது பேச்சை ஆரம்பிக்க விக்ரமிற்கு பகீர் என்றிருந்தது..

பாய்ந்து போய் அவள் வாயை தன் கையால் அடைத்தவன் தலையை வேண்டாம் என ஆட்டினான்.

அவளோ "ம்ம்.." என்று திமிறியவள் கையை விலக்கிவிட்டு "விடுடா எரும..." என்கவும்

"வாய மூடுடி குட்டிப்பிசாசு" என பார்வையால் ஆதவை கண் காட்டி கெஞ்ச அப்போது தான் அவன் தடுப்பதற்கான காரணம் புரிந்தது.

அடுத்த நொடி பல்ப் பத்திக் கொள்ள "ஓஓஓஓஓஓஓ" என்றவள் விக்ரமை மாட்டிவிட எண்ணி

"அத்தான்... அத்தான்..." என ஆதவின் அருகில் வரத் துடிக்க, அவளை விக்ரம் தடுத்திருந்தான்.

அக்ஷய ப்ரியாவும் ஆதவும் ஒருவரை ஒருவர் பார்த்து நிற்க விக்ரமிடம் இருந்து தப்பித்துக் கொண்டே "அந்த அமர்த்திக்கா என்ற பொண்ணு உங்க கம்பனி ஸ்டாப் தான...?"

"ம்ம் விடுடா.." என்றவள் அப்போதும் தன்னை தடுக்கும் விக்ரமின் கையில் கிள்ளிவிட "ஆஆஆஆ.. ராட்சசி..." என்றவனின் திட்டைக் கூட காதில் வாங்காமல் "அவள தான் நம்ப சார் லவ் பண்ணுறாரு...பார்த்து பக்குவமா செஞ்சி விட்டுடுங்க...வேலைய விட்டு தூக்கினாலும் எனக்கு ஓகே தான்" என கத்திக் கூற ஆதவ் விதுவை பார்த்து கண்ணடித்து சிரித்து வைத்தான்.

அவளோ விடாமல் விக்ரமின் முறைப்பையும் வாங்கிக் கொண்டு ஆதவை பார்த்து சிரித்தாள்.

அவளை விடுத்து ஆதவின் அருகில் வந்தவன் "சார் அவ ஏதோ உலர்றா...அத கணக்" என்ற வசனத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முன்னரே ஆதவ் "என்ன விக்ரம் உங்கள ஏஸ் அ பி.ஏ ஆக வேலையைவிட்டு தூக்கனும் போலயே" என்கவும்

"சா..சார்..." என புரியாமல் விக்ரம் விழித்து நின்றான்.

"பின்ன என்ணண்னா...அவர் சொல்ல வரது புரியலயா...?" என்கவும் விக்ரம் கலக்கத்துடனே இல்லையென மண்டையை ஆட்ட

"அட டியூப் லைட்..." என்ற விதுவை விக்ரம் முறைக்க நான் ஒன்னும் உன்னுடைய முறைப்புக்கெல்லாம் பயப்பட மாட்டேன் என்ற ரேஞ்சில் முகத்தை திருப்பிக் கொண்டவள் ஆதவின் அருகில் சென்று நின்று கொண்டு "ஏஸ் அ மச்சானா வேலை கன்ஃபோம்னு சொல்ல வராரு எங்க அத்தான்..." என்று தெளிவு படுத்தியவள் "அப்படி தான அத்தான்" என அவனிடமே கேள்வியும் கேட்டு வைத்தாள்.

அவளுக்கு புன்னகையை பதில் அளித்தவன் விக்ரமை பார்க்க அவன் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் வடிந்தது..

"சா..சா.." என பேச வந்தவன் மூவரினது முறைப்பிலும் "ம..ம..மச்சான்.." என்ற அழைப்புடன் அவனை கட்டிக் கொண்டான்.

இத்தனை நாட்களும் கோபக்காரனான ஆதவை சார் என அழைத்திருந்தவனுக்கு இந்த உறவு முறை உடனே வாயில் வரவில்லை.

இருவரினதும் நிலையை பார்த்த விதுவிற்கே கண்கள் கலங்கிப் போயின...

அவர்களை சுற்றி வந்து அக்ஷய ப்ரியாவின் அருகில் வந்தவள் "நான் என் அக்காவ ஹக் பண்ணிக்கிறேன்" என்றவள் அவளை அணைத்துக் கொண்டாள்.

.....

"என்னப்பா காலையிலயே க்ரிஷ் கால் பண்ணி இருந்தான்... என்னப்பா சொன்னான்..? ஏதாச்சும் ப்ராப்ளமா...?" என சற்றே கலக்கத்துடன் கேட்டுக் கொண்டு நின்றார் மீரா.

"அதெல்லாம் ஒன்னுமில்ல மாம்...ஏதோ இம்போர்டன்டான விஷயம் பற்றி பேசனுமாம். லொகேஷன் செயார் பண்ணுறேன் வா என்றான்" என கூறினான் தீக்ஷன்.

"சரி அவன் வர சொல்லி இருக்கான்னா ஏதோ முக்கியமான அலுவல் தான் போலப்பா...போய்டு வாடா கண்ணா"

"போய்டு வா இல்லை...போய் வருவோம்..." இப்போது தீக்ஷன்.

"என்னப்பா சொல்லுற..?" மீரா.

"அவன் தான் மாம் சொன்னான். நீங்களும் டாட்டும் வரனுமாம். கையோட கூட்டிட்டு வர சொன்னான்..."

"ம்ம்.." என்றவருக்கு ஆதவின் அழைப்பிற்கு ஏதோ காரணம் இருக்கும் என தோன்ற அமைதியாகி விட்டார்.


....


அன்று அனைவரும் ஆதவின் இல்லத்திலே தங்க வேண்டி ஆகிற்று.

சங்கவியின் பார்வை அக்ஷய ப்ரியாவையே தொடர்ந்த வண்ணம் இருந்தது.

விக்ரம், ருத்ரன், விது என அவ்விடமே சந்தோஷத்துடனும் கேலியுடனும் கலகலவென்று இருந்தது.

அனைவரினதும் மனதிலும் ஏதோ அளவுக்கு மீறிய நிம்மதி பரவி இருந்தது ஒரு பக்கம். இத்தனை நாட்களும் தாங்கள் பட்ட கஷ்டங்களுக்கெல்லாம் தீர்வு கண்டது போல அவரவர் முகத்தில் சந்தோஷத்தின் சாயல்...

"வேண்டாங்க ப்ளீஸ்..." அக்ஷய ப்ரியா ஆதவ்விடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள்.

ஆனால் அவன் தான் பார்வையாலே அவளை அதட்டி உருட்டி உண்ணக் கொடுத்துக் கொண்டிருந்தான் சுற்றி இருப்பவர்களை கவனத்திற் கொண்டு.

அனைவருமாக அமர்ந்து மதிய உணவை எடுத்துக் கொண்டிருந்தனர். ஆதவ் தன் காதல் மனைவிக்கு தன் கையாலே பரிமாறிக் கொண்டிருந்தான். எப்போது தன் மனைவியின் மீது இருந்த ஈர்ப்பு காதலாக மாறியதோ அன்றிலிருந்து இதுவே வழமையாக போய்விட்டது. அவன் சிறு வயது முதலே தன்னை சீர்படுத்தி தனிமையாகவே வளர்ந்து வந்ததால் அவனுக்கு தானே எல்லாம் செய்து பழக்கப்பட்டிருந்தது. இருந்தும் இந்த அக்ஷுவின் கைப்பட்ட உணவை உண்ணுவதில் அலாதி பிரியம் உண்டு அவனுக்கு..

ஆனால் அக்ஷய ப்ரியா வளர்ந்த விதம் வேறு. சிறு வயதிலிருந்தே யாராவது தனக்கு பாசமாக உணவு ஊட்டி விடமாட்டார்களா என ஏங்கித் தவித்தது அந்தப்பிஞ்சு மனது. கமலாம்மா எப்படி தான் நல்ல விதமாக வளர்த்தாலும் ஒரு குழந்தைக்கு ஊட்டிவிடும் அளவுக்கு நேரம் இருந்ததில்லை. என்று ஆதவின் கையால் முதல் தடவை சாப்பிட்டாளோ அன்றிலிருந்து அந்த பாசத்தை தனதாக்கிக் கொள்ள ஏங்கினாள்.

அவளது உணர்வுகளை படித்துக் கொண்ட ஆதவ் எவ்வளவு தான் வேலைப்பளு இருந்தாலும் அதனை இயன்றமட்டில் ஒதுக்கி வைத்துவிட்டு இவளுக்கு உணவை ஊட்டிவிடுவான். அது போலவே இன்றும் அவளுக்காக அனைத்தும் பார்த்து செய்து கொண்டு இருக்கிறான் ஆதவ் க்ரிஷ். ஆதவின் மேல் இருந்த காதல் இன்னும் அதிகமாகிக் கொண்டே போனது அக்ஷய பெண்ணவளுக்கு..

ஆதவுக்கு தன் தனிமையை போக்க வந்த தேவைதையாகவே இருந்தாள் அக்ஷு. அருகில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு அவர்களின் இணக்கம் மனதை பிசைந்தது. சங்கவி தன் மகளுக்கு ஊட்டிவிட துடித்தார். இருந்தும் என்ன பயன் அவள் தான் அவரை நெருங்க விடமாட்டேன் என்கிறாளே..

அவளை உண்ண வைத்த பின்னரே ஆதவ் தன் வயிற்றை கவனித்தான். அதற்குள் அர்ஜென்ட் கால் வர எழுந்து சென்று விட்டான்.

...


"ஓகே. இஃப் இட் ஆல் வில் கம் த ரைட் வே ஏஸ் வீ ப்ளேன்ட் , லெட் மீ நோ..." என்றதுடன் அவனது அழைப்பு துண்டிக்கப்பட்டது.

அப்படியே ஃபோனுடன் திரும்பியவனை வரவேற்றது என்னவோ உணவுத் தட்டுடன் நின்றிருந்த அக்ஷய ப்ரியா.

தன் மேல் அவளுக்குள்ள கரிசனத்தில் அப்படியே உருகிற்று ஆடவனுக்கு.

அவனை பார்த்து மென்னகைத்தவள் உணவை உண்ணாமல் வந்ததற்கு தான் கொண்டு வந்ததாக பார்வையால் உணர்த்தி மேசையில் வைக்கப் போனவளை, பின் தொடர்ந்தவன் அப்படியே அவளை பின்னாலிருந்து இழுத்து தன் மடியில் அமர்த்திக் கொண்டு அமர்ந்து கொண்டான்.

எதிர்பாராத இழுப்பில் முதலில் தடுமாறியவள் பின் நிதானித்தாள். அவளின் செல்ல முறைப்பில் சிரித்தவன் கன்னத்தில் முத்தம் வைத்து "சீக்கிரம் கொடு பேபி...ஐ எம் ஹங்ரி" என்றவனுக்கு உண்மையாகவே பசித்தது. கணவனின் அவசரம் உணர்ந்து உணவை கறியில் தொட்டு ஊட்டினாள். சிறிது நேரத்தில் அவனின் முகத்தை வைத்து அவனின் பசி மட்டுப்பட்டதை உணர்ந்த பின்னே அவளுடைய முகம் விகசித்தது.

"அக்ஷும்மா முக்கியமான மேட்டர் சொல்லனும்.." என்றவன் வாய் கழுவிவிட்டு அவளின் முந்தானையில் துடைத்துவிட்டு தான் கூற வந்ததை கூறி முடித்தான். அக்ஷய ப்ரியா கணவனின் பேச்சில் மெய் மறந்து அவனை ரசித்துப் பார்த்தாள்.

மனைவி ரசிப்பதில் ஆடவனுக்கே வெட்கப் புன்னகை பூக்க "போதும் அக்ஷு பேபி...இதுக்கு மேலே நான் சும்மா இருக்க மாட்டேன்" என்று ஒரு மாதிரி குரலில் அவளின் காதுமடல் சிவக்க முனுமுனுத்தவன் அவள் முகம் பார்த்து நின்றான்..

அவளோ தான் எல்லாவற்றிற்கும் ரெடி என்பது போல கண்ணில் காதலுடன் அமர்ந்திருந்தாள். இருவரின் பார்வையும் சில நிமிடங்கள் கவ்விக் கொண்டன. அப்படியே அவனில் சாய்ந்தவள் அவனின் நெற்றியில் இதழ் பதித்து " லவ் யூ டா மாமா" என்றாளே பார்க்க, முதன் முதலாக தன் மனைவியின் வாயால் தனக்கான காதலை கேட்டவனின் உள்ளம் அந்தரத்தில் ரெக்கையில்லாமல் மிதந்தது..

"பேபி...கம் எகைன்" தான் கேட்டது நிஜம் தானா என்ற சந்தேகத்தில் சந்தோஷத் துள்ளலுடன் வினவ
"நீங்க கேட்டது நிஜம் தான்" என்றவள் வெட்கத்தில் சிரித்தாள்.

காதலனாக இருந்தவனின் உடல் மொழி அடுத்த நொடி கணவனாக மாறி இருந்தது. மனைவியின் முகத்தை கைகளால் தாங்கியவன் "லவ் யூ டூ...லவ் யூ சோ மச்.." என்ற ஆதவ் அவள் இதழை சிறை செய்தான்.


தொடரும்...


தீரா.
 
Top