• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உன் வாசமே என் சுவாசமாய் - அத்தியாயம் 2

Krithika Kumar

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Nov 1, 2023
Messages
123
அத்தியாயம் 2"என்னமா சொல்றீங்க? அப்பாவுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம் ?" புரியாமல் வினவினாள் ராகா.

'"சொல்றேன். இதைப்பற்றி பெரிதாய் பேசாமலே நீ திருமணத்துக்கு ஒத்துகணும்னு நினைச்சேன். ஆனால் சொன்னால் தான் உனக்கும் புரியும்." என்று பெருமூச்செரிந்தார் பிரபாவதி.

"நம் தொழில் பற்றி உனக்கே தெரியும். பிளஸ்டிக் கப், பாட்டில் தயார் செய்வது தான் பிரதான வருமானம். போன வருஷம் உங்க அப்பா அதை விஸ்தரிக்கனும்னு முடிவு செய்து கையில் இருக்கும் சேமிப்பு மேலும் கூட கடன் வாங்கி பக்கத்தில இருக்கும் இடத்தில் புது பேக்ட்ரி கட்டினார்.

" அது தான் தெரியுமே அம்மா. நாம எல்லாரும் திறப்பு விழாவிற்கு போய் வந்தோமே.

"ஆமாம். ஆனா அந்த பிளாஸ் டிக் பர்னீச்சர் தொழில் உங்க அப்பா நினைச்ச மாதிரி உடனே பணம் கொட்டலை. அதில் கொஞ்சம் நிதானிக்கலாம்னு யோசிக்கிறதுக்குள்ள கொரோனா லாக்டவுன். ஏற்கனவே நஷ்டத்துல இருந்த தொழில் மொத்தமா படுத்திருச்சு. அது மட்டும் இல்லாம நம்ம வருமானம் வருகிற பாட்டில் தொழிலும் சின்ன சரிவு அடைய கடன் சுமை ரொம்பவே ஏறிடுச்சு. இதிலிருந்து எப்படி மீள என்று யோசிச்சே உங்க அப்பாவிற்கு அட்டாக் வந்துடுச்சு.' கண் கலங்கினார் பிரபாவதி.

மெல்ல ராகா· தாயை அணைத்து கொண்டாள்.

"எனக்கு இது எதுவுமே தெரியாதே மா" என்று சொன்னாள் தாங்கலாக.

"நீ படிக்கும் குழந்தை - உன்னை இதெல்லாம் சொல்லி குழப்ப வேண்டாம் என்ற எண்ணம் உன் அப்பாவிற்கு. படித்து முடித்து நீ தொழில் பழக வரும் போது சொல்லிக் கொள்ளலாம் என்று இருந்துவிட்டார்- எனக்கும் சரி என்று தோன்றியது. அவர் போன பிறகு உனக்கு கடைசி செமஸ்டர்- ஏற்கனவே அவரை இழந்து தவிக்கும் உன்னிடம் மேலும் இதை சொல்ல வேண்டாம் என்று நானே சமாளித்து கொண்டிருந் தேன். இந்த வாரம் உன்னை அழைத்து சென்று எல்லாவற்றையும் காட்டி அபிப்பிராயம் கேட்கலாம் என்று நான் யோசித்து கொண்டிருந்த போது இந்த வரன் வந்தது. .

இதற்கும் தன் திருமணத்திற்கும் என்ன தொடர்பு என்று யோசிக்கும் போதே மேலும் விவரித்தார் பிரபாவதி.

"முதலில் அவங்க என்கிட்ட பேசின போது .உனக்கு திருமணம் செய்யும் எண்ணம் இல்லைனு சொல்லிட் டேன். பெருசா விசாரிக்க கூட இல்லை. அவங்க காரணம் கேட்ட போது நம்ம தொழில் இருக்கும் நிலையை சொன்னேன். இவ்வளவு கடன் இருக்கும் போது உனக்கு திருமணம் செய்ய என்னால் முடியாதுணு சொல்லிட்டேன். அப்புறம் விசாரிச்சு பார்த்தா அந்த பையன் மனைவியை இழந்தவன் என்று தெரிஞ்சிது. சரி தான்னு நானும் விட்டுட்டேன். ஒரு வாரம் கழிழ்த்து அந்த பையன் ஆராவமுதன் நம்ம் ஆபீஸ் வந்தான். உங்க நிலைமை எனக்கு புரியுது. உங்களுக்கு தேவையான பண உதவி நான் செய்தால் உங்களுக்கு சம்மதமானு நேரிடையா கேட்டான். என்னால உடனே பதில் சொல்ல முடியலை. கொஞ்சம் டைம் கேட்டேன். வேண்டிய நேரம் எடுத்துக்க சொன் னான். நான் எனக்கு தெரிஞ்சவங்க மூலியமா நில்லா விசாரிச்சு பார்த்தேன். பையனை பற்றி எல்லாருமே நல்ல விதமா தான் சொன்னாங்க. மூன்று. தலைமுறையா பணம் இருந்தும் இந்த பையன் குணம் தங்கம் . ஒரு கெட்ட பழக்கம் கிடையாது அப்பா தாத்தா கொடுத்ததை பல மடங்கா விஸ்தரிச்சு இருக்கான். முதல் கல்யாணமா இருந்தா ஒரு கணம் கூட யோசிக்காம முடிச்சிருக்கலாம் இப்போவும் எனக்கு அது பெரிய குறையா தெரியலை. அதிலும் அவங்க நமக்கு செய்ய முன் வந்திருக்க உதவிக்கு முன்னாடி." பொறுமையாக எடுத்து சொன்னார் பிரபாவதி.

"அப்போ என்னை காசுக்காக விலை. போக சொல் நீங்களா அம்மா” காட்டமாக கேட்டாள் ராகா.

பிரபாவதியின் கண்களில் அடிபட்ட வலி தெரிந்தது. சில நிமிடங்கள் பேசாமல் அமைதியாக இருந்தார். தான் அதிகபடியாக பேசி விட்டோமோ என்று ராகா யோசிக்கும் போதே பிரபாவதி மீண்டும் பேசினார்.

"நீ நிர்வாகம் படித்தவள் தானே. இரண்டு நாட்கள் பாக்டிரி சென்றுவா. கணக்கு "எல்லாம் பார். இந்த இக்கட்டில் இருந்து மீள ஏதேனும் வழி இருந்தால் சொல்லு. நானும் கேட்கிறேன்." சொல்லி விட்டு எழுந்து சென்றார் பிரபாவதி. விக்கித்து அமர்ந்து இருந்தாள் ராகமித்ரா.
 
Top