• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிரைத் தொலைத்தேன் உனக்குள்ளே...!!! - அத்தியாயம் - 3

Priyamudan Vijay

Member
Staff member
Joined
Jul 30, 2021
Messages
39
அத்தியாயம் – 3

கேத்ரீனை பெண்கள் விடுதியில் விட்டுவிட்டு தன் விடுதிக்கு திரும்பியவன், தனது பைக்கினை விடுதி வாசலில் சத்தமின்றி நிறுத்திவிட்டு, சூர்யாவிற்கு கைப்பேசி மூலம் அழைப்பு விடுத்தான். மறுமுனையில் அவனது அழைப்பு ஏற்பதை உணர்ந்த ராஜீவ்,

“டேய் சூர்யா! நிலைமை இப்போ ஒகே தானே? ஒன்னும் பிரச்சனை இல்லையே?! வார்டன் எதையாவது புலம்புனாரா? அந்த லூசுப்பைய ஒன்னும் கேக்கலையே?! சரி சரி, நான் வர்றேன். அந்த ஆளு இல்லைல? சரியான நசநசத்தவன்.” என்று கேட்டுக்கொண்டே விடுதிக்குள் நுழைந்தான் ராஜீவ்.

விடுதியினுள்ளே நடைபாதையில் மெல்லிய சி.எஃப்.எல் பல்பின் வெளிச்சத்தில், தனது ஒவ்வொரு அடியையும் பார்த்து சத்தமில்லாமல் எடுத்து வைத்துக்கொண்டிருந்த ராஜீவலோச்சன்னுக்கு அதிர்ச்சி தரும் பதில் மறுமுனையிலிருந்து வந்தது.

“நான் இங்கே, உன்னோட ஃப்ரெண்டோட மொபைல்ல தான் டா வச்சிட்டு இருக்கேன்….” என்று அந்த விடுதியின் வார்டன் பல்லைக் கடித்துக்கொண்டு கூறிய பதிலில் திடுக்கிட்டு நின்றான் ராஜீவ். அவனிடமிருந்து எவ்வித பதிலும் வராமல் போகவே, தன் பேச்சைத் தொடர்ந்தார் அவர். “என்ன பா? பேச்சு மூச்சே காணோம்?” என்று வினவியவரின் குரலில் கேலிகை தெரிந்தது. “தம்பி ராஜீவூஊஊ…. என்னப்பா சொன்ன? அந்த லூசுப்பையலா? நீ சொன்ன லூசுப்பைய உன் ரூம்குள்ள தான் நின்னுட்டு இருக்கேன். வா…. வா டா கண்ணா!” என்று அவர் கூறவும் அதிர்ந்து தான் போனான். தனது அறைக்குச் செல்வதற்கு மாடிப்படிகளில் ஏறியவன், தன் வர்டன் கூறிய வார்த்தைகளில் உஷாரானான். முதல் தளத்தில் நின்றிருந்த ராஜீவ், அவ்விடத்திலையே உறைந்து நின்றான். பின்பு ஏதோ யோசனை வந்தவனாக மெதுவாக நகர்ந்து பால்கனியை எட்டிப்பார்க்க, மறுமுனையில் இருந்த வார்டனுக்கு ஏதோ சரியில்லையென்று தோன்றியது… ராஜீவ்-சூர்யாவின் அறையிலிருந்து வெளிவந்து, அந்த அறைக்கு வரும் நடைபாதையைப் பார்த்தார். தொலைவில் ராஜீவ், பால்கனிக்கு அருகில் நின்றுகொண்டு கீழே ஏட்டிப்பார்ப்பதை கவனித்துவிட…

“டேய் ராஜீவ்!” என்று அவர் கத்தவும், அவரைத் திரும்பிப் பார்த்த ராஜீவ்… வார்டனையும் அந்த பால்கனியையும் மாறிமாறிப் பார்த்தான். பால்கனியில் தன் இருகைகளையும் ஊன்றி அதன் மேல் தன் காலை வைத்தான்.

ராஜீவ் பால்கனியிலிருந்து குதிக்க முயல்வதை புரிந்துக்கொண்ட வார்டனோ,

“ராஜீவ்! ஸ்டாப். நில்லு… நில்லு டா! தப்பிக்க முயற்சி செய்யாத. வந்தேன்னா, நீ தொலஞ்ச டா…” என்று அவர் அரற்றிக்கொண்டே வரவும்…

“அதுக்கு தான் தப்பிச்சு ஓடுறேன் யா வார்டனு…!” என்று கூறிவிட்டு பால்கனியிலிருந்து குதித்து, புல் தரையில் விழுந்து ஓடினான். அவன் ஓடுவதை, முதல் தளத்தில் நின்றபடி பார்த்த வார்டன், செக்யூரிட்டிக்கு அழைப்பு விடுத்து, ராஜீவலோச்சனனைப் பிடிக்குமாறு கூறினார்.

காலேஜ் செக்யூரிட்டியும் அவனைப் பிடிக்க முயற்சி செய்ய… அவரிடமிருந்து தப்பி காலேஜை விட்டு ஓட்டம் பிடித்தான்.

ராஜீவ் தப்பித்ததைத் தெரிந்துக்கொண்ட வார்டன்,

“நீ எப்படியிருந்தாலும் காலேஜுக்கு வந்து தானே டா தீருவ? அப்போ இருக்கு உனக்கு கச்சேரி.” என்று வாய்விட்டு கூறியவரருக்கு அப்பொழுது தெரியாது. அக்கல்லூரியை விட்டு ஓடியவன் திரும்பப்போவதில்லை என்று.

சூர்யாவிடம் அவனது கைப்பேசியைக் கொடுத்துவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றார் வார்டன். இரவு பதினொறு மணியளவில் தனது அறை வாசலில் வார்டன் இல்லாமலிருப்பதை உறுதிசெய்த சூர்யா, தனது கைப்பேசியை எடுத்து, ராஜீவிற்கு அழைப்பு விடுத்தான். மறுமுனையில் அழைப்பை ஏற்ற ராஜீவோ,

“சார்! நீங்க என்ன தேடுனாலும் உங்கள் கைல நான் இன்னும் ஒரு வாரத்துக்கு சிக்கமாட்டேன். நான் எங்கள் வீட்டுக்கு வந்துட்டேன். என் அம்மாவ மீறி நீங்கள் என்னைய பிடிக்க விமானப் படையே அனுப்பினாலும், அந்த முயற்சில நீங்கள் தோத்து தான் போவீங்க. ஏன்னா, என் அம்மா இந்த இந்தியால உள்ள கோடீஸ்வர்கள் பட்டியல்ல இருக்குறவங்க. தலைகீழா நீங்கள் நின்னாலும், உங்கள் கைல நான் சிக்கமாட்டேனே!!! பின்ங்கிலிக்கா பிலாப்பி!!” என்று அவன் நையாண்டியாகப் பேசுவதைக் கேட்ட சூர்யா, தன் தலையில் அடித்துக்கொண்டான்.

“அட கருமம் புடிச்சவனே! போன் வந்தா பேசுறது யாருனு கேட்டுட்டு அடுத்து நீ பேச ஆரம்பி. நம்பர பார்த்ததும் சடசடனு கொட்டித் தீர்த்துற. அப்போவும் அப்படி தான். அந்த வார்டன் ‘ஹலோ’ னு சொல்ல முன்னாடி, எங்கிட்ட பேச வேண்டிய எல்லாத்தையும் அந்த ஆளுட்ட உளறி வச்சுட்ட. இப்போ, என்னோட நம்பர பார்க்கவும், என்னோட மொபைல், அந்த ஆளு வாங்கி வச்சிருப்பான்னு அவங்கிட்ட சொல்லுறத எங்கிட்ட சொல்லிட்ட. இதையே பொலப்பா வச்சிட்டு திரியுற டா நீ.” என்றவன், தன் தலையில் கைவைத்து உட்கார்ந்தான்.

‘ஆஹா! இப்படி மொக்க வாங்கிட்டு இருக்கோமே!’ என்று தன் மனதிற்குள் எண்ணிய ராஜீவ்... “ஈஈஈ... சரி விடு டா. மனுச வாழ்க்கைல இதெல்லாம் சாதாரணம்.” சமாளிக்கிறேன் என்ற பெயரில் அவன் ஏதோ பேச, சூர்யாவிற்கு சிரிப்பு தாங்கவில்லை.

“நீ மனுசனா முதல்ல? ஏன்டா இப்படி பண்ணுற?” என்று சூர்யா கடுகடுத்தான்.

தான் வார்டனிடம் மாட்டிக்கொண்டதே இந்த சூர்யாவினால் தான் என்ற நினைவு ராஜீவிற்கு வரவே… அவன்மீது கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

“அடிங்க! கொன்னேப் போட்டுடுவேன் டா எருமை உன்னைய. மொபைல அந்த ஆளுட்ட கொடுத்தது மட்டுமில்லாம என்னைய இப்போ திட்டுறியா?” என்று ராஜீவ் திட்டவும்...

“டேய் ராஜீவ்! நடந்தது என்னனு தெரியாம என்னைய திட்டாத டா. அப்பறம் ‘உண்மைத் தெரியாம ஒரு நிரபராதிய திட்டிட்டோமே!’ னு நீ வருத்தபடுவ.” என்று சூர்யா கூறியதைக் கேட்ட ராஜீவ்,

“வாய்... வாய் வாயிலேயே போடுவேன். நீ நிரபராதியா? ஏன் டா ராஸ்கல், அந்த ஆளு தான் உன்னோட மொபைல வாங்கி வச்சான்னா, நீயாச்சும் பின்னாடி இருந்து, உன் கைல போன் இல்லனு கத்திருக்க வேண்டாமா? இப்படி அமைதியா இருந்து கழுதறுத்துட்டியே டா?” என்ற ராஜீவின் குரலில் மெய்யான கோபம் தெரிந்தது.

“டேய்! இல்ல டா. நானே அப்போ ஷாக்ல தான் இருந்தேன். அது மட்டுமில்லாம அந்த ஆளு கூட பியூன் வேற வந்திருந்தான். அந்த பியூன், நம்ம ரூம்ம ஃபுல்லா அலசி தேடிட்டு இருந்தான் டா. அவன் கூடவே திரிஞ்சேன். அந்த நேரத்துல தான் நீ போன் பண்ணித் தொலச்சுட்ட... நான் ஓடி வர்றதுக்குள்ள வார்டன் போன்ன எடுத்துட்டான். நீயும் சும்மா இருக்க முடியாம, நான்னு நினச்சுட்டு மொத்தத்தையும் உளறி கொட்டி வச்சிட்ட. என்னைய என்ன பண்ண சொல்லுற டா?” என்றவன் தன் நண்பனை காப்பாற்ற இயலாமல் போனதை எண்ணி வருந்தினான். அவ்வருத்தம் அவனது குரலில் பிரதிபலித்தை ராஜீவோ,

“டேய்! நான் ஏதோ புரிஞ்சுக்காம பேசிட்டேன் டா. நீ வருத்தப்படாத டா. ஸாரி டா மச்சான்.” என்று சூர்யாவை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டான்.

“டேய், மன்னிப்புலாம் கேட்காத டா. ப்ளீஸ். நீ தானே பேசுன? விடு. நீ உன் வீட்டுக்கு போயிட்டப் போல? அம்மா எதுவும் கேட்கலையா?” என்று சூர்யா நேரடியாக விசயத்திற்கு வந்தான்.

“அம்மா கேட்கத் தான் செஞ்சாங்க. நடந்த எல்லாத்தையும் சொல்லாம, நான் ஹாஸ்ட்டல் டைம் தாண்டி வெளிய ஹோட்டல் போய் சாப்பிட்டேன்... சாப்பிட்டுடு ஹாஸ்ட்டல் திரும்பும் போது வார்டன் கிட்ட மாட்டிட்டேன். துரத்துனாங்க. தப்பிச்சு வந்துட்டேன்னு சொல்லிட்டேன். உங்கிட்ட கேட்டா, இதையே சொல்லிடு.” என்று ராஜீவ் கூறியதைக் கேட்ட சூர்யா அதனை ஒப்புக்கொண்டான்.

சூர்யாவிடம் கைப்பேசியில் உரையாடிய ராஜீவிற்கு தூக்கம் கண்களை பிடித்து ஆட்டிப்படைக்க, சில வினாடிகளிலேயே உறங்கிப் போனான்.

அதிகாலை கதிரவன், சாலரம் வழியே தன் முகத்தை சீண்டுவதை உணர்ந்த ராஜீவலோச்சனன்,

‘இன்னைக்கு ஒரு நாளைக்கு மட்டும் கொஞ்சம் லேட்டா எந்திரிப்போம்.’ என்று எண்ணியவன், முந்தைய நாள் நடந்த சம்பவத்தினால், அசதியாக உணர்ந்தவன்... போர்வையை தலை வரை இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கினான். மணி பத்தை நெருங்க... எப்பொழுதும் ஐந்து மணிக்கே அழுந்து ஜாக்கிங் செல்லும் தனது செல்ல புதல்வன், இன்று ஆளையே காணோம் என்ற யோசனையில் அவன் அறையை நோக்கி நடந்தார் ராஜீவின் தாய் கௌசல்யா.

முதல் மூன்று முறை ராஜீவ் அறையின் கதவை தட்டியவர், அவனிடமிருந்து எவ்வித பதிலும் வராமல் போகவே... கதவைத் திறந்துக்கொண்டு அறைக்குள் நுழைந்தார். அவன் அறை முழுதும் தன் கண்களால் துழாவியவர், படுக்கையில் அவன் முகத்தைக் கூட மறைத்தபடி போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு உறங்குவதைக் கண்ட கௌசல்யா,

“இன்னும் எவ்வளவு நேரம் தான் டா தூங்குவ ராஸ்கல்?” என்று ஆவேசமாகப் பேசியவர், வேகமாய் அவன் புறம் சென்று அப்போர்வையை விலக்கவே, மிரண்டுப்போனார் அவர்.

ராஜீவின் அம்மா மிரளும் அளவிற்குரவர் கண்ட காட்சி என்ன?

அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்...
 
Top