• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிரின் தொடக்கம் 3

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 3


"இன்னைக்கு மதியம் வரை தான் கிளாஸ் இருந்துச்சாம் டா.. என்னவோ மீட்டிங் போல.. சீக்கிரமே ஹாஸ்டல் போய்ட்டா.. பார்க்க முடியல.. நாளைக்கு கிளாஸ்ல போய் பார்க்க வேண்டியது தான்" என்று வந்த சத்யா கட்டிலில் விழ,

"உனக்கு யார் டா இவ்வளவு இன்ஃபார்மேஷன் தர்றது? நீயே இந்த காலேஜ்க்கு புதுசு" சங்கர் கேட்க,

"நான் புதுசு தான் மேன்.. ஆனா செக்யூரிட்டி பழசுல்ல" என்ற கண்ணடித்த சத்யாவைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டான் சங்கர்.

"அவங்க அண்ணனை நினச்சு கொஞ்சம் கூட உனக்கு பயமே இல்லையா டா?" என்ற கேள்விக்கு,

"நான் ஏன் டா பயப்படணும்? என்ன இப்பவே கல்யாணம் பண்ணிட்டு அவன் முன்னாடி நிக்கவா போறேன்?" என்று கேட்டவன்,

"என் ரெஞ்சே வேற! அவன் முடியாதுன்னு சொல்ற இடத்துல நானும் இருக்க மாட்டேன்.. என் நந்துக்கும் அவ்வளவு கஷ்டத்தை தர மாட்டேன்" என்றான்.

"வசனமெல்லாம் நல்லா தான் இருக்கு.. ஆனாலும் சின்ன பசங்க மாதிரி அந்த பொண்ணு படிக்குறான்னு இந்த காலேஜ் வந்திருக்க?" என்ற கேள்விக்கு,

"என்ன வந்திருக்க... வெந்திருக்க? இது வேற! அது வேற! ஏன் குழப்பிக்குற? இதெல்லாம் இப்பவே அனுபவிக்கனும் டா.. நினச்சு பாரு! எப்படியும் பீயூச்சர்ல நந்து என்னை லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்க தான் போறா.. அப்ப போய்ட்டு அய்யோ அப்படி இருந்திருக்கலாமோ இப்படி லவ் பண்ணிருக்கலாமோன்னு எல்லாம் பீல் பண்ணிட்டு இருக்க கூடாதுல்ல.. நேரம் ரொம்ப முக்கியமானது டா.. நினைவுகளும்.. நேரத்தையும் நினைவுகளையும் சேர்த்து வைக்கணும்.." என நீளமாய் சத்யா பேச,

"இந்தா இந்த தண்ணிய குடிச்சிக்க!" என்ற சங்கர் தலையை உதறினான்.

"என்ன டா இப்படி பேசுற? என்னென்னவோ சொல்ற.. நிறைய கனவும் வச்சிருக்க.. புரியுது.. எல்லாம் நல்லபடியா நடக்கணும்.. அவ்வளவு தான்" என்றான்.

"நடக்கும் டா! நிச்சயமா நடக்கும்" என்றான் சத்யாவும்.

காலையில் எழுந்து வேலைகளை எல்லாம் முடித்துக் கொண்டு சத்யாவுடன் சங்கரும் கல்லூரிக்கு கிளம்பி இருக்க, அறையில் இருந்து வெளியே வந்தனர் இருவரும்.

"ஹலோ! ஹேய் பிளாக் ஷர்ட்!" என்று ஒருவன் அழைக்கவும் திரும்பிப் பார்த்தான் சத்யா.

"உன்னை தான் இங்கே வா!" என்று அழைக்க,

"சொல்லுங்க!" என்றான் அவர்கள் அருகில் சென்று..

"நியூ ஜாயினா?" அவன் கேட்க,

"ஹ்ம்!" என்றவனின் பதிலில்,

"இந்தா! இந்த சம்ப்ல தண்ணி எடுத்து குடுத்துட்டு போ!" என்று கேட்க,

"ஏன் ப்ரோ! அதான் மோட்டார் ஓடுதே!" என்றான் சங்கர்.

"இப்ப தான் ரிப்பேர் ஆச்சு!" என்றான் பதிலாய்.

"வேணும்னே பண்ற மாதிரி இருக்கு டா!" சங்கர் மெதுவாய் கூற,

"இல்ல?" என்றவன் தாடையை தடவியபடி யோசிக்க,

"என்ன டா ரொம்ப யோசிக்குற?" என்றான் அவன்.

"இல்ல! கிளாஸ்க்கு லேட் ஆகிட்டு! அதான்!" என்றான் சங்கர்.

"நான் உன்கிட்ட பேசல.. உன்னை நிற்கவும் சொல்லல.. நீ கிளம்பு அவன் வருவான்" என்றான்.

"கிளம்பலாம்.. ஆனா நான் ஏன் உனக்கு தண்ணி எடுத்து தரணும்? நீ எனக்கு மாமனா? இல்ல மச்சானா?" என்று நேராய் சத்யா கேட்க,

"டேய்! அதிகமா பேசுற! நான் உன் சீனியர்" என்றான் அவன்.

"சீனியர்னா? மோட்டார் ரிப்பேர்னு பொய் சொல்லி தண்ணி எடுக்க சொல்லுவியா? அப்படி எதாவது ரூல்ஸ் இருக்கா என்ன? ஏன் டா நானே வந்து இவ்வளவு நேரம் ஆகியும் வந்த வேலை முடியலைனு கடுப்புல இருக்கேன்.. எங்கேருந்து டா வர்றிங்க எனக்குன்னு?" என்றவன்,

"காலையிலே டென்ஷன் பண்ணிக்கிட்டு!" என்றபடி திரும்பி செல்ல,

"என்ன டா மதிக்காம போறான்?" என்றான் நண்பன்.

"எங்க போறான்? காலேஜ்க்கு தானே? என்னத்த கிழிக்குறான்ன்னு பாக்குறேன்" என்றான் அவன்.

"பிஜினு சொல்லி இருந்தா கொஞ்சம் அடங்கி இருப்பான்" என்ற சங்கருக்கு,

"அப்போ யூஜி பசங்க பாவம் இல்லையா? விடு! அவன் ஒரு ஆளுன்னு" என்றவன் கல்லூரிக்குள் நுழைந்திருக்க, நாலாபுறமும் கண்களால் தேடியபடி சென்றான்.

"பார்த்து டா! புது இடம்! எங்கேயும் சண்டை, பிரச்சனைனு இழுத்து வைக்காத.. வீட்டுக்கு பதில் சொல்ல முடியாது" என்றிருந்தான் அவன்.

"அட என்ன டா இது! ஒரே இரிடேட் பண்ணிக்கிட்டு.. பேசாம வா.." என்று கூறி வேகமாய் வகுப்பறையை கேட்டு அதை நோக்கி செல்ல, அங்கே சிலர் மட்டுமே வந்திருந்தனர்.

"இன்னும் வரலை போல! இதுக்கா டா என்னை சீக்கிரமா கூட்டிட்டு வந்த?"

"அவ வந்த பின்னால் வர்றதெல்லாம் பழைய ஸ்டைல்" என்றபடி ஒரு இடத்தில் அமர்ந்தவன் வாசலைப் பார்த்தபடி இருக்க,

சங்கர் அங்கிருந்தவர்களிடம் பேச்சுக் கொடுத்து நண்பர்களாக்கிக் கொண்டிருந்தான்.

தான்யாவிடம் பேசியபடி வகுப்பறைக்குள் நுழைந்த நந்தினி தன் இடத்தில் சென்று அமர்ந்தும் சத்யாவை கவனிக்கவில்லை.

இருவரும் பேச்சில் மும்முரமாய் இருக்க, "ஹாய்!" என நந்தினியின் முன் சென்று நின்ற பின் தான் அவன் நியாபகமே வந்தது.

நந்தினி சத்யாவை முறைக்க,

"என்னாச்சு?" என்றான் சத்யா.

"இங்க என்ன பண்ற?" நந்தினி கேட்க,

"சொல்ல மறந்துட்டேன் பாரு! நானும் இங்கே தான் ஜாயின் பண்ணிருக்கேன்.. லேட் ஜாயின்.. சேம் கிளாஸ்" என்றான் தோள்களை குலுக்கி.

"அதான் ஏன்?"

"ஏன்னா? உனக்காகன்னு நினைப்பா? படிக்குறதுக்கு தான்.." என்றவனை நம்பாமல் பார்க்க,

"தான்யா! நீ கொஞ்சம் போ தனியா" என்றான்.

"சத்யா!" என்று தான்யா முறைக்க,

"ப்ளீஸ்! ப்ளீஸ்! ப்ரொபஸ்ஸர் வர்றதுக்குள்ள கொஞ்சம் பேசிக்குறேன்" என்றதும் தான்யா தள்ளி அமர, அவளருகில் வந்து அமர்ந்தான் சங்கர்.

"நீயும் வந்துட்டியா?" தான்யா கேட்க,

"ஆமா நீ என்ன பண்ற இங்க? உன் அப்பா உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கல்ல பார்த்துட்டு இருந்தாரு?" என்று சங்கர் பேசிக் கொண்டு இருக்க,

"என்ன நந்து அப்படி பாக்குற?" என்றான் சத்யா.

"அவ்ளோ காலேஜ்ல உனக்கு இந்த காலேஜ் தான் கிடைச்சுதா படிக்க?" நந்தினி கேட்க,

"படிக்க நிறைய காலேஜ் இருக்கு.. ஆனா நீ இங்கே தானே இருக்க?" என்றதும்,

'நினச்சேன்' என்பதைப் போல அவள் பார்க்க,

"என்ன லுக்கு? எப்படியும் படிக்கறதுன்னு ஆகிப் போச்சு.. ரெண்டு வருஷம் ஒன்னா படிச்சா என்ன? அதான் இங்கேயே வந்துட்டேன்" என்றான்.

"நீ தேவையில்லாம டைம் வேஸ்ட் பண்ற.. உனக்கு கேம்பஸ்ல ஜாப் கிடைச்சுது தானே? அப்புறம் என்ன இது?" என்றவளை,

"கேம்பஸ் அட்டன் பண்ணினேன் கிடைச்சது.. அதுக்காக போயே ஆகணும்னு என்ன இருக்கு?"

"ஓஹ்! சார் வீட்டுல அவ்வளவு வசதியா?"

"அதெல்லாம் ஒரு பொண்ணு வந்த வச்சு வாழற அளவுக்கு இருக்கு.. இப்ப எதுக்கு அதை பேசிகிட்டு.. நான் நிஜமா படிக்க தான் வந்தேன்.. அதை முதல்ல நம்பு" என்றான்.

"நம்ப மாட்டேன்!" சட்டென அவள் சொல்ல,

"ஹேய்! நந்தினி என்னனு என்னை நினைச்சுட்டு இருக்க? டைம் பாஸ்க்கு உன்னை சுத்தி வர்றேன்னா? இது படிக்குற இடம்.. அதை சரியா செய்வேன்.. எக்ஸ்ட்ரா ஒர்க் தான் இந்த லவ் எல்லாம்.. எப்பவாச்சும்" என்றதும் நந்தினி முறைக்க,

"சரி விடு! அதை இப்பவே பேச வேண்டாம்.. சேம் காலேஜ்.. சேம் கிளாஸ்! பிரண்ட்ஸ் ஆகலாம்னு வந்தா இப்படி பண்றியே!" என்று கேட்க,

"நீ வந்ததே தப்புன்றேன்.. இதுல பிரண்ட்ஸ் வேற!" என்றாள்.

"நந்தினி!"

"பேசாத! ஒரு நல்ல ஒப்பீனியன் இருந்துச்சு உன் மேல.. உன் அம்மா உன்னை அவ்வளவு பெருமையா ஊருக்குள்ள சொல்லிட்டு இருக்காங்க.. நீ என்னன்னா...." என்றவள் சொல்லாமல் விட,

"ம்ம் சொல்லு! நான் என்னன்னா ஒரு பொண்ணு பின்னால சுத்துறேன்.. அப்படி தானே?" என்றதும் ஆமாம் என்பதை போல அமைதியாய் இருந்தாள்.

"நான் இந்த காலேஜ்ல ஜாயின் பண்ணலைனாலும் அந்த ஜாப் போயிருக்க மாட்டேன்.. ஜாப், பிஜினு ரெண்டுல எதுன்னு நான் கன்ஃபியூஸ் ஆன நேரத்துல தான் நீ இங்க படிக்க வர்றது தெரிஞ்சது.. உனக்காக மட்டும் இல்ல எனக்காகவும் தான் நான் படிக்க வந்தது.. இப்பவும் உன்னை டிஸ்டர்ப் பண்ண எல்லாம் வர்ல.. ஜஸ்ட் நான் சொன்ன மாதிரி சேம் காலேஜ் சேம் கிளாஸ்.. பிரண்ட்ஸா இருக்கலாமேன்னு தான் பேச வந்தேன்" என்றவன் பேச்சில் இவள் குழப்பமாய் பார்க்க,

"ப்ரோமிஸ்! ஒன்னா படிக்குறோம்.. பிரண்ட்ஸ்ஸா இருக்குறதுல என்ன தப்பு?" என்று சத்யா கேட்க,

"சொல்றதெல்லாம் சரி! ஆனா..." நந்தினி கூற வர,

"ஆனா அன்னைக்கு மாதிரி லவ் அது இதுன்னு உன்கிட்ட பேச கூடாது அதானே? ஓகே! பேசல.. நிஜமா உன்னை டைவேர்ட் பண்ண மாட்டேன்.. ப்ரோமிஸ்" என்றான் மீண்டும்.

"ஹேய்! நான் கூட சத்யாவை தப்பா நினச்சுட்டேன்.. கரெக்ட்டா பேசுற டா" தான்யா கூற, நண்பனின் பேச்சில் குழம்பி தலையை பிய்த்துக் கொள்ளலாம் போல ஆனது சங்கருக்கு.

"அப்ப இனி நாம எல்லாம் பிரண்ட்ஸ் ஓகே?" என்று கேட்கவும் நந்தினி அமைதியாய் இருக்க, தான்யாவே அவளுக்கும் சேர்த்து பேசினாள்.

அங்கே எதுவும் கேட்காமல் கேட்க முடியாமல் சங்கர் அமைதியாய் இருந்து விட, கல்லூரி இடைவெளியில் வெளியே வந்தவனை பிடித்துக் கொண்டான்.

"உன்னை புரிஞ்சிக்கவே முடியல டா.. என்கிட்ட ஒன்னு சொல்ற.. நந்தினிகிட்ட ஒன்னு சொல்ற.. எது தான் டா நிஜம்?" சங்கர் கேட்க,

"எல்லாமே ஒன்னு தான்.. இங்க வந்தது நந்தினிக்காக தான்.. ஆனா படிக்கவும் செய்யனும்.. ரெண்டுமே முக்கியம் தானே?.. அவளை டைவேர்ட் பண்ண மாட்டேன்னு தான் ப்ரோமிஸ் பண்ணினேன்.. நான் பார்க்க மாட்டேனோ இல்ல லவ் பண்ண மாட்டேன்னோ ப்ரோமிஸ் பண்ணல.. அது வேற டிபார்ட்மென்ட் இது வேற டிபார்ட்மென்ட்" என்றவனை சங்கர் விழி விரித்து பார்க்க,

"ரொம்ப பார்க்காத! உனக்கு அதெல்லாம் புரியாது.. படிக்கவும் செய்யனும்.. நந்துவையும் பார்த்துக்கணும்.. அவ்வளவு தான் இப்பத்துக்கு.." என்றவன் ஏதோ முடிவாய் இருப்பது மட்டும் இப்பொழுது தான் தெளிவாய் புரிந்தது சங்கருக்கு.

பேசியபடியே லாபியில் இருந்து இறங்கிய சத்யாவை ஒரு பெண் தலையில் மோதி விட,

"சாரி! சாரி!" என்ற சத்யாவை கவனிக்காமல் அந்த பெண் அழுத வண்ணம் ஓடி இருந்தாள்.

எதிர் திசையில் காலையில் இவர்களை வம்பிழுத்தவன் செல்லும் அந்த பெண்ணைப் பார்த்து சிரித்த வண்ணம் நின்றான்.

தொடரும்..
 

Apsareezbeena loganathan

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
464
சத்யா வழியே தனி வழி....
சொன்னா புரியாது மச்சான்🤩🤩🤩
நல்ல நண்பனாய் இருந்து
நல்ல காதலனாக மாறி விட பிளான்... 👏👏👏💐💐💐💐
 
Top