• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உன்னால் உயிர்த்தேன் - 44

Dheera

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 17, 2023
Messages
234
அத்தியாயம் 44

சரியாக ஒருவாரம் கடந்திருந்தது.

சும்மாவே அவளை தங்கத்தட்டில் வைத்து தாங்கும் ஆதவை இப்போது கேட்கவும் தான் வேணுமா..?

எப்போது, குழந்தை தான் என கன்ஃபோம் ஆனதோ அன்றிலிருந்து கண்ணாடி பளிங்கு போல பதமாக அவளை பிரயோகித்தான் ஆதவ் க்ரிஷ்.

அவள் அதற்கு மேல்... கர்ப்பமானதால் அக்ஷய ப்ரியா பல உடல் உபாதைகளை சந்திக்க வேண்டியதாகிற்று.

ஒரே களைப்பாக இருப்பதாக கூறி கட்டிலில் அடைக்களம் ஆகி விடுவாள். அந்த நேரங்களில் எல்லாம் உணவை மேலே தனதறைக்கு வரவழைத்து கெஞ்சிக் கொஞ்சி அவளுக்கு ஊட்டிவிடுவான்.

அடுத்த கணம் வாந்தியும் எடுத்துவிடுவாள். எந்த முக சுழிப்பும் இல்லாமல் அவளை சுத்தப்படுத்துபவனை பார்க்க அக்ஷய ப்ரியாவிற்குமே கஷ்டமாகிப் போகும்.

இயன்றமட்டில் தனது வேலைகளை தானே செய்து கொள்ள நாடுவாள். இருந்தும் அதன் பலன் என்னவோ பூச்சியம் தான். அக்ஷய ப்ரியாவை கவனிப்பதே அவனது முழு வேலையாகிப் போனது.

தனது தாய், தந்தை வந்து செய்யக் கேட்டாலும் அவள் என்னவோ தன்னவனைத் தான் அணுகினாள். அவளுக்கு அவன் மட்டுந்தான் வேணும் என்றிருப்பாள்.

அவனும் புன்னகையுடனே அனைத்தையும் கடந்து செல்வான்.

ஆனால் இப்போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சம் தனது பெற்றோருடன் ஒன்றிப் போனாள்.

இன்றும் அது போலவே தான் ஆதவ் தன்னருகில் வேண்டும் என அவள் மனம் ஏங்க ஆபிஸிற்கு ரெடியாகிக் கொண்டிருந்தவனின் அருகில் வந்து எப்படி அவனை தன்னுடன் இருக்க சொல்லுவதென புரியாமல் அவனை ஏக்கத்துடன் பார்த்து வைத்தாள். இலேசாக கண்களும் கலங்கி இருந்தன.

அவளின் பார்வையிலே அவளின் தேவையை அறிந்து கொள்ளுமளவு அவனவள் அவன் மனதில் பதிந்து போனாள்.

அவளை கைத்தாங்கலாக அழைத்து சென்றவன் கட்டிலில் அமர வைத்து "ஆபிஸ் போக வேணாம் என்னோடயே ஸ்டே பண்ணுங்கனு சொன்னால் உன்னோடயே இருந்துற போறேன்...இதுக்கு ஏன்டா இத்தனை தயக்கம்?" என்றவன் அவளது விழிகளில் முத்தமிட்டான்.

அவனின் பாசத்தில் மெழுகாய் உருகியவள் கலங்கியே "இன்னைக்கு என்னவோ என் மனசு உங்கள அதிகம் தேடுது..உங்க கூடவே இருக்கனும் போல இருக்கு" என்றவள் அவனது நெஞ்சில் உரிமையுடன் தலைசாய்த்தாள்.

அவள் தன்னை அதிகம் தேடுகிறாள் என்பதே கணவனுக்கு இதமளிக்க அவளது மூக்குத்தியில் இன்றைய தன் இரண்டாவது முத்தம் வைத்தான்.

அவளும் அவனில் ஒன்றிப் போனாள்.

அனைத்து ஆபிஸ் வேர்க்கையும் விக்ரமிடம் கவனிக்க கூறி இருந்தான். ஏற்கனவே கொஞ்சம் நெருக்கமானவர்களாக தான் இருந்தனர் ஆதவும் விக்ரமும். ஆனால் ஆதவ் அதனை வெளிக்காட்ட மாட்டான். எப்போதும் கண்டிப்புடனே இருப்பான். இப்போதெல்லாம் நண்பர்கள் போல நெருங்கிப் பழகினர்.

விக்ரம் ஆதவின் வேலையும் தனது ஆபிஸின் முழு வேலையும் கவனித்து வந்து கொண்டிருந்தான்.

ஆதவிற்கு பயத்தில் இருவரும் ஆபிஸில் தங்கள் சேட்டைகளை காமிப்பதில்லை. அமர்த்திகாவின் கடைக்கண் பார்வைக்கு ஏங்கித் தவித்தான் விக்ரம்.

அவளும் அலையட்டும் என கணக்கெடுக்காத மாதிரி நடித்துக் கொண்டிருப்பாள். ஏனென்றால் அவன் தான் ஜொள்ளிக் கொண்டு திரிந்தவனாயிற்றே...

இப்போதெல்லாம் மிகவும் பொறுப்பாக நடந்து கொள்கிறான். இரண்டு தங்கைகளுக்கு அண்ணன் அல்லவா..ஹா..ஹா..

அதுவும் அவளுக்கு நன்கு தெரியும்.

இப்படி இவர்கள் இருக்க அங்கே விதுவுவோ தினம் தோறும் ஏதாவது சாக்கு சொல்லிவிட்டு டாக்டரிடம் மல்லுக்கு நிற்பாள்.


...


அத்துடன் தந்தை தயாளன் செய்த தவறுக்கு மகளை தண்டிப்பது தப்பாகப் பட்டது அக்ஷய ப்ரியாவின் பேச்சினால்.

அதனால் பெண்கள் இருவரையும் வேறுநாடொன்றிற்கு பேக் செய்து அனுப்பியவன் மீண்டும் இந்தியாவிற்கோ வேறு நாடுகளுக்கோ போக முடியாத படி செய்திருந்தான் ஆதவ்.

...


அன்று விது தன் நண்பி பாவ்யாவுடன் தான் ஹாஸ்பிட்டல் வந்திருந்தாள்.

பாவ்யாவோ தான் வெளியே இருப்பதாக கூற இவளும் சரியென்றுவிட்டு சென்றுவிட்டாள்.

ஹாஸ்பிடலின் முன் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தவள் மேல் திடீரென ஒருவன் வந்து மோத கால் தடுக்கி விழப் போனவளை அந்த ஆடவனே தாங்கி இருந்தான்.

எங்கே இடுப்பு முறிந்துவிட்டதோ என்ற பீதியில் அவள் ஆஆஆஆஆ என அழற எங்கே அது அந்த ஆடவன் காதில் விழுந்தால் தானே...

அவன் தான் பாடலுக்கேற்ப தன் பார்வையை நடனமாட விட்டுக் கொண்டிருக்கிறானே...

என் கனவினில் வந்த காதலியே...
கண் விழிப்பதுக்குள்ளே வந்தாயே...
நான் தேடி தேடித் தான் அலஞ்சிட்டேன்...
என் தேவதைய கண்டு பிடிச்சிடன்...
நான் முழுசா என்ன தான் குடுத்துட்டேன்...
அட உன்ன வாங்கிட்டேன்...


சிட்டுவேசனுக்கு ஏற்ற மாதிரி சாங் போக அவனும் கனவுலகில் மிதந்து கொண்டிருந்தான்.

நண்பா...!! யாருக்குடா இவ்வளவு பில்டப்புனு தான பார்க்குறீங்க...?வேற யாருக்கு நம்ம ருத்ரன் தம்பிக்கு தான்...ஹா..ஹா...

இப்போ உங்கட கண்ணு முன்னுக்கு நம்ப ஐயாவோட ரியக்ஷன்ஸ் எல்லாம் வந்து போய்க்குமே...!?

பாவ்யாவோ எதுவும் நடவாதிருக்க கண்ணை திறந்து பார்க்க அங்கே பல்லைக்காட்டிக் கொண்டு கனவுலகில் தத்தளித்துக் கொண்டிருந்தான் ருத்ரன்.

சடாரென அவனிலிருந்து விலக அவனும் கனவுலகில் இருந்து மீண்டு திருதிருத்தான்.

இடுப்பில் கைகுற்றிக் கொண்டு "என்ன ஃபீலிங் ஆ...?" என்றவள் புருவம் உயர்த்த இழித்துக் கொண்டே "ஆம்"என கூற அவள் முறைத்த முறைப்பில் "இ..இல்லையே..." என்றவன் பேன்ட் பாக்கெட்டில் இருந்த ஃபோனை எடுத்து கட் செய்துவிட்டான்.

இதெல்லாம் சாரோட ரிங் டோன் செய்த வேலை தாங்க...

அவள் இன்னும் முறைத்துக் கொண்டே இருக்க பாவம் போல முகத்தை வைத்துக் கொண்டவன் "இவ்வளவு அழகான முகத்தை ஏங்க முறைச்சு இஞ்சி தின்ன கொரங்கு மாதிரி வச்சிட்டு இருக்கிங்க...?" என்று சிரியாமல் கலாய்த்து வைத்தான்.

முகம் கோபத்தில் செந்தனலாக "யார பாத்துடா மங்கி எங்குற...? நீ தான்டா பிசாசு, எரும மாடு, பன்னி" என்று இன்னும் பல ஏச்சுக்களுடன் அவன் முடியை கொத்தாக பற்றிக் கொண்டு ஆட்டு ஆட்டு என ஆட்டி வைத்தாள் பஜாரிப் பெண்.

"ஆஆஆஆஆ...ஏய் பஜாரி விடுடி மண்டைய...வலிக்குதுதுது..." என அலறினான் ருத்ரன்.

இத்தனைக்கும் காரணம் அவன் இன்று காக்கியில் வரவில்லை.

இதனை எதிர்பாராத விது வெளியேறி வர அவள் கண்ட காட்சியில் மனம் அதிர்ந்து போனது.

"அச்சோ அண்ணா..." என்றவள் ஓடி வந்து "ஏய் விடுடி...அடியேய் பக்கி என்னடி செய்றாய்...?"

"அண்ணா அண்ணா" என மாறி மாறி சண்டையை பிரிக்க போராடினாள்.

நல்லவேளை வெளியே ஒரு ஈ காக்கா கூட இல்லை..இருந்திருந்தால் ஏ.சி.பி இன் நிலை...

"அண்ணனா...?" என்றதிர்ந்த பாவ்யாவின் கை தளர அதனை தட்டிவிட்டவன்

"அம்மா..என்னா வலி..." என வெட்டவா குத்தவா என அவளை முறைக்க, அவன் முறைத்த முறைப்பில் அவளுக்கு உள்ளுக்குள் குளிரெடுத்தாலும் வெளியில் அதே சுடு மூஞ்சியாகவே நின்றிருந்தாள்.

"நிக்குறா பாரு ராட்சசி..." என்றவன் தலையை அழுந்த பிடிக்க விதுவும் "அண்ணா வலிக்குதாண்ணா...?" என தேய்த்துவிட்டாள்.

"வலிக்கல்ல சுகமாக இருக்கு ..." என்றவன் அவளை பார்த்து பல்லைக் கடித்தான்.

"என்னடி பண்ணி வச்சிருக்க மங்கி...?" என விது திட்ட "நல்லா கேளுமா..இத தான் நானும் கொஞ்சம் நம்ம தமிழ்நாட்டு ஸ்டைல்ல சொன்னேன்..அதுக்கு இந்த பஜாரி இந்த ஆட்டு ஆட்டி வச்சிட்டா " என்கவும் நடந்ததை ஓரளவு ஊகித்த விதுவிற்கு அவன் கூறிய விதத்தில் சிரிப்பாகியது...

"உங்களுக்கு இது தேவை தான்" என்கவும் அவனுக்கு அதே ரிங் டானுடன் மறுபடியும் கால் வர அவசரமாக அவ்விடம் விட்டகழ எண்ணி "இருடி உன்னைய வந்து வச்சிக்கிறேன்" என்றவன் சென்று மறைந்தான்.

போகும் அவனையே குறும்புடன் பார்த்து வைத்தாள் பாவ்யா..

இவள் கோபக்காரி தான். ஆனாலும் பாசக்காரி. ருத்ரனை பார்த்த மாத்திரமே அவளுக்கு பிடித்திருந்தது அவனது ஸ்டைல்.

இருந்தும் பெண்களுக்கே உரித்தான சின்னப்பிள்ளை தனத்தால் இப்படி செய்துவிட்டாள்.

ஏதோ இன்வெஸ்டிகேஷனுக்காக ஹாஸ்பிடல் வந்திருந்தான் ருத்ரன்.

சிறிது நேரம் கழித்து வெளியே வந்தவனின் முகம் பாறையாக இறுகி இருந்தது.

அவன் முகத்தில் சற்று முன் இருந்த அம்மாஞ்சி எங்கேயோ போய் இருந்தான்.

எரிமலையாக உள்ளுக்குள் கொதித்துக் கொண்டிருந்தவனை பார்த்த இருவருக்குமே சற்று முன் இருந்தவனா இவன் என்றிருந்தது.

அவன் முகம் அவனின் கோபத்தை பறைசாற்ற பாவ்யாவிற்கு மனம் திக் திக் என்றிருந்தது.

தனது ஜீப்பில் ஏறப் போனவனுக்கு விது நினைவில் வர திரும்பி அவள் பக்கம் வந்தவன் "வாரியா...உன்னை ட்ராப் பண்ணுறேன்" என்கவும்

"இல்லை வேண்னாண்ணா...நான் இவ கூட போய்க்குறேன்..." என்றவள் பாவ்யாவை காட்ட அவன் மறந்து கூட அவள் பக்கம் திரும்பவில்லை.

அது அவளை ஏனோ மனதளவில் தாக்கியது.

அவன் வேண்டுமென்று பார்க்காமல் இல்லை..டென்சன் என்ட் வேர்க் அவசரத்தில் கவனிக்கவில்லை.

"ம்ம்..." என்றவன் தன் ஜீப்பில் ஏறி சென்றுவிட்டான்.

அப்போது தான் பாவ்யாவின் பக்கம் திரும்பியவள் அவள் பார்வை சென்ற பக்கத்தை பார்க்க அங்கே ருத்ரனின் வண்டி சென்று கொண்டிருந்தது.

"என்னடி பாக்குற..?" என வினவ

"ஆங்..." என அவள் குரல் உள்ளுக்குள் போய் ஒலித்தது.

விதுவிற்கு ஏதோ புரிவது போல் இருக்க "அவர் எனக்கு அண்ணன் முறை..ஆதவ் அத்தானின் ஃப்ரெண்ட் ஏ.சி.பி ருத்ர பிரசாத்.." என்கவும் இவளுக்கு மயக்கம் வராத குறைதான்.

"எ..என்னடி சொல்லுற...ஏ..ஏ..ஏ.சி.பி ஆஆ?" என்றவள் அதிர்ந்து விழிக்க

"சரி சரி பயப்புடாத...அவரு சரியான ஜாலி டைப்" என்கவும் சற்று முன் எவ்வளவு முட்டாள் தனமான வேலை பார்த்துவிட்டோம் என்று பயத்துடன் கலங்கினாள்.

பின் நண்பிகள் இருவருமாக சொன்று விட்டனர்.

...


சரியாக ஒரு மாதத்தில் விக்ரமினதும் அமர்த்திகாவினதும் திருமணம் நிச்சயிக்கப்பட அதற்கு அடுத்த நாள் விதுவினதும் தீக்ஷனினதும் திருமணம் என்றிருந்தது.

அந்நாளும் வந்து சேர இரு ஜோடிகளும் தங்கள் காதலியை மனைவியாக்கிக் கொண்டனர்.

விதுவின் திருமண தினத்தன்றே ருத்ரன் மீண்டும் பாவ்யாவை கண்டான்.

அதுவரை தற்காலிகமாக அவளை மறந்திருந்தான் என்பதை விட வேலை பளு அவளை மறக்கடிக்க வைத்திருந்தது.

அவளோ அவனை வந்தவுடனே கவனித்துவிட்டாள். எனினும் பயம் தொற்றிக் கொள்ள அவனின் கண்ணில் அகப்படாமல் ஒழிந்து ஒழிந்து திரிந்தாள்.

ஆனால் விதி வசத்தால் அவனின் கண்ணில் பட்டுவிட்டாள்.

யாருடைய கண்ணையும் உறுத்தாத வண்ணம் அவளருகில் வந்தவன் "ஓய் மிளகாய் பொடி... என்ன சைலன்டா நிக்குற..?" என காதில் ஹஸ்கி வாயிசில் கூற அவளுக்கோ பயத்தில் இதயத்துடிப்பு தாறுமாறாக எகிறியது.

பயத்துடனே அவள் சட்டென திரும்ப "ஏய்...நான் தான்..ஏன் இந்தப் பயம்..?" என்றான் ருத்ரன்.

அட போடா..நீ என்றதால தான்டா உன்னுடைய மிளகாய் பொடி இப்படி பயப்படுறா..ஹா..

அப்படியே அவனை விட்டு தள்ளி நிற்க அவன் மனம் சிறிது முரணிட்டது.

அவளின் விலகல் ஏனோ அவனை கோபப்படுத்த மீண்டும் அவளை நெருங்கி நின்றவன் "நான் ஒன்னும் உன்னைய கடத்திட்டு போக மாட்டேன்..." என உறுமினான்.

அவனின் பேச்சும் குரலின் அழுத்தமும் அவளை கலங்க வைக்க அழுது கொண்டே அவ்விடம் விட்டு ஓடிவிட்டாள்.

அவள் அழுவதை குழப்பத்துடன் பார்த்தவன் யாருமறியா வண்ணம் அவள் பின் சென்றான்.

ஒரு ஓரமாக நின்று அவள் அழுது கொண்டிருக்க அவளை நெருங்கியவன் "ஹேய் ஏன் இப்போ அழுற...?" என்கவும்

அவனை பயத்துடனே நிமிர்ந்து பார்த்தவள் "ஐ..ஐ..அம் சாரி" என அழுகையில் உதட்டை பிதுக்க அவளின் ரியக்சனை ரசித்தவனை அழுகை தடுத்திருந்தது.

"ஏன்...?" என்ற ஒற்றை வார்த்தையில் புருவத்தை அவன் உயர்த்த, தலை குனிந்தவள் "அ..அன்னைக்கு ஏ..ஏதோ தெரியாமல் அப்படி செஞ்சிட்டேன்..." என்கவும்

நினைவு வந்தவனாக "மறக்கக் கூடிய வேலையா நீ பார்த்த.." என கூற அவள் குழந்தை போல இன்னும் அழுதாள்.

சிரித்தவன் "ஏய்..அன்னைக்கு ராட்சசி மாதிரி அந்த பிய்பிச்ச மண்டைய..இப்போ ஏன் இப்படி பயந்து அழுற...?" என கேட்க

"நீ..நீங்க போ..போலிஸ்" என விட்ட இடத்திலிருந்து மறுபடியும் கண்ணீர் வடித்தாள்.

ஹா..ஹா என்ற சிரிப்பில் அவனை கண்ணீருடன் நிமிர்ந்து பார்க்க "நான் பேருக்கு தான் போலிஸ்...ஆனால் என்னைய ஜோக்கர் ஆக்கி வச்சிருக்கா இந்த தீரா...." என்கவும் பயம் மறந்து சிரித்தாள் பாவ்யா.

"இது நல்ல பிள்ளைக்கு அழகு..." என்றவன் "ஆனாலும் நீ செஞ்ச வேலைக்கு உன்னைய சும்மா விடுறதா இல்லை " என தன் வெள்ளி கஃப் ப்ரேஸ்லெட்டை (cuff bracelet) உயர்த்தி விட்டவன் கையை அவளை நோக்கி கொண்டு வர பயத்தில் சுவருடன் அப்பிக் கொண்டு நின்றாள்.

அதில் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டவன் அவளின் சிவந்த கீழதரத்தை இருவிரலால் இடுக்கி அவள் முகம் பார்க்க அவளோ இன்னும் பயத்துடனே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அப்படியே சிரித்துக் கொண்டு அவளிதழில் இதழ் பதித்து விடுவித்தவன் கையை எடுக்காமலே அதிர்ந்து போய் விழி அகல பார்த்து கொண்டு நிற்பவளை பார்த்து "இனி இப்படி அடாவடி தனம் செய்வ...?" என்கவும்

"ம்ஹும்.." என அவசர அவசரமாக மண்டையை ஆட்ட "இல்ல..நீ செய்ற..." என்ற கட்டளையுடன் உதட்டை மெல்ல விட்டவன் உறைந்து நிற்பவளை நக்கலுடன் பார்த்துவிட்டு சென்றான்.

அவள் தன்னிலை அடையவே சில நிமிடங்கள் தேவைப்பட்டன.

நெஞ்சில் கை வைத்து மூச்சை இழுத்து விட்டுக்கொண்டே அவள் திரும்ப மீண்டும் திடீரென வந்தவன் "நாளைக்கு ரெடியா இரு..மாமன் உன்னைய தூக்கிட்டு போக...ப்ஷ்ஷ்.. " என விமானம் போல சைகை செய்தவன் "வருவேன்..." என கூறி அதிர வைத்துவிட்டே சென்றான்.

அன்று அவள் செய்ததற்கு இன்று அவளை வைத்து செய்துவிட்டே போனான்.

அடாவடியாகவே போலிஸ்காரனின் மனதினுள் புகுந்து கொண்டாள் பாவ்யா...


தொடரும்...


தீரா.
 
Top